Skip to content
Post Views: 1,684
அத்தியாயம் 19
“அவ்வா!” என அதிர்ந்து வாயில் கைவைத்த பல்லவி,
Advertisement
“வேண்டாம்னு சொல்லிட்டீங்களா? நீங்களா? ப்ச்! உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லை தெரியுமா?” என கீர்த்திஸ்வரனின் முன் நின்றாள் பல்லவி.
Advertisement
Advertisement
“அடி வாங்க போற நீ!” ஈஸ்வர் அவளிடம் சொல்ல,
Advertisement
“அந்த பொண்ணை இப்படி ஏமாத்திட்டிங்களே சார்! அவ்வா! அவ்வா!” என மீண்டும் மீண்டும் அவள் சொல்ல, அவளருகே வந்து அவள் காதை பிடித்துவிட்டார் லதா.
“வாய் கூடிப் போச்சு டி உனக்கு. நானே போனை மனுஷன் உடைச்சிட்டு போய்ட்டார.. பையனை என்ன சொன்னாரோ.. அவன் என்ன அழுத்தத்துல இருக்கானோனு கவலைல இருக்கேன். நீ அவனை சொல்றியா” என்று அவளை கேட்க, ஈஸ்வர் பார்வை எல்லாம் பல்லவியிடம் தான்.
“ஆமா பொல்லாத கவலை!” என்ற பல்லவி,
“கையை எடுங்க லதாம்மா. வலிக்குதுல்ல!” என அவரிடம் இருந்து தள்ளி வந்து,
“அந்த பொண்ணு எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்னு சுத்தி வரும் போது அமைதியா இருந்திங்க. அப்புறம் ரெண்டு வருஷம் நாலு வருஷம் ஆகும் கல்யாணத்துக்குன்னு அலைய விட்டிங்க. இப்ப வேண்டாம்னே சொல்லியாச்சு. இல்ல தெரியாம தான் கேட்குறேன் அது பொண்ணா இல்ல பன்னா? இஷ்டத்துக்கு வேணும் வேண்டாம்னு ஆடுறிங்க. உங்க பையனுக்கு நீங்க சப்போர்ட் வேற!” என்று வாயை மூடவே இல்லை பல்லவி.
“ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னதுக்கே காருக்கு பெட்ரோல் போட்டு இந்த வீட்டுக்கும் அவ வீட்டுக்கும் நடையா நடந்தா… இப்ப வேண்டாம்னு சொல்லிருக்கீங்க… ம்ஹும்! சும்மா விட மாட்டா. சும்மாவே விட மாட்டா. போலீஸ் கூட வர வாய்ப்பிருக்கு!” என அவ்வளவு மூச்சை பிடித்தபடி பேச்சு பல்லவியிடம்.
“ம்மா!” என சத்தமாய் அழைத்த ஈஸ்வர்,
“எங்க இருந்து ம்மா இவளை பிடிச்சீங்க?”என்ற போது அவன் முகமும் சிரிப்பில் வந்து நிற்க,
“பார்த்தியா! இப்படி தான் டா இவ என்ன பேசினாலும் எனக்கு கோவமே வர மாட்டுது. இப்ப உனக்கு வரலைல?” என்றார் லதாவும்.
“ஏன்னா பல்லவி பாயிண்ட்டு அப்படி. எப்படி புட்டு புட்டு வச்சேனா உங்களைப் பத்தி!” என்று அவள் கேட்க,
“ப்ச்! அவ இருக்கட்டும். நீங்க சொல்லுங்க! அப்பா என்ன சொன்னாங்க? ரொம்ப திட்டிட்டாங்களா?” என்றான் அன்னையிடம் ஈஸ்வர்.
“நீ என்ன பண்ணின ஈஸ்வர்? முதல்ல அதை சொல்லு!” என்று கேட்டார் லதா. கன்னத்தில் கைவைத்து சோஃபாவில் அமர்ந்துவிட்டாள் பல்லவி.
“ரொம்ப பேசிட்டாங்க. அஞ்சலியை ட்ராப் பண்ணிட்டு கூட வர்றேன்னு தான் சொன்னேன். அதுக்கே ஓவர் பேச்சு. அஞ்சலி ஸ்கூல் போகலைனாலும் பரவால்ல என்னோட வானு சொல்றாங்க!” என்ற ஈஸ்வர்,
“ஏற்கனவே ஒருத்தி அப்ப தான் என்னை பேசி ட்ரிக்கர் பண்ணி வச்சிருந்தா” என்று சொல்லி பல்லவியை அவன் பார்த்துவிட்டு,
“அந்த கோவத்துல தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டேன்.” என்றான்.
“இதென்ன சின்ன பையன் மாதிரி கதை சொல்ற? முதல்ல அஞ்சலியை ஏன் நீ கூட்டிட்டு போன?” என கேள்விகள் தொடர்ந்தது லதாவிடம்.
“அஞ்சலியை நான் கூட்டிட்டு போக கூடாதா? இதென்ன ம்மா கேள்வி? விடுங்களேன்! நீங்க சொல்லுங்க அப்பா என்ன சொன்னாங்க!” என்று கேட்டாலும் அநியாயத்திற்கு அவன் பார்வை பல்லவி என்ன செய்கிறாள் என கவனித்துவந்தது.
“அப்போ நான் கிளம்புறேன் லதாம்மா!” என்று எழுந்துவிட்டாள் அவள். அதையும் ஈஸ்வர் ஆச்சர்யமாய் தான் பார்த்து வைத்தான்.
அத்தனை கிண்டல் பேசினாள் லாவண்யாவைக் கொண்டு தன்னை. இப்பொழுது என்ன நடந்தது என தெரிந்து கொள்ள விரும்பவில்லையா இவள் என்று.
“நேத்தும் இப்படி தான் வந்த.. வந்ததும் கிளம்பிட்ட. இப்பவும் இப்ப தான் வர்ற. வந்ததும் கிளம்புறேன் சொல்ற. நீ நான் கூப்பிட்டாலே பிகு பண்ணி தான் பார்க்க வருவ. இதென்ன புதுசா பண்ணிட்டு இருக்க நீ?” என்றார் லதா அவளிடம்.
“மேட்டர் இருக்கு லதாம்மா. மெதுவா பேசுவோம். நீங்க உங்க பேமிலி ப்ரோப்லேத்தை முதல்ல முடிச்சுட்டு கூப்பிடுங்க!” என்றவள்,
“முடிஞ்சா நாலு தட்டு தட்டி சார்க்கு நல்ல புத்திமதியும் சொல்லி குடுங்க” என்று வாசலருகே சென்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.
“கொழுப்பை பாரு!” என்று லதா சொல்லி மகன் முறைப்பில்,
“நான் கோவிலுக்கு போய்ட்டு வீட்டுக்குள்ள வரும் போது அவர் குறுக்கா மறுக்கா நடந்திட்டு இருந்தார். சத்தமில்லாம ரூம்க்கு போய்டலாம்னு தான் நினச்சேன். அதுக்குள்ள உன் பையன் என்ன நினைச்சுட்டு இதெல்லாம் பண்றான்னு கேட்டார்!” என்று லதா ஆரம்பிக்க,
“ஹ்ம்!” என்றவன் அவரிடம் கதை கேட்டபடி சாப்பிட சென்றான்.
“பேச்சை மாத்திட்டே இருக்கான். அந்த ஆள் அதான் லாவண்யா அப்பா முன்னாடி நான் என்னனு போய் நிப்பேன்னு அழுகாத குறை தான்!” என்று சிரித்தவர்,
“அந்த நேரம் பார்த்து ஒரு போன் அவருக்கு வந்துச்சு. அநேகமா லாவண்யா அப்பாவா தான் இருக்கும் நினைக்குறேன். ஒரு கத்து கத்தினார் பாரு!” என்று லதா சொல்ல,
“போன்லயா?” என்று கேட்டான் ஈஸ்வர்.
“போனை எல்லாம் அட்டன் பண்ணாம தான் இருக்க கோவத்துல வீடு அதிருற மாதிரி கத்தினார். அந்த நேரம் தான் நீ கால் பண்ணின. போனை தூக்கி ஒரே போடா போட்டுட்டு கிளம்பிட்டார்!” என்றபடி பரிமாறினார்.
“கோவத்துல கூட மனுஷன் அவர் போனை தெளிவா பாக்கெட்ல வச்சுட்டு என் போனை உடைச்சார் பார்த்தியா!” என்று கிண்டல் பேச, அமைதியாய் சாப்பிட்டான் அவன்.
“என்னால எவன் முன்னாடியும் நிக்க முடியாது. அவனை முடிவை மாத்திக்க சொல்லு. நான் வாக்கு கொடுத்துட்டேன். அது இதுன்னு என்னலாமோ சொன்னார் டா. லாஸ்ட்டா தான் கல்யாணம் நடக்கலைனா வீட்டுக்கு வரமாட்டேன்னு ஒரு மிரட்டல் விட்டுட்டு போனார்!” என்றார்.
“ப்ச்! அந்த நிமிஷம் தோணுச்சு சொல்லிடலாம்னு. அதான் அப்படியே சொல்லிட்டு போய்ட்டேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றான் அன்னையிடம்.
“நான் என்ன சொல்ல? எனக்கு முதல்ல இருந்தே சரி வருமான்னு தான் யோசனை. அதுவும் உனக்காக தான். லாவண்யா நல்ல பொண்ணு தான். ஆனா அவ போடுற சத்தத்துக்கு உன்னால ஈடு குடுக்க முடியாதுன்னு தான் நான் அப்பவே நினைச்சேன்!” என்ற லதா சொல்லில்,
“ம்மா!” என அவன் முறைக்க,
“நிஜமா டா. உனக்கு இந்த பொண்ணு செட் ஆகாதுன்னு தோணுச்சு. அதான் யோசிச்சுக்கோனு சொன்னேன். நீ வருஷக்கணக்கா நாள் கேட்கவும் நானும் எதுவும் பேச முடியல. இப்ப நீ சொன்னதுல பெருசா வருத்தமும் இல்ல அதிர்ச்சியும் இல்ல ஈஸ்வர். எனக்கு நீயும் அஞ்சலியும் நல்லாருக்கனும். அவ்வளவு தான்.” என்றார்.
“எனக்கு முதல்ல இருந்தே இன்ட்ரெஸ்ட் இல்லை ம்மா. அப்போ நான் எனக்கு கல்யாணத்துல தான் இன்ட்ரெஸ்ட் இல்லைனு எனக்கு நானே நினைச்சுட்டு யாரா இருந்தா என்னனு விட்டுட்டேன். போக போக தான் தெரிஞ்சது இது எனக்கு ஒத்து வராதுன்னு!” என்றான் ஈஸ்வரும்.
“இது புதுசா இருக்கே ஈஸ்வர். அப்படினா இப்போ கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் வந்திருச்சா? நான் வேனா பொண்ணு பார்க்கவா?” என்று லதா கிண்டல் செய்தாலும் நிஜமாய் கேட்க, சில நொடிகள் மௌனம் தந்தவன்,
“இப்போ அப்பா வந்து திட்டுவாரே! அதை வாங்க ரெடியா இருங்க! அதை மட்டும் நான் மாத்திக்க போறதில்ல!” என்றான் சிரித்தபடி.
“அதெல்லாம் நான் துடைச்சு விட்டுக்குவேன். புதுசா என்ன? பொண்ணு பார்க்க சொன்னா பிசினஸ் பேசி வச்சார்ல? வேணும் அவருக்கு. நல்லா மாட்டிக்கிட்டு முழிக்கட்டும்” என்ற அன்னை சொல்லில் ஈஸ்வருக்கும் தந்தையை நினைத்தால் அப்படி தான் தோன்றியது.
கூடவே, ‘உங்களுக்கு ஆவணும் சார்!’ என்றாளே என்ற பல்லவியின் எண்ணம் தான் இப்போது ஈஸ்வரிடம்.
ஏன் என்று அவன் கேட்டதற்கு கூட, “பொண்ணுங்கனு அலட்சியமா வீட்டுல இருக்கவங்களை கண்டுக்காம இருந்த உங்களை ‘என்னை கவனி’, ‘என்னை கவனி’ன்னு கூட இருந்தே அந்த பொண்ணு குடைச்சல் குடுக்கணும். அதை நான் பார்த்து ரசிக்கணும்!” என்று சொல்லி இருந்தாள்.
வீட்டிற்கு வரும் போதும் கூட எத்தனை பேசினாள் என பல்லவி எண்ணம் தான் இன்னமும்.
இதென்ன அவளைப் பற்றிய இவ்வளவு சிந்தனைகள் தன்னிடம் என பல்லவியை நினைத்தவன், அதிகத்திற்கும் ஈர்க்கப்பட்டிருக்கிறோம் என்று புரிந்து கொண்டு தலையை உலுக்கி அதையும் ஒரு இன்ஃபாக்சுவேஷன் என்ற அளவில் எடுத்துக் கொண்டு அதோடு நிறுத்திக் கொண்டான். நிறுத்திக் கொள்ள முயன்றானோ!.
“லாவண்யாவும் அவங்க அப்பாவும் பிரச்சனை பண்ண வாய்ப்பு இருக்கு” என்று லதா பேச ஆரம்பிக்கவும் அவரிடம் கவனத்தைக் கொண்டு வந்தான் ஈஸ்வர்.
“அதுக்கு கொஞ்சம் நாள் ஆகும். அவங்களை பேசி சரி பண்ணிட்டா… கொஞ்ச நாள் உன் அப்பா முணுமுணுன்னு என்னவாச்சும் சொல்லி என்னை வாயில அரைச்சுட்டே சுத்தி வருவார். இதெல்லாம் சமாளிச்சு வரவே நீ சொன்ன மாதிரி ரெண்டு வருஷம் ஓடிரும். அதுக்குள்ள அம்மாவும் பொண்ணு தேடுறேன். இனி உன் அப்பாவை மட்டும் நம்பி சரி வருமான்னு யோசனையா தான் இருக்கு!” என்று சொல்ல, அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை கீர்த்திஸ்வரன்.
“ஆனா என் மேலயும் தப்பிருக்கு ம்மா. வேணும் வேண்டாம்னு எதுவா இருந்தாலும் நானும் முதல்ல சொல்லிருக்கணுமே!” என்று ஈஸ்வர் சொல்ல,
“அதுக்கு ஏங்க டா உன் அப்பா சான்ஸ் தந்தார்!” என்று கேட்கவும் ஆமாம் என்று தலையசைத்துக் கொண்டான்.
இப்போது எதுவும் பேச நினைக்கவில்லை அவன். தந்தை என்ன செய்கிறாரோ என அவருக்கு அழைத்தபடி தன் அறைக்கு வந்தான்.
மகேஸ்வரன் மகனின் அழைப்பை எடுக்கவே இல்லை. வரதராஜனை சந்திக்கவும் செல்லவில்லை அவர்.
என்னவென்று அவரிடம் போய் சொல்ல? என்ன நினைத்து இப்படி மகன் செய்கிறான் என நினைத்து நினைத்து தலைவலி வந்து தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார்.
அதுவும் வராதராஜன் என்னவோ தன்னை அடிமை போல அல்லவா கேள்விகளை கேட்பார். கூடவே அவர் மகள் வேறு என சிந்தனையில் முழுதும் அது தான் ஓடிக் கொண்டிருந்தது.
கொஞ்சமும் மகனிடம் கேட்காமல் தன்னுடைய தனிப்பட்ட தொழில்முறை காரணத்தை மட்டும் கருத்தில் வைத்து மகன் திருமணத்தை தான் முடிவு செய்தது எவ்வளவு பெரிய தவறு என தெரிந்திருந்தால் நிச்சயம் இவ்வளவு அவதிக்கு அவர் ஆளாகி இருக்க வேண்டாம்.
error: Content is protected !!