Skip to content
Post Views: 1,898
பிள்ளைகளை மூன்று பேரும் இவர்களை நோக்கி வர.. குடும்பமாக அணைத்து கொண்டு விலகியவர்.
” நானா டைம், ஆச்சு டைம் ஆச்சு” என்று அடுத்து விமானத்தில் ஏறி.. பெங்களூர் வந்து சேர்ந்தனர், அங்கிருந்து ஸ்ரீரங்கபட்டிணம் வந்து சேர திட்டமிட்டு இருந்தனர்..
Advertisement
அனைவரும் ஸ்ரீரங்கபட்டிணத்துக்கு வந்து சேர இரவானது..
Advertisement
வீ. பியின் குடும்பத்துக்கு மிக பிடித்த இடம் ஸ்ரீரங்கபட்டணத்தில் உள்ள அவர்களின் கொல்லு தாத்தா வீடும், அவர்கள் தோட்டமும்..
Advertisement
விடுமுறை என்றாலே வந்து சேர்ந்துவிடுவார் இவ்விடத்திற்கு..
இங்கே வந்தால் நோ டான்ஸ், நோ பிஸ்னஸ், ஒன்லி விளையாட்டு, எஞ்சாய் மட்டுமே.. ஆற்றில் குளிப்பது, தோட்டத்துக்கு சென்று பூ பறிப்பது, பெருமாள் கோவில் செல்வது என்று நேரம் போவதே தெரியாது அனைவரும்..
Advertisement
வைஷு அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து உணவு தயார் பண்ணிவிட்டு பிள்ளைகளை எழுப்ப,. அனைவரும் தோட்டத்து காய், பூ பறிக்க ரெடியாகி சென்றனர்.. அன்று மட்டும் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு விடுமுறை அளித்து,, இவர் மட்டும் தோட்டம் சென்றனர்..
வீ. பியின் குடும்பம் காரில் வரும் போது சூரியா உதயத்தை பார்த்துக்கொண்டே தோட்டத்துக்கு வந்து சேர்ந்தனர்..
பிள்ளைகள் பூபறிக்க பூந்தோட்டத்துக்கு செல்ல.. பக்கத்தில் உள்ள காய்கறி தோட்டத்து சென்றாள் வைஷு..
தானும், தன் தாத்தையும் உருவாக்கிய வைத்த தோட்டத்தை பார்த்ததும் ஏதோ தாய் வீடு வந்த உணர்வு வைஷுவுக்கு..
வைஷு தோட்டத்தை பார்த்து ரசித்துக்கொண்டு நடக்க.. அவளை ரசித்தவாறே அவளின் கண்ணாளன் பின்னாடி வந்தான்..
வீ. பியிடம் வைஷு பேச, அவனோ இயற்கையோடு மனைவியை ரசித்தவாறே அமைதியாக வர..
பதில் பேசாமல் வரும் கணவனை பார்த்து வைஷு முறைக்க..
அவனோ காதல் பார்வையால் மனைவியை தீண்டினான்…
“அடி விழும்” என்றாள் வைஷு..
“பரவாயில்லை” என்றவன். உல்லாசமாக வைஷுவை பார்த்து விசில் அடிக்க..
“முதலில் வேலையை பாருங்க அப்புறம் பொண்டாட்டியை பார்த்து ரசிக்கலாம்” என்றவள் வீட்டுக்கு தேவையான காய்களை கூடையில் பறித்து போட ஆரம்பிக்க..
வீ. பி க்கு காய் பறிக்க தெரியாது.. மம்புட்டியை எடுத்து பெரிய செடிகளுக்கு மண்ணை அனைத்து வைத்துக்கொண்டு இருந்தவன்.. பிள்ளைகளை பார்த்துக்கொண்டே வேலை செய்ய..
யாழினியோடு, ஸ்ரீ ராமும், ஜெயராமும் பூக்களை பறித்து கூடையில் போட்டு கொண்டே விளையாட. அழகான பூக்களை ஒரு கயிறில் கட்டி யாழினி தலைநிறைய சூடினார்கள் சகோதரர்கள்..
தோட்டத்து பக்கத்தில் புதியதாக ஒரு கார் வந்து நிற்க..
யார் என்று வீ. பியின் குடும்பம் பார்க்க.. சௌசன்யா தான் தன் குடும்பத்தோடு, இன்னொரு குடும்பத்தையும் சேர்த்து அழைத்து வந்திருந்தாள்,…
வீ. பி அக்காவை பார்த்து வேகமாக வந்தவன்,, “வா க்கா. வா ஆதி” என்று வந்தவர்களை உபசரிக்க..
சௌசன்யா தம்பியிடம் “சொல்லிட்டு வரகூடாதடா,, உன்னை எங்கே எல்லாம் தேடிட்டு வர்ரது, உன் புருஷன் கிட்ட சொல்ல மாட்டியா வைஷு” என்க..
“வாங்க அண்ணி” என்றவள்.. அனைவரையும் பார்த்து சிரித்து.. தோட்டத்தில் கல் பெஞ்சில் அமர சொல்லி விட்டு இளநீர் கொண்டு வந்து குடிக்க கொடுக்க…
யாழினி அத்தையை பார்த்தது பக்கத்தில் வந்து நின்று “வாங்கத்தை, வாங்க மாமா” என்று ஆதியை அழைக்க”
யாழினியை தோள் அணைத்து கொண்டாள் சௌசன்யா,
“எப்படி இருக்கேடா”.. என்றதும்.
நன்றாக இருப்பதாக தலையாட்ட..
ஆதியின் பிள்ளைகள் யாழினியை தோட்டத்துக்கு அழைக்க…
“எல்லாரையும் கூட்டிட்டு போடா”..
என்று பிள்ளைகளை அனுப்பி வைத்த சௌசன்யா..
தம்பியிடம் தன்னோடு வந்த குடும்பத்தை அறிமுகம் படுத்திவைக்க.
இரு குடும்பங்களும் கைகுழுக்கி கொண்டனர்.
ஆதி தான் பேச்சை ஆரம்பித்தான்.. ” இவங்க என்னோட ரிலேஷன்.. பாரின்ல இருக்காங்க, அவங்க பையனுக்கு யாழினியை ரொம்ப பிடிச்சிருக்காம்,, யாழினியை கல்யாணம் பண்ண கேட்குறாங்க”..என்றதும்.
“டேய் அவ சின்ன பொண்ணுடா”.. என்று நண்பனை முறைக்க.
“உங்க பொண்ணுக்கு 21 வயசு” என்றாள் வைஷு.
“அதுக்கு” என்றான் வீ. பி.
“டேய் நம்ம கண்ணுக்கு, நம்ம பிள்ளைகள் எப்பையும் சின்ன பிள்ளைகள் தான்டா,, யாராவது வந்து கேட்டதான் நமக்கே அவங்க வயசு தெரியுது”… என்றான் ஆதி..
“இப்போ இத பத்தி பேச வேண்டாம், இன்னும் 5 வருசம் ஆகட்டும் பார்க்கலாம்” என்று வீ. பி கூற..
“டேய் ரொம்ப நல்ல குடும்பம் டா, மாப்பிள்ளை கூடவே வந்து இருக்காரு பாரு என்று கூறியவன்.. பையன்னோடு அப்பா, அம்மா எல்லாம் இங்கே இருக்காங்க உனக்கு என்ன பேச தோணுதோ கேளு, பேச.. இவங்களை மிஸ் பண்ணிடாத டா” என்று ஆதித்யா கூற.
வைஷு மாப்பிள்ளை வீட்டினரோடு பேசிக்கொண்டு இருந்தாள்.. அந்த மாப்பிள்ளை பையன் யாழினியை ரொம்ப பிடித்திருப்பதாக சொல்லியவன்.. அவளுக்கு ஒரு நடனபள்ளியே அமைத்து தந்து அவளை நன்றாக பார்த்துகொள்வதாக கூற.
வைஷுக்கு மாப்பிள்ளை மிகவும் பிடித்துவிட….
கணவனை பார்த்தாள்.. அவனோ குழப்பமாக அவளை பார்க்க..
எல்லாம் சரியா வரும் என்று கணவனுக்கு கண்ஜாடை காட்ட..
“யாழினி கிட்ட கேட்டு சொல்லுறேன்டா” என்று யாழினி அழைத்து விசயத்தை சொல்ல.. நிமிர்த்து ஒரு நிமிடம் ஜோசப்பை பார்த்தாள்,, அவன் எப்படி என்பது போல் புருவத்தை உயர்த்த..
“உங்க இஷ்டம் நானா, உங்களுக்கும், மீக்கு ஓகே னா எனக்கும் ஓகே தான்” என்று சொல்லி சென்று விட..
பின்னே இரண்டு வருடமாக தன்னை சுற்றி வருபவனை தெரியாதா அவளுக்கு,, அவள் ஆடும் நடனத்தை முதல் வரிசையில் கடந்த இரண்டு வருடமாக வந்து அமர்ந்து, தன் நடனத்தை சேர்த்து, தன்னை ரசிப்பதை ஏற்கனவே யாழினிக்கு தெரிந்திருக்க சம்மதம் சொல்லி விட்டாள் தன் நானாவிடம்..
அடுத்த மாதத்திலே யாழினி, ஜோசப் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.. ஒரு வாரம் கழித்து யாழினி வெளிநாடு செல்ல ஏர்போர்ட் வந்திருந்தாள்..
யாழினியை வழி அனுப்பா அனைவரும் வந்து இருக்க.
யாழினியின் இரண்டை சகோதரர்கள்,, அவள் இரண்டு தோளில் சாய்ந்து அழ..
தம்பிகள் அழுததும் யாழினியும் அழ..
வீ. பிக்கு பிள்ளைகளை தேற்றவே சரியாக இருந்தது..
ஜோசப் “நீங்க எப்போவேணாலும் உன் அக்காவை பார்க்க வாங்க,, வெளிநாட்டில் வந்து படிக்க, வாங்க” என்று சமாதானம் கூற..
வீ. பி யாழினியை சந்தோஷமாக வழி அனுப்பி வைங்கடா என்று மகன்களை அதட்டியவன். அவனுமே கண்கலங்கி இருக்க.. வைஷு மூன்று பேரையும் தள்ளி போங்க பிள்ளையை அழவச்சு கிட்டு என்றவள்.. மகளுக்கு அறிவுறை சொல்லி மருமகளோடு சந்தோஷமாக வழியனுப்பி வைத்தவள்…
அனைவரையும் வீட்டிற்க்கு அழைத்து வந்து உண்ண வைத்து படுக்க அனுப்பி வைக்க..
வீ. பி உணவு வேண்டாம் , ஒன்றும் என்று அவன் அறைக்கு சென்று விட..
மகன்களை சமாதானம் பண்ணி தூங்க வைத்து விட்டு.. கணவனுக்கு பால் எடுத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு வர..
கணவன் அழுதுகொண்டு வருத்தத்தில் இருப்பார், எப்படி சமாதானம் பண்ண என்று நினைத்து வைஷு அறைக்கு வர..
அவனோ ஏதோ குழப்பத்தில் இருப்பது போல் ஏதோ தீவிரமாக யோசிப்பதை பார்த்தவள்..
“என்ன பாவா, என்ன யோசிச்சு கிட்டு இருக்கீங்க?”..
“உனக்கு எவ்வளவு வயசு பொம்மா?”.
“40 + ” என்றாள்.
“அப்போ ஓகே தான்” என்றான் வீ. பி..
“என்ன ஓகே, தான்?” வைஷு கேட்க..
“இல்லா யாழினி நம்ம வீட்டில் இல்லாதது ஒரு மாதிரி இருக்கு”.
“அதுக்கு”..
“நம்ம வேணா யாழினி மாதிரி இன்னொரு, பெண் பிள்ளையை பெத்துக்கலாமா?”.. என்றதும், கணவனை பார்த்து சிரித்தவள்.. “பாலை குடிச்சிட்டு தூங்குங்க பாவா” என்று இரவு உடையை எடுத்து கொண்டு இருந்தவளிடம் வந்தவன்..
“நான் சீரியஸ்சா பேசிட்டு இருக்கேன், நீ பதில் சொல்லாமல் உன் வேலையை பார்க்குற..”..
“போங்க பாவா காமெடி பண்ணிகிட்டு” என்றாள்.
“அடியே எனக்கு பொம்பள பிள்ளை வேணும் பெத்து குடு”..
“தாத்தா ஆகுற வயசுல, பிள்ளை வேணுமாம், பிள்ளை,,”..
“யாருடி தாத்தா”?..
“நீங்க தான், நாளைக்கே யாழினிக்கு குழந்தை பிறந்தா, நீங்க தாத்தா தானே”.. என்றவளை..
“யாரு தாத்தான்னு காட்டிட வேண்டியது தான்”,,. என்றவன். வைஷுவின் அருகில் வர..
“தள்ளி போங்க” என்றவளை.. அள்ளி கொண்டவன், நான் குமரனா, தாத்தாவான்னு காட்டுறேன் வா”.. என்று வீ. பி அவன் செயலில் இறங்க..
“பாவா, பாவா வேண்டாம் பாவா” என்ற மனைவியை கொஞ்ச ஆரம்பித்து இருந்தான் வீ. பி.
வீ. பியின் ஆசைபடி அவன் நினைத்தது நடந்து அவன் குடும்பம் வாழ்வில் சந்தோஷமாக, வாழ, வாழ்த்தி விடைபெறுவோம்..
சுபம்
வாழ்க வளமுடன்…..
error: Content is protected !!