Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Karuvin Kural

Karuvin Kural 26

கருவின் குரல் pre final
அத்தியாயம் 26

ராஜேஸ்வரி தன்னுடைய சொந்தத்தில் ஒரு நல்ல வசதியான மாப்பிள்ளையை அதுல்யாவிற்காக தேர்வு செய்து இருந்தாள். அதை மைதிலியிடம் சொல்ல அவளுக்கும் பிடித்து போய்விட்டது.

மெதுவாக தேவா காதில் போட்டுவிட்டு திருமண ஏற்பாடுகளை செய்ய முற்பட்டனர்.
வினய்க்கும் ஸ்வேதாவிற்கும் கூட மாப்பிள்ளையை ரொம்ப பிடித்து விட்டது.

தேவாவிடம் கூற அவன் தந்தையிடம் சொல்லிவிட்டு, பிறகு பார்க்கலாம் என்று கூறி விட்டான்.
தேவாவிற்கு இப்போதுதான் அதுல்யா ஒரு பெரிய பிரச்சனையிலிருந்து வெளிவந்திருக்கிறாள், அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும் அவள் தன்னை ஆசுவாசப்படுத்திய பிறகு திருமணத்தைப் பற்றி பேசலாம் என்று முடிவெடுத்திருந்தான்.



Advertisement

ஆனால் மைதிலி தொடர்ந்து நச்சரித்து சக்கரவர்த்தியிடம் இந்த விஷயத்தை எடுத்து சென்று விட்டனர்.

சக்கரவர்த்திதான் ஏற்கனவே தனது பேத்திக்கு மாப்பிள்ளையை தேர்வு செய்துவிட்டாரே, அவரது விருப்பத்தைக் கூற மைதிலிக்கு துளியும் விருப்பமில்லை.

ஏனென்றால் தற்போது ராஜேஸ்வரி அவரது சொந்தத்தில் பார்த்திருக்கும் மாப்பிள்ளை மிகப் பெரிய பணக்காரன். இவர்களது அந்தஸ்துக்கு சற்றும் குறைவில்லாதவன்.

Advertisement

ஆனால் மாமனாரோ தங்களிடம் மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒருவனை தேர்ந்தெடுத்து உள்ளாரே என ஆதங்கம்.

Advertisement

தந்தையின் முடிவை தேவா ஏற்றுக் கொண்டான். நிச்சயம் அர்ஜுன் அதுல்யாவை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

அதுல்யாவிற்கான சிறந்த துணையாக அர்ஜுன் இருப்பான் என்று மனதில் எண்ணிக்கொண்டான்.

அவன் திருமண வாழ்வில் தேவா படித்த பாடங்கள் அவனை தற்போது பக்குவப்பட்ட முடிவை எடுக்க வைத்தது.

Advertisement

திருமணத்திற்கு பணமோ அந்தஸ்தோ தேவை இல்லை. நல்ல குணமும் ஒருவரை ஒருவர் புரிந்து விட்டுக் கொடுத்து வாழும் வாழ்வே சிறந்தது என உணர்ந்திருந்தான்

அதனால் மேல் கொண்டு எதையும் யோசிக்காமல், அர்ஜுன் வந்ததும் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தனர்.

மைதிலிக்கு தாங்கி கொள்ள முடியவில்லை. மாமனாரை எதிர்த்தே கேட்டு விட்டாள்.” மாமா என் அம்மா பார்த்து இருக்கும் மாப்பிள்ளை நல்ல பணக்காரன் ஏழு தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு வசதியானவன்”.

ஆனால் இந்த அர்ஜுன் நம்மிடம் மாத சம்பளம் வாங்குபவன். இவனை அதுல்யாவிற்கு திருமணம் செய்து வைத்தால், காலம் முழுவதும் அவள் கஷ்டப்படுவாள் என்று மூச்சு விடாமல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசி முடித்து விட்டாள்.

சக்கரவர்த்தி ஒரு நமட்டு சிரிப்புடன் அர்ஜுன் பற்றிய உண்மைகளை கூறி முடித்தார்.

இருவருக்குமே அதிர்ச்சி .தேவாவிற்கு தன்னிடம் உண்மையை மறைத்து விட்டானே சிறந்த நண்பர்களைப் போல் அல்லவா பழகினோம்,ஏன் என்னிடம் உண்மையை மறைத்தான் என்று சிறு வருத்தம்.

மைதிலி கண்கள் விரிய ஆச்சரியத்தில் அமர்ந்திருந்தாள்.அம்மா பார்த்திருக்கும் மாப்பிள்ளையை விட இவன் பெரிய பணக்காரன் அதுல்யாவிற்கு இவனையே திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொண்டாள்.

தேவா தயக்கத்தோடு அர்ஜூனிடம் நான் பேசுகிறேன்,ஆனால் அதுல்யா என்ன சொல்லப் போகிறாளோ என்று கவலை பட்டான்.

மைதிலி நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன் என்றாள்.

சக்கரவர்த்தி அதற்கெல்லாம் அவசியமே இல்லை. அதுல்யாவிற்கு அர்ஜூன் மேல் ப்ரியமே நீங்கள் தாராளமாக அதுல்யாவிடம் பேசுங்கள் என்றார்.

இருவரும் மகிழ்ச்சியாக வீடு திரும்பி, அதுல்யாவிடம் பேச முகம் முழுவதும் வெட்கத்துடன் சரி என்று கூறினாள்.

பெற்றவர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.இதுவரை அதுல்யா இப்படி எல்லாம் வெட்கப்பட்டு பார்த்தது எல்லாம் இல்லை.

மகளின் எதிர்கால வாழ்வை நினைத்து குழம்பி இருந்தவர்களுக்கு,இன்று ஒரு தெளிவான முடிவு கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியில் திளைத்தனர்.

அர்ஜூன் வரும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

மலைப்பாங்கான அந்த இரவு. முழு நிலவின் ஒளியில் அமைதியாக இருந்தது.

அந்த அமைதியை ஒரே நொடியில் கிழித்தது
காட்டெருமையின் கர்ஜனை.

அனிஷ்கா தேவியின் உடல் நொடியில் உறைந்தது.

அவளின் கண்ணுக்கு கருமையான ஒரு பெரிய உடல். கூர்மையான கண்களுடன் நேராக அவர்களை நோக்கி வெறித்து வருவது போல தெரிந்தது.

அந்த காட்டெருமை
மண்ணை தட்டி
ஒரு அடி முன்னே வந்தது,இல்லை பாய்ந்து என்று தான் கூற வேண்டும்.

அர்ஜூன் நொடியும் தாமதிக்காமல் அனிஷின் முன் சென்று நின்றான்.
“உள்ளே போங்க” என்றான்.ஆனால் அவள் அசைய வில்லை.

அவன் திரும்பி பார்த்து, “நான் சொன்னதை கேளுங்க… உள்ளே போங்க என்றான்”

இல்லை அது முதலில் என்னை கொன்றே பிறகே உன்னிடம் வரட்டும் என இவள் முன்னால் போனாள்.

அர்ஜூன் அவளின் கைப்பிடியை இழுத்து
தன் பின்னால் நிற்க வைத்தான்.அவள் அவன் முதுகின் பின்னால் முழுவதுமாக மறைந்தாள்.

அவன் முழுமையாக
அவளை மறைத்து நின்றான். அனிஷ் அவனது முதுகை பிடித்துக் கொண்டாள்.

அவள் உயிர் மேல் உள்ள பயத்தால் இல்லை. அவனை இழக்க கூடாது என்ற பயத்தால் அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
காட்டெருமை பாய தயாரானது.

அவன் அருகில் கிடந்த
மரக்கட்டையை எடுத்து அதன் மேல் எறிய அது ஒரு பெருங் குரலெடுத்து காட்டின் இருட்டில் ஓடி மறைந்தது.

அதன் பிறகு தான்
அவர்கள் இருவரும்
மூச்சு விட்டார்கள்.

அர்ஜூன் திரும்பி அவளை பார்க்க, அவள் கண்கள் அவனை பார்த்தபடி நனைந்திருந்தது.
“எதாவது ஆயிடுச்சா?”
என்றான்.

“இல்ல உனக்கு ஏதாச்சு ஆயிடுச்சா?” என்றாள்.
அப்போ நான் நினைத்ததைதான் நீயும் நினைத்தாயா என்றான்.அவள் ஆம் என தலையாட்டினாள்.

அவள் கைகள்
இன்னும் அவன் கையை விட்டு விடவில்லை.அர்ஜூன் முன்னிலும் கெட்டியாக அவள் விரல்களை பிடித்துக் கொண்டான்.

இருவரது கண்களும் மற்றவர் கண்ணை அழுத்தமாக பார்த்தது, அதில் அவர்களுடைய வாழ்வை பற்றிய கனவுகளையும் லட்சியங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

இப்போது பிடித்திருக்கும் இந்த கையை இன்னும் ஏழெழு ஜென்மம் எடுத்தாலும் இப்படியே உறுதியாக பிடித்துக் கொள்ள வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டனர்.

அந்த இரவு மலையின் நடுவில் ஒரு காதல் வார்த்தைகள் இல்லாமலே
ஒப்புக்கொள்ளப்பட்டது
.
அடுத்தநாள் காலை விடியல் அழகாக பூத்தது,பனித்துளிகள் புல்லின் மேல் படர்ந்திருந்தது.

புது காதலர்கள் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டே தங்கள் அறைகளில் தயாராகினர்.

இன்று பொள்ளாச்சி திரும்ப உள்ளனர். ரிசார்ட்டில் செக் அவுட் செய்து , காலை உணவை முடித்து விட்டு கிளம்பலாம் என முடிவு செய்யப்பட்டது.

அனிஷ் கண்ணாடி முன்பு நின்று தன்னைத்தானே ரசித்தவாறே கண்ணங்கள் சிவக்க தன்னை அலங்கரிப்பதை ஆச்சரியமாக பவித்ரா பார்த்துக் கொண்டிருந்தாள்.

அர்ஜூனும் அதே நிலையில்தான், இருப்பினும் கணேஷிடம் நேற்று நடந்த விஷயங்களை கூறி விட்டான்.

அவனுக்கு தன்னுடைய காதல் திருமணத்தில் முடியும் சந்தோசத்தை விடவும் இது மிகப்பெரிய சந்தோசத்தை தந்தது.

அர்ஜூன் பேச ஆரம்பித்தான்,”கணேஷ் எனக்கு அனிஷை ரொம்ப பிடிச்சு இருக்கு அதே மாதிரி அன்ஷிற்கும் என்னை ரொம்ப பிடிக்கும்.

ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்க ஆசைபடுறோம்.ஆனா அதே சமயம் ரெண்டு வீட்டுல சம்மதம் வாங்கி பண்ணனும் என்றான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கம் போதே பவித்ரா ஓடி வந்து,கணேஷ் இந்த அன்ஷிற்கு என்ன ஆச்சினே தெரிலே கண்ணாடி முன்ன நின்னு தன்னத்தானே பார்த்து ரசிட்டு இருக்கா,எதாவது பைத்தியம் பிடிச்சிருச்சுனு நினைக்கறேன் என்றாள்.

ஆமா பவி “அர்ஜூன் பைத்தியம் “அவளுக்கு பிடிச்சு இருக்கு என்றான்.ஒரு நிமிடம் புரியாமல் விழிக்க அர்ஜூனின் அசடு வழிந்த சிரிப்பில் கண்டு கொண்டாள் அவர்களின் காதலை.

ரிசார்ட் செக்அவுட் செய்து விட்டு ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டனர்.

வரும் வழியில் ஒரு சிறிய அருவின் அருகில் சிறிது நேரம் அமர்ந்து பேசினர்.

“எப்படி ரெண்டு வீட்டுலயும் பேச போறீங்க என்றான்” கணேஷ்.

என் பாட்டி நான் எப்ப கல்யாணத்துக்கு ஓகே சொல்வேனு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.எனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.பாட்டி கிட்ட சொன்னா அடுத்த முகூர்தத்துல கல்யாணம் செஞ்சு வெச்சுருவாங்க என்றான்.

அனிஷிற்கு ஜானகி தங்கள் காதலை ஏற்றுக் கொள்வாளோ என்ற பயம். என் அம்மாவிடம் வந்து பேசு அவங்க என்ன சொல்வாங்கனு தெரிலே என்றாள் கவலையாக.

அப்ப அம்மா ஒத்துக்கலைனா வேண்டானு சொல்லிருவையா என பவித்ரா கேட்க இல்லை என தலையாட்டினாள்.

இங்க பாரு அனிஷ் ரெண்டு வீட்டுலையும் எதிர்ப்பு வந்தாலும் நீங்க ஸ்ட்ராங்க இருந்தா,யாரலையும் உங்களை பிரிக்க முடியாது.

நாங்க ரெண்டு பேரும் எங்க காதலுக்காக எவ்வளவோ போராடிதான் வீட்டுல சம்மதிக்க வைச்சோம் என்றான் கணேஷ் .

அனிஷ் நீ கவலைப்படாத நான் அம்மாகிட்ட பேசறே என்று உறுதி அளித்தான் அர்ஜூன்.

பொள்ளாச்சி திரும்பிய உடன் இருவரும் ஜானகி முன் சென்று நின்றனர்.

இவர்கள் காதலை கேட்டு அவளுக்கும் அதிர்ச்சியே கூடவே பயமும் தன்னுடைய வாழ்க்கை போல் மகள் வாழ்வும் கெட்டு விடக் கூடாதே என்று..

எந்த ஒளிவு மறைவும் இன்றி தங்கள் வாழ்வில் நடந்த அனைத்தையும் அர்ஜூனிடம் சொல்லி விட்டாள்.

ஜானகியின் கதையை கேட்ட அடுத்த நொடி அம்மா என அவளை அன்போடு அணைத்துக் கொண்டான்.

நா என்னோட இறுதி மூச்சுவரை அனிஷை விட மாட்டேன் என உறுதியளித்தான்.

தன்னைபற்றிய உண்மையையும் இருவரிடமும் சொல்லி விட்டான்.ஜானகிக்கு கோபமே ஏன் தேவாவை ஏமாற்ற வேண்டும் ?என்று முதலில் அவரிடம் உண்மையை சொல் என்று அறிவுறுத்தினாள்.

அடுத்தடுத்த நாட்களில் மரகதம் வந்து அனிஷை பார்க்க, அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது.

அடுத்த வரும் முகூர்தத்துல கல்யாணம் வச்சுக்கலாம் என பேசி முடித்தனர்.

இருந்தும் ஜானகிக்கு தயக்கமே ஒருமுறை தேவாவிடம் கலந்தாலோசிக்க விரும்பினாள்.என்ன இருந்தாலும் அவன்தான் தகப்பன் அல்லவா

மைபேசனில் அர்ஜூன் தேவாவிடம் தயங்கிக் கொண்டே உண்மையை சொல்ல, “எனக்கு தெரியும் அர்ஜூன் எல்லாமே” என்று சுமூகமாக முடித்தான்.

“இப்ப நான் உன்கிட்ட ஒருவிஷயம் கேட்கிறேன் மறுக்க கூடாது.அதே சமயம் விருப்பம் இல்லைன்னாலும் சொல்லனும் என்று ஒரு கேள்விக்குறியை அர்ஜூனிடம் தோன்ற வைத்தான்.

சார் நீங்க கேட்டா நான் செய்யப் போறே ஏன் இப்படி தயங்கி கேட்கறீங்க தாராளமாக கேளுங்க நீங்க என்ன கேட்டாலும் நான் தரேன் என்றான்

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜானகி தேவாவிற்கு போன் செய்து அவனிடம் பேச விரும்புவதாக கூறினாள்.

அவன் மைபேசனுக்கு வர சொல்ல இல்லை பார்க்கிற்கு வாங்க என்றாள்.

அவர்கள் காதல் பறவைகளாய் கனவில் மிதந்த அந்த பார்க்கிற்கு வர சொல்ல,பழைய நினைவுகள் பசுமையாக வந்து போனது.அதனால் அர்ஜூனிடம் பேசுவதை தள்ளி வைத்து,உற்சாகமாக சென்றான்.

ஏதோ இருபது வயது குறைந்தது போல இருந்தது அவனுக்கு.
ஜானகி அவனுக்காக காத்திருந்தாள்.

அவளை நெருங்க நெருங்க இதயம் படபடத்தது அவனுக்கு குரலை செரும, திரும்பி ஒரு புன்னகை புரிந்தாள்.

உங்க கிட்ட அனிஷ் மேரேஜ் விஷயமா பேசனும் என்றாள் .

நானும் அதுல்யா மேரேஜ் விஷயமா பேசனும் என்றான் இவனும்

அப்படியா அப்போ நீங்க பர்ஸ்ட் சொல்லுங்க என்றாள் ஜானகி

–கருவின் குரல் ஒலிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!