Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 20


ஜெய் ஸ்ரீ ராம்

 

EPI-20

கல்லூரியில் இருந்து திரும்பிய மதுவிற்கு மனதே சரி இல்லை. சக்தி சாதாரணமாக கூறும் வார்த்தைகள் எல்லாம்  அவளை சாட்டையாய் சுழன்று அடித்தது.



Advertisement

  அவன் தெரிந்து சொல்கின்றனா  இல்லை தெரியாமல் இவ்வாறு நடந்து கொள்கிறானோ தெரியவில்லைஆனால் அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்  இவள் மனதை காயப்படுத்து   என்னவோ உண்மை .

அவள் பிறந்ததில் இருந்து வீட்டில் மஹாராணியாய்  வளையவருபவள். கஷ்டம் என்ற வார்த்தையின் அர்த்தம் கூட அவளுக்கு தெரிந்தது இல்லை. அவளிற்குஅனைத்தும் கொடுத்த இறைவன். ஏனோ!!!! கணவனை மட்டும்  அவளை எப்போதும் காயப்படுத்த வென்றே அனுப்பி வைத்தார் போலும்.

இப்போதெல்லம் சக்தி ….கணவன் என்கிற கடமைக்காக தான்  தன்னோடு   வாழ்கிறானோ !!!என்ற சந்தேகம் அவளை ஆட்டிப்படைக்கிறது .அன்று ஏற்காட்டில் அவர்களின் முதல் கூடலின் போது உண்மையில் என் மேல் காதல் இருக்கிறதாஇல்லை மனைவியின் கடமையை ஆற்ற நினைகிறாயா ,

Advertisement

என்று சக்தி கேட்டபோது இவள்அவளின் காதலிசொன்னபோதும்.அவன் திரும்ப அவன் காதலை  சொல்லவில்லை அல்லவா,சொல்வதற்கு  உன்மையில் அவள் மேல் காதல் இல்லையோ !

Advertisement

காதல் இல்லை என்றாலும் அவனிற்கு  இவளின் மேல் இருக்கும்  அன்பு உறுதிஅவளிற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறான் இல்லையா. எது எப்படி என்றாலும் அவர்களுக்குள் இனியொரு பிரிவு  சாத்தியமில்லை  .

இப்போது குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சியை குலைக்க அவளிற்கு விருப்பமில்லை.அவன் எப்படியோ !!அவளுக்கு அவன் மேல் காதல் உள்ளதே!!!  அவனை பிரிந்து நிச்சயம் அவளால் இருக்க முடியாது. வீட்டில் உள்ளவர்கள் சொல்லவது போல் ஒருகுழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடுமோ என்னவோ !

இன்னும் இரண்டு மாதத்தில் காலேஜ் முடித்துவிடும் பிறகென்ன ,அதுவரை அவனின் உதாசீனத்தை தாங்கிக்கொள்வது என்று நினைத்து கொண்டாள் . ஒருவேளை சக்தி மாமன் மகனாக இல்லாமல் இறுந்திருந்தால்  அவனின் இந்த அக்கறை எல்லாம்  காதலாக தெரிந்து இருக்குமோ என்னவோ !இப்போது வெறும் பாசமாக மட்டுமே தோன்றியதுமது தனக்குள் யோசனையாகா உழன்றிருக்க

Advertisement

அவளின் நாயகனோ  ரத்தினத்திற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் ஸ்தம்பி த்துஇருந்தான்.    அதற்குள் வண்டி ரத்தினத்தின் வீட்டை நெருங்கி விட, அணைத்து மின்சார விளக்கும் அணைக்கப்பட்டு வீடு முழுவதும் இருள் சூழ்ந்து இருந்தது .

 

[the_ad id=”6605″]

 

 

கதவு உள்புறமாக தாளிட்டு இருக்க வண்டியிலிருந்து பாய்ந்து இறங்கிய மனோ கதவை உடைத்து வீடுவது போல் தட்ட ஆரம்பித்தான். வீடு  ஊரின் ஒதுக்கு புறமாய் இருக்க தெருவில்  சுத்தமாய் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது .

வீடு திறக்க தாமதம் ஆன ஒவொவ்வொரு நொடியும் மூவரும் செத்து பிழைத்தனர்வீட்டின் உள்ளே வெறும் விடிவிளகின் வெளிச்சத்தில் கையில் தூக்க மாத்திரையோடு அமர்ந்து இருந்தவள்எத்தனை மாத்திரை போடலாம் என்று ஒத்தையா ரெட்டையா போட்டு கொண்டிருந்தாள் .

தீடிரென்று கதவு உடைபடுவது போல் தட்டவும் யாரோ!!!! என்று பயந்து  ஒரு நொடியில் வியர்வையாள் குளித்து இருந்தாள்.உடல் முழுவதும் நடுங்க  கதவை  திறந்தவள்அந்த குறைவான வெளிச்சத்தில் பதட்டத்தோடு நின்றிருந்த மனோவை கண்டதும் காவியாவின் விழிகளில் நீர் அருவியாய்  கொட்டியது .

அவள் இந்த நேரத்தில் இங்கு மனோவை எதிர்பார்க்க வில்லை .இறக்கும் முன் அவன் குரலை  கேட்கவேண்டும் என்று தான் அழைத்திருந்தாள்.அடுத்த  பத்தாவது    நிமிடம்   அவன் இவளின் கண்முன்னே ,

மாமாஎன்று  கேவலுடன் மனோவை  நெருங்க, அவளை  தன்  இடது  கையால் தடுத்து நிறுத்தியவனின்  வலது கை   அவள்  கன்னத்தை   பதம் பார்த்தது .அடுத்த  நொடி தன்னோடு இறுக்கி  அணைத்தான் .

காவியாவை முழுதாக பார்த்த சக்திஒன்னு இல்லை மாமா நீங்க துக்க வீட்டுக்கு போயிருப்பிங்க, ஏற்கனவே காவியாக்கு காய்ச்சல் தனியா இருக்க பயப்படுவா இல்லையா  அதான்   கூப்டேன்.   இப்போ  உங்க வீட்ல  தான் இருக்கேன் நீங்க வர வரைக்கும் நம்ம வீட்டுக்கு  கூட்டிட்டு போறேன் மாமா,மது கூட இருக்கட்டும்

அத்தையில்லை  என்றாலும்  அத்தை பேரனின்  பாசம்  அவரை  நெகிழவைத்தது.சக்தி இங்கு இல்லாத  போது   சாந்தி,பிரியா  இருவரும்  மதுவின் மனம் காயப்படுமாறு   எவ்வளவோ    பேசி    இருக்கிறார்கள் .இவர்களால் தான் மது   கோவில்,திருமணம் இது போன்ற எந்த நிகழ்ச்சிகளுக்கும்  வாராமல்  இருந்தாள் .  

அப்படி இருக்கையில் சக்தி உதவுவது பெரிதாக தோன்றியது. ஆண் பிள்ளை  இல்லாதவருக்கு சக்தியயை  பிரியாவிற்கு   மணமுடித்து  மருமகனாய் பார்க்கஆசைப்பட்டார்.

ப்ரியாவின் குணம் பிடிக்காததால் பாரிஜாதம் மறுத்துவிட்டார் .முடிந்ததை எண்ணி நடக்க போவது ஒன்றும் இல்லை.”சரிப்பா கூட்டிட்டு போ நாளைக்கு அப்டியே காலேஜ் போயிட்டு  வீட்டுக்கு வரட்டும்என்று முடித்து விட்டார் .

அர்ஜுன் ,சக்தி இருவரும் அவர்களுக்கு தனிமை   கொடுத்து  வீட்டிற்கு  அருகில் உள்ள கொய்யா மரத்தின் அடியில் கையில் கொய்யாவோடு அமர்ந்து விட்டனர்.நேரம் உணவு  நேரத்தை கடந்து விட்டது அல்லவா ,

வெகு நேரம் அவனை அணைத்து அழுது கொண்டிருந்தவள் ஒருவழியாய் அழுகை முடிந்து நிமிர ,அவளை போலவே  மனோவின் விழிகளிலும் கண்ணீர். அதை பார்த்தவள் பதற  ஆரம்பிக்க ,

ஏண்டி ,என்ன விட்டு போக முடிவெடுத்த நீ இல்லனா நான் மட்டும் இருந்துடுவேனா,சொன்னா மட்டும் தான் காதலா நான் உன்ன லவ் பண்ணலைன்னு நீயா முடிவு பன்னிடுவியா,இனிமே சகா போறன்னு  எதாவது சொன்ன நானே உன்ன கொன்றுவேன்  பாத்துக்கோ ,”என்று உணர்ச்சிவசப்பட்டு கத்தியவன்  .

சொல்லுடி இனிமே அந்த மாதிரிஉளறுவியா…… என்று மேலும் கத்த ஆரம்பிக்க, அவளிற்கு பயத்தில் ……….நின்றிருந்த கண்ணீர் மீண்டும் வர ஆரம்பித்திருந்ததது. அவளின் அச்சத்தை  பார்த்தவன் இதுக்கு தான் உன்ன விட்டு நான்  தள்ளி இருக்கிறது.” 

என்றவன் அவளை விட்டு விலகி அமர்ந்து” சொல்லு டோரா உனக்கு என்னடா பிரச்சனைஎன்றவனின் குரல் கனிவாக இருந்தது 

மாமா ….மாமா…. “என்று அவள் முழிக்க,

இங்க பாரு சும்மா பேந்த பேந்த முழிக்கிறதா விட்டுடுட்டு என்ன பிரச்சனைன்னு சொல்லு ,உங்க அப்பாகிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு என்னமா பிரச்சனை. பசங்க எதாவது  டார்சர் பண்றங்களா ,

மாமாஎன்றவள் மீண்டும் அழுக ஆரம்பிக்க,” ஏய் லூசு எந்த பிரச்சனை நாளும்சொல்லு டி ,நான்  பாத்துக்கறேன்.உன் புருஷன் மேல உனக்கு நம்பிக்கை இறுக்கா இல்லையா“, சரேலென்று மனோவை நிமிர்ந்து பார்க்க ,”என்ன டா நம்மல   நிமிர்ந்து கூட பாக்காதவன் புருஷன்னு சொல்றேன்னு பாக்கறியா, நான் உன்ன என் பொண்டாட்டியா தான் பாக்கறேன்.

 

[the_ad id=”6605″]

 

 

ஆரம்பத்துல உன்ன லவ்லாம்  பண்ணலை. பா ட்டி எனக்கு நீ தாணு சொன்னதுல இருந்து உன்ன என்மனைவியாவே  நெனச்சிட்டேன் .உன்கூட பேசணும் ,பழகணும் னு அடிக்கடி தோணும் பட் உன்னோட பயந்த சுபாவம் பாத்துட்டு ஒதுங்கி போய்டுவேன்.

அண்ணா மது கூட இல்லாம இருக்கும் போது நான் உன்பின்னாடி சுத்திட்டு இருந்தா  மது அண்ணாவை நெனச்சி கஸ்டப்படுவா ,தனியா இருக்க மாதிரி பீல் பண்ணுவா இல்லையா ,

எப்போ இருந்தாலும்  நீ என்வீட்டுக்கு வர போறவ  தானே!!  மெதுவா பேசிக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீ லூசு மாதிரி செத்துருவேன் அது இதுன்னு உளறிட்டு இறுக்க   

உன்னால அண்ணாவும், மாமாவும்  வெளில பசியோட உக்காந்து இருக்காங்க பாரு சீக்கரம் சொல்லு என்ன பிரச்சனை .

அண்ணாவையும் ,மாமாவையும் வர சொல்லுங்க  சாப்பிடலாம் ,”

அதுலாம் ஒன்னும் வேண்டாம் வீட்ல அம்மா சாப்பாடு ரடி பன்னிட்டாங்க,நாம அங்க போய் சப்படலாம் ,உன்னோட பிரசச்சனை என்னனு சொல்லு

சொல்லாமல் அவன் விட போவதில்லை  என்று உணர்ந்தவள் .”அது வந்து ….தி….ஸ்சார் இருக்காரு இல்ல ,லாஸ்ட் செம்ல  நான் டிஸ்டிங்சன் வாங்கினேன் அதுக்கு ஒரு பிராண்டெட்  பென் கிப்ட்  பண்ணாங்க நானும் யதார்த்தமா வாங்கிட்டேன்.

…. . ..து   கேமரா  இருக்கும்னு எனக்கு தெரியாது .என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் முகத்தை    மூடி அழுக ஆரம்பித்துவிட்டாள் .   

மனோவிற்கு  சட்டென  மனதில் சினம்  எழுந்தது கவியாவிற்காக அதை மறைத்தவன். “இது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை .வீட்ல சொல்லி இருந்தா அவனை போலீஸ்ல சொல்லி களி திங்க வச்சிர்கலாம் …….

இப்போ என்ன நீ டிரஸ் சேன்ஞ் பண்றது ரெகார்ட்  ஆகி  உன்ன பிளாக்மெயில் பண்றான் அவ்ளோதானே ,இது ஒரு விஷயம்னு   சாக  போறியா,

அது இல்லை என்று அவசரமாய்  மறுத்தவள்

நான்  பிரியா அக்கா இங்க இல்லாத  தால  அவங்க ரூமை  தான் ஸ்டடி ரூமா யூஸ்       பண்றேன்.பென் அங்க தான் வச்சேன். பொங்கல்கு  பிரியா அக்கா வரும் போது அக்காவும் ,மாமாவும் …… ..ந் ….”

வேண்டாம் என்று வேகமாய் தலையசைத்தவன் .”சதீஸ் என்ன சொல்லி மிரட்றான் அதை மட்டும் சொல்லு.”என்று வார்த்தைகளை கடித்து துப்பினான் .

அந்த வீடியோ நெட்ல போடாம இருக்கணும்னா நா….ன்….. அவன் கூட வெளில ரெஸ்டாரன்ட்,மால்  அந்த மாதிரி வரணும்னு சொன்னான். நானும் போனேன் ஆனா இப்போ ஊட்டிக்கு ஒன்னு வீக் வர சொல்றன் …..

 ஏற்கனவே மாமா……… அக்கா,அவங்க அப்பா,அம்மா  மனச புரிஞ்சிக்காம  தனி குடுத்தனம் போனதுல  கோவமா இருகாங்கஇந்த வீடியோ மட்டும் வெளில வந்துச்சி என்ன பன்னுவங்களோ !!”

அதுனால நீ செத்துட்டா எல்லாம் சரியாகிடுமா  லூசு.ஒரு செகண்ட் யன்ன பத்தி யோசிச்சி பாத்தியா,அதை விடு  நீ சாப்ட்வேர் தான படிக்கிற ஒரு செகன்ட்ட்  அமைதியா யோசிச்சி இருந்தா எப்டி அதை யரேஸ்  பன்னலாம்னு ஐடியா கெடச்சி இருக்கும் .”

 

எல்லாம் நல்ல யோசிச்சிட்டேன் மாமா அவனோட லேப்டாப்லதான்  வீடியோ இருக்கு அதை அவன் வெளில கூட எடுத்துட்டு வரது இல்லைஇந்த வீடியோ மட்டும் இல்லை நெறய பொண்ணுங்க வீடியோ அவன்கிட்ட இருக்கு .

அவன் சொன்ன மாதிரி நடந்துக்குற பொண்ணுங்க வீடியோ டெலீட்     பன்னிடுவானாம்.   நேரடியா யாரையுமே மெரட்ற்றது இல்லை.எல்லாம் சுரேஷ் மட்டு ம்  தான் .கம்ப்லைன்ட்  பண்ணாலும் சுரேஷ் மட்டும் தான் மாட்டுவான்  .

 

அனால் சுரேஷ் கிட்ட எந்த வீடியோவும் கிடையாது .அவன் சொல்றத கேக்றத தவிர வேற ஒன்னும் பண்ண முடியாதுனு தான் நெறய பொண்ணுங்க அமைதியா இருகாங்க.அவங்க செலெக்ட் பன்றது எல்லாம் ஏழை பொண்ணுங்க,அப்பாம்மா இல்லாதவங்க பிரச்சனை வேண்டாம்னு ஒதுங்கி போறவங்க மட்டும் தான் .

 

 

என்னால அப்படி இருக்க முடியாது. இதுக்கு ஒரே  வழி நான் சாகிறது மட்டும் தான்இவர்கள் பேசியது அனைத்தும் அர்ஜுன்,சக்தி இருவரும் தள்ளி இருந்து கேட்டு கொண்டிருந்தனர்.

இருவருக்கும் ரத்தம் கொதித்தது .அந்த வீடியோ ஆதாரம் இல்லாமல் எதுவும் பண்ண முடியாது .அர்ஜுன் அவர்கள் டீமில் இருப்பவர்களிடம் சொல்லி அவன் லேப்டாப்  ஹேக் பண்ண சொல்லலாம் என்று அழைப்பு விடுக்க போக ,

சக்தி அவசரமாய் வேண்டாம் என்று தடுத்துபோலீஸ் வேண்டாம் டா ,காவ்யா சொல்றத பாத்தா நெறய பொண்ணுங்க வீடியோ இருக்கும் போல் இருக்குதனிப்பட்டவங்க  யாராவது நம்பிக்கையானவங்க இருந்தா பண்ண சொல்லு .”

அவர்களை நோக்கிய மனோ அண்ணா ஒருத்தாங்க இருகாங்க பட் முடியுமான்னு தெரில ,இருங்க என்று அழைப்பு விடுக்க ,

ஏன்டா,எருமை  ஈவினிங் ஊருக்கு வந்துட்டேன். வீட்டுக்கு வரேன்னு சொன்ன இன்னும் வரலை ,நீ வந்ததும்  சப்படலாம்னு  எல்லாரும் வெயிட் பன்னிட்டு இருக்கோம்.சீக்ரம்வந்து தொலை. “

என்று அவனை அன்பாக கொஞ்சியது சாட்ஷாத் நம் மது ஸ்ரீ தான் .

 

[the_ad id=”6605″]

 

 

 

அதுலாம் இருக்கட்டும்.  எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் உன்னால முடியுமா ஒரு லேப்டாப்  இருக்க பைல்ஸ்   எடுக்கணும் இப்போவே !!! கொஞ்சம் எமெர்ஜென்சி .”

 “பண்ணிடலாம் அத பத்தி ஒன்னும் இல்லஅப்படி பண்ணி குடுத்தா எனக்கென்ன யூஸ்.எது  பன்னாளும் அதுல நமக்கு எதாவது லாபம் இருக்கணும்  இல்லையா ,

பெரிய பிசினெஸ் மேக்னட் தான் லாபம் இல்லாம யதும் பண்ணமாட்டீங்க ,இதை பண்ணி குடு நீ கேட்டது கிடைக்கும் .”அப்போ சரி வரும் போது மோதிஸ் லட்டு ஒரு ஆப் கேஜி வாங்கிட்டு வா,”

பிளீஸ் சீரியஸ்மது உன்னால  முடியும் இல்லையா  என்று கேட்டது அர்ஜுனின் கோபக்குரல் .

அதற்கு எல்லாம் அசருவாளா   நம்   மது.”  அண்ணா என்னால முடியும் ,ஆனா எனக்கு இப்ப லட்டு வேணும் ஒரு  வாரமா உன்  மச்சான் கிட்ட சொல்லலாம்னு  பாத்தா  மனுஷன்   கையில      கெடைக்க மாற்றாரு,

மதுஸ்ரீ  உங்கிட்ட சொன்னத மட்டும்  செய்  .எது எதுல விளையாட்றதுன்னு  ஒரு அளவு இருக்கு என்ற சக்தியின் அதிகார குரலை கேட்டதும்  கப்சிப் என்று அமைதியானவள்.

என் லேப்டப்  ஜாம் ஆகி  சர்விஸ்  குடுத்துருக்கு ,உங்க லேப்     பாஸ்வேடு சொல்லுங்க.

என்றவள்மனமோ  அன்று ஒரு நாள் சக்தி  குளிக்க சென்ற பின் அவன் லேப்டாப் பாஸ்வேர்டு  தெரியாமல்  பல முறை முயற்சித்ததை  நினைத்து   பார்த்தது.

ஊருல இறுக்க சிஸ்டம் எல்லாம் ட்ரேக்  பன்னிட்டு இருந்தா  ஜாம்  ஆகாம  என்ன பண்ணும் .என்று அவளுக்கு ஒரு கொட்டு வைத்தவன் .

”   ஸ்ரீபிரியன்

 

சீக்ரம் சொன்னதை செய் இன்னும் பத்து நிமிசத்துல வந்துடுவேன் .என்று வைத்து விட்டான் .

அவன் வைத்த  கொட்டையெல்லாம் அவள் உணரவே இல்லைஸ்ரீபிரியன்” என்று  காதலோடு சொல்லி பார்த்தவள்நிச்சயம் நீங்க  இந்த ஸ்ரீ யோட  பிரியன் தான் .நான் சக்தியோட ஸ்ரீசக்திஸ்ரீ  என்று தன் பாஸ்வேர்டையும்  சொல்லி  பார்த்தாள்.

கைதானாக அவன்  சொன்ன  வேலையை செய்து  கொண்டிருந்தது.

காவியாவிடம் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் நாளை இந்த விசயத்திற்கு முற்று புள்ளி வைத்துவிடுவதாக உறுதி அளித்து .அர்ஜுனும் சக்தியும் ஒரு வண்டியிலும் .ரத்தினம் வண்டியில் மனோவும்,காவியாவும் கிளம்பினர்.

சக்தி சொன்னது போல்……  பத்து நிமிடத்தில்  கையில் லட்லடுடன் தங்கள்  அறையில் நுழைந்தான் .அவனை கண்டதும் மனைவி கூறியதை கேட்டது குழப்பத்துடன் நின்றுவிட்டான் .

மாமா நாம அனுப்புற நோடிபிகேஷன் அவன் அக்சப்ட் பன்னா தான்  ட்ராட்ரக் பண்ண முடியும். “

 

மொழி தொடரும் ……….

 

 

 

 

 

 

 v

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!