தன் இருகைகளிலும் இட்டுக் கொண்டிருந்த மருதாணிப் பூச்சை ரசித்தபடி தன் வீட்டில் சோபாவில் அமர்ந்து இருந்தாள் ரேஷ்மா!
மருதாணி?
அதுவும் ரேஷ்மா?
அதுவும் இரு உள்ளங்கைகளிலும் வெறும் வட்டமும் அதை சுற்றியிருக்கும் சிறிய புள்ளிகளுமான பழையக் காலத்து டிசைனில்!
Advertisement
நிஜம் தான்!
அதை வைத்து விட்டது சாட்சாத் யுவியின் அம்மா பத்மா!
அன்று காலையில் இருந்தே நடந்தவை எல்லாம் அவளுக்கு முற்றிலும் புதிய அனுபவங்களைத் தந்திருந்தது!
Advertisement
அன்று காலையில் அவளும் ரேவந்தும் அவர்களின் கார்மென்ட் ஃபேக்டரிக்கு சென்றார்கள், வெகு நாட்களுக்குப் பின் ஒன்றாக சேர்ந்து.
Advertisement
ரேவந்துடன் அதிக நேரம் இருக்க வேண்டுமென்றே நினைத்து அவளது தினசரி வேலைகளை மாற்றியும், அன்று வேறு யாரையும் சந்திக்காமல் இருக்கும்படியும் மதுராவிடம் சொல்லி நேரம் ஒதுக்கிக்கொண்டு அவனுடன் சென்றாள்.
மதுராவையும் கூட சீக்கிரமே வீட்டுக்கு கிளம்பும்படி சொல்லிவிட்டாள்.
இருவரும் அங்கு சென்று சேர்ந்து ஆடைகள் உற்பத்தியாவதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த போது ரேவந்த் சொன்னான்.
“அப்படியா? என்ன ஐடி உங்களுது? நான் கிட்டத்தட்ட எல்லாத்துக்குமே ரிப்ளை பண்ணிடுவேனே!”
பத்மா, அவர் ஐடியை சொல்லி விட்டு,
“உன் பொட்டிக்ல தான் நான் சாரி வாங்குவேன். என்னோட புது ஸாரி கலெக்சனில் பெரும்பாலும் உன்னோட பொட்டிக்கில் வாங்கியது தான்!” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது இடையிட்டார் தனா.
“ஆமா.. இந்த கர்னாடக இசைப் பாடகிகள் எல்லாம், டிசம்பர் சீசன் அப்போ உன் பொட்டிக்ல தான் ஸாரி வாங்குவாங்களாம்.
அதைக் கேள்விப் பட்டுட்டு தான் இவளும் வாங்க ஆரம்பிச்சா!
எனக்கு அவ்வையார் பாட்டு ஒண்ணு தான் ஞாபகம் வருது, இவ செய்றத பார்க்கும் போது!
கான மயிலாட கண்டிருந்த
வான் கோழின்னு ஒரு பாட்டு!
அது மாதிரி புலியை பார்த்து பூனை சூடுப் போட்டுக் கொண்டது போல,
காலனிக் காரவங்க இவ்வளவுக்கு வச்சுருக்க பெயர் சித்ரா தேவிப் பிரியா!
அது மாதிரி தான் கேக்கவே நாராசமா இருக்கும்!
என்னைத் தேடாதீங்கன்னு எங்காச்சும் லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடிப் போயிடலாம் போல இருக்கும்!
ஆனா எங்க போக? நானெல்லாம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
ஆயுள் தண்டனை! என்று மனைவியைக் கிண்டலடித்தார் தனசேகர்!
தனா.. என்று செல்ல கோபத்துடன் முறைத்தார் பத்மா!
அப்பாவின் கூட சேர்ந்து கொண்டான் யுவியும்!
“அது மட்டுமா.. ஒரு எய்ட்டி ப்ளஸ் பாட்டி ஒருத்தர், என் கிட்ட வந்து, தம்பி உன் அம்மா கிட்ட சொல்லுடா.. கொஞ்சம் மைக்கை ஆஃப் பண்ணி வச்சுட்டாவது பாட சொல்லுடா. என்னால முடியல!
நானே நைட் எல்லாம் டேப்லெட் போட்டுகிட்டும் தூக்கம் வராம விடிய கார்த்தால தான் தூங்குறதே!
அதயும் உன்னோட அம்மா கெடுக்கிறா என்று ஒரே கம்ப்ளைன்ட்!” அவன் பங்குக்கு கிண்டலடித்தான்!
அவர்கள் குடியிருக்கும் அந்த காலனியில், காலனிவாசிகளின் நன்கொடையால் கட்டப்பட்ட சின்ன ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது!
பெயர் தான் பிள்ளையார் கோவில்.
ஆனால் கிட்டதட்ட எல்லா தெய்வங்களும் இருந்தார்கள்.
முருகன், ஐயப்பன், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம், சப்தகன்னியர், பைரவர், ஹயக்ரிவர் உள்ளிட்ட அனைத்து கடவுளர்களும் மினியேச்சர் வடிவில் இருந்தார்கள் அந்த நவீன கோவிலில்!
அதற்கு தாராளமாக நன்கொடை தருபவர் பத்மா!
போன வாரம் கூட யூ.பி.எஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்.
கோவில் நிர்வாகம் அப்படியே அவரிடம் சிசிடிவி கேமராவும் வாங்கி தர சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.
இத்தனை விஷயங்கள் கோவிலுக்கு அவர் செய்வதால், கிடைத்த சலுகை,
அங்கே அவருக்கு மைக் செட்டப் எல்லாம் செய்து பாட்டு பாட ஏற்பாடு!
கொஞ்சம் மோசமாக தான் பாடுவார் அவர்!
அதை தான் கிண்டல் செய்கிறார்கள் தந்தை மகன் இருவரும்!
“பொய்.. பொய்.. ரேஷ்மா! இவங்கள நம்பாத!
ரெண்டு பேரும் இப்படி தான் கூட்டு சேர்ந்துட்டு என்னை கலாய்ப்பாங்க!
நீ நம்பாதே! என்ன தனா இதெல்லாம் ரேஷ்மா என்னைப் பத்தி என்ன நினைக்கும்?” அவர் குறைப்பட்டுக் கொள்ள,
“ரேஷ்மா என்ன நினைக்கும்? சரியா தான் நினைக்கும்” என்றார் தனா, இன்னமும் கிண்டலை விடாமல்!
பில்ட்டர் காபி போடுறேன்னு காபித் தூளை வேஸ்ட் பண்ணிட்டீங்க.. நான் மனுசியா இருக்க மாட்டேன்
இப்படி மணிக்கொரு தரம் போன் வந்துட்டே இருந்துச்சு.
பேசாம நீ அமெரிக்காவுக்கே போய்டு சிவாஜின்ற மாதிரி பிரண்ட்ஸ் எல்லாம் பேசாம நீ ஊருக்கே போய்டு பத்மா என்று அவங்க பிரண்ட்ஸ் கிண்டல் பண்ணவும் தான் விட்டாங்க.
டூர் போனாக்க கூட அவங்களுக்கு அப்பா நினைப்பும் வீட்டு நினைப்பும் தான்!” என்றான் யுவி!
“நைஸ்” என்று சொல்லி புன்னகைத்தாள் ரேஷ்மா!
“என்ன தான் நாங்க ஒருத்தர ஒருத்தர் கிண்டல் பண்ணினாலும்
அவர விட்டுட்டு நானோ, என்னை விட்டுட்டு அவரோ ஒரு நாள் கூட இருக்க மாட்டோம்!
செத்து போனா கூட ரெண்டு பேரும் ஒண்ணா தான் போகணும்ன்றது என்னோட ஆசை!
அதுக்கு எல்லாம் கொடுப்பினை இருக்கான்னு தெரியல!
ஆனா அதுக்கு முன்னாடி யுவிக்கு ஒரு நல்ல குடும்பம், எங்கள மாதிரியே புரிதலோட இருக்கும் ஒரு மண வாழ்க்கை அமைய வேண்டும்!
அது தான் இப்ப என்னோட பிரேயர்!
அப்படியே எங்களுக்கு சேர்ந்து சாவ கொடுத்து வைக்கலனா கூட, எனக்கு அவருக்கு முன்னாடி சுமங்கலியா செத்துடனும்னு எல்லாம் ஆசை இல்லை!
என்னைப் பொறுத்தவரை அது சுயநலத்தின் உச்சம்!
நம்மை லவ் பண்றவங்கள தனியா தவிக்க விட்டுட்டு போகணும்னு நினைக்கிறது பாவம்!
அதனால நான் இருந்து அவரை நல்லபடியா அனுப்பி வச்சுட்டு அப்புறமா அவர் பின்னாலேயே சீக்கிரமா போய்டணும்!
நான் இல்லாம அவரால ஒருநாள் கூட இருக்க முடியாது!
ரொம்பவும் தவிச்சு போய்டுவார்!
அப்படி ஒரு தண்டனைய அவருக்கு கொடுத்துட்டு போனா, நான் அவரை லவ் பண்ணவே இல்லன்னு அர்த்தம்!
இப்பவும் என்னோட பிரேயர் அது தான்” என்று பத்மா சொல்லும் போது கொஞ்சம் கண்கள் கலங்கி விட்டன ரேஷ்மாவுக்கு!
“என்னடா ஆண்ட்டி இப்படி பேசுறாங்கன்னு நினைக்காத ரேஷ்மா.
நாம லேடிஸ் எல்லாம் கடைசி காலத்தில் மகனை , மருமகளை இல்லன்னா மருமகனை அனுசரிச்சு அவங்க கூட கடைசி காலத்தை கழிச்சுடுவோம்!
ஆனா ஆம்பளைங்களால அது முடியாது!
என்னைப் பொறுத்தவரை கணவனை இழந்த விடோ பெண்களை விட, வயதான விடோயர் ஆண்கள் தாம் ரொம்பவும் பாவம்!
அப்படி ஒரு நிலைக்கு அங்கிளை விட மாட்டேன்!” என்று சொல்லியவர், தலையை உலுக்கிக் கொண்டு,
ரொம்ப உயிர்ப்போட இருக்கு! ரொம்ப பிடிச்சுருக்கு” என்று பேசியபடி அவர்கள் வீட்டில் மாலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது, பத்மா அவளுக்கு ஒரு மேக்கப் செட் பரிசளித்தார்!
“என் யூஎஸ் ஃபிரன்ட் எனக்கு கிப்ட் பண்ணினா. நான் என்ன பண்ண போறேன் இதை என்று சொல்லி,
கூடவே வேறு சில மங்கலப் பொருட்களுடன், கொஞ்சம் அரைத்த மருதாணியும் கொடுத்தார்!
“அம்மா. இது எதுக்கு ரேஷ்மாவுக்கு. அவங்க அத எல்லாம் போட்டுக்க மாட்டாங்க”. என்றான் யுவி.
“அப்படி இல்லடா . இதுவும் ஒரு மங்கலப் பொருள் தான்!
நான் இங்க நம்ம காலனியில இருக்கிற லேடிஸ்க்கு எல்லாம் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் கொடுப்பது தான்!
நீயும் வாங்க்கிக்கோ ரேஷ்மா.
வச்சுக்கணும் கூட அவசியம் இல்ல!”
“இல்ல ஆண்ட்டி எனக்கு வச்சு விட யார் இருக்கா அங்க? அதான் யோசிக்கிறேன்.”