Skip to content
Post Views: 6,190
“இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்
மு.வ விளக்க உரை: இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.”
தேவ ரஞ்சனா பேசி முடித்த போது அங்கு பெரும் அமைதி நிலவியது.
முதலாளியாய் அவனை எதிர் கொள்வதில் எந்த தயக்கமும் அவளுக்கு இல்லை. ஆனால் இப்போது ஏதோ பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் அமர்ந்திருப்பதை போன்ற நிலை.
Advertisement
விழிகள் அலைப்புற அவனிடம் இருந்து பதில் வராததில் லேசாய் அவன் விழி நோக்க அவன் ஏதோ யோசனையில் பார்வையைத் தன் மீது வைத்திருப்பது புரிந்தது.
“சார்..”
“யா.. பைன் இந்த விஷயத்தை இதோட விடுங்க. இனி எம்ப்ளாயர் எம்பாளாயி ரிலேஷன்ஷிப் மட்டும் தான் நமக்குள்ளே.”
Advertisement
“தேங்க் யூ சோ மச் ஃபார் அண்டர்ஸ்டாண்டிங்.”, என்றவள் லேசான புன்னகையோடு எழுந்து கொண்டாள்.
Advertisement
அதிரனுக்கு தன் தாயைப் போன்று பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் தன்னிலை தவறாமல் மனதில் எதையும் மறைத்து வைக்காமல் தெளிந்த சிந்தனையுடைய ஒருத்தியாய் தோன்றினாள் தேவ ரஞ்சனா.
பெற்றவளுக்கு எப்படி தான் ஒரு நொடியில் வெறும் புகைப்படத்திலேயே தன் மகனுக்கு சரியானதாய் இருக்கும் என தேர்ந்தெடுக்க முடியுமோ தெரியவில்லை. தாயின் கணிப்பை நினைத்து உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டான் அதிரன்.
நேற்று வரை சிறு குழப்பத்தோடு இருந்த அவனின் முடிவில் இப்போது தெளிவாகியிருந்தான்.
Advertisement
தேவ ரஞ்சனாவை கவனித்து ஒரு வேளை அவள் மீது பிடித்தம் எழும் பட்சத்தில் இதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பினான்.
அதே நேரம் அங்கு காத்யாயினியின் தம்பி அவரது மனைவி மகள் நந்தினியோடு அரண்மனைக்கு வந்திருந்தார்.
சென்னையில் வசிக்கும் அவர்கள் காத்யாயினியைப் பார்த்துச் செல்வதற்காக வந்திருந்தனர்.
“வா கிருஷ்ணா எப்படியிருக்க? வா விசாலா.”
“நல்லாயிருக்கோம் கா. நீ எப்படியிருக்க?”
“எனக்கென்ன நல்லாயிருக்கேன். இதோ இந்த சேரோட.”, என்றவர் வெறுமையாய் புன்னகைத்தார். அந்நேரம் உள்ளே நுழைந்தாள் நந்தினி.
“ஹாய் அத்தை..”
“அடடே வாடா நந்து எப்படியிருக்க?”
“நல்லாயிருக்கேன் அத்தை. எங்கே வீட்டில் யாரையும் காணும்?”
“எல்லாரும் அவங்க அவங்க வேலைக்காக ஓடிகிட்டே இருக்காங்க. ராத்திரி சாப்பாடு நேரத்தில் எல்லாரையும் பார்க்கலாம். மூணு பேரும் ரெஸ்ட் எடுங்க”, என்றதில் மூவருமாய் விருந்தினர் அறைக்குச் சென்றனர்.
“ஏங்க இவ்வளவு சொத்து இருந்து என்ன ப்ரயோஜனம். உங்க அக்காக்கு அனுசரணைக்கு ஒரு ஆள் இல்லையே.”
“ம்ம் அதுக்கு தானே இப்போ நாம வந்துருக்கோம். எப்படியாவது கல்யாணத்தை பேசி முடிச்சுட்டு தான் போறோம்.”
“இப்படி தான் நம்ம பையனுக்கு அவங்க பொண்ணெடுக்கணும்னு சொன்னீங்க. நடந்துதா?
நீங்க தான் இன்னும் அக்கா அக்கானு உருகுறீங்க. அவங்க நம்மளை அப்படி பார்க்கலைங்க.”
“சும்மா தொணத் தொணக்காம இரு விசாலம்.”, என்றவருக்குமே அக்கா இந்த பேச்சிற்கு செவி சாய்ப்பார் என்ற நம்பிக்கை துளியும் இல்லை.
அதற்கு முதல் காரணம் கிருஷ்ணனின் ஊதாரித்தனம் அடுத்ததாய் அவர் பிள்ளைகளின் பொறுப்பற்ற தன்மை.
இவை இரண்டுமே இந்தக் குடும்பத்திற்கு சரிப்பட்டு வராத ஒன்று என்பதால் தான் காத்யாயினி தம்பியாகவே இருந்தாலும் அதை ஆதரிக்கவில்லை.
இரவு உணவு நேரத்தில் தனது இரவு பைஜாமாவில் இலகுவாய் வந்து அமர்ந்த அதிரனிடம் நட்பாய் கையசைத்தாள் நந்தினி.
அனைவருக்கும் பொதுவாய் வரவேற்பைக் கொடுத்தவன் தன் போக்கில் உணவை உண்ண ஆரம்பிக்க கிருஷ்ணா சிறிய மருமகனிடம்,
“அப்பறம் சின்ன மருமகனே படிப்பெல்லாம் எப்படி போகுது?”
“நல்லா போகுது மாமா.”, என்றவன் பெயருக்கு சிரித்து விட்டு உணவில் கவனத்தைக் கொடுத்தான்.
“அப்பறம் அக்கா நந்தினி அவளோட இன்டர்ன்ஷிப் காக பார்த்துட்டு இருக்கா. நம்ம கம்பெனி இருக்கும் போது எதுக்கு வெளியில போனும்னு தான் இங்கே கூட்டிட்டு வந்துருக்கேன்.”
“என்ன கிருஷ்ணா ஒரு வார்த்தை கேட்காம கூட்டிட்டு வந்தா என்ன அர்த்தம்? அதிரனை மீறி ஆபீஸ் விஷயத்தில் நான் ஒண்ணும் பண்ண முடியாது.”, என்று நேரடியாகவே கூறியிருந்தார் காத்யாயினி.
“அக்கா…”
“இனி இப்படி நடக்காம பார்த்துக்கோங்க மாமா. நான் ஏற்பாடு பண்ணிட்டு சொல்றேன்.”
“அப்பறம் அதுவரையும் அவ இங்கேயே இருக்கட்டுமே. பொம்பளை பிள்ளையை தனியா வெளியே தங்க வைக்குற நிலைமையா இருக்கு?!”, என்றதில் ஒன்றும் கூற முடியாமல் காத்யாயினி மகனை பார்த்தார்.
அவன் அமைதி இதை பெரிது படுத்தாதீர்கள் என்பதாய் இருக்க ஒன்றும் கூறாமல் விட்டிருந்தார்.
“கேஷா மாமா இனி நான் இங்கே இருக்குற வரை வீக்கெண்ட் வெளியிலே கூட்டிட்டு போகணும் ஓகே?”
“அது சரி அப்பறம் என் பைனல் இயர் கோவிந்தா தான்.”
“ரொம்ப பண்ணாதீங்க ஜஸ்ட் டூ த்ரீ அவர்ஸ்ல என்ன ஆகிடும்?”
“சரி சரி பார்க்கலாம்.”, என்றவன் உணவை முடித்து தனதறைக்குள் நுழைந்து கொண்டான்.
நந்தினிக்கு அதிரனை திருமணம் செய்வதில்லெல்லாம் பெரிதாய் விருப்பம் இருக்கவில்லை.
தன்னை விட வயதில் பெரியவன் என்பதால் எவ்வித ஈர்ப்பும் எழவில்லை.
சாதாரணமாய் அத்தை வீட்டிற்கு விடுமுறை வரும் உணர்வில் தான் அவள் வந்தது. கிருஷ்ணனோ தமக்கையை சம்பந்தி ஆக்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.
இரவு உணவிற்கு பின் அக்காவின் அறைக்குச் சென்றவர் பொறுமையாய் பேச்சை ஆரம்பித்தார்.
“நாளைக்கு நானும் விசாலமும் கிளம்புறோம் கா..”
“என்னப்பா அதுக்குள்ளே?”
“நந்தினியை விட்டுட்டு போறதுக்கும் உங்களைப் பார்த்து நாளாச்சேனு தான் வந்தேன். அப்பறம் அடுத்த வருஷமே நந்தினிக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் கா..”
“ரொம்ப நல்ல விஷயம். எடுத்தோம் கவுத்தோம்னு பண்ணாம நிதானமா விசாரிச்சு முடிவு பண்ணு கிருஷ்ணா.”
“ஒண்ணுக்கு இரண்டு மருமகன் இருக்கும் போது எதுக்கு கா வெளியில் பார்த்துகிட்டு?”
“…”
“என்ன கா ஒண்ணும் சொல்ல மாட்ற?”
“சாருகேஷ் இன்னும் படிப்பே முடிக்கலை கிருஷ்ணா..”
“அக்கா நம்ம பெரிய மருமகனுக்கு தான் கேட்குறேன்.”
“இவ்வளவு வயசு வித்தியாசமெல்லாம் நம்ம காலத்தில் சரி. இப்போ இதெல்லாம் ஒத்து வராதே. அதுவுமில்லாம அதிரனே இதுக்கு ஒத்துக்க மாட்டான்.
இந்த பேச்சை இதோட விடு. நல்ல இடமா பாரு நானே முன்னே நின்னு கல்யாணத்தை நடத்தி வைப்பேன்.”
காத்யாயினி இப்படி தான். தன் குடும்பம் தான் அவருக்கு உயிர் மூச்சு.
கணவருக்கும் குழந்தைகளுக்கும் நல்லதாய் இருப்பவற்றை தான் யோசிப்பாரே தவிர சொந்த பந்தங்களுக்காக எல்லாம் வெளிப்பூச்சு பூச மட்டார்.
இது அதிரனுக்கு அவரிடம் பிடித்த விஷயமும் கூட அதனாலேயே அவர் எடுக்கும் சில முடிவுகளுக்கு கட்டுப்படுவான்.
உதாரணத்திற்குத் தங்கைகளின் திருமணம்.
உண்மையில் மாப்பிள்ளைகள் இருவருமே மிகவும் நல்ல குணம் கொண்டவர்கள்.
அந்த கண்ணோட்டத்தில் தான் தேவ ரஞ்சனா மீதும் அவனது கவனம் பதிந்தது.
இருபது தினங்களுக்குப் பின் தேவ ரஞ்சனா ANA கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள்.
அவளுக்கான அறை வசந்திற்கு அருகிலேயே இருக்க அந்த தளத்தின் மறுகோடியில் அதிரனின் அறை இருந்தது.
முதல் ஒரு வாரத்தில் அவனை பார்க்கக் கூட இல்லை. அலுவலகம் வருபவன் அதன் பின் பேக்டரி மத்த வேலைகள் என சுற்றிக் கொண்டே இருப்பதால் பெரும்பாலும் அவனது இடம் காலியாகவே இருக்கும்.
வசந்த் கிட்டதட்ட அதிரனின் வலது கை போன்றவன் என்பதால் எந்த வித சந்தேகமானாலும் அவனிடமே கேட்டு தெளிவுப் படுத்திக் கொண்டாள் தேவா.
அன்றைய தினம் எப்போதும் போல் வேலைக்கு வந்தவள் மின்தூக்கிக்குள் வர பேஸ்மெண்டிலிருந்து அதிரன் ஏற்கனவே அதில் ஏறியிருந்தான்.
மெல்லிய சிரிப்புடன் காலை வணக்கம் கூற அவன் சிறு தலையசைப்போடு நிறுத்திக் கொண்டான்.
தனதறைக்கு வந்தவன் அன்றைய வேலைகளில் மூழ்கிப் போயிருக்க சிறிது நேரத்திற்குப் பின் தேவ ரஞ்சனா பெயரில் வந்த இமெயிலைக் கவனித்தவன் அதில் பார்வையை சுழற்றினான்.
ஒரு டீம் நபரின் பெயரைக் குறிப்பிட்டு நான் கேட்ட தகவல்களை இந்த மின்னஞ்சலாகவே அனுப்பி விடுங்கள் என்று கூறி அதில் அதிரனின் மெயில் ஐடியையும் இணைத்திருந்தாள்.
அதிரன் அவளையும் அந்த சம்மந்தப்பட்ட நபரையும் தனதறைக்கு அழைத்திருந்தான்.
தேவா எப்போதும் போல் வந்து நிற்க மற்றவனோ பயத்தில் வியர்த்து வழிய நின்றிருந்தான்.
“என்ன விஷயம் மிஸ் தேவ ரஞ்சனா?”
“சார் மூணு நாளா இவர்கிட்ட ஒரு டேட்டா கேட்டுட்டு இருக்கேன்.
இப்போ தரேன் அப்போ தரேன்னு சொல்றாரே தவிர இப்போ வரை தரலை.
இரண்டு தடவை இவர் சீட்டுக்கே போய் கூட கேட்டுட்டேன்.
இப்படி ஒவ்வொருத்தர் இடத்துக்கா போய் கெஞ்சிட்டு இருக்குறது தான் என் வேலையா?
அதனால தான் உங்களையும் சிசி வைச்சு மெயில் போட்டேன்.”
“என்ன இது ஸ்கூல் பசங்க மாதிரி?!”
“எனக்கு கீழே இருக்குற டீமில் பெரும்பாலும் இருக்குறது ஆண்கள் தான்.
எந்த காலத்திலேயும் அவங்களால ஒரு பொண்ணு தனக்கு மேல வேலை செய்றதை ஏத்துக்கவே முடியாது.
அது தான் காரணமோ என்னவோ!”, என்றதில் அதிரன் அந்த நபரை கோபமாய் பார்த்தான்.
“சார் அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார். நான் இன்னைக்கு கண்டிப்பா கொடுத்துருப்பேன்.”
“மூணு நாளா ஏன் கொடுக்கலைங்கிறது தான் இங்கே கேள்வி?”
“!!”
“நானே அதுக்கு பதிலும் சொல்றேன் சார்.”, என்ற தேவ ரஞ்சனாவை அவன் கலவரமாய் பார்த்தான்.
“இவருக்கும் இவர் ப்ரெண்டுக்கும் பெட். என்னை எவ்வளவு அலைகழிக்க முடியுமோ அவ்வளவு ஓட விட்டு சீண்டினால் நான் எதுவுமே பண்ணாம அழுதுட்டு உட்காந்துருப்பேன்னு இவர் சொல்றாரு.
அப்படியில்லனு அவர் ப்ரெண்ட் சொல்றாரு.”
“!!!”
“சோ போட்டியில் தோற்க்க மனசில்லாம இன்னுமும் ஆட்டம் காட்டுறாரு.”
“வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்?”
“இத்தனை பேர் இருக்குற டாப் லீடிங் கம்பெனியில் வேலை பார்க்க வரேன்னால் அப்பபோவே எல்லாத்துக்கும் தயாரா தான் வந்துருப்பேன்னு யோசிக்க மாட்டாங்க போல.”, என்றவளை ஆன மட்டும் முறைத்து நின்றான் அவன்.
அதிரனிடம் நன்றாக வாங்கி கட்டி விட்டு அவன் வெளியே செல்ல தேவ ரஞ்சனா தலையசைப்போடு விடை பெற்று வெளியேறியிருந்தாள்.
error: Content is protected !!