Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 24 3

கணவனின் கன்னத்தை தடவியவள்.. “இந்த வீ. பி  சார் என் வாழ்க்கையில வந்ததில் இருந்து வைஷு எப்பையும் ஹாப்பி தான்” என்று யாழினியை வீ. பியை சேர்த்து அணைத்து கொள்ள..

வளைகாப்பு முடிந்ததும்  மனைவியை உடனே வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்….



Advertisement

வைஷுக்கு  நீண்ட நேரம் உட்கார முடியாது என்ற காரணத்தால்..

Advertisement

அழைத்து வந்தவன், அவளை உண்ண வைத்தை ஓய்வு அறை அழைத்து சென்று வந்து. உடை மாற்ற உதவி செய்து அவளுக்கு பக்கத்தில் இருந்தே ஒவ்வொன்றையும்  பார்த்து, பார்த்து செய்ய..

Advertisement

வைஷுவுக்கு  ஒரே, ஒரு பாடல் மனதில் தோன்றியது  ‘என்ன  தவம் செய்தேன் எசோதா, என்ன தவம் செய்தேன் ‘ என்ற பாடல் தோன்ற.. வீ. பி ஆசையாக பார்த்தாள்..

 வைஷுவுக்கு அனைத்தையும் செய்து  முடித்தவன்..

Advertisement

அவளை படுக்க வைத்து விட்டு விலக..

அவனின் கைபிடித்தவன்.. “நா, முத்து பாவா”  என்று அவனுக்கு முத்தமிட..

“தூங்கு பொம்மா” என்றிருந்தான்..

“வளைகாப்பு முடிஞ்சா, அம்மாவிட்டுக்கு தானே போகனும், இப்படி  என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க?”..

“உனக்கு போகனுமா?, போகனுமுன்னு  நெனச்சாலும் விட முடியாது, பிள்ள பெத்துட்டு வேன போ, இப்போ அனுப்ப முடியாது”.. என்றவன் கீழே சென்றுவிட..

நேற்று, கேஷவன் மகளை தன் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூற,, “முடியாது  நானே பாத்துக்கிறேன், நீங்க இங்கே வந்து பாத்துக்கோங்க” என்று கூறிவிட்டான் வீ. பி..

வைஷுவின் பாட்டியும், தாத்தாவும் கூட.. வைஷுவை  தங்கள் வீட்டுக்கு அழைத்து  செல்வதாக கூற..

அனைவரையும் இங்கே இருந்து பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டான்..

என் பொண்டாட்டி, பிள்ளைகளை நான் பாத்துப்பேன் என்று சொல்லி விட..

மனைவியை கவனிப்பதை வேலையாகி போனது வீ. பிக்கு..  இரண்டு பிள்ளைகளை சுமந்து கொண்டு வைஷு உட்கார, நிக்க, சாப்பிட,  திரும்பி படுக்க கஷ்டபடுவதை பார்த்து  அவளுக்கு அனைத்துக்கு உதவி செய்வான்.. இரண்டு பிள்ளைகளும் வயிற்றில் எடை குடி இருக்க.. மிக பெரிய வயிறுடன் நடக்கும் மனைவியை தாங்கி கொண்டான் வீ. பி..

39 வது வார முடிவில் வைஷுவுக்கு பிரசவ வலி வர..

உடனே சேர்த்து விட்டான் மருத்துவமனையில்.. டாக்டர் இரண்டு பிள்ளைகள் என்பதால் ஆப்ரேஷன் பண்ணி எடுத்திறலாம் என்று வீ,பியிடம் கூற அவன் சரி என்றிருந்தான்..

வைஷு முடியவே, முடியாது.. என்று கூற..

“ஏன்டி சிசேரியன்  பண்ணிக்கோ.. பிள்ளைகள், வெய்ட் அதிகமா இருக்காங்க உனக்கு  நார்மல் டெலிவரி கஷ்டமடி,” என்று கூற..

 “எனக்கு நார்மல் டெலிவரிதான் நல்ல படியா குழந்தை பிறக்கும் பாவா” என்று வலியில் கத்த.. மனைவி இவ்வளவு உறுதியாக சொல்லியதும் நம்பிக்கை வந்தவன் டாக்டரிடம்   அதையே சொல்ல..

ஓகே சார் என்றிருந்தனர் டாக்டர்..

மனைவியிடம் வந்தவன்  “ஏன் என் பேச்சை கேட்ட மாட்டியா? .  நீ வலியில கத்துறத என்னால பாக்க முடியல”  என்றவனை.. “லூசு பாவா வலியில கத்துற எனக்கு தைரியம் சொல்லுவீங்களா அதவிட்டுட்டு, என்றவள் வலியில் அவனை திட்ட..

“என்னடி   புருஷன லூசுன்னு திட்டுற”….

“நான் எப்போ சொன்னேன் பாவா,, நான் சொல்லலீயா” என்றவள்,  வலியிலும் கணவனை பார்த்து சிரிக்க..

“ஏய் கேடி பொண்டாட்டி” என்று அவளை வேற, வேற விதமாக  பேசி சிரிக்க  வைத்து வலி தெரியாமல் பார்த்துக்கொண்டான் வீ. பி…

பிள்ளை வலி அதிகமாக வர.. “பாவா, பாவா முடியல வலிக்கு என்று கதறிய மனைவியை பார்த்து கண்ணீர் விட்டவன் அதை மறைத்து.. அவளின் தலை கோதி..

நா பங்காரம், பொம்மா  கொஞ்சம் நேரம் தான் அழுவாத என்று அவளின் தலையை தன் வயிற்றோடு தாங்கி பிடித்துக்கொண்டான் வீ. பி..  கணவனின் குரலை கேட்டுக்கொண்டேன் இரண்டு சிங்க குட்டிகளை பெத்த எடுத்தாள் வைஷு…

முதல் குழந்தையை  பெத்த சோர்வில்  வைஷு விழி மூடியிருக்க..  டாக்டர் குழந்தை பிறந்தவுடன்  “பையன் பிறந்து இருக்கான் வீ.பி”..  என்றதும் குஷியானவன்,, மனைவியை பார்க்க. அவளோ சோர்ந்து போய் படுத்து இருக்க..

 மனைவி அருகில் வந்து நீ சொன்னா மாதிரியே பையன் பங்காரம் என்று கூற..

“பாவா” என்றவள் மீண்டும்  அழற  அவள் கத்திய கத்தலில் பயந்து போனான் வீ. பி.. அடுத்து ஐந்து நிமிடத்தில் இன்னொரு சிங்கக்குட்டியை பெற்று  எடுத்தாள் வைஷு….

ஒன்னும் இல்லடா, ஒன்னும் இல்லடா என்று அவளின் முகத்தை தன் முகத்தோடு,, முகம் ஒற்றி எடுத்தவன்.. குழந்தை  பிறந்ததும் அப்பாடா என்று இருந்தது இருவருக்கும்..

இரண்டு குழந்தை பிறந்ததும் உயிர் வந்தது போல் உணர்ந்தவள்.. கணவனின் முகம் பார்க்க.. டாக்டர் இதுவும் பையன் என்று கூறி.. இரண்டு பிள்ளைகளை சுத்தம் செய்து.. வெள்ளை துணியில் சுற்றி வைஷுவின் மார்பின் மீது இரண்டு குழுந்தைகளை  படுக்க வைக்க..

இரண்டு பிள்ளைகளும்  வீ. பி யின் முகசாயலில், அவனை போலவே கருப்பாக இருக்க.. “பாவா”என்று அழைத்து தான் பெத்த  புதல்வர்களை கண்ணீரோடு  காண்பிக்க..

இதை விட ஒரு சந்தோஷமான தருணம்  வாழ்வில் வருமா?.. மனைவியோடு பிள்ளைகளை சேர்த்து அணைத்திருந்தான் வீ. பி..

“போங்க அத்தைகிட்ட பிள்ளைகளை காண்பிக்க” என்று சொல்ல..

இரண்டு பிள்ளைகளையும் தன் இரண்டு கைகளில்  தூங்கியவாறே வெளியில் செல்ல..

மொத்த சொந்தமும்  இவர்களுக்காக  காத்து இருக்க.. மகன் இரண்டு கைகளிலும் பிள்ளையை தூக்கிய வாறே வருவதை பார்த்தவர்  ஆண்குழந்தையா?  பெண்குழந்தையா?  என்ன குழந்தை என்று கேட்க..

இந்திரா தேவி இரண்டு பேரபிள்ளைகளை  பார்த்து வீ. பியின் தோள் சாயந்து  முகத்தை மறைத்து கண்ணீர் விட..

நாகில்லி மகனை அணைத்து  கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்துக்கள் சொன்னார், பேரபிள்ளைகளை பார்த்து கொண்டே..

சௌசன்யா தம்பி மகனை கையில் ஏந்த ஆவலோடு அருகில் வர..

அவளின் கையில் ஒரு குழந்தையை கொடுத்தவன்.. “ஸ்ரீ ராம்”  என்றான்.. சௌசன்யா விழி விரித்து பார்க்க.. “நான் பார்த்த நல்ல மனிதனின் பெயரை என் மகனுக்கு வைத்திருக்கிறேன்”  என்றான்..

சௌசன்யா குழந்தையை  வாங்கி  கொண்டு கண்கலங்கி தன் கணவனை தேட..

ஆதித்தியா  மனைவியின்  பின் இருந்து  சௌசன்யாவின் தோளை தட்டிக்கொடுத்தான்… “குட்டி ராம்” என்று…

வீ. பி இன்னொரு குழந்தையை வைஷுவின் அம்மாவிடம் தந்து “ஜெயராம்” என்று கூற.. அவருக்கே ஆச்சரியம்,, மகளே என்னிடம் பேசமாட்டாள்  பிள்ளையை என்னிடம் தரமாட்டாள், என்று ஏக்கமாக குழந்தையை எட்டி  பார்க்க.. தன்னிடம் குழந்தையை தந்தவுடன்,, பேரனை பார்த்து அழுதவரிடம்…   “உங்க பொண்ணு உங்க கிட்ட தான் பிள்ளையை கொடுக்க சொன்னாள்””  என்றதும், தன்னை மன்னித்து விட்டாள் மகள் என்ற சந்தோஷத்தில்”.

“எப்படி இருக்கா வைஷு மாப்பிள்ளை?” என்றதும்..

“நல்லா இருக்கா அத்தை” என்றான்..

வைஷுவுக்கு  பிரசவ வலியின் போது தான்..  தன் தாயின் நினைவு வந்தது தன்னையும் இப்படி தானே வலியில் பெற்று எடுத்திருப்பார் தன் அன்னை .. என்று அவர் செய்தது  எல்லாம் பின்னுக்கு சென்று,, தாயின் பாசத்தை உணர்ந்தவள்.. தன் பிள்ளையை தன் அம்மாவிடம்  முதலில் தர சொல்லி இருந்தாள்..

“குழந்தைக்கு பேரு எப்போடா வச்ச என்றார் நாகில்லி”.. “அதை முன்னாடி முடிவு  பண்ணிட்டோம் நானா”  என்றான் வீ. பீ…

யாழினி தந்தை பின்னிருந்து கட்டிகொள்ள.. “பங்காரம் தம்பியை பார்த்தீயா” என்றான்..

“ஊம்ம பார்த்தேன் நானா,, இரண்டு தம்பிகளும் உங்களை மாதிரி இருக்காங்க நானா”  என்று அணைத்து கொண்டாள்  தந்தையை..

“நானா மீயை பார்க்கணும்”..

“அவ தூங்குறடா,, நீ தம்பியை பார்த்துக்கோ”  என்றான்.. யாழினி சௌசன்யாவிடம் இருந்த குழந்தையை தன் மடிமீது வைக்க சொல்லி தம்பியிடம் கதை பேசினாள்..

  வைஷு மூன்று நாள் கழித்து ஹாஸ்பெட்டலில் இருந்து வீட்டுக்கு சென்றாள்..

வைஷுவை வீ. பி பார்த்துக்கொள்ள.. குழந்தைகள் பசியாற மட்டும் அன்னையிடம் வருவார்கள் , மற்றபடி  பெரியவர்களே  பிள்ளைகளை பார்த்துக்கொண்டனர்..

10 வருடம் கழித்து….

சர்வதேச  நடன போட்டியில் கலந்து கொள்ள வெளிநாடு சென்று இருந்தனர் வைஷுவும், யாழினியும்,, அம்மா, மகள் என்று யாராலும் கண்டு பிடிக்க முடியாத படி.. வைஷுவும், யாழினியும்  இருக்க..

அவர்கள் சொன்னாள் மட்டும் தான் தெரியும்,, இல்லை என்றால் யாருக்கும் கண்டு பிடிக்க முடியாத படி இருந்தனர் மகளும்,தாயும்…

இருவரும் கடைசி போட்டிக்கு தேர்வாகி  மிரர் நடனம் ஆடி கோப்பையை வின் பண்ணி இருந்தனர்..

இருவரும் மிரர் எதிர் பிம்பம் போல்  நின்று நடனம் ஆடி வின் பண்ணி கோப்பையோடு  இந்தியா வர..

இவர்களை  அழைத்து செல்ல இரட்டை சகோதரர்கள் வீ.பியோடு ஏர்போர்ட்  வந்திருக்க..

அவர்களே வெகுநேரம் காக்க வைக்காமல் வந்து சேர்ந்தார்கள்.. யாழினியும், வைஷுவும்.. தம்பிகள் இருவரும் யாழினியை தூங்கிகொண்டு சுத்த.. “டேய் விடுங்கடா, தலை சுத்துது”  என்று யாழினி சொல்லியதும் கீழே  விட..

வைஷு கணவனை பார்த்து சிரித்துக்கொண்டே வந்தவள். அவனை  மெல்ல  அணைத்து  விலக..

அவள் விலகியது. “ஹாப்பி” என்றான் வீ. பி.

“நான் ஹாப்பி தான் என்னைவிட நீங்க தான் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு  ஜாலியா  இருந்த  மாதிரி தெரியுது..”.. என்றவளை வளைத்து பிடித்தவன்..

“நீபாட்டுக்கு பாரின் போயிட்டா, உன் இரண்டு பசங்ககளை என்னால சமாளிக்க முடியலடி, ஒருத்தன் காலையில் 5 மணிக்கு எழுந்துச்சு  அத்துலடிக் பயிற்சி போறேன் சொல்லி என்னை எழுப்பி விடுறான்.. இன்னொருத்தன்  செஸ்கிளாஸ் போகனும் பிக்கப் பண்ணுங்க, டிராப் பண்ணுக்கு டாடியின்னு சொல்லி படுத்தி எடுத்துட்டான்னுங்க.. எப்படி இவனுங்களை சமாளிக்குற, ஹப்பா”   என்று பெருமூச்சு விட.

“பிள்ளைகளை  பெத்து வளக்குறது என்ன சும்மாவா,, ஒரு வாரத்துக்கு அளுத்துக்கிறீங்க,, இன்னும் எவ்வளவோ இருக்கு பாவா”.. என்றாள்..

ஸ்ரீராமும்  ஜெயராமும் விளையாட்டு போட்டிகளில் தன் திறமையை வளர்த்துக்கொள்ள..  அவர்களுக்கு நடனத்தில்  விருப்பம் இல்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!