Skip to content
Post Views: 2,018
அத்தியாயம் 10.1
“டேய் ஸ்ரீகா, இந்தா இதை கொண்டு போய் உங்க சித்தாப்பகிட்ட கொடு” என்று கொல்லைப்புறத்தில் இருந்து குரல் கொடுத்தார் காதம்பரி.
Advertisement
“சித்தி நீ இருந்தாலும் ரொம்ப தான் என்னை வேலை வாங்கிற” என்று கையில் துடப்பத்தோடு அங்கே சென்றார்.
“டேய் மீன் கழுவி எடுத்துட்டேன், அதை கொடுத்தா அவர் மாசாலா தடவி வச்சிடுவார். நான் அடுத்து இந்த இறாலை சுத்தம் செய்யனும்.. எழுந்து திரும்ப உட்கார வேண்டாம்னு கூப்பிட்டா.. இது எல்லாம் ஒரு வேலையா?”
Advertisement
Advertisement
“வீடு பெருக்க சொன்ன இல்ல.. அதைசெஞ்சிட்டு இருக்கப்ப நடுவுல கூப்பிட்டா?”
“டேய் ஏழு மணிக்கு சொன்னேன்.. இப்ப மணி எட்டு.. இந்த சின்ன வீட்டை பெருக்க ஒரு மணி நேரமா?”
Advertisement
அதற்குள் சித்தப்பாவே வெளியே வந்து மீனை எடுத்து கொண்டு உள்ளே சென்று விட்டார்.
சித்தியின் பாச பார்வையில் ஸ்ரீகாந்த் மீண்டும் உள்ளே வந்து வீட்டை பெருக்குவதை தொடர்ந்தார்.
இன்று காதம்பரி கேசவனின் திருமண நாள். அதற்காக சிவங்கரி, மிருதுளா குடும்பத்தை மதியம் உணவிற்கு அழைத்திருந்தார்கள். கூடவே முத்தாயியையும் அழைத்திருந்தார் காதம்பரி. கல்லூரி முடித்து வீடு திரும்பியதும் இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வாள். கலகலப்பாக பேசும் பெண்ணை இவர்களுக்கு மிகவும் பிடித்து போகவே, அன்போடு இவர்கள் உறவும் பலப்பட்டது என்றே சொல்லலாம்.
ஸ்ரீகாந்த் பெருக்கி கொண்டிருக்கையில் அழைப்பு மணி அடிக்கவே “யாரு “ என்று கேட்டுக்கொண்டே கதவு திறந்தார்.
அழகான மயில் கழுத்து நிற குர்தா, வெளிர் நீல நிற ஜீன்ஸ் என்று நின்று கொண்டிருந்தாள் முத்தாயி.
கண்ணியமாகவும் அதே சமயம் மாடெர்னாகவும் இருந்தாள் பெண்.
‘வாம்மா’ என்று உள்ளே அழைத்தார்.
அவ்வபோழுது பஸ் ஸ்டாப்பில் இவரை பார்த்தால், அழைத்து கொண்டு ஆபிஸில் விட்டுவிட்டே செல்வாள். இருவருக்கும் இடையில் அழகிய நட்பு ஏற்பட்டிருந்தது.
“எங்க சார் நர்ஸ் அம்மா?”
“பின்னாடி மீன் கழுவிட்டிருக்காங்க… நீ வந்து உக்காரு “ என்று அவளை நீளிருக்கையில் அமரும் படி கூறினார்.
“நீங்க போய் உங்க வேலைய கண்டின்யூ பண்ணிக்கோங்க சார், நான் பார்த்துகிறேன்” என்றாள் அவர் கையில் இருந்த தொடப்பதை காட்டி.
‘டன் கணுக்குல குசும்பை கூடவே வச்சிருப்பா போல’ என்று முனங்கி கொண்டே உள்ளறைக்குள் சென்று விட்டார்.
“வாம்மா வாயாடி..” என்று பின் பக்கத்தில் இருந்து உள்ளே வந்தார் காதம்பரி. அதே சமயம் சமையல் அறையில் இருந்து வெளியே வந்த கேசவன், தலை அசைப்புடன் முத்தாயியை வரவேற்றார்.
“இந்த அழகான அன்பான காதல் ஜோடிக்கு இந்த முத்துவின் திருமண நாள் வாழ்த்துக்கள்” என்று கூறி இருவரையும் சேர்த்து நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள்.
“இன்னிக்கு மதியம் தானே சித்தி எல்லாரையும் கூப்பிடறதா சொன்ன?” என்று சித்தியின் காதை கடித்தார் ஸ்ரீகாந்த்.
பட்டணத்தில் இருக்கிறவர்கள் எல்லாரும் அழைத்த நேரத்திற்கு முன்பு பெரும்பாலும் வரமாட்டார்கள். ஆள் மாடர்ன் ஆக இருந்தாலும் பழக்க வழக்கம் பட்டிக்காடு தான் என்று மனதிற்குள் நினைத்து கொண்டார்.
அவர் தர்ம சங்கடமாக முத்தாயியை பார்க்கவும்,
“நான் எல்லாம் தப்பா நினைக்க மாட்டேன் நர்ஸ் அம்மா. விருந்துக்கு அழைச்சவங்க வீட்டுக்கு சாப்பிடற நேரத்துக்கு சரியா போற பழக்கம் எங்களுக்கு இல்லை. முன்னமே போய் முடிஞ்ச உதவியை செய்யணும். இதுதான் எங்க வழக்கம்.. நீங்க வெளிய சாப்பாடு சொல்லி இருந்தாலும் பரவாயில்லை. நீங்களே சமைக்கிறதா சொன்னீங்க இல்ல, அதான் நான் காலையிலே வந்துட்டேன்”
இப்பொழுது ஸ்ரீகாந்த் தான் சங்கடமாக நின்றார். கேசவன் இவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலே அடுப்படிக்குள் நுழைந்து விட்டார்.
“நீங்க ரெண்டு பேரும் இன்னும் குளிக்கலையா? சீக்கிரம் போங்க.. நான் கேசவப்பாக்கு ஹெல்ப் பண்றேன்” என்று அடுப்படிக்குள் சென்றுவிட்டாள்.
“என்ன சித்தி சித்தப்பாக்கு பேச்சு வராதுன்னு இந்த பொண்ணுக்கு தெரியாது போல.. அடுப்படிக்குள்ள போகுது?”
“அது எல்லாம் நல்லா தெரியும்.. டெய்லி சாயங்காலம் வந்து கொஞ்ச நேரம் பேசி இருந்துட்டு தான் போவா”
“ஓ”
உள்ளே சென்றும் முத்தாயியின் சலசல பேச்சு கேட்டுக்கொண்டுதான் இருந்தது.
இதுவரை சித்தாப்பாவுடன் உரையடியாது போல இவருக்கு நியாபகமே இல்லை, ஆனா இந்த பெண் இப்படி சர்வ சாதாரணமா பேசுதே என்று நினைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.
காலை உணவிற்கு பூரியும் சன்னாவும். சன்னா ரெடியாக இருந்தது. பூரிக்கு மாவை எடுத்தார். அதை அவரிடம் இருந்து வாங்கி முத்தாயி பிசைந்து வைத்தாள்.
மீனிற்கு அவர் மசாலா தடவி எடுத்து வைத்தார். பின் குழம்பு வைப்பதற்காக பூண்டு வெங்காயத்தை எடுத்தார்.
“அதை கொடுங்க நான் உரிக்கிறேன்” என்று அதையும் வாங்கி மேடை மீது ஏறி அமர்ந்து கொண்டாள்.
அதற்குள் குழம்பிற்கு கேசவன் அரைத்து எல்லாம் தயார் செய்து குழம்பை திரக்கி விட்டார். காதம்பரியும் ஸ்ரீகாந்த்தும் கிளம்பி வருவதற்குள் மீன் குழம்பு கொதித்து கொண்டிருந்தது.
“நீங்களும் போய் புது டிரஸ் போட்டுக்கோங்க கேசவப்பா..”
அப்புறம் போட்டுக்கொள்வதாக செய்கை காட்டினார்.
“அப்புறம் வேணா திரும்பவும் மாத்திக்கலாம்… அங்க பாருங்க உங்க ஆளு எப்படி கும்முனு ரெடி ஆகி வந்திருக்காங்க.. அவங்களுக்கு மேட்சா நிக்க வேண்டாம்.. போங்க போங்க” என்று அவரை வெளியே தள்ளி விட்டாள்.
“நான் சொல்லும் போது கேட்டீங்களா? வாங்க நான் சட்டையெடுத்து கொடுக்கிறேன்” என்று காதம்பரியும் அவர் பின்னே சென்றார்.
முத்தாயி அடுப்பில் எண்ணெயை வைத்து, பூரிகளை சின்ன சின்னதாக தேய்த்து பொரித்து எடுத்து வைத்தாள்.
மூச்சை இழுத்து விட்டு வாசனையை நுகர்ந்தாள்.
“ஏம்மா பூரிக்கு எல்லாமா வாசனை வரும்?” என்று கேட்டுக்கொண்டே அடுப்படி உள்ளே வந்தார் ஸ்ரீகாந்த்.
“அது இல்ல லட்சுமி சார்.. வறுத்த முந்திரி திராட்சை வாசனை வர மாதிரி இருந்துச்சு”
அவரும் மூச்சை உள்ளிழுத்து நுகர்ந்து பார்த்தார்.
“மீன் குழம்பு வாசனை தான் வருது”
“அது ஸ்டராங் பிளேவர். முதல்ல அது தான் வரும், அதை பில்டர் பண்ணிட்டு மோர்ந்து பாருங்க சார்.. அப்பத்தான் வேற வாசனை கண்டுபிடிக்க முடியும்” என்றாள் சீரியசாக.
இந்த பொண்ணு நிஜமா சொல்லுதா? இல்ல நம்மளை கிண்டல் செய்யுதா புரியாமல் ‘ங்கே…’ என்று விழித்து நின்றார்.
“கண்டிப்பா வருது சார்.. கூடவே வெல்லம் வாசனையும் வருதே..”
‘அது எப்படி?’ என்று அவளை பார்த்தார்.
அதற்குள் தயாராக வந்த தம்பதியினர் இவர்களை சாமி கும்பிட அழைத்தார்கள். சாமிக்கு சக்கரை பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்தார் கேசவன்.
“பார்த்தீங்களா சார்?” என்று கண் காமித்தாள் முத்தாயி.
‘மூக்குல எல்லாம் பில்டர் வச்சிருக்குதே? ஜாக்கிரதையா தான் பழகணும்’ என்று நினைத்து கொண்டு சாமி கும்பிட்டார்.
காலை உணவை இவர்கள் நால்வரும் சேர்ந்து உண்டார்கள். பின் மதிய சமையலை சேர்ந்தே செய்தனர்.
error: Content is protected !!