Skip to content
Post Views: 623
ஓம் சரவணபவ🙏🏼.
Advertisement
❤️ அத்தியாயம் 01❤️
Advertisement
Advertisement
“ அப்பா ப்ளீஸ் பா வேணாம்பா.. தயவு செய்து கொஞ்ச காலம் பொறுங்க அவசரம் வேண்டாம்.. ”
Advertisement
“ தமிழ் நீ என்னதான் சொன்னாலும் நான் கேட்கிறதா இல்லை.. என் முடிவுல நான் உறுதியா இருக்கேன்.. நான் இன்னைக்கே உனக்கு கல்யாணத்துக்கு நாள் குறிக்கிறதுக்கு ஜோசியரை பார்க்க போக தான் போறேன்.. ”
“ சம்மந்தி நீங்க என்ன சொல்றீங்க?.. ”
“ நம்ம பிள்ளைகளுக்கு நாம தானே நல்லது பண்ணி வைக்கணும்.. எனக்கு மனப்பூர்வ சம்மதம். என் உசுரு போக முன்னாடி என் பேத்தி கல்யாணத்தை பார்க்கிறதுதான் எனக்கும் கடைசி ஆசை.. அதுவும் தமிழ் தம்பிக்கு கொடுக்குறதுக்கு கசக்க வா செய்யும் அவர விட என் பேத்திய யாரு நல்லா பாத்துக்க முடியும்.. ”
“ சரிங்க சம்பந்தி நான் இன்னைக்கு சாயந்திரம் போய் ஜோசியரை பார்த்து நாள் குறிச்சிட்டு நாளைக்கு பஞ்சாயத்தில் பேசி இவங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவோம்.. ” என்று சம்மந்தியாகப்பட்ட பூமணி யிடம் கூறிய சக்கரவர்த்தி.
மகள் வைத்து பேத்தியிடம் திரும்பி “ என் ராசாத்தி, தங்க மயிலு நீ நல்லா இருப்ப தாயி. எங்க ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கும். ” என்று கூறி தலையில் கை வைத்து ஆசீ செய்துவிட்டு மகனை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டார் சக்கரவர்த்தி..
தமிழரசன் தந்தையின் மேல் கோபப்பட முடியாமல் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு தந்தையை பின்தொடர்ந்து அவர்களது வீட்டிற்கு சென்றான்..
“ அப்பா..! இப்பயும் ஒன்னும் கெட்டு போகல. நீங்க இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய தேவையே இல்லை.. எப்ப இருந்தாலும் நான் தங்கமயில தான் கட்டிப்பேன்.. இப்ப அவளுக்கு என்ன வயசாயிடுச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு இவ்வளவு அவசரம் காட்டுறீங்க?.. 16 வயசு பொண்ணை கல்யாணம் பண்ணி அந்த பாவத்தை என் தலைல கட்ட நான் விரும்பல.. இவ்வளவு காலம் இருந்தாச்சு இன்னும் ரெண்டு வருஷம் போனா 18 வயசு முடிஞ்சுடும் அப்புறம் தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம்.. யாரும் கேட்க முடியாது..
இப்ப எவ்வளவு சட்ட சிக்கல்கள் இருக்கு தெரியுமா? முன்ன காலம் மாறி வயசு வித்தியாசம் பாக்காம கல்யாணம் பண்ற காலம் இப்ப இல்ல.. இது வெளியே தெரிஞ்சா நான் தான் போய் ஜெயிலுக்குள்ள இருக்கணும்.. நீங்க என்ன நினைச்சு அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறீர்களோ அது கடைசில நடக்காமல் போய்விடும். அவ இங்க ஒத்தையில இருப்பா நான் ஜெயிலுக்குள்ள இருப்பேன் இதுதான் வேணுமா உங்களுக்கு.. ” என்றான்.
என்ன சொன்னால் தந்தை ஓரளவுக்கு செவி சாய்ப்பார் என்று நினைத்து தன் பேத்தி ஒத்தையில் இருந்து தவிப்பாள் என்ற வார்த்தையை எடுத்து கூறினான் ஆனால் அவன் கூறியதைக் கேட்டு இரண்டு வருடம் திருமணத்தை தள்ளிப்போட கூடிய உடல் நிலை அவர்களுக்கு இல்லை.. அதனால் தான் சிறு வயதிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க பூமணியும், சக்கரவர்த்தியும் மிகவும் அவசரம் காட்டுகிறார்கள்..
“ இதெல்லாம் எனக்கு தெரியாம இல்ல. ராசா.. எங்க காலத்திலேயே உங்க அம்மைக்கு 15 வயசுன்னு சொல்லி எங்க காதல எங்களுக்குள்ளயே வச்சிட்டு அவளை கல்யாணம் பண்ணாம நாள் கடத்தின பாவம் தான் எங்களுக்கு இடையில உங்க பெரியம்மை வந்து எங்க வாழ்க்கையை அவ விருப்பத்துக்கு ஆட்டி படைக்க ஆரம்பித்து விட்டாள்.. அதே தப்ப என் புள்ளைங்க வாழ்க்கையில் நான் செய்ய விரும்பல.. என் பாக்கியமும் சரி என் மக கௌரியும் சரி மேலிருந்து உங்க கல்யாணத்தை பார்த்து பூரிச்சு போய் ஆசீர்வாதம் பண்ணட்டும்.. நானும் இங்கிருந்து நடத்தி வைச்சுட்டு என் பாக்கியத்துக்கிட்ட போயிட்டா என் ஆத்மா நிம்மதியா சாந்தியடையும்.. ” என்று கூறிவிட்டு மகன் மதியத்திற்கு சமைத்து வைத்த உணவை இரண்டு தட்டுகளில் போட்டு ஒன்றை மகனிடம் கொடுத்துவிட்டு ஒன்றை அவர் சாப்பிட ஆரம்பித்தார்..
சமையல் சக்கரவர்த்தி இரண்டு மனைவியை கட்டியவர்..
அவர் உயிர் காதல் என்னவோ அவரது பாக்கியம் தான்..
ஆனால் அவர்களது காதலை தெரிந்து கொண்டு அவர்கள் காதலுக்கு இடையில் விஷமாக வந்து சேர்ந்தால் பாக்கியத்தின் அக்கா சந்திரா..
சந்திரா மற்றும் பாக்கியத்தின் அன்னை பரமேஸ்வரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சந்திரா அவர் அக்கா வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளும் படி அங்கே அனுப்பி வைத்தார்..
ஏனென்றால் சந்திரா தொட்டதற்கு அடம் பிடிப்பதும் யாரின் சொல்பேச்சையும் கேட்காதவள்.. அவளை வைத்துக்கொண்டு தன்னால் சமாளிக்க முடியாது என்று நினைத்தார்.. ஆனால் பாக்கியம் அப்படி இல்லை மிகவும் சமத்துக் குழந்தை..
சிறு வயதிலேயே தாயின் உடல் நிலையை நினைத்து தாய்க்கு அதிகம் கஷ்டம் கொடுக்காமல் அவளால் முடிந்த உதவியைத்தான் செய்வாளே தவிர அவருக்கு எந்த ஒரு தொல்லையும் செய்யவில்லை..
இப்படியே அவர்கள் காலம் போய் கொண்டு இருந்த நேரம் பாக்கியம் 13 வயதில் பூப்பெய்தினார்..
பரமேஸ்வரிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் எடுத்து செய்வதற்கு யாரும் இல்லாததாலும் தூரத்து சொந்தமான மாமன் முறையில் இருக்கும் சக்கரவர்த்தியை தான் அந்த சடங்கு எடுத்து செய்யுமாறு பாக்கியத்தின் தந்தை முருகேசன் அழைத்தார்..
அந்த சுற்றுப்புறத்தில் சக்கரவர்த்தியின் சமையல் தான் அனைத்து விசேஷங்களிலும் முதல் இடத்தில் இருக்கும்.. அவருக்கு சமையல் கலை கடவுளின் வரம் என்று தான் சொல்ல வேண்டும்..
அவரின் சமையல் இல்லாமல் எந்த ஒரு விழாவும் இல்லை.. என்ற நிலையில் உச்சத்தில் இருந்தார் அந்த காலத்தில்..
அவருக்கு சமையலுக்கு உதவியாக 10 பேர் கொண்ட குழு இருந்தது..
25 வயதிலேயே கைப்பக்குவத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்கரவர்த்தி பாக்கியத்தின் சடங்கிற்கும் அவரே சமையல் செய்தார்..
25 வயதில் இருந்து கொண்டு 13 வயது பெண்ணின் மேல் காதல் கொள்வது சரியில்லை என்று உணர்ந்ததால் அவளின் குழந்தை தனமான அழகில் ஈர்க்கப்பட்டாலும் அதை தன்னுள்ளே புதைத்துக் கொண்டார்..
தங்கையின் சடங்கிற்கு வந்த சந்திரா கடந்த ஆறு மாதங்களாக அங்கேயே தங்கி விட்டாள்.. அவளின் தொல்லை தாங்க முடியாமல் பரமேஸ்வரி மீண்டும் அக்காவின் வீட்டுக்கே அவளை அனுப்பி வைத்தார்.. அதன் பின்பு இரண்டு வருடங்கள் இந்த பக்கம் வராமல் இருந்த சந்திரா மீண்டும் ஒரு புயலை உருவாக்கவே வந்து சேர்ந்தாள் போல..
18 வயதில் இளம் பெண்ணாக வந்து சேர்ந்த சந்திரா தங்கை தினமும் கோயிலுக்கு சென்று வருவதை சந்தேகமாக பார்த்துக் கொண்டு ஒரு நாள் அவளுக்கே தெரியாமல் பின் தொடர்ந்தாள்..
15 வயதின் ஆரம்பத்தில் இருந்த பாக்கியத்துக்கு அப்பொழுதுதான் சக்கரவர்த்தி தன் இரண்டு வருட காதலை அவளுக்கு தெரியப்படுத்தி திகட்ட திகட்ட காதலில் திளைத்தார்கள் இருவரும்..
கோயில் குளக்கரையில் இருந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த காலத்து காதல் கண்ணியமான காதல் தான்.. இருவரும் சற்று இடைவெளி விட்டு யார் கண்ணையும் உருத்தாமல் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.. அவர்களை பார்த்தால் யாராலும் தவறாக எண்ணிவிட முடியாது.. ஆனால் சந்திரா அவர்கள் பேசியதை கேட்டதால் அவர்கள் காதலிக்கிறார்கள் என்பது தெரிந்து கொண்டு தன் தாயிடமிருந்து தங்கை தன்னை பிரித்ததாக நினைத்து தங்கையை பழிவாங்கவே அவள் விஷத்தை கக்க ஆரம்பித்தாள்..
நாட்களைக் கடத்தாமல் இரண்டு நாட்களுக்கு பின் தந்தையிடம் சென்று சக்கரவர்த்தியை தான் காதலிப்பதாகவும் அவர் இல்லை என்றால் இறந்து விடுவதாகவும் கூறி உடனடியாக சக்கரவர்த்தி வேறு பெண்ணை பார்க்கும் முன் தனக்கு திருமணம் செய்து வைக்க கேட்கும் படியும் தந்தையையும், தாயையும் அவசரப்படுத்தினாள்..
அவரும் மகளுக்கு திருமணம் வயது வந்து விட்டது மகள் ஒரு ஆணை பிடித்திருக்கு என்று கூறுவதால் இவ்வளவு காலமும் மகளை தங்களிடம் இருந்து பிரித்து வைத்து விட்டோம் இனி மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவோம் என்று எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளுக்கு சரி என்று சம்மதம் கொடுத்துவிட்டார்..
நல்ல நாள் பார்த்து சக்கரவர்த்தி தந்தையிடம் சென்று பேசிய போது அவருக்கும் சம்மதம் என்பதால் நல்ல நாள் பார்த்து முகூர்த்தம் குறிக்க ஏற்பாடுகள் நடந்தது.. இது அனைத்தும் ஒரு திருமண விழாவிற்கு சமைக்க சென்று இருந்த சக்கரவர்த்திக்கு தெரியாமலே போனது..
எங்கே தங்கை இங்கு இருந்தால் தங்கள் திருமண காரியத்தை கெடுத்து விடுவாள்.. அவள் விரும்புவதை வீட்டில் சொல்லிவிட்டால் தன்னால் அவளை ஜெயிக்க முடியாது என்பதால் பெரியம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை நீ கொஞ்ச காலம் போய் அவர்களை பார்த்துக் கொள். என்று கூறி அங்கே பாக்கியத்தை அனுப்பி விட்டாள் அவளும் சக்கரவர்த்தி ஊரில் இல்லை வர நாள் ஆகும் இங்கே அக்காவுடன் மல்லு கட்டுவதை விட அங்கே போய் இருக்கலாம் என்று சென்றுவிட்டாள்..
இதையும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சந்திரா சக்கரவர்த்தி வந்ததும் அவன் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்று சொல்லியதை தந்தையின் மூலம் கேட்டுக் கொண்டதால் நேரடியாக சக்கரவர்த்தியை சந்தித்து உன் காதலியை கொன்று விடுவேன் இப்பொழுது அவள் எங்கே இருக்கிறாள் என்று உனக்கு தெரியுமா? அவள் இங்கே இல்லை.. என் கட்டுப்பாட்டில் இருக்கிறாள்.. உனக்கு அவளை பார்க்க வேண்டும் அவள் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டினாள்.. ஆனாலும் சக்கரவர்த்தி தங்கள் காதல் தோற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால் அவர் சம்மதிக்கவே இல்லை..
எவ்வளவு கூறி மிரட்டியும் சக்கரவர்த்தி உறுதியாக இருந்ததால் சந்திரா யாரும் யோசிக்க முடியாத காரியத்தை செய்தாள்..
error: Content is protected !!