Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 5

அத்தியாயம் 5

 

“இது ரொம்ப தப்பு ம்மா! ஆபீஸ்ல வேலை கேட்டு வந்த பொண்ணை நீங்க வீட்டுக்கு வேலைக்கு கூப்பிட்டு இருக்கீங்க” என்ற ஈஸ்வர் முறைப்பில்,


Advertisement

 

“அப்ப கூட நீ வேலை தர்றேன்னு சொல்லலையே டா?” என்றார் அன்னை லதா.

Advertisement

Advertisement

 

“என்னம்மா பேசுறீங்க. நான் என்ன வேணும்னா குடுக்க மாட்டேன்றேன். ஸ்கூல் முடிச்ச பொண்ணுகிட்ட நான் என்ன வேலை குடுக்க?”

Advertisement

 

“அவ ஸ்கூல் முடிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு. ஸ்கூல் பொண்ணு இல்ல பல்லவி!” என்றார் லதாவும்.

 

“ஆனா காலேஜ் முடிக்கலையே ம்மா. அடலீஸ்ட் யூஜி முடிச்சிருந்தா கூட நான் எடுத்திருப்பேனே?” என்றான் மகனும்.

 

“நல்லா எடுத்த நீ. போ டா! அந்த பொண்ணு என்ன வேணும்னா காலேஜ் போகல. அவ நேரம்!” என்றவருக்கும் அத்தனை ஆதங்கம்.

 

“பல்லவி அம்மா சித்ரா சொன்னா. வேலைக்கு போய்ட்டு கரஸ்ல படிக்குறேன்னு பல்லவி சொல்லிச்சாம். நல்லா படிக்குற பொண்ணு போல. என்னால தான் படிக்க வைக்க முடியலைன்னு எவ்வளவு வருத்தப்பட்டா தெரியுமா சித்ரா?” 

 

“புரியுது ம்மா! நானும் அதை தான் கேட்குறேன். ஏற்கனவே படிக்க முடியாம வேலைக்கு ட்ரை பண்ற பொண்ணை இங்க ஏன் வர சொன்னிங்க? கஷ்டம் தான்னாலும் நானே மேனேஜ் பண்ணிக்குறேன்னு சொன்னேன்ல? இல்லைனா ஒரு நர்ஸ் கூட போட்டிருக்கலாம்” கீர்த்திஸ்வரன் சொல்ல,

 

“என்ன டா பார்த்துப்ப நீ? உனக்கு இங்க ஒரு கண்ணு அங்க ஒரு கண்ணுன்னு உன் கஷ்டம் புரியாதா எனக்கு? ரெண்டு பக்கமும் திருப்தி இல்லாம இருக்கனும். நர்ஸ் வந்தா என பிரீயா இருக்குமா சொல்லு? அதோட பல்லவி இங்க வந்து போய் இருந்தா நல்லாருக்கும்னு எனக்கும் தோணுச்சு அதான் சரினு சொன்னேன். ஒரு மாசத்துல சரியாயிடும்ல எனக்கு?” என்று லதா கேட்கவும்,

 

“ஹ்ம் கதை பேச ஆள் தேடுறீங்க?” என்று முறைத்தவன் அன்னை சிரிப்பில்,

 

“சரியாகனும். நடக்க சொல்லும் போது நடக்க ஆரம்பிக்கணும் ம்மா. அப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா சரியாகும்” என்றவன்,

 

“ஸ்கூல் முடிச்சு ரெண்டு வருஷம் ஆனாலும் ஸ்கூல் மட்டும் முடிச்ச செர்டிபிகேட் வச்சு நாம எந்த வேலையும் வாங்கி குடுக்க முடியாது. அப்படி பார்த்தாலும் அது அவ்ளோ ஒர்த்தா இருக்காது. வேணும்னா கரஸ்ல பண்ண சொல்லுங்க. நாம ஹெல்ப் பண்ணலாம். பார்ட் டைம் ஜாப் கூட வாங்கி குடுக்கலாம். பட் பார்ட் டைம் ஜாப்ல பெருசா எதுவும் பண்ணிக்க முடியாது” என்று நீளமாய் பேசியவன் அவள் தனியே சேமித்து வைக்கும் பழக்கத்தை நினைவில் கொண்டு வந்து,

 

“பட் அவளுக்கு ஹெல்ப்ஃபுல்லா தான் இருக்கும்!” என்று முடித்தான்.

 

“ஏதோ பண்ணு. ஆனா நல்லதா பண்ணு. எப்பவும் சொல்ற மாதிரி தான். உன் அப்பா மாதிரி மட்டும் இருக்காத!” என்று சொல்லி ஓய்வாய் சாய்ந்து கொண்டார் லதா.

 

அடுத்தநாள் காலை ஏழு மணிக்கு அழைப்பு மணி சத்தத்தில் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்த கீர்த்திஸ்வரன் சென்று கதவை திறக்க, அங்கே பல்லவி நின்றிருந்தாள்.

 

“நீ என்ன இந்நேரம்?” என்று கேள்வியாய் அவன் பார்க்க,

 

“அவங்களை பார்த்துக்க” என்றதில் இடுப்பில் கைவைத்து முறைத்து,

 

“எவங்களை?” என்றான்.

 

“உங்க அம்மாவை சார்!” என்று அவளுமே சலிக்காமல் பதில் சொல்ல,

 

“இதென்ன நீ ஸ்கூல் கேர்ள் மாதிரி இப்பவே அட்டண்டன்ஸ் போட்டுட்டு இருக்க?” என்றான் உள்ளே வர வழிவிட்டு நின்று.

 

“ஏன் மார்னிங் நடந்துடுறாங்களா? லேட்டா வந்தா போதுமா?” என்றவளை, ‘அது சரி!’ என்பதாய் தலையசைத்துப் பார்த்தவன்,

 

“அந்த நூறு காசை தான் வாங்க வந்தியோனு நினைச்சேன்!” என்று சொல்ல,

 

“அதுக்கும் தான் சார். எத்தனை நாள் எடுத்துப்பிங்க? நான் வட்டி கூட கேட்கல. இப்படி கொஞ்சம் கொஞ்சமா வாங்கினா நானே கூட செலவு பண்ணிடுவேன்!” என்று சொல்லி,

 

“நீங்க வெளில போகணும்னா போய்ட்டு வாங்க. ஆனா ஈவ்னிங் ஆறு மணிக்கெல்லாம் வந்துடுங்க சார். அப்போ தான் நான் கிளம்ப முடியும். அப்புறம் நைட்டு லேட்டாகிடும்!” என்றவள் தன் வேலையில் சரியாய் கணக்கை வைத்து சொல்ல, அஞ்சலி எழுந்து வந்தாள் அன்னை அறையில் இருந்து.

 

“அஞ்சலி இது…” என்று ஈஸ்வர் சொல்ல வர,

 

“பல்லவி அண்ணி தானே?” என்றாள் அஞ்சலி.

 

“அண்ணியா?” என்றவன் பார்த்த பார்வையில் பல்லவி அஞ்சலி பக்கம் திரும்பிக் கொண்டாள்.

 

சற்று முன் தான் அவன் அம்மாவை அவங்க என்று இவள் விளித்திருக்க சிறு பெண்ணின் இந்த அழைப்பு கொஞ்சம் சங்கடத்தை தான் கொடுத்தது பல்லவிக்கும்.

 

“அம்மா நேத்தே சொன்னாங்க ண்ணா! ரொம்ப தேங்க்ஸ் அண்ணி! நானே கூட பார்த்துப்பேன். எக்ஸாம் இருக்குன்னு அண்ணா தான் வேண்டாம் சொல்லிட்டாங்க!” என இயல்பாய் அஞ்சலி உரையாட,

 

“இட்ஸ் ஓகே அஞ்சலி. நீ போய்ட்டு வா!” என்றாள் புன்னகைத்த அஞ்சலி.

 

அஞ்சலியிடன் நேற்று இரவு அவ்வளவு பாடம் எடுத்திருந்தார் லதா. முதலில் அவளின் அக்கா என்ற அழைப்பை மாற்ற சொல்லி பல்லவி யார் என்பதோடு அவள் இங்கே தன்னைப் பார்த்துக் கொள்ள வரவிருப்பத்தையும் சொல்லி இருந்தார்.

 

இப்படி பல்லவியிடம் உரிமையாய் அழைக்க சொல்ல தைரியம் இல்லை. நிஜமாய் ஆசை தான் என்றாலும் அவளுக்கே தோன்றினால் அழைக்கட்டுமே என்று ஒரு எண்ணம் என்றால் மற்றொரு எண்ணம் தன் கணவன் என்ன சொல்வாரோ என்பது தான்.

 

இதுவரை இப்படி உறவினர்கள் என்று யாரையும் அவர் அருகில் சேர்த்தது இல்லை. அதனாலேயே அதிகமாய் யாரையும் அவர் பிள்ளைகளுக்கும் தெரிந்தது இல்லை.

 

பல்லவி வருவதை கூட கனவரிடம் மகனை தான் பேச சொல்லி இருந்தார் லதா.

 

நேற்று இரவே கீர்த்திஸ்வரனும் தந்தையிடம் சொல்ல, பெரிதாய் எந்த ஆட்சேபனையும் இல்லை அவரிடம். ஆனால் விட்ட வார்த்தைகள் தான் ஏராளம்.

 

“சும்மா இருக்குறதுக்கு இல்லாம இழுத்து வச்சிக்கிட்டதும் பத்தாதுன்னு இவளுக்கு தண்டத்துக்கு ஒரு வேலையாள் வேற. என்னவோ பண்ணுங்க” என்று சொல்லியதோடு சரி.

 

அதில் தான் கீர்த்திஸ்வரனும் சிந்தித்தவன், “ம்மா! இதுக்கு பணமெல்லாம் குடுத்தா தப்பாகிடும். பல்லவி என்ன நினைச்சு வர்றான்னும் தெரியல. கரஸ்ல படிக்குறதுக்கு கேளுங்க ஏற்பாடு பண்ணிடலாம்!” என்று சொல்லி இருந்தான்.

 

இப்பொழுது அஞ்சலி பள்ளி கிளம்ப செல்ல, ஈஸ்வரிடம் சொல்லிக் கொண்டு பல்லவி லதா அறைக்கு சென்றாள்.

 

அடுத்த சில மணி நேரங்களில் எல்லாம் அந்த வீட்டில் ஒவ்வொருவரும் வெளியில் செல்ல தயாராக ஆரம்பித்திருக்க, அஞ்சலி கிளம்பியதும் அன்னையிடமும் அண்ணனிடமும் சொல்லிக் கொண்டு சென்றுவிட்டாள்.

 

ஈஸ்வர் கிளம்பி வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்தான் தந்தைக்காக. அலுவலகத்திலேயே அத்தனை வேலைகள் மிச்சமிருந்தது.

 

நேற்றே செல்லவில்லை. இன்று போக நினைத்திருக்க, தன்னுடன் வரும்படி அழைத்திருந்தார் மகேஸ்வரன்.

 

காத்திருந்த பத்து நிமிடங்களில், “ஹாய் ஈஸ்வர்!” என்ற சத்தத்தில் வாசலில் அவன் திரும்பிப் பார்க்க அதற்குள் அருகில் வந்து அணைத்து,

 

“எவ்ளோ நாளாச்சு உன்னைப் பார்த்து” என்றவள் நெருக்கத்தில் இவன் தான் விலகும் நிலை.

 

“நீ எப்போ வந்த லாவண்யா?” என்றான் தன் சட்டையை ஒருமுறை பார்த்து நீவிக் கொண்டபடி.

 

“நான் நேத்து தான்…” என்று சொல்ல வந்த லாவண்யா அருகில் இருந்த அறை வாசலில் புதிதாய் நின்ற பெண்ணைக் கண்டு வார்த்தையை நிறுத்தி இருந்தாள்.

 

“வா லாவண்யா. சரியான நேரத்துக்கு தான் வந்திருக்க. உன் அப்பாவை பார்க்க தான் நானும் ஈஸ்வரும் கிளம்பினோம்!” என்று வந்தார் மகேஸ்வரன்.

 

பல்லவியும் அவர்கள் பேச ஆரம்பித்ததும் நகர்ந்து சமையலறை சென்று தண்ணீரை எடுத்துக் கொண்டு மீண்டும் லதா இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

 

பல்லவி உள்ளே சென்று மறையும் வரையுமே லாவண்யாவின் பார்வை அவளிடம் மட்டும் தான்.

 

“எனக்கு ஆபீஸ்ல ஒர்க் இருக்கு பா. நீங்க போய்ட்டு வாங்க!” என்று மகேஸ்வரனுடன் செல்ல பிடித்தம் இன்றி ஈஸ்வர் சொல்ல,

 

“முக்கியமான மீட்டிங் ஈஸ்வர்! நீ வந்து தான் ஆகணும்!” என்றார் மகேஸ்வரன்.

 

“யாரு அங்கிள் அது?” இவர்கள் பேச்சை எல்லாம் கவனிக்காதபடி லாவண்யா கேட்க,

 

“யாரு?” என்றவருக்கு லாவண்யா உள்ளே சென்றவளைக் காட்டவும்,

 

“அது வேலைக்கு வந்திருக்க பொண்ணு. சும்மா இல்லாம இவன் அம்மா கீழ விழுந்து காலை ஓடிச்சு வச்சிருக்கா!” என்று சொல்ல,

 

“ப்ச் ப்பா! என்ன பேச்சு இது? அதுவும் மத்தவங்க முன்னாடி?” என்று ஈஸ்வர் கேட்டது தான் தாமதம்.  

 

“மத்தவங்களா? யார் மத்தவங்க? நான் மத்தவங்களா? என்னை தானே நீ சொன்ன?” என அடுத்த நொடி கண்கள் சிவக்க அவன்முன் நின்றிருந்தாள் லாவண்யா.

 

“லாவண்யா! என்ன பேசுற நீ? அம்மாவை அப்பா பேசுற முறை சரியா? அது நானாவே இருந்தாலும் என் முன்னாடி கூட இப்படி பேச கூடாது. மரியாதை இல்லாம. ஐ ஹேட் தாட்!” ஈஸ்வர் சொல்லியவன்,

 

“வேலைக்கு வந்திருக்காங்கனு யார் சொன்னாங்க? ஹெல்ப்க்கு வந்திருக்காங்க” என்றான் தந்தையிடமும்.

 

“இப்ப இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா? எதுக்கு இந்த பேச்சு. கிளம்பு போகலாம்!” என்றார் மகேஸ்வரன்.

 

“நீங்க அம்மாவை போய் பார்த்துட்டு வாங்க முதல்ல!” என்றான் ஈஸ்வர்.

 

“அவ இங்க தானே இருக்குறா? என்னத்தை பார்க்க?” மகேஸ்வரன் சொல்ல,

 

“தென் ஓகே! நான் ஆஃபீஸ் கிளம்புறேன். யாரையும் பாக்குற மைண்ட்ல நான் இல்ல!” என்றவனை கேள்வியாய் பார்த்தாள் லாவண்யா.

 

லாவண்யா முன் மகன் இப்படி பேசுகிறானே என சுறுசுறுவென்று வந்த போதும் பல்லைக் கடித்து நின்ற மகேஸ்வரன்,

 

“இன்னைக்குன்னு இவ்வளவு பன்றான்!” என்ற முணுமுணுப்போடு லதா அறைக்குள் நுழைய, பல்லவி அப்பொழுது தான் லதாவை சாய்ந்து அமர உதவிக் கொண்டிருந்தாள்.

 

கணவனை அங்கே கண்டதும் லதா என்னவென்று பார்க்க, மகேஸ்வரன் லதா பல்லவியைப் பார்க்க, பல்லவி லதா மகேஸ்வரனைப் பார்க்க என சில நொடிகள் இப்படி தான் இருந்தது.

 

‘என்னவாம்?’ என்று தான் லதா எதுவும் பேசாம பார்த்திருந்தார்.

 

பாசமாய் பார்க்க வர எல்லாம் நினைக்கும் ஆளா தன் கணவன் என அவர் அறிவாறே! என்ன சொல்ல வந்திருக்கிறார் என ஆராயும் பார்வை தான் லதாவினுடையது.

 

‘இவளே சும்மா இருக்குறா. இவளுக்கு அவ சேவகம் பன்றா. நான் என்னனு கேட்க?’ என்று மகன் மீது தான் கோபம் அப்போதும் மகேஸ்வரனுக்கு.

 

“நான் ஆண்ட்டியை பார்க்க போகவா ஈஸ்வர்?” லாவண்யா கேட்க,

 

“உன் இஷ்டம்” என்றவன் தள்ளி வைக்கின்ற பாவம் லாவண்யாவிற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!