Skip to content
Post Views: 2,092
நதி 7
மறுநாள் கையில் காயமிருந்த போதும் புது இடத்தில் தனித்து விட முடியாது என்பதால் கங்காவை அழைத்துக்கொண்டு கம்பெனிக்கு வந்து சேர்ந்திருந்தாள் யமுனா.
Advertisement
கேட் அருகே வரும் போதே தீனா போர்டிக்கோவில் நின்று போனில் யாருடனோ மும்முரமாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது யமுனாவிற்கு.
தனக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனை எப்போதும் போல அப்பட்டமான பார்வை பார்க்க முடியாது.. கங்கா உடனிருப்பதால் ஜாடையாய் பார்த்திருக்க,
Advertisement
Advertisement
அவளின் அந்த பார்வைக்கே அவளின் புறம் திரும்பியிருந்தான் தீனா.
‘பார்றா.. உத்து உத்து பாத்தாலும் சொரணையே இல்லாத மாதிரி நிற்பாரு.. இல்ல எஸ்கேப் ஆகி ஓடுவாரு.
Advertisement
இப்போ ஜாடையா பாத்தாலே.. பட்டுன்னு நம்ம பக்கம் சரியா திரும்பறாரு.. யமுனா ஒத்தநாள்லயே நல்ல முன்னேற்றம் டீ..!’ என மனதால் அவனின் செயலை மெச்சிக்கொண்டாள்.
உடன் வந்த கங்காவை கண்டு, ‘பேசாமல் போனால் நன்றாக இருக்காது..’ என்பதால்,
“கங்கா இப்ப கை வலி எப்படி இருக்கு..? டாக்டர் கொடுத்த மருத்து எடுத்துக்கிட்டையா..?” என்றான் அக்கறையாக.
“வலி பரவாயில்ல அண்ணா.. மருந்து சாப்பிட்டேன்..” என அவளும் புன்னகைத்து பதில் சொல்ல,
“இனி இந்த மாதிரி இல்லாம பாத்து சூதானமா வேல பார்க்கனும் சரியா..?” என்றான் கண்டிப்போடே.
அதற்கு அவள் சரியென்பதாய் தலையசைத்தாள்.
பேச்சு கங்காவோடு இருந்த போதும், இருவரையும் குறுகுறுவென பார்த்திருந்த யமுனாவை, மற்றவர்கள் அறியாது விழியால் மிரட்டிக்கொண்டிருந்தான் அவளின் கண்ணழகன்.
‘இனி பாத்தே.. மவளே என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..’ என்பதாய் அவன் விழி பேச,
“உங்களுக்கே தெரியாதப்போ.. எனக்கென்ன..?” என அவள் வாயசைப்பில் பதில் சொல்ல அசந்து தான் போனான் தீனா.
ஏனெனில், ‘அவன் வாய் வார்த்தையாய் கூறாத ஒன்றை கூட.. பார்வையால் உணர்ந்து இப்படி திருப்பி கொடுப்பவளை என்ன செய்வது..?’ என்ற திகைப்பும்,
கூடவே, “குட்டச்சி.. அடங்கறாளா பாரு..?” என்ற கொஞ்சலும் ஒருங்கே தோன்றியது அவனுள்.
அவனின் எண்ணம் செல்லும் பாதை அவனுக்குள் திடுக்கிடலை உண்டாக்க அவசரமாக அவளின் புறமிருந்து பார்வையை விலக்கிக்கொண்டவன்,
“சரி வர்றேம்மா..” என கங்காவிடம் மட்டும் சொல்லிவிட்டு யமுனாவின் புறம் திரும்பிக்கூட பார்க்காமல் சென்றிருந்தான் வேகமாக.
‘க்கும்.. இன்னும் எத்தன நாளைக்கு இந்த ஓட்டமோ..?’ என அவனின் செயலில் மனதுக்குள் செல்லமாய் வைது கொண்டவள் தான் வேலை பார்க்கும் தளத்துக்கு சென்றாள்.
அடுத்து வந்த நாட்களில் அவன் கண்ணில் படும் போது அவளின் பார்வைக்கு முறைப்பை பதிலாக்குபவன் சில நேரத்தில் கண்டும் காணாதது போல இருந்து கொள்வான்.
கங்காவோடு மட்டும் ஏதாவது ஒரு சில முறை அவளாக பேசும் போது பேசுபவன் யமுனாவை கண்ணால் கூட காணமாட்டான்.
அப்படி அவன் காணாத போதும் அவளின் ஆளை கொள்ளையிடும் பார்வை அவன் முதுகை துளைப்பதை அவனறியாமல் இல்லை.
‘இதை எப்படி நிறுத்த..?’ என்ற பெரும் குழப்பம் அவனுள் இப்போது எல்லாம் வாட்ட துவங்கியது.
நாளாக நாளாக அவனுள் எழும் ஆசை, அவனை பயம் கொள்ள செய்தது என்னவோ உண்மை.
அவனுக்குள்ளும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் உண்டு என்பதை நன்றாகவே காட்டிக்கொண்டிருந்ததே அவன் தேகம்.
அதனை கொண்டே அவளின் கண்ணில் படாமல் முடிந்த வரை தப்பினாலும், அவளை பார்க்கும் போது அவளின் பார்வை தன்னை தொட்டு செல்வதை அவனின் உள்மனம் சந்தோஷமாய் ஏற்பதை என்ன முயன்றும் தடக்க முடியாமல் தடுமாற துவங்கினான்.
யாரென தெரியாத வரை அவனை பெரிதும் பாதிக்காத விசயம், அவளின் செயலில் அவளின் கண்களின் அபிநயத்தில் இத்தனை வருட திருமணத்திற்கான மறுப்பும் ஆட்டம் காணச்செய்தது.
ஒவ்வொரு முறையும் திருமணத்திற்கு பின், தன் வீட்டில் யமுனாவிற்கு கிடைக்க போகும் மரியாதை..(?!) பற்றிய குழப்பமே அவனை தடுத்ததே ஒழிய,
அவளை அவனுக்காக அவனுடனே வைத்துக்கொள்ள அத்தனை பேராசை எழத்தொடங்கியிருந்தது சமீபமாக.
அதனால் அவளின் கண்ணில் படாமல் முடிந்தவரை மறைந்தே இருந்தான் தீனா.
அப்படி இருந்த போதும் தூரத்தில் எங்காவது அவன் கண்ணில் படும்போது ஓடி வந்து, “அண்ணா..” என அழைத்து பேசும் கங்காவை தவிர்க்கவே முடியாது, அவளருகே வந்து நின்று பேசும் படியாக, ‘அந்த நேரம் தனக்கு போதும்..’ என்பதாய் அவனை பார்த்திருப்பாள் யமுனா.
அப்படி அவள் பார்க்கும் நேரத்தில், கங்காவின் வாயிலிருந்து வரும் அண்ணாவிற்கு அவனின் பார்வை தன்னால் அவளுக்கு பின் நிற்கும் யமுனாவை சீண்டலோடு தொட்டு மீளும்.
அவனின் அந்த பார்வையின் அர்த்தமா அவளுக்கு புரியாது..?
“அவ கூப்பிட்டா என்ன..? நா கூப்பிடனும்டா மடையா..” என்பதாய், அவனுக்கு பதில் கொடுத்துவிட்டு நிற்பவளை கண்டு அவனுக்கும் அவ்வப்போது அவளை சீண்டி பார்க்கும் போராவல் தோன்றாமல் இருக்காது.
ஆனாலும் வழிய சென்று எதையும் அவன் செய்ய மாட்டான். சந்தர்ப்பம் வாய்க்கும் போது அதை அவன் தவறவும் விடுவதாய் இல்லை.. இப்பொழுது எல்லாம்.
அவளின் நெருங்கினால் வரும் பயமும், விலகினால் வரும் தவிப்பும் என மனதோடு போராடி கலைத்து போனான் என்றே சொல்லாம்.
ஒரு நேரம் அவள் தன்னோடு இருந்தால்.. என்ற கற்பனை ஆனந்தத்தை கொடுத்தால்,
மறுபுறம், ‘அம்மாவின் மானத்திற்காக உடன்பிறந்தவர்களின் நிம்மதிக்காக என காலம் முழுவதும் தந்தை என்ற உறவோடு உறவாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நான்..
அதே சுழலில் இவளையும் இழுத்து செல்ல வேண்டுமா..?’ என நினைத்து அதை ஒதுக்கி ஓடவும் செய்கிறது.
தந்தை என்ற ஒருவரை தான் இனி எதற்காகவும் சார்ந்து இருக்கவே கூடாது என்ற வைராக்கியத்தோடு தனித்து வாழ்கிறவன்.. ‘திருமணம்..’ என்ற ஒன்றிற்காக அவரிடம் சென்று நிற்க வேண்டுமா..? என்ற எண்ணம் வேறு அவனை எந்த பக்கமும் செல்ல விடாமல் தடுக்க அதில் தடுமாறிபோனான் அந்த வளர்ந்த ஆண்மகன்.
அவனிருந்த நிலையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது ஒருவித அழுத்தத்திற்கு ஆளாக தொடங்கியிருந்தான்.
அந்த அழுத்தம் தாங்காது தன் உணர்வுகளை கட்டுக்குள் வைக்கும் மார்க்கம் புரியாது நின்றவன்.. நள்ளிரவில் மழை பெய்வதை கண்டதும், எதையும் யோசிக்க பயந்து இயற்கையின் மடியில் சரணடைய தயாரானான்.
இரவு நேரம்.. தனிமை.. அவனுக்கு ஆறுதலாய் பெய்த மழை.. தடுக்க எவர் அங்கு..?
தனக்குள் கொந்தளித்த உணர்வுகள் மொத்தமாக வடிந்து கொஞ்சம் உணர்வுகள் கட்டுக்குள் வந்த பின் மனம் நிர்மூலமாக இருக்க அதன் பிறகே அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
பாதி இரவுக்கு மேல் மொத்தமாக நனைந்ததால் குளிரில் நடுங்கியபடி கீழே வந்தவன் ஈர உடையை மாற்றிய போதும் நடுக்கம் குறைவதாய் இல்லை.
ஆனாலும் வீம்போடு அதை புறம் தள்ளியவன் போர்டிக்கோவில் எப்போதும் போல மடக்கு கட்டிலை எடுத்து போட்டு படுத்துக்கொண்டான்.
தூக்கமா..? மயக்கமா..? என பிரித்தரிய முடியாத நிலையில் கிடந்தவனை காலையில் நேரமே தினமும் கம்பெனியை கூட்டி சுத்தம் செய்ய வரும் பெண்மணியின் இடைவிடாத அழைப்பு ஓசை தான் லேசாக அசைத்தது.
உடல் முழுவதும் வலி கண்டு கண்கள் சிவந்து எழவே முடியாத நிலையில் தட்டுத்தடுமாறி வந்து கதவை திறந்துவிட்டவனை கண்டு அவர் விசாரிக்க,
“ஒன்னுமில்ல க்கா.. லேசா சளி. அதான். நீங்க கூட்டி முடுச்சதும் கம்பெனிய பூட்டி ஆஃபிஸ் ரூம்ல கீய வச்சிட்டு மெயின் கேட் கதவ சும்மா சாத்திட்டு போங்க..” என சொல்லிவிட்டு,
கட்டிலோடு தான் எப்போதும் தங்குமிடம் சென்றவன் மீண்டும் உடலின் அலுப்பால் தூங்கி போனான்.
குமரன் வந்து அவனை காலை உணவுக்காக தேடும் வரையில் அவனை பற்றி கேட்பாரோ கவலை கொள்வோரோ யாரிருக்கிறார்கள்..?
குமரன் வந்து அவனை உசுப்பும் வரை ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருந்தவன் அவனின் கைப்பிடியில் எழுந்து அமர்ந்தான்.
“என்ன ண்ணே..! என்ன உடம்பு இப்படி கொதிக்குது..?” என்று பதறி கேட்டவனிடம்,
‘ஏன்.. மழையில் இருந்தேன்..’ என்ற உண்மையை கூறவா முடியும்..?
அதனால், “மழை நேரம் டா.. அதான்..” என கரகரத்த குரலில் சொல்ல,
“மூணு வருஷமா பெய்யாத மழை.. இந்த வாட்டி தானே பெஞ்சு இருக்கு.. அதுவும் நம்ம கம்பெனிக்குள்ளேயே பேஞ்சு உங்கள நனச்சிருக்கு பாருங்களேன்..” என அவன் சொன்ன பாவனையே,
அவன் இவனின் பொய்யை உணர்ந்து விட்டது தீனாவிற்கு புரிந்தாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை
error: Content is protected !!