Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே?? 3

மனசு 3
இன்பவேணி மதியம் உணவுண்ண வரவில்லை என்று சாயாலி உணவுடன் கம்பெனிக்கு வந்திருந்தாள். அவள் கண்டது முரளி சாப்பிட்டு வரும் வழியில் உதய்கிருஷ்ணா அவனை இழுத்து ஓர் அறைக்குள் தள்ளியதை தான்.

உதய்கிருஷ்ணா காலனாகி நின்றிருக்க, நெஞ்சில் கை வைத்து அவ்வறைக்கு வெளியே நின்று எட்டிப் பார்த்தாள் சாயாலி.



Advertisement

டேய் ராஸ்கல், ஹனிட்ட எதுக்கு ஜாயின் பண்ண? சொல்லு? அவன் மோட்டிவ் மற்றும் அவன் திட்டத்தை அறிந்து கொள்ள கேட்டான்.

மாமா… அவ உங்க ஹனி இல்ல என்னோட டார்லிங்.. உங்க வாழ்க்கையில அவ சேப்டர் க்ளோஸ்..இனி எங்க ஆட்டம் தான்..

Advertisement

Advertisement

“என்ன பேசுறான் இவன்?” முணுமுணுத்தவாறு சாயாலி கேட்டுக் கொண்டிருந்தாள்.

நீ முரளியா? முரளி ரொம்ப சாஃப்ட். உன்ன மாதிரி கேவலமான விசயம் செய்ய மாட்டான்..

Advertisement

அவன் தான் செத்துட்டான்ல. அதுவும் சின்ன வயசுல. அப்பவே அவன் மேல அக்கறையா இல்ல என்னோட டார்லிங்… நக்கலாக கௌதம் கேட்க, அவன் வாயில் ஓங்கி குத்தினான் உதய்கிருஷ்ணா.

வாயில் கை வைத்து சாயாலி பார்க்க..,

“ஹனி பக்கத்துல வரணும்னு நினச்ச உன்னோட தங்கச்சி ஷோபனா உயிரோட இருக்க மாட்டா” மிரட்டினான்.

அட மாம்ஸ், இதையும் கண்டுபிடிச்சுட்டீங்களா? ஷோபி நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண பொண்ணுல்ல. அவளுக்கு தற்காப்பு கலைகள் தெரியும். உங்கள கொன்னுட்டு ஜானுவ தூக்கிட்டு வர எங்களுக்கு ரொம்ப நேரம் ஆகாது..

ஷோபி…என்ற குரலில் சாயாலி பயந்து திரும்ப, நெஞ்சில் கை வைத்து திகைத்திருந்தான் விதார்த்.

ஷ்ஷ்…அவன் வாயில் கை வைத்த சாயாலி, “ப்ளீஸ் பீ சைலண்ட்…” என்று சொல்ல, துக்கத்தை விழுங்கி அவர்களை இருவரும் கவனித்தனர்.

“தெரிஞ்சா தெரியுது” என்ற உதய்கிருஷ்ணா, உன்ன கல்யாணம் பண்ணிக்க ஹனி ஒத்துக்கவே மாட்டா..

ஒத்துக்கலைன்னா என்ன மாமா? உங்களுக்கு நடந்தது போல செய்திடலாம்…

ஏய்ய்ய்ய்…கர்ஜித்தான் உதய்கிருஷ்ணா.

உங்களுக்காக எங்க அக்கா காத்திட்டு இருந்தா நீங்க இந்த பரதேசிய காதலிப்பீங்களா? அதான் பெரியம்மா அவளுக்கு கொடுத்த தண்டனையில இனி உங்கள நினக்கவே மாட்டா..

என் அக்கா கழுத்துல அவளே தாலி கட்டிட்டு, குடிச்சிட்டு நீங்க கட்டுனீங்கன்னு சொன்னாளே! எப்படி உங்களுக்கு போத மருந்து குடுத்து முதலிரவ முடிச்சாளோ அதே மாதிரி நானும் பண்ணிப்பேன். தாலி கட்டினா பொண்ணா இருந்தாலும் பையனா இருந்தாலும் வாழ்ந்து தான ஆகணும்..

ஆனா நீங்க என்னோட அக்காவ சாவடிச்சிட்டீங்க. அந்த விபத்து நேரம் நான் இன்பவேணிய கொல்ல ட்ரை பண்ணேன். சரியா ஆளுங்க வந்துட்டாங்க. அப்புறம் முட்டாள் தனம் பண்ணிட்டேன்னு புரிஞ்சுச்சு…அவள கொன்னா செத்துடுவால்ல…அனு அனுவா துடிச்சி துடிச்சி சாகணும்..அவள விடவே மாட்டேன்..

இப்பொழுது சாயாலிக்கு அழுகை வர,

“அண்ணன் தாலி கட்டலையா? முதலிரவு இப்படியா நடந்தது?” அதிர்ச்சியில் இருந்த விதார்த் சாயாலியின் கேவலில் ஷ்ஷ்…என்று அவன் விழிகளை துடைத்துக் கொண்டான்.

“நீ என்னோட ஹனி கழுத்துல தாலி கட்டி தான் பாறேன். அப்புறம் நீ உயிரோட சாவுற மாதிரி பண்ணிடுவேன்” சத்தமிட்டான் உதய்கிருஷ்ணா.

“பாக்கலாம் மாமா” தெனாவட்டாக கூறி கௌதம் வெளியே வர, இருவரும் மறைந்து கொண்டனர். உதய்கிருஷ்ணாவும் சென்று விட, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

மாமா இவன சும்மா விடக் கூடாது. அக்காவ துடிக்க துடிக்க சாவடிப்பேன்னு சொல்றான்..

மாமாவா? என்னையா கூப்பிட்ட?

“ஆமா, எனக்கு உதய் மாமானா அவர் தம்பி நீங்களும் மாமா தான? இல்லையா? தப்பா சொல்லீட்டேனோ?” சிந்தனையுடன் அவனை ஏறிட்டாள் சாயாலி.

என்ன சொல்ற? அண்ணா உனக்கு மாமாவா?

ம்ம்! மாமா கூட அக்காவ மறந்துருப்பாங்கன்னு நினைச்சு எப்படி மாமா மனச மாத்தன்னு நினச்சுட்டு இருந்தேன். நல்ல வேல மாமாவும் அக்காவ ஹனின்னு கூப்பிட்டாங்க…ஹப்பா…

ஆமால்ல…அப்ப அண்ணா இன்னும் அவன் காதல மறக்கல. ஆனா இன்னு…

இன்னுவா?

அதான் உன் அக்கா?

அக்காவுக்கு இப்பவும் மாமா மேல காதலும் இருக்கு. கோபமும் இருக்கு. அதெப்படி கோபப்படாம இருப்பாங்க????

பெருமூச்சுடன் அமர்ந்தான்.

அக்காவையும் மாமாவையும் சேர்த்து வைக்க கெல்ப் பண்றீங்களா?

யோசனையுடன், செய்றேன் அதுக்கு நீ எனக்கு ஒரு கெல்ப் பண்ணனும்.

நான் ரெடி…

புன்னகைத்தவன், என்னோட க்ளோஸா இருக்குற மாதிரி நடிக்கணும்..

“என்ன?” முகம் சுளித்தாள்.

நானும் அக்மார்க் நல்லவன் தான்மா. உன்ன எதுவும் செய்ய மாட்டேன். ஷோபிய நம்பி ரொம்ப காதலிச்சுட்டேன். ஆனா அவ எங்கட்ட இருந்து பட்டுவ பிரிக்க நினைக்கிறா. எங்கள பழி வாங்க வந்துருக்கா…விழிகள் கலங்கியது.

மாமா, உங்கள ஏமாத்துற பொண்ணுகாகவா அழுறீங்க? ஆண்களோட கண்ணீர் புனிதமானது. ஏமாத்துற பொண்ணுக்காக அழுது புனிதத்த கெடுக்காதீங்க..

விழிநீரை துடைத்து அவளை பார்த்து, நீ சொல்லு? அவ முன்னாடி என்னோட க்ளோஸா இருக்கணும். நாம பார்த்த எதையும் யார்டயும் காட்டிக்கக் கூடாது. அண்ணாவுக்கு கூட தெரியக் கூடாது..

சொன்னா அக்கா மாமா சேர வாய்ப்பிருக்கு..

வாய்ப்பு கொடுத்து அவங்க காதல் சேரக் கூடாது. அவங்களே ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுட்டு சேரணும். அப்ப தான் அவங்க மேரேஜ் அப்புறமும் யார் என்ன சொன்னாலும் ஒத்துமையா இருப்பாங்க…

ம்ம்…!!! அக்கா மாமாவுக்காக ஓ.கே வெட்கமுடன் தலை கவிழ்ந்தாள்.

“ஓய், உனக்கு இந்த சீனெல்லாம் இல்ல. வா கிளம்பலாம்” இருவரும் கிளம்பினார்கள்.

கௌதமும் அவன் பின்னே போகும் உதய்கிருஷ்ணாவையும் கண்டு, அவர்களிடம் வந்தாள் இன்பவேணி.

“நீங்க எப்படி ஆபிஸூக்குள்ள வந்தீங்க?” கோபமாக கேட்டாள்.

உதய்கிருஷ்ணா அமைதியாக இருந்தான்.

“டார்லிங், எதுக்கு இந்த ஆள்ட பேசிட்டு இருக்க? வா..கௌதம்” இன்பவேணி கை பிடிக்க, பளாரென அவனை ஓங்கி அறைந்தாள்.

உனக்கு நான் பாஸ் புரியுதா? சும்மா சும்மா கைய புடிக்கிறது. உரிமை எடுத்துக்கிற மாதிரி பண்ணாத. இரிட்டேட்டிங்கா இருக்கு..

“என்ன…என்னயவே அடிச்சிட்ட…” அவன் கோபமாக இன்பவேணி பக்கம் வர, உதய்கிருஷ்ணா இன்பவேணியை மறித்து நின்றான்.

வழி விடுங்க…

“முடியாது” திமிறாக கூறினான் உதய்கிருஷ்ணா. இப்படி ஒரு பரிமாணத்தை அவனிடம் கண்டிராத இன்பவேணி அவனை ரசித்து பார்த்தாள்.

“வழி விடுங்க…” அழுத்தி கூறினான்.

“ஒரு தடவ வாங்கின அடி உனக்கு போதாதா?” சீற்றமுடன் கத்தினான் உதய்கிருஷ்ணா. எல்லாரும் வேடிக்கை பார்க்க அவமானப் போகியது கௌதமிற்கு.

நான் என்னோட மேம்ட பேசிட்டு இருக்கேன். நீங்க குறுக்க வராதீங்க…

“நான் பக்கத்துல இருக்கும் போதே ஹனி கை புடிக்கிற?” ஒரு வேகத்தில் கோபமாக பேசினான் உதய்கிருஷ்ணா. விழிவிரித்து அவனை பார்த்தாள் இன்பவேணி.

விதார்த்தும் சாயாலியும் ஒன்றாக அவ்விடம் வர, “நீங்க எப்ப வந்தீங்க? எப்படி வந்தீங்க?” வினவினாள் இன்பவேணி.

எனக்கு என்னோட ப்ரெண்ட பாக்கணும் போல இருந்துச்சு. அதான் செக்யூரிட்டிட்ட என் ப்ரெண்டோட இருக்கும் பழைய போட்டோ காட்டி உள்ள வந்தேன் விதார்த் கூற,

அக்கா, காலைல சரியா சாப்பிடாம வந்துட்டீங்க. மதியமும் நேரமாச்சு அதான் உணவெடுத்து வந்தேன்…

என்ன சொன்னீங்க? நீங்க பக்கத்துல இருக்கும் போது கை பிடிக்கிறேனா? எங்க மேம்ம ஒருத்தன் காதலிச்சு கை விட்டுடான். உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன். மேம் வேற வீட்டுக்கு போன பின்னும் அவங்க காதலன் வீட்டினரால் அவமானப்பட்டு மேம்மோட அப்பா சூசைட் பண்ணிட்டார்…

“என்னடா சொன்ன?” விதார்த் அவன் சட்டையை பிடிக்க, உதய்கிருஷ்ணா உடல் உதறியது.

“அவன விடுங்க” சத்தமிட்டாள் இன்பவேணி. அவள் விழிகள் கலங்கி இருந்தது.

“இன்னு…அங்கிள்…” கண்ணீர் வந்து விட்டது விதார்த்திற்கு.

உதய்கிருஷ்ணாவை வெறித்தவள், கைபேசி எடுத்து யாரையோ வரச் சொன்னாள்.

ஒரு பெண் இன்பவேணி கையில் ஒரு காகிதத்தையும் பென்னையும் நீட்ட, அதில் கையெழுத்திட்டு…கௌதம் இது உனக்கு…

மேம்…அவன் பதறினான்.

“கௌதம்…” அழுத்தி கூறி, ஒழுங்கா மரியாதையா கிளம்பு இல்ல போலீஸ நான் கூப்பிட வேண்டியிருக்கும்..

தெரிஞ்சு போச்சா?? போலீஸா? சிரித்தவன், நான் யாருன்னு நினச்சீங்க?

“நீ எவன்னு தெரிஞ்சு தான் உன்ன வேல விட்டு தூக்கியிருக்கேன். செக்யூரிட்டி….” கத்தினாள் இன்பவேணி.

தலை வேற வின்வின்னென்று வலித்தது அவளுக்கு. தன் தந்தையின் நினைவை ஏற்படுத்தி விட்டது வேறு கௌதம் மீது எரிச்சலை கூட்டியது. அவளை பொறுத்தவரை தந்தையின் இறப்புக்கு தன் காதல் தான் காரணம். அதற்காக உதய்கிருஷ்ணா மீது வெறுப்பெல்லாம் இல்லை. விரக்தி, கோபம், ஆற்றாமை…நாம் கஷ்டப்படும் நேரம் அவன் வரவேயில்லையே! அவன் தன்னை காதலிக்கவில்லை. ஏமாற்றி இருக்கிறான் என்ற எண்ணம் தான்.

“இன்பவேணி, உன்ன சும்மா விட மாட்டேன்” கௌதம் கத்த, சாயாலிக்கு பயமாக இருந்தது.

“அக்கா வாங்க” இன்பவேணியை அவ்விடம் விட்டு அகற்றி உதய்கிருஷ்ணா, விதார்த்தை பார்த்துக் கொண்டே நகர்ந்தாள்.

விறுவிறுவென வெளியேறிய உதய்கிருஷ்ணா தன் தந்தையை அழைத்து, “என்னோட காதல் தெரிஞ்சு பிரச்சன பண்ணீங்கல்ல அப்ப யாரெல்லாம் வந்தாங்களோ அவங்க எல்லாரும் இப்பவே இந்த நிமிசமே நம்ம வீட்டுக்கு வந்திருக்கணும். நீங்களும் வாங்க” சீறலுடன் கூறி அழைப்பை துண்டித்து தன் தம்பியை பார்க்க, விதார்த் அங்கு இல்லை. அவன் சென்று விட்டான் என்று நினைத்து வீட்டிற்கு கிளம்பினான்.

இன்பவேணி தனது கேபின் அறையில் அழுது கொண்டிருக்க, சாயாலியால் அவளை தேற்ற முடியவில்லை.

“சாயா, நீ கிளம்பு. நான் ஓய்வெடுக்கணும்” ரெஸ்ட் எடுக்க உள்ளிருக்கும் அறைக்கு அவள் செல்ல, சாயாலி விதார்த்திற்கு அழைத்தாள். அவன் அழைப்பு சென்று சென்று கட் ஆனது. கடுப்புடன் வீட்டிற்கு சென்றாள் சாயாலி.

தூங்க முடியாமல் அல்லாடிய இன்பவேணி முடிவெடுத்தவளாய் உதய்கிருஷ்ணாவின் எதிர்வீடான அவளது பழைய வீட்டிற்கு செல்ல ஆயத்தமானாள்.

காற்றோடமான போர்ட்டிக்கோ சிறிய வீடாகவும் இல்லாமல் பெரிய வீடாகவும் இல்லாமல் இருந்தது அவ்வழகிய வீடு. விசுவமூர்த்தி கோசலை தம்பதியரின் அயராத உழைப்பில் கட்டிய சொந்த வீடு. நால்வரும் அவ்வீட்டில் ஆனந்தமாக இருந்தனர். அவர்களின் முதல் இழப்பு மூன்று வயது மகன் முரளி. சோர்வான பெற்றோரை தெம்பாக்கி அவர்களை சிரிக்க வைத்தாள் ஆறு வயது சிறுமி இன்பவேணி.

தந்தை என்றால் அவ்வளவு பிடித்தம் அவளுக்கு. அன்னை கண்டிப்பு காட்டினாலும் தந்தை சுதந்திரமாக நடமாட விடுவார். அதை விட அவளின் சிறுசிறு மகிழ்ச்சியிலும் அவளுடன் பங்கு கொள்பவர். விடுமுறை நாள் என்றாலே தந்தை மகளின் ஆட்டம் பாட்டம் தாங்காமல் காதில் பஞ்சை அடைத்துக் கொள்வார் கோசலை. செல்லமாக வளர்க்கப்பட்டாலும் ஒழுக்கத்திலும் குணத்திலும் உயர்ந்தவள் இன்பவேணி.

கேஜியிலிருந்தே விதார்த் இன்பவேணியின் நட்பு தொடங்கியது. வளர வளர அவர்கள் நண்பர்கள் என்பதை விட உறவினர் போல தான் நடந்து கொள்வர். இரவு உணவுக்கு மட்டுமே வீட்டிற்கு செல்வான் விதார்த். விசுவமூர்த்தி கோசலை தன் மகன் இல்லாத சோகத்தை கடக்க உறுதுணையாக நின்றவன் விதார்த். உதய் வெளியே வரும் நேரம் விசுவமூர்த்தி அவராகவே உதயிடம் பேசுவார். அவனுக்கும் அவர் என்றால் பிரியம்.

தன் தந்தையிடம் கேட்க வேண்டிய அறிவுரை எல்லாம் அவரிடம் கேட்டு வளர்ந்தான் உதய்கிருஷ்ணா. ராமநாதன் அவர் கம்பெனி, பணம் என்று வலம் வர பிள்ளைகள் இவர்கள் குடும்பத்திடம் நெருக்கமானார்கள். உதய் இன்பவேணி வீட்டிற்கெல்லாம் செல்ல மாட்டான். விதார்த் பிறந்ததன் பின் அவன் தாய் இலவஞ்சி உடல்நிலை மோசமாக உதய் அவரை பார்த்துக் கொண்டான்.

குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு தான் ராமநாதன் இலவஞ்சியுடனும் பிள்ளைகளுடன் தனியே வந்தார். உதவிக்கென யாருமில்லாமல் கஷ்டப்பட்ட உதய்கு உதவியாக அவ்வப்போது வீட்டில் வந்து இலவஞ்சியை பார்க்க வருவார் இன்பவேணியின் தாய் கோசலை. வரும் போதெல்லாம் உதய்கு வீட்டில் செய்த திண்பண்டங்களை கொண்டு வருவார்..

விதார்த்தின் ஆறு வயதில் இலவஞ்சி உயிர் பிரியவும் வந்த குடும்பத்தினர்கள் தான் பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா அனைவரும். இலவஞ்சி இருந்திருந்தால் அவர் பாயிண்டாக பேசி இவர்களை விலக்கி இருந்திருப்பார். ஆனால் பிள்ளைகளை பார்க்க என வரும் சொந்தங்களை தவிர்க்க முடியாது பழக தொடங்கிய ராமநாதன் அவர்கள் பேச்சை கேட்க ஆரம்பித்து, பிள்ளைகளின் தனிப்பட்ட விருப்பங்களை கவனியாது அவர்களை குடும்பத்தினரிடம் விட்டு விட்டார்.

அவர்களுக்கு கோசலை உதய்யை பார்க்க வருவது முதலில் இருந்தே பிடிக்கவில்லை. ஆனால் அக்கறையுடன் அவனை கவனிக்கும் வேலைக்காரியாக எண்ணி விட்டு விட்டனர். நாளடைவில் இன்பவேணி ராமநாதன் வீட்டிற்கு உரிமையுடன் வர அது அனைவருக்கும் குத்த ஆரம்பித்தது.

கோசலையை தனியே அழைத்து, அவரையும் ராமநாதனையும் பற்றி பிரியங்காவின் தாய் சுருக்கென கேட்டு விட, அன்று வீட்டிற்கு வருவதை அவர் நிறுத்தியது தான். உதய் காய்ச்சலால் கஷ்டப்பட்டால் கூட செல்லவில்லை. ஆனால் கசாயம் செய்து விதார்த், இன்பவேணியிடம் கொடுத்து விடுவார்.

கொழுக்மொழுக்கென தன் வீட்டினுள் வலம் வரும் இன்பவேணியை உதய்கு மிகவும் பிடிக்கும். அதிகம் பேசவில்லை என்றாலும் விதார்த்துடன் சேர்ந்து அவள் அடிக்கும் லூட்டியை நிரம்பவே ரசிப்பான். அவனிடம் அவள் குறும்புத்தனத்துடன் தான் இருப்பாள். அவளின் அந்த குறும்புத்தனம் தான் அவன் தனிமைக்கு மருந்தானது.

இருவருக்கும் ஐந்து வருட வித்தியாசம்….

வருடங்கள் சென்று கொண்டிருக்க, அன்று பள்ளியில் வயிறு வலி என வீட்டிற்கு அழைத்து வந்த இன்பவேணியை பார்க்க விதார்த்தும் அவனுடன் முதல் முறையாக உதயும் வந்தனர். அப்பொழுது உதய் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தான்.

உதய்யின் வருகையை எதிர்பாராத பெற்றோர்கள் அவனை அமர வைக்க, அவன் விழிகள் அவளை தான் தேடியது.

அங்கிள், “இன்னு எங்க?” வீட்டினுள் ஓடினான் விதார்த்.

அவன் கை பிடித்து நிறுத்திய கோசலை, “வேணி பெரிய புள்ளை ஆயிட்டாடா. நீ இப்ப பாக்க முடியாது. இருங்க ஸ்வீட் எடுத்துட்டு வாரேன்” அவர் அடுக்கலைக்குள் சென்றார்.

உதய்கு புரிந்து போனது. சாரி அங்கிள். வயிறு வலில்ல ரொம்ப அழுதான்னு விது சொன்னான். பெரிய பிராபளமோன்னு பாக்க வந்தேன்.

புன்னகையுடன் உதய் தோளில் தட்டிய விசுவமூர்த்தி, “இதுக்கு என்ன மன்னிப்பு உதய்? பிள்ளைக்கு ஒண்ணுன்னு அக்கறையா விசாரிக்க வந்துருக்கியே அது போதும்…” என்றார் நிறைவுடன்.

கோசலை ஸ்வீட்டுடன் வந்து, “விது எங்க?” கேட்டார்.

ஆண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து எழ, “விது…” சத்தமாக அழைத்தான் உதய்.

ஆஆஆ….கோஸ்ட் கோஸ்ட்…கத்தினான் விதார்த்.

அவன் வந்திருப்பதை அறிந்த இன்பவேணி வேண்டுமென்றே அள்ளி முடிந்திருந்த கூந்தலை முகத்தின் முன் போட்டு அமர்ந்திருக்க, இன்னு வயிறு வலிக்குதா? கேட்டுக் கொண்டே அவளிடம் வந்து அவள் தோளில் கை வைக்க, அவள் அவன் கழுத்தை கட்டி…ம்ம்..ம்ம்ம்…ம்ம்ம்ம்….சுருதி ஏறி இறங்கி சத்தமிட, அப்பொழுது தான் கத்தினான் விதார்த்.

மூவரும் இருவரின் கோலம் கண்டு அதிர, விதார்த் கத்துவதை நிறுத்தவில்லை.

அய்யோ! அய்யோ! அய்யோ!…. என்னடி பண்ற? நான் தான் உலக்கைய தாண்டி வராதன்னு சொன்னேன்ல…தீட்டுடி…விதுவ விடு. தீட்டு அவன் மேலயும் பட்டுருக்கும். கோசலை மகளை அர்ச்சித்தவாறு இருவரையும் பிரித்து விட்டார்.

“ஏங்க…அந்த குடத்து தண்ணீய எடுத்துட்டு வாங்க” என்று சொல்ல, “எதுக்கு கேட்கிறார்?” என புரியாத உதய் எல்லாரையும் மாறி மாறி பார்க்க, இன்பவேணி தாயை முறைத்து நின்றிருந்தாள்.

தண்ணீரை கணவரிடமிருந்து வாங்கி மளமளவென விதார்த் மீது கவிழ்த்தார்.

ஆன்ட்டி…என்ன பண்றீங்க? உதய் பதறி வர,

“வேணி தீட்டு விது மேல பட்ருக்கும். யாரையும் தொடக் கூடாதுன்னு சொன்னேன்லடி .உனக்கு தனியா குடுத்துருக்கிற பொருள மட்டும் தான் யூஸ் பண்ணனும். உள்ள போடி” இன்பவேணியை அதட்டினார்.

இன்பவேணி அழுது விட்டாள்.

“ஏன்டி, புள்ளைய திட்டுற?” விசுவமூர்த்தி மனைவியிடம் கோபப்பட,

மூச்சு ஏற இறங்க கணவரை முறைத்தவர், சடங்கு எதுவும் செய்யாம வேணி பக்கத்துல யாரும் போகக் கூடாது.

மகள் அழுவதை தாங்க முடியாமல் அவளருகே செல்ல இருந்த விசுவமூர்த்தி கை பிடித்து தடுத்தார்.

“என்ன தீண்டத்தகாதவ மாதிரி பேசுற? போம்மா…எனக்கு எதுவுமே வேண்டாம்” அழுது கொண்டே தட்டு, தம்ளர், போர்வை எல்லாவற்றையும் தூக்கி எறிந்தாள்.

ஏய்ய்ய்ய்…கத்தாதடி…அக்கம் பக்கத்துல தப்பா பேசப் போறாங்க…

புன்னகைத்த உதய், அம்மா சொன்னா உன்னோட நல்லதுக்காக தான் இருக்கும்…

“அப்படியா? வா…கொஞ்ச நேரம் இப்படி அமைதியா உக்கார்ந்து பாரு” வேகமாக அவனருகே அவள் நெருங்க…

“பாப்பா….” சத்தமிட்டார் விசுவமூர்த்தி.

அழுது கொண்டே மீண்டும் அவ்விடமே சென்றவள் குழந்தைத்தனமாக கண்ணை கசக்கி, “போங்க. நான் யார்டையும் பேச மாட்டேன்…” அழுதாள்.

ஆன்ட்டி, நீங்க அப்படி சொல்லி இருக்கக் கூடாது…உதய் கூற,

உதய் உனக்கு இவள தெரியாது. கொஞ்சம் விட்டா வெளிய ஓடிருவா..

“அதெல்லாம் போக மாட்டா ஆன்ட்டி..” என்று இன்பவேணியிடம், “நீ அழாம அம்மா சொல்றத கேளு இல்ல அங்கிள் உன்னை ஸ்கூலுக்கு போக விடாம பண்ணீடுவாங்க..” மிரட்டுவது போல சொன்னான்.

“ஊம கொட்டான் சும்மா இருக்கானா பாரு” முணுமுணுத்தாள்.

“என்ன சொன்ன?” விதார்த் கேட்க,

உன்னோட அண்ணா என்னிக்கும் இல்லாம என்ட பேசுறாரு. அதான் கேட்டேன்.

“இதற்கு மேல் வேண்டாம்” என்று விசுவமூர்த்தி பசங்களை வெளியே அழைத்து சென்றார். அவளின் பாவனையில் புன்னகை முகமுடன் வெளியே வந்தான் உதய். இன்று மிகவும் அழகாகவே அவன் கண்ணிற்கு தெரிந்தாள் இன்பவேணி..

    “தேக்கு மர ஜன்னல்

 நீ தேவலோக மின்னல்

      ஈச்ச மர தொட்டில்

 நீ இலந்தப் பழ கட்டில்

அருந்த வாலு குறும்பு தேளு

    ஆனாலும் நீ ஏஞ்சலு…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!