Skip to content
Post Views: 496

சிவா கோவமாக வெளியே சென்றவன் எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் வேகமாக சென்று கொண்டு இருந்தான்.. எதிரில் ஆகாஷ் வந்ததை கூட கவனிக்கவில்லை.. அவனும் “அண்ணா அண்ணா” என்று அழைத்து பார்த்தான்.. அவன் அது கேட்காத அளவு வேகமாக சென்று இருந்தான்…
அவனின் வேகம் ஆகாஷுக்கு பயத்தை கொடுக்க இவனும் வேகமாக அவனை பின்தொடர்ந்தான்… எவ்வளவு வேகமாக சென்றும் அவனை பிடிக்க முடியவில்லை… ஒரு இடத்தில சிவாவின் வண்டியே பெட்ரோல் இல்லாமல் நின்று இருக்க ச்சே என்று வண்டியை அப்படியே கீழே போட்டு விட்டு அங்கி இருக்கும் மரத்தடியில் அமர்ந்து இருந்தான்…
வண்டி கீழே கிடப்பதை பார்த்து பயந்த ஆகாஷ் சிவா கீழே அமர்ந்து இருப்பதை பார்த்து அவனும் வண்டியை நிறுத்தியவன் “அண்ணா” என்று அவன் அருகில் சென்றான்…
Advertisement
சிவாவின் முகமே சிவந்து போய் இருந்தது கோவத்தில்… ஆகாஷே பயந்து விட்டான்… அவன் அருகில் அமர்ந்தவன் “அண்ணா என்ன ஆச்சு.. என்ன கோவம் உனக்கு…” என்று அவனின் கை மேல் கை வைத்து கேட்டான்…
அவன் அமைதியாக இருக்க “அண்ணா முதல்ல எந்திரி.. வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா” என்று அவனை பிடித்து இழுத்தான்…
ஆகாஷும் வலிமையான ஆண்மகன் தான்… ஆனால் அவனால் சிவாவை இழுக்க முடியவில்லை… எப்படியோ கஷ்டப்பட்டு அவனை எழுந்து நிற்க வைத்தவன் அப்போது தான் அவனின் இன்னொரு கையில் அடிபட்டு இருப்பதை பார்த்தான்… அங்கு இருக்கும் மரத்தில் குத்தி கொண்டு காயமாக்கி இருந்தான்…
Advertisement
“அண்ணா உனக்கு என்ன கோவம்… எதுக்கு உன்னையே காயப்படுத்திட்டு இருக்க…” என்று கூறி அவன் கையை ஆராய்ந்தான்..மரத்தில் குத்தி நன்றாக காயமாகி இருந்தது…
Advertisement
அவன் எதுவும் பேசாமல் இருக்க ஆகாஷே “அண்ணா முதல்ல ஹாஸ்பிடல் வா போகலாம்…” என்று வற்புறுத்தி அழைத்தான்… சிவா எதுவும் பேசாமல் வண்டியை எடுக்க போக “அண்ணா கையில காயத்தை வெச்சிட்டு என்ன பண்ண போற.. என் வண்டில வா… உன் வண்டியை இங்க பக்கத்துல நிறுத்திட்டு அப்பறம் வந்து கூட எடுத்துக்கலாம்…” என்று கூறினான்…
சிவா “அது எல்லாம் ப்ரோப்லம் இல்ல ஆகாஷ்… என்னோட வண்டில வரேன்.. பக்கத்துல தானே ஹாஸ்பிடல்… வா” என்று கூறி கிளம்பிவிட்டான்…
“ஐயோ இந்த அண்ணனோட… டேய் அண்ணா மெதுவா போ” என்று சத்தமாக கூறியவன் இவனும் அவன்பின்னே சென்று விட்டான்…
Advertisement
இருவரும் மருத்துவமனை விட்டு காட்டிவிட்டு வெளியே வரும் போது ஒரு கார் உள்ளே நுழைந்தது… அதில் இருந்து தேவியின் பெற்றோர்கள் இறங்க கூடவே ரித்திகாவும் இறங்கினாள்..
எப்போதும் பெரியவர்களை மன்த்லி செக்கப்பிற்கு அவள் தான் அழைத்து வருவாள்…. வாரம் ஒருமுறை ஒரு ஒருவராக அழைத்து வருவாள்… முதலில் இருவரையும் அவள் தான் கவனித்தாள்… பார்த்து விட்டு தேவியின் அப்பாவிடம் “தாத்தா அங்க பாருங்க” என்று இருவரையும் காட்டினாள்..
சிவா மூவரையும் பார்த்து விட்டு கையை பின்னால் மறைத்து கொண்டவன் “செக்கப் வந்திங்களா தாத்தா….” என்று கேட்டான்…
அவரும் “ஆமா சிவா.. நீ எங்க இங்க… ரெண்டு பேராண்டியும் ஹாஸ்பிடல்ல என்ன பண்றிங்க…” என்று கேட்டார்…
ஆகாஷ் தடுமாற சிவாவோ “என் பிரெண்டோட அம்மாவை இங்க சேர்த்து இருக்காங்க தாத்தா அதை பாக்க வந்தோம்” என்று கூறும் போதே ரித்திகா அவன் கையை பார்த்து விட்டு பதறி “தாத்தா அவர் கையை பாருங்க” என்று கூறி அவளே அவன் கையை முன் பக்கம் இழுத்து கட்டை ஆராய்ந்தாள்…
மற்ற இருவரும் பதறி அவன் அருகில் வந்தனர்… சிவா அவர்களை மென்மையாக பார்த்து “எனக்கு ஒன்னும் இல்ல தாத்தா சின்ன அடி தான்.. முதல்ல ஹெல்த் செக்கப் பண்ணிட்டு வாங்க…” என்று அவர்களை அனுப்பி வைத்தான்…. “ஆகாஷ் நீயும் தாத்தாவோட போயிட்டு வா..” என்று அனுப்பி வைத்தான்…
அவனோ தயங்கியவாறு நிற்க “டேய் நான் எங்கயும் போக மாட்டேன்.. இங்க தான் இருப்பேன் போயிட்டு வா” என்று அனுப்பி வைத்தான்..
அவனும் சென்று விட ரித்திகா தான் அவனை திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றாள்.. தன் கையில் கட்டை பார்த்து விட்டு பதறிய அவள் கண்கள்…. தனக்கென அவள் சிந்திய கண்ணீர் என எண்ணி அவன் அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்து விட்டான்…
அதை நினைத்து கொண்டு இருந்தவன் “இவளை ஏன் ப்பா வேண்டாம்னு சொன்னிங்க.. உங்க தங்கச்சி பொண்ணு சந்தோசமா இருக்கனும்னு இவளை கேவலப்படுத்தறீங்க… இவ மனசு குழந்தை மாதிரி ப்பா… நீங்க பேசுறதை இவ கேட்டு இருந்தா வீட்டை விட்டே போய் இருப்பா ப்பா.. நீங்க இப்படி பேசுவீங்கனு கனவுல கூட நினைச்சது இல்ல ப்பா” என்று மானசீகமாக தன் தந்தையிடம் உரையாடி கொண்டு இருந்தான்…
முதலில் தேவியின் அம்மாவிற்கு செக்கப் முடிய அவரை அழைத்து கொண்டு அவனின் அருகில் அமர வைத்தாள்… “அம்மாச்சி இங்கயே உட்காருங்க.. நான் போய் ஜூஸ் வாங்கிட்டு வரேன்….” என்று கூறி கிளம்ப போனவளை “பாப்பா தனியா எங்க போற… கூட சிவாவை கூட்டிட்டு போ” என்று கூறினார்..
அவளோ சிரிப்புடன் “பாட்டி நாம மூணு பேர் மட்டும் வந்து இருந்தா நான் மட்டும் தானே போவேன்… இப்போ ஏன் அவருக்கும் கைல அடிபட்டு இருக்கு..” நானே போயிட்டு வரேன் என்று கூறினாள்..
அந்த பாட்டி கூறியதும் முகத்தில் பல்ப் எறிந்த சிவாவிற்கு ரித்திகா கூறியதை கேட்டு பிஸ் போனது போல் ஆனது… அந்த பாட்டியும் “பரவால்ல அப்போ யாரும் இல்ல தனியா போவ.. இப்போ சிவா இருக்கான்ல போயிட்டு வா.. நீங்க குடிச்சிட்டு எங்களுக்கு வாங்கிட்டு வாங்க” என்று கூறி அனுப்பி வைத்தார்…
அவளும் சரி என கூறிவிட்டு சிவாவை பார்க்க அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.. இவள் பார்த்ததும் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க இவளும் காதில் தொங்கும் ஜிமிக்கி அசைந்தாட இல்லை என தலையசைத்து கேன்டீன் நோக்கி நடந்தாள்… இவனும் அவளை பார்த்து கொண்டே பின்னே சென்றான்..
இருவரும் ஜூஸ் வாங்கி விட்டு மூன்று பார்சல் கூறிவிட்டு பணத்தை செலுத்த செல்ல ரித்திகா பர்சில் இருக்கும் பணத்தை எடுக்க சிவா பார்த்த பார்வையில் அப்படியே வைத்து விட்டாள்… அவனும் செலுத்தி விட்டு அவள் அருகில் வர இருவரும் குடிக்க ஆரம்பித்தனர்…
அவளோ அவனையும் அவன் கையையும் மாறி மாறி பார்க்க “என்ன மாறி மாறி பாக்குற” என்று கேட்டு இருந்தான்…
அவள் அவன் கையை பார்த்து கொண்டே “கையில எப்படி அடிபட்டுச்சு” என்று கேட்டாள்.. “அவசியம் சொல்லனுமா” என அவன் கேட்க “உங்களுக்கு விருப்பம் இல்லனா வேண்டாம்” என்று மெதுவாக கூறி அமைதியாகிவிட்டாள்….
“ஹே பொண்ணே என்ன சைலன்ட் ஆகிட்ட.. கொஞ்சம் டென்ஷன் அது தான் மரத்துல குத்தி கோவத்தை காட்டினேன்…” என்று அவன் கூலாக கூற அவள் தான் பதறி விட்டாள்..
“என்ன இவளோ ஈஸியா சொல்றிங்க அப்படி என்ன கோவம் உங்களுக்கு… உங்களயே காயப்படுத்திக்குற அளவுக்கு” என்று பதறி போய் கூறினாள்…
“ஹே பொண்ணே சின்ன காயம் தான் கட்டு தான் இவளோ பெருசா இருக்கு.. ஆகாஷ் கிட்ட அப்பயே சொன்னேன் அவன் தான் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்துட்டான்…” என்று கூறினான்
“ஆகாஷ் அத்தான் சரியா தான் பண்ணி இருக்காரு..” என்று அவள் கூறியதும் ஆகாஷை அத்தான் என அழைப்பதை கேட்டு அவளை புருவ சுளிப்புடன் பார்த்தான்..
“அவன் அத்தானா… அப்போ நான் யாரு.. “என்று பொறாமையாக கேட்டான்…
அவளுக்கு அந்த பொறாமை உணர்வு எல்லாம் தெரியவில்லை… “அது உங்களை அவரை போல அத்தான் அப்படினு இனிமே கூப்பிடுறேன்” என அவள் கூற “அவனும் நானும் ஒண்ணா உனக்கு” என அவன் கேட்க என்ன கூறுவது என்று தெரியவில்லை….
அவள் அவனை பாவமாக பார்க்க “வா பாட்டிக்கு ஜூஸ் தரலாம்” என்று அழைத்து சென்றுவிட்டான்… அவள் தான் ஒன்றும் புரியாமல் அவன் பின் சென்றாள்…
இங்கு இப்படி இருக்க அர்ஜுனனுடன் வீட்டிற்கு வந்த நிரவி அப்பாவை எதை பற்றியும் யோசிக்காமல் இருக்க கூடியவள் அங்கு வர்ணன் வீட்டில் நடந்ததை நினைத்தவாறு உறங்கியவள் ஒரு மணி நேரத்தில் “அப்பா வேண்டாம்” என கத்தி கொண்டே எழுந்து அமர்ந்து இருந்தாள்…
அந்த கனவின் தாக்கத்தால் எழுந்து அமர்ந்தவள் ஒரு முடிவை எடுத்து விட்டு முகம் கழுவி கொண்டு கீழே சென்றுவிட்டாள்.. ஆனால் வீட்டில் ஒத்துக்கொள்வார்களோ என எண்ணி கொண்டு சோபாவில் அமர்ந்துவிட்டாள்
error: Content is protected !!