என் ஜீவன் உன்னை சேருமா 13 1
என் ஜீவன் உன்னை சேருமா
அத்தியாயம் – 13
ரியா பார்வதியை அடிப்பது போல் வர.
பார்த்திபன் பார்வதி முன் வந்து நின்று ரியாவை முறைப்பது போல் நின்றான்..
Advertisement
கேசவன் பக்கத்தில் இருந்த ஒரு சேரை தூக்கி போட்டு உடைத்து இருந்தான்..
இருவரும் ரியாவை எதிர்ப்பது போல் நிற்க.. யார் இவர்கள் மாயாவுக்கு என்று தோன்ற ஒரு நிமிடம் அமைதியாக நின்றவளை..ரிஷி வந்து ரியாவை “அமைதியா இரு இப்ப கோபப்படுற நேரம் இல்ல” என்று அழைத்துச் சென்றான்..
மாயாவுடன் இருந்த அனைவரையும் எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு சென்றாள் ரியா..
Advertisement
பார்வதி ரியாவை கண்டுகொள்ளவே இல்லை அவருக்கு மாயாவே முதன்மையாக பட அவளையே பார்த்திருந்தார்,, அவள் மிகவும் சோர்ந்து போயிருக்க அவளை மடிசாய்த்து தட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்..
Advertisement
கேசவன் பார்த்திபனிடம் வந்து இன்னும் அரை மணி நேரத்தில் உலகநாதனின் உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்ல..
“சரி” என்ற பார்த்திபன்.. பார்வதியின் அருகில் வந்து அவரிடம் சொல்ல… பார்வதிக்கு மாயாவிடம் எப்படி இதை சொல்வது என்று தோன்ற..
மெல்ல மருமகனின் தலையை தடவி கொடுத்தவர் “மாயா அப்பாவை கொஞ்ச நேரம் பார்த்துட்டு இருக்கியா”?.. என்று கூற.
Advertisement
எதற்க்கு என்று பார்த்தவளிடன் தோளை படித்து அணைத்துக் கொண்டவர்,,, “இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்பாவை கொண்டு போயிவிடுவாங்க அதனால அப்பா முகத்தை நல்லா பார்த்துக்கோ” என்று கூற..
உதடு துடிக்க கதறி அழுதவளை தட்டிக் கொடுத்து “அழக்கூடாது போய் அப்பாவை பாரு” என்று பார்வதி கூற..
அவளை எழுப்பி நிற்க வைக்க.. சரியாக சர்ச்சிலிருந்து பாதர் வந்திருந்தார் உலகநாதனின் உடலை பார்க்க,, அனைவரும் அவரை பார்த்துவிட்டு அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய..
மாயா கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் அழுதபடியா தந்தையின் முகத்தையே பார்த்து நின்று இருந்தாள்..
உலகநாதனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்து, பாடல்கள் பாடி, கடைசியாக உலகநாதன் உடலுக்கு புனித நீரை தெளித்து அவரின் உடலை எடுத்து செல்லும் நேரம்,,
” ஒரு நிமிடம்” என்ற மாயா உலகநாதனின் உடலின் மேலே போட்டு இருந்த மாலை நீங்கி விட்டு.. தந்தையின் மார்பில் தலை வைத்து படுத்து விட்டாள்,, “டாடி” என்று அழுத படியே..
சிறிது நேரம் தந்தையின் மேல் தலை வைத்து படுத்திருந்தவள். டக்கென்று உலகநாதன் மேலிருந்து எழுந்து. “ஆண்ட்டி, ஆண்ட்டி ” என்று பார்வதியை அழைத்து உலகநாதனை காட்டி ஏதோ சொல்ல வர.. மாயாவுக்கு வார்த்தைகள் வர வில்லை.
“டாடி, டாடி” என்று மறுபடியும் ஏதோ உலகநாதனை பார்த்து சொல்லி அழ..
“என்ன மாயா? அப்பாவை பார்த்து வேண்டிக்கோ அப்பா உனக்கு கடவுளா இருந்து எல்லாம் செய்வாரு” என்று பார்வதி கூற..
“ஆண்ட்டி இல்ல ஆன்ட்டி டாடி ஹார்ட் துடிக்குது” என்று அவர் அழுத அப்படியே சொல்ல..
“என்ன மாயா?”.. என்றார் பார்வதி..
“ஆமாம் ஆண்ட்டி அப்பா இதயம் துடிக்குது பாருங்க” என்று கூற..
அனைவரும் என்ன என்பது போல் ஆச்சரியமாக பார்க்க..
பார்வதி வேகமாக வந்தவர் உலகநாதனின் கைப்பிடித்து நாடி துடிப்பதை பார்த்தவர்.. பின்பு உலகநாதன் இதயத்தை தொட்டுப் பார்க்க உலகநாதனின் இதயம் துடிப்பது உணர்ந்தவர்..
” பார்த்திபா தூக்கு உலகநாதனை. அவர் உயிருடன் தான் இருக்கிறார்” என்று கூற..
பார்த்திபன் வேகமாக வந்து உலகநாதனின் மேலிருந்து அனைத்து பூக்களையும் தூக்கி கீழே போட்டவன்,, அவரை தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டு..
பார்வதியின் காரில் உலகநாதனை ஏற்றிக்கொண்டு ஹாஸ்பெட்டலுக்கு வேகமாக சென்றனர்..
உலகநாதன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்..
இது எப்படி சாத்தியம் என்று அனைவருக்கும் தோன்ற..
” உனக்கு அப்பா இறந்து விட்டதாக சொன்னது யாரு மாயா”?
” ஆன்ட்டி என் முன்னாடி தான் அப்பாவுக்கு ஹார்ட் பீட் நின்னது. டாக்டர் எவ்வளவோ முயற்சி பண்ணாங்க அப்பா ஹார்ட் அப்போ துடிக்கல” என்று மாயா கூற…
“இரு மாயா டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்” என்றார் பார்வதி…
உலகநாதனை செக் பண்ண டாக்டர், மாயாவிடம் வந்து.
“உலகநாதன் சார் சாகலை உயிரோடுதான் இருக்கார்”.. என்று டாக்டர் சொன்னவுடன் தான்..
மாயாவுக்கு போனா உயிர் திரும்பா வந்தது போல தோன்ற, பார்வதியின் தோளில் முகத்தை புதைத்து, தேம்பி அழுதாள்..
“அவர் டீப் ஸ்சிலீப்புக்கு போயிட்ட மாதிரி தெரியுது,, கோமாவுக்கு, டீப் ஸ்சிலீப்க்கும் நடவுல இருக்குர மாதிரி தெரியுது பார்க்கலாம் உயிரோடுதான் இருக்கிறார், ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று கூற..
“ஒன்னும் பிரச்சனை இல்ல தானே டாக்டர் அப்பா திருப்பி வந்துருவார் தானே”?..
” கண்டிப்பா வந்துருமா கவலைப்படாத” என்று டாக்டர் சொல்லிவிட்டு செல்ல..
பார்வதியை கட்டிப்பிடித்துக் கொண்டு “ஆன்ட்டி என் அப்பா ஆன்ட்டி'” என்று சிரித்திருந்தாள் மாயா..
பார்வதி மருமகளின் சிரித்த முகத்தை பார்த்தவர் “உன் அப்பா உனக்காக மறுபிறவி எடுத்து வந்திருக்கார் மாயா பத்திரமா பாத்துக்கோ, நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் உன் திருஷ்டி எல்லாம் கழிஞ்சு போச்சு,, இனி உனக்கு நல்லதே நடக்கும் பாரு” என்று கூற..
“ஆன்ட்டி ” என்று மீண்டும் பார்வதி அணைத்துக் கொண்டவள்,
“உங்க பிள்ளை கிட்ட போய் சொல்லுங்க ஆன்ட்டி என் அப்பா சாகலையின்னு” என்று மாயா கூற..
“உன் அப்பா சாகணுமுன்னு அவன் கண்டிப்பா நினைத்திருக்க மாட்டான் மாயா,, இப்ப பாரு உன்னை விட அவன் தான் உன் அப்பா பொழச்சதுக்கு சந்தோஷப்படுவான்” என்று கூற.
“எனக்கு புரியல ஆன்ட்டி” என்று மாயா கூற..
” அவனுக்கு சண்டை போட ஆளில்லாம போயிருக்கும் இப்போ உலகநாதன் தம்பி திரும்பி வந்துட்டார் இல்ல, இனி அவன் கண்ணுல விரலை விட்டு ஆட்டு மாயா, உன் வழிக்கு இனி வரமாட்டான் அப்படி வந்தா என்கிட்ட சொல்லு” என்று சிறிது நேரம் பேசிவிட்டு, மாயாவுக்கு உணவு வாங்கி உண்ண வைத்து விட்டே பார்வதி வீட்டுக்கு கிளம்பினார்….
ரியாவுக்கு தந்தை பிழைத்தது சந்தோஷமே இருந்தாலும் பார்வதியையும் அவர் கூட இருந்தவர்களையும் பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தாள்..
பார்வதி சென்றவுடன் “யார் அந்த பொம்பளை” என்றாள் பார்வதி போன திசையை காட்டி..
“என் அத்தை எனக்கு அம்மா மாதிரி” என்றாள் மாயா..
“ஓ… உன்னை கல்யாணம் மேடையில் கல்யாணம் பண்ணாம விட்டுட்டு போனவனே அவனோட அம்மாவா”?.. என்று கூற..
மாயா அமைதியாக இருந்தாள்..
“சொல்லுடி அந்த அக்னியோட அம்மாவா?”..
மாயா “ஆமாம்” என்று தலையாட்ட…
“அவகிட்ட உனக்கு என்னடி உறவு, அவன் பையன் உன்ன வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டேன் தானே, அப்போ எதுக்கு நீ இந்த பொம்பள கிட்ட பேசுற,, இனிமே நீ பேசக்கூடாது” என்று ரியா கட்டளை போல மாயாவிடம் சொல்ல..
” நான் யார் கூட பேசணும் பேச கூடாதுன்னு சொல்ல உனக்கு எந்த ரைட்சும் இல்லை” என்றாள்..
” இனி நான் சொன்னதைத்தான் நீ கேட்கணும், உனக்கு என் கணவரோட தம்பிக்கும் அடுத்த வாரம் கல்யாணம்” என்று ரியா கூற..
நீ சொன்னா நான் கேட்பேனா என்பது போல் மாயா ஒரு பார்வை பார்க்க..
“நீ யாரு எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க என் வாழ்க்கை டிசைட் பண்ணுறது உரிமையா உனக்கு யாரு கொடுத்தா,? இப்போ எனக்கு என் அப்பா நல்லபடியா திரும்பி வரணும் அவ்வளவுதான் நீ கிளம்பு என் வாழ்க்கை நான் பார்த்துப்பேன்”…
“எனக்கு முதல்ல நீ பதில் சொல்லு மாயா, ஒன்னு நீ என் கொழுந்தனை கல்யாணம் பண்ணனும், இல்ல இந்த சொத்தை எல்லாம் என் பெயருல எழுதி வைக்கணும்” என்று ரியா பேச..
மாயாவுக்கு நன்றாக புரிந்தது.. இது ரியாவோட புகுந்த வீட்டு ஏற்பாடு என்று, இதில் மொத்த குடும்பமும் இருக்கிறார்கள் என்று,, ரிஷியும் அவனின் அம்மாவும் ஏதோ மராட்டியில் பேசிக் கொண்டே இருக்க..
“இது என் அப்ப கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்து உன் தாத்தா சொத்து இல்ல,நீ பங்கு கேட்க. உரிமை பட்டவரு உயிருக்கு போராடிட்டுயிருக்காரு உனக்கு எந்த நேரம் எத பத்தி பேசனுமுன்னு விவஸ்தை இல்லையே ரியா,,
உள்ள இருக்கறது நம்மளோட அப்பா அவர் இந்த நிலைமையில இருக்குறப்போ சொத்த பத்தி பேசுற உன்னை என் கூட பிறந்தவன்னு சொல்லவே எனக்கு வெட்கமா இருக்கு”..
“நீ ஒன்னும் என்னை அக்கான்னு சொல்ல வேண்டாம், ஒன்னு நீ என் கொழுந்தனை கல்யாணம் பண்ணனும், இல்லை சொத்த என் பெயரு எழுதி வைக்கணும், அப்படி இல்லன்னா கோர்ட்ல கேஸ் போடுவேன்..
” நீ என்ன வேணா பண்ணு” என்ற மாயா ஐ, சி, யூ வுக்கு உலகநாதனை பார்க்க சென்றாள்..
உலகநாதன் செயற்கை சுவாசத்தோடு அமைதியாக படுத்திருந்தார்,,
தந்தையை ஒரு நிமிடம் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள் தந்தை இல்லை என்று கலங்கிய நின்றவளுக்கு. தன் தந்தை பொக்கிஷம் போல கிடைத்திருக்க, அவர் தன்னோடு இருக்கிறார் என்று பெரிய நிம்மதியை தர. தந்தையின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவரின் பாதத்தை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டவள்,,
“டாடி எனக்காகவா திரும்பி வந்து இருக்கீங்க? தேங்க்யூ டாடி, “என்று தந்தையின் பாதத்தை பிடித்து விட்டு கொண்டே.
“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டாடி, சீக்கிரம் எழுதுவாங்க நம்ம ரெண்டு பேரும் ஒரு லாங் டூர் போகணும், லாங் டிரைவ் போகணும்” என்று நீண்ட நேரம் தந்தையோடு பேசிகொண்டே, சிரித்து கொண்டு இருந்தவள்,, டாக்டரின் அனுமதி கேட்டு, உலகநாதனோடையே தங்கி கொண்டாள்..
