Skip to content
Post Views: 1,668
நதி 24
இரவில் மனதை அழுத்திய பாரமெல்லாம் தீனாவின் அரவணைப்பால் யமுனா கடந்து வந்திருக்க.. இதோ எப்போதும் போல தெளிவான முகத்தோடு கண்விழித்திருந்தாள்.
Advertisement
கோவிலுக்கு செல்வதோடு ஜெகதீஷூக்கு அன்று கண்டிப்பாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதை நேற்று அவன் பேசும் போது சொல்லியிருக்க அதற்குள் எதாவது சமைத்து விடலாம் என்ற எண்ணத்தில் நேரமே எழுந்திருந்தாள் யமுனா.
நேற்றுவரை சமையலுக்கு உதவ சென்றிருந்தாலும்.. அடுப்பில் எந்த வேலையும் செய்ய விடாமல் மேல் வேலை மட்டுமே வாணி பார்க்க வைத்ததால், முதல் நாள் அந்த வீட்டு அடுப்பை தொட்டு புலங்குவதை மனதில் வைத்து குளித்த பின் சமையலை ஆரம்பிக்க எண்ணி குளியலறைக்குள் புகுந்திருந்தாள்.
Advertisement
Advertisement
போகும் அவசரத்தில் கவனத்தில் பதியாமல் போன கூடத்தை தாண்டி வெளியே படுத்திருந்த ஜெயசீலன்.. தலையை துவட்டியபடி வரும் போது பட்டுவிட,
‘வாசல் தெளிக்கற சாக்குல.. சாணிய கரச்சு மூஞ்சில ஊத்துவோமா..?’ என யோசனையோடு அவரையே பார்த்திருந்தாள்.
Advertisement
அவளின் எண்ணத்தை கண்டு கொண்டது போல அங்கு வந்த தீனா,
“பாப்பா.. உன் வால அடக்கி அமைதியா இருடீ. நேத்து வர சொந்தக்காரங்க இருந்ததால பிரச்சினை வரல.
இன்னைக்கு ஏதாவது பண்ணி அலப்பரைய கூட்டிடாதே..” என கொஞ்சலாக சொல்ல,
“உங்கள வச்சுக்கிட்டு ஒரு வம்பை கூட நிம்மதியா வளக்க முடியல.. இதுல புள்ள பெத்து வளத்துட்டாலும்..” என புலம்பி உதட்டை சுழித்து காட்டி சென்றவளை கண்டு ‘ஞே..’ என விழித்தான் தீனா.
‘என்ன லாஜிக் இல்லாம பேசறா..? நா சொன்னதுக்கும் அவ பேசறதுக்கும் என்னடா சம்மந்தம்..
பாப்பான்னு பாத்தா பெரிய மனுஷி மாதிரி அட்வைஸ் பண்ணறா..!
பெரிய பொண்ணுன்னு நினச்சு இப்படி சொன்னா.. சின்ன புள்ள கணக்கா உலறிட்டு போறா..!
எப்பா.. இவள என்னன்னு நா சமாளிக்க போறேனோ..?’ என மனதில் புலம்பிக்கொண்டவன், அவளுக்கு உதவும் பொருட்டு அவளோடு சமையலறைக்கு வந்தான்.
அவனின் வரவை கண்டவள், “எனக்கு எதுக்கு காவல். போய் உங்க தானைய தந்தைய காப்பாத்த காவல் இருங்க..” என முகத்தை திருப்ப,
“பாப்பா.. என்னடாம்மா.. ஆரம்பத்துலையே பிரச்சினை வேணாமுன்னு தானே சொல்றேன்.. அவரை நானே பார்த்துக்கிறேனே..” என்றான் நைச்சியமாக.
“இந்தா.. இந்த தாஜா பண்ணற வேலைய விட்டுட்டு கிளம்புங்க முதல்ல இங்கிருந்து..” என யமுனா கடுப்பாக சொல்ல,
“பாப்பா..” என இழுத்தவனின் கையில் பாலை திணித்தவள்,
“முதல் தடவை இங்கே தனியா சமைக்கறேன். வம்பு பண்ணாம போய் இந்த பாலக்குடுச்சிட்டு ஜெகா எழுந்து வந்தா குளிக்க அடுப்புக்கு தணலை போட்டுவிடுங்க..” என்றுவிட்டு வேலையில் மூழ்கினாள்.
அவளின் பரபரப்பான வேலைக்கு நடுவே சட்டென அவளை பின்னிருந்து அணைத்தவன் அவசரமாக பின்னிருந்தே அவளின் கன்னத்தில் இதழ் பதித்து அதே வேகத்தில் விலகினான்.
அவன் செயலில் திடுக்கிட்டு பார்த்தவளை கண்டு கண் சிமிட்டியவன், “எங்க வீட்டுல பஸ்ட் டைம் சமைக்கற உனக்கு ஒரு சின்ன அப்ரிஷியேஷன்..” என்றான் கள்ளப்புன்னகை சிந்தி.
“சேட்ட..” என முனங்கியவள், கையிலிருந்த கத்தியை காட்டி, ‘ஓடுங்க இங்கிருந்து..’ என ஜாடையாய் மிரட்ட,
“கொடுத்த அப்ரிஷியேஷனுக்கு எங்கள மாதிரி இல்லன்னாலும் ஒரு குட்டி காம்ப்ளிமெண்ட் கூட கிடையாதா..?” என்றான் ஏக்கமாய்.
“ஓ.. கொடுக்கலாமே..” என உதட்டை ஈரம் செய்து புன்னகையோடு அவள் அவனை பார்க்க,
அவள் செய்கையில் விழிகள் மின்ன, “ம்ம்.. சீக்கிரம் எல்லாரும் வர்றதுக்குள்ள..” என கண்ணை மூடி தன் இதழை காட்டி தீனா அவளிடம் நெருங்கினான் ஆசையாய்.
அருகிருந்த கரண்டியை கையில் எடுத்தவள் தன் உயரத்திற்கு வாகாய் நின்றிருந்தவன் தலையில் லேசாக அடிக்க அதிர்ந்து விழித்தவன், “அடிப்பாவீ..! ஏன்டீ..?” என்றான் தலையை தடவியபடி சோகமாய்.
“போய் வேலைய பாருங்கன்னா.. என்னையும் சேத்து வேலய பாக்க விடாம என்ன சேட்டை இது காலங்காத்தால.
இங்கே நம்ம மட்டுமில்ல. நியாபகம் இருக்கட்டும்..” என யமுனா முறைப்போடு சொல்ல,
“போடீ.. நைட்டும் எதாவது தடங்கல். சரி, கொஞ்சமே கொஞ்சம் எனர்ஜி ஏத்திக்கலாமுன்னா.. அதுக்கும் நீ ஒத்துழைக்க மாட்டிங்கறே.. நா கோபமா போறேன்.. போ..” என சிறுபிள்ளையாய் சிணுங்கி காலை உதைத்துக்கொண்டு செல்பவனை கண்டு எழுந்த புன்னகை பின் அப்படியே வலி நிறைந்ததாய் மாறியது.
‘வேணாம் தயா.. மறுபடியும் நீங்க உங்க ஃபீலிங்ச காட்ட முடியாம.. கட்டுப்படுத்தவும் முடியாம.. அவஸ்த்தை படுறத பார்க்க என்னால முடியாது..’ என நினைத்து அவன் சென்ற வழியை பார்த்திருந்தவள் தன்னை மீட்டுக்கொண்டு வேலையில் ஆழ்ந்தாள்.
சகுந்தலா எப்போதுமே பொறுமையாக எழுந்து அரைகுறையாக ஒரு சமையலை செய்து தான் பழக்கம்.
நேற்று மண்டபத்திலிருந்து வரும் போதே கறி விருந்து என்பதால் குடியையும் சேர்த்தே துணைக்கு கூட்டி வந்திருந்த ஜெயசீலன்,
“இங்கன பாரு.. இவங்க உன்ற புள்ளைய கொஞ்சறத பாத்துபோட்டு நாளப்பின்ன எல்லா இப்புடியே இருக்குமின்னு கனாக்காணாத..
அதுகளுக்குன்னு ஒண்ணு வந்தா இவன செல்லக்காசா கூட மதிக்க மாட்டாங்க..
அதுக பிரிஞ்சு இருந்து புள்ளன்னு ஒண்ணு இடையில வராம இருக்க வர தே உனக்கும் உன்ற புள்ளைக்கும் எல்லாங்கிடைக்கும்.. பாத்துக்கோ..” என்றவர்,
மேலும் பேசி குழப்பியதில், ‘என்ன செய்வது..?’ என்ற யோசனையில் இருந்தவரிடம் இரவு கண்ணை கசிக்கொண்டு, “ம்மா.. தூங்கனும்..” என வந்து நின்ற ஜெகதீஷிடம், “உள்ளற போய் படுடா..” என்றிருந்தார்.
இரண்டு நாள் கழித்து தன்னிடம் சேர்ந்த நிம்மதியோடு உடல் அசதியில் நொடியில் உறங்கியிருந்தான் ஜெகதீஷூம்.
ஆண் பெண் உறவு.. அவங்களுக்கான தனிமை.. பற்றிய புரிதல் இல்லாத வயது தானே அவனுக்கும்..!
‘முதல் நாள் செய்ததற்கு யமுனாவின் பதிலடி போல இதற்கும் எதாவது செய்திடுவாளோ..?’ என்ற பயத்தோடே இரவு நெடுநேரம் யோசனையில் கழித்திருந்த சகுந்தலா எழும் போது நேரம் ஏழை தொட்டிருந்தது.
‘அவனுக்கு ஸ்கூலூ இருக்கே.. இம்புட்டு நேர தூங்கிட்டேனே.. இனி என்னத்த செஞ்சு அவன அனுப்ப..?’ என யோசித்துக்கொண்டே வேகமாக அவர் எழுந்து வரும் போதே பெரும்பாலான சமையல் வேலை முடிந்திருந்தது யமுனாவின் வேகத்தில்.
அதை மனதுக்குள் மெச்சிக்கொண்டாலும் முகத்தை சுழித்துவிட்டு அவர் வெளியேற, “ரொம்பத்தா.. இருங்க வர்றேன்..” என நமட்டு சிரிப்போடு வேலையை தொடர்ந்தாள்.
ஜெகதீஷ் எழுந்து அவனாக அவனின் வேலைகளை முடித்துக்கொண்டு வரவும்.. யமுனா அவனுக்கான காலை டிப்பனை ப்ளேட்டிலும், மதியத்திற்கான உணவை அவனுக்கான டப்பாவில் அடைத்து கூடத்தில் கொண்டு வந்து வைத்தாள்.
தீனா உறவினர்கள் வந்த போது கொண்டு வந்திருந்ததில் அவனின் விருப்பம் கேட்டு ஸ்நோக்ஸ் பாக்ஸில் நிரப்பி வைத்தான்.
ஆசையாய் அமர்ந்து உண்டு முடித்தவன் எழுந்து தட்டை கிச்சன் சிங்கிள் வைத்துவிட்டு, “தேங்க்ஸ் அண்ணி.. சாப்பாடு செம டேஸ்ட்..” என்றான் உற்சாகமாக.
“தேங்க்ஸ்ஸா..! நா என்ன சொன்னேன்..?” என்று போலியாய் யமுனா முறைக்க,
அசட்டு புன்னகையோடு, “தேங்க்ஸ் வாப்பஸ்.. அண்ணி. ஆனா சாப்பாடு நல்லா இருக்கே அப்ப எப்படி அப்ரிஷியேட் பண்ண..?” என ஜெகதீஷ் கேட்ட விதத்தில்,
காலை அவள் கண்ணழகனின் சேட்டை கண் முன் வந்து போக அதே நினைவோடு புன்னகைத்தவள்,
“அண்ணி அம்மா மாதிரி தானே..? உங்க அம்மா உனக்கு பிடிச்சத செஞ்சா என்ன செய்வே..?” என்றதும்,
“இப்படி செய்வேன்..” என்றவன் எதையும் யோசிக்காது.. அவளை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு விலக, ஒரு நொடி ஜர்க் ஆன போதும் பிள்ளை மனதின் கள்ளமில்ல தன்மையில் அவன் செய்கையை புறம் தள்ளியவள்,
அவன் தலைமுடியை தாயின் பரிவோடு கோதிவிட்டு, “ஸ்கூலுக்கு லேட் ஆகலையா..? கிளம்பு..” என சொல்ல,
“ஸ்கூல் பஸ் வர இன்னும் டென் மினிட்ஸ் இருக்கு அண்ணி..” என்றவன் வெளியே வந்து தனது ஸூவை எடுத்து மாட்டி தயாராகி யமுனாவிடமும் தீனாவிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான்.
அன்பால் பரிமாறப்பட்ட அந்த அணைப்பும் முத்தமும் யமுனாவிற்கு பெரிதாக தோன்றவில்லை தான்.
ஆனால் அது ஜெயசீலன் கண்ணில் எப்படி பதியும்..?! அதன் விளைவு..!!!
error: Content is protected !!