Skip to content
Post Views: 3,209
சொல்லுங்க பாட்டி….. சிரிப்புடன் வந்து நின்ற பேத்தியின் கன்னம் வழித்து முத்தமிட்டார் சுசிலா.
இதுக்கு தான் வர சொன்னீங்களா? இன்னும் சிரித்தாள் கன்னம் குழிய…
பெரிய அத்தை வந்திருக்கு…
மாமா வந்திருக்காரா? விக்ரம் அத்தான் வந்திருக்காரா? வித்யா வந்திருக்காளா? சிறுபிள்ளை போல் துள்ளி ஓடினாள்.
Advertisement
மாப்பிள்ளைக்கு என்ன சமைக்கன்னு உங்கம்மா கேட்கிறா…. போய் பாரு…!
மாப்பிள்ளைக்கு தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கும் கூடவே இருந்து கவனிச்சுக்கோ!
சரி பாட்டி…. ஓடிக் கொண்டே பதில் கொடுத்தாள்.
Advertisement
கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் வித்யா ஆசையுடன் கட்டிக் கொண்டாள் பவியை.
Advertisement
வாங்கத்தை,வாங்க மாமா என்று புன்னகையுடன் வரவேற்றவள் விக்ரமை பார்த்து வாங்க என்பது போல் தலை அசைத்தாள்.
புன்னகையுடன் பவித்ராவை பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
பொறுப்புடன் படித்து போட்டி தேர்வெழுதி அக்ரி ஆபிசராக பணியில் இருக்கிறான்.
Advertisement
சிறு வயதில் இருந்தே பவித்ராவை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். உண்மையில் அவளை மணந்து கொள்ளும் ஆசை அவனுக்கு இருந்தது. தமயந்தி திட்டவட்டமாய் சொந்தத்தில் கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். இடையில் ராஜேஷ் குறுக்கே புகுந்து என்னென்னவோ நடந்து விட்டது.
அவளுக்கு திருமணம் ஆகிவிட்டாலும் அவனது மாமன் மகள் அல்லவா? உரிமையாய் பார்த்து சிரித்து நின்றான்.
வந்தவர்களுக்கு இருக்கை எடுத்து போட்டு அமர வைத்தாள்.
காயத்ரி வந்தவர்களை வரவேற்று குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.
காயு என்று விழி விரித்து பார்த்தான் விக்ரம்.
வாங்கத்தான் நல்லா இருக்கீங்களா? அக்கா கல்யாணத்துக்கு ஏன் வரல…? உரிமையாக அவள் சண்டை போட்டுக் கொண்டிருக்க தீய்ந்து கருகி காதிலும் மூக்கிலும் புகை வந்து கொண்டிருந்தது தேவ் சரணுக்கு.
மாமா இவங்க என் நாத்தனார் நிவேதா , இவர் அவங்க வீட்டுக்காரர், இவர் என்னோட கொழுந்தனார் தேவ் என்று அறிமுகம் செய்து வைத்தாள் பவித்ரா.
யார் சந்தோஷ் இவங்க ? கண்களால் கேட்டான் தேவ்.
விக்ரம் அண்ணா ..
அப்படின்னா?
பவிக்கா அத்தை மகன்.
ஓ என்றவனுக்கு உள்ளுக்குள் புகை மண்டலம்.
பவித்ராவே அறிமுகம் செய்து வைத்தாள் இவர் என் அத்தான் ஐ மீன் அத்தை பையன் விக்ரம்.
தேவ்சரணை பார்த்து சினேகமுடன் சிரித்து மரியாதை நிமித்தம் ஹாய் சொன்னான். இவனுக்கு தான் கடு கடுத்து போனது.
இவர்கள் பேச்சில் இடையில் வந்து நின்றான் ஹரி.
யுவி போய் அழைத்து வந்திருந்தான். அத்தை குடும்பம் வந்திருப்பதை கூறி….
மாமா இவர் விக்ரம் அத்தான்…
ஹலோ என்று கை குலுக்கினான் ஹரி… அவ்வளவு அழுத்தமாய் முறைப்புடன் குலுக்கி எடுத்தான்.
அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க… காயத்ரி தாக தானிக்கு நீரு காவாலி என்றான் தேவ்.
அவள் புரியாது அமர்ந்திருக்க… நான் போய் தண்ணீர் கொண்டு வரேன் என்று பவித்ரா எழுந்து சென்றாள்.
அப்படி ஒரு முறைப்பு…. இவளை உள்ளே அனுப்ப தானே அவன் தண்ணீர் கேட்டது.
சொந்தக்காரன்னா அப்படி பார்த்துட்டே இருப்பானா? பற்றி எரிந்தது அவனுக்கு.
விக்ரம் பவியை பற்றி அருமை பெருமையாய் பேசிக் கொண்டிருக்க… ஹரிக்கு செம்ம காண்டு.
இவன் மாமா பொண்ணு பற்றி இவனுக்கு A to Z தெரியுமாம்… இவன் தம்பட்டம் அடிக்க நானா ஆளு? என் பொண்டாட்டியை பற்றி எனக்கு கிளாஸ் எடுக்கிறான்… இவன் வாயை உடைக்கணும்… பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
குழந்தை உறங்கிவிட நிவேதாவை அழைத்துக் கொண்டு போய் மாடியில் இருக்கும் அறையை காட்டி வந்தாள் காயத்ரி.
தமயந்தி சூடான மிளகாய் பஜ்ஜி தேங்காய் சட்னியுடன் வந்து நின்றார்.
வாங்கண்ணா வாங்கண்ணி…. விக்ரம் பஜ்ஜி எடுத்துக்கோ..! வித்யா குட்டி உனக்கு பிடித்த பிரட் அல்வா ரெடியாகிட்டு இருக்கு… பேசிக் கொண்டே எல்லாருக்கும் பரிமாறினார்.
விக்ரம் தொடர்ந்து பவித்ராவிடம் ஆர்வமாக பேசிக் கொண்டிருக்க…
அத்தம்மா கொஞ்சம் டயர்டா இருக்கு நான் போய் படுக்கவா என்றான் தமயந்தியிடம்.
நீங்க போய் ரெஸ்ட் எடுங்க என்றார் தமயந்தி.
சாரி கொஞ்சம் தலைவலி கண் எரியுது நீங்க பேசிட்டு இருங்க… விக்ரம் தோளில் தட்டி பெரியவர்களிடம் விடைபெற்று நாசுக்காய் எழுந்து சென்றவன் பவி தைலம் கொண்டு வா என்று சொல்லி சென்றான்.
நீ போய் அவரை கவனி…! என்று மகளை விரட்டிவிட்டு…அண்ணி மட்டன் கோலா உருண்டை நீங்க எப்படி செய்வீங்க? சுறா புட்டு செய்யணும்… வாங்க எனக்கு பக்குவம் சொல்லுங்க என்று நாத்தனாரை கிச்சனுக்குள் அழைத்து சென்றார் தமயந்தி.
நீயும் போ என்பதாய் ஜாடை காட்டினான் தேவ்.
போடா டேய்… என்பது போல் முறைத்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.
உள்ளே போ… பல்லை கடித்து உதடசைத்து விரட்டினான்.
மாட்டேன் என்று சட்டமாய் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
சரண்யா, வித்யா, காயத்ரி என்று பேசி சிரித்து பஜ்ஜியை மொக்கி கொண்டிருக்க…. நடுவில் வந்து ஒரு பஜ்ஜியை எடுத்து கடித்துக் கொண்டான் விக்ரம்.
அத்தான் அது என்னோடது… சிணுங்கினாள் காயத்ரி.
தேவ் சரணுக்கு மிளகாயை விட காரம்… டீபாக்கு எதிரில் அமர்ந்திருந்தவள் காலை யாரும் அறியாவண்ணம் மிதித்து உள்ளே போ என்றான்… கண்கள் சிவந்து.
அட இவன் யாருடா கொசு மாதிரி… அவள் கொலை காண்டுடன் முறைக்க…
பொண்ணுங்களா சிரித்து பேசி விளையாண்டது போதும்… இங்கே வாங்க பூண்டு உரித்து கொடுங்க… அஞ்சுகம் அழைத்தார்.
பெண்கள் மூவரும் உள்ளே செல்ல… அப்பாடா என்று நிம்மதியானான் தேவ்.
சார் போரடிக்குதா வெளியில் போகலாமா? யுவி கேட்டான்.
எதே சாரா?மா அண்ணையா நீக்கு மேனமாமா ஆயிட்டே நேனு நீக்கு மாமா…. என்றான்
யுவி புரியாமல் பார்க்க…
call me Mama or Bhava.Is my brother your uncle? So am I your uncle? அசால்டாய் தோளை குலுக்கி கொண்டான் ஷியாமளா பெற்ற சீமந்தபுத்திரன்.
யுவி ஒன்னும் சின்னப்பிள்ளை இல்லையே..
கல்லூரியில் அவன் எவ்வளவு அக்கப்போரை பார்த்திருக்கிறான்… தேவின் பேச்சு ஒரு தினுசாக இருப்பதை அவனும் கண்டு கொண்டு தானே இருக்கிறான்.
“——————-“
ஒரு தைலம் கொண்டுவர உனக்கு இவ்வளவு நேரமா? அப்படி என்ன பேச்சு… அவள் கதவை திறந்த உடனே காய்ந்தான்.
ஒன்றும் பேசாமல் இஞ்சி டீயை டேபிளில் வைத்தவள் கோடாரி தைலத்தையும் அருகில் வைத்தாள்.
இதை தேய்ச்சு விட தனியா ஒரு ஆள் தேடவா முடியும்? கடு கடுத்தான்.
தேடிக்கிறது… முணங்களாக வந்தது வார்த்தை.
தேடிக்கிட்டா போச்சு… அவனிடமிருந்து சத்தமாகவே பதில் வந்தது.
நேனு சம்பேஸ்தானு… அவன் கழுத்தை பிடிப்பதை போல் கையை அருகில் கொண்டு வந்தாள்.
பாருடா…. சிரிப்பை அடக்கிக் கொண்டு கண்சிமிட்டாது அவளையே பார்த்தான்.
பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… முணங்கி கொண்டே தைலத்தை எடுத்து மென்மையாய் நெற்றியில் தேய்க்க தொடங்கினாள்.
அவள் மருதாணி கரம் பட்டு அவன் தலைவலி குறைந்தது ஆனால்…… அவளின் விரல் சூடு அவன் தேகத்தில் சூட்டை கிளப்பியது.
போதுமா… என்றாள்.
வலிக்குது கொஞ்சம் பிடிச்சு விடு!
இதுக்கு தான் கொஞ்சமா டென்ஷனாகனுங்கிறது…. வாயிற்குள் முனுமுனுத்துக் கொண்டே நெற்றி பொட்டை மென்மையாய் மசாஜ் செய்வது போல் பிடித்து விட்டாள்.
அவள் கையை அசைக்க அசைக்க… கை வளையல் குலுங்கும் ஓசை அவனுக்குள் சுகமாய் கிட்டார் வாசித்தது.
என்ன வாசம் இது…? இழுத்து சுவாசித்து கிறக்கமாய் கேட்டான்.
ம்ம்ம்ம்ம்… கோடாரி தைலம். பக்கத்து வீட்டு மாமா துபாயில் இருந்து கொண்டு வந்து கொடுத்தார். தலைவலி நல்லா கேட்கும் என்றாள்.
சுத்தம்… நொந்து போனான்… கஸ்தூரி மஞ்சள் வாசனை அவனுக்கு புரியவில்லை ஆனால் பிடித்திருந்தது.
சரி வேற ஏதாவது வேணுமா? நான் போய் கிச்சனில் என்ன வேலைன்னு பார்க்குறேன் என்றாள்.
வேணாம் இங்கேயே இரு…! அங்கே தான் உங்க அத்தைங்க இருக்காங்க பாட்டி இருக்காங்க.. காயத்ரி சரண்யாலாம் இருக்காங்களே…
கை கழுவி வந்து அலமாரியில் இருந்த புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கினாள்.
//அழகில் உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது…. ஆனால் காதல் வைத்தால் எட்டும் //
//புத்தன் வீதி நீ வரும்போதெல்லாம் பித்தன் வீதியாகிவிடுகிறது//
அவள் புத்தகத்தில் லயித்து விட்டாள்.
அவள் புத்தகம் வாசிக்க அவன் அவளை வாசித்துக் கொண்டிருந்தான்.
சற்று குட்டை கை வைத்த இளஞ்சிவப்பு பிளவுஸ் அணிந்திருந்தாள், பிங்க் அன் வைட் கல் பதித்த ஜிமிக்கி அணிந்திருந்தாள். அழகாய் குங்குமம் வைத்திருந்தாள், அவனுக்கு பிடித்தாற்போல் தவறு அவனுக்கு பிடிக்க வேண்டும் என்று சிவப்பு வண்ண கண்ணாடி வளையல் போட்டிருந்தாள், சரமாய் மல்லிகை சூடி இருந்தாள்.
முழு மதியை ரசிப்பது போல் இருந்தது அவள் மதி முகம் காண்பது.
அடுத்தடுத்து பக்கம் திருப்பியவள் எதேச்சையாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் அவளையே பார்த்திருந்தான்.
என்ன என்பதாய் புருவம் உயர்த்தி கேட்டாள்.
ஒன்றுமில்லை என்பதாய் உதடு பிதுக்கியவன் என்ன படிக்கிற என்றான்.அவனுக்கு சலிப்பாக இருந்தது. அவனை படிக்க முயலாமல் புத்தகத்தை படிக்கிறாளே புத்தம்புது மனைவி.
புத்தகத்தை தூக்கி காண்பித்தாள்.
என்ன புக்?
பார்த்தால் தெரியலையா?
தெரியல… என்றான் அசால்ட்டாய்.
என்ன…?
இது என்ன புக்குன்னு எனக்கு தெரியல… உதடு பிதுக்கினான்.
சற்று நேரம் குழம்பியவள் அவனுக்கு தமிழ் படிக்க தெரியாது என்று புரிந்து.. இது தபூ சங்கர் கவிதைகள் என்றாள்.
அவர் பெரிய பொயட்டா? ஆர்வமுடன் கேட்டான்.
ஆமா ரொமாண்டிக் பொயம் சூப்பரா எழுதுவார்…
சரி அது ஏன் நீ படிக்கிற?
சிரிக்காமல் கேட்டுவைத்தான் ஜித்தன் அவன்.
ஜோக்கு…. ஆனா சிரிப்பு வரல… உங்களுக்காகலாம் என்னால சிரிக்க முடியாது… வெடு வெடுத்தாள்.
சரி… கவிதை படி கேட்போம்… எழுந்து அமர்ந்து விட்டான்.
தலைவலின்னு சொன்னீங்க?
ம்ம்ம்ம்… நீ படி தலைவலி கூடுதா குறையுதான்னு பார்ப்போம்.. தலையணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டான்.
//நான் ஒன்றும் உன் அழகை பார்க்கவில்லை உன்னை அழகாக்க பார்க்கிறேன் //
சொல்லி முடித்து அவள் நிமிர்ந்து பார்க்க… அவள் அருகில் வந்து நின்றவன்…. அவளை விழுங்கும்படி பார்த்து நின்றான்.
எ… என்ன? இமையும் இதயமும் பட படவென்று அடித்துக் கொண்டது.
நான் ஒன்றும் உன் அழகை பார்க்கவில்லை உன்னை அழகாக்க பார்க்கிறேன்…. என்றான் மூச்சுக்காற்றை அவள் முகத்தில் செலுத்தி…
பேச்சிழந்து மொழியிழந்து மூளை செயலிழந்து போனது அவளுக்கு.
எவ்வளவு விறைப்பா கஞ்சி தண்ணியை நாலு லோட்டா குடித்த மாதிரி சுத்தினான்…. இப்படி நெருங்கி வந்து ஒட்டி உரசி ஹாட் பீட்டை ஏத்துறானே… அவளுக்கு நடுக்கம் கண்டுவிட்டது.
எச்சில் விழுங்கி எழுந்து நின்றவளின் இடையில் கரம் கொடுத்து இறுக்கிக் கொண்டான்.
ஏதேதோ வசனம் பேசினானே…?
என் மேல உனக்கு நம்பிக்கை வரும்போது… என்னை மீறி உனக்கு எதுவும் நடக்காது என்ற தைரியம் வரும்போது என்னை நெருங்கி வா…. அதுவரை என் கட்டிலில் மட்டும் தான் உனக்கு இடம் என்று நாலுநாள் முன்னாடி டயலாக் பேசின ஹரிசரண் நந்தமூரியா இது…?
அவள் நெளிந்து கொண்டே அவஸ்தையாய் பார்க்க…
என்ன யோசிக்கிற? கோபக்காரன் ஹரிசரண் எங்கே போனான்னா?
ம்ம்ம்ம்… ம்கூம் எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தாள்.
உன் மேல கோபம் அப்படியே தான் இருக்கு… அதைவிட காதல் அதிகமா இருக்கு… எப்படி கால்குலேட் பண்ணினாலும் நஷ்டம் எனக்கு தான்.
நீ செய்த தப்புக்கு தள்ளி நின்னு நான் ஏன் தண்டனை அனுபவிக்கணும்? நியாயம் கேட்பதாய் அவளை இன்னும் நெருக்கி நெற்றியில் முட்டினான்.
அவன் நெற்றியில் தான் முட்டினான் அவளுக்கு தான் மூச்சு முட்டியது.
அவள் சிலிர்ப்புடன் இமைகள் படபடக்க அஞ்சன விழி விரித்து அவனை நோக்கினாள்.
என்ன…. மூக்கோடு மூக்கு உரசினான்.
ம்க்கும் அவள் உதடு பிதுக்கினாள்.
ஆட்காட்டி விரல் கொண்டு நெற்றியில் இருந்து கோடாக அவன் தீற்றிக் கொண்டே கீழே வந்து இதழில் இளைப்பாற…. அவன் விரல் மீட்டும் சங்கீதம் அவளுக்குள் பொங்கியது கீர்த்தத்தனமாய்.
திடீரென்று…..பாட்டி… இதோ… இதோ வரேன் என்றாள்.
ஒற்றை வினாடியில் உணர்வுகள் தடைப்பட்டு அவன் மோக வலை அறுந்துவிட்டது. இயலாமை ஏக்கம் கலந்து முறைப்புடன் அவளை பார்த்தான்.
நிஜமா பாட்டி தான்… அவள் இமைகொட்டி கொஞ்சலாய் கூறினாள்.
ஆம்… அழைத்தது சுசிலா தான். மதிய உணவு தயார் என்று சாப்பிட அழைத்தார்.
நல்ல பசி…. இன்னைக்கு சாப்பிட வேண்டியது தான் அவள் இதழை குறுகுறுப்புடன் பார்த்து மோகனமாய் சிரித்தான்.
நானி கவிழ்ந்து நின்ற ஆம்பல் அவளை அப்போதே ஆட்கொள்ள ஆவல் வந்தது. இளமையின் வேட்கையை கட்டுப்படுத்துகிறான் ஆனால் கரை உடைகிறதே….
இடம் பொருள் ஏவல் என்று இருக்கிறதே… இளமை நரம்பு முறுக்கேறி தாபத்தீ தகித்து அவனை ஏதேதோ செய்தது.
அவன் சுதி மீட்டிய உணர்வில் தேகம் சிலிர்க்க… கன்னம் சிவக்க… அறைகதவை திறந்து வெளியேறினாள்.
“——————-“
மதிய உணவு தடபுடலான அசைவ விருந்து. மட்டன், சிக்கன், மீன்,முட்டை என்று முனியாண்டி விலாசே கடைபரப்பப்பட்டிருந்தது.
பந்திபாய் விரித்து தரையில் அமர வைத்து பரிமாறினார்கள்.
அவனுக்காக காரம் கொஞ்சம் தூக்கலாகவே சேர்த்திருந்தார் தமயந்தி.
ரசித்து உண்டவனை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.
என்ன இப்படி கொரிக்கிற…? இறால் பிரியாணி சூப்பரா இருக்கு…சாப்பிடு! மட்டன் சுக்கா கொஞ்சம் வச்சுக்கோ… அவனே மனையாளுக்கு அள்ளி வைத்தான்.
ஐயோ போதும்… பதறிவிட்டாள். பின்னே அவன் தயாள குணத்துடன் அள்ளி அள்ளி இலையை நிரப்பினால் ..
சாப்பிடு… கட்டளை போல் கூறினான்.
அவளுக்கு அசைவம் அவ்வளவு பிடித்தம் இல்லை.
அவன் மிரட்டலுக்கு பயந்து கொரித்து கொரித்து ஒருவழியாய் இலையை காலி பண்ணினாள்.
இப்படி தான் ஒரு ஆளு வேணும்…! வயசு புள்ள நல்லா சாப்பிடணும்னு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டா… அது தான் இடுப்பே இல்லாம எலும்புகூடா நிக்குறா… சுசிலா வியாக்கியானம் பேச… எல்லோரும் சிரித்து விட்டனர்.
பாட்டி… சிணுங்கியவள் கடுப்பாகி எழுந்து கொண்டாள்.
நிவேதாவின் குழந்தையை வாங்கிக் கொண்ட ஹரி தங்கையை சாப்பிட சொல்லி விட்டு குழந்தையுடன் அறைக்கு சென்று விட்டான்.
“——————-“
சேப்ப வேப்புடு ஈம்மா… காயத்ரியை பார்த்து கேட்டான் தேவ்.
அவள் புரியாமல் நிற்க… Fish fry என்றான் சிரிப்புடன்.
காயத்ரி அவரை கை கழுவ பின்கட்டுக்கு கூட்டிட்டு போ என்றார் தமயந்தி.
அவள் முன்னே செல்ல… ரசித்துக் கொண்டே அவன் பின்னே சென்றான்.
பித்தளை அண்டாவில் தண்ணீர் நிறைத்து வைத்திருந்தனர். கிணறு இருந்தது பாத்திரம் தேய்க்க துணி துவைக்க எல்லா வசதியும் இருந்தது.
பிளாஸ்டிக் மக்கில் தண்ணீர் எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.
கைகழுவியவன் கடைசியாய் ஒரு பிடி தண்ணீர் அள்ளி அவள் மீது தெளித்தான்.
லூசு… அவள் பொங்கி விட்டாள்.
நேனா…? சிரித்து விட்டான்.
ஆமா… நீ தான்… நானும் பார்த்துட்டே இருக்கேன் ஓவரா போற… மாமாக்காக பார்க்குறேன் இல்லை… அவள் ஆட்காட்டி விரல் நீட்டி எச்சரிக்க…. அவ்வளவு ரசனையுடன் பார்த்து நின்றான் தேவ்சரண்.
துளி கோபமோ துகள் அளவு வருத்தமோ அவனிடம் இல்லை….காயு நா பிரியத்தமா…..அவ்வளவு காதல் அவன் குரலில்…..
ஷட்டப்.. உன் பிளேபாய் வேலை எல்லாம் என்கிட்ட வச்சிக்காதே…மூச்சு வாங்கியது அவளுக்கு.
எனக்கு காரம் சேராது… ஆந்திரா பிடிக்காது, ஆந்திராக்காரனையும் பிடிக்காது… அவள் நக்கலாய் உதடு கோணினாள்.
எனக்கு தமிழ்நாடு பிடிக்கும் வத்தகுழம்பு பிடிக்கும், ராகி கூழ் பிடிக்கும் தமிழ்நாட்டுக்காரியை ரொம்ப பிடிக்கும்…. அழகாய் கண்சிமிட்டினான்.
உன்கூட பேசுறது வேஸ்ட்… தலையில் அடித்துக் கொண்டாள்.
த்வாரக்க தெலுங்கு நெர்ச்கொண்டி மனம் சால மாட்லாடுகோவச்சு (சீக்கிரம் தெலுங்கு கற்றுக்கொள்… நாம் நிறைய பேசலாம் ) கண்கள் மின்ன காதலுடன் சிரித்தான்.
“——————-“
துளிர் வெற்றிலையில் இனிப்பு சோம்பு கொஞ்சம் வாசனை பாக்கு வைத்து மடித்து கணவனுக்கு கொண்டு வந்தாள் பவித்ரா.
பீடாவா என்றான்?
எனக்கு தெரியாது… பாட்டி கொடுக்க சொன்னாங்க, என்றாள்.
ஆ வென்று வாயை திறந்து காட்டினான். அவள் வெட்கத்துடன் அவன் வாயில் வைக்க…. அவன் கடிக்க கூடும் என்று நினைத்து அவள் சட்டென்று கையை எடுத்துக் கொண்டாள்
ரொம்ப உஷாருதான்… அடக்கப்பட்ட எரிச்சல் அவனுக்கு….பாட்டி இதெல்லாம் தான் சொன்னாங்களா…? வேறேதும் சொல்லலையா?
வேறென்ன சொல்லணும்? அவளுக்கு புரியவில்லை.
புருஷன்கூட அன்பா அக்கறையா குடும்பம் பண்ணனும்னு சொல்லலையா?
லவ் மேரேஜ் பண்ணினவங்களுக்கு அதெல்லாம் தெரியும்னு நினைச்சிருப்பாங்க…. ஒரு வேகத்தில் சொல்லிவிட்டு சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள்.
அப்படியா?உனக்கு தெரியுமா? எனக்கு தெரியாதே… அவள் கன்னம் பற்றி தன் முகம் பார்க்க வைத்தான்.
வெட்கமும் பிடிவாதமுமாய் அவன் முகம் காணாது குனிந்து கொண்டாள்.
பவி… கரகரத்தது அவன் குரல். ஒரு வார்த்தையில் குழைய வைக்க முடியுமா? அவள் குழைந்து போனாளே..
அவள் தன் கண் பார்க்க வேண்டும் என்று அவன் காதல் மனம் பிடிவாதம் பிடித்தது.
எ… எனக்கு தூக்கம் வருது… தடுமாறினாள்.
தூங்கு என்றான்!
என்னது….? ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்க்க பக்கென்று சிரித்தவன் நொடிகூட தாமதியாது அவள் பிறை நெற்றியில் முத்தம் வைத்தான்.
நான் உங்களுக்கு ஒன்னு கொடுக்கணும்…. கிசுகிசுப்பாய் கூறினாள்.
ஏய்…. பேச்சு பேச்சா இருக்கணும்… இரு கன்னத்திலும் கை வைத்து மறைத்துக் கொண்டான்.
ஏய் குலாபி…. எங்க வம்சத்தில் ஆம்பளைங்க சிங்கமா சுத்துவாங்கடி… லவ் மேரேஜ் பண்ணினா அடி உதை எல்லாம் உண்டுன்னு அடிக்கடி அகி சொல்வான்.
மேற்கொண்டு அவன் பேச அவள் இடம் கொடுத்தால் தானே…. அதிரடியாய் அவன் வாயை பொத்தினாள்.
———-தொடரும் ———
error: Content is protected !!