Skip to content
Post Views: 1,732
ஜதி தரும் அமுதம்
அத்தியாயம் – 22
Advertisement
Advertisement
சஞ்சனாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, வைஷு தன் வீட்டின் முன் கண்கலங்கி சண்டை போட்டதை மீண்டும், மீண்டும் வீடியோ ரெக்கார்டில் பார்த்து, பார்த்து ரசித்து சிரித்தாள்..
Advertisement
வீ. பி உன் பொண்டாட்டி என் காலுக்கு அடியில்,, யாழினிக்காக என்னவேணாலும் செய்வா, என்று அவள் அறையில் சத்தம் கேட்டு சிரித்தவள்,, உன்னையும் என் வீட்டு வாசல் முன் நிக்க வச்சேன் பாத்தீயா வீ. பி..
Advertisement
இதுக்கு தான் ஓவரா ஆட கூடாதுன்னு சொல்லுறது… உன் ஆட்டம் அடங்குச்சா,, என் ராம் அண்ணா பொண்னை நான் யாருக்கும் விட்டு தரமாட்டேன். எப்படி யாழினியை என் கிட்ட வரவச்சேன் பாத்தீயா,, என்று
வீ. பியிடம் பேசுவது போல் பேசி சந்ஷோசம் பட்டுக்கொண்டு இருந்தாள்..
சஞ்சனா எப்போதுடா வீ. பியை பலிவாங்கலாம் என்று காத்திருந்தாள்..
அவர்கள் வீட்டில் நான் வேலை செய்யும் போது, என்னை என்ன பாடு படுத்துனீங்க என்னை, அப்போ எனக்கு எவ்வளவு வலித்திருக்கும்,, எப்படி பிளான் போட்டு உங்ககிட்ட இருந்து யாழினியை தூக்குனேன் பாத்தீங்களா?..
ஏய் இந்திரா தேவி உன் பேத்தியை நெனச்சு, நெனச்சு அழுவுடி நல்லா அழுவு, என்னை என்னென்ன பேசுனீங்க, போஸிச வச்சு துரத்தி விட்டீங்க, அந்த போஸீச வச்சே தூக்கிட்டேன். பாத்தீங்களா..
யாழினியை யாருக்கும் விட்டு தரமாட்டேன் அவ என் அண்ணன் ஆசையா வளக்க நினைச்ச அவன் பொண்ணு, என் ராம் அண்ணா தான் இப்போ இல்லா,, அவர் பொண்ணையாவது நான் நல்லா பாத்துக்கனும்,, என்று நினைத்தாள்..
இங்கே வைஷு மயங்கி சரியவும், அவளை அப்படியே தூக்கிகொண்டுக் அவர்கள் அறைக்கு அழைத்து வந்திருந்தான் வீ.. பி.. அனைவரும் வைஷுவுக்கு என்னாச்சோ, எதும் வேற விதமாக பிரச்சனையா இருக்குமோ.. என்று நினைத்திருக்க..
அவளை பெட்டில் நன்றாக படுக்க வைத்து விட்டு, வீ. பி கீழே செல்ல..
அனைவரும் வைஷுவை அழைத்து கொண்டு ஹாஸ்பெட்டல் போகலாம் என்று கூற..
“அவ தூங்கி எழுந்தா சரியாகிடுவா,, நான் தான் அவளுக்கு தூக்க மாத்திரை கொடுத்தேன்”..
“டேய் மாசமா இருக்குற பொண்ணுக்கு குடுக்க கூடாது” என்று வருத்தப்பட்ட சௌசன்யாவிடம்..
“நீ வருத்தப்படாத , டாக்டர் கிட்ட கேட்டுத்தான்.. கொடுத்தே சரியாகிடும்”..
“நாங்க வருத்தப்படுறது இருக்கட்டும், வைஷுவை எப்படி சமாளிக்குறது?”..
“நான் பாத்துக்கிறேன்” என்றவன் ஆபிஸ் கிளம்ப..
“டேய் வைஷு” என்ற அக்காவை பார்த்தவன்.. “அவ காலையில தான் எழுந்துப்பா, நான் வர்ரேன்” என்று கிளம்பி விட்டான்..
வைஷு ஆழ்ந்த உறக்கத்தில் யாழினியிடம் பேசிக்கொண்டு இருந்தாள், யாழ், யாழ் குட்டி சாரிடா, அம்மா உன்னை விட்டுட்டு இருந்துட்டேன்,, உனக்காக தானே நான் உங்க அப்பாவை கல்யாணம் பண்ணியது, இப்போ நீ எங்கேடா இருக்கா, அம்மா கிட்ட வா யாழ், என்று அவள் ஆல் மனதில் யாழினியிடம் பேசிபடியே தூங்கியிருந்தாள்..
அதிகாலையில் தான் தன் வேலைகளை முடித்து விட்டு. வீட்டுக்கு வந்தான் வீ. பி… வைஷு அவர்களின் அறையில் உள்ள கட்டிலில் சுகமாக தூங்கிக்கொண்டு இருக்க.. மனைவியை சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு, ஓய்வு அறை சென்று குளித்து வந்தவன்.
மனைவியின் அருகில் நெருங்கி படுக்க. அவன் படுத்த அடுத்த நோடி “பாவா” என்று தூங்கிக்கொண்டே வைஷு முணங்க…
மனைவியின் முகத்தை திரும்பி பார்த்தான்,, அவள் தூங்குவது போல் தான் தெரிய,,மனதில் சிரித்துக்கொண்டான், உறக்கத்தில் கூட தன்னை உணர்கிறாள் ஏன்று சிரித்து கொண்டவன்..
“பங்காரம், நா பங்காரம் அம்மாயி” என்றான் மெல்லிய குரலில்..
அவளுக்கு அவன் பேசியது கேட்டதோ? என்னவோ?.. அவளின் முகத்தில் சிறு புன்னகை மலர…
அவளை அணைத்துக் கொண்டு தூங்கிவிட்டான் வீ. பி….
காலையில் முதலில் எழுந்தது வைஷு தான், ஏதோ இருட்டில் இருப்பது போல் தெரிய கண்களை நன்றாக திறந்து பார்த்தாள், அதிகாலை போல தெரிய பக்கத்தில் படுத்து இருந்தான் வீ. பி.. அவன் நன்றாக தூங்குவதை பார்த்தவள், நம்ம எப்போ இங்கே வந்து படுத்தோம், இவர் எப்போ வந்து படுத்தார்,, என்று புலம்பிய படியே எழுந்து கொள்ள பார்க்க..
அவளை எழ விடாமல் அவளை தன்னை நோக்கி மெல்ல இழுத்து, தன் மேல் போட்டுக்கொண்டவன். அவளின் தலை கோத..
வைஷீ அவனிடம் ஒன்றும் பேசாமல் படுத்திருக்க.. வீ. பி அவளுக்கு தலை கோதுவதை விட வில்லை..
வைஷுவுக்கு கணவன் தலைகோதுவது அவ்வளவு சுகமாக இருக்க.. அவன் மார்பில் நன்றாக கண்மூடி
படுத்திருந்தாள்…
மனைவியின் உச்சன் தலைமீது முத்தமிட்டவன்… அவளை இறுக்கி அணைத்துக்கொள்ள…
வைஷு அவனை அணைக்கவும் இல்லை, பேசவும் இல்லை, அவளுக்கு அவன் மேல் கோபம் இருக்க அமைதியாக இருந்தாள். மனைவி பேசுவாள் என்று எதிர் பார்த்தவனுக்கு, அவள் ஒன்று பேசாமல் இருப்பது, தன்னை அணைக்காமல் இருப்பது எண்ணி கோபம் கொண்டவன்..
பின்பு அவளே யாழினியை நெனச்சு வருத்தத்துல இருக்க, நீயும் ஏன்டா அவளை கஷ்டப்படுத்துற, அமைதியா இரு, என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்…
வைஷுவுக்கு ஓய்வு அறைக்கு செல்ல வேண்டும் என்று எழுந்தவளை.. என்ன என்று பார்த்தவனிடம் சுண்டு விரலை காட்டி “ரெஸ்ட் ரூம் போகனும்” என்றாள்..
“போ” என்று அவளை விட.. மெல்ல அவனிடம் இருந்து எழுந்தவள். புடவையை சரிபண்ணிவிட்டு ஓய்வு அறைக்கு சென்று வர..
மனைவியை கண்யிமைக்காமல் பார்த்திருந்தான்.. அவள் தண்ணீர் குடித்து முடித்ததும்.
அவனை நிமிர்ந்து பார்த்தவளை..
“வா” என்று அவளை அழைக்க..
மெல்ல நடந்து வந்த வைஷு கட்டிலில் அமர…
அவள் மடிமீது தன் தலையை வைத்தவன்.. கண்மூடிக்கொள்ள.. வைஷு நன்றாக சாய்ந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்..
ஒரு பத்து நிமிடம் படுத்திருந்தவன்.. அவளின் இடுப்பு பகுதில் உள்ள புடவையை மட்டும் விலக்கி, அவளின் வயிற்றில் தன் முகத்தை புதைத்துகொண்டவனின் கைகள் வைஷுவின் இடுப்பை சுற்றி வலம் வர…
கணவன் தொட்டதும் உருகியவள்,, அழுகை வர.. அழகூடாது என்று தன்னை கட்டுபடுத்தி, அமைதியாக இருந்தவள்.. அவன் பிரிவை நினைத்து கோபம் கொண்டவள் அவனை தன்னிடமிருந்து தள்ளி விட..
அவள் தள்ளிவிட்டும் அவளை விடாமல், இறுக்கி அணைத்தவன், தன் இரட்டை மகவுக்கு முத்தம் வைக்க..
வீ. பியை அடிக்க ஆரம்பித்து இருந்தாள்.. “ஒன்னும் வேணாம், போங்க, போங்க” என்று அவனை அடிக்க, அவனோ அவன் காரியத்தில் கண்ணாக இருந்தான்..
வைஷு “வேண்டாம்” என்று அவனை தன்னோடு இருந்து பிரிக்க முயற்சி பண்ண..
விடுவானா பிடிவாத காரன்,, “கொஞ்சம் நேரம் இருடி”என்றவன் அவன் மகவுயிடம் பேச ஆரம்பித்தான்..
“ஓய்ய்ய்ய்.. குட்டிஸ்,, நானா றா பங்காரம்,, நா இரண்டு பங்காரம், எப்படி இருக்கீங்க”.. என்று வைஷுவின் மேடிட்ட வயிறை தடவி முத்தமிட..
“ரெண்டு மாதம் எங்க போனாரு உங்க நானா, கேளுங்கடா அவரை, இப்போ வந்துட்டாரு கொஞ்ச”.. என்று அவளின் வயிற்றின் மீது கைவைத்து அவளும் பிள்ளைகளிடம் பேச..
அவளின் கைவிரலை பிடித்து முத்தம் வைத்தவன்..”உங்க அம்மாவுக்கு டான்ஸ் கிறுக்கு பிடிச்சு இருந்துச்சு, அத குறைக்க தான் உங்க கொள்ளு தாத்தா விட்டுல விட்டேன்டா, என் குட்டி பங்காரங்களா”…. என்று பேச..
“யாருக்கு கிறுக்கு புடிச்சிருக்கு?”…
“உனக்கு தாண்டி” என்றவன்.. அவள் மணிவயிற்றை மெல்ல வருடி விட..
‘”தள்ளி போங்க,, இந்த கிறுக்கு புடிச்சவ வேண்டாம், உங்களுக்கு வேண்டாம்? “.. என்று அவனை அவளிடம் இருந்து பிரிக்க….
“வேண்டாம் எல்லாம் சொல்லக்கூடாது றா பங்காரம்” என்றவன் அவளின் மேலே வந்து முகத்தை பார்க்க..
தன் முகத்தை அவனுக்கு காட்டாமல் திருப்பிக்கொண்டவள்..” எனக்கு யாரும் வேண்டாம், எல்லாரும் என்னை வேதனை படுத்துறீங்க போங்க எல்லாரும்” என்றவள் கண்கலங்க..
‘” யாரும் உன்னை விட்டு போகல, நீ பண்ணது தப்பு, அத நீ உணரணும், அத விட்டுட்டு எல்லாரையும் குறை சொல்லாத வைஷு, நீ பண்ணது சரியான்னு?. யோசிச்சு பாத்தீயா? “..
” நான் பண்ணது தப்பு தான், அதுக்கு என்னை தாத்தா வீட்டுல கொண்டு போயி விடுவீங்களா” என்று அழுதவளை..
“என்னை வேற என்ன பண்ண சொல்லுற, உன்னை அடிக்க சொல்லுறீயா, நீ என் கூடா இன்னும் கொஞ்சம் நேரம் அன்னைக்கு இருந்திருந்த கண்டிப்பா உன்னை அடிச்சிருப்பேன், உன் மேல செம்ம கோபத்துல இருந்தேன், அதான் உன்னை கொண்டு போயி அங்க விட்டேன்,, நம்மளுக்கு கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள்ளே குழந்தை கிடைச்சது எவ்வளவு பெரிய பாக்கியம் தெரியுமா?.. அத நீ புரிஞ்சிக்காம, விபரீதமா உன் ஆட்டத்துக்கு, என் பிள்ளைகளை பலி கேடா வாக்குற. அத பாத்துட்டு நான் சும்மா இருக்கனுமா?.. நீ பண்ணது பெரிய தப்பு”..
என்றான் கோபமாக..
அவளோ என்ன சொல்வது என்று முளித்துகொண்டு அமர்ந்திருக்க..
..
“நம்மளுக்கு குழந்தை பிறக்க போறத, நீ என்கிட்ட தானே முதல்ல சொல்லனும் சொன்னீயா?.. ஏன் சொல்லல்ல, சொன்னா உன்னை டான்ஸ் ஆட விடமாட்டேன்னு தெரியும் தானே, சோ உன் மனசுக்கு நீ பண்ணா போகுறது தப்புன்னு பட்டுச்சு தானே, அப்போ நீ பண்ணது தப்புன்னு தெரியுது உனக்கு..
அதனால தானே மறைச்ச, உன் வாயால நம்ம குழந்தை வர்ரத கேட்டா நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பேன், எல்லாத்தையும் கெடுத்திட்டு போடி”… என்றான்..
“சாரி, சாரி பாவா”…. என்றதும்..
“அடிச்சிருவேன் சாரி சொன்னா, சாரி என்ற வார்த்தை உனக்கு அவ்வளவு ஈசியா போச்சு, நீ என்ன வேணாலும் பண்ணுவ, பண்ணிட்டு சாரி பாவான்னு சொன்னா, நான் உன்னை மன்னிக்கனும் அப்படித்தானே” என்றவன் கோபத்தில் எழுந்து நிற்க..
அவனின் கையை பிடித்து கொண்டவளின், கைகளை பிரித்து விட..
மீண்டும் அவனின் கையை பிடித்துக்கொண்டவள்,, வருந்துவதை போல முகத்தை வைத்துக்கொண்டு.. “இனிமே இப்படி பண்ண மாட்டேன், நீங்க சொன்னதை மட்டும் தான், நான் கேட்பேன்” …
“நான் சொன்னதை நீ கேட்கனுமுன்னு,, நான் சொல்லல்ல, நீ உன்னை வருத்திக்காம உன்னை பாதிக்காமல் ஒவ்வொன்னையும் செய்யின்னு தான் சொல்லுறேன், உன்னையும், நம்ம குழந்தையும் வருந்திகிட்டு எந்த ஒரு செயலையும் செய்யாதே, சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும்,,.. நீ இல்லண்ணா, சித்திரை வரைந்து என்ன பிரியோஷணம் யோசி, நீயும் என் பிள்ளைகளும் தான் எனக்கு முக்கியம், புரிஞ்சதா?””… என்றதும்..
தலையை, தலையை ஆட்டிய மனைவியை “வா” என்று அழைத்தான்..
அவளோ மெல்ல தன் வயிற்றை பிடித்து கொண்டு எழுந்து அவனிடம் வர..
அவள் மெல்ல வயிற்றை பிடித்து எழுந்த அழகை ரசித்தவன்.. அவனின் கையை நீட்டி அவளை அழைத்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன்..
அவளின் பிறை நெற்றியில் முத்தமிட்டவன், அவளின் கலைந்திருந்த முடியை காதோரம் ஒதுக்கி விட்டவன். “அழகா இருக்கடி நா பொம்மா” என்றவன்.. அவளை இறுக்கமாக அணைத்துகொள்ள.
அவளோட உதடுகள் அழுகைக்கு தயாராக. “வேண்டாம்டி போதும் அதான் வந்துட்டீயே, எதுக்கு அழற, ஒன்னும் இல்லடா, இனி எது பண்ணாலும் யோசிச்சு பண்ணு, நம்மல பாதிக்காம பாத்துக்கோ, அது போதும்” என்றவன், மனைவியை நீண்ட நேரம் அணைத்த படியே நின்றவன்..
“என் பிள்ளைகள் வந்ததும் நீ ரொம்ப அழகாய்ட்டறா, நான் சிங்காரம்” என்றவன் அவளிள், கன்னத்தில் தன் விரல் கொண்டு கோடு இழுத்தவனிடம்…
“நீங்க நான் இல்லாமா நல்லாவே இல்ல பாவா, ரொம்ப மெலிஞ்சு போயி இருக்கீங்க, கண்ணெல்லாம் சிவந்து போயியிருக்கு, உங்களை கவனிக்குறது இல்லையா?”..
” என் இரண்டு பங்காரம் என்னை விட்டு தூர போயிட்டாங்க நான் எப்படி சந்தோஷமா இருக்குறதுசொல்லு.. ஆனா நீ ரொம்ப நல்லா இருக்குற மாதிரி தெரியுதுடி, நல்லா வைட்டு போட்டு, என் பிள்ளைகளையும் நல்லா வளத்து வச்சு இருக்க” என்றவன் அவளின் மேடிட்ட வயிறை தடவ… ,
கணவன் தொட்டதும் நெலிந்தவள், “போங்க பாவா” என்று அவனை அணைத்தபடியே நின்றவள்,, “விடிஞ்சிருக்கு பாவா நான் கீழே போறேன், நீங்க ஆபிஸ் போகலீயா?”..
“இல்ல வைஷு உன் கூட இருக்கனுமுண்ணு, ஆபிஸ்சில் உள்ள பென் டிங் இருந்தா எல்லா வேலையெல்லாம் நேத்தே முடிச்சாச்சு, இனி உன்னை பாத்துக்குற வேலை தான்..
இரண்டு மாதமா நீ இல்லாம, முடியலடீ , இனி நான் கோபப்படுற மாதிரி நடந்துக்காதறா வைஷு” என்றதும் தலையை ஆட்டியவளை..
அலேக்காக தூக்கி கொள்ள..
“என்ன பாவா?”… என்றதும்…
“நீ என்னை அப்பாவா ஆக்குனதுக்கு டி பங்காரம்””..
என்று அவளை தூக்கி சுத்த..
“பாவா தலைசுத்துது பாவா விடுங்க” என்றதும் அவளை இறக்கி விட்டவன்.. அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன் ..”வா” என்று அவளை கட்டிலுக்கு தூக்கி வந்தவன்..
“எனக்கு நல்லா தூங்கனும் என் கூட இருந்து என்னை தூங்க வை பங்காரம்” என்றவனை..
மார்போடு அணைத்து தட்டிக் கொடுத்து வீ. பி, யை தூங்க வைத்தாள்..
மனைவி தன் அருகில் இருப்பதை உணர்ந்தவன்,, சந்தோஷத்தில் இத்தனை நாள் தூங்கத்தை தூங்க…
வைஷுவுக்கு பசியெடுக்க ஆரம்பித்துவிட்டது.. கணவன் நன்றாக தூங்கியதும் மெல்ல அவனிமிருந்து பிரித்து வந்தவள், குளித்து முடித்து கீழே செல்ல. மொத்த குடும்பமும் இவர்களுக்காக காத்திருக்க..
சிரித்த முகத்தோடு வந்த மருமகளை பார்த்து தான் இந்திரா தேவிக்கு நிம்மதியானது..
எங்கே வீ. பி மீண்டும் சண்டை போடுவானோ, என்று பயந்து இருக்க.. மருமகளின் தெளிந்த முகத்தை பார்த்தா இந்திரா தேவி “வாடா வைஷு நல்லா தூங்குனியா?”..
“ஊம்ம்ம்… தூங்குனேன் அத்தை”..
“வீ. பி எங்கே டா?”..
“அவங்க நல்லா தூங்குறாங்க அத்தை”…
“வா சாப்பிடு வா” என்று மருமகளுக்கு உணவை தட்டில் வைத்து பரிமாறி உண்ண கொடுத்தார்..
வைஷுவுக்கு நல்ல பசி.. உணவு கார சாரமா இருக்க, நன்றாக உண்டாள்.. மருமகளுக்கு பார்த்து, பார்த்து இந்திரா தேவி பரிமாறா வயிறு நிறையும் வரை உண்டாள்.. இந்திரா தேவிக்கு தெரிந்தது தன் பேர பிள்ளைகளுக்காக தான், அதிகமாக உணவு உட்கொள்கிறாள் என்று, இப்போது தன் எடை கூடுவதை பற்றி எல்லாம் அவளுக்கு கவலை இல்லை. வைஷுவிற்கு,, உண்பது, உறங்குவது, அதுவே தன் கடமை என்று இருக்கிறாள்..
error: Content is protected !!