Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 19 1

ஜதி  தரும்  அமுதம்



Advertisement

அத்தியாயம் – 19

Advertisement

Advertisement

  விஜேயந்திரன்  வெளிநாடு சென்று 2 மாதங்கள் ஆன நிலையில், இன்னும் அவனுக்கு போன வேலை முடியவில்லை. இன்னொரு வேலையும் சேர்ந்து  வர. இரண்டையும்  சேர்த்து செய்து கொண்டு இருந்தான் வீ. பி.

Advertisement

வைஷு நடன  போட்டிக்காக  ஊட்டி கிளம்பினாள்.. ஊட்டியில் இந்திராதேவிக்கு  ஒரு பெரிய வில்லா இருக்க,, நடன கலைஞர் அனைவரும்  அங்கேயே தங்க ஏற்பாடு ஆனது.. அனைவரும் இரண்டு பஸ்சில் கிளம்பினர்..

இந்திரா தேவி  மொத்த பொறுப்பையும் மருமகளிடமே ஒப்படைத்து விட்டவர்.. கடைசி போட்டி அன்று வருவதாக சொன்னார்..

முதல் நாள் போட்டி தொடங்க  இரண்டு நாட்களே உள்ள நிலையில்  முதல் போட்டி  சிறுவர்களுக்கான நடன போட்டி,, அதில்  தனியாக ஆடும்  பிரிவில்  யாழினி ஆட,,, அடுத்தது குருப்பிலும் சேர்ந்தும் அவள்  ஆட,,  ரிகஸ்சல் நடந்துகொண்டு இருப்பதை வைஷு  மேற்பார்வை பார்த்து அமர்ந்திருந்தாள் வைஷு,  ஏற்கனவேஇந்த நடனத்தை பல முறை  யாழினியிடம் ஆடி  காட்டி சொல்லி கொடுத்திருந்தாள் .. இன்று ரிகஸ்சலின் போது யாழினி  ஒரு ஸ்டெப்பை மறந்து ஆட…

மகளிடம் அவளின் தவறை சுட்டி காட்டியவள்.. அதை சரி செய்ய, அந்த நடனத்தை மறுபடியும்  ஆடி காட்டி சொல்லிக்கொடுக்க..

முதலில் சரியாக ஆடிய யாழினி மீண்டும்  ஒரு முறை ஆடும் போது.. மீண்டும் அதே தவறை செய்ய..

பளார் என்று மகளின் கன்னத்தில் அறைந்திருந்தாள்  வைஷு,, “எங்க கவனம் இருக்கு  உனக்கு, ” என்று  மகளை திட்ட..

சொர்ணமுகி அடிவாங்கி அழுது கொண்டிருந்தவளின் அருகில்  வந்து   பார்க்க  யாழினியின் கன்னம் வீங்கி இருந்ததை பார்த்தவர்,,

“என்ன வைஷு, எப்படி சிவந்து  இருக்கு பாரு”  என்று வைஷுவை திட்டி  விட்டு,, யாழினி கன்னத்துக்கு ஐஸ் கட்டிகளை வைத்து வீங்கி கன்னத்துக்கு ஒத்தடம் கொடுத்தவர்..

யாழினியை  சமாதானம் பண்ணி வந்து  நடனம் ஆட சொல்லி விட்டு வைஷுவை அழைக்க..

அவளை ஒழுங்கா ஆட சொல்லுங்க மேம், இவ ஒழுங்கா  ஆடமுடியாதுன்னு சொல்லிட்டா, வேற நல்ல டான்ஸ்சர் இருக்காங்க.. அவங்களை ஆட சொல்லியிருவேன்,, என்று மகளை சரியாக ஆட சொல்ல.. யாழினி இந்த முறை சரியாக ஆடி  காட்டி விட..

மகளை பார்த்து மெச்சிக்கொண்டவள், எந்த இடத்தில் சிரிக்க வேண்டும்,, எந்த இடத்தில் அதிகமாக சிரிக்க வேண்டும், புருவத்தை எதற்கு தூக்கி காட்டி ஆட  வேண்டும், என்று பல விதமான. முகம் பாவனைகளையும், தலை அசைப்பதையும்  சொல்லி கொடுத்தவள்…

இருவரும் சேர்ந்தே  முகபாவத்தோடு  பரதநாட்டிய உடையில் சேர்ந்து நடனம் ஆட.

அதை அப்படியே வீடியோவாக எடுத்து  வீ. பிக்கு அனுப்பி வைத்தார் சொர்ணமுகி…

அந்த வீடியோவை பார்த்து ரசித்த வீ. பி.. இறுதி போட்டி அன்று  வைஷுவையும், யாழினியையும் பார்க்க    திட்டமிட்டான்…

 முதல்  போட்டி தொடங்கின, சிறுவர்கள் பிரிவில் யாழினி ஆடினாள்,, அவள் ஆடிய  முதல் ஸ்டெப்பிலே   பார்த்துக்கொண்டு இருந்த  அனைவரும் “வாவ்”  என்று பாராட்டி பார்க்கும் அளவிற்கு இருந்தது அவளின் நடனம்,,  அவள் ஆடியது அவ்வளவு கஷ்டமான  ஸ்டெப், அந்த கஷ்டமான ஸ்டெப்பை கூட, அசல்ட்டாக ஆட, அவள் பாரதநாட்டியத்தோடு,, வெஸ்டர்ன் கலந்து ,சிரித்து, முகபாவனை   ஆடும் போது, பார்ப்பவர்களுக்கு  மிக சந்தோஷமாக இருக்கும்,   எப்படி  ஆடுற பாரு என்றே அனைவரும் பாராட்ட..

அடுத்தது சில  மாநிலத்தை சேர்ந்த பிள்ளைகள் ஆட..

அதில் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்பிள்ளை அற்புதமாக ஆடி முதல் மதிப்பெண்  பெற… யாழினிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.. மூன்றாவது இடம் சிங்கபூர் அகாடமியில் இருந்த ஒரு பையன் வின் பண்ணி இருந்தான்..

வைஷுவுக்கு இப்போது  சிங்கப்பூர் டான்சர்களை  பார்த்து பயம் வர வில்லை.. அதை விட இன்னும் திறமையான அகாடமி  டான்சர் அங்கே  இருந்தனர்..

இவள் மீன் என்று நினைத்து போட்டிக்கு வர.. இங்கே சுறாக்கள், போல  சில அகாடமி இருக்க, இவள் அணி சிமிங்கலமாக மாற வேண்டியதாக இருந்தது,, புது, புது திறமை வாய்ந்த டான்சர்களை பார்த்து சந்தோஷச பட்ட வைஷு, தன் அகாடமி டான்சர்களை இன்னும் நன்றாக  ஆட ட்ரெயின் பண்ணிகொண்டு இருந்தாள்.

போட்டியில் ஆடுபவர்களை இன்னும் ஊக்க படுத்தினாள், யாழினியோட  டான்ஸ் முடிந்தது,

தினமும் ஒரு போட்டி அல்லது இரண்டு போட்டிகள் என்று நடந்து கொண்டே இருந்தது.

 அனைத்து போட்டிகள் முடிந்து  கடைசியில்  மூன்று போட்டிகள் மட்டுமே  இருக்க.. இதில்  நடனம் ஆட, சிங்கப்பூர் அகாடமி, கேரளா, கடைசியாக இந்திரா தேவி அணி என்று மூன்று அகாடமிகள் தேர்வாகி இருக்க..

இதில்  மொத்தம்  மூன்று போட்டிகள்,, இதில் இரண்டில் வெற்றி பெறும் அணியே, த நம்பர் 1 அகாடமி  விருது வாங்கும்.

ஒரு குரூப்பு நடனம், ஒரு ஜோடி நடனம், கடைசியாக  சோலோ டான்ஸ் இதில் நீண்ட நேரம் எந்த அணி டான்ஸர் ஆடுகின்றார்களோ  அவர்களே வெற்றி பெற்றவர்கள்..

இன்னும் மூன்று நாளில் மூன்றே போட்டிகள், முடியும் நிலையில் இருக்க..

குருப் டான்ஸ்  போட்டியில் கேரளா டான்ஸ் அகாடமி அட்டகாசமாக ஆடி வின் பண்ணி விட.. இரண்டாவது இடம் சிங்கப்பூர் அகாடமி, மூன்றாவது இடம் இந்திரா தேவி அகாடமிக்கு வர..

வைஷுவுக்கு அடுத்த போட்டியில் கண்டிப்பாக  ஆடி வின் பண்ணியே ஆக வேண்டும் என்றிருக்க..

இரண்டு போட்டியிலும் அவளே ஆட தயாராக, சொர்ணமுகி இதற்கு சம்மதிக்க வில்லை…

சொர்ணமுகி வைஷுவிடம்  “நீ கண்டிப்பாக ஆட கூடாது, அது   தான்  டான்ஸ் ஆட நிறைய பேர்  இருக்காங்கல, நீயேன் ஆடனும்?”..

“”மேம்  போட்டி ரொம்ப  கடுமையா இருக்கு,, இவங்க எல்லாம் சதாரண டான்ஸர் இல்ல,, போட்டிக்குன்னே ட்ரெயின் பண்ணி இருக்காங்க.. நான் ஏதாவது பண்ணியே ஆக வேண்டும் மேம்,, நான் ஆடுனா தான் வின் பண்ண முடியும்”   என்று சொர்ணமுகியிடம்  தன் எண்ணத்தை சொல்ல..

“டாக்டர் என்ன சொன்னார் வைஷு” என்றார்…

வைஷுவுக்கு ஒரு வாரம் முன் நடந்தது. சொர்ணமுகி தன்னிடம் பேசியது ஞாபகம் வர..

அன்று வைஷு யாழினியை அடித்து விட்டு வருந்திய போது..

சொர்ணமுகி வைஷுவிடம் “நீ நார்மலா இல்ல வைஷு, என்னாச்சு உனக்கு?” ..

அவளோ நான் என்று அவளின் கோபம்,  தலைவலி, தூக்கம் பற்றி இன்னும் நிறைய தன் மாற்றங்களை  பற்றி  சொல்ல..

அவளை பார்த்து சிரித்தவர், “வா  வைஷு ஹாஸ்பெட்டல் போகலாம்”…

“ஹாஸ்பெட்டலுக்கு  போகுற அளவுக்கு பிரச்சனை  ஒன்னும் இல்ல மேம்”..

என்றவளை பார்த்து  மறுபடியும் சிரித்தவர்.. “உனக்கு  லாஸ்டா பீரியட்ஸ் எப்போ வந்துச்சு வைஷு?”..

“அது” என்று  யோசித்தவள்,, “மேம் டூ மன்த் மேல ஆச்சு மேம், எனக்கு, எனக்கு இது மறந்தே போச்சு மேம்”… என்று கண்கலங்க..

“அதுக்கு தான் வைஷு சொல்லுறேன். நீ நார்மலா இல்ல, வா”  என்று அவளை ஹாஸ்பெட்டல் அழைத்து சென்று அவளை செக் பண்ணி பார்க்க,,.

சொர்ணமுகி நினைத்தது போலவே  வைஷு கருவுற்று இருக்க,, தன் முன் கலங்கி நின்றவளை தோள்லணைத்தவர்..

“அழக்கூடாது, சந்தோஷமான விசயம் நடந்து இருக்கு, சிரிம்மா”  என்றவர்..

டாக்டரிடம்  வைஷுவை பற்றி கேட்க.. “இது மூன்றாவது மாதம் நடந்து கொண்டிருக்கிறது, வைஷு நன்றாக இருப்பதாக சொல்லியவர்,, எனக்கு ஒரு விசயம்  சந்தேகமா இருக்கு எதற்கும் ஒரு ஸ்கேன் எடுத்திறலாம்”  என்றார்..

ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு “இரட்டை பிள்ளைகள் மா கொஞ்சம் சாக்கிரதையா இருக்கனும்”.. என்று கூற…

இருவரும் வீடு வரும் போது.. சொர்ணமுகி வைஷுவை ஹைதராபாத் போக சொல்ல…

வைஷுவோ நடன போட்டிகள் முடியாமல் நான் போக மாட்டேன் என்றாள்..

இந்த விசயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவரிடம் சத்தியம் வாங்கி கொள்ள..

“ஜாக்கிரதையா இரு வைஷு”  என்றவர், அன்றிருந்து அவளை நன்றாக பக்கத்திலே இருந்து பார்த்துக்கொள்ள…

இன்று இவள் நடனம் ஆடுவேன் என்றதும் “முடியாது வைஷு”  என்றிருந்தார்,, அவள் என்ன காரணம்  சொன்னாலும் அவளை ஆட அனுமதிக்க வில்லை சொர்ணமுகி…

சொர்ணமுகியிடம்  நேற்று சிங்கப்பூர் அகாடமியிருந்த  டான்ஸர் நம்ம டான்சரை பார்த்து நீங்க எப்பையும் நம்பர் ஒன்னாக  முடியாது என்று  சொல்லி சிரிச்சு இருக்காங்க மேம்,, நான் கண்டிப்பா ஆடியே திருவேன்,”.. என்று  கோபமாக பேச..

“அதுக்காக எல்லாம்   நான் உங்களை ஆட  அனுமதிக்க முடியாது  வைஷு”   என்று கூறி கொண்டு இருக்க..

சொர்ணமுகியின் போன் ஒலித்தது, நாளை ஜோடி   நடனம் ஆடம்   பெண்ணிற்க்கு ரிகஸ்சல் பார்க்கும் போது காலில் நன்றாக அடி பட்டு விட, நாளை அப்பெண்ணால்  ஆடமுடியாது என்று சொல்ல..

சொர்ணமுகியின் போனை வாங்கி வைஷு விசயத்தை கேட்க..

“பாத்தீங்கலா மேம்,, நாளைக்கு நான் தான் ஆட  போறேன்”  என்றவள்..

அவள்  நடனம் ஆடுவதற்கான,  வேலைகளை பார்க்க சொல்ல..

சொர்ணமுகிக்கு என்ன நடக்கிறது.. ஒரு மனம் இது சரி என்று பட…

இன்னொரு மனம் வைஷுவுக்கு  ஏதாவது ஆகிவிட்டாள், வீ. பி என்ன சொல்லுவாரு,, அவனை பற்றி அறிந்தவருக்கு  பயம் வர..

 இந்த  இரண்டு நாளை எப்படி கடந்து வருவேன்,, என்று கடவுளிடம் வைஷுவுக்கு எதுவும் ஆக கூடாது,, அவருக்கும் தெரியும் நம்பர் ஒன் என்பது எவ்வளவு பெரிய விசயம்,, அதற்க்காக வைஷுவோட கூட நிற்க வென முடிவு எடுத்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!