Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 6.1

அறிந்ததும்.. இதுவரை இருந்த மனநிலை முற்றிலும் மாறி போனது அவனுக்கு.
ஏதோ சிறு பெண்கள் விவரமில்லாமல் எங்கு அலைய.. என எண்ணி(?!) அவன் உதவிக்கு வந்திருக்க, 


Advertisement

‘ஏற்கனவே தன்னை பார்வையால் தொடர்பவளுக்கு.. இது இன்னும் வாய்ப்பாகி போனதே..!
‘அதனால் தான் கங்காவோடு சரளமாய் பேசியதற்கு அதட்டினாளா..? அது தன் மேலான சந்தேகத்தால் வந்தது அல்ல.. பொறாமையால் வந்தது..’’ என்ற எண்ணம் அவனின் மனதில் அழுத்திய ஏதோ ஒன்றை விடுவித்தது.

Advertisement

Advertisement

ஆனாலும், ‘இது சரிவராது. ஆரம்பத்திலேயே இதை சரி செய்ய வேண்டும்..’ என்ற நிதர்சனம், அவனை என்ன செய்யலாம்.. என யோசிக்க வைத்தது.
அவளின் வயது பற்றி தெரியாமல் போயிருந்தால் நிச்சயம் அவளை, அவன் கையாளும் விதமே வேறாக இருந்திருக்கும். 

Advertisement

‘அவளின் வயதுக்குரிய ஆசை தான்.. ஆனால், அந்த ஆசைக்குரிய நபர் தான் தவறு..’ என்ற எண்ணத்தால் மட்டும் இப்போது அமைதி காத்தான். 
இதுவரை இருந்த இலகுவான முகம் மாற்றம் கொள்ள, பார்த்திருந்த யமுனாவிற்கு அது யோசனையை விதைத்தது.
முடிவு, தீனாவும் தன்னை.. தன் பார்வையை கண்டு கொண்டது புரிந்தது அவளுக்கு.
தீனாவை போல அவளுக்கு அதிர்வோ.. இல்லை பயமோ.. கொஞ்சமும் இல்லை. 
‘அப்பாடா.. ஒரு வழியா பல்பு எரிஞ்சிடுச்சே என் கண்ணழகனுக்கு..!’ என்ற நிம்மதியே அவளின் விழியில்.
அதையும் அச்சுரம் பிசகாமல் கண்டு கொண்டவன், ‘என்ன செய்ய..?’ என முடிவெடுத்து பேச வாய் திறக்கும் போது ஆட்டோ ட்ரைவர் வண்டியை நிறுத்தியிருந்தார்.
அப்போது தான் அவள் சொன்ன இடத்திற்கு வந்தது புரிந்தது அவனுக்கு.
‘இத்தோட.. தலை முழுகிடனும்..’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவன், அவர்கள் கீழிறங்க அதற்கு மறுபுறம் பார்வையை திருப்பிக்கொண்டான் பிடிவாதமாக.
அவன் பார்த்த இடத்தில் இருந்த வீட்டின் அமைப்பை கண்டவனுக்கு மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல் உண்டாக தனது முடிவை மறந்தவனாய்,
“பாப்பா.. இந்த வீட்டுலயா இருக்கே..?” என்றிருந்தான் யமுனாவை பார்த்து.
அதில் கிளுங்கி சிரித்த கங்கா, “நீங்க திரும்ப திரும்ப பாப்பான்னு கூப்புடுறீங்க..! ஆனா, ஊர்ல அக்காக்கு மாப்பிள்ளை பார்க்கறாங்க கல்யாணத்துக்கு.. தெரியுமா..?” என்று சொல்ல, 
கேட்டிருந்த இருவருக்கும் இருவேறு எண்ணம்..
‘இப்ப இது ரொம்ப முக்கியம்..’ என யமுனாக்கு தோன்றினாலும், ‘எதாவது ரியாக்ஷன்.. நம்மாளுகிட்ட வருதா..?’ என்ற ஆர்வமும் வர, அவன் முகத்தையே உற்றுப்பார்த்திருந்தாள்.
அவனுக்கோ சட்டென உள்ளே ஏதோ தோன்றினாலும் சாமர்த்தியமாக அதை ஒதுக்கி, முகத்தில் மாற்றம் தெரியாது நின்றவன், ‘அப்பாடா, இனி இந்த இம்சை சீக்கிரம் நின்னுடும்..’ என்ற நிம்மதி(?!) கொண்டான்.
அவனின் நிம்மதி மட்டும் அப்பட்டமாக அவன் முகத்தில் தெரிய, கடுப்பாகி போன யமுனா அவனை தன்னை பார்க்க வைக்கவே முன் கேட்ட கேள்விக்கு விடையாய்,
“அதோ அந்த லாஸ்ட் வீட்டுல தான் குடியிருக்கேன்..” என அவள் உதட்டை சுழித்து காட்ட, 
அவளின் முகபாவனை கண்டும் காணாதது போல, “ஏன் பாப்..” என ஆரம்பித்து நிறுத்தி, 
“வேற இடத்துல வீடு கிடைக்கலையா..?” என்றவன் குரலின் பாவனை.. அவளுக்கு சுத்தமாய் புரியவே இல்லை.
“ஏன்..! இங்கே என்ன பிரச்சனை..?” என்றாள் யோசனையாக அங்கும்.. இங்கும்.. பார்வையை சுழற்றி வீதியை பார்த்தபடி.
அவளின் செய்கைக்கு பின் தான்.. மிக அதிகமாய் ஏதோ செய்வது தீனாவிற்கு விளங்க, 
“ஒண்ணுமில்ல.. நீங்க போங்க..” என்றவிட்டு ஆட்டோவின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டே,
“அண்ணே.. போலாம்..” என்றான் ஆட்டோகாரரிடம்.
கங்கா சொன்ன, “தேங்க்ஸ் அண்ணா..” வோ, “ஆட்டோக்கு காசு..” என யமுனா கேட்டதோ.. அவன் காதில் விழுந்ததா..? என்று கூட தெரியவில்லை.
விழுந்தாலும் அதை உணரும் நிலையில் அவனில்லை. அவனின் உடலும்.. மனமும்.. ஏதேதோ எண்ணங்களால் சுழற்றி அடிக்கப்பட்டு கொண்டிருந்தது.
அந்த எண்ணம் கொடுத்த தாக்கத்தால் உடலோ மெல்ல வியர்வையில் நனைய லேசாக நடுங்கவும் தொடங்கியது.
அதன் தாக்கத்தோடு எப்படி கம்பெனிக்கு வந்தான்..? என்பது கூட அவனுக்கு நினைவில் இல்லை.
‘காரணமே இன்றி.. ஏன் இப்படி.. இன்று.. அது, தோன்ற வேண்டும்..?’ என்பதே அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. 
அவனது நேரம் நன்றாக இருந்ததோ.. என்னவோ.. அன்று எந்த சிக்கலும் இல்லாமல் எண்ணெய் இட்ட சக்கரமாய் வேலைகள் நடக்க அமைதியாய் ஓரிடத்தில் அமர்ந்துவிட்டான்.
நீண்ட நேரத்திற்கு பிறகே அவனின் நடுக்கம் மறைய எப்போதும் போல தன்னை தானே தேற்றிக்கொண்டு வேலையில் மூழ்கி போனான்.
இங்கோ தீனாவிடம் கல்யாண விசயத்தை பேசியதோடு, ‘அண்ணா..’ என அழைத்தது என தங்கையின் செயலில் உண்டான கோபத்தை வெளிப்படுத்தி தன் குட்டை உடைக்க முடியாத கடுப்பில்,
“வந்த முத நாளே என்னோட வேலைக்கும் சேத்து வேட்டு வச்சிட்டே.. சந்தோஷமா..?” என்று கோபமாக சொல்லி காம்பவுண்டுக்குள் செல்ல, நின்றிருந்த அழுகை தன்னால் வந்தது கங்காவிற்கு.
முன்னால் சென்ற யமுனாவும் அவளை கவனிக்காது, தீனாவை, “ஆளப்பாரு.. என்னைய கண்டா மட்டும் மூஞ்சிய திரும்பறது. 
கங்காகிட்ட வாய் கிழிய பேச முடியுது தானே..? 
நானா வழிய போறேன் இல்ல.. அதான் இந்த அலட்சியம்.
எனக்கு கல்யாணமுன்னா.. எதுவும் தோனாதா இவருக்கு..? இருக்கட்டும் வச்சுக்கறேன்..” என்று திட்டிக்கொண்டே வீட்டை திறந்து உள்ளே சென்றிருந்தாள்.
கங்காவிற்கு அக்கா பேசியதை கேட்டு குற்ற உணர்வும், வலியின் வீரியமும், சோர்வும் அவளை வேறு எதையும் யோசிக்கவிடாமல் செய்ய அதே இடத்தில் நின்று விட்டிருந்தாள் சிறிது நேரம்.
அது உணவு இடைவேளை நேரமாய் இருக்க அங்கு வந்த சாரதாவும் வசந்தியும் கங்கா உள்ளே செல்லாமல் நிற்பதை தூரத்திலேயே கண்டுவிட்டு அவசரமாக வந்தவர்கள், 
“கங்கா.. ஏன் இங்கேயே நிக்கறே..? அதும் அழுதுட்டு. என்னாச்சு..? கை வலிக்குதா..? டாக்டர் என்ன சொன்னாங்க..? யமுனா எங்கே..‌?” என படபடக்க,
அவர்களிடம் நடந்ததை மறைத்து,
“அக்கா உள்ளே.. கை வலிக்குது.. அதான் அழுதுட்டு இருந்தேன்..” என தேம்பலாக சொல்ல,
“அச்சோ, அது ஒரு நாளைக்கு அப்படி தான் வலிக்கும்டா. டாக்டர் மருந்து கொடுத்திருப்பாங்க தானே. போட்டா சரியாகிடும். வா உள்ள போலாம்..” என இருவரும் பேசிய படி அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் வர,
உணவு உண்ண தயாராக.. எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் யமுனா.
கைகள் வேலை பார்த்தாலும் மனதிலோ, ‘நான் தான்னு அவருக்கு தெரிஞ்சிடுச்சு. இனி என்ன பண்ணுவாரு..? 
அவாய்ட் பண்ணனுமுன்னா.. இங்கே இருக்கறதுக்கு ஏன் அப்படி ரியாக்ட் பண்ணனும்..? 
ஏன் இந்த வீட்டுல அப்படி என்ன விசயம்..?’ என்ற எண்ணங்களில் ஊர்வலமே.
சாரதா வந்ததுமே, “ஏன்டீ.. தங்கச்சி வெளியே அழுதுட்டு நிக்கறத கூட கவனிக்காம.. சின்சியர் சிகாமணி மாதிரி உள்ளே வந்து வேலைய பாத்துட்டு இருக்கே..?” என்று கடிய,
“ஏன்.. அவளுக்கு கால் இல்லையா..? இல்ல.. உள்ள வர வழி தெரியாதா..? 
அங்கே ஹாஸ்பிட்டல்ல வச்சு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணது போதலை.. இங்கேயும் ஆரம்பிச்சிட்டாளா..?” என்று இன்னும் மாறா கடுப்பில் சொல்லிவிட கங்காவிற்கு இன்னும் முகம் சுருங்கி போனது.
அதை கண்டு கொண்ட வசந்தி, 
‘உடன்பிறப்புக்களுக்கு இடையே நுழைவது சரியில்லை..’ என நினைத்து அமைதியாய் சாப்பிட அமர்ந்தாள்.
அவளை போலவே தோன்றிய சாரதாவும் அதையே செய்ய, வலது கை ஆள்காட்டி விரலில் ஊசி இறங்கியிருக்க, ‘எப்படி உண்பது..?’ என புரியாது விலகி சென்று சுவரில் சாய்ந்து அமர்ந்தாள் கங்கா.
உடல் சோர்வோடு மனச்சோர்வும் சேர்ந்து கொள்ள, ‘இங்கு இருந்து போய் விடலாமா..?’ என்ற எண்ணம் ஒரே நாளில் உண்டாகியிருந்தது.
அதன் தாக்கத்தால் அமைதியாகி போனவளை கண்டு கொள்ளாமல், மற்ற இருவரும் உண்ண ஆரம்பித்ததும், 
தங்கைக்கு முதுகு காட்டி அமர்ந்து தனது தட்டிலும் உணவை போட்டு பிசைந்த யமுனாவை கண்டு வசந்திக்கும் சாரதாவிற்குமே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
‘கூடப்பொறந்தவ சாப்பிட முடியாம இருக்கா.. அதை கண்டுக்காம இவ பாட்டுக்கு சாப்பாட்ட போட்டு சாப்பிட ரெடியாகறாளே..! சரியான சுயநலவாதியா இவ..? இதான் இவ குணமா..?’ என்ற ஆராய்ச்சி அவர்களின் கண்ணில்.
இந்த ஒரு வருட பழக்கத்தில் அவர்கள் கண்ட யமுனா அல்லவே இது..! அதனால் வந்த சந்தேகம்..
பிசைந்த சாதத்தை எடுத்துக்கொண்டு திரும்பி அமர்ந்தவள், தங்கையின் வாயருகே அதை கொண்டு செல்ல விழி விரிய தன் அக்காவின் செயலில் அவளின் முகத்தையே கங்கா பார்த்திருந்தாள்.
“இப்படியே பாத்தா.. சோறு வயித்துக்குள்ள தானா போகுமா..? திறடீ வாய..” என கடிய அவசரமாய் வாயை திறந்தாள் கங்கா.
கூட இருந்தவரின் எண்ணங்களுக்கு தன் செய்கையாலேயே பதிலை சொல்லியிருந்தாள் யமுனா.  
கங்காவின் வயிறு நிறையும் வரை பொறுமையாய் ஊட்டி, தண்ணீரையும் மாத்திரையையும் சரி பார்த்து கொடுத்துவிட்டே தனக்கான உணவை உண்ண தொடங்கினாள். 
வயிறு நிறைந்த பிறகே அக்காவின் கோபத்திற்கு பின்னிருக்கும் நியாயமும் புரிந்தது சின்னவளுக்கு.
ஆடி மாதம் கட்டுக்கள் கிடைப்பதே குதிரை கொம்பு.. ஒரே வேலை செய்யும் பல டெய்லர்கள் இருக்கும் இடத்தில் போட்டி இல்லாமல் இருக்குமா..?
இருப்பதில் வேகமாய் வேலை முடித்து அடுத்ததை பெற்று.. என ஒரு போட்டியோடே வேலை நடக்கும். 
சீசன் நேரத்தில் எத்தனை எடுத்தாலும்.. அடுத்து அடுத்து வந்து கொண்டே இருக்கும் என்பதால் பெரிதாக தெரியாது. 
ஆனால், இது போன்ற டல் சீசனில் வேலை இருப்பதே பெரிது. அதில் தன் அவசரகுடுக்கை தனத்தால் வேலையே செய்ய முடியாமல் போனால் சம்பளம் குறையும்.
வீட்டுக்கு அனுப்பும் போது அது அவர்களையும் பாதிக்கும்.. என்பதெல்லாம்.. நேற்று இரவு இவர்களுக்குள் பேசிக்கொண்டதை வைத்து யூகிக்க முடிய, 
‘இனி இப்படி செய்யக்கூடாது.. அக்கா சொன்ன மாதிரி பொறுமையா கவனிச்சு.. கத்துக்கிட்டு அப்புறமா செய்யனும்..’ என்ற அனுபவ பாடத்தை கற்றுக்கொண்டவளுக்கு,
அக்காவின் கோபத்திற்கான ஒரு காரணம் சரியாக தெரிந்திருக்க, 
அவளின் கடுப்பிற்கு பின் இருக்கும் முக்கியமான காரணம் தெரியவந்தால்..?!!
கேட்காமல் காட்டும்
அன்பு உயர்வானது கேட்டுக்
கொடுத்தாலே காதல் அங்கு
உயிராகுது 
கேட்கும் கேள்விக்காக
தானே பதில் வாழுது 
காதல் கேட்டு
வாங்கும் பொருளும் அல்ல
இயல்பானது
நீரினை நெருப்பினைப்
போல விரல் தொடுதலில்
புரிவதும் அல்ல 
காதலும்
கடவுளை போல அதை உயிரினில்
உணரனும் மெல்ல
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!