Skip to content
Post Views: 2,361
யாதுமாகி #22
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை மௌனமே தேவையாய்
இருந்தது.அதுவே மருந்தாய் இருந்தது.
Advertisement
அவன் அணைப்பிலிருந்து அவள் விலகுவதாய் இல்லை அவனும் அவளை விலக்குவதாய் இல்லை.
Advertisement
கனத்த மவுனத்தை கலைத்தது காரில் ஒலி சிந்திய பாடல்.
Advertisement
//மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்! இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்.
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏனென்று கேளுங்கள்…//
Advertisement
வாசு ஒலிக்க விட்ட சிச்சுவேஷன் பாடலைக் கேட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் விஷ்ணு.
பாதுகாப்பாய் தாயிடம் அடைக்கலமான சேயாய் பொதிந்து போனாள் நேத்ரா.
ஒருவர் பிடியில் மற்றவர் மகிழ் mந்து,நெகிழ்ந்து உறைந்து போயினர்.
கார் நின்ற பிறகு சுயம் பெற்று சுற்றம் உணர்ந்து வெளியே பார்வை பதித்தனர்.
கார் நின்ற இடம் கங்கைகொண்ட சோழபுரம்.
இங்கேயா? பயந்தாள்.
சீக்கிரம் போய் விடலாம்! அவள் கரம் பற்றி கோயிலுக்குள் அழைத்து சென்றான்.
இருவருக்கும் மன அமைதி தேவைப்பட்டது.
ஆவுடையார் சன்னிதியில் ஒருவித ஆழ்ந்த அமைதியும் தெளிவும் அவர்களுக்கு கிட்டியது.
ஈசலை தரிசித்து பிரசாதம் பெற்று வெளிப்பிரகாரம் வந்து அமர்ந்தனர் தன் உள்ளங்கையில் பொத்தி வைத்திருந்த குங்குமத்தை எடுத்து தன் உயிரில் உறைந்த வழி நெற்றியில் வைத்து தன் தோளோடு சாய்த்து கொண்டால் இப்போ சொல்றேன் நேத்ரா என்ன நடந்தாலும் என் வாழ்க்கை உன்னோடுதான் அவன் காதலை மட்டும் அல்ல கல்யாணத்தையே உறுதிபட சொல்லிவிட்டான் சிறுதுளி குங்குமமிட்டு.
நான் எவ்வளவு ஹேப்பினு வார்த்தையால் சொல்ல முடியாது. அவ்வளவு ஹேப்பி…நெகிழ்ந்து கலங்கினாள்.
ஏன் நேத்ரா இப்படி பண்ணின? கட்டு போட்டு வீங்கி இருந்த இடது கரம் பற்றி சினம் பொங்க கேட்டான்.
அவள் பதில் உரைக்காது ஆழ்ந்த அமைதியில் திளைத்திருந்தால்.
இது உனக்கே சைல்டிஷா இல்லையா?பைத்தியக்காரி…கை நரம்பை கட் பண்ணி இருக்கியே,செத்து தொலைத்து இருந்தால் எல்லா ஆகிறது?
எனக்கு சாகறது ஈஸி, உங்களை மறக்கிறது தான் கஷ்டம் அவன் தோளில் சாய்ந்து விம்மினாள்.
சரி,உன்னை யார் மறக்க சொன்னது?மனசுக்குள்ள சுமந்துகிட்டே திரி, அப்படியே என்னோட சேர்த்து நான் கட்டுற மஞ்சள் கயிறையும் சுமந்துகிட்டே திரி! அவன் அழகாய் கண்சிமிட்டினான்.
அவள் வெட்க பார்வை பார்த்தாள்.
என்ன? கண்சிமிட்டினான்.
ஒண்ணுமில்ல…காலை கட்டிக்கொண்டு சட்டமாய் எதிரில் அமர்ந்திருக்கும் அவனை சைட்டடித்துக் கொண்டிருந்தாள்.
ஏன் இப்படி கை கோர்த்து உட்கார்ந்திருக்க?கை வலிக்கும் ப்ரீயா விடு! கோர்திருந்த அவள் கரத்தை பிரித்து விட்டான்.
ரொம்ப அக்கறை தான்…பழிப்பு காட்டினாள்.
இல்லையா பின்ன?
நம்பிட்டேன்! உதடு கடித்து சிரித்தாள்.
எனக்கு ஒரு டவுட், நம்ம லவ் மேட்டர் உங்க வீட்டுக்கு இன்னும் தெரியலையா? சந்தேகமாய் கேட்டாள்.
ஏன் தெரியாம? நானே
அப்பாக்கு, பாட்டிக்கு சொல்லிட்டேன்.
ரியலி! நம்ப முடியாமல் பார்த்தாள்.
நேத்தே சொல்லிட்டேன்.
உங்க அம்மா?படபடப்புடன் எதிர்பார்ப்பாய் கேட்டாள்.
இல்லை என்பது போல் உதடு பிதிக்கினான்.
எப்போ சொல்வீங்க? ஆர்வமாய் கேட்டாள்.
இன்னைக்கு,இப்போவே!
இப்போவே வா? அவளுக்கு படபடப்பாய் இருந்தது.
இந்நேரம் சுரேன் சொல்லி இருப்பான்.
அவள் முகம் உணர்ச்சி துடைத்து வெளிறிபோனது.
மொபைல் அழைக்கவே ஒரு நிமிஷம் என்றவன் எழுந்து தனியே சென்றான்.
10 நிமிடம் கழித்து வந்தவன் சில்லென்ற பிஸ்லரி வாட்டர் பாட்டில்,லேய்ஸ் பாக்கெட்டோடு வந்தான்.
இந்தா தண்ணி குடி! கரிச்சனையாய் நீட்டினான்.
யாரு போன்ல?
உன் மாமியார் தான்!
ரியலி?
எஸ்…அம்மா தான்!
என்ன சொன்னாங்க?
தாறுமாறாய் துடிக்கும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த இயலாது திணறி நின்றாள்.
எதிர்பார்த்ததுதான் அசால்டாய் தோளை குலுக்கினான்.
ஓ…அப்போ என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்களா?அவள் கண்ணீர் முத்துக்கள் உருண்டோடி புல் தரையில் விழுந்து சிதறியது.
அவங்க யாருடி உன்னை வேண்டாம்னு சொல்றது?
எனக்கு வேணும்! எனக்கு என் நேத்ரா வேணும். ஆதரவாய் அவள் கரம் பற்றினான்.
கரகரவென்று கண்ணீர் வழிய சிலையாக அமர்ந்திருந்தாள்.
நேத்ரா நீ அழக்கூடாதும்மா.எது நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன். அவள் விழி நீரை துடைத்து விட்டான்.
அவள் கலவரமாய் பார்க்க… ரொம்ப தள்ளிப்போட வேண்டாம். நாளைக்கு அப்பா வருவாங்க உங்க வீட்டுக்கு. அவள் கரம் பற்றி வாக்குறுதி கொடுத்தான்.
கிளம்பலாம் விஷ்ணு. நேத்ராவின் அம்மா போன் பண்றாங்க என்று வாசு அழைக்கவே அவசரமாய் கிளம்பி சென்றனர்.
காரில் இருந்து இறங்கும்போது ஏக்கமாய் திரும்பி திரும்பி அவனை பார்த்துக் கொண்டே சென்றாள்.
பயப்படாம போ! உன்னை கலங்க விட்டுட மாட்டேன்.விரல் உயர்த்தி நம்பிக்கை கொடுத்தான்.
“—————-”
வீட்டில் விஷ்ணுவை எதிர்பார்த்து பெரிய பூசம்பம் காத்திருந்தது.
தெரிந்து தான் சென்றான் திடமாகவே சென்றான்.
காரை நிறுத்தி அவன் இறங்குவதற்குள் ஆவேசமாய் ஓடி வந்தார் ஜோதி.
எவடா அவ? அடித் தொண்டையில் இருந்து சீறினார். இரை கிடைக்காத சிங்கம் ஒன்று கோரப் பசியில் நடமாடுவது போல் கையை பின்னால் கட்டிக் கொண்டு நடைப்போட்டார்.
நேத்ரா…பதில் சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான்.
ஓ துரை இவ்வளவு நாளா கல்யாணம் வேண்டாம்னு தட்டி கழித்தது அந்த மகாராணிக்காக தானா?
அப்படியும் சொல்லலாம்! மாடி ஏறினான்.
என்னடா ஆளும் தோளுமா வளர்ந்துட்டோம் என்கிற திமிரா? பெத்தவகிட்ட பேசுற மாதிரியா பேசுற?
எனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு.
எனக்கு பிடிக்கல!அவர் கண்கள் நெருப்புத் துண்டமாய் ஜொலித்தது.
நீங்க இன்னும் அவளை பார்க்கவே இல்லை.
நான் ஏன் பார்க்கணும்?
வதனி தான் இந்த வீட்டு மருமகள்.
எனக்கு பிடிக்கலையே…
ஏன் பிடிக்காம போயிப்போகுது?
நம்ம தகுதிக்கு குறைவான ஒருத்தி எனக்கு மருமகளா வர முடியாது.
தகுதி,பணம்,அந்தஸ்துன்னு வெறி பிடித்து அலையற உங்க அண்ணன் பொண்ணு என்னைக்குமே எனக்கு மனைவியாக முடியாது.
நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்.ஆவேசமாய் இரைந்தார்.
கல்யாணம் எனக்கு தான்! அவ்வளவு தான் அவன் தனது அறைக்குள் நுழைந்து படீரென்று அறைந்து கதவை தாழிட்டுக் கொண்டான்.
நீ சம்மதித்தால் என்ன சம்மதிக்க விட்டால் என்ன? அவளே என் மனைவி என்று மறைமுகமாக ஆனால் திட்டவட்டமாக சொல்லி சென்று விட்டான்.
கணவன் மாமியார் இடம் பேயாட்டம் ஆடினார் ஜோதி.
முப்பது வருஷத்துக்கு முன்னாடி என் மகன் இப்படித்தான் பிடிவாதம் பிடித்து ஒத்த காலில் நின்னான். அன்னம் மிகச்சரியாய் கூறி பார்த்து அடித்தார்.
என்ன சொல்ல வறீங்க? என்னை குத்தி காட்டறீங்களா? ஜோதி வெகுண்டு எழுந்தார்.
நான் தகுதி அந்தஸ்து பார்த்து இருந்தால் நீ இந்த வீட்டுக்கு மருமகளாகி இவ்வளவு அதிகாரமா ராஜ்ஜியம் பண்ண முடியாது!நறுக்கு தரித்தார் போல் பேசிவிட்டு போய்விட்டார்.
நீங்க என்ன சொல்ல போறீங்க உங்க பங்குக்கு நீங்களும் சொல்லிடுங்களேன்!
கணவனை எரிக்கும் பார்வை பார்த்தார்.
எனக்கு என் பிள்ளை முக்கியம். அவனோட ஆசை முக்கியம்.அவனுக்கு கோடிக்கணக்கான ஆஸ்தியை கொடுக்கிறதை விட அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையை கொடுக்கிறது தான் ஒரு நல்ல தகப்பனா என்னோட கடமைன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா எங்க அப்பா அப்படித்தான் நினைத்தார்.
நான் ஒரு நாளும் அவளை மருமகளா ஏத்துக்க மாட்டேன்.
நீ ஏத்துக்க வேண்டாம்,உன் முடிவில் ஸ்ட்ராங்கா இரு.
உன் மகன் பொண்டாட்டியா ஏத்துக்கிட்டா போதும்.
இப்போ முடிவா என்னதான் சொல்றீங்க?
நாளைக்கு பொண்ணு கேட்க போகணும்.
நான் வரமாட்டேன்!
அது உன் இஷ்டம்,உன்னை வற்புறுத்தி அழைக்க மாட்டேன். எங்க எல்லாருக்கும் சம்மதம். பேச்சு அவ்வளவுதான் என்பது போல் மீசையை முறுக்கியபடி எழுந்து போனார் வேணுகோபாலன்.
“———————”
சுரேன், வாசு உங்களை நம்பி தான்டா அப்பாவை அனுப்புறேன். அப்பாக்கு அங்கே எந்த அவமானமும் நடந்திடக் கூடாது.
சரிடா மச்சி,நாங்க பார்த்துக்கிறோம் வாசு தோளில் தட்டினான்.
இல்லடா நேத்ரா ஓட அப்பா கொஞ்சம் ஏடாகூடமான ஆளு மரியாதை இல்லாம ஏதாவது பேசி வம்பு இழுத்து விட்ற போறாரு.
நாங்க சமாளிச்சுக்கிறோம் மச்சி, சுரேனும் ஆறுதல் சொன்னான்.
எதுக்கு விஷ்ணு உனக்கு இவ்வளவு டென்ஷன்? அப்பா பார்த்துக்கிறேன். அந்த பொண்ணு தான் இந்த வீட்டு மருமகன்னு உறுதிப்படுத்திட்டு வரேன்! புன்னகை முகமாய் மகன் கரம் பற்றி அழுத்தம் கொடுத்தார் வேணு.
“——————-”
வணக்கம் நான் வேணுகோபாலன்.கரைமேடு கிராமத்தில் இருந்து வரேன்! வேணும் கை கூப்பினார்.
வெற்றிலை பாக்கு பூ பழம் அடங்கிய பெரிய தாம்பாள தட்டை டீ பாய் மீது வைத்தான் சுரேன்.
சுரேனும், வாசுவும் வேணுகோபாலனுக்கு இருபுறமும் கைகட்டி பவ்யமாய் நின்று கொண்டிருந்தனர்.
வெங்கடாசலம் புரிந்து கொண்டார் “அந்த” பையனின் தந்தை இவர் என்று.
சொல்லுங்க என்ன விஷயமா வந்திருக்கீங்க? அறியாதவர் போல் கேட்டார்.
வயசு பொண்ணு இருக்க வீட்டுக்கு பூப்பழம் தட்டோட எதுக்கு வருவாங்க? தனக்கே உரிய நையாண்டியோடு கேட்டார் ரேணு.
மன்னிக்கணும் கொஞ்சம் புரியிற மாதிரி சொன்னா நல்லா இருக்கும். இன்னும் கெத்து காட்டினார் வெங்கி.
என் மகன் விஷ்ணுவுக்கு உங்க பெண்ணை கேட்டு வந்திருக்கேன். சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்லிவிட்டார் வேணு.
மன்னிக்கணும் இந்த ஏரியாவில் என் பொண்ணை கொடுக்கிறதா இல்லை. என் சொந்த ஊர் பக்கமா சொந்தத்தில் பார்த்து கொடுக்கிற ஐடியாவில் இருக்கோம்.
நடப்பவற்றை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் வேதம் தனது அறையின் ஜன்னல் கம்பியில் முகம் புதைத்து கண்ணீர் மல்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நேத்ரா.
சார் விஷ்ணு ரொம்ப நல்ல டைப்,கௌரவமான குடும்பம்,தாராளமா நம்பி உங்க பொண்ணு கொடுக்கலாம். சுரேன் நண்பனுக்காக உத்தரவாதம் கொடுத்தான்.
அவங்க கௌரவம் தெரிந்து தான் வேண்டாம்னு சொல்றேன்.
மாப்பிள்ளை வீட்டை பற்றி விசாரிச்சுட்டேன் அந்த பையனோட அம்மா பெயரை சொன்னா ஊரே பயப்படுது.
என் பொண்ணுக்கு என்ன தலை எழுத்து அந்த வீட்டில் கட்டிக்கிட்டு போய் லோல் படணும்னு?
நான் ஒத்த பொண்ணை பெத்து வச்சிருக்கேன். அவ வாழ்க்கை வசதியா அமைவதை விட நிம்மதியா அமையணும்.
சார் உங்க பொண்ணு அங்க நிம்மதியா வாழும்!நீங்க விஷ்ணுவை நம்பி பொண்ணு கொடுங்க. வாசுவிற்கு கோபமாய் வந்தது.
பையன் எங்க வீட்டோட மாப்பிள்ளை வந்துடுவாரா?
அவ்வளவுதான் வேணுவிற்கு பிடித்து வைத்த கோபம் தலைக்கு ஏறிவிட்டது.
யோவ் என்ன பேசுற?என் தகுதி என்ன,தராதரம் என்ன. என் பிள்ளை உனக்கு வீட்டோட மாப்பிள்ளையா? அவர் கை ஓங்க… சுரேன் சட்டென்று அவர் கரம் பற்றி தடுத்தான்.
அப்பா ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க!
என்னடா பொறுமை?யாரை பார்த்து வீட்டோட மாப்பிள்ளை…அவருக்கு கொதித்தது.
உங்க பிள்ளையை வம்படியா வீட்டோட மாப்பிள்ளையா கேட்டு நாங்கள் வந்து நிற்கிறோமா? வாயடங்கவில்லை வெங்கி.
சார் நீங்களும் விதண்டாவாதம் பண்ண வேண்டாம்.
உங்க பொண்ணுக்கு விஷ்ணுவை பிடிச்சிருக்கு! அவனுக்கும் நேத்ராவை பிடிச்சிருக்கு. வாசு மத்தியஸ்தம் பண்ண முயன்றான்.
பிடிச்சிருந்தா பொண்ணு கொடுக்கணுமா? அவர் ஏகத்தாளமாய் கேட்டார்.
சார் உங்க பொண்ணு அவனுக்காக உயிரையே விட துணிந்து இருக்கு.
அவளுக்கு நல்லது கெட்டது தெரியாது. செல்லமா வளர்ந்த பொண்ணு. குழந்தை மனசு கொண்டவ, சரி தப்பு புரியாமல் இந்த வயசுல ஏதோ ஒரு ஆசை. எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்கவா. வெங்கி கம்பீரமாய் மீசையை முறுக்கினார்.
அதை அந்த பொண்ணு சொல்லட்டும் கால் மீது கால் போட்டு அமர்ந்தார் வேணு.
அப்பா நான் விஷ்ணுவை…. நேத்ரா கெஞ்சினாள்.
நேத்து குட்டி நீ காதலுக்காக உன் கை நரம்பை கட் பண்ணிகிட்ட மாதிரி என் கௌரவத்திற்காக அப்பாவும் அதையே செய்வேன். டைனிங் டேபிள் மீது இருந்த கத்தியை எடுத்து தனது மணிக்கட்டில் வைத்து அழுத்தினார்.
அப்பா… அலறி அடித்துக் கொண்டு ஓடினாள் நேத்ரா.
வரம் வாங்கி தவம் வாங்கி பெத்த நாங்க உனக்கு முக்கியம் இல்லாம போயிட்டோம். செல்லமா சுதந்திரமா உன்னை வளர்த்ததுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்துட்ட… அவர் வெறுப்புடன் மகளை நோக்கினார்.
அப்பா ப்ளீஸ் எனக்கு கல்யாணமே வேண்டாம்! என்னை விட்டுடுங்க, நான் படிக்கப் போறேன். தயவு செஞ்சு கத்தியை கீழ போடுங்க கரம் கூப்பி கதறி அழுதாள்.
அண்ணா போயிடுங்க ப்ளீஸ் இந்த கல்யாணம் வேண்டாம். நான் விஷ்ணுவை ஆசைப்பட்டது தப்புதான்.என்னை மன்னிச்சிடுங்க கை கூப்பி அழுதாள்.
“—————-”
நடந்தவற்றை சுரேன் சொல்ல சொல்ல…விஷ்ணுவின் நாடி நரம்புகள் முறுக்கேறியது.
ராயல் என்ஃபீல்டை முடுக்கி கொண்டு புயலென பறந்தான்.
சடன் பிரேக் அடித்து நேத்ரா வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தியவன் மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்தான்.
ஏய் நேத்ரா வாடி வெளியே… வீடு அதிர்ந்து குலுங்கியது.
error: Content is protected !!