Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 12

அத்தியாயம் 12

 

“சீ லாவண்யா! எனக்குன்னு ஒரு கோல் இருக்கு. நான் இந்த ஃபீல்டு ஓகேனு டிசைட் பண்ணி முடிக்குறதுக்குள்ள எனக்கு மேரேஜ்னு சொல்றதை அக்சப்ட் பண்ணிக்க முடியல!” என மெதுவாய் தன் தரப்பினை லாவண்யாவிடம் எடுத்து சொல்ல முயன்றான் கீர்த்தீஸ்வரன்.


Advertisement

 

அதுவரையும் என்ன ஏதேன்றே தெரியாமல் அவனுக்காக அலுவலக அறையில் காத்திருந்தவள் அவன் பேசியதில் சட்டென்று கோபத்திற்கு வந்துவிட்டாள்.

Advertisement

Advertisement

 

“அக்சப்ட் பண்ணிக்க முடியலையா? ஏன்? நாம ஒன்னும் இப்ப பேசி உடனே மேரேஜ்னு டிசைட் பண்ணலையே! ஆல்ரெடி பிளான் பண்ணினது தானே?” என எழுந்து நின்று அதிர்வை காட்டியே லாவண்யா கேட்க,

Advertisement

 

“ஆமா! ஆனா நான் ஓகே சொல்லவே இல்லையே லாவண்யா. என்னை கேட்டு யாரும் எதுவும் டிசைட் பண்ண மாட்டேன்னுறிங்க. நான் அடப்ட் ஆகலாமானு நினைச்சேன்.. பட் ஐ காண்ட். எனக்கு நிறையவே ஸ்பஸ் வேணும். என்னால இப்ப கல்யாணம் பண்ணிக்கவே முடியாதுன்னு புரிஞ்சதால தான் உன்கிட்ட பேசறேனே!” என அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்றே அத்தனை நிதானமாய் பேசினான்.

 

“லாவண்யா உனக்கும் இன்னும் டைம் வேணும். ஒரு ரெண்டு மூணு வருஷம் எடுத்துப்போம். அதுக்குள்ள என்ன வேனா நடக்கலாம். பட் நமக்கான அடையாளம் வேணும் தானே?” என அவன் கேட்க,

 

“ஏன்? மகேஸ்வரன் பையன் கீர்த்திஸ்வரன்ற அடையாளம் போதாதா உனக்கு?” என்றவளைக் கண்டு கோபம் வந்த போதும் அமைதியாய் சொல்ல தான் நினைத்தான் ஈஸ்வர்.

 

“எனக்கு அப்படி எந்த அடையாளமும் வேண்டாம். நான் வரதராஜன் பொண்ணு. இதுக்கு மேல என்ன வேணும்? அண்ட் யூ! நீ வரதராஜன் மருமகன்ற அடையாளம் எவ்வளவு பெருசு தெரியுமா? நீ ரெண்டு மூணு வருஷத்துல இதை விட அப்படி என்ன பெருசா கிழிக்க போற?” லாவண்யா நேரே கேட்டு விட்டாள்.

 

அவ்வளவு கோபம் அவன் மீது. தனது ட்ரீம் வெட்டிங் என்ற ஒரு கனவில் இவன் கல் எறிவதாய் பேசுவதை கேட்க கேட்க அவ்வளவு ஆத்திரம்.

 

தன் தோழிகளின் திருமணத்தை எல்லாம் ஒவ்வொன்றையும் அத்தனை குறித்து வைத்திருக்கிறாள். அதைவிட தான் சிறப்பாய் அதில் என்ன செய்ய முடியும் என்பது வரை அவளின் கனவுகள் அதிகம் திருமணம் என்று வருகையில்.

 

தன் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என யாருமே இப்படி ஒரு திருமணத்தை பார்த்திருக்க கூடாது அப்படி நடடகை வேண்டும் என திருமணம் என்ற அந்த ஒரு நாளை எண்ணி மட்டுமே இருந்தது அவளின் கனவுகள் எல்லாம்.

 

அதற்கு அடுத்த நாளைப் பற்றியோ வாழ்க்கையைப் பற்றியோ எல்லாம் பெரிதாய் அவள் சிந்திக்கவே இல்லை. அதற்கு தேவை இருப்பதாய் நினைத்தால் தானே அதை சிந்திக்க?

 

தான் கேட்டதை செய்ய தந்தை இருக்க, வேறு என்ன கவலை என்ற பெரும் அகம்பாவம் தான்.

 

“நான் என்ன கிழிக்க முடியும்னு ட்ரை பண்றேன்னு சொல்றேன். அதுக்கு எனக்கு டைம் வேணும். என்னால இப்ப கல்யாணம் பண்ணிக்க முடியாது. மத்ததை உன் அப்பாகிட்ட பேசிக்குறேன்!” என்று ஈஸ்வர் முடிவாய் சொல்வதாய் சொல்ல,

 

“என்ன! சீட் பண்றிங்களா நீயும் உன் அப்பாவும்? என்னை ஏமாத்த பாக்குறீங்களா?” என்றபடிஅந்த அறையில் இருந்து வெளியே வந்தவள் சத்தம் அமைதியான அந்த வீட்டின் அனைத்து பக்கமும் எதிரொலிப்பதாய் வந்தது.

 

“நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற?” என ஈஸ்வருமே வந்திருக்க, லதாவின் அறை வாசலில் அஞ்சலி நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் இவர்களை.

 

பல்லவியும் லதா அருகே நின்றிருக்க, நன்றாய் கேட்டது லாவண்யாவின் வார்த்தைகள்.

 

“இந்த பொண்ணு பிரச்சனையாக்கப் பாக்குது பாரேன்! போச்சு! என்ன நடக்க போகுதோ. சும்மாவே அஞ்சலி அப்பாக்கு கோவப்பட சொல்லி குடுக்க வேண்டாம்!” என லதா பயம் கொண்டு பேச,

 

“லதாம்மா! அவங்களுக்கு என்ன பிரச்சனையோ! கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லிட்டு திடிர்னு தள்ளி வச்சா? அதான் காண்டுல கத்துறாங்க!” என்ற பல்லவி,

 

“அப்புறம் லதாம்மா!” என்றவள் வாயை மூடிவிட்டார் லதா.

 

“நீ எனக்கு சப்போர்ட் பண்ற மாதிரி தான் இருக்கு. ஆனாலும் இல்லாத மாதிரி இருக்கு. பேசாம நில்லு. எதாவது சொன்ன…” என்று மிரட்டி என நடக்கிறது என கவனத்தை வெளியில் கொண்டு வந்தார் லதா.

 

“ஈஸ்வர்! இட்ஸ் எனஃப். இனி பேச எதுவும் இல்லை. எனக்கு என் மேரேஜ் அடுத்த மாசம் நடந்தே ஆகணும்!” என்று சொல்லி அடமாய் நடுவீட்டில் லாவண்யா நிற்க, அத்தனை பொறுமையாய் புரிய வைக்க முயன்று நின்ற ஈஸ்வரின் கோபத்தை அவளே கிளறி இருந்தாள்.

 

“ஓகே டூ இட். ஒரு நல்ல பையனா உன் அப்பாவை பார்க்க சொல்லு. கிளம்பு!” என்றவன் நிற்காமல் படியேறி செல்ல, இப்படி கூறுவான் என்று எதிர்பார்க்காத அதிர்ச்சியில் நின்றுவிட்டாள் லாவண்யா.

 

“என்ன லதாம்மா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க. லாவண்யா பாவம்ல?” பல்லவி கூறிய பாவனையில் அவளை முறைத்த லதா,

 

“சாத்தான் வேதம் ஓதுதா?” என்றார்.

 

“ம்மா ம்மா! வர்றாங்க வர்றாங்க!” என்று அஞ்சலி ஓடி வர, பல்லவி எப்போதும் போல நின்று கொள்ள, லதா சட்டென்று படுக்கையில் விழுந்ததில் காலையும் அசைத்து “அம்மா!” என்று அலறினார்.

 

“அய்யோ லதாம்மா!” என பல்லைக் கடித்து அவரருகே சென்று கொஞ்சமாய் காலை நீவிக் கொண்டு பல்லவி நிற்க,

 

“இந்த வீட்டுல என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுதா இல்லையா? இப்படி நீங்க பாட்டுக்கு எனக்கென்னன்னு படுத்துருக்கீங்க?” என்று வந்ததும் லதாவிடம் சண்டைக்கு நின்றாள் லாவண்யா.

 

“அஞ்சலி! லதாம்மாக்கு கால் வலிக்குதாம். போய் உன் அண்ணாவை கூட்டிட்டு வா!” பல்லவி சொல்ல, நிஜமாய் லதாவிற்கு அந்நேரம் சுருக்கென்று ஒரு வலி இருக்க தான் செய்தது எதிர்பாராமல் சட்டென்று படுத்ததில்.

 

அஞ்சலி வேகமாய் நகர, “ஏய்! நான் பேசிட்டு இருக்கேன்ல? குறுக்க நின்னுட்டு இருக்க? வெளில போ!” இருக்கும் எரிச்சலில் லாவண்யா பல்லவியிடம் சொல்ல,

 

“இதோ இந்த இடத்துல இப்படி கை வச்சு நீவி விடுங்க. நான் வெளில வெயிட் பண்றேன்!” என்ற பல்லவி,

 

“லதாம்மா!” என்று அவரை அழைத்து, இரு புருவங்களையும் உயர்த்தி தலையை ஆட்டி ஒரு கிண்டல் புன்னகையையும் கொடுக்க, இப்படி அவளிடம் மாட்டிவிட்டு செல்கிறாளே என வலியோடு பார்த்து வைத்தார் லதா.

 

“காட்!” என இருகையினையும் தூக்கி விரல்கள் அனைத்தையும் இறுக மூடித்திறந்தாள் லாவண்யா பல்லவியின் சொல்லில்.

 

கொஞ்சமும் அசராமல் பல்லவி வெளியே செல்ல,

 

“திஸ் இஸ் டூ மச்! உங்க பையன் இவ்வளவு நாளும் பேசாம இருந்துட்டு இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னா சும்மா விடணுமா நான்?. என்னனு கேட்க மாட்டிங்களா நீங்க? கேட்டா வேற பையனை உங்க அப்பாவை பார்க்க சொல்லுன்னு என்கிட்டயே சொல்ற அளவுக்கு திமிராப் போச்சா? என் அப்பாகிட்ட சொன்னா என்ன நடக்கும் தெரியுமா உங்களுக்கு?” என்றவள் பேச்சில்,

 

“லாவண்யா! அவன் சொன்னா ஒரு அர்த்தம் இருக்கும் டா!” என்றார் லதாவும் அத்தனை பொறுமையாய்.

 

“அதானே! உங்ககிட்ட சொன்ன என்னை சொல்லணும். அஃப்ட்ரால் ஒரு வேலைக்காரி… அவ என்னை பேசினாலே நீங்க கண்டுக்கமாட்டிங்க. உங்க பையன் பேசினா உங்களுக்கு குளுகுளுன்னுல்ல இருக்கும்!” என்று லாவண்யா தன் கோபத்தை எல்லாம் லதாவிடம் கொட்ட,

 

“ம்மா!” என வந்துவிட்டான் கீர்த்திஸ்வரன் அஞ்சலியோடு.

 

“என்னாச்சு ம்மா?”என்று வந்தவன் காதுகளிலும் அவளின் இறுதி வார்த்தைகள் விழுந்திருந்தது.

 

“ஒண்ணுமில்ல ஈஸ்வர். நீ போ. நான் லாவண்யாகிட்ட பேசுறேன்!” என லதா சொல்ல,

 

“நீங்க அமைதியா இருங்க!” என்றவன்,

 

“நான் தான் சொல்லிட்டேனே லாவண்யா. இனி என்ன முடிவா இருந்தாலும் உங்க வீட்டுல போய் நீயும் உன் அப்பாவும் தான் எடுக்கணும். நீ கிளம்பலாம்!” என்றவன் குரல் கட்டளையாய் வர,

 

“ஈஸ்வர் என்னை எதிர்த்து பேசுறியா நீ?” என்றாள் திகைப்பும் அதிர்வுமாய் அப்போதும்.

 

“அண்ணி! எதுவா இருந்தாலும் அப்புறமா மெதுவா பேசலாமே! இன்னும் பேசி பேசி பிரச்சனையாக்கிக்க வேண்டாம்!” அஞ்சலியும் சொல்ல,

 

“நீ பேசாத!” என அஞ்சலியை கோபமாய் லாவண்யா சொல்ல,

 

“நீ அவளைப் பேசாத லாவண்யா. உன்னை கிளம்புன்னு அப்பவே சொன்னேன்!” என்றவனுக்கு அத்தனை பேரையும் அவள் அதிகாரம் செய்த விதத்தில் அத்தனை கோபம்.

 

“ஈஸ்வர் நீ கொஞ்சம் அமைதியா சொல்லு டா!” லதா சொல்ல,

 

“என்ன சொல்லணும்? என்னை வேண்டாம்னு சொல்றதை அமைதியா சொல்லனுமா? அப்போ நீங்க தான் சொல்லிக் குடுத்தீங்களா?” லாவண்யா லதாவைக் கேட்பதை நிறுத்துவதாய் இல்லை.

 

“ஜஸ்ட் ஸ்டாப் இட் லாவண்யா. உடம்புக்கு முடியாதவங்க முன்னாடி எப்படி பேசணும்னு பேசிக் சென்ஸ் இல்ல உனக்கு?” என்றவன் “வெளில போ!” என்று சொல்லவும் அத்தனை அவமான உணர்வு நொடியில்.

 

எத்தனை இலகுவாய் அப்படி சொல்லிவிட்டான் என பார்த்து நின்றவள் விறுவிறுவென்று வெளியே நடந்து வர, ஹால் சோஃபாவில் கால் மேல் காலிட்டு அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பல்லவியைக் கண்டு இன்னுமே பொங்கி வந்தது கோபமும் ஆத்திரமும் இயலாமையும்.

 

பல்லவி கூறிய அதே அடிப்படை அறிவை அவனுமே இப்பொழுது கூறினான் தானே? அதை நினைத்தபடி தான் பல்லவியை முறைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தாள் லாவண்யா.

 

“அவளை விடுங்க ம்மா. பார்த்துக்கலாம். எதாவது ஒரு முடிவுக்கு வரட்டும். அவங்கவங்களுக்குன்னு ஒரு பாயிண்ட் ஆஃப் வியூ இருக்கும்னு புரியலைன்னா அதுக்கு மேல் எண்ண இருக்கு சொல்றதுக்கு?“ என அன்னையை சமாதானம் செய்து கொண்டிருந்தான் கீர்த்திஸ்வரன்.

 

சில நிமிடங்கள் அஞ்சலி, லதா, கீர்த்திஸ்வரன் என பேசிக் கொண்டிருக்க,

 

“இவ ஏன் இன்னைக்கு உள்ள வராமா இருக்கா? கோச்சுட்டு போய்ட்டாளா பாரு!” என அஞ்சலியிடம் லதா சொல்ல,

 

“பல்லவியா? நான் வரும் போது வெளில நின்னாளே! ஏன் என்னாச்சு?” என்றதும் அவளை லாவண்யா பேசியதை சொல்ல,

 

“ப்ச்!” என நொந்து கொண்டவன்,

 

“நீ இரு அஞ்சலி. நான் கூட்டிட்டு வர்றேன்!” என எழுந்து ஈஸ்வர் வர, அவனைப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் பல்லவி.

 

“லாவண்யா ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டாளா? சாரி பல்லவி!” என அத்தனை உணர்ந்து ஈஸ்வர் சொல்ல,

 

“அந்த பொண்ணு யார் என்னை பேச? அதை விடுங்க. என் காலேஜ் என்னாச்சு? நான் அப்ப்ளிக்கேஷன் வாங்க போகணுமா வேண்டாமா?” என்றவளை இப்பொழுது தானே முறைத்து நின்றான் கீர்த்திஸ்வரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!