Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 16

கருப்பன் ஆட்டம் 16

 

 கருப்பன் இருந்த அறையனுள் தர்மன் பொண்ணுத்தாயி அமுதா இருளாயி என நால்வரும் நின்று இருக்க, தன் அன்னையை ஆழ்ந்து பார்த்து விட்டு மற்றவர்களை பார்த்த கருப்பனின் விழிகள் மலர்விழியை தேடியது.



Advertisement

 அவள் அங்கு இல்லை என்பதை உணர்ந்தவன் சாத்தி இருந்த அந்த அறையின் கதவை பார்த்தான்.

 அந்த கதவை திறந்து கொண்டு மலர் எப்பொழுது வருவாள் என்கிற

Advertisement

ஏக்கமும் தவிப்பும் அவன் கண்களில் தெரிந்தது.

Advertisement

 அதனை கவனித்திராத பொண்ணுத்தாயி “ஐயா ராசா..! உனக்கு இப்போ உடம்புக்கு எப்படி இருக்குய்யா..? காயம் ரொம்ப வலிக்குதாப்பு …? என்றவர்,

Advertisement

 எந்த படுபாவி பண்ண வேலைன்னு தெரியலையே என் புள்ளைய இப்படி படுக்க வச்சிட்டானே!” என்று பொண்ணு தாயி புலம்ப ஆரம்பிக்க,

 “எனக்கு ஒன்னும் இல்லத்தா…! நீ புலம்பாத..! சின்ன கீறல் தான் விஷம் கொஞ்சம் உடம்புல ஏறிடுச்சு அதான் மயங்கிட்டேன். மத்தபடி எனக்கு எல்லாம் ஒன்னும் செய்யாது சரியா…!” என்று கூறினார்.

“சரியா சரியா நீ மீண்டு வந்ததே எனக்கு போதும்யா…!” என்று கூறி பின் அமைதியாகிவிட்டார் பொண்ணுதாயி. 

பின் தர்மன் அவன் முகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, அதனை கவனித்த கருப்பன்,

 “என் மூஞ்சில என்னடா எழுதி ஒட்டி இருக்கு..? இப்படி உத்து பார்த்துட்டு இருக்க?” என்று கேட்டான்.

 “இல்லடா மச்சான் உனக்கு ஒரு மணி நேரம் தான்னு அதுக்கு மேல எங்க கையில எதுவும் இல்லன்னு டாக்டர் கெடு கொடுத்துட்டாரே.!

 அப்படி இருக்கும்போது எப்படிடா மச்சான் திடீர்னு உனக்கு சுய நினைவு வந்துச்சு…?” என்று அதி முக்கிய கேள்வியை கேட்டிருந்தான் தர்மன்.

அவனின் கேள்விக்கு கருப்பனின் நினைவு முழுவதும் மலர்விழியின் பேச்சு அடுக்கில் வந்து நின்றது.

“அது ஒன்னும் இல்லடா, நான் போய் சேர்ந்துட்டா…! எங்க நீ எல்லாம் நிம்மதியா இருந்திடுவியோ அப்படின்னு தோணுச்சு..! அதான் எங்கெங்கயோ போயிட்டு மறுபடியும் வந்துட்டேன்…!” என்று கூறினான் கருப்பன்.

“அடப்பாவி….!!! நான் நிம்மதியா இருந்துருவேன்னு நினைச்சு தான் திரும்ப வந்தியா? ஏண்டா நீ செத்த கூட நான் நிம்மதியா இருக்க கூடாது, அது தானடா உங்க எண்ணம்…!” என்று தர்மன் பாவமாக கேட்டான்.

 அதனை கேட்டு கொண்டிருந்த மற்ற மூவருக்கும் அவர்களின் பேச்சில் இத்தனை நேரம் இருந்த இறுக்கம் மறைந்து முகத்தில் புன்னகை அரும்பியது.

பின் சில கணம் கழித்து அமுதாவும் இருளாயும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி இருந்தனர் அவர்களுடன் மலர்விழியும் சென்றிருந்தாள்.

அங்கிருந்து செல்லும் வரையிலும் கூட அவள் அறைக்குள் வந்து கருப்பனை பார்க்கவே இல்லை.

அவள் வருவாளா….! என்று அறைக்கதவை பார்த்துக் கொண்டிருந்த கருப்பனின் விழிகள் தான் பார்த்து பார்த்து பூத்து போயின…!

 நாட்கள் அதன் போக்கில் உருண்டு ஓடியது. மருத்துவமனையில் இருந்து கருப்பன் முழுமையாக குணமாகி வீட்டிற்கு வந்திருந்தான்.

 ஊரில் உள்ள அனைவரும் கருப்பனை வந்து பார்த்து நலம் விசாரித்து சென்றிருந்தனர்.

அதனை அறிந்த மயிலோ தன் அன்னையிடம் வந்தவள் “அம்மா அத்தான் வீட்டுக்கு வந்துருச்சா..?” என்று கேட்டாள். 

 “ஆமாண்டி இன்னைக்கு காலைல தான் வந்துச்சாம்..”

“அப்படியாம்மா..! நீ போய் பாக்கலையா…?” 

“போகணும்டி வீட்டு வேலை எல்லாத்தையும் முடிச்சு சாமான எல்லாம் ஒண்ட ஒதுங்க வச்சுட்டு பொறவு தான் போகணும். அதுக்கெடையில என்குட்ட போக சொல்ற?” என்று அமுதாவும் மயிலும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டே அறையில் இருந்து வெளியில் வந்தால் மலர்விழி.

மலர் மனதிற்குள்ளோ ‘அப்போ அத்தான் வீட்டுக்கு வந்துட்டாரா…! அவரு இப்ப எப்பிடி இருக்காருன்னு தெரியலயே…! அவர போய் பாக்கணும் போல இருக்கே…! எப்படி போய் பாக்குறது..! 

 நம்ம திடீர்னு போய் அவங்க வீட்ல நின்னா அவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க…! எப்பிடியும் உடம்பு முழுசா சரியாகுற வரைக்கும் அவர் வெளியே வர மாட்டாரே…!’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது மயில் அமுதாவிடம், “அம்மா நீ வேணும்ணா வேலை முடிச்சுட்டு பொறுமையா வா, நான் வேணா அத்தை வீட்டுக்கு போய் அத்தான் எப்படி இருக்காருன்னு பாத்துட்டு வரவா…?” என்று கேட்டாள்.

அதற்கு அமுதாவோ “சரிடி நீ போய் பாத்துட்டு வா நான் பொறவு போய்க்கிறேன்” என்று கூறவும், மயில் வீட்டில் இருந்து கிளம்ப எத்தணிக்க அப்பொழுது அவளை இடைமறித்த மலர், 

“ஏய் மயிலு எங்கடி போற…?”

 “அதுவா கருப்பன் அத்தான் உடம்பு சரி ஆகி ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு வந்துட்டாராம்…! அதான் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்னு போறேன்”

அதனை கேட்டு ஒன்று தெரியாதவள் போல் “அப்படியா..! அவரு வந்துட்டாரா..? சரி அப்ப நானும் வரட்டுமா..?”

 “நீயா..! சரி வா” என்றவுடன் 

‘ஐயா ஜாலி..!’ என்று நினைத்துக் கொண்ட மலர் மயிலுடன் சேர்ந்து பொண்ணுத்தாயின் வீட்டை நோக்கி சென்றாள். 

 பொண்ணுத்தாயின் வீட்டில் ஊர்க்கார பெண்மணிகள் அனைவரும் அமர்ந்து கருப்பனின் நிலை பற்றியும் அவனின் இந்த நிலைக்கு காரணமானவன் எவன் என்னும் விதமாக அங்கு பற்பல விதமான பேச்சுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அந்த வீட்டின் படுக்கை அறையில் அமர்ந்திருந்தான் கருப்பன். அவனுடன் அமர்ந்து இருந்த தர்மனோ,

“ஏன் மச்சான் உன்னோட இந்த நிலைமைக்கு காரணம் யாருன்னு உனக்கு தெரியுமாடா…?” என்று கேட்டான்.

“ஏன் தெரியாம..!”

“ஏன்டா… யாருன்னு தெரிஞ்சுமா அமைதியா இருக்க..?” 

“யாருன்னு தெரிஞ்சதுனால தான் அமைதியா இருக்கேன்..!”

 “ஆனா மச்சான்…! அவன் இந்த அளவுக்கு போவான்னு நானும் எதிர்பார்க்கலடா…!”

“அவனுக்கு என் மேல இருக்குற பழைய கோபம் இன்னும் குறையல போலடா.. அதனாலதான் இப்படி பண்ணி இருக்கியான். சரி இதுக்கு அப்புறமாவது என் மேல இருக்குற கோவம் அவனுக்கு குறைஞ்சா சரித்தான்” என்று கூறினான் கருப்பன். 

 “அந்த நேரம் கருப்பனின் வீட்டிற்கு வந்திருந்தனர் மயிலும் மலரும்.

 மயில் முன்னே வீட்டிற்குள் நுழைந்தாள். பின்னால் வந்த மலர்விழி தனது உள்ளம் கவர்ந்த காதலன் வருங்கால கணவன் வீட்டிற்குள் முதன் முதலாக வரும் அந்த நொடி பொழுதை மனதிற்குள் நிரப்பி கொண்டு, தனது வலது காலை எடுத்து அந்த வீட்டினுள் வைத்தாள்.

 அந்த நொடி ஈசானி மூலையில் நின்றிருந்த பல்லி ச்சிக்…ச்சிக்.. ச்சிக்… என்று சத்தம் எழுப்பியது.

 அதனை கவனித்த அங்கிருந்த ஊர்க்கார பெண்மணிகளோ..! “பொண்ணுத்தாயி பாத்தியா..! ஈசான மூலையில் பள்ளி கத்துது.

இனிமே உன் வீட்டுக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும்.

போனதெல்லாம் போச்சுன்னு அதெல்லாம் ஓரங்கட்டிட்டு, நீ உன் மவனுக்கு நல்ல புள்ளைய பார்த்து கட்டி வை..! என்று கூறினார்.

“அட போ மரகதம்..! நீயும் நானும் சொல்லி என்ன ஆகப்போகுது.. அவன்ல அத பத்தி யோசிக்கணும்…! நான் கேட்டு கேட்டு ஓஞ்சு போயிட்டேன்..!” என்று கூறி சடைந்து கொண்டார் பொண்ணுத்தாயி. 

 இவர்களின் பேச்சுகளை கேட்டுக்கொண்டே உள்ளே வந்திருந்த மயில் பொண்ணுத்தாயிடம்,

“அயித்த.. அத்தான் எங்க..?” என்று கேட்டதும், அவளை நிமிர்ந்து பார்த்த பொண்ணுத்தாயோ, 

“வாடி மயிலு..! என்ன…! என்னைக்கும் இல்லா திருநாளா இன்னைக்கு இந்த வீட்டப்பக்கம் வந்திருக்கவ..?” என்று கேட்டார்.

அதற்கு மயிலோ…”சும்மா சும்மா எப்பிடித்த வர்றது? நான் இங்கன வர்றது தெரிஞ்சா.. உன் மருமகங்காரன் சும்மாவா இருப்பியான். அதனாலதான் அத்த இந்த வீட்டப்பக்கம் வரதில்ல.

இன்னைக்கு அத்தான் ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு வந்துட்டுதா கேள்விப்பட்டேன். அதான் அத்தான ஒரு எட்டு பார்த்துட்டு போலாமேன்னு வந்தேன். எங்கத்த அத்தான்..?”என்று கேட்டால் மயில்.

“உள்ளதேன் தருமென் கூட உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கியான்” என்று கூறியவர் அவளுடன் வந்திருந்த மலரை பார்த்து சிநேகமாக புன்னகைத்தவர்,

 “நீயும் போய் பாத்துட்டு வாம்மா?” என்று கூறினார்.  

பொண்ணுத்தாயி கூறியதை கேட்ட மயிலோ மனதிற்குள் “தர்மனா.. இவன் ஒருத்தன் ஒட்டு புல்லு கணக்கா எப்ப பாத்தாலும் அத்தான் கூடவே ஒட்டிக்கிட்டு இருக்க அசர மாட்டியான்” என்று எண்ணியவாரு அறையின் அருகில் வந்த மயில் பட்டென அந்த அறையின் கதவை திறந்தாள். 

 அறைக்குள் கருப்பன் கட்டிலில் படுத்திருப்பதையும், அவனின் அருகில் அமர்ந்து அவனின் காயத்தை பார்த்து ஆராய்ந்து கொண்டிருந்த தர்மனையும் பார்த்தவள், 

“ நாள பின்ன அத்தானுக்கு கல்யாணம் ஆச்சுன்னா கூட இப்படித்தான் ஒட்டு புல்லு கணக்கா பொழுதனைக்கு ஒட்டிக்கிட்டே கெடப்பியா..?” என்று கேட்டவாரு உள்ளே நுழைந்தால் மயில். அவள் பின்னாலேயே அறைக்கு வந்திருந்தால் மலர்.

 அவளின் குரலையும் கேள்வியையும் வைத்து வந்திருப்பது யார் என்று அறிந்து கொண்டவன்,

 “அவனுக்கு கல்யாணம் ஆன பொறவு எனக்கு இங்கன என்ன வேலை..! அவன் அவனோட பொண்டாட்டி கூட ஜாலியா இருக்கும்போது, நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு என் பொண்டாட்டி கூட ஜாலியா இருப்பேன்..!” என்று மயிலை பார்த்து கண்ணடித்துக் கொண்டு கூறினான் தர்மன்.

 அவனின் திடீர் செய்கையில் அதிர்ந்த மயில் ‘படுபாவி பய..! எங்கன வச்சு என்ன வேலை பாக்குறியான் பாரு..?’ என நினைத்துக் கொண்டே அவனை கண்களால் முறைத்தவள் கருப்பனின் அருகில் சென்று,

“அத்தான் உங்களுக்கு இப்ப காயம் எல்லாம் எப்படி இருக்கு? காயத்துல இன்னும் வலி எதுவும் இருக்கா?” என்று பொதுப்படையாக விசாரித்தாள்.

 “இப்ப பரவால்ல மயிலு, நல்லாவே காயம் ஆறி இருக்கு, வலியும் கொறஞ்சு இருக்கு” என்று கூறியவனின் விழிகள் மயிலின் பின்னால் நின்றிருந்த மலர்விழியை நோட்டமிட்டது. 

 மலர் கருப்பனின் காயங்களை கண்களால் ஆராய்ந்து கொண்டே நின்றிருந்தவள், பின் அந்த அறையில் இருந்து வெளியில் செல்ல எத்தணிக்க,

 அதனை அறிந்த கருப்பன் தர்மனிடம், “டேய் தர்மா வீட்டுக்கு விருந்தாளி ஆள் வந்து இருக்கு போய் கலர் வாங்கிட்டு வா” என்று கூறவும்,

“ சரிடா மச்சான் இதோ போய் வாங்கியாரேன்”என்று கூறி விட்டு கருப்பனின் அறையில் இருந்து வெளியேற்றி இருந்தான் தர்மன்.

 “ஐயோ எனக்கு எதுக்குங்க கலரு..! அதெல்லாம் ஒன்னும் வேணாம்” என்ற மலர் அமைதியான குரலில் கூறினாள்.

 “மயிலு உன் ஃபிரண்டுக்கு இவ்வளவு அமைதியால்லாம் பேச தெரியுமா..?” என்று நக்கல் தோணியில் கேட்டான் கருப்பன்.

“ஏன்…? நான் என்ன எப்பவும் சண்டை போட்டுட்டேவா திரியுறேன். நானும் அமைதியா பேசுறவதான்னு உன் அத்தான் கிட்ட சொல்லுடி மயிலு…!” என்று மயிலிடம் கூறினால் மலர்.

“ஏய்..அவர் கேள்வி கேட்டா அவர்கிட்ட பதில் சொல்லுடி.. என்ன எதுக்கு நடுவுல இழுத்து விட்டு வேடிக்கை பாக்குற…?” என்று கூறிய மயில் மலரை பார்க்க,

மலரோ இப்பொழுது கருப்பன் புறம் திரும்பி “என்னை பார்த்து உங்களுக்கு சண்டைக்காரி மாதிரி தெரியுதா..? நான் தான் எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டேவா இருக்கேன்…! அப்படி கேக்குறீங்க…?” என்றாள்.

 “ஆமா..! பின்ன எப்ப பாத்தாலும் நீ என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு தான இருந்த, அதனாலதான் நான் உங்ககிட்ட அப்படி கேட்டேன்..!” கருப்பன் தனது தோளை குலுக்கி கொண்டு கூறினான். 

“அ..அது..அது வேற, இது வேற, நீங்க ஏதாவது தேவை இல்லாத வேலை செஞ்சு இருப்பீங்க…! அதை பார்த்து கேள்வி கேட்டு இருப்பேன்.

 ஆனா இப்போ உங்களுக்கு உடம்புக்கு முடியலன்னு உங்கள பாத்து விசாரிச்சுட்டு போலாம்னு தான் வந்தேன். அத தவர உங்ககிட்ட சண்டை போடுறதுக்கு ஒன்னும் வரல..! என்றவள் மயிலை பார்த்து “ஏய் மயிலு வாடி போலாம்..!” என்று அழைத்தாள் 

 அதற்கு மயிலோ “ஏய் மலரு வந்தது வந்துட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்துல கலர் வந்துரும் குடிச்சிட்டு போலாம்டி..! என்ற கூறினாள்.

“ நீ குடிச்சிட்டு வா.. நான் கிளம்புறேன்..!” என்று மலர் கூற,

“மயிலு ஒரு ரெண்டு நிமிஷம் வெளிய இரு..!” என்று கூறினான் கருப்பன்.

 அவன் கூறியது ஒன்றும் புரியாமல் கருப்பனை திரும்பி பார்த்தால் மயில். 

“மயிலு நான் சொன்னது கேட்டுச்சா? இல்லையா? ஒரு ரெண்டு நிமிஷம் வெளியே இரு..!” என்று கூறிய கருப்பனின் வார்த்தைகளோ, மயிலிடமிருக்க, விழிகளோ மலரிடம் நிலை குத்தி இருந்தது.

 

மயில் மலரையும் கருப்பனையும் மாறி மாறி ஒரு பார்வை பார்த்தவள் “சரிங்க அத்தான்” என்று கூறியவள் மலரின் அருகில் வந்து அவளின் காதுகளில் கிசுகிசுப்பாக,

 “அடியே மலரு தேவை இல்லாம எதுவும் வாய் பேசிட்டு இருக்காத, அத்தான் ஒன்னு ரெண்டு முன்ன பின்ன சொன்னாக்கூட பொறுமையா கேட்டுட்டு வந்து சேரு…!” என்றவள் 

“சரிங்க அத்தான். நான் வெளியே அத்தைக்கு ஒத்தாசையா இருக்கேன்” என்று கூறி அறையில் இருந்து வெளியேறி இருந்தாள். 

கருப்பன் வேட்டை தொடரும்….

💝கருப்பனின் காரிகையவள் 

💝💝💝

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!