Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 4

அத்தியாயம் 4

 

“உள்ள வாங்க!” என சித்ரா, பல்லவி இருவரையும் வரவேற்றது என்னவோ கீர்த்திஸ்வரன் தான்.


Advertisement

 

தேவி அப்பொழுது தான் காய்கறி வாங்கி வருவதாய் வெளியில் சென்றிருக்க, அந்த வீட்டில் ஹாலில் இருந்த கீர்த்திஸ்வரன் மற்றும் அறைக்குள் இருக்கும் லதா தவிர வீட்டில் யாரும் இல்லை.

Advertisement

Advertisement

 

“எப்படி இருக்கீங்க தம்பி? “ என்று சித்ரா கேட்க, அவன் பதில் சொல்லி பேசிக் கொண்டிருக்க, இம்முறையும் அமைதியாய் அன்னை அருகில் நின்றாள் பல்லவி.

Advertisement

 

“அம்மா தூங்குறாங்களா? பார்க்கலாமா?” சித்ரா கேட்க,

 

“இதோ ஒரு நிமிஷம்!” என்றவன் உள்ளே சென்று அன்னையைப் பார்த்து அவரிடம் சொல்லிவிட்டு சித்ராவை அழைத்தான்.

 

அதிகமாய் இதற்கு முன்பும் பேசிக் கொண்டதில்லை சித்ரா லதா இருவரும்.

 

பார்வையில் கனிவும் அமைதியுமாய் லதாவை வெளியில் பார்த்திருக்கிறார்.

 

“எப்படி இருக்கீங்க? இப்ப பரவால்லயா?” என்று பல்லவி தான் லதாவிடம் கேட்க,

 

“ஒண்ணுமில்ல டா. இப்ப பரவால்ல” என்றவர் பொதுவாய் நலம் விசாரித்து,

 

“ஈஸ்வர்! தேவியை காபி கொண்டு வர சொல்லு” என்றார்.

 

“தேவிக்கா மார்க்கெட் போயிருக்காங்க ம்மா. நீங்க பேசிட்டு இருங்க” என்றவன் வெளியில் வர,

 

“எனக்கும் காபி வேணும் ஈஸ்வர்!” என்றார் சத்தமாய் மகனிடம்.

 

“காபி போடவா போறாங்க?” ஆச்சர்யமாய் பல்லவி கேட்க,

 

“அதெல்லாம் வேண்டாம். இருக்கட்டும். நாங்க சும்மா பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தோம்!” என்று சித்ரா சொல்லவும்,

 

“இருக்கட்டுமே! நல்லா தான் போடுவான்!” என்றார் லதா.

 

“பல்லவி! நீ போய் போட்டு கொண்டு வா போ!” என்று அனுப்பிவிட,

 

“நீ இரு டா. அதெல்லாம் அவன் பார்த்துக்குவான்!” என்று லதா சொல்ல,

 

“இருக்கட்டும். நான் பாக்குறேன்!” என்று வெளியில் வந்த பல்லவிக்கு அவனிடம் பேச வேண்டி இருந்ததே.

 

“ஓகே எல்லாமே ஃபுல் செக் பண்ணிட்டு ஸ்டார்ட் பண்ணுங்க. நான் நாளைக்கு வந்து பாக்குறேன்!” என்றபடி அடுப்பில் பாலை வைத்துவிட்டு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.

 

பல்லவி நடந்து வரும் சத்தம் கேட்டு திரும்பியவன் பார்வையில், “நான் காபி போடவா?” என்று அவள் கேட்க, புன்னகைத்து விலகி வந்தான் ஈஸ்வர். 

 

அவனுக்கும் சேர்த்தே எடுத்து வந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த அவனிடம் ஒன்றை நீட்டிவிட்டு, ‘இப்போதே கேட்கவா?’ என்பதாய் நிற்க, ஈஸ்வருக்கும் நேற்று அவள் கேட்ட விதத்தில்இப்பொழுது நன்றாய் நியாபகம் இருக்க,

 

“உன்னோட காசு!” என்று அவள் சொல்லியது போலவே சொல்லி அவளிடம் நீட்டினான் பணத் தாள்களை.

 

அதைக் கண்டதும் தான் எத்தனை வெளிச்சம் அவள் கண்களில். அதை ஈஸ்வருமே கண்டான்.

 

“காபி குடுத்துட்டு வந்து வாங்கிக்கவா?” என கேட்டுவிட்டு அவன் தோள்களை குலுக்கவும் இவள் உள்ளே சென்று காபியை கொடுக்க,

 

“பல்லவி! நீ ஒரு மாசத்துக்கு இங்க வந்து இவங்களை பார்த்துக்கோயேன்!” என்றார் சித்ரா.

 

“பார்த்துக்கணுமா?” என்றவள் அன்னையையும் லதாவையும் என மாறி மாறிப் பார்க்க,

 

“அவ சின்ன பொண்ணு லதா. அதெல்லாம் வேண்டாம் இருக்கட்டும். நான் தான் என்னென்னவோ சொல்லி இப்படி நினைக்க வச்சுட்டேன் உன்னை. ஈஸ்வர் வந்தா சத்தம் போடுவான் என்னை!” என்றார் லதா.

 

வெளியில் தான் அவரால் வர முடியாதே தவிர்த்து அங்கிருந்து மகன் பேசுவது எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தார் அவரும் காலை முதல்.

 

அத்தனை அழைப்புகள் காலையில் இருந்து வரிசையாய் கீர்த்திஸ்வரனுக்கு வந்து கொண்டே தான் இருந்தது.

 

அத்தனை அழைப்புக்கும், “நீங்க பார்த்துக்கோங்க. எல்லாம் சரியா இருக்கனும். நாளைக்கு வர்றேன்!” போன்ற பதில்கள் தான் ஈஸ்வர் கொடுத்துக் கொண்டிருந்தான்.

 

கேட்ட லதாவிற்கு தான் கவலையாகிப் போனது. இப்படி பகல் முழுதும் ஓரிடத்தில் என்று மகன் இருந்து பார்த்ததே இல்லை. 

 

அஞ்சலியை தேர்வு நேரத்தில் தொந்தரவு செய்யவும் முடியாது. அதுவும் தனக்கு இப்படி என்றால் அந்த கவலையே வேறு அவளின் படிப்பை பாதிக்கும் இதில் உடனிருந்து பார்த்துக் கொண்டு என இன்னும் வருந்துவாள் என பல எண்ணங்கள் லதாவிற்கு.

 

தானக்கென்று சொந்தமாய் ஒரு சாம்ராஜ்யநீ நடத்தி வரும் கணவர் மகேஸ்வரனை நினைத்தால் இப்பொழுதும் இதழ் கசந்த ஒரு புன்னகை தான் லதாவிடம்.

 

என்ன இருந்து தான் என்ன? வீட்டினை நிர்வகிக்கும் பெண் படுத்துவிட்டால் கவனிக்க யார் தான்? என்ற நிலை தன் நிலை என்று தான் தோன்றியது.

 

மகனை அதற்காக குற்றம் சொல்ல முடியாது. அவன் கவனித்துக் கொள்ள என்றும் தயாராய் தான் இருப்பான். ஆனாலும் இது தான் அவன் பொறுப்பேற்றிருக்கும் நேரமும். அவனை எந்நேரமும் எதிர்பார்க்க முடியாதே. 

 

இப்படி தனக்குள் காலையில் இருந்து தோன்றியதை எல்லாம் லதா பொதுவாய் அந்நேரம் பேச துணை கிடைத்த ஆர்வத்தில் சித்ராவிடம் கூறி இருக்க, சித்ராவிற்கும் லதாவைக் காண அந்த நேரம் பாவம் என்றே தோன்றியது. அவர் நிலையும் புரிந்தது.

 

அதிகப்படியாய் தான் பேசி தன் கணவனைப் போல தான் தானும் என சித்ரா எண்ணி விட கூடாதே என்று பேசி முடித்த பின் தான் தோன்றி இருந்தது லதாவிற்கு.

 

இன்னும் உறவுமுறை வைத்தே இரு பெண்களும் அழைக்கவில்லை என்பதையும் லதா கவனித்திருக்க, தங்களின் இருப்பு அப்படி என்றும் நினைத்துக் கொண்டார்.

 

“பல்லவி! நீ வீட்டுல தானே இருக்க. இங்க அந்த சின்ன பொண்ணுக்கு என்ன தெரியும்? நீ வந்து பார்த்துக்கோ. சரியாகுற வரை மட்டும் தான்” என மீண்டும் சித்ரா கூற,

 

“சித்ரா! அதெல்லாம் வேண்டாம். நான் என்னவோ வாய் கொள்ளாம பேசிட்டேன். சும்மா இரு. நானே அவளுக்கு வேலைக்கு என்ன ஏற்பாடு பண்ணிருக்கான்னு ஈஸ்வர்கிட்ட கேட்க நினைச்சேன். நீ இது ஒரு வேலைனு குடுக்குற!” என்றார் லதா.

 

“இருக்கட்டுமே! என்ன இப்ப? உதவிக்கு யாராவது வேணும் தான் உங்களுக்கு. தம்பி எத்தனை நாள் கூட இருந்து பார்த்துக்கும்? அவருக்கும் வெளி இடத்துல வேலை இருக்கும் தானே!” என்று கேட்டு புன்னகைத்த அன்னையை இங்கே பல்லவி தீயாய் முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

சமையல் செய்யும் பெண்ணுமே காலையில் வந்து காலைக்கும் மதியத்துக்குமான வேலைகளை முடித்து வைத்துவிட்டு அடுத்த வீட்டின் வேலைக்கு என்று சென்றுவிடுமாம். பின் இரவு சமையலுக்கு தான் வருமாம். கஷ்டம் தானே அவர்களுக்கு என்று தான் சித்ரா நினைத்தது.

 

“சும்மா இரு சித்ரா. இவ மட்டும் என்ன பெரிய மனுஷியா?” என பல்லவியைக் கண்டு வாஞ்சயாய் புன்னகைத்த லதா,

 

“அதெல்லாம் வேண்டாம் டா. ஈஸ்வர்கிட்ட சொல்லி ஆபீஸ்ல எதாவது வேலையா பார்க்கலாம். நேத்தே கேட்க வேண்டியது. அதுக்குள்ள இப்படி ஆகிப் போச்சு!” என்றார்.

 

இப்படி சொல்லும் பெண்ணின் மேல் அத்தனை பரிதாபமும் சூழ தான் செய்தது பல்லவிக்கும். ஆனால் ஈஸ்வர் இவர் சொல்வது போல தனக்கு வேலையெல்லாம் தர போவதில்லை என்றும் புரிந்தது அதே நேரம்.

 

அவனிடமே சொல்லி சிறியதாய் வேறு எங்கேனும் கூட வேலையை கேட்டுக் கொள்ளலாம். அதை வரை இவரைப் பார்த்துக் கொள்ளலாம் தானே என முடிவிற்கு வந்திருந்தாள் பல்லவி.

 

காபியை குடித்துவிட்டு வைத்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள் கையில் லேப்டாப்புடன் இருந்தவனைப் பார்க்க, அவனும் இவளைப் பார்த்துவிட்டு,

 

“கிளம்பிட்டீங்களா?” என்றான் தன் வேலையையும் பார்த்துக் கொண்டே.

 

“ஹ்ம்!” என்றவன் உள்ளே சென்று வைத்து வர,

 

“பல்லவி தானே உன் பேரு?” என்று கேட்டு நிறுத்தியவன் பணத்தை கொடுக்கவும் அவனருகில் சென்று அதை வாங்கியவள்,

 

“இரண்டாயிரம் கூடவே ஐநூறு ரூபாய் தாளைக் கண்டு நூறு ரூபாயா இல்லையா சார்?“ என்றாள்.

 

“இல்லையே!” என்றான் அவனும்.

 

“ஹ்ம்! அப்போ இது உங்ககிட்ட இருக்கட்டும். நாளைக்கு நூறு ரூபா மட்டும் குடுங்க!” என்றாள். அவள் முகமும் என்னவோ யோசனையாய் இருப்பதை காட்ட,

 

“நீ கொண்டு போய்ட்டு மீதியை நாளைக்கு குடேன்!” என அவனும் சொல்ல,

 

“எதுக்கு அம்மாகிட்ட மாட்டி மொத்த காசையும் அவங்க வாங்கிக்கவா?” எதோ ஒரு எண்ணத்தில் அவனுக்கு சமமாய் அவளும் சொல்லிவிட,

 

“அம்மாக்கு தெரியாம வச்சிருக்கியா?” என்று அவன் கேட்ட பின் தான் தன் சொல்லை தானே உணர்ந்தாள்.

 

“ச்சோ!” என தலையில் கை வைத்துக் கொண்டவள்,

 

“அம்மா செலவு பண்ணிடுவாங்க. அதான் சார். பரவால்ல நூறு ரூபா தானே! நீங்களே அப்புறமா குடுங்க!” என்று சொல்லி அவனருகில் அதை வைத்துவிட்டு திரும்பப் பார்த்தவள்,

 

“ஆனா கண்டிப்பா குடுத்துடுங்க” என்றும் அவனிடம் மீண்டும் சொல்லிவிட்டு உள்ளே செல்ல, “ஹ்ம்ம்!” என தலையை ஆட்டிக் கொண்டான் கீர்த்திஸ்வரன்.

 

உள்ளே தினமும் அவள் காலையில் வந்து மாலை செல்வது வரை பேசி இருந்தார் சித்ரா.

 

“உதவி கேட்டு வந்த உன்கிட்ட நான் உதவி கேட்குற மாதிரி ஆகிடுச்சு. சாரிடாமா!” என்று லதா சொல்லி அவள் கன்னம் பற்ற,

 

“இருக்கட்டுமே!” என்றாள் புன்னகைத்த பல்லவி.

 

அவளை அத்தனை பிடித்தது பார்த்தமாத்திரத்தில் இருந்து லதாவிற்கு. அதுவும் கல்லூரி படிப்பை நிறுத்தி வேலை தேடும் சிறு பெண்ணை கவலையோடு கண்டவர் அவள் படிப்பை பின்னால் தொடரும் முடிவில் இருப்பதைக் கண்டு கொஞ்சம் நிம்மதியுற்றார்.

 

எதாவது அவளுக்கு என செய்திட வேண்டும் எனும் ஒரு எண்ணம் இன்னுமே வலுத்தது. பல்லவியின் குணம் அவள் அன்னையைக் கொண்டு வந்தது என்பதையும் சித்ராவுடன் பேசிப் பழகிய இந்த சிறு நேரத்தில் உணர்ந்து கொண்டார்.

 

அதன்பின் தான் கிளம்பும் நேரம் ஈஸ்வர் உள்ளே வர, அவனிடம் விஷயத்தை கூற,

 

“ம்மா! என்ன பண்றீங்க நீங்க? ஏன் நான் பாத்துக்க முடியாதுன்னு சொன்னேனா உங்ககிட்ட? அதுவும்…” என்றவன் வார்த்தைகளை நிறுத்தி,

 

“இவ மட்டும் பெரிய பொண்ணா உங்களுக்கு?” என்று முறைக்க, லதாவோடு சித்ராவுமே அவன் சொல்லில் மகளைக் கண்டு சிரித்தார். அதில் பல்லவி ஈஸ்வரை முறைக்க,

 

“உன்னை முறைக்குறா பாரு பல்லவி!” என்று லதா பார்த்தவர் சொல்லிவிட, ஈஸ்வரும் அவளைக் காண, பதறி விழித்தாள் லதாவை அவள்.

 

அதில் இன்னும் கனிவாய் அவளைக் கண்டு, “நானும் அப்படி தான் டா நினைச்சேன். அஞ்சலி ஸ்கூல் போகணும். உனக்கும் காலைல இருந்து எத்தனை போன் வந்துச்சுன்னு நான் பார்த்தேனே! பல்லவிக்கு ஒரு வேலை மட்டும் ஏற்பாடு பண்ணு. அதுவரை இங்க வந்து போகட்டும். பெருசா அவளுக்கு இங்க கஷ்டம் இல்லாம நான் பாத்துக்குறேன்!” என்று லதாவும் சொல்ல, மூவரையுமாய் பார்த்தவன் அவர்கள் முன் அன்னையிடம் வாதாட முடியாமல் அமைதியாகிவிட்டான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!