Skip to content
Post Views: 1,679
அவளின் பாவனை புரியாது திருதிருவென விழித்தவரை கண்டு அத்தனை சிரிப்பு யமுனாவிற்கு.
அதையும் கண்டு அவர் கொந்தளிக்க அவரின் உடலோ வலியை கூட்ட, “அம்மா..!!” என அடங்கி அமர,
Advertisement
“அதூ.. அப்படி அடங்கி இருக்கனும்.. காலம் போன கடைசில புள்ள பெத்துக்கிட்ட நீங்க எங்கள அலையறீங்கன்னு சொல்றது எப்படி இருக்கு தெரியுமா..?
அட விடுங்க.. அதை ஏன் என் வாயால சொல்லிட்டு.. உங்களுக்கே அதுக்கான பேர் நல்லா தெருஞ்சிருக்காது..?” என நிறுத்தி அவரை ஒரு பார்வை பார்க்க, அவளின் வார்த்தை அவரை கத்தியில் குத்தியது போன்ற வலியை உண்டாக்க, அவரின் முகம் மொத்தமாக கருத்து போனது.
Advertisement
Advertisement
அதை கண்டு திருப்தியான யமுனா, “மாமியாரே.. எனக்கு எது நடந்தாலும் திருப்பி செய்யலன்னா தூக்கம் வராது.
எனக்கே அப்படின்னா என்னோட தயாவுக்கு எதாவது செஞ்சா சும்மா விடுவேனா..?
Advertisement
அதான் நீங்க பூவ உதருன மாதிரி உங்களை உதறிவிட்டா என்னன்னு தோணுச்சா செஞ்சுட்டேன்.
இனி எங்க விசயத்துல எது செஞ்சாலும் ஒண்ணுக்கு பத்து முறை இல்ல நூறு முறை யோசிச்சு செய்ங்க.. வர்ட்டா..” என பாவனையாய் சைகை காட்டி உள்ளே செல்ல சகுந்தலாவின் முகம் யோசனைக்கு தாவியது.
நேற்று இரவு ஜெயசீலன் வாணி வீட்டிற்கு செல்லும் முன் சகுந்தலாவிடம்,
“இங்கன பாரு அவென் குடும்போ குழந்தேன்னு ஆகிட்டா அப்புறே அவென் நமக்கு எதுவுஞ்செய்ய மாட்டான்.
என்றனால இனி வேல வெட்டின்னு போயி சம்பாதிச்சு உன்ற புள்ளைக்கு எதுவுஞ்செய்ய முடியாது.
அதனால எதையாச்சும் பண்ணி அதுங்கள பிரிக்க பாக்கறே..” என தயவு தாட்சண்யம் இன்றி ஜெயசீலன் சொன்ன வார்த்தையில் அதிர்ந்த சகுந்தலா,
“அது எப்புடிங்க முடியும்.. ஏற்கனவே இத சொல்லி தா அவனோட கண்ணாலத்த நடத்தாம இருந்தீங்க.. இப்போ நடந்தத எப்புடி கலைக்க.. அது பாவமில்லையா..?” என பதட்டத்தோடு கேட்க,
“நீ அதுங்களுக்கு பாவம் பாத்தாக்க உன்ற மவனுக்கு யாரு பாவம் பாக்க..
காலம் போன கடைசி புள்ளையா..? கலச்சுப்போடலாமுன்னு சொன்னதுக்கு எனக்கு ஆதரவுக்குன்னு வேணுமேன்னு நின்னு பெத்தையே.. அதுக்காக செய்யி. இல்ல நீ வேலக்கு போயி அவன காப்பாத்திக்கோ..” என்று அவரின் மனதில் பயத்தை விதைத்து விட்டே சென்றிருந்தார்.
கஸ்தூரி மூலமாய் வந்த பணம் கரைந்த பின் வேலைக்கு சென்ற போதும் பணம் தந்த சொகுசை அனுபவித்தவருக்கு அது மிகவும் கடினமான ஒன்றாய் ஆனது.
இந்த நிலையில் சகுந்தலா உண்டாகியிருக்க வேண்டவே வேண்டாம் என நின்றவரிடம் போராடியே அந்த பிள்ளையை பெற்றிருந்தார் அவர்.
‘மூன்று பிள்ளைகளுக்கு செய்ய வேண்டுமா..?’ என மலைப்போடு இருந்தவருக்கு சந்தர்ப்ப வசத்தால் தீனா வீட்டை விட்டு வெளியேற,
“அப்பாடா ஒண்ணு ஒழுஞ்சுது..” என்ற மனப்பான்மையே.
வாணியையும் வெளியே கட்டிக்கொடுத்தால், ‘வரதட்சணை..’ என்ற பெயரில் எதாவது செய்ய வேண்டுமே.. என யோசித்தவருக்கு.. சக்தி அவரின் அந்த சுமையையும் இறக்கியிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படியான நிலையில் மீண்டும் தீனா மூலம் பணம் வர ஆரம்பித்ததும்,
“என்றனால இனி வேல பாத்து எதுவுஞ்செய்ய முடியாது. என்ற புள்ளன்னா அப்பன பாக்கற கடம அவெனுக்கு இருக்கு தானே..?” என சொல்லி மொத்த பாரத்தையும் தீனாவின் தலையில் சுமத்திவிட்டார் எளிதாய்.
அதன் பின் ஊரை சுற்றிக்கொண்டு திரிவதற்கும், வீட்டு செலவுக்கும் அவ்வப்போது குடிக்கவும் தீனாவின் வருமானம் தேவை.
இதில் அவனுக்கு திருமணம் நடந்து வருபவள் இவரின் பேச்சிற்கு எதிராய் தீனாவை மாற்றிவிட்டால்.. என்ற பயமே அவனை திருமண பந்தத்தில் இணைய விடாமல் தடுக்க காரணமாய் இருந்தது.
அதுமட்டுமல்ல அந்த கஸ்தூரிக்காக தன்னை அடிக்க கை ஓங்கியவனின் மீதான வன்மம் அவன் எந்த காலத்திலும் சந்தோஷமாக தன் முன் இருந்திடவே கூடாது என்ற எண்ணத்தை ஸ்திரமாக்கியிருந்தது.
ஆனால் அவரின் எண்ணத்திற்கு எதிராய் நடந்துவிட்ட திருமணத்தை, அதிலும் அவனை நேசித்து அவனின் கரம் பற்றி அவன் தான் முக்கியம் என நின்றவளை கண்டவர் மனதுக்குள்,
‘இது சரியில்லையே.. காதலூ கண்ண மறைக்குதோ..! ஒருவேல ரெண்டுஞ்சேந்து சந்தோஷமா இருந்திடுமோ..? விட்டுடவே மாட்டேன்..’ என்ற குரூரமாய் எண்ணம் எழுந்தது.
அவர்களை சேர்ந்து வாழ விடாமல் செய்ய நினைத்ததை சகுந்தலா மூலமாய் நடத்த ஆயத்தமாகி அவரின் மனதை குழப்பி விட்டே சென்றிருந்தார்.
அவர் எண்ணம் போலவே, ‘இனி வயது போன பின் வேலைக்கு சென்று தன் மகனுக்கு பார்க்க முடியுமா..?’ என்ற பயம் தந்த துணிவில் தான் இரவு அவ்வாறு செய்திருந்தார்.
ஆனால் யமுனா தீனாவை விட்டுக்கொடுக்காமல் அவனை கஷ்டப்படுத்தியதற்காக தனக்கு தண்டனை தந்ததை நினைக்கும் போது,
‘யமுனாவை அனுசரித்து சென்றுவிட்டால் என்ன..?’ என்ற எண்ணம் தோன்றிய வேகத்தில் அழிந்தும் போனது.
ஏனெனில் இப்போதே இப்படி அவனுக்காக பார்ப்பவள், ‘நாளை என் மகன் எதற்கு அவனுக்கு பாரமாய்..’ என நினைத்துவிட்டால் என்ற பயமே அந்த எண்ணத்தை மாற்றியது.
யமுனா தீனாவிற்காக சகுந்தலாவிற்கு தந்த தண்டனையை கண்டாவது திருந்த முயற்சித்திருக்கலாம் ஜெயசீலன். விதி யாரை விட்டது..?!
அறையினுள் சென்றவளுக்கு அறை சுத்தம் செய்யப்பட்டிருந்ததில் வாணியின் மனநிலை புரிய,
“இந்த அம்மாக்கு இத விட பெருசா செஞ்சிருந்தாலும் தப்பில்ல..” என வாய்விட்டே சொல்லியபடி தலைமுடியை இழுத்து கட்டியிருந்த துண்டை அவிழ்க்க இடை தாண்டி படர்ந்தது அவளின் கூந்தல்.
அதை சீராக உலறும் வண்ணம் கையால் துழாவி விரித்து விட்டுக்கொண்டிருந்தவளை பின்னிருந்து கட்டிக்கொண்ட தீனா,
“ஏய் சேட்ட.. என்னடீ பண்ணி வச்ச அவங்கள..?” என்றான் புன்னகையோடே.
“என்ன.. என்ன செஞ்சேன்..? அதான் செஞ்சத சொன்னேனே..” என்றாள் தடுமாறாமல்.
“ஓ..! நீ அவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்க போனே.. இத நா நம்பனும்..” என்றவனிடம்,
“நீங்க நம்பலன்னாலும்.. அதா நிசம்..” என பசுபதி மாடுலேஷனின் யமுனா சொல்ல தீனாவிற்கு அத்தனை சிரிப்பு.
“அடியேய் வாலு.. பாவம்டீ அவங்க. வயசான காலத்துல அவங்கள ஏன் இப்படி படுத்தறே..?” என்றிட,
“அவங்க பண்ணது சரியா..?” என்றாள் அவனின் அணைப்புக்குள்ளேயே திரும்பி நின்று அவன் முகம் பார்த்து.
“தப்பு தான். அவங்க அப்ப இருந்தே சுயநலவாதி தான். அதோட அவரு என்ன பயம் காட்டினாரோ..?
எங்கே நா புள்ள குட்டின்னு ஆகி இந்த வீட்டை கவனிக்காம போயிடுவேனோன்னு ஒரு பயம் இருக்கலாம்.
இன்னும் ஜெகதீஷ் சின்ன பையன் தானே..? அதனால..” என அவரின் நிலையை புரிந்து கொண்டவனாக தீனா பேசும் போதே அவனின் வாயை கையால் மூடியவள்,
“எப்பா ராசா.. உங்க சித்தி பத்தின புராணம் எல்லாம் உங்கள மாதிரி அக்மார்க் நல்லவனுக்கு மட்டும் தெரிஞ்சா போதும்.
இனி அவங்க என் வழியில வரக்கூடாது. வந்தா சேதாரம் தான்..” என மிரட்டலாகவே யமுனா சொல்ல,
“புருஞ்சுக்க பாப்பா..” என தீனா கெஞ்சலாக சொல்ல,
“எத புருஞ்சுக்கனும்.. அவங்களையா..?
முதல்ல கட்டிக்கிட்ட உங்கள.. உங்க உணர்வ நா புருஞ்சுக்கிட்டதால தான் இப்படி.
இன்னும் அவங்க சீண்டினா.. நா அடங்கமாட்டேன்..” என்றவளின் வார்த்தை அவனின் மனதிற்கு நிம்மதியை கொடுத்த அதே நேரம்,
‘இவ பாட்டுக்கு எதையாவது செஞ்சா.. அவங்க சும்மா இருப்பாங்களா..?
அவங்க சும்மா இருந்தாலும் அவரு எதாவது செய்வாரே..
நானும் வேலைக்குன்னு காலைல போனா திரும்ப ராத்திரி ஆகிடும். நாள் முழுக்க இவ இவங்க கூட தானே இருக்கனும்.. இப்படி எதாவது பண்ணிட்டே இருந்தா இவ எப்படி நிம்மதியா இருப்பா..?’’ என்ற கவலை எழுந்தடங்கியது
அவனின் கவலைக்கு மாறாக, ‘வேலைக்கு கிளம்புங்க தயா.. அப்புறம் என்கிட்ட வாலாட்டுனா இருக்கு இதுங்களுக்கு..’ என்று மனதுக்குள் சூளுரைத்து காத்திருந்தாள் ஜெயசீலனுக்காக.
யமுனாவின் சூளுரை பற்றி அறியாத தீனாவோ, “என்னோட செல்ல ராட்சசியே.. கொஞ்சமே கொஞ்சம் உன்னோட வாலை சுருட்டி வச்சுட்டு புதுப்பொண்ணுக்கான லட்சணத்தோட அமைதியா இருக்கனும்.
நீ எதாவது செஞ்சு அவர் உன்னைய எதாவது பேசிடுவாரோங்கற டென்ஷனை எனக்கு கொடுக்காதே.. ப்ளீஸ்..” என தனது அணைப்பை தளர்த்தாமல் கொஞ்சலாகச் சொல்ல,
தனது எண்ணத்தை சொல்லி அவனை கஷ்டப்படுத்த விரும்பாத யமுனாவும் அவன் போக்கிலேயே,
“அது கொஞ்சமே கொஞ்சம் கஷ்டம் தான் கண்ணழகா.. ஆனா உங்களுக்கே உங்களுக்காக.. மட்டும் செய்யறேன்..” என அவனை போன்றே அவனின் இடையோடு கையிட்டு அணைத்துக்கொண்டு கண் சிமிட்டி அழகான புன்னகையோடு சொன்னாள்.
அவளின் பாவனையில் முகம் விகசிக்க நின்றவன் அவளின் உச்சியில் ஆழ்ந்த முத்தமென்றை பதிக்க, அதே நேரம் அவனின் நெஞ்சுக்கூட்டில் தனது அதரங்களை அழுத்தமாய் பதித்திருந்தாள் யமுனா.
அவளின், “உங்களுக்காக..” என்ற வார்த்தை கொடுத்த நிம்மதியோடு அவளின் அன்மையும் சேர அவனின் தெளிந்த முகம் அத்தனை வசீகரத்தை கொடுத்தது.
‘தாம்பத்தியம் மட்டுமல்ல உனக்காக எதையும் செய்வேன். நீ மட்டுமே எனக்கு முக்கியம் எனும் வார்த்தை கொடுக்கும் உள்ளார்ந்த நிறைவும் ஒரு வித அழகை கொடுக்கும்..’ என்பதற்கு உதாரணமாக இருந்தான் தீனதயாளன் அப்போது.
அந்த நிறைவு தந்த இதத்தில் அவனின் கண்மணியில் மோகனமும் பிரதிபலிக்க அந்த கண்ணின் இழுவிசைக்கு இசைந்த பாவையவள் விரும்பியே தலைவனை நெருங்க இசைந்தவளை அழகாய் இசைத்து மீண்டான் காளையவன்.
விழுந்தாழும் உன் கண்ணில்
கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில்
நினைவாக நான் எழுவேன்
மடிந்தாலும் உன் மூச்சின்
சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உனையேதான்
மீண்டும் சேர்வேன்
இனி உன் மூச்சை
கடன் வாங்கி நான் வாழுவேன்
error: Content is protected !!