Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே?? 5

மனசு 5

அன்றைய நாள் அமோகமாக விடிந்தது. விசுவமூர்த்தி வீடு நிறைய சொந்தங்கள் நிரம்பி வழிந்தனர். மாலை இன்பவேணியின் சடங்கிற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

விதார்த் வீட்டிற்கு வந்தாலும் அவனை இன்பவேணி அருகே விடவில்லை கோசலை. ஆனால் விசுவமூர்த்தியுடன் விதார்த் நேரம் செலவழிக்க, எண்ணெயில் ஊற்றிய நீர் போல சுள்ளென முகத்தை வைத்திருந்தாள் இன்பவேணி.



Advertisement

விடுமுறை நாள் வேறு என்பதால் முன்னதாகவே இன்பவேணி வீட்டிற்கு வந்து விட்டான் விதார்த். ராமநாதனும் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய உறவினர்களுடன் நன்றாக பேசி பழகினான். உடன் அவர்களுக்கு உதவியும் செய்து கொண்டிருந்தான்.

Advertisement

கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்த உதய்கிருஷ்ணா தயாராகி அமர்ந்திருக்க, ராமநாதனும் வந்தார். இருவரும் ஒன்றாக கிளம்பினார்கள்.

Advertisement

“பூப்புனித நீராட்டு விழா” பெரிய பிரம்மாண்டமான மஹாலில் நடக்கவிருந்தது. அனைவரும் பிஸியாக இருக்க, தந்தையும் மகனும் வந்தனர். பெரிதாக அந்நேரம் யாருமில்லை. வீட்டு ஆட்கள் மட்டும் இருந்தனர். விசுவமூர்த்தி இருவரையும் உபசரித்து அமர வைத்தார்.

Advertisement

“அண்ணா வந்துட்டீங்களா? அப்பா..” என்று அவரை அழைக்க, அவர் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார்.

தமையனின் கையை அழுத்தி, என்னடா யாரையும் காணோம்?

“நாங்க இங்க தான இருக்கோம். யாருமேயில்லாத மாதிரி பேசுறீங்க அண்ணா” விதார்த் தோளில் கை போட்டு ஒருவன் பேச, அண்ணா இவன் இன்னுவோட தம்பி..ரோசன்..

ஹாய்..

“ஹாய் அண்ணா…இனி தான் கலைகட்டும். வெயிட் பண்ணி எஞ்சாய் பண்ணுங்க” ஆரவாரமாக அவன் பேச, இன்னும் நான்கு பேர் வந்தனர். இன்பவேணியின் அண்ணன்கள்…

அனைவரும் உதயிடம் அறிமுகமாகி பேசி செல்ல, உதய் வயதுள்ள ஒருவனும் இருந்தான். அவன் இன்பவேணியின் பெரியப்பா மகன். மூத்த அண்ணன் கார்த்திகேயன்.

“அப்புறம் பேசலாம்” உதயிடம் சொல்லி செல்ல, இவனிடம் லேசான புன்னகை மட்டுமே! ஆனால் விதார்த் அனைவரிடமும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ராமநாதன் விதார்த்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்புறம் என்ன? பிரியங்காவிற்கு விழா வைத்த போது தெரிந்தே உதய்கிருஷ்ணா பள்ளிச்சுற்றுலாவென சென்று விட, விதார்த்தோ யாரோ போல விழாவில் அமர்ந்திருந்தான். ஆனால் இங்கு நம் மகன் இப்படி மற்றவரிடம் பேசுகிறான் என பார்த்தார். அவருக்கு அப்பொழுதும் பிள்ளைகளின் மனம் புரியவில்லை.

“பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லு”ன்னு சொல்ற பழமொழி இவர்களுக்கு மட்டும் மாறிப் போயிருந்தது.

அன்று இன்பவேணியை பார்த்ததிலிருந்து அவளை காண வேண்டும் என மனம் உந்திக் கொண்டே இருந்தது உதய்கிருஷ்ணாவிற்கு. அவன் விழிகள் அவ்வப்போது அலை பாய்ந்தது.

கோசலை தயக்கமுடன் அவர்களிடம் வந்தவர் உதயை அழைத்து ராமநாதனை பார்த்தார். அவரும் கோசலையை பார்த்தார்.

“உதய், ஒரு உதவி மட்டும்பா. அங்கிள கொஞ்சம் வீடு வரை கூட்டிட்டு போறீயாப்பா?” தயங்கி தயங்கி கேட்டார்.

என்ன ஆன்ட்டி இதுக்கெல்லாமா தயக்கப்படணும்? அங்கிள் எங்க?

“வந்து..அவருக்கு கால்ல லேசா அடி பட்டிருக்கு. சொந்தங்களுக்கு தெரிஞ்சா ஏதும் பேசுவாங்க…” மேலும் தயங்கினார்.

“அடிபட்டிருக்கா? எங்க? எப்படி? வாங்க…” கோசலை கை பிடித்து உதய் செல்ல, அவனுக்கு அவன் தந்தையே மறந்து போனார். அதையும் ராமநாதன் கண்டுகொள்ளாமல் கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

“உதய் வேணிட்ட தான் வீட்டுச்சாவிய குடுத்து வச்சிருக்கேன்” என்று இன்பவேணி அறையருகே அழைத்து சென்றார். இவர்களை பார்த்து அவளின் அண்ணன் தம்பிகள், விதார்த்தும் வந்தனர்.

வீட்டுச்சாவிய குடுடி?

இப்ப யாரு வீட்டுக்கு போகப் போறது? அதிகாரமாக கேட்டாள் இன்பவேணி.

“யாரோ போறோம் உனக்கென்ன…குடு” அவளை நெருங்கினார்.

சொல்லு தாரேன்..

அது….சாமான் சிலத எடுக்க போகணும்..

எவ்வளவு தூரம். மொதவே பாத்து எடுத்து வைக்க மாட்டீயா? என்னோட அப்பாவ தான் எப்பப்பாரு அலைய வச்சிட்டே இருப்ப..

உதய் கார்ல தான் போறாருடி…குடு..எங்க வச்சிருக்க?

அந்த உம்மணா மூஞ்சி அதுக்குள்ள வந்துருச்சா. எப்பவும் எட்டு மணிக்கு தான வரும்..

“என்னடி உம்மணாமூஞ்சி?” அவள் சித்தி கேட்க, “வேணி” அதட்டினார் கோசலை.

“தன்னையா இவள் சொல்கிறாள்?” இன்பவேணி பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான் உதய்கிருஷ்ணா.

“யாருடி அது? எனக்கு தெரியாத உம்மணா மூஞ்சி?” கார்த்திகேயனின் தாய் வெளியே வந்து உதயை பார்த்தார்.

பணக்கார தோற்றத்தில் அசரடிக்கும் உதயை பார்த்து, “ஏப்பா உன்ன தான் வேணி புள்ள உம்மணா மூஞ்சின்னு சொல்லுதா?” அவனிடமே கேட்டார்.

“அய்யோ!” தலையில் அடித்த இன்பவேணியின் தம்பி, “பெரிம்மா அவர்கிட்டவே கேக்குறீங்க?”

எல்லாரும் வெளியே வந்து உதயை ஆராய்ந்தனர். அவனுக்கோ எல்லாரும் தன்னை பார்க்கவும் கூச்சம் வந்தது..

அவர்களை திசை திருப்ப எண்ணிய விதார்த், “ஏய் இன்னு..க்ளாப் பண்ணு… க்ளாப் பண்ணு” இன்பவேணியை அவசரப்படுத்தினான். கை முழுக்க மருதாணியுடன் இருந்த இன்பவேணி கை தட்ட செல்ல,

“வேணி….வேண்டாம்..மருதாணி ஸ்பாயில் ஆகிடும்” சித்தி ஒருவர் உரக்க சத்தமிட்டார். கைகளை நிறுத்தி விதார்த்தை முறைத்து, “டேய் விது…” சத்தமிட்டு இன்பவேணி வெளிய வர, பசங்க கேலியுடன் கலகலவென சிரித்தனர்.

அவளை பிடித்த பெண்கள், நீ இப்ப வெளிய போகக் கூடாது…

“புடவ உடுத்துனாலும் பொண்ணு மாதிரி நடந்துக்க மாட்டேங்கிற. பாவம்டி உன்ன கட்டிக்கப் போறவன்…” பெண்கள் கேலிக்குள் செல்ல, கோசலை அவரே எடுத்து வெளியே வரப் போக..

“என்ன கோசல…சரிதான? உன்னோட மூத்த மருமகன வேணிக்கு தான கட்டி வைப்ப?” கேட்ட வார்த்தையில் உதய் உள்ளம் பதக்கென ஆனது..

“அதெப்படி கோசல வேணாம்னு சொல்லும்கா. நல்ல பையன். இருவரோட ஜோடிப்பொருத்தமும் அற்புதமா இருக்கும்” மற்றவர் சொல்ல, உதய் விழிகள் கலங்கியே விட்டது.

“விட்டா இப்பவே கல்யாணத்த முடிச்சி வச்சிருவீங்க போல!!…அய்யோ! என்னால இதையே தாங்க முடியல.இப்படி டிரஸ் பண்ணி சாவடிக்கிறீங்க” சத்தமிட்டாள் இன்பவேணி.

“வெட்டிக்கத பேசாம வேலைய பாருங்கடி” சொல்லி கோசலை உதயை விசுவமூர்த்தியிடம் அழைத்து சென்றார்.

அவர் காயத்தை பார்த்து, “ஹாஸ்பிட்டல் போகலாம் அங்கிள்…” அழைத்தான்.

சின்ன காயம் தான் உதய். வீட்டுக்கு மட்டும் போகணும். சீக்கிரம் வேற வரணும்…என் தங்கச்சிங்க, மாப்பிள்ளை, மருமகனுக எல்லாரும் வந்திருவாங்க..

அவன் முகம் வாட, “சரி அங்கிள் வாங்க…” அவரை காரில் அழைத்து சென்றான்.

அங்கிள், உங்களுக்கு எத்தனை தங்கைகள்?

முதல்ல அண்ணா, அடுத்தது நான்…அப்புறம் நா லு தங்கைகள்…

அவங்களுக்கு பசங்க இருக்காங்களா?

ம்ம்!

அவர் வலியில் முகம் சுருக்க வேற எதுவும் கேட்காமல் வீட்டிற்கு வந்தனர். மருந்தை எடுத்து அவர் போட செல்ல, அவரை தடுத்து அவருக்கு போட்டு விட்டு, “பாத்து வேல பாருங்க அங்கிள்” கனிவுடன் பேசினான். அவர் உதயையே பார்த்துக் கொண்டிருந்தார்.

என்ன அங்கிள்?

உங்க அம்மாவ பாத்த மாதிரி இருக்குப்பா. நீங்க வீட்டுக்கு வந்த புதுசுல கோசலைட்ட வசதி பாக்காம நல்லா பேசுனாங்க. அப்படியே அவங்க மாதிரி கனிவா பேசுற..

புன்னகையை காட்டி, அங்கிள் நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க. இன்னும் நேரமிருக்கு. சரியான நேரத்துக்கு அழைச்சிட்டு போயிடுறேன்.

இல்லப்பா, அங்க எல்லாமே சரியா இருக்கான்னு பாக்கணும். உங்க ஆன்ட்டிக்கு நான் இல்லைன்னா வேலையே ஓடாது. வெளிய தான் காத்துட்டு நிப்பா…

சரி அங்கிள், போகலாம். ஆனா நீங்க எதுவும் செய்ய வேண்டாம். என்ன செய்யணும்னு சொல்லுங்க…நான் செய்றேன்..

அய்யோ! என்னப்பா நீ?

விது பாக்கலாம் நான் பாக்கக் கூடாதா அங்கிள்..???

“சரி” என சங்கடமாக புன்னகைத்து இருவரும் மஹாலுக்கு விரைந்தனர். விசுவமூர்த்தி சொல்லியது போலவே கோசலை வெளியேயும் உள்ளேயும் பதட்டமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

கண்டதும் உதய்கு சிரிப்பு வர, விசுவமூர்த்தியிடம் சொல்லி சிரித்தான்.

“உனக்கும் ஒரு துணை வரும் போது உனக்கு புரியும் உதய்…” அவன் தோள் தட்டி சிரித்து நொண்டியவாறு மனைவியிடம் சென்றார்.

அங்கிள்…

இருவரும் திரும்பி பார்த்தனர்.

உதய்கிருஷ்ணா கை கட்டிக் கொண்டு செல்லமாக விசுவமூர்த்தியை முறைத்தான்.

“என்னாச்சு உதய்?” கோசலை பதற,

“அங்கிள் சொன்னது போல நீங்க ஒரிடத்தில் இருங்க. நான் ஆன்ட்டியோட போய் பாத்துக்கிறேன்” என்று கைச்சட்டையை மடித்தான்.

வியந்து அவனை பார்த்த கோசலை கணவரை பார்க்க, அவர் புன்னகையுடன் “கூட்டிட்டு போ கோசல…” என்றார்.

என்னங்க?

“ஆன்ட்டி வாங்க” உதய் முன் செல்ல, அவன் பின் ஓடினார் கோசலை. புன்னகையுடன் அமர்ந்தார் விசுவமூர்த்தி.

தன் பெரிய மகனும் இவர்கள் வீட்டில் வேலை செய்கிறானா? நம்ப முடியாத ஆச்சர்யம் ராமநாதனுக்கு. அவருக்கு உதயின் செய்கை கொஞ்சமும் பிடிக்கவில்லை. யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தார்.

இந்த சிறு இடைவெளியில் கார்த்திகேயனுக்கும் உதய்கிருஷ்ணாவிற்கு நட்பு மலர்ந்தது. புன்னகை முகமுடன் பேசும் கார்த்திக்கை உதய்கிருஷ்ணாவிற்கு மிகவும் பிடித்து போனது..

ஆட்கள் வரத் தொடங்கினர். உதய்கிருஷ்ணா வேலையில் மும்பரமாகி விட, இன்பவேணியை பார்க்கவேயில்லை. விசுவமூர்த்தியின் தங்கை குடும்பங்கள் வந்தனர். கலாட்டாவாக சென்று கொண்டிருந்தது. கார்த்திகேயனும் உதய்கிருஷ்ணவும் சேர்ந்தே அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

யாருடனும் பழகாத தன் அண்ணனுக்கு தோழன் கிடைத்ததில் விதார்த்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை.

மச்சான்…ஓடி வந்து கார்த்திகேயனை ஒருவன் கட்டிக் கொண்டான்.

எப்படா வந்தீங்க?

இப்ப தான் மச்சான்…எங்க நம்ம க்யூட்டி பை..

“சொல்லீட்டு அவட்ட அடிவாங்காதடா…” கார்த்திகேயன் எச்சரிக்க, அவனின் அத்தை மகன் கேட்பதாக இல்லை.

“என்ன மச்சான்…?? மாமா பொண்ணு வச்சிட்டு சைட் அடிக்காம இருக்க முடியுமா? எனக்கு புல் ரைட்ஸ் இருக்கு. நாம அப்புறம் பேசலாம்…பை…” அவன் ஓடி விட்டான்.

புன்னகைத்த கார்த்திகேயன், இவன் எங்க கடைசி அத்தை மகன்..ரொம்ப செல்லம்..

அவன் சொன்ன க்யூட்டி பை இன்பவேணியா?

“ஆமா உதய், இவன் பரவாயில்ல. இரண்டாவது அத்தை மகன் இருக்கானே! ஹப்பா…சரியான ஜொல்லு. நாம இன்னிக்கி நனைய தான் போறோம்” பேசிக் கொண்டே நடந்தான்.

ஸ்டன்னாகி நின்று விட்டான் உதய்கிருஷ்ணா..

“உதய்…” கார்த்திகேயன் அழைக்க, ம்ம்! அவனுடன் நடந்தான்.

ஆக்சுவலா நம்ம வேணிக்கு மூத்தவன்னா ரொம்ப பிடிக்கும். என்ன சேட்ட பண்ணாலும் அமைதியாவே அவள ஹேண்டில் பண்ணுவான். அவனுக்கு அவன்னா உயிரு. ஆனா மாமாவுக்கு வேணியோட சுட்டித்தனம் சுத்தமா பிடிக்காது. திட்டிட்டே இருப்பாரு..ஆனா அவள மகனுக்கு கல்யாணம் பண்ணனும்னு அத்தைக்கு ஆச…

“அவ இன்னும் வளரணுமே!” தொண்டை அடைக்க கேட்டான் உதய்கிருஷ்ணா.

ம்ம்! சரியா சொன்ன…?? இன்னுமே அவ சின்னப்பொண்ணு தான். ஆனா மாமா, அத்தை பொண்ணுன்னு பேசி வச்சுப்பாங்க…அது போல தான் வேணிக்கும். ஆனா கோசல சித்தி, சித்தப்பாக்கு சொந்தத்துல கல்யாணம் முடிக்க விருப்பமில்லைன்னு நினக்கிறேன். அவங்க இந்த பேச்சு வந்தாளே நகன்றுடுவாங்க..

ஓஓ!!!

ம்ம்! ஆமா உதய், எனக்கு மச்சான ரொம்ப பிடிக்கும். அவரு பாரின்ல இருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவார். நீயே பாரேன்…கொஞ்சம் சித்தப்பா போல தான் இருப்பார்..

“அதான் அவளுக்கு பிடிக்கும் போல!” அவனாக எண்ணிக் கொண்டான் உதய்கிருஷ்ணா. ஆனாலும் அவளுக்கும் அவனை பிடிக்கும் என்று கார்த்திகேயன் கூறியதே ஓடிக் கொண்டிருந்தது.

அவன் முகமாற்றத்தை கவனித்த கார்த்திகேயன் அவனுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

மேள வாத்தியங்கள் முழங்க கோசலையின் அண்ணன் வீட்டினர் தாய் மாமன் முறையில் நிறைய சீருடன் வந்தனர். ஆட்கள் நிரம்பி வழிந்தனர் அம்மஹாலில்.

சீரை மேடையில் அவர்கள் ஏற்றவும் இன்பவேணி அழைத்து வரப்பட்டாள். கைநிறைய மருதாணியும் புடவையில் ஒப்பனையுடன் வந்தாள். உதய்கிருஷ்ணாவும் கார்த்திகேயனும் விசுவமூர்த்தி அருகே நின்றிருந்தனர். விதார்த் அவளுக்கு நேராக நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆடை மாற்றி வர செல்ல..இன்பவேணியையே கண்ணிமைக்காமல் பார்த்திருந்த உதய்கிருஷ்ணா தோள் தட்டினான் கார்த்திகேயன்.

இன்பவேணியை சிறுபிள்ளையாக பார்த்த உதய்கிருஷ்ணாவிற்கு மூச்சடைத்தது. மூச்சை இழுத்து பிடித்திருந்தான். கார்த்திகேயன் அழைத்தும் அவனை பார்க்க கூடயில்லை. கார்த்திகேயன் பயந்து தான் போனான்.

“டேய் உதய்…” உதய்கிருஷ்ணாவை உலுக்க, தன் மகளை கண்ணிறைய பார்த்துக் கொண்டிருந்த விசுவமூர்த்தி கார்த்திகேயன் சத்தத்தில் இருவரையும் பார்த்து பதறினார்.

உதய்கிருஷ்ணா மூச்சுவிட முடியாமல் திணற, அவனது முதுகையும் நெஞ்சையும் தடவினான் கார்த்திகேயன். அருகே இருந்த ஒருவர் குடிக்க நீர் கொடுக்க அருந்திய பின் தான் சாதாரணமாக அமர்ந்தான்..

“என்னாச்சு உதய்?” பதட்டம் குறையாமல் கேட்டார் விசுவமூர்த்தி..

ஒண்ணுமில்லை அங்கிள்…

“அதெப்படி ஒண்ணுமில்லாமல் போகும்???” பல்லை கடித்தான் கார்த்திகேயன்.

“அங்கிள், முதல்ல பங்சன கவனிக்கலாம்” எழுந்தான் உதய்கிருஷ்ணா.

“சரிப்பா” அவர் மேடைக்கு நொண்டியவாறு செல்ல, கார்த்திகேயன் உதய்கிருஷ்ணாவிடம் ஆராய்ச்சி பார்வை செலுத்தினான்.

சொல்லு? ஹெல்த்துக்கு ஏதுமா?

ம்ம்! அம்மா இறந்த அதிர்ச்சியில் முதன் முறையாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் வந்தது. அப்புறம் பள்ளியில் ஒருவனுடன் பிரச்சனை ஏற்பட்ட போது வந்தது. போன வருடம் ஒரு முறை வந்தது..

“உன் பயத்துடனான அதிர்ச்சியில் ஏற்பட்டதுன்னா இப்ப என்ன நடந்தது?” அவனை ஆழ்ந்து பார்த்தான்.

அமைதியாகி விட்டான் உதய்கிருஷ்ணா. இன்பவேணி பிடித்தமாக எண்ணி இருந்தவனுக்கு, தற்பொழுதான பொறாமை. அவளை புடவையில் பார்த்த அதிர்ச்சியில் மயங்கியது என அவளை தனக்கு பிடித்துள்ளது என புரிந்து கொண்டான்.

“என்ன யோசிக்கிற உதய்? உனக்கு என்னோட தங்கச்சிய பாத்தா அதிர்ச்சியாவா இருக்கு? இல்ல அவ அழகுல மயங்கீட்டியா” உதட்டை மடித்து கார்த்திகேயன் சிரிக்க, மீண்டும் அதிர்ந்த பார்வையை உதய்கிருஷ்ணா அவனிடம் செலுத்தினான்.

டேய் டேய்..மறுபடியும் மயங்கீடாதடா…உன்னோட அப்பா பத்தி விது சொன்னான். அவ்வளவு தான்..நாங்க காலி..

அதிர்ச்சி முகம் சென்று வாட, தலை கவிழ்ந்து கொண்டான்.

உதய், நாம வயசு பசங்க. நமக்கு பெண்களை பார்த்தால் பிடிப்பது சாதாரணம் தான். நீ டென்சன் ஆகாத..

“எனக்கு அப்படி தோணலடா” என்று தேவதை போல புடவையில் மேடை ஏறும் இன்பவேணி பார்த்து தலைகவிழ்ந்தான்.

“உதய்” கார்த்திகேயன் அழைக்க, உதய்கிருஷ்ணா அவன் முகம் பார்க்கவே சிரமப்பட்டான்.

“கார்த்திக்” என்ற குரலில் இருவரும் பின்னே திரும்பினர்.

“மச்சான், எப்படி இருக்கீங்க?” கார்த்திகேயன் ஓடிச் சென்று அவன் கூறிய அவர்களின் மூத்த மச்சானை அணைத்தான்.

“நான் நல்லா இருக்கேன்” என்று உதயை பார்த்து, யாருடா அவன்? குறுகுறுன்னு பாக்குறான்.

“உதய் இங்க வா…” என்ற கார்த்திகேயன் அவன் மச்சான் பாலாஜிக்கு உதயை தன் நண்பன் என்றும் விச்சு பெரியப்பாவின் பக்கத்து வீட்ல இருக்கான் என்றும் அறிமுகப்படுத்தினான். இருவரும் கை குலுக்கிக் கொண்டனர்.

கார்த்திக் ஏதும் பிரச்சனையா?

ஏன் மச்சான்?

“நம்ம பாப்பா முகமே சரியில்லையே!” மேடையை பார்த்துக் கொண்டே கேட்டான் பாலாஜி.

இருவரும் வேகமாக மேடையை பார்த்தனர். முகம் கலையிழந்து காணப்பட்டாள் இன்பவேணி. அவளருகே மற்ற மச்சான்கள் கேலி செய்து அவளை சமாதனப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். மூவரும் அவ்விடம் விரைந்தனர்.

“இப்ப தான வந்தோம். சும்மா மருமகள முறைச்சிட்டே இருக்காதீங்க..” பாலாஜியின் தாய் கூறிக் கொண்டிருக்க, முகம் கூம்பி போனது உதய்கிருஷ்ணாவிற்கு. கார்த்திகேயன் அவனை பார்த்து அவர்களை பார்த்தான்.

“மாமா எப்படி இருக்கீங்க?” அவரை அணைக்க செல்ல, “அழுக்காக்காதடா” அவனை தடுத்தார் அவர்.

க்ஹூம்…நொடித்த அவரின் மனைவி, “மாப்பிள்ள எப்படி இருக்கீங்க?” மகிழ்ச்சியுடன் கார்த்திக் கரம் பற்றினார். இருவரும் பேச…மாமூ…பின்னிருந்து ஒரு பெண் கார்த்திக்கை அணைத்தாள்.

“மகா விடுடி.. ஆளுங்கலாம் இருக்காங்க” அவள் தாய் திட்ட,

“என்ன வாலு எப்படி இருக்க? ஸ்கூல் எப்படி போகுது?” கார்த்திகேயன் அவளை விசாரித்தான். எல்லாரையும் பார்த்துக் கொண்டிருந்த உதய் கவனம் இன்பவேணியை தொட்டு மீண்டு கொண்டிருந்தது.

வேணிக்கு என்னாச்சு அத்த?

அண்ணாவுக்கு கால்ல அடிப்பட்டிருக்குல்ல. அதான் கோவிச்சுட்டு இருக்கா..

விதார்த்தும் இன்பவேணியிடம் பேச, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

“வேணிய நான் கூல் பண்றேன்” என்று பாலாஜியின் தங்கை மகாலட்சுமி மேடை ஏறினாள்.

முகத்தில் சந்தனம் குங்குமம் வைத்து அனைவரும் அவளை ஆசிர்வாதம் செய்து கொண்டிருக்க அவளை நெருங்கி,

“ஏய் குட்டிக் குரங்கு…மூஞ்சிய பல்லு போன கிழவி மாதிரி வச்சிருக்க? போட்டோல்ல குரங்கு மாதிரி ஆகிடுவ….” கேலி செய்தாள்.

“ஏன்டி வந்ததும் அவள வம்பு அளக்குற?” கார்த்திக்கின் அம்மா கேட்க,

அத்த நான் உன்ட பேசல..

ஆமாடியம்மா, என்ட நீ பேசல தான். ஆனா எம் பொண்ணுட்டல்ல பேசுற…

அட, நீ எப்பம்மா என்னோட அத்தையோட பொண்ணான?

எந்த முகமாற்றமும் இன்றி உம்மென்று இருந்தாள் இன்பவேணி.

முன் வந்து, “என்னடி பிரச்சன? பாரு மாமா நல்லா இருக்கார். கால்ல லேசான அடிதான? அதுக்கு ஏன் இப்படி ரியாக்ட் பண்ற? இன்று நீ தான் ஹூரோயின்…உனக்கான விழா…சிரிச்சு சந்தோசமா எஞ்சாய் பண்ணு..”

“அண்ணீ” உதட்டை பிதுக்கினாள்.

அய்யோ! மூஞ்சிய இப்படி வச்ச என்னோட அண்ணா வந்த வழியே ஒடிருவான்..

பாலாஜியை இன்பவேணி தேட, வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

மச்சான் எப்ப வந்தாங்க?

இப்ப தான் வந்தோம்..

ம்ம்! பாலாஜியை கண்டு புன்னகைத்தவள் அவனருகே மூஞ்சிய உம்மென வைத்திருந்த உதய்கிருஷ்ணாவை பார்த்தாள்.

“உம்மணா மூஞ்சி அப்பாவுக்கு கெல்ப் பண்ணதா சொன்னாங்க. எதுக்கு இப்படி நிக்கிறான்? யாரும் ஏதும் சொல்லீட்டாங்களோ?” என விதார்த்தை காண அவன் கீழே இறங்கி இருந்தான்.

                  “ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்

              என்னை பொறுத்தவரை காவியம்

                         எந்நாளும் நீதான்டி

                        என்னோட ராசாத்தி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!