தென்றலாய் என் காதல் – 8
அத்தியாயம் – 7
சுசிலா நான்கு மணி நேரத்திற்கு பிறகு கண்களை திறந்தார்.
Advertisement
சற்று சாந்தம் அடைந்ததை போலே தெரிந்தது.
அம்மா ஆர் யூ ஓகே என்றாள் சிந்து.
Advertisement
“சுசிலா பசிக்குது இனியா” என்றார்.
Advertisement
“அம்மா நான் இனியா இல்ல. என் பேரு சிந்து.
ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. இதோ நான் இப்போவே போய் சாப்பாடு எடுத்துட்டு வறேன்” என்று எழுந்து என்றாள் சிந்து.
Advertisement
சுசிலா சுவற்றை வெறித்தப்படியே இருந்தார்.
அம்மா…இதோ நான் வந்துவிட்டேன். சாப்பிடுங்கள் என்று சாதத்தை அன்புடன் ஊட்டினாள்.
மருந்து மாத்திரைகளை எல்லாம் சரியாக கொடுத்தாள்.
“சரி…சுசிலா அம்மா நான் இப்போ கிளம்பறேன். நாளைக்கு வறேன்” என்று எழ, அவள் கையை பிடித்து “இனியா என் கூடவே இரு. என்னை விட்டு போய்றாத.
எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று கெஞ்சினார்.
“அம்மா…ஏன் பயம். நான் போய்ட்டு நாளைக்கு சீக்கிரம் வந்தறேன். நீங்க எதுக்கும் பயப்படாதீங்க. கீதா அக்காவும் உங்க கூடவே தான் இருக்காங்க”
“இன்னும் கொஞ்சம் நேரத்துல விக்ரம் சாரும் வந்துருவாரு, பயப்பட கூடாது சரியா, இப்படி சின்ன பிள்ளை போலே அழலாமா” என்று கண்களை துடைத்து விட்டாள் சிந்து.
“இல்ல இனியா நான் உன்னை போக விடமாட்டேன். நீ என் கூடத்தான் இருக்கணும். நீ என்ன விட்டு போய்றாத என்று அழுதார்.
அங்கு வந்த கீதா இந்த காட்சியை கண்டு, “அம்மாடி சிந்து அதான் சுசிலா அம்மா சொல்றாங்கல்ல இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டுப்போ”.
“இல்லைனா நீ போனதுக்கு அப்பறம் ரொம்ப கலாட்டா பண்ணுவாங்க”.
“எனக்கு இந்த ஒரு கட்டு போதும்” சாமி என்றார் கீதா.
“அடி பலமோ என்று நக்கல் அடிக்க, ஒரு நாள் நீ வாங்கிப்பாரு அப்போ தெரியும்” என்றார் கீதா.
“சரி, சரி சாபம் விடாதீங்க. சுசிலா அம்மாவை தூங்க வைத்து விட்டு செல்கிறேன் போதுமா?” என்றாள்.
“சிந்து அப்பறம் இதை உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன், விக்ரம் தம்பி உன்னிடம் பேச வேண்டும் என்றார்”
“அதனால் நீ அவர் வந்ததும் செல்லலாம் சரியா?
நான் போய் இரவுக்கு சமைக்கிறேன்”என்று விட்டு கீதா சென்றார்.
சுசிலாவிடம் பேச்சு கொடுத்தாள் சிந்து.
“அம்மா…கைல ஏன் எப்போதும் இந்த மரப்பாச்சு பொம்மையை வைத்து இருக்கீங்க?”
“கொஞ்சம் என் கிட்ட கொடுங்க பார்த்துவிட்டு தருகிறேன்” என்றாள்.
“இல்லை நீ என் பிள்ளையை கீழ போட்டுருவ” என்றார் சுசிலா.
“அது சரி…. இது தான் விஷயமா.
அதெல்லாம் நான் கீழ போட மாட்டேன் கொடுங்க அம்மா என்று கையில் இருந்து வாங்க, அந்த பொம்மை எதிர் பாராமல் கீழே விழுந்து உடைந்தது’.
“சுசிலாவின் கண்கள் கலங்கியது. இனியா…. இனியா…நான் வேணும்னு பண்ணல தெரியாம பண்ணிட்டேன்”.
“நானே என் பிள்ளையை கொன்னுட்டேன். நானே என் பிள்ளையை கொன்னுட்டேன்” என்று மீண்டும் அழ துவங்கினார்.
“அம்மா…ஒன்னும் இல்ல. பயப்படாதீங்க.ஒன்னும் இல்லை.நான் இதோ…இதோ இதை உடனே சரி செய்து தருகிறேன்” என்று அந்த பொம்மையை கையில் எடுக்க அவள் கையை தட்டி விட்டு “சீ…என் பிள்ளையை தொடாதே! போ இங்கே இருந்து” என்றார் சுசிலா.
“அம்மா…என்னை மன்னித்து விடுங்கள் என்றாள் சிந்து . போ”….என்று ஆக்ரோசமாக கத்த அவள் அறையை விட்டு வெளியே சென்றாள்.
மீண்டும் அந்த பாடல் ஒலித்தது…
“சுசிலா அம்மா வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்து இருக்கும்.
சுசிலா அம்மாக்கு ஏன் இந்த நிலைமை” என்று யோசனையுடன் படியில் இறங்கினாள் சிந்து.
வாசலில் விக்ரமின் கார் வந்து நின்றது.
“சார் வந்துட்டாரு போல் இருக்கு. இன்னைக்கு சுசிலா அம்மாவை பற்றி விவரங்களை கேட்டு தெரிஞ்சுக்கணும்.
அப்போ தான் அவர்களை சரியாக புரிந்து கொண்டு அவருக்கு ஏற்றார் போல் நடந்துக்கொள்ள முடியும்.
வரட்டும்” என்று காத்திருக்க…உள்ளே நுழைந்தான் விக்ரம்.
முகத்தில் புன்னகையுடன் அவனை ஏறிட்டாள்.
அவனை கண்டதும் அதிர்ந்து விழித்தாள்.
“ஆத்தாடி இவனா?
இவன் எங்கே இங்கே?”
கீதா…. என்ற அழைப்பில் அடுக்கலையில் இருந்து ஓடி வந்தார்.
“வாங்க தம்பி….. வாங்க.
“அம்மா சாப்டாங்களா?”
“ஓ…சாப்பிட்டாங்களே”.
இப்போ எதுவும் முரண்டு பிடிச்சாங்களா?
“இல்ல விக்ரம் தம்பி. அந்த பொண்ணு வந்ததுக்கு அப்பறம் அவங்க குணத்துல நிறைய மாற்றம் தெரியுது”.
“ஓ…. ஓகே குட், அந்த பொண்ண வெயிட் பண்ண சொன்னேனே. பேசணும்னு”.
“ஹான்…மேல அம்மாக்கூட தான் இருக்காங்க தம்பி”.
“சரி நான் போய் பிரெஷ் அப் ஆகிட்டு வந்தறேன். அவங்கள கொஞ்சம் நேரம் வெயிட் பண்ண சொல்லுங்க” என்று விட்டு தன் அறை புகுந்தான் விக்ரம்.
“ஐயோ…..அப்போ விக்ரம் சார் இவர் தானா?”
“வசமா வந்து மாட்டிக்கிட்டோமே!
இது முன்னாடியே தெரிஞ்சு இருந்தா வாயை கொஞ்சமாச்சும் அடக்கி இருக்கலாமே.
இப்படி உணர்ச்சிவசப்பட்டுட்டியே, சிந்து உன்னை அவர் பார்த்தார் என்றால்
உன் கதைக்கு அவர் சிந்து படித்து விடுவார்” என்றார்.
எப்படியாவது அவர் கண்ணில் சிக்காமல் தப்பித்துவிட வேண்டும் என்று வேகமாக இறங்கினாள்.
சரியாக வாசலை கடக்கும் நேரம் “சிந்து எங்க போற?”என்று வினவினார் கீதா.
சிந்து வசமாக மாட்டிக்கொண்டாள்.கீதாவை நோக்கி சமாளிக்கும் விதமாக அசட்டு சிரிப்பு சிரித்தாள்.
“என்ன சிந்து அதுக்குள்ள மறந்துட்டியா?
விக்ரம் தம்பி உன்னை பார்க்கணும் சொன்னாருன்னு சொன்னேன் அல்லவா,அப்பறம் எதற்கு இப்போ போற.
தம்பி வந்துவிட்டார். கொஞ்சம் நேரம் வைட் பண்ணு சிந்து.
வா…வந்து இப்படி உக்காரு, எனக்கு கொஞ்சம் அடக்கலை வேலை இருக்கிறது” என்று கூறிச் சென்றார்.
கையை பிசைந்து கொண்டு பயத்தோடு அமர்ந்து இருந்தாள்.
ஒவ்வொரு வினாடியாக நேரம் நகர, அது யுகம் போல் இருந்தது சிந்துவிற்கு.
“ஐயோ!! கடவுளே இப்போ என்ன நடக்க போகுதுனே தெரியலையே?
அந்த ஆளுக்கு ஏற்கனவே என்ன கண்டால் அறவே பிடிக்காது.இனி என் கதை தி எண்ட் தான்” என்று பயத்தில் நடுங்கியபடி அமர்ந்து இருந்தாள்.
அந்த இனிய குரலுக்கு சொந்தக்காரியை நேரில் பார்க்க போகிறோம் என்ற உற்சாகத்தில் அறையை விட்டு வெளியே வந்தான் விக்ரம்.
அவள் அங்கு இல்லை. கீதா எங்கே அந்த பொண்ணை காணவில்லை.
“இங்கே தானே அமர்ந்து இருந்தாள்.ஒரு வேளை வீட்டிற்கு சென்று இருப்பாளோ?
என்னிடம் கூட எதுவும் சொல்லவில்லை என்றார் கீதா.
“நான் வைட் பண்ண சொல்லிட்டு தானே போனேன்.
அப்பறம் எப்படி போனாங்க.
ஒரு வேளை ஓவர் ஆட்டிடியூட்டா இருக்குமோ” என்று மனதில் நினைத்து கொண்டான்.
ஓகே நாளைக்கு பார்த்து கொள்கிறேன் என்று தன் அன்னையை காண சென்றான்.
நடந்ததை எல்லாம் வாசலில் ஒழிந்தப்படி பார்த்து கொண்டு இருந்தாள் சிந்து.
அப்பா …. மாட்டி இருந்தோம் அவ்ளோவ் தான்.
ஜஸ்ட் மிஸ். ஆனா எவ்ளோ நாளைக்கு இப்படி அவர் கண்ணுல படாமல் ஓடி ஒழிய முடியும்.
“விக்கரம் சார் நம்மை பார்ப்பதற்குள் வேறு ஏதாவது ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்ள வேண்டியது தான்”.
சரி வீட்டுக்கு கிளம்புவோம் என்று முகத்தை அதே குறும்போடும் திமிரோடும் வைத்து கொண்டு நடந்தாள்.
வாசலில் அமர்ந்து இருந்த வாச்மேனை பார்த்து,
“என்ன பெரியவரே…என்னவோ சொன்னிங்க கேட்டை திறந்தே வச்சு இருக்கேன்.
ஒரு மணி நேரம் கூட தாக்கு பிடிக்க மாட்டேன்னு.
பார்த்தீங்கள்ல…என்றாள் தன் புருவத்தை உயர்த்தி அவரை தெனாவட்டாக பார்த்து தன் கை பையில் இருந்த கண்ணாடியை எடுத்து அணிந்து ஸ்டைலாக லுக்கு விட்டாள்.
“ஹ்ம்ம்…ஒத்துக்கறேன் தாயி…ஒத்துக்குறேன்.
நீ பெரிய மிடுக்கி தான்” என்றார் அவர்.
ஹான்…அந்த பயம் இருக்கட்டும் “வரட்டா என்று செல்ல.. நாய் குரைத்தது ”
“ஆத்தாடி…பேய்…சீ…இல்ல நாய்” என்று உளறி கொண்டே செல்வதை பார்த்த வாச் மேன்க்கு சிரிப்பு தான் வந்தது.
“ரொம்ப நல்ல பொண்ணு, வெகுளி அதே சமையம் ரொம்ப தைரியசாலி.
யாருக்கும் அஞ்சாம நிக்குது”என்று பெருமையாய் பார்த்தார்.
“கீதா…அம்மா காலையில் ஏன் அப்படி பிஹேவ் பண்ணாங்க” என்று கேட்டான் விக்ரம்.
“காலையில் நடந்ததை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார் கீதா.
அம்மாக்கு ஒன்னும் இல்ல தம்பி ஒரு சின்ன மயக்கம் தான்”.
டாக்டர் ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும் சொல்லி தூங்கறதுக்கு ஊசி போட்டு இருக்காங்க தம்பி என்றார்.
“அம்மாவோட நிலை நாளுக்கு நாள் மோசம் ஆகிட்டே போகுது.
எனக்கு அதை நினைத்தாலே மிகுந்த வேதனையாய் இருக்கிறது” என்று வருத்ததோடு கூறினான்.
“இனி நீங்க எதுக்கும் கவலை பட வேண்டாம்.
அதான் அந்த பொண்ணு சிந்து இருக்காளே அவ இனி எல்லாத்தையும் பார்த்துக்குவா”.
“அது ரொம்ப நல்ல பொண்ணு தம்பி.
அம்மாக்கும் அந்த பொண்ணுக்கும் ஏதோ ஒரு உணர்வுபூர்வமான இணைப்பு இருக்கு”.
ரெண்டே நாள்ல அந்த பொண்ணு அம்மாவை தன் சொல் பேச்சியை கேட்கும் அளவிற்கு செய்துவிட்டாள் தம்பி.
“ஹ்ம்ம்…. நானும் அதை தான் யோசிக்கிறேன்.
அந்த பொண்ணு பேர் என்ன சொன்னிங்க?”
சிந்து என்றார் கீதா.
“சிந்துவா!!!??
ஆதவ் ரெசும் அனுப்பும் போது வேற ஏதோ பேர் தானே அதுல போட்டு இருந்தது.
நீங்க எதுவும் மாத்தி சொல்றிங்களா?”
என்றான்.
“இல்ல தம்பி அந்த பொண்ணு பேர் சிந்து தான். ஒன்னா இத்தனை மணி நேரம் இருந்து இருக்கிறோம்.
பெயர் கூடவா எனக்கு நினைவில் இருக்காது என்றார்.
சரி சரி பெயர் எதுவாக இருந்தால் என்ன என் அன்னையை பார்த்து கொண்டால் போதும்” என்றான் விக்ரம்.
சாப்பாடு….. எடுத்து வைக்கவா தம்பி என்றார் கீதா.
வேண்டாம் என்று ஒரே வார்த்தையில். கூறிவிட்டு தன் அறை புகுந்தான் விக்ரம்.
வெது வெதுப்பான நீரில் அலுப்பு போக குளித்துவிட்டு பால்கணி நிலவை ரசித்து கொண்டு இருந்தான்.
உடலில் வழிந்தோடும் நீர் ஒன்றிரண்டு தரை சிதறியது.
சில்லென்ற தென்றல் அவன் மீது படற உணர்வேதும் இன்றி அந்த வான் காயும் நிலவையே ரசித்து நின்றான்.
அந்த காந்த குரல் காற்றில் மீண்டும் ஒலித்தது.அது அவன் பிரம்மை தான் என்றாலும் அவள் குரல் காற்றில் எங்கும் கலந்து இருப்பதாய் உணர்ந்தான் விக்ரம்.
“இந்த குரல் என்ன ஏதோ செய்கிறது”
“யார் அவள். இத்தனை வருடம் என் பேச்சை கூட கேட்காத என் அன்னையை இப்படி அன்பால் கட்டி போட்டவள்”.
“பெண்கள் என்றால் வசீகரம் என்பார்கள்.
ஆனால் இவளுக்கு குரலே இந்த அளவிற்கு வசீகரமானதே?”
“இறைவன் என்னை சோதிக்கிறானா?
சரி எதுவாகினும் அவளை காண்பதையாவது தவிர்ப்போம்”
“குரல் மீதே எனக்கு இத்தனை மோகம் என்றால் நேரில் பார்த்தால் என் அன்னையை மயக்கியதை போல் என்னையும் மயக்கி விடுவாள்”.
“மந்திரக்காரி என்று தனக்குள்ளே அவளை செல்ல கோபத்தோடு திட்டி ரசித்தான்.
அதே சமயம்…எரிச்சல் நிறைந்த சிந்துவின் முதல் சந்திப்பும் அவனுக்கு நினைவு வந்தது.
“ச்ச…. இவ நியாபகம் ஏன் இப்போ எனக்கு தேவையே இல்லாம வருது”.
‘ஒரு பொண்ணு எப்படி இருக்க கூடாதுங்கறதுக்கான எடுத்துகாட்டு அந்த பொண்ணு’.
“தப்பி தவறி கூட அவளை இனி நான் பார்க்க கூடாதுனு நினைக்குறேன்.
பொண்ணா அவ, சரியான ராக்ஷசி”என்றவன் காதில் மீண்டும் ஒலித்தது அந்த குரல்.
“என்ன பீல் இது. இதுவரை என்னுள் உணரப்பாடாத ஒரு உணர்வின் குவியல்.
நான் இதுவரை யாரையும் காதலித்தது கூட இல்லையே.
இதை பற்றிய விவரம் எதுவும் தெரிய”.
“ஒருவேளை இது காதலோ? என்று சிந்திந்தவன், ச்ச…ச்ச.. இருக்காது.
குரல் கேட்டு கூட காதல் வருமா என்ன?”
“ஏதோ அந்த இனிய குரலின் மீது உள்ள மயக்கமோ, கிறக்கமோ?
இது எப்படி காதலாகும்.
அப்படி குரல் மேல் காதல் கொள்வந்தென்றால் நான் முதலில் ஜானகி அம்மா அவர்கள் குரலை தான் காதல் கொண்டு இருக்க வேண்டும்”
“எல்லாம் சும்மா, காதலும் இல்லை கத்தரிக்காவும் இல்லை” என்று இதுவரை பார்த்து ரசித்து லயித்து கொண்டு இருந்த நிலவை வெறுத்தான்.
வேகமாக திரை சீலையை கொண்டு பால்கணியின் வாயிலை மறைத்தான்.
தன் கட்டிலில் குப்பறை படுத்து உறங்கினான்.
பாவம் எதை அவன் வேண்டாம் என்று ஒதுங்குகிறானோ, அவனிடம் அது வந்தே சேரும்.
அதுவே விதியின் கட்டாயம்.
மீண்டும் அந்த சந்தன பூந்தென்றல் வீச திரை சீலைகள் யாவும் அசைந்தன.
மீண்டும் நிலவொளி திரை சீலை இடைவெளியில் புகுந்து அவன் மீது படர்ந்தது.
இந்த மென்மையான காதலை போலே.
தென்றல் மீண்டும் வீசும்…..*

