Skip to content
Post Views: 681
“குட்டிமா…உனக்கு இன்னும் வயசு இருக்குடா… இப்போ உன் ஸ்டடிஸ்ல கான்சென்ட்ரேட் பண்ணுடா…” என்று பொறுமையாக சசி கூறினார்…
“நானும் ட்ரை பண்றேன் ப்பா… என்னோட ஸ்டடீஸ் முடியுற வரை நான் சொல்ல கூடாதுனு இருந்தேன்… ஆனா அவ அவ என் மாமாவை என்கிட்ட இருந்து பிரிச்சிடுவா போல… அது தான் அவளை திட்டினேன்…. முதல்ல அப்பா அம்மாவை அடுத்து இப்போ மாமாவை….” என்று அவள் கூறிக்கொண்டு இருக்கும் போதே சசி அவளை தடுத்து “போதும் குட்டிமா… ரித்து என்ன பண்ணா… அன்னிக்கு என்ன நடந்தது தெரியாம நீ தப்பா பேசுற… அவளும் பாவம் குட்டிமா… அன்னிக்கு சிவா மட்டும் போகலனா என்ன ஆகி இருக்கும்னு தெரியுமா… நீ அவளை தப்பா புரிஞ்சு இருக்க டா… இப்போ உன் படிப்புல மட்டும் கவனத்தை வை… வா வீட்டுக்கு கிளம்பலாம்…” என்று கூறி அவளை எழுப்பி பார்த்தார்….
Advertisement
Advertisement
ஆனால் அவளோ அதில் இன்னும் கோபமுற்று “ஓ அவ உங்களையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாளா அவ… போங்க நீங்களும் அவ கூடயே போங்க.. எனக்கு யாரும் வேண்டாம்” என்று அவள் முட்டியில் முகம் புதைத்து அழுக ஆரம்பித்து இருந்தாள்…
Advertisement
சசி எந்த சமாதானம் கூறியும் அவள் அழுகையை நிறுத்தவில்லை…அப்போது அந்த இடத்துக்கு வந்த சிவா “மாமா இவ பண்ண வேலைக்கு திட்டாம கெஞ்சிட்டு இருக்கீங்க.. என்ன நடந்தது தெரியாம அவ பாட்டுக்கு ஒன்னு நினைச்சு பேசுவா.. அவ கிட்ட நாம கொஞ்சி இப்படி ஆச்சு அப்படி ஆச்சுன்னு சொல்லிட்டு இருப்போமா… நான் எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு போறேன்.. அவளை சமாதானம் பண்ணுவீங்களோ என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது… நான் கிளம்புறேன்…” என்று மற்றவர்களை அழைத்து கொண்டு கிளம்பி விட்டான்…
Advertisement
இந்த இடைப்பட்ட நேரத்தில் மற்ற குழந்தைகள் கவனிக்காமல் ஆகாஷ் அவர்களை வேறு இடம் அழைத்து சென்று இருந்தான்… எனவே அவர்களுக்கு இங்க நடந்தது எதுவும் தெரியாது….
வீட்டிற்கு சென்றவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது… அங்கு கல்லூரியில் ரித்திகாவை அவமான படுத்த எண்ணிய பெண்ணும் அவள் பெற்றோரும் நின்று இருந்தனர்… அந்த பெண் அழுது கொண்டு நின்று இருக்க அவள் பெற்றோர் வருத்தமாக நின்று இருந்தனர்… வீட்டினர் அனைவரும் எதுவும் புரியாமல் நின்று இருக்க அர்ஜுனன் இறுகி போய் நின்று இருந்தார்…
ரித்திகா அந்த பெண்ணை பார்த்ததும் சிவாவின் கையை தானாய் பிடிக்க அவன் அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தான்… அவன் பார்வையை உணர்ந்தும் அந்த பெண்ணின் மேல் இருந்த பயத்தில் அவன் கையை விடவில்லை..
அந்த பெண்ணின் தாயோ “என்னடி நின்னுட்டு இருக்க போ போய் அந்த பொண்ணு காலுல விழுந்து மன்னிப்பு கேளு..” என்று அவளை தள்ளி விட அவளோ அழுது கொண்டே காலில் விழ போக ரித்திகா அவசரமாய் அங்கு இருந்து தள்ளி நின்றவள் “அது எல்லாம் வேண்டாம்… மன்னிப்பு கேட்டு மன்னிக்குற நிலைமைல நான் இல்ல….” என்று ஒரே வரியில் கூறி விட்டாள்..
அந்த பெண் அதே இடத்தில நிற்க அவள் பெற்றோர் மன்னிப்பு கேட்க பார்க்க அர்ஜுனன் தடுத்து அவர்களை அனுப்பி வைத்தார்.. வீட்டினர் அனைவரும் உள்ளே செல்ல அர்ஜுனன் கோவமாக சோபாவில் அமர்ந்து இருக்க மற்றவர்கள் வேறு வேறு இடத்தில நிற்க ஆகாஷ் குழந்தைகளை அறையில் விட்டவன் வெளியில் வந்து நின்று கொண்டான்…
ரித்திகா வீட்டிற்குள் வர அஞ்ச சிவா அவளுக்கு தைரியம் கூறி அழைத்து வந்தான்… அர்ஜுனன் ரித்திகா பிடித்து இருக்கும் சிவாவின் கையை பார்த்து விட்டு ரித்திகாவை பார்த்து “அவளோ பெரிய ஆள் ஆகிட்டியா டா…….. அப்பா கிட்ட கூட சொல்ல தோணலையா… உன்னை நான் நல்லா பார்த்துக்கலயா” என கொஞ்சம் குரல் உடைந்து கேட்க “அப்பா” என்று அழுது கொண்டே அவர் மடியில் முகத்தை புதைத்து இருந்தாள்….
“நான் வேணும்னு மறைக்கல ப்பா… நீங்க இது தெரிஞ்சா கஷ்டப்படுவீங்கனு தான் சொல்லல ப்பா…. உங்களை விட என்னை யாராலும் நல்லா பாத்துக்க முடியாது ப்பா..” என்று கூறி மேலும் சத்தமாக அழுதாள்…
அவள் அவ்வாறு கூறும் போது “ஏன் நான் உன்னை பாத்துக்க மாட்டேனா” என சிவாவின் உள்ளம் கூற அவன் உள்ளம் போகும் திசையை எண்ணி அதிர்ந்து தன் மனதை கட்டு படுத்தியவன் அப்பா மகள் பேசுவதை பார்க்க ஆரம்பித்தான்…
அவள் அழுவதை தாங்க முடியாத அர்ஜுனன் “போதும் பாப்பா… சரி நீ பீல் பண்ணாத அப்பா உனக்காக இருப்பேன்” என கூறும் போது அவர்கள் அருகில் வந்த சுபா ரித்திகாவை நிமிர்த்தி அவள் கண்ணீரை தன் புடவை முந்தானையில் துடைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு எப்போதும் தன் மகள் தான் என
சைகையில் கூறி இருந்தார்…..
இந்த பாச மழையை அனைவரும் கண்ணீருடன் பார்த்து கொண்டு இருந்தனர்… அர்ஜுனன் ஓரளவு சமாதானம் ஆகி இருக்க தன் முன் நின்று இருக்கும் சிவாவை பார்த்து “பெரிய மனுஷன் ஆகிட்டியா டா நீ… என்கிட்ட சொல்லணும்னு தோணலையா உனக்கு….” என்று கேட்டார்…
அவனோ “நான் சொன்னா நீங்க கஷ்டப்படுவீங்க… பிரச்சனையை முடிச்சிட்டு உங்க கிட்ட பொறுமையா சொல்லலாம்னு இருந்தேன்… அதுக்குள்ள அவங்களே வந்து சொல்லிட்டாங்க…” என்று கூறினான்…
“பாப்பா இனிமே எதுவா இருந்தாலும் அப்பா கிட்ட சொல்லணும் டா.. மனசுக்குள்ளயே வெச்சு கஷ்டப்பட கூடாது… ஓகேவா பாப்பா..” என்று அவள் தலை கோதி கேட்க அவள் சரி என்று தலையசைத்து கூறி அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்…
சுபா தான் சிவாவை பார்த்து “சிவா நிரவி எங்கடா உங்க கூட தானே வந்தா இப்போ எங்க அவ” என்று கேட்டார்…
அவளின் பெயரை கேட்டதும் ரித்திகாவின் உடல் நடுங்க எதையோ யோசித்து அர்ஜுனன் மேல் இருந்து எழுந்தவள் “அப்பா ரூமுக்கு போறேன்” என்று கூறி சென்று விட சிவா அவள் செல்வதை புருவ சுளிப்புடன் பார்க்க அர்ஜுனன் ஒரு வித யோசனையுடன் பார்த்தார்…
ஆகாஷ் தான் “அவ சசி மாமா கூட வருவா அத்தை” என கூறி சமாளித்தான்… நிரவி சசி மீது வைத்து இருக்கும் பாசம் தான் அனைவருக்கும் தெரியுமே எனவே சுபா எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட்டார்…
அனைவரும் அவரவர் வேலையை பார்க்க சென்று விட அர்ஜுனன் மற்றும் சிவா மட்டும் தான் ஹாலில் இருந்தனர்…
அர்ஜுனன் சிவாவை கூர்மையாக பார்க்க “என்ன மாமா அப்படி பாக்குறீங்க…” என்று கேட்டான்…
“ரித்திக்கும் நிரவிக்கும் எதோ பிரச்சனையா சிவா… நிரவி பேர் கேட்டதும் அவ உடம்பு நடுங்கி ரூமுக்கு போறேன்னு போயிட்டா… ரெண்டு மூனு நாளா ரெண்டு பேரும் சரியில்ல… ரித்தி ஏன் அப்படி இருந்தானு தெரிஞ்சி போச்சு… நிரவி ஏன் அப்படி இருந்தா… நீங்க ரெண்டு பேருமே பழைய மாதிரி இல்ல.. எப்படி சொல்ல நான் காணாம போய் திரும்பி வரதுக்கு முன்னாடி நீங்க எப்படி இருந்திங்கனு வீட்டுல இருக்குறவங்க சொன்னாங்க… ஆனா நீங்க ரித்தி வந்த அப்பறம் பேசிக்குறது கூட இல்லை…. எதுவா இருந்தாலும் சொல்லு சிவா… இப்படியே விட்டா பிரச்சனை தான் அதிகம் ஆகும்….” என்று கூறினார்…
சிவா அவரிடம் ஆரம்பத்தில் இருந்து நடந்ததை கூற அங்கு சசி நிரவியிடம் ரித்திகாவின் வாழ்க்கையில் நடந்ததை கூறி அன்று சிவா ஏன் அவளுடன் வந்தான் என்பது வரை கூறி முடித்தார்…
“இப்போ சொல்லு குட்டிமா இதுல ரித்தி தப்பு எதோ இருக்கா” என்று கேட்டார்…
அவள் அமைதியாக அழுது கொண்டு இருக்க “சொல்லு குட்டிமா ரித்தி மேல தப்பு இருக்கா…” என்று கேட்டார்…
நிரவி சசியின் தோளில் சாய்ந்து “அவங்க ரொம்ப பாவம் சசிப்பா… அவங்களை பத்தி தெரியாம அவங்களை இன்னிக்கு ரொம்ப தப்பா பேசிட்டேன்…” என்று கூறி அழுதாள்… அவளை ஒருவழியாக சமாதானம் செய்து “குட்டிமா நீ அழுதுட்டே இருக்க இந்தா நீ ரியாஸ் கூட பேசு அப்போ தான் சரி ஆவ நீ “என்று ரியாஸுக்கு அழைத்து அவளிடம் கொடுத்தார்…
ரியாஸ் ஆஷா இருவரிடமும் பேசிய பின் தான் நிரவி சமாதானமானாள்… இருவரும் வீட்டை நோக்கி சென்றனர்…
error: Content is protected !!