Skip to content
Post Views: 2,540
“எப்படியோ கமலா, ஒரு வருஷம் தட்டி போனாலும், நீ நினைச்ச மாதிரியே உன் மவன் கலயாணத்த நல்ல படியா நடத்தி முடிச்சுட்ட! சந்தோஷம்!” என்றார் பாலு தாத்தா!
மிகவும் சொற்ப ஆட்களுக்கே அழைப்பு விடுத்து இருந்தார் கமலா அம்மா!
அதுவும் ராமுவிற்கும் ப்ரியாவிற்கும் எதுவும் சொல்லி விட கூடாது என்ற கோரிக்கையுடன்!
பாலு தாத்தா, அவர் மனைவி, சந்துரு புவனா, அப்புறம் அந்த அயர்ன் வண்டிக்கார ஆறுமுகம் போன்ற ராஜுவின் நலம் விரும்பிகளுக்கு மட்டுமே ராஜு தரப்பில் அழைப்பு!
Advertisement
கூடவே அவர்கள குடியிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு ஆட்டோ டிரைவர், ஒரு எலெக்ட்ரிசியன் மற்றும் ஒரு சத்துணவு ஆயாவின் குடும்பத்தையும் முதல் நாள் மாலை தான் புவனா கையில் குங்குமம் கொடுத்து அழைத்து இருந்தார்.
அதில் ஆட்டோ டிரைவர் மனைவியும், எலெக்ட்ரிசியன் மனைவியுடன் அந்த சத்துணவு ஆயாவும் கல்யாணத்திற்கு வந்திருந்தனர்!
அதே போல, மகியின் தரப்பில் அம்மா பரமேஸ்வரி, அத்தை அன்னம், மாமா , அண்ணன் மகேந்திரன், கங்கா, குழந்தை ஜோதிகா, வடிவுடன், மகியின் பிரன்ட் மாமி வந்திருந்தார்.
Advertisement
மகி முன்பு வேலை செய்த கடையின் முதலாளி மனைவி ஆர்த்தி, பின் ஒரு நாள் வீட்டுக்கு வந்து வாழ்த்துகிறேன் என்று சொல்லி விட மொத்தமாகவே இவ்வளவு பேர் தான்!
Advertisement
சந்துருவின் புவனாவின் கிண்டல் கேலிகளுடன் மதிய விருந்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.
மாலை காபி பலகாரம் முடித்து விட்டு மற்றவர்கள் விடைப் பெற, அன்னமும் கங்காவும் மகிக்கு துணையாக ராஜுவின் வீட்டில் தங்கிக் கொண்டார்கள்!
——-
Advertisement
“பங்களா தான்! பங்களா தான்!” என்றான் ராஜு கிண்டலாக!
தன் முன்னே பால் சொம்புடன் உள்ளே நுழைந்து அந்த அறையை சுற்றிப் பார்வையை ஓட விட்ட மகியைக் கண்டு!
அவள் வெட்கப்பட்டு கொண்டு நிற்க, அங்கே போடப்பட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் சேர் ஒன்றில் அவன் உட்கார்ந்து கொண்டு அவளை இன்னோர் சேரில் அமர வைத்தான்.
கமலா அம்மா, இவர்களுக்காக அந்த ஸ்டோரில் அப்போது தான் காலியாகி விட்டிருந்த இன்னொரு போர்சனையும் வாடகைக்கு எடுத்து விட்டிருந்தார், இவர்களுக்கு தனிமைக் கொடுக்க வேண்டி!
ராஜுவுக்கு இது பிடிக்க வில்லை!
அன்னிக்கு இருந்த சூழ்நிலை டக்குன்னு இந்த வீட்டைப் பிடிச்சு வந்துட்டோம்!
அப்பவே நான் ஒரு அப்பார்ட்மென்ட் வீடா பார்க்கலாம்னு சொன்னதுக்கு இந்த அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்க!
சரி.. இப்ப தான் கல்யாணம் ஆகிட்டதே, வேற வீட்டுக்கு போய் விடலாம்னு நான் ஒரு 3BHK வீடும் பார்த்துட்டு வந்து சொன்னா, இப்ப வேண்டாம், நான் வேற ஏற்பாடு பண்ணிட்டேன்னு சொல்லிட்டாங்க!
ராஜு வேற ஒரு பெரிய வீடு என்று நினைத்துக் கொண்டிருக்க, கமலா அம்மா பார்த்து இருந்தது இந்த வீட்டை!
அவனுக்கு கொஞ்சம் வருத்தம் தான்! அதை விட மகியின் மேல் கோபம்!
அம்மா தான் இப்படி சொல்றாங்கன்னு, மகி ஆசைப்படுறான்னு சொல்லி மாத்தலாம்னு பார்த்தா, இதோ, இவ என்னடான்னா அப்படியே மாமியாருக்கு ஜால்ரா போடுறா!
“நீங்க சொன்னா சரிதான் அம்மாச்சின்னு!”
எப்படி எப்படியோ கற்பனை பண்ணி வச்சிருந்த அவன் ஃபர்ஸ்ட் நைட், இப்போ இந்த புறா கூண்டு வீட்டுல, ஒரு கட்டில் கூட இல்லாமல் தரையில் விரிக்கப் பட்டிருந்த மெத்தையில்!
மகேந்திரன் கட்டிலுக்கு ஆர்டர் பண்ண தான் போனான்!
ராஜு தான் தடுத்து விட்டான்!
“இப்ப வேண்டாம் மச்சான். வேற பெரிய வீட்டுக்குப் போன பின்னே பார்த்துக்கலாம்” என்று!
மகி எழுந்து கொண்டவள்,
“ஏன்? இவ்வளவு கோவம்? உங்களுக்கு? ஃபர்ஸ்ட் நைட்ல பொண்டாட்டி கிட்ட கோபப் படுற புருஷன் நீங்களா தான் இருப்பீங்க!
நீங்க எல்லாம் கோபமா பேசுனீங்கன்னு நான் வெளியே போய் சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க!
அப்படி ஒரு அம்பி இமேஜ் உங்களுக்கு வெளியே!
ஆனா என்கிட்ட மட்டும் இந்த அந்நியன் மாதிரி கோபம் படுறீங்க!
யாரோ, என் சொல் பேச்சு கேட்டு நடப்பேன், என் முந்தாணிய பிடிச்சுக்கிட்டு நடக்க ஆசைன்னு சொன்னதா ஞாபகம்!”
மகியும் வரவழைத்துக் கொண்ட பொய்கோபத்துடன் சொன்னாள்!
டக்கெனறு தன் தவறை உணர்ந்தான் ராஜு!
ச்சே.. மகி எவ்வளவோ ஆசை எதிர்பார்ப்போட வந்திருப்பா, அவ கிட்ட போய் இப்படி பேசிட்டோமே என்று வருந்தியவன்,
“ம்ம். அது உனக்கு மட்டுமேயான ஸ்பெசல் ரோல்!
அது மட்டுமில்ல, இப்படி ரெமோ ரோலும் கூட” என்று அவளை இழுத்து தன்னுடன் இறுக்கிக் கொண்டு சொன்னான்!
அங்கே மகியின் அன்பு விலங்கில் கட்டுப்பட்டு நடப்பதாக சொன்ன, அந்த அப்பாவி ராஜு! அடப்பாவி ராஜுவாக மாறினான்!
தன்னை ஆள சொல்லி சரண்டர் ஆகியவன் கைகளில் அடிமை மகாராணியாக மாறி விட்டிருந்தாள் அவனின் அன்பு மகி!
—-
மறுநாள் அதிகாலை மணி ஐந்தரை.
மகி கண் விழித்தாள். பார்த்தால், அவளையே பார்த்துக் கொண்டு அருகில் படுத்து இருந்தான் ராஜு!
அவன் விழித்திருப்பதைக் கண்டதும் வெட்கப் புன்னகை வந்தது அவளிடம்!
“என்ன இவ்வளவோ சீக்கிரம் முழிச்கிட்டீங்க?”
“நான் நாலு மணிக்கே எழுந்து விடுவேன்! ரொம்ப வருஷ பழக்கம்! எழுந்து தூங்கும் என் பொண்டாட்டியை ரசிச்சுக்கிட்டு இருந்தேன்!”
“மகி.. தூங்குறது கூட அவ்வளவு நளினமா இருக்கு! அதான் எழுப்பாம ரசிச்சுட்டு இருந்தேன்.
சரி.. நீ முதல்ல எழுந்து வெளியே போ” என்றான்.
அவள் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்ததைப் பார்த்து விட்ட கங்கா, அவர்கள் இருந்த போர்ஷனை பார்த்து குரல் கொடுத்தாள்.
“சின்னம்மா.. மகி எழுந்துட்டா.”
உள்ளே இருந்து வந்த அன்னம் ஒரு பெரிய தவலையில் வெந்நீர் கொண்டு வந்து வெளிப்பக்கமாக இருந்த அந்த போர்சனுக்கு உரிய பாத்ரூமில் கொண்டு வந்து ஊற்றினார்.
“ நல்லா விளாவிக்கோ மகி” என்று சொல்லி அவளை குளிக்க அனுப்பினார்.
அவளுக்கு வேண்டிய மற்ற பொருட்கள் எல்லாம் அங்கே தயாராக எடுத்து வைத்திருந்தாள் கங்கா.
உள்ளே இருந்து இத கவனித்துக் கொண்டிருந்த ராஜுவிற்கு மீண்டும் கோபம் வந்தது!
இதுக்கு தான் இந்த வீட்டை காலி பண்ணிடலாம்னு சொன்னேன். இந்த அம்மா கேட்டா தானே!
அவனுக்கு இப்படி வெளியில் இருக்கும் பாத்ரூமில் குளிக்க, அங்கு இருந்த இண்டியன் வகை டாய்லெட் அசவுகரியமாக இருந்தது.
மேலும் அங்கு போர் வாட்டர் வேறு இல்லை! கார்பரேசன் வாட்டர் தான்!
காலை மாலை வரும் அந்த தண்ணீர் நிற்குமுன்னே அனைவரும் துவைத்து குளித்திருக்க வேண்டி இருந்தது!
ஒன்பது மணிக்கு மேல் தண்ணீர் வருவது நின்று விடும்!
அதற்குள் எல்லா வேலைகளையும் செய்து முடித்து, கூடுதலாக புழங்குவதற்கு என்று ஒரு பெரிய ட்ரம்மில் ஹோஸ் போட்டு பிடித்து வைத்துக் கொள்வார்கள்!
சமையலுக்கு அப்படியே!
ராஜுவுக்கு க்ளோரின் வாடை வரும் அந்த தண்ணீர் பிடிக்க வில்லை!
மேலும் அவன் அம்மா குடிக்க சமைக்க வீட்டின் வெளிப்புறம் இருக்கும் குழாயில் இருந்து தண்ணீர் பிடிப்பதைப் பார்த்து அவனுக்கு கஷ்டமாக இருந்தது!
அப்புறம் கார் பார்கிங் தொல்லை!
முன்னாடி வீட்டு ஆட்டோக்காரர், தினமும் அவனின் டாக்சிக்கு அருகில் ஒட்டி அவர் ஆட்டோவை நிறுத்தி விடுவார்.
காலையில் சீக்கிரம் சவாரி போக வேண்டியிருந்தால் ராஜு, அந்த ஆட்டோ டிரைவர் வீட்டில் போய் அத நகர்த்திப் போட சொல்லி கேட்டு நிற்க வேண்டியிருந்தது!
அதுவும் அந்த டிரைவர் முதல் நாள் போதை தெளியாமல் எழுந்து வர லேட் பண்ணும் நாட்களில் அவன் பொறுமை இழந்து கொண்டிருந்தான்!
ஆனா.. என்ன சொன்னாலும் இந்த அம்மா.. கொஞ்ச நாள் போகட்டும் இப்ப வீடு மாற வேண்டாம் என்றே சொல்லி விடுகிறார்!
இன்னும் எத்தனை நாள் இப்படி எங்களோட சேர்ந்து மகியும் கஷ்டப்படனுமோ தெரியல! என்று நினைத்துக் கொண்டு திரும்பி படுத்தான் அவன்!
—-
அடுத்து வந்த சில நாட்கள் விருந்துகளில் கழிந்தன!
ஒரு நாள் போல ராஜு தன் பிடித்தமின்மையை சொல்லிக் கொண்டே இருக்க, ஒரு நாள் மகி கமலா அம்மாவிடம் கேட்டே விட்டாள்.
“ஏன்.. அம்மாச்சி, பேசாம வேற வீட்டுக்குப் போனா தான் என்ன?”
“அதுல ஒரு விசயம் இருக்கும்மா.. நான் காரணம் இல்லாம இத சொல்லல.
இப்ப இந்த வீட்டில் இவ்வளவு வசதி குறைவு இருக்கிறதால தான் ராஜுவோட அண்ணன் அக்கா யாரும் இங்க வந்து இருக்கல!
முக்கியமா ப்ரியா!
நாமளே கொஞ்சம் பெரிய வீட்டுல வசதியா இருக்கிற வீட்டுல இருந்தோம்னு வச்சுக்க, இந்நேரம் ப்ரியா ஏதாச்சும் அழுது மாய்மாலம் பண்ணி இங்க வந்து தங்க ஆரம்பிச்சுடுவா!
அப்புறம் மெல்ல மெல்ல தன் கைவரிசைய காட்ட ஆரம்பிச்சுடுவா!
அவ வந்துட்டா பின்னாடியே ராமுவும் வந்திடுவான்.
அப்புறம் எல்லோருமா சேர்ந்து உன்னை கார்னர் பண்ணிடுவாங்க!
கொஞ்ச நாள் போகட்டும்” என்றார் கமலா.
“ஏன் அம்மாச்சி.. அதான் அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சே. இனியுமா அப்படி இருப்பாங்க!
நான் கேள்வி கேப்பேன்னு தெரியாதா?”
“நிச்சயம் தெரியும்! அது தான் அவங்க பயமே!
ஆனா உனக்கும் ராஜுவுக்கும் இன்னும் நெருக்கம், பிடிப்பு அதிகம் ஆகணும்!
நீ உண்டான அப்புறமா வேணுமின்னா வேற வீடு வசதியா பார்த்துக்கலாம். இப்ப வேண்டாம்.
இப்ப ராஜுவே அவங்கள் எதாச்சும் பேசினா கூட நீ சொல்லிக் கொடுத்து தான் பேசுறான்னு சொல்லிடுவாங்க!
அதுக்கு எல்லாம் இடம் கொடுக்க வேண்டாம்!
கொஞ்சம் பொறுமையாய இரும்மா.. அம்மாச்சிக்காக” என்றார் கமலா.
அதன் பின், மகியும் கேட்க வில்லை!
நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, ராஜு டாக்ஸி ஓட்டிக் கொண்டிருந்தான். மகி வேலையை விட்டு விட்டாள்.
வீட்டில் சும்மா இருக்க முடியாமல் அவள் இருந்த போது, சந்துரு ஒரு பார்ட் டைம் வேலையோடு வந்தான்.
“எனக்கு தெரிஞ்ச அக்கா , ஒரு டெசர்ட் ஷாப் அன்ட் டீ பிராண்ட் பிரான்சைஸ் எடுத்து இருக்காங்க.
ஆனா அவங்களுக்கு ஸ்கூல் படிக்கிற குழந்தை இருக்கு!
காலையில கொஞ்ச நேரம், சாயந்திரம் கொஞ்ச நேரம் கடையை பார்த்துக்க ஆள் வேண்டுமாம்.
உனக்கு, இங்க பக்கத்தில தான் உனக்கு நடந்து போற தூரம் தான்!
டீ எல்லாம் மொத்தமா பெரிய பிளாஸ்கில் போட்டு வச்சுடுவாங்க.
அப்புறம் இந்தபிங்கர் சிப்ஸ் மொமொஸ் மாதிரி கொஞ்சம் செய்து விக்கிறாங்க!
நீயும் அத எல்லாம் போட கத்துகிட்ட மாதிரி இருக்கும் என்று சொல்லி அந்த வேலைக்கு சேர்த்து விட்டான்.
காலையில் அந்த அக்கா ஜானு வரும்வரை மகி கடையைப் பார்த்துக் கொள்வாள்.
பின் அவர் வந்ததும், வீட்டுக்கு வந்து அவர்கள் ஆரம்பிக்க இருக்கும் கார் ஸ்பா தொடர்பான வேலைகளுக்கு லோன் விசயமாக பாங்க் போக வேண்டி இருந்தது.
நிறைய அப்ரூவல்கள் வாங்க வேண்டியும் இருந்தது!
அதற்கு எல்லாம் மகி தான் அலைந்து கொண்டிருந்தாள்!
ராஜு தன்னிடம் இருக்கும் ஒரு ப்ளாட்டை விற்று விட்டு ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்று ஆசைப்பட,
மகியோ, “வீடு அப்புறம் வாங்கி கொள்ளலாம், முதலில் நாம எதாச்சும் பிசினெஸ் ஆரம்பிக்கணும்.
கொஞ்சம் காசு சேர்த்து அப்புறமா வீடு கட்டிக்கலாம்!” என்று சொல்லி விட்டாள் அவனோடு அவன் ப்ளாட்டை போய் நேரில் பார்த்து விட்டு வந்த பின்!
மீண்டும் மீண்டும் அங்கே போய் போய் அடுத்த ஐந்து கிலோ மீட்டர் ரேடியசில் இருக்கும் வணிக நிறுவனங்கள், அடுக்கு மாடி கட்டிடங்கள், இப்போது கட்டுமானத்தில் இருக்கும் கட்டிடங்கள், அங்கு என்ன வரப் போகிறது என்ற தகவல்களை சேகரித்தாள்.
பின் அவள் பிரான்ட் மாமியின் கணவரை சென்று சந்தித்தாள். அவரின் ஆலோசனையைக் கேட்டுக் கொண்டு, அவர் சிபாரிசு செய்த ஒரு பிசினெஸ் கன்சல்டன்சி கம்பெனியில் போய் விசாரித்து வந்தாள்.
இங்கே இவள் செய்து கொண்டிருக்கும் வேலைகள் எல்லாம் வனிதாவின் பாங்க் தொடர்புகளால் ராமுவும் ப்ரியாவும் அறிந்து கொண்டார்கள்.
“என்னடா இவ! நாம் நினைச்ச மாதிரியே கெட்டிக் காரிதான் போல!” என்றாள் ப்ரியா.
“ம்ம். அவ நல்லா அலைஞ்சு திரிஞ்சு எல்லா வேலையும் முடிக்கட்டும்! நாம் அப்புறமா போய் ஒட்டிக்குவோம்! இப்ப கொஞ்ச நேரம் அவங்க என்ன பண்றாங்கன்னு கவனிப்போம்!
பக்கத்துல இருந்து கவனிச்சா , நல்லா அவங்க என்ன பண்றாங்கன்னு தெரியும்!
எங்க நீங்க ரெண்டு பேருமே அங்க போய் கொஞ்ச நாள் வரப் போக இருந்துட்டு வாங்கன்னா போய் தொலைய மாட்டேன்றீங்க!” ராமு கடுப்போடு சொல்ல,
“ஏன்.. நீ போறது அந்த ஒண்டு குடித்தன வீட்டுக்கு!
எங்க நாம வந்திடுவோம்னு தானே அம்மா அங்க இருந்து நகர மாட்டேங்குது!” என்றாள் ப்ரியா கடுப்புடன்!
“சரி விடு பார்ப்போம்!” என்று காத்திருந்தது அந்த நரிக் கூட்டம்!
அன்று மதிய சாப்பாடு சாப்பிட வீடு வந்தான் ராஜு.
அவன் வருவான் என்று தெரிந்திருந்த மகியும் கமலாவும் அவனுக்காக காத்திருந்த போது, ராஜுவுடன் வந்து இறங்கினாள் ஐஸ்வர்யா!
ப்ரியாவின் மகள்!
அவள் கையில் ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் அடங்கிய கவர்கள்!
அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் மாமியாரும் மருமகளும்!
error: Content is protected !!