Skip to content
Post Views: 721

மைதிலி இறந்து மூன்று மாதங்கள் ஆகி இருக்க கருணாவின் நிலையில் மாற்றம் என்பதே இல்லை… அவர் இன்னும் மைதிலியின் இறப்பில் இருந்து மீளவே இல்லை… அவரை பழைய நிலைமைக்கு மாற்ற முயன்ற போதும் அவர் அந்த நிலையில் இருந்து மாற தயாராய் இல்லை… வடிவாம்பாள் மகனின் நிலையப் பார்த்து தினமும் அழுகிறார்…
விஷ்ணுவை இப்போது அதிகமாக பார்த்துக்கொள்வது நாச்சியார் தான்….
அம்பிகா அவனுடன் பேச அடிக்கடி முயன்ற போதும் விஷ்ணுவிற்கு அவரை என்னமோ பிடிக்கவில்லை… எனவே அவள் அருகில் வந்தாளே அந்த இடத்தில இருந்து ஓடி விடுவான்…
Advertisement
அன்று அப்படி தான் விஷ்ணுவும் தீனாவும் விளையாடி கொண்டு இருக்க விஷ்ணு ஓடும் போது கீழே விழுந்து இருந்தான்.. காலில் நல்ல அடி… நாச்சியாரும் அம்பிகாவும் மட்டுமே அப்போது வீட்டில் இருக்க இருவரும் அவன் அருகில் ஓடி வந்தனர்… முதலில் அம்பிகா தான் அங்கு வந்தது…. ஆனால் அவன் அம்பிகாவை பார்த்து மேலும் பெருங்குரல் எடுத்து அழுக ஆரம்பித்து இருந்தான்..
நாச்சியார் வேகமாக அருகில் வந்தவர் அவனின் காயத்தை சுத்தம் செய்து அவனை சமாதானம் செய்து தூங்க வைத்தார்… இப்போது எல்லாம் விஷ்ணு அதிகம் ராஜதுரை வீட்டில் தான் இருக்கிறான்… அங்கேயே சாப்பிட்டு விட்டு உறங்கியும் விடுகிறான்….
கருணா எந்நேரமும் தோப்பு வீட்டில் இருக்க வடிவாம்பாள் மட்டும் தான் வீட்டில் தனியாக இருப்பார்… அவரிடம் பேச அம்பிகா முயற்சிப்பார்… ஆனால் அவர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்… அம்பிகா தான் உள்ளுக்குள் கருவிக்கொண்டு வெளியில் சிரித்து கொண்டே சென்றுவிடுவார்…
Advertisement
அன்று ராஜதுரையும் நாச்சியாரும் ஒரு திருமணதிற்கு சென்று விட குழந்தைகளை அழகர்சாமியும் ஆண்டாளும் பார்த்து கொண்டனர்…ராஜதுரை இருந்தால் கருணாவை அதிக குடிக்க வைக்க மாட்டார்…. ஆனால் அவர் இல்லாதால் அதிகம் குடித்து இருந்தார்… அவரின் நினைவே இல்லாத அளவு குடித்து இருந்தார்… அதுவும் காலை வேளையிலேயே குடித்து இருந்தார்….
Advertisement
அம்பிகா கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு தோப்பு வீட்டிற்கு தான் சென்றார்… அங்கு அவர் கண்ட காட்சியில் ஒரு நிமிடம் பதறி தான் போனார்… ஆனால் அடுத்த நிமிடம் அதுவும் அவரின் திட்டத்தில் ஒரு பகுதி என எண்ணி அதை செயல் படுத்த ஆரம்பித்தார்…
“ஐயோ யாரவது இங்க இருக்கீங்களா… யாரவது வாங்களேன்…. யாராவது இருக்கீங்களா” என்று கத்தி கொண்டே தோப்பு பக்கம் இருக்கும் கிணற்றடிக்கு ஓடினார்… அங்கு கருணா கண் மண் தெரியாமல் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கிணறு பக்கம் சென்று கொண்டு இருந்தார்…
அவராக எல்லாம் செல்லவில்லை… அவரை அளவுக்கதிகமாக குடிக்க வைத்து கிணறு பக்கம் அனுப்பி வைக்க பட்டார்… இது எல்லாம் அம்பிகா ஏற்பாடு செய்த ஆள் தான் செய்தார்…
Advertisement
அவரின் சத்தத்தில் அங்கு அங்கு வேலை செய்து கொண்டு இருந்த ஆட்கள் அவரை தடுத்து அந்த இடத்தில் இருந்து அழைத்து சென்றனர்… அனைவரும் சரியான நேரத்தில் அங்கு வந்த அவரை அனைவரும் பாராட்டி விட்டு சென்றனர்… ஆனால் அனைவரும் ஒன்றை யோசிக்க மறந்து விட்டனர் எப்படி அவர் வந்தார் என…
அவர் ஒரு கேலி சிரிப்புடன் எதுவும் நடக்காதது போல் வீட்டிற்கு சென்று விட்டு தன் அறைக்கு சென்று விட அங்கு கருணா வீட்டில் வடிவாம்பாளுக்கு தன் மகனை காப்பாற்றி இருக்கிறாள் என நல் எண்ணம் வந்து இருந்தது…
திருமணத்திற்கு சென்று விட்டு வந்த ராஜதுரைக்கு இது தெரிய வர ஒரு வித யோசனையோடு தான் அம்பிகாவை பார்த்தார்…
நாட்கள் அதன்போக்கில் செல்ல ராஜதுரையின் அறிவுரையினாலும் வடிவாம்பாளின் அழுகையிலும் மதுவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்து இருந்தார்….
நாட்கள் வாரங்களாக மாறி ஓடி கொண்டு இருக்க அம்பிகா கொஞ்சம் கொஞ்சமாக வடிவாம்பாளிடம் நல்ல பெயரை எடுத்து இருந்தார்… ஒருமுறை இருவரும் கோவிலுக்கு சென்று இருந்தனர்.. அங்கு ஏற்கனவே அம்பிகாவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வயதான பெண்மணி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு “எப்படி இருக்க வடிவு…” என்று நல விசாரிப்பாக ஆரம்பித்தார்…
“நான் நல்லா இருக்கேன்… வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க…” என்று கேட்டார் வடிவாம்பாள்…
“நான் நல்லா இருக்கேன் வடிவு.. உன்னை பாக்க தான் முடியுறது இல்ல.. கருணாவை அப்படியே விட்டுட்டியா என்ன… அவனுக்கு என்ன வயசு ஆகுது.. மருமக இறந்துட்டா தான் அதுக்காக அவனை அப்படியே விட்ருவியா.. அவன் பையனை பாக்க ஆளு வேண்டாமா.. எத்தனை நாள் நீயே பாப்ப… இப்பயே அவன் குடி குடி குடிச்சிட்டு தான் இருக்கான்… இன்னமும் விட்டா அவ்வளவு தான்.. அவனுக்கு ஒரு பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணி வை.. தப்பா எடுத்துக்காத உன் நல்லதுக்கு தான் சொல்றேன்…” என்று கூறி அந்த பெண்மணி கிளம்பிவிட்டார்…
அந்த இடத்தில அம்பிகா இல்லை… மறைந்து நின்று கேட்டு கொண்டு தான் இருந்தார்… அந்த பெண்மணி சென்றதும் எதுவும் தெரியாதது போல் அவரும் வடிவாம்பாள் அருகில் வந்தார்…
“என்ன அத்தை கிளம்பலாமா…” என்று கேட்டார்… அவர் யோசனையில் இருக்க அவரை தொட்டு “அத்தை என்ன யோசனை… நான் பேசுறது கூட கேட்காம இருக்கீங்க…” என்று கேட்டார்…
“அது ஒன்னும் இல்ல அம்பிகா இப்போ நான் பேசிட்டு இருந்தேன்ல அவங்க எனக்கு அண்ணி முறை ஆகுது… அவங்க கருணாவுக்கு கல்யானம் பண்ணி வைக்க சொல்றாங்க… இவன் கண்டிப்பா ஒத்துக்க மாட்டான்… மனசு மாறி வேற பொண்ணை கல்யாணம் பண்ண மாட்டான்… எப்படி தெரிஞ்சே ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிக்க முடியும்…. அவங்க சொன்னதை முன்னாடியே யோசிச்சேன்… ஆனா இத நினைச்சு விட்டுட்டேன்… இவங்க சொன்னதும் அந்த யோசனை வருது… கடவுள் விட்ட வழி.. வா சாமி பாக்க போலாம்…” என்று கூறி அழைத்து சென்றார்…
சாமியை தரிசித்து விட்டு இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்… வீட்டிற்கு சென்றாலும் வடிவாம்பாளுக்கு அந்த பெண்மணி கூறியது தான் யோசனையாக இருந்தது… இதை பற்றி நேரடியாக கருணாவிடம் பேசாமல் ராஜதுரையின் மூலம் பேசலாம் என எண்ணி அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து இருந்தார்..
இங்கு அம்பிகாவோ எப்படியோ அந்த கிழவியை கல்யாணத்தை பத்தி யோசிக்க … கொஞ்ச நாள் போகட்டும் அடுத்த கதையை பொறுமையா நடத்தலாம்… என்று தனக்குள் யோசித்து விட்டு அமைதியாகிவிட்டார்…
மற்றவர்களுக்கு அம்பிகா மீது சந்தேகம் வரவில்லை.. ஆனால் ராஜதுரைக்கு அவர் மேல் சந்தேகம் இருந்து கொண்டே தான் இருந்தது… அது அம்பிகாவிற்கு தெரிந்து இருந்தது.. எனவே அவர் வீட்டில் இல்லாத போது தான் தன் திட்டத்தை நடைமுறை படுத்தினார்…
விஷ்ணுவிடம் அம்பிகா பாசமாக இருக்க முயல்வார்… ஆனால் விஷ்ணு இவரை கண்டாலே அழ ஆரம்பித்து விடுவான்… எனவே அவனை வைத்து கருணா மனதில் இடம் பிடிக்கலாம் என்ற திட்டம் தோல்வி அடைந்தது… அவருக்கு இருக்கும் ஒரே ஆயுதம் வடிவாம்பாள்…
ஆனால் அதுவும் அவருக்கு கஷ்டமாக தான் இருந்தது… வடிவாம்பாள் ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை இழந்த பெண்களை தான் தன் மகனுக்கு பார்க்க எண்ணினார்…
அன்று வடிவாம்பாள் ராஜதுரை வீட்டிற்கு வந்து இருந்தார்… அவரை வரவேற்று அவரிடம் பேசி கொண்டு இருந்தார் ஆண்டாள்… அழகர்சாமி அவர் வந்த போது வீட்டில் இல்லை… கால் மணி நேரத்தில் அவர் வந்து இருக்க வடிவாம்பாள் தான் வந்த விஷயத்தை பேச ஆரம்பித்து இருந்தார்…
“அண்ணா கருணாவுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணலாம்னு யோசிக்குறேன்… அந்த பையனை அப்படியே விட்டா என்னாக போறான்னு தெரியல.. வாழ்க்கையே வெறுத்த மாதிரி இருக்கான்… நான் இன்னும் எத்தனை வருஷம் இருக்க போறேன்னு தெரியல. இதுல விஷ்ணு வேற இருக்கான்.. அவனை பாத்துக்கவாச்சும் ஒரு பொண்ணு வேணும்… ஏற்கனவே கல்யாணமாகி புருஷனை இழந்த பொண்ணா இருந்தாலும் சரி தான்… நம்ம பையன் இப்படி இருக்க அப்ப அந்த பொண்ணு கல்யாணம் ஆகி இருக்க கூடாதுனு நாம யோசிக்க முடியாது.. அது தான் ஏற்கனவே கல்யாணமான பொண்ணா இருந்தா பரவால்லனு யோசிக்குறேன்… நீங்க என்ன அண்ணா சொல்றிங்க” என்று கேட்டார்..
“நீ சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்… ஆனா இதை உடனடியா கருணா கிட்ட பேச முடியாது தங்கச்சி… பாத்து பொறுமையா தான் பேசனும்… கருணா வேற அந்த பொண்ணு மேல உசுரையே வெச்சு இருந்தான்… மறக்குறது கஷ்டம் தான்… பொறுமையா பேசலாம்… நானே ஒரு நல்ல பொண்ணா பாக்குறேன்… நீ கவலைப்படாத தங்கச்சி” என்று கூறி ஆறுதல்படுத்தினார்…
“உங்களை தான் நம்பிட்டு இருக்கேன் அண்ணா… அப்புறம் நான் கிளம்புறேன் ண்ணா… கருணா வயலுக்கு போயிட்டு வந்து இருப்பான்…” என்று கூறி கிளம்பிவிட்டார்…
அழகர்சாமியும் கருணாவிடம் பேச நேரம் பார்த்து காத்து இருந்தார்…
கருணா மறுமணத்திற்கு ஒத்துக்கொள்வாரா??????… அம்பிகா எதோ செய்து அதை தடுத்துவிடுவாரா?????
error: Content is protected !!