Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி ♥️31

யாதுமாகி #31

மனைவி குழந்தையை கவனிப்பதைவிட தனக்கு எதுவும் பெரிதாய் வேலை இல்லை என்பது போல் ஒன்பது நாளும் மருத்துவமனையிலே வாசம் செய்தான் விஷ்ணு.

முக்கிய வழக்குகளில் விஷ்ணு ஆஜர் ஆகாமல் அவனுடைய ஜூனியர்கள் வாய்தா வாங்கினர்.



Advertisement

 மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து மாமியார் வீட்டில் மனைவி குழந்தையை சேர்ப்பித்து விட்டே வீடு வந்து சேர்ந்தான்.

  அவள் பிள்ளை பெத்தாளா? இவன்தான் பெத்துக்கிட்டானான்னு சந்தேகமா இருக்கு. முகத்தை அஷ்ட போணலாய் முறுக்கினார் ஜோதி.

குழந்தை பிறப்பிலும் வளர்ப்பிலும் இருவருக்கும் பங்கு இருக்கு. நான் பிள்ளை பெறணும்னு இல்லை, என் பொண்டாட்டி பெற்றாலும் நான் பெத்த மாதிரி தான்.முகத்தில் அறைந்தார் போல் பதில் உரைத்து விட்டுப் போனான் விஷ்ணு.

Advertisement

 ஒரு நாளைக்கு பத்து முறையாவது நேத்ராவுக்கு போன் செய்து விடுவான். அவள் உறங்கியிருந்தாலோ குளிக்க சென்றிருந்தாலோ வேதத்திற்கு அழைத்து பேசி விடுவான்.

Advertisement

 நேத்ரா கிண்டல் செய்வாள் லாயர் சார் பிள்ளையை விட்டுட்டு இருக்க முடியலன்னா இங்கேயே ஆஃபீஸ் போட்டுடுங்க!

ம்ம்ம்ம்…பொண்டாட்டியை விட்டுட்டு கூடத்தான் இருக்க முடியல. அவள் காது மடல் சிவந்து கன்னம் சிவப்பேறும் அவன் குழைவில்.

 17-ஆம் நாள் குழந்தைக்கு தீட்டு கழிக்க எந்த ஏற்பாட்டிலும் ஜோதி கலந்து கொள்ளவில்லை.

Advertisement

 என்னென்ன வாங்க வேண்டும் என்று அன்னம் சொல்ல விஷ்ணுவே வாங்கி வந்தான்.

 வேண்டா வெறுப்பாய் ஜோதியும் கிளம்பினார்.

அண்ணன் மகனை பார்க்க போகும் மகிழ்வில் வினிதாவும் அவள் மகள் தியாவும் குதுகளித்தனர்.

 விடுமுறை இல்லை என மருத்துவம் படிக்கும் அஸ்விதா வர இயலாமல் போனதற்கு வருந்தினாள்.

 காலையிலேயே ஐயர் வந்து ஹோமம் வளர்த்து தாய், தந்தை குழந்தையை அமர்த்தி புண்ணியவஜனம் செய்து பசுங்கோமியம் தெளித்து தீட்டு கழித்து விட்டுப் போனார்.

சற்று நேரத்தில் வேணு குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். பரவாயில்லை வேணு நேத்ரா வீடும் நல்லா பெருசா தான் இருக்கு! ஜோதிக்கு கேட்கும்படி உரக்க கூறினார் அன்னம்.

 என்னம்மா இப்படி சொல்லிட்ட? நேத்ரா அப்பா NLC சீஃப் எஞ்சீனியர்மா.

மேலே நாலு போர்ஷன் வாடகைக்கு விட்டிருக்காங்க.

டவுன்ஷிப் ஆர்ச் கேட் பக்கத்தில் ஆறு கடை வாடகைக்கு விட்டிருக்காங்க.

சொந்த ஊரில் கூட வீடு நிலம் இருக்கும்மா…வேணு பெருமிதமாய் கூற ஜோதிக்கு முகம் கறுத்தது.

போதும் போதும் உங்க சம்மந்தி வீட்டு புராணம். காதில் ரத்தம் வருது. கோபமாய் கதவை அடித்து சாத்தினார் ஜோதி.

“———————-”

சம்மந்தி குடும்பத்தை மரியாதையுடன் வரவேற்று விழுந்து விழுந்து உபசரித்தனர் வெங்கியும் வேதாவும்.

 வினிதா ஆவலுடன் ஓடிப்போய் அண்ணன் மகனை வாங்கிக் கொண்டாள்.

 அண்ணி சாரி உங்க டெலிவரி டைமில் வர முடியல. பெங்களூரில் பலத்த மழை அப்புறம் தியா அப்பாக்கு ஃபீவர். மெய்யாகிலுமே வருத்தம் கொண்டாள் வினிதா.

பரவாயில்லை அண்ணி எனக்கு புரியுது. தியாவை அன்புடன் அணைத்துக்கொண்டாள்.

பெரியவர்களை விட தியாகுட்டி தான் தம்பி பாப்பா தம்பி பாப்பா என்று கொஞ்சி மகிழ்ந்தாள்.

சரி நல்ல நேரம் முடியறதுக்குள்ள குழந்தைக்கு காப்பு போட வேண்டாமா? என்றார் அன்னம்.

 பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டு குழந்தைக்கு கொண்டு வந்த உடை, நகைகளை வைத்து ஆரத்தி காண்பித்து நேத்ராமடியில் குழந்தையை வைத்து தரையை இழைத்து போட்டு வைத்து,குழந்தையின் கழுத்தில் பால்மணி, கைக்கு கருப்பு வளையல்,வசம்பு, காலுக்கு பஞ்சலோக காப்பு,இடுப்புக்கு எருக்கு கயிறு,பட்டு சட்டை போட்டு சர்க்கரை தண்ணீர் தொட்டு வாயில் வைத்தனர்.

 பொக்கை வாய் திறந்து அமிர்தம் ஒழுகி கையை காலை உதைத்து தன் சொந்தங்களை பார்த்தது குழந்தை.

 விஷ்ணு போய் நேத்ராகூட உட்காருப்பா.

அவங்களுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க!என்றார் அன்னம்.

 பூசணிக்காய் சுற்றி வெளியில் கொண்டு போய் உடைத்து விட்டு வந்தார் வெங்கி.

 வேதம் தாங்கள் வாங்கிய தங்க சங்கிலியும் தங்க காப்பும் போட்டார்.அன்னம் கொள்ளுப்பேரனை தூக்கி தங்க கொலுசை போட்டு விட…வினிதா தான் வாங்கி வந்த மோதிரத்தை குட்டி விரலுக்குள் சொருகிவிட அது கழன்று விழுந்தது.

 அம்மா தம்பி பாப்பா கை குட்டிக் கை நான் போட்டுக்கவா? தியா சொல்ல எல்லோரும் சிரித்து விட்டனர்.

நினைத்த அளவிற்கு பிச்சைக்கார குடும்பம் இல்லை போல.. அதுதான் ஓவரா ஆடறா..உள்ளுக்குள் தாளித்துக் கொட்டினார் ஜோதி.

வாங்க வாங்க செல்லம்.. பாட்டி பாருங்க! வேணு குழந்தையை கொஞ்சியப்படியே ஜோதியின் மடியில் படுக்க வைத்தார்.

எதுவும் சொல்ல முடியாத நிலையில் குழந்தையை அணைவாய் பிடித்துக் கொண்டார் ஜோதி.

 பால்மணம் வீசும் குழந்தையின் மென்மை, வெள்ளை வெளேர் என்ற நிறம், கருந்திராட்சையாய் உருளும் அதன் கருவிகள், சுருள் சுருளான கேசம். கொள்ளை அழகான குழந்தை இரும்பான ஜோதியை லேசாக இளக்கியது.

 தான் ஆடாவிட்டாலும் தன் தசை அடியது. குழந்தையின் பிஞ்சு விரல் பற்றிய போது அவருக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

 என்ன பார்க்கறீங்க? பாட்டியை பார்க்கறீங்களா செல்லம். அதன் மோவாய் பற்றி முத்தமிட்டவர்…பாட்டி பட்டுபுடவை கட்டியிருக்கேன் உச்சா போயிடாதீங்க தங்கம் என்றார்.

 கடுப்புடன் மருமகளை முறைத்த அன்னம் பேரக்குழந்தை உச்சா போனா அது கோடி தீர்த்தத்தை விட புண்ணியம்,அதுக்கு ஒரு கொடுப்பினை வேண்டும் என்றார்.

அனைவரும் வடை பாயசத்துடன் விருந்து உண்டு ஓய்வெடுத்தனர்.

 நேத்ராக்கு கொடுக்க வேண்டிய பத்திய உணவு,மருந்துக் குழம்பு, லேகியம் பற்றி எல்லாம் அன்னம் சொல்ல கவனத்துடன் கர்ம சிரத்தையாய் கேட்டுக் கொண்டார் வேதம்.

அம்மா அடுத்த மாசம் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாமா? ஆர்வமாய் கேட்டார் வேணு.

 வேண்டாம் அங்கே வைத்து யார் பார்க்கிறது? கைக்குழந்தையை வைத்து பராமரிக்க எனக்கு தெரியாது. ஜோதி அவசரமாய் மறுத்தார்.

 இல்லப்பா… நேத்ராக்கு ரொம்பவே பிளட் லாஸ் ஆகி வீக்கா இருக்கா அவ கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டும்! முகத்தில் அறைந்தார் போல் சொன்னான் விஷ்ணு.

அத்தை நீங்க மட்டும் ஒத்தையில் எப்படி சமாளிப்பீங்க? குழந்தையை பார்த்துக்க ஒரு ஆள் ஏற்பாடு பண்ணிக்கோங்க கரிச்சணையாய் கூறும் மருமகனை பெருமையாய் பார்த்தார் ஜோதி.

அட என் பிள்ளையை இவங்க குடும்பத்துக்கு நேர்ந்து விட்டுட்டேன்!என்னம்மா தாங்குறான் பொண்டாட்டியோட சேர்த்து அவ அம்மாவையும். அவர் காதில் புகை வராதது தான் குறை.

 ஏற்கனவே இவளை கையில் பிடிக்க முடியாது. இதுல ஆஸ்திக்கு ஒரு ஆம்பள புள்ளைய வேற பெத்துட்டா இனி இவ அலப்பறை தாங்காதே…ஜீரணிக்க இயலாது கருகிக் கொண்டிருந்தார்.

ஒருவேளை நேத்ராவிற்கு பெண் குழந்தை பிறந்திருந்தால் ஜோதி மனம் சாந்தப்பட்டு இருக்குமோ என்னவோ?

 அனைவரும் விடை பெற்று கிளம்ப… நேத்ராவிடம் வந்த ஜோதி,இந்த பாரும்மா அழகு போயிடும்னு குழந்தைக்கு பால் கொடுக்காமல் இருந்துடாதே… போகிற போக்கில் அக்கறை போல் அள்ளிவிட்டு போனார்.

 பாட்டி நீங்க கிளம்புங்க!நான் ஈவினிங் வரேன்.அவர்களை அனுப்பி வைத்தான்.

 தம்பிபாப்பாவை கூட்டிட்டு தான் போகணும் என்று தேம்பித் தேம்பி அழுத தியாவை அழுகையினூடே தூக்கி காரில் திணித்துக் கொண்டு கிளம்பினார்கள்.

“——————–”

 அலை அடித்து ஓய்ந்தார் போல் இருந்தது… வேதம் அயர்ந்து உட்கார்ந்து விட்டார்.

 வெங்கி அறைக்குள் போய் படுத்து விட்டார்.

உறங்கிய குழந்தையை தூக்கிக் கொண்டு நேத்ரா போக…அவள் பின்னோடு வால் பிடித்துக் கொண்டு போனான் விஷ்ணு.

குழந்தையை துளியில் போட்டுவிட்டு உடைமாற்ற முயன்ற நேத்ராவின் கரம் பற்றி கட்டிலில் அமர்த்தினான்.

 இப்போ ஏன் இந்த புடவையை மாற்றப் போற? குழைவாய் கேட்டவனை முறைத்து பொசுக்கினாள்.

ஐயோ சூடு தாங்கலைமா…எதுக்கு இந்த விரைப்பு முறைப்பு எல்லாம்? அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டான்.

 உங்க அம்மா வரலைன்னு யாரு அழுதா? வெடுக்கென கேட்டவளை சினம் பொங்க பார்த்தான்.

என்ன பேச்சு பேசுற? புரிந்து தான் பேசுறியா?பொறுமையை இறுக்கி பிடித்தான்.

ஏன் நான் என்ன சரக்கடித்து போதையிலா இருக்கேன்?

 வந்தாங்க இந்த வீட்டை விலைக்கு வாங்குற மாதிரி வளைத்து வளைத்து பார்த்தாங்க,வந்த கடமைக்கு குழந்தையை தூக்கினாங்க, வேண்டா வெறுப்பா சாப்பிட்டாங்க,இதெல்லாம் கூட பரவாயில்லை…போற போக்குல ஒரு குண்டை வீசிட்டு போறாங்க.

குழந்தைக்கு பால் கொடுக்காமல் விட்டு விடாதே…ரொம்ப அக்கறை பேரக்குழந்தை மேல.

நான் என்ன கடமைக்கு பிள்ளை பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சிருக்கேனா?என் பிள்ளையை எப்படி வளர்க்கணும்னு எனக்கு தெரியும்! சோள பொறி போல் பொறிந்து தள்ளினாள்.

 ஜோதி இருக்கும்போது இதெல்லாம் சொல்ல வேண்டியது தானே? கடுகடுத்தான்.

ஏன் உங்க அம்மாவை கண்டால் எனக்கு கிடு கிடுன்னு நடுங்குதாக்கும்.

 எங்க வீட்ல வச்சு எதுவும் பேசக்கூடாதுன்னு அமைதியா இருந்துட்டேன்.இல்லைன்னா என்ன கேட்டு இருப்பேன்னு எனக்கே தெரியாது! கடுஞ்சனத்தில் அவளுக்கு மேலும் கீழும் மூச்சு வாங்கியது.

கொஞ்சம் தண்ணி குடித்து ரிலாக்ஸ் பண்ணிட்டு அப்புறமா கன்டினியூ பண்ணு! வாட்டர் பாட்டிலை நீட்டினான்.

 நக்கலு?கடுமையாய் முறைத்தாள் .

நக்கலும் இல்லை விக்கலும் இல்லை.வீடு தேடி வந்த வந்தால் அது விரோதியா இருந்தாலும் ஏன் வந்தாங்கன்னு என் பொண்டாட்டி கேட்கக்கூடாது! அது நல்ல பழக்கம் இல்லை.சற்று உஷ்ணமான தொணியிலேயே கண்டித்தான்.

 அவள் பதில் பேசாது இறுகி நிற்க…எங்கம்மா கோல்டு, டைமன் அப்படியெல்லாம் நான் சொல்ல வரல! அதுக்காக அவரங்களை குறை சொல்றதா நினைத்து உன்னை நீ தாழ்த்திக்காதே…அவ்வளவு தான் சொல்வேன்.

அவன் அமைதியாக படுத்து விட…சற்று நிதானித்து அவன் அருகில் படுத்தவள் சாரி என்றாள் அவன் மார்பில் தலை சாய்த்து.

 லூசு ஏன்டி இப்படி கண்ணா பின்னான்னு படுக்கிற? பிள்ளை பிறந்து 17 நாள் தான் ஆகுது. ஸ்டிச்சிங் பிரிந்திட போகுது… அடிவயிறு வலிக்கும் தலையில் அடித்துக் கொண்டான்.

 நீங்க வேதாவை விட மோசம். அதுதான் எனக்கு அட்வைஸ் பண்ணி கொல்லுதுன்னு பார்த்தேன், நீங்க அதைவிட ரொம்ப பண்றீங்க!சலித்துக் கொண்டவளை மிக மெல்ல மென்மையாய் அணைத்து கொண்டான்.

 உன் நல்லதுக்கு தானேடி சொல்றாங்க!அவள் கன்னத்தில் இதழ் ஒற்றினான்.

உங்களால் எனக்காக பிரசவ வலி தான் தாங்க முடியாது எனக்காக இந்த லேகியத்தை சாப்பிடுங்களேன்.மனோரமா பிரசவ நடகாய லேகியம் என்ற பாட்டிலை காட்டினாள்.

வ்வ்வ்வே என்றான் அந்த பாட்டிலில் இருந்து கிளம்பிய மருந்து வீச்சில்.

 இப்போ புரியுதா? பெண்ணா பிறந்தா எவ்வளவு கஷ்டம்னு. அவன் தலையில் முட்டினாள்.

 இந்த கஷ்டத்தை எல்லாம் ஒரு ஆணால் சகிக்க முடியாது என்றுதான் பெண்களுக்கு பிள்ளை பெறும் வரத்தை கொடுத்திருக்கிறது இயற்கை.

 உங்களுக்கு பேச சொல்லியாக கொடுக்கணும்?

 அவன் தாடியை பற்றி வலிக்கும்படி இழுத்தாள்.

வலிக்குது…. முகம் சுருக்கினான்.

எடுத்துட வேண்டியது தானே…?

 மூணாவது மாசம் திருப்பதி போய் தாடி எடுத்து மொட்டை போட்டுடனும் என்றான்.

மொட்டை வேண்டாம் நல்லா இருக்காது.முகம் சுழித்தாள்.நேத்து அப்படி சொல்லக்கூடாதுடி தெய்வகுத்தம் ஆகிடும் அவள் வாய் பொத்தியவன் நீயும் குழந்தையும் நல்ல விதமா வர வரைக்கும் என் உயிர் என்கிட்ட இல்லை.

நான் அந்த ஏழுமலையான் மேல தான் பாரத்தை போட்டேன். நெகிழ்ந்து பேசியவனை அனைத்து முத்தமிட்டாள்,அதில் அவ்வளவு காதலும் பெருமையும் முகிழ்ந்து இருந்தது.

“———————–”

விஷ்ணு வாரம் இருமுறை மகனோடு மனைவியையும் கொஞ்ச வந்து விடுவான்.

 குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் வேதமும் வெங்கியும் பூரித்துப் போனார்கள்.தாங்கோ தாங்கு என்று தாங்கினார்கள் தன் செல்லம் பெற்ற செல்லத்தை.

 வீடு தேவலோகம் போல அவர்களுக்கு தோன்றியது வீட்டிற்கு ஒரு தனி அம்சம் வந்திருந்தது அந்த மழலையின் வரவால்.

 குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்று வேதமும் வெங்கியும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர்.

 அலுவலகம் முடிந்து வந்து உடை மாற்றிய உடனே வெங்கி ஓடி வந்து பேரனை அள்ளிக் கொள்வார்.

 தன் பெற்றவர்கள் தன் குழந்தையை சாமியாய் கொண்டாடுவது கண்டு நேத்ராவிற்கு கண்கள் கலங்கியது. ஏனோ தன் மாமியாரின் கொடூர முகம் கண் முன் வந்து போனது.

மூன்றாம் மாதம் பெயர் சூட்டும் விழா வெகு விமர்சையாக நடந்தது.

 பிரணவ் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

 இப்போது பிரணவ் தான் வேத விலாசின் முடிசூடா இளவரசன்.

 வேதம் மகளுக்கும் பேரனுக்கும் தொண்டு செய்வதை பாக்கியமாய் எண்ணினார்.

 நாட்கள் உருண்டோட…குழந்தை முகம் பார்த்து சிரிக்க ஆரம்பித்தது.

 ஐந்தாம் மாதம் குழந்தையை அழைத்துப் போக இருப்பதாக விஷ்ணு சொல்ல…வேதம் முகம் வாடிப் போனது.

 ஏங்க ஏழாம் மாசம் போகலாமே… தயக்கமாய் கேட்டாள் நேத்ரா.

 இல்லம்மா…எனக்கு இங்கே அடிக்கடி வந்து போக ஒரு மாதிரி இருக்கு.. அது மட்டும் இல்லாம நீ இல்லாம வீடு வீடாகவே இல்லை. எனக்கு வீட்டுக்கு போகணும்னு தோணவே இல்லை.கரம் பற்றி உருகியவனிடம் எதுவும் மேற்கொண்டு பேச இயலாத நிலை.

 நல்ல நாள் பார்த்து குழந்தையை அழைத்துப் போக வந்தனர் விஷ்ணு குடும்பத்தினர்.

அடக்கி அடக்கி பார்த்தும் வேதத்தின் கண்ணீர் நின்றபாடில்லை. குழந்தை இல்லாமல் எப்படி இருப்பது? வேறுச்சோடி விடுமே…

 தனக்கு இன்னொரு குழந்தை இருந்திருக்கலாம் என்று பல ஆண்டுகள் கழித்து அவர் ஏங்கினார் துடித்தார்.

வெங்கடாசலம் மனைவியின் காலம் பற்றி ஆறுதல் படுத்தினார். கிளம்ப மனமே இல்லாமல் நேத்ரா மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பினாள் நேத்ரா.

 குழந்தை பத்திரம் பத்திரம் என ஆயிரம் முறையாவது சொன்னவர்,நேத்ரா ரொம்ப வீக்கா இருக்கா கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க! கலங்கிய விழிகளுடன் விடை கொடுத்தார்.

வேதம் மகளையும் பேரனையும் வழி அனுப்பிவிட்டு போர்டிகோ தூணில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார்.

 வேதா பேரன் என்ன ஃபாரினா போறான்? இதோ இருக்க கரைமேடு,15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கப் போறான்.

 தோனும்போதெல்லாம் போய் பார்க்கலாம். மனைவியை சமாதானம் செய்ய முயன்று அவர் நொறுங்கிக் கொண்டிருந்தார்.

 நமக்கு ஒரு மகன் இருந்து அவன் குழந்தையா இருந்தா நம்மை விட்டுப் போகாதுல்ல வேதம் விம்மினார்.

 அடி லூசு!நீ எந்த காலத்தில் இருக்க?யார் இந்த காலத்தில் பெரியவங்க கூட இருக்க பிரியப்படுறாங்க? உன் மாப்பிள்ளை மாதிரி நூத்துல ஒருத்தர் தான் குடும்பம் பெத்தவங்க என்ற செண்டிமெண்டில் இருப்பாங்க.

மனைவியின் தோள் பற்றி அழைத்துப் போனார்.

“——=——”

இடம் மாறியதால் படுத்தி எடுத்து விட்டான் குழந்தை.

 குளிப்பாட்டி பவுடர் பூசி ஃபிரஷ் ஆக வைத்திருந்தால் சற்று நேரம் ஜோதி தூக்கி வைத்து கொஞ்சுவார்.குழந்தை அலறி அழும்போது கண்டுகொள்ளாமல் போய்விடுவார்.

 இரவில் கண் விழித்து நேத்ரா ஒருத்தியாகவே பார்த்துக் கொள்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளானாள்.

தேர்வு முடிந்து விடுமுறையில் அஸ்விதா வந்தாள்.

 அண்ணன் மகனை ஆசை தீர கொஞ்சி மகிழ்ந்தாள்.

குழந்தை அஸ்விதா உடன் இருக்க…சற்று நேரம் தூங்கி எழலாம் என்று கண்ணயர்ந்து விட்டாள் நேத்ரா.

நல்ல உறக்கம், நெடு நேரமாய் குழந்தைக்கு பால் புகட்டாததால் மார்பு இறுகி பால் கசிய ஆரம்பித்து விட்டது.

உறக்கம் கலைந்து அடித்து பிடித்து எழுந்து வந்தாள்.

ஜோதி மகளிடம் அதி முக்கியமாய் சந்தேகம் கேட்க…அஸ்வியா முகம் சுழித்து தாயிடம் எதிர்த்து பேச….உள்ளம் கொதித்து நெருப்பிலிட்ட புழு போல் துடித்தவள் இதுக்கு மேல் ஒரு வார்த்தை பேசினீங்க மரியாதை கெட்டுவிடும்!

த்தூ …என்ன ஜென்மம் நீங்க? எரிமலையாய் பொங்கியவள் வார்த்தை சாட்டை கொண்டு விளாசிவிட்டு அழுதுவீங்கிய கண்களுடன் குழந்தையை தூக்கிக் கொண்டு தாய் வீடு சென்று விட்டாள்.

அதை இன்று எண்ணிப் பார்க்கும்போதே கண்கள் கலங்கி கட்டுப்பாட்டை இழந்தது.

 அண்ணி இன்னும் ஃப்ளாஷ் பேக் முடியலையா?ஸ்வீட் மெமரிசில் மூழ்கிட்டீங்களா? அனு சிரிக்க… நடப்பிற்கு வந்த நேத்ரா வலி மறைத்து சிரித்தாள்.

 மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாச்சு!பொண்ணு ரெடியா? விஷ்ணு உள்ளே வந்து கேட்க…

 அண்ணா பொண்ணு ரெடியா என்று என்னை பார்த்து கேட்கணும்! உங்க வைஃபை பார்த்து கேட்கிறீங்க? அனு குறும்பாய் கேட்க…

 என் வைஃப் என் கண்ணுக்கு எப்போதுமே புது பொண்ணு தான்! விஷ்ணு காதலுடன் ஜொள்ள…அங்கே சிரிப்பலை பரவியது.

“——————–”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!