Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மண் கொடுத்த மாணிக்கம் – 3

அத்தியாயம் – 3
பொன் மாலை பொழுது என்பார்களே அத்தைகைய பொழுதில், மாலை வேளைக்கே உரிதான குளிர் காற்று மேனியை தழுவி இன்னும் அப்பொழுதை ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது.இந்த அழகான வேளையில் வெகு வருடங்களுக்கு பின் மீனாவின் கணவன் வழி சொந்தம் சிலர் வந்திருந்தனர்.


Advertisement

பல வருடங்கள் சென்று கணவன் வீட்டு உறவுகளைப் பார்க்கிறாள் அல்லவா.அவளுக்கும் அவர்கள் தாய் வழி உறவுகள் தானே,அதனால் மீனாவுக்குமே கொஞ்சம் நெகழ்ச்சியான தருணமாக இருந்தது.
அனைவரும் மீனாவிடம் பேசி கொண்டிருக்க,லட்சுமணன் அருகில் அமர்ந்திருக்கும் தனது அத்தை வழி மாமனிடம் பேசி கொண்டிருந்தான்.பேசும் அவர்களை பார்த்தவாறு வள்ளியப்பன் தனது கால்களைக் கொஞ்சம் வேகமாக ஆட்டி கொண்டிருந்தார்.அவரது தவிப்பும், பதட்டமும் சாலாவுக்கு வித்தியாசமாகப் பட்டது.அவளும் கொஞ்ச நேரமாகப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்.

Advertisement

Advertisement

சற்று முன் இவர்களது வரவை உணர்ந்து இருவரையும் உள் அறையில் இருக்க சொல்லிவிட்டார் வள்ளியப்பன்.அவருக்கு பக்கவாட்டில் உள்ள அறையில் தான் மகளும்,மனைவியும் இருந்தனர். இருவரும் அங்குள்ளவர்கள் பார்வையில் படாத வண்ணம் ஜன்னல் வழியே இங்கு நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர்.
“ஆத்தா!”, மெல்லிய குரலில் தாய்யை அழைத்தாள் சாலா.

Advertisement

அவரும் அதே குரலில், “என்ன சாலா?”
“யாருக்கு கல்யாணம் பேச போராக லட்சுவுக்கா? இல்ல நம்ப ஐயாவுக்கா?” என்றதும் கண்ணாத்தாள் திடுக்கிட்டு மகளைப் பார்த்தவள்.
“ஏண்டி சாலா?” பெரும் மிரட்சியை கண்ணில் தேக்கி பாவம் போல் கேட்ட அன்னையை பார்த்துச் சிரிப்பு பொங்கி கொண்டு வந்தது.
அவளது சிரிப்பை கண்டு எரிச்சலாக,”போடி”
“ஆத்தா! ஐயா பதட்டமா இருந்தா தானே கால் ஆட்டி வைப்பாரு? அங்க பாருக ” என்றதும் தனது கணவனைப் பார்க்க.அவர் வேகமாகக் கால்களை ஆட்டி கொண்டிருந்தார்.
“ஆமா? ப்ச்! லட்சுவும், அவருக்கு மகன் தானே அந்த பதட்டமா இருக்கும்.எனக்கும் ஒரு மாதிரியா தான் இருக்கு” என்ற தாய்யை பார்த்து தலையை இடமும் வலமும் ஆட்டி கொண்டாள் சாலா. தாய் தந்தையை போல் சாலாவுக்கு எந்த எண்ணமுமில்லை போலும் லட்சுவை கொண்டு சிறு ஆச்சிரியம், பிரமிப்பு மட்டுமே.அதுவும் இந்த பிரமிப்பு அவனது நிறத்தை கொண்டு, குணத்தை கொண்டு கூட இல்லை
இவர்கள் இருவரும் அவரவர் எண்ணத்தில் நிற்கும் போதே!..
“மீனா அப்போ வந்த பேச்சை தொடங்கலாமா? வந்து இத்தினி நேரம் புடிக்குது சட்டுனு பேச்சுக்கு வாக”, வயதில் மீனாவின் பெரியம்மா முறை ஒருவர் பேச்சை தொடங்கி வைத்தார்.அவளோ அங்கே ஆண்களுடன் அமர்ந்திருந்த வள்ளியப்பனை பார்த்தாள். அவளது பார்வை சென்ற திசையைப் பார்த்த அவர்,“உன்ன பேச சொன்ன அங்கன என்ன வேடிக்கை?”
“பெரியாத்தா நான் இந்த நிலைமைக்கு வரத்துக்குக் காரணம் வள்ளி அண்ணேதேன். எனக்கு நல்லது கெட்டது பார்த்து எடுத்து வைக்கிறது அண்ணே தான், அதனால இந்த வீட்டு சார்பா அண்ணே முன் நின்னு பேசுவாக”,அவருக்கும் அது தெரியுமே மீனா சொல்வது சரியென பட.
“அதுவும் சரித்தேன் அப்புறம் வள்ளியப்பா! நேரா செய்திக்கு வரேன். மீனா எல்லாம் சொல்லிருக்கும், இருந்தாலும் நான் இன்னொருக்கா சொல்லிடுறேன். சின்ன வயசுல நாகம்மையுக்கும், லட்சுமணனுக்கும் போட்ட முடிப்பு.சோமுவை கொண்டு அப்படியே நின்னு போச்சு.இப்போ பொண்ணு படிப்பு முடிச்சு நிக்குது, அதேன் கல்யாணம் பேச வந்திருக்கோம் என்ன சொல்றீக?”
“பையனுக்கு விருப்பம்னா ஆக வேண்டியதை சிறப்பா பண்ணிப்புடலாம்” என்றவர் பார்வை தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் லட்சுவை தீண்ட அவனோ இவர்கள் பேச்சை கேட்டு பெரும் யோசனையில் இருந்தான்.
“என்ன மாப்பிள்ளை? என்ன யோசனை?” பெண்ணின் தகப்பன்.லட்சுமணனின் தந்தை வழி அத்தையின் கணவன் கேட்க. உண்மையில் அவர்கள் பேசுவதை கவனம் கொள்ளவில்லை.இப்போது அவரது பேச்சில்  தெளிந்தவன்.
” ஆஹா! என்ன மாமா?”
“சரியா போச்சு போக, இப்பவே ஆகாயத்துல கோட்டை கட்டுறீகளா என்ன?” என்றதும் சுற்றி இருந்த உறவுகள் கேலி பேசி சிரிக்க.அதில் அவனும் புன்னகைத்துக் கொண்டான்.
“உங்களுக்கும், உங்க ஐயாவோட தங்கச்சி மக நாகம்மையுக்கும் கல்யாணம் பேச வந்துருக்கோம்.சின்ன வயசுல வச்ச முடிப்பு தானே. இப்போ உறுதி செஞ்சு தேதி குறிச்சிடலாம்னு எண்ணம், நீக என்ன சொல்றீக?” என்றதும் லட்சுமணன் தனது தாய்யை பார்க்க.
மகனது பார்வை உணர்ந்து, “முன்னுக்கே சொல்லிருந்தாக தம்பி,அதேன் வள்ளி அண்ணனை வர சொல்லிருந்தேன்.நேத்திக்குதேன் அண்ணனுக்கும், மதனிக்கும் சங்கதி சொல்லி உங்கிட்ட பேச சொல்லிருந்தேன் நீ வேலையா இருந்துட்ட பேச தோது படல தம்பி.”
“ஓ!” என்றவனைப் பெண்ணின் தந்தையும், தாயும் கொஞ்சம் ஆர்வமாகவே பார்த்தனர்.ஓர், இரு நிமிடங்கள் யோசித்தவன் பின்பு அனைவரையும் நிமிர்ந்து பார்த்து,
“எல்லாரும் என்னை மன்னிக்கணும், எனக்கு நாகம்மை இப்பவரை நல்ல தோழி அதைத் தாண்டி எதையும் யோசிக்கல.அதுவும் போக சின்ன வயசுல பேசி வச்சதை பத்தி இத்தனை நாள் எதுவுமே சொல்லலையே”இத்தனை நாள் இல்லாத உறவு இன்று புதுப்பிக்க ஏன்? வந்தது என்பதை இத்தனை நாசுக்காக யாரும் கேட்க முடியாது என்று வள்ளியப்பன் எண்ணி வைக்க..
அவனது கேள்வியில் வந்த உறவுகள் எல்லாம் அமைதியாகி போக.பெண்ணின் தந்தை மட்டும் லட்சுவை சமாளிக்கும் பொருட்டு, “எங்களுக்கு உங்க ஐயா செஞ்சதை எண்ணி பேச தயக்கம்.இப்போ நீக நாகம்மை கிட்ட பழகுறதை வச்சு கேட்டு பார்ப்போம்னு எண்ணம், நாகம்மை கிட்ட கேட்டோம் அதுவும் பேசி பார்க்க சொல்லுச்சு, அந்த நம்பிக்கையில தான் வந்தோம்” என்றவரை பார்த்து சிறு புன்னகையை கொடுத்தவன்.
“கேட்டதுல தப்பில்லை மாமா, உரிமை இருக்க போயி தானே பேச்சு வருது. இதெல்லாம் சகஜம் தானே, ஆனா எனக்கு அந்த எண்ணமில்லை மாமா”
இப்படி தேங்காய் உடைத்தது போல லட்சுமணன் பேசுவான் என்று மீனாவே எதிர்பார்க்கவில்லை.அவனுக்குள்ளும் நாகம்மை பற்றிய எண்ணம் இருக்குமோ? என்று தான் அவர் திருமண பேச்சை தொடங்கியது,ஆனால் மகன் இப்படிச் சொன்னதும் கொஞ்சம் பதட்டமாக வள்ளியை பார்க்க.அவரோ கண்ணை மூடி மீனாவை சமாதானம் செய்தார்.
லட்சுவின் பேச்சில் மீனாவுக்கு பதட்டம் கூட வள்ளியப்பனுக்கு பதட்டம் குறைந்தது போலும் அவர் நிதானமாக இருந்தார்.
“நாங்க இதை எதிர்பார்க்கல” நாகம்மையின் தாய் வருத்தமாகச் சொன்னாள்.
“அயித்த மனசு நோக செஞ்சிருந்தா மன்னிச்சு வைங்க. எப்போதும் நான் உங்க அண்ணன் மகேன் தேன், அதைத் தாண்டி எண்ணி வைக்கல அதை தான் சொல்றேன்” கை கூப்பி நின்று அத்தனை வாஞ்சை வழிய தெளிவாக பேசியவனிடம் அவர்களால் என்ன பேசி விட முடியும்.
வந்த அத்தனை உறவுகளுக்கும் இந்த திருமண முறிவில் கொஞ்சம் வருத்தம் தான்.அதை அவர்கள் மறைத்தாலும் முகம் பளிச்செனக் காட்டி கொடுத்தது.சூழ்நிலை கணம் கூடுவதைக் கண்ட வள்ளியப்பன். அதனைச் சரி செய்யும் பொருட்டு,”மீனா எத்தினி கஷ்ட பட்டுச்சுனு உங்களுக்கே தெரியும்.அத்தனை வலியை தாண்டி மகனை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கு.
இந்த கல்யாண் பேச்சு நின்னு போனாலும் எதையும் மனசுல வச்சுக்காம. அந்தப் புள்ளைக்கு ஒரு நல்லது நடந்தா இது போல் ஒன்னு கூடி எல்லாரும் முன் நின்னு அவுகளுக்கு நல்ல படியா நடத்தி கொடுக்கனும்” என்றவர் பேச்சில் ஒரு பெருமூச்சை வெளியிட்ட உறவுகள்
“அதுக்கு என்ன வள்ளியப்பா? இந்தப் பேச்சு நின்னாலும் சோமு இடத்தை நாங்க ஈடுகட்டி நிப்போம் லட்சு எங்க வூட்டு புள்ள” அவர்களது இந்த பேச்சு மீனாவுக்கு நிம்மதியாக இருந்தது.
அதன் பின் இன்னும் சில சமாதானங்கள் பேசி வள்ளியும்,மீனாவும் அவர்களைச் சாப்பிட அழைக்க.அதுவரை அறைக்குள் நின்று இவர்களது பேச்சை கேட்டுக் கொண்டிருந்த கண்ணாத்தாள், “சாலா ஓடு ஓடு சாப்பாடு எடுத்து வை”
“இதோ ஆத்தா” என்றவள் அடுக்கலைக்குள் விரைய. அதன்பின் சாலாவும், கண்ணாத்தாளும் வெளியில் வந்து உணவு பரிமாற உதவி செய்தனர். அவர்களை கண்ட ஒரு பெண்மணி.
“இது யாரு?”
“இது வள்ளி அண்ணே சம்சாரமும், அவுக மகளும்”
“ஓ! ஜாடை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு. அதானே சபாபதி செட்டியார் ஜாடை அப்படியே இருக்கு அந்தப் பொண்ணுக்கு.நல்ல வாழ்ந்த குடும்பம் எங்க ஐயா அடிக்கடி சொல்லுவாரு”வள்ளியப்பன் ஐயாவை பற்றிப் அந்த பெண்மணி மீனாவிடம் சொல்ல அவளும்.
“ஆமா பெரியாத்தா ரொம்ப நல்ல வாழ்ந்த குடும்பம், உதவி போயி நின்னா இல்லனா சொல்ல மாட்டாக. அண்ணணும், மதனியும் மட்டும் இல்லன்னா நானும் என் மகனும் இப்போ பெயர் சொல்ல முடியாது பெரியாத்தா “அவளது நிலையை உணர்ந்தார் போல.
“அதெல்லாம் தாண்டி வந்துட்ட மீனா உன் வலி தெரிஞ்சுதேன் உன் நாத்தி சம்பந்தம் பேச வர தயங்கி வச்சா நாந்தேன் கேட்டு பார்ப்போம்னு கூட்டிட்டு வந்தேன்”
“இதுல என்ன பெரியாத்தா இருக்கு இவன் நாகம்மை கூட நல்லா பேசுவான் நானும் அதை வச்சு தான் நீக கேட்டதும் பேச வர சொன்னேன். ஏன்னா? என் மகன் அவன் தேவையை என்னைக்குமே என்கிட்டே வாய் திறந்து சொல்ல மாட்டான்.”
“உன் வலிக்கெல்லாம் அந்த ஈசன் கொடுத்த வரம் உன் மகேன் போ! நல்ல புள்ள” என்றவர் இப்போது கொஞ்சம் இயல்பாகப் பேசினார்.நாகம்மை தாய், தந்தைக்குச் சிறு இறுக்கம் இருந்தாலும் அதனை வெளி காட்டி கொள்ளாமல் இன்முகமாகவே விடைபெற்றனர்.
அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தவனைப் பிடித்துக் கொண்டார் வள்ளியப்பன்.
“என்ன லட்சு? வேற எதுவும் எண்ணமிருக்கா என்ன ? ” அவர் பேச தொடங்கும் முன்னே வேகமாகத் தாயிடம் சென்று அமர்ந்து கொண்ட லட்சுமணன்.மீனாவின் கைகளை எடுத்து தனது கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு தனக்கு எதிரில் நிற்கும் வள்ளியப்பனை பார்க்க.
அவனது செயலை பார்த்துப் பாதியில் பேச்சை நிறுத்தியவரை, “உட்காருங்க மாமா சொல்றேன்” என்றவன் நாற்காலியை கண் காட்ட, வள்ளியப்பன் அமைதியாக அமர்ந்து கொண்டார்.
“அயித்த!” மீண்டும் அறைக்குள் நுழைந்த கொண்ட கண்ணத்தாளை உரக்க அழைத்து வைத்தான் லட்சுமணன்.அவன் அழைத்த வேகத்தில் என்னவோ,ஏதோவென்று கூடத்துக்கு வந்தவளை.
“இங்கன மாமா பக்கத்துல வந்து உட்காருக பேசனும்” என்றதும் கணவனைப் பார்த்துக் கொண்டே, அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டாள். தாயின் பின்னே சாலாவும் கூடத்துக்கு வந்து விட்டாள்.
“என்ன தம்புடு?”
“அயித்த! மாமா! ஆத்தா!” என்று மூவரையும் அழைத்தவன் சில வினாடிகள் மௌனம் எடுத்து.பிறகு வள்ளியப்பனை தீர்க்கமாகப் பார்த்தவன்.
“மாமா?”
“சொல்லுக”
முக்கியமான பரிசை இருக்கு அது முடியவும் முறையா வூட்டுக்கு வரேன். சாலாவை கல்யாணம் பண்ணி கொடுக நல்ல பார்த்துக்குவேன்” இந்த வித பகட்டும் இல்லாமல் வெகு இயலபாக வார்த்தைகளை கொண்டு பேசியவனை ஓர் நொடி ஆழ்ந்து பார்த்தவர், அடுத்த நொடி அமர்ந்த வாக்கில் நாற்காலியில் தளர்ந்து சாய்ந்து விட்டார்..
அவரது செயலில் லட்சு, சாலா,மீனா கண்ணாத்தாள் நால்வரும் பதறி போயினர்.
“மாமா!” என்று எழுந்து அவர் முன் மண்டியிட்டவன் கையை இறுக்கப் பற்றித் தனது நெற்றியில் வைத்து கொண்டார் வள்ளியப்பன்.
“தவன்கிடக்கேன்!” என்று வள்ளியப்பன் முனக. அவர் முனகியது கண்ணாத்தாளை தவிர யாருக்கும் கேட்க வில்லை போலும்.கணவனது முனகலை கேட்டு அவள் அதிர்ந்து நிற்க. சாலா தான் லட்சுவை சண்டை பிடிக்க தொடங்கினாள்.
“என்ன மாமா? என்ன ஆச்சு?” என்றவனை தீயாக முறைத்தவள்.
“பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு என்ன? என்ன மாமா ஆச்சுன்னு? கேள்வி வேற. எதுக்கு ஐயாவை பயம் காட்டுறீக?” என்றவளை புரியாது பார்த்தவன்.
‘என்ன கல்யாணம் கட்டுறதுல என்ன? இதுல நான் பயம் காட்ட என்ன இருக்கு? லட்சுமணன் எண்ணினாலும் கொஞ்சம் அமைதியாகவே இருந்தான்.உள்ளுக்குள் வள்ளியப்பன் அதிர்ச்சி பெரும் நெருடலை கொடுத்தது.
மீனாவும் பயம் கொண்டு தவிப்பாக, “அண்ணே!” என்றழைக்க.
“உன் மகனுக்கு இதை கேட்க எத்தினி வருஷம் பாரு மீனா” என்றாரே பார்க்கலாம். அவரது இந்த பேச்சில் சாலா தொடங்கி மீனா வரை அதிர்வாக உணர்ந்தனர்.பெண்களுக்கு எட்டாத எண்ணம் இந்த இரு ஆண்களுக்குள்ளும் எப்படி? என்ற எண்ணம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!