Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Aarpitha’s Niththirai Kalaiththa Maayaval 8

வாய் மொழிந்த வார்த்தை யாவும்

காற்றில் போனால் நியாயமா

பாய் விரித்து பாவை பார்த்த

காதல் இன்பம் மாயமா



Advertisement

 

வாள் பிடித்து நின்றால் கூட

நெஞ்சில் உந்தன் ஊர்வலம்

Advertisement

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட

Advertisement

ஜீவன் உன்னை சேர்ந்திடும்

 

தேனிலவு நான் வாட

Advertisement

ஏனிந்த சோதனை

 

வானிலவை நீ கேளு

கூறும் என் வேதனை

 

நடு ராத்திரியில் தன்னை இருள் சூழ…. பௌர்ணமி வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டு இருந்தாள் இனியவள்….. 

 

அதை கண்டவன்….. அவளை சென்று சமாதானம் செய்வதா… இல்லை இப்படியே விட்டு செல்வதா என்ற குழப்பத்தில் நின்று இருந்தான்….. 

 

அழுத்தவளிடம் அசைவு தெரிய… அப்படியே அறைக்குள் சென்று படுப்பது போல் நடித்தவன்…. அவள் என்ன செய்ய போகிறாள் என்பதையும் பார்த்து கொண்டு இருந்தான்… 

 

தன் கைபையை நோக்கி வந்தவள்… அதில் எதையோ தேடி எடுத்து கொண்டு.. மறுபடியும் வெளியே சென்று விட்டாள்…. 

 

சென்றவள் என்ன செய்கிறாள் என்பதை பார்க்க மறுபடியும் பூனை போல் வெளியே சென்றவன்…. எதோ ஒரு புத்தகத்தை வைத்து அவள் எதையோ எழுதி கொண்டு இருந்தாள்… பார்த்தவன் குழப்பத்தோடு மறுபடியு சோபாவில் போய் படுத்து கொண்டான் (இதெல்லாம் ஒரு பொழப்பு…)

 

“இந்த ராத்திரில அப்டி என்ன எழுதிக்கிட்டு இருக்காங்க….. ஒரு வேலை நான் வீட்ட விட்டு போறேன்… இல்லை தற்கொலை பணிக்க போறேன்னு எதாவது எழுத்துறைகளோ…. அய்யய்யோ அப்போ போய் கேக்கலாமா…. என்று யோசித்தவன்”… கேட்டால் மட்டும் பதில் ஒழுங்காகவா வர  போகுது என்று நினைத்து யோசித்து கொண்டே இருந்தவன் தூங்குயும் போனான்…. 

 

பின் விடிந்ததும் தன் மேல் எதோ வித்தியாசமாக இருப்பதை நினைத்து விழுந்தவன்… முதலில் இனியவளை  தான் தேடினான்.. 

 

அவளோ படுத்து இருந்த படுக்கையை மடித்து கொண்டு இருக்க… ஹாப்பாடா என்று இருந்தது அவனுக்கு 

 

அப்போது தான் கவனித்தான்… தன் நெஞ்சின் மீது எதோ காணப்பதை…. என்ன என்று பார்க்க… 

 

வைஷு தான் அவன் நெஞ்சின் மீது படுத்து கொண்டு… வாயில் ஒரு விரலை வைத்து சூப்பி கொண்டு இருந்தாள்….அதை பார்த்தவனுக்கு மனம் லேசானது போல் ஒரு உணர்வு…. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தவனை அப்போது தான் கவனித்தாள் இன்னியவள்…. 

 

“பதறி கொண்டு அவன் அருகில் சென்றவள்… குட்டி தான் உங்க மேல தான் படுப்பேன்னு ஒரே அடம் பிடிச்சாள்… அதான் வேற வழி இல்லாம உங்க மேல படுக்க வெச்சிட்டேன்…”

   

என்று விளக்கிய பின் அவளை பார்த்தவன்… 

 

பரவாயில்லை என்பது போல் கை அசைக்க… அவளும் செல்ல எத்தனித்தவளை அழைத்தவன்… 

 

“இன்னைக்கு போட்டுக்க தேவையான டிரஸ் வாங்கிட்டு வந்து இருக்கேன்…. மீதியை இன்னைக்கு வாங்கி தரேன்…. அந்த பைல இருக்கு எடுத்துக்கோ ” என்று முடித்து கொண்டான்….. 

 

“இவ்ளோ நேரம் நம்ம இதை யோசிக்கலையே… நல்ல வேலை இவங்க வாங்கிகிட்டு வந்துட்டாரு ” மகிழ்வாய் நினைத்தவள்… 

 

“இவங்களுக்கு உதவி செய்யுறதால தானே வாங்கி குடுக்குறாரு ” என்று பதில் உதவி போல் எண்ணி கொண்டாள்…. 

 

குளித்து முடித்து கீழே சென்றவள்… சமையல் அறை புகுந்து கொள்ள… மருமகள் பொறுப்பாக தான் இருக்கிறாள் என்று மனதில்  மெச்சி கொண்டார் செல்லம்மாள்… 

 

[the_ad id=”6605″]

 

 

 

“அவள் வருவதை பார்த்த ஜானகி… என்ன இனிமா… இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட….காபி எதுவும் குடிக்குறியா… நான் போட்டு தரவா” என்றவாரே அவளை வர வேர்த்தார்…. 

 

பின் எதுவும் பேசாமல் சமையல் அறையை விட்டு வெளியே சென்றவர்…. சிறிது நேரத்தில் கையில் மல்லிப்பூவுடன் வந்தார்…. 

 

“கல்யாணம் ஆன பொண்ணு…. தலையில பூ கூடவா இல்லாம இருப்ப…. திரும்பு என்றவர்” அவரே அவள் தலையில் பூ வைத்து விட…. 

 

அதை பார்த்து கொண்டு இருந்தவள்… ஜானகியை கட்டி கொண்டு அழ ஆரம்பித்து விட… அங்கு இருந்த யாருக்கும் காரணம் தெரியாமல் போனாலும்… அனைவரும் பதறினர்…. 

 

“என்ன இனிமா… வீட்டு நியாபகம் வந்துடுச்சா… அம்மாவ பாக்கணும் போல இருக்கா” என்றார் மிகவும் அன்போடு 

 

“எனக்கு அம்மா இல்லை… அக்கா மட்டும் தான் இந்த உலகத்துல எனக்கு இருக்க ஒரே சொந்தம்…. அவ கூட இப்டி தான்… இனிமானு தான் கூப்டுவா…. இப்டி தான் தலையில் பூ வெச்சி விடுவா” கேவி கேவி அழுத்தவளை பார்க்கவே எதோ போல் இருந்தது…. 

 

அவளை ஆதரவாக தட்டி கொடுத்து கொண்டு இருந்தார் ஜானகி… 

 

உங்கள ஒன்னு கேக்கவா என்றால் தயக்கத்தோடு…. என்ன என ஜானகி கேட்க 

 

“உங்களை அம்மானு கூப்டுக்கவா” என்றால் ஏக்கம் கலந்த தயக்கத்துடன்…. 

 

இதை எதிர் பாகற்காத ஜானகி… இத்தனை நாள் குழந்தை இல்லை என்று வருத்த பட்டவருக்கு இதை விட ஆறுதல் என்ன இருக்க முடியும்…. 

 

அவளை ஆர தழுவி முத்தம் இட்டு வாஞ்சையுடன் அணைத்து கொண்டாள்… 

 

இவற்றை பார்த்து கொண்டு இருந்த செல்லம்மாவிற்கு… பல நாள் பாரம் குறைந்தது போல் இருந்துது…. 

 

ஜானகி வெளியே சொல்ல விட்டாலும்…. தனக்கு குழந்தை இல்லை என்பது அவருக்கு வருத்தத்தையே தரும்… அதுவும் சகுந்தலாவின் சூடு சொல் வேறு பல முறை அவரை காய படுத்தும்…. 

 

எதுவுமே செய்ய முடியாமல்… ஆறுதல் மட்டுமே அவரால் கூற முடியும்…. அப்டி இருக்க… இன்று அவருக்கு இரு மகளும்… தன் மருமகளுக்கு ஒரு தாயும் கிடைத்ததில்… மிகுந்த மகிழ்ச்சியே….. 

 

எதையோ தன் தாயிடம் கேட்க வேண்டி வந்தவன்…. சமையல் அறையில் நடக்கும் பேச்சை பார்த்த அன்பிற்கும் மன நிறைவு தான் கிடைத்தது… 

 

“மீரா நீ மட்டும் இங்க இருந்து இருந்தா… எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்….. உன்ன பாசமா பாத்துக்க இத்தனை பேர் இருந்தும் எங்க மீரா போன… சொல்லாம கொள்ளாம… ” காதல் கொண்ட மனம் மருக தான் செய்தது…. 

 

இந்த குடும்பத்தில் இப்பொது இருக்கும் அமைதியும் மன நிறைவும் மீரா இருந்து இருந்தால் கிடைத்து இருக்காது என்பது அவன் அறியாது இல்லை…. 

 

அடித்த அடுத்த நாட்கள் மிகவும் அனந்தமாகவே சென்றது அந்த வீட்டில்…. 

 

இலக்கியனும் விக்கியும் சேர்ந்து அடிக்கும் கொட்டம் ஏற்கனவே வீட்டில் அதிகமாக இருக்க…. இதில் புது வருவாய் வைஷுவையும் சேர்த்து கொண்டு லூட்டி அடிக்க ஆரம்பித்தனர்…. 

 

காலை விடிந்தால் போதும்… காக்க பிடிக்கணும்… குருவி பாக்கணும்… கோலம் போடணும்…. இப்டி வீட்டில் ஒருவரை விட்டு வைக்காமல் அனைவரையும் இம்சித்தாள்… 

 

இதற்காக அவளை யாராவது மிரட்டினால்…. உடனே புகார் இலக்கியனிடம் சென்று விடும்…. அவன் வேறு வந்து எதற்காக திட்டு விழுந்ததோ அதை அவளை செய்ய சொல்லி… அவள் செய்த பின்னே அவ்விடம் விட்டு செல்வான்…. இதற்கு பயந்தே வைஷுவை யாரும் எதுவும் சொல்லுவது கிடையாது…. 

 

அந்த வீட்டில் இருவருடனும் சீக்கிரமே ஓட்டி கொண்டால் வைஷு….. ஏது வேண்டும் என்றாலும் சித்து சித்து என்றே கத்தி கொண்டு இருப்பாள்…. அவன் அருகில் இருந்தால் அவன் தான் சாதம் ஊட்ட வேண்டும் என்ற அளவுக்கு ஆகி விட்டது அவர்களின் பாசம்…. 

 

மறு புறம் ஜானகி இனியவளின் பாசமும் மிக இனிமையாய் போய் கொண்டு இருந்தது…. 

 

ஆனால் இனியவளுக்கு தான்… தான் இங்கு இருந்து செல்ல வேண்டிய நாள் வரும் போது எப்படி எதிர் கொள்ள போகுறேன் என்ற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது…. (அப்டி ஒரு நாள் வரவே வராது என்று அறியாதவள் ஆனால் பேதை)

 

வீடு மகிழ்ச்சியில் இருந்தது பிடிக்காமல் போன மீனுவோ… இனியவளை இம்சிக்க ஆரம்பித்தாள்… 

 

அவளுக்கு காபி தர சொன்னால்.. அதில் உப்பு கொட்டி கொடுப்பது… இறுதியாக அவள் சாப்பிடுவதால்… அவளின் உணவில் உப்பையோ காரத்தையோ அதிகமாகவே சேர்த்து விட்டு அவளை சாப்பிட விடாமல் செய்வது…. இரு முறை அவள் வரும் பாதையில் எண்ணையை ஊற்றி அவளை விழ வைக்க முயற்சிப்பது…. இரு முறையும் அன்பு அவளை காப்பாற்றிவிட இருந்தான் என்பது வேறு கதை…. 

 

ஆனால் இது எதுவும் வீட்டு ஆட்களுக்கு தெரியாமல் போனது இன்னும் கொண்டாட்டமாக போனது மீனுவிற்கு… 

 

ஒரு நாள் மாலை வேளையில் வைஷு தூங்குவதாள் முற்றத்தில் அமர்ந்து விக்கியூடன் பேசி கொண்டு இருக்க… 

 

அப்போது இனியவளுக்கு காபி கொண்டு வந்து டேபிளின் மீது வைத்து விட்டு சென்று விட்டால் மீனு…. 

 

எதுவும் அறியாத இலக்கியனோ… எதார்த்தமாக அதை எடுத்து பருக…. இத்தனை நாள் கட்டி காத்த அத்தனை ரகசியமும் தெரிந்து கொண்டான்… ஆனால் மீனுவிடமோ இல்லை வீட்டில் யாரிடமோ எதுவும் பேச கூடாது என்று உத்தரவும் போட்டு இருந்தால் இனியவள்…. 

 

அதை கேட்டு நடந்து கொண்டால் தான் அது இலக்கியன் இல்லையே….. இதை அப்படியே அன்பிடம் கூறினான்…. 

 

இனியவளை கஷ்ட படுத்துகிற உணர்வு முதலில் இருந்தே அவனுக்கு இருந்து கொண்டு இருக்க… சில நாட்களாக அவள் கண்ணில் நிறைவாய் பார்ப்பவனுக்கு கொஞ்சம் திருப்தியை கொடுத்தி இருக்க… தான் அறியாமல் இந்த வீட்டில் இவ்வளவு நடந்து இருக்கிறதா என்ற கோவம் மிகுதியாய் இருந்தது…. 

 

[the_ad id=”6605″]

 

 

 

உடனே அவளை கூப்பிட்டு கண்டிக்க வேண்டும் என்று எண்ணியவன்… மீனுவை வீடு எங்கிலும் தேட… அவள் இல்லாமல் போக 

 

பெருமாளிடம் கேட்டவன்… அவள் இனியவளுடன் மாட்டு கொட்டகையில் இருப்பதாக கூறினார் 

 

ஆம்… சிறிது நேரத்திற்கு முன் தான் மாட்டு கொட்டகையில் இருக்கும் பல்பு ஏறிய வில்லை… அதை மற்ற வேண்டும்… நீ வந்து செய் என்று அழைத்து சென்றாள் மீனு 

 

இதை அன்பிற்கு…. எதோ விபரீதம் என்று தோன்ற…. இலக்கியனிடம் செல்லம்மாவிற்கு தகவல் கொடுத்து வரும் படி கூறி விட்டு… அவன் கொட்டகையை அடைந்து இனியவளை நெருங்கும் முன்… 

 

அவன் எதிர் பார்த்த விபரீதம் மிக கச்சிதமாய் நடந்து முடிந்து இருந்தது…. 

 

    

 

              மாயம் தொடரும்….. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!