Skip to content
Post Views: 1,311
மனசு 10
ஆபிஸ் சென்று மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த உதய்கிருஷ்ணா எதிர் வீட்டின் முன் கைபேசியுடன் பதட்ட முகத்துடன் நின்றிருந்த இன்பவேணியின் உதவிப் பெண்ணை பார்த்து அவளருகே அவன் குழந்தையுடன் சென்றான்.
“மேக்னா” உதய்கிருஷ்ணா அழைக்க, பதறி திரும்பிய அப்பெண் உதய்கிருஷ்ணாவை கண்டு திகைத்தாள்.
Advertisement
சார் நீங்க இங்க?
Advertisement
நீங்க என்ன பண்றீங்க?
Advertisement
மேம் அவங்க பழைய வீட்டுக்கு வந்ததா தெரிஞ்சது. முக்கிய வேலை ஒண்ணு இருக்கு. நான் மாரி வந்துட்டேன்னு நினைக்கிறேன்..
Advertisement
நோ..நோ…இது உங்க மேம் வீடு தான். கால் பண்ணலையா?
கால் எடுக்கல..
ஓ! என்றவன் சிந்தனையுடன், கேட்டருகே இருக்கும் அடர்ந்த செடியை நகர்த்தி, காலிங்பெல்லை அழுத்தினான். வியப்புடன் மேக்னா அவனை பார்த்தாள்.
வெகுவருடத்தின் பின் அந்த காலிங்பெல் சத்தம் கேட்டு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த இன்பவேணி பட்டென எழுந்து அமர, கோசலை வேகமாக வெளியே ஓடினார்.
விதார்த், உதய் தவிர யாரும் இதை பயன்படுத்தியதில்லை. விதார்த் வந்திருக்கிறான் என்று கோசலை வேகமாக ஓட, “வாட் ஹப்பண்டுமா?” அவர் பின்னே வந்தாள் சாயாலி.
உதயை எதிர்பாராது அவர் வாசலிலே நிற்க, ஆன்ட்டி மேம்…கேட்டாள்.
“மாமா, உள்ள வாங்க” சாயாலி அழைக்க,
“இந்த பொண்ணு ரொம்ப நேரமா வெளிய நின்னுட்டு இருந்துச்சு. பக்கத்து வீடு தான. அதான் சொன்னேன்” சொல்லி உதய்கிருஷ்ணா நகர, “ம்மா….” அழைத்தாள் ஜான்வி.
நின்றவன் திரும்பியும் பாராது ஜான்வி இன்பவேணியை அழைக்க அழைக்க உதய்கிருஷ்ணா குழந்தையுடன் வீட்டிற்குள் சென்று விட்டான்.
இவர்களை பார்த்துக் கொண்டிருந்த மேக்னாவை அழைத்து விசயத்தை கேட்க, நொய்டா கம்பெனில நம்ம பிராஜெக்ட பாக்க வர்றாங்க மேம். நீங்க பிராஜெக்ட பாத்து சைன் பண்ணிட்டா அவங்கள மீட் பண்ண சரியா இருக்கும். ஈவ்னிங் மீட்டிங் இருக்கு..
நொய்டா கம்பெனி பிராஜெக்டில் தான் உதய், இன்பவேணி மீண்டும் சந்தித்தது. அனைவரும் ஒரே போல் பிராஜெக்ட் செய்திருந்ததால் வேறு ஒன்றை தயார் செய்ய இன்பவேணியிடம் பேச, உடனே அவளும் அவளது ஊழியர்களும் வொர்கை பிரித்து செய்திருந்தனர். அது தான் முழுதாக முடிந்திருந்தது. நேற்று மதியத்திலிருந்தே இன்பவேணி கம்பெனி செல்லவில்லை. இன்று மீட்டிங் உள்ளதால் அவளை தேடி மேக்னாவே வந்து விட்டாள்.
“பிராஜெக்ட மெயில் அனுப்பு. பாத்துட்டு கிளம்பி வாரேன்” என சொல்லி அவளை அனுப்பி மதிய உணவு முடித்து வெளியே வந்து உதய்கிருஷ்ணா வீட்டை பார்த்தாள். யாரும் வெளியேயில்லை. அவள் கோசலையிடம் கூறி காரில் விரைந்தாள்.
“உருவத்தை காட்டிடும் கண்ணாடி
என்னுள்ளத்தை காட்டிடக் கூடாதா??
பூவிடம் கதை சொல்லும் பூங்காற்று
என் காதலை உன்னிடம் சொல்லாதா??”
மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த பேரனிடமிருந்து பேத்தியை தூக்கி பருப்பு சாதம் தயார் செய்து ஜான்விக்கு ஊட்ட, அவரையே பார்த்த உதய்கிருஷ்ணாவை சித்ராவின் குரல் கலைத்தது.
தம்பி…சாப்பிடுங்க…
புன்னகைத்து உணவை உண்டு பாட்டியருகே அமர்ந்தான்.
பாட்டி விதார்த் அறையை கண்டு உதய்கிருஷ்ணாவை பார்த்து, உதய் விது கீழ வரவேயில்ல. நானும் எவ்வளவோ அழைச்சு பாத்துட்டேன். பயமா இருக்கு..
“தூங்கிட்டு இருப்பான் பாட்டி. நான் அழைச்சிட்டு வாரேன்…” என மகள் கன்னத்தில் முத்தமிட்டு, “சமத்தா பாட்டிட்ட சாப்பிடுங்க..” என்றான்.
ப்பா..ம்ம்..உஉ..
மீண்டும் மகளை கொஞ்சி விதார்த் அறைக்கு சென்றான்.
உதய்கிருஷ்ணா அழைத்தும் விதார்த் அறைக்கதவை திறக்கவில்லை. உதய்கிருஷ்ணா அவனறைக்கு செல்ல பாட்டி எழுந்தார்.
பாட்டி, தம்பிட்ட சின்னதம்பி அறைச்சாவி இருக்கு. அவர் பாத்துப்பார். டென்சன் ஆகாதீங்க…சித்ரா கூற,
உனக்கு இதெல்லாம்மா தெரியும்?
நான் ஆறு மாசமா கூட இருக்கேன்ல. உதய், விதார்த்திற்கு பிடித்த உணவுகளை கூறியவர்…இன்னொன்றும் தெரியும் பாட்டி என தயங்கி பாட்டியை பார்த்தார்.
என்ன?
பாட்டியிடம் நெருக்கமான சித்ரா, உதய் தம்பிக்கு இப்ப வந்துருக்குல்ல எதிர்வீட்டுப் பொண்ணு..நிறுத்தினார்.
வேணியா? என்ன? என்ன விசயம்? ஆர்வமாக கேட்டார்.
ரூமை கிளீன் பண்ணும் போது அந்த பொண்ணோட போட்டோஸ பாத்தேன்..தம்பி அவர் கபோர்டுல ஒட்டி வச்சிருந்தாரு..
கபோர்டுல எப்படி பாத்த?
எப்போதும் பூட்டி தான் வச்சிருப்பாரு. நாலு மாசத்துக்கு முன்னாடி நான் ரூம் க்ளீன் பண்ண போகும் போது திறந்திருந்தது…பாத்தேன்.
எவ்வளவு தைரியம்னா எங்கிட்டவே எம் பேரனோட கபோர்ட திறந்து பாத்தேன்னு சொல்லுவ?
சித்ரா கவனம் மாடிப்பக்கம் செல்ல, பாட்டியும் கவனித்தார். வெளியேயிருந்து ரிமோர்ட் ஒன்றின் மூலம் கதவை திறந்து கொண்டிருந்தான் உதய்கிருஷ்ணா. கதவு திறக்கப்படவும் உள்ளே சென்றான்.
என்ன கேட்டீங்க பாட்டி? உங்க பேரன் தடுத்திருந்தால் நான் உதய் தம்பி அறைக்கு சென்றிருக்க மாட்டேன். அத விட அவர் உங்க எல்லாரையும் விட என்னை நம்புவார். அந்த நம்பிக்கையை நான் எப்பவும் கெடுக்க மாட்டேன். அநாதையா நின்ன என்ன உதய் தம்பி தான் அழைச்சிட்டு வந்தார். அவருக்கு நான் எந்நிலையிலும் உண்மையா இருப்பேன்..
பாட்டி நான் கூட கபோடுல இருந்த போட்டோவ பாத்து செத்து போன அவரு பொண்டாட்டினு தான் நினச்சேன். ஆனா உதய் தம்பி டைரிய எடுக்கும் போது அவர் திடீர்னு வந்துட்டார். பயந்துட்டேன்..அவர் என்ன சொன்னார் தெரியுமா? பாட்டியை பார்த்தார் சித்ரா.
சித்ரா கையிலிருந்த அவன் டைரியை பார்த்த உதய்கிருஷ்ணா, “படிச்சீங்களா?” கேட்டான்.
இல்ல தம்பி, நான் சும்மா ஆர்வத்துல எடுத்தேன். ஆனா படிக்கல..
படிங்கக்கா…பெருசா உங்களுக்கு தெரியக் கூடாதுன்னு ஒண்ணும் இருக்காது. இப்ப இந்த வீட்ல பெரியவங்க எப்படியோ அப்படி தான் இத்தன வருசமும் இருந்தாங்க. நாங்க தான் ஒண்ணுமே இல்லாம போயிட்டோம்..
என்ன தம்பி இப்படி பேசுறீங்க?
சாப்பாடு தயாரா?
தயாரா இருக்கு..
சரி..நீங்க படிங்க. நான் தயாராகி வாரேன் என அத்தனை நம்பிக்கையுடன் குளிக்க சென்றவன், முழுவதும் தயாராகி வந்தான்.
கண்கலங்க சித்ரா பாவமாக உதய்கிருஷ்ணாவை பார்க்க,
ப்ளீஸ் பாவமா மட்டும் பாக்காதீங்க. நான் உங்கள என்னோட அக்காவா நினைக்கிறேன். உங்கள இந்த வீட்டு வேலைக்காரியா நான் எப்பவும் பாக்க மாட்டேன்.. நான் சும்மா உங்கள அக்கான்னு கூப்பிடல…என்றான். சித்ரா அழுதிருப்பார்..
ஏதும் சொல்லாமல் அவன் வெளியேற, அங்கேயே டைரியை வைத்து சித்ராவும் வந்திருப்பார்.
சரி, உதய் அந்த டைரில்ல என்ன எழுந்திருந்தான்..??? பாட்டி கேட்டார்.
விரக்தியுடன் பாட்டியிடம், வாழ்க்கை முழுவதும்…ஒவ்வொரு நாளும்..
ஒவ்வொரு நாளுமா? எப்படி படிச்ச?
அவங்க அம்மா இறந்த புறவு நடந்த எல்லாமே இருந்துச்சு.. தம்பியோட சந்தோசமே விது தம்பியும், எதிர் வீட்டு குடும்பமும்னு மட்டும் தெளிவா தெரியும்…
எனக்கு ஒண்ணு மட்டும் புரியல பாட்டி. உங்க பேரனுக தான இந்த வீட்டு வாரிசு..அந்த மதிப்பும் மரியாதையும் யாரும் அவங்களுக்கு கொடுத்ததேயில்ல. தம்பியோட வருத்தமே அதான்..
ஒரு பக்கத்தில் அவர் எழுதி இருந்தார்.
நான் ஏன் இந்த குடும்பத்துல பிறக்கணும்? எனக்கு விசுவமூர்த்தி அங்கிள் மாதிரி ஒருத்தர் அப்பாவா இருந்திருக்கலாம். பணத்தால எனக்கு நிம்மதியில்லாமல் தான் இருக்குன்னு… பாவம் பாட்டி தம்பி…அவருக்கு பிடிச்ச ஒரு நபர் இறப்புக்கு தம்பியும் ஒரு காரணம்னு கண்டிப்பா நினைப்பாங்க…ம்ச்ச்…என்ன செய்றது? பாட்டி அந்த பொண்ணுட்ட நான் பேசி பாக்கவா?
வேண்டாம். வேணிய எனக்கு தெரியும். வீம்புக்கென மிஞ்சுவா. அதனால அவங்க வழிக்கு போயே இருவரையும் சேர்த்து வைக்கலாம்..
“பாட்டி…” சந்தோசமாக சித்ரா அழைக்க,
ஏன்டி ஏன்?? கத்தாத! தம்பிய பாக்க போனவன் வந்தா நான் தொலஞ்சேன்..
ஹப்பா…இப்ப தான் நிம்மதியா இருக்கு. இந்த வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்தா தான் நல்லா இருக்கும். இந்த மௌனம் நிறைய முறை என்னை பயமுறுத்தி இருக்கு என்றார் சித்ரா.
இவ யாரு? இவள எதுக்கு நம்ம பேரன் அழைச்சிட்டு வரணும்? நம்பிக்கையான ஆள்னு தான நம்ம எல்லார்டையும் சொல்லி வீட்டு வேலைக்கு சேர்த்தான். என்ன காரணமா இருக்கும்? உதய் இல்ல விதுட்ட போட்டு வாங்கணும்…என சித்ரா பற்றி அறிந்து கொள்ளும் ஆவலும் வந்தது பாட்டிக்கு.
கதவு திறந்தது கூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்த விதார்த் அருகே அமர்ந்தான் உதய்கிருஷ்ணா.
அவனை பார்த்தவாறு அவனது முடியை கோத, விதார்த் திரும்பி உதய்கிருஷ்ணா பக்கம் படுத்தான்.
“விது…விது…” தலை கோதியவாறு உதய்கிருஷ்ணா அழைக்க, விழித்த விதார்த்…
“அண்ணா” என்று விழித்து பின் உதய் கிருஷ்ணா மடியில் தலை வைத்துக் கொண்டான்.
விது, ஷோபனாவ இன்னும் நான் நம்ம கம்பெனில இருந்து அனுப்பல. நீ என்ன செய்யப் போற சொல்லு? எனக்கு அவள பத்தி சொல்ல ஒண்ணும் இல்ல.. அவள மறக்க முடியாது. அவள தான் கல்யாணம் பண்ணிப்பன்னா ஹனி..என சொல்ல வந்து நிறுத்தி, எதிர்வீட்டுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்துருக்கே! அந்த பொண்ணோட பேச்ச குறச்சுக்கோ..
அண்ணா…
உன்னோட ப்ரெண்ட சொல்லல. அது உன்னோட விருப்பம். இன்னொரு பொண்ணு இருக்கால்ல என ஷோபனாவிற்கும் சாயாலிக்கும் நடந்த வாக்குவாதத்தை உதய்கிருஷ்ணாவிடம் அவன் காவல் துறை நண்பன் பைரவன் கூறியதை விதார்த்திடம் கூறினான்.
சாயாலியை கூறவும் அவனை அறியாமல் புன்னகை வந்தது விதார்த்திற்கு. மறுநொடியே முகம் மாற…
நான் ஷோபியை உண்மையா தான் அண்ணா காதலிச்சேன். ஆனால் அவளிடம் ஏமாந்ததை தான் என்னால தாங்கவே முடியல. முன்னாடியே எனக்கு அவள பத்தி தெரிஞ்சு போச்சு. நான் உன்ட காட்டிக்கல. ஆனா இப்ப அவ வாயால காதல்னு வந்ததே பழி வாங்கன்னும் பட்டுவ பிரிக்கன்னு தெரியவும் முடியல அண்ணா..
நீ எப்படிண்ணா மேனேஜ் பண்ண? வயிற்றோடு உதய்கிருஷ்ணாவை கட்டி அழுதான் விதார்த்.
விரக்தி புன்னகை சிந்தி, “என்ன பண்ணப் போற? நீ ஷோபிய தான் மேரேஜ் பண்ணிக்கணும்னாலும் நானே அவங்கள வீட்டுக்கு வர வைக்கிறேன். ஆனா….முதல்ல மாதிரி ஜானுவ உன்டயும் அவட்டையும் விட முடியாது. என்னோட நிலைமைய புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன். நான் இன்னும் உயிரோட இருக்க காரணமே என்னோட பொண்ணு மட்டும் தான்” என அழுத்தம் கொடுத்தான்.
மனம் நொந்தாலும், “சரிண்ணா…என்னோட முடிவ நான் சொல்றேன். எனக்கு மனசு வலிக்குது. ஆனா எனக்கு நீயும் பட்டுவும் தான் முக்கியம். எனக்கு அந்த ஷோபி வேண்டாம். ஏற்கனவே பிரேக் அப் சொல்லி இருந்தேன்.. மொத்தமா முடிச்சிடுறேன்” முகத்தை அழுந்த துடைத்து நிமிர்ந்து அமர்ந்தான் விதார்த்.
உதய்கிருஷ்ணா ஏதோ சொல்ல வர, அதை தடுத்த விதார்த்…
“உன் அளவுக்கெல்லாம் எனக்கு ஷோபியுடன் பழக்கமில்லை அண்ணா. அதனால சீக்கிரமே அவள மறந்துடுவேன். இன்னொரு விசயம் நல்லா கேட்டுக்கோ. நீ கல்யாணம் பண்ணிட்டன்னா தான் நானும் கல்யாணமே பண்ணிப்பேன். எந்த பொண்ணா இருந்தாலும் ஒரு கை பாத்துறலாம்..” என்று அவன் இல்லாத முழுக்கைச்சட்டையை ஏற்றுவது போல பாவனை செய்தான்.
எனக்கு கல்யாணம் தான் ஆகிடுச்சே!
“அப்படியா அண்ணா? எந்த மஹால் பிடிச்சோம்? எத்தன குரோர் செலவாச்சு? எனக்கு நினைவிலே இல்லையே!” நக்கலை தூக்கி போட்டு கேட்டான்.
விது, முடிவ பாத்து எடு…ஷோபிய விட்டுட்டா அப்புறம்..
சொல்லீட்டேன்ல அண்ணா. அவ அவ்வளவு தான். என்னோட காதலுக்கு அவ டிசர்வேயில்ல. ஏமாத்துக்காரி…அவ நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்னா. நான் உன்னோட கல்யாணத்த பத்தி பேசுனா பேச்ச மாத்துற..
நம்ம குடும்பத்துலயே இப்படி இருக்காங்க. என்னால ஜானு லைஃப்ப பணயம் வைக்க முடியாது.
நல்லா தெரிஞ்ச பொண்ணுனா பிரச்சனையில்லைல்ல அண்ணா?
“விது…” அதட்டலாக சத்தமிட்டான் உதய்கிருஷ்ணா.
என்னோட காலேஜ்மேட் பாத்தேன். அவள தான் கேட்டேண்ணா..
“எனக்கு கல்யாணத்துல விருப்பமில்ல. உனக்கு பாக்கலாம்” உதய்கிருஷ்ணா எழுந்தான்.
இல்லண்ணா, என்னோட அண்ணா எப்ப நிம்மதியா அவனோட வாழ்க்கைய பாக்குறானோ அப்ப தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்.
நீ நினைக்கிறது எப்பவுமே நடக்காது..
அமைதியாக மனதில், “நடத்தி காட்டுகிறேன்” என சவால் விடுத்துக் கொண்டான் விதார்த்.
இருவரும் வெளியே வர, பாட்டியும் சித்ராவும் அப்பொழுது தான் பேசி முடித்திருந்தனர். இவர்களை பார்த்துக் கொண்டே வந்த உதய்கிருஷ்ணா வேகமாக கீழே இறங்கி…
ஜானு எங்க?
விளையாட்டு பொருட்கள் இருக்க குழந்தையை காணவில்லை.
“அவள விட்டு ரெண்டு பேரும் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க?” கத்தி வீட்டினுள் அவன் தேட, எல்லாரும் ஒவ்வோர் அறையாக பார்த்தனர்.
அடிக்கடி குழந்தை வாயிலை பார்த்தது எண்ணத்தில் உதிக்க, சித்ரா வேகமாக வெளியே வந்தார்.
சாயாலி பேச பேச குழந்தை கிலுக்கிக் கொண்டிருந்தாள். வாயிலில் நின்று கோசலை ஆசையாக குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தார்.
“அய்யோ போச்சுடா தம்பி பாத்தா அவ்வளவு தான்…” சித்ரா வேகமாக இன்பவேணி வீட்டிற்கு ஓட, உதய்கிருஷ்ணாவும் மற்றவர்களும் பார்த்து விட்டனர்.
“சித்ராக்கா….” பயங்கரமாக கத்தினான்.
நடுவீதியில் நின்று சித்ரா உதய்கிருஷ்ணாவை கண்டு திகைத்து, சாயாலியிடம் சென்று குழந்தையை வெடுக்கென பிடுங்கி அவனிடம் வந்தாள்.
அம்மா…அம்மா… குழந்தை அழுதது.
உங்கள நம்பி தான ஜானுவ விட்டு போனேன். என்ன செஞ்சு வச்சிருக்கீங்க?
கோசலையின் முகம் சுருங்கி வாட்டமுடன் வீட்டிற்குள் சென்றார்.
விதார்த் அவரை பார்த்து சாயாலியை பார்க்க, கோபமாக உதய்கிருஷ்ணாவிடம் வந்தாள்.
“மாமா, எதுக்கு இப்ப கத்துறீங்க? பாப்பா தான் வீட்டுக்கு வந்தா. எங்க வீட்டுக்கு பட்டு வந்தா என்னவாம்? பாருங்க பாப்பா அழுது அழுது முகமே சிவந்து போச்சு…” கோபத்தில் பேச ஆரம்பித்து பின் தணிந்து அவள் வீட்டிற்குள் வர,
“நில்லு…” என்றான் உதய்கிருஷ்ணா.
புருவம் சுருக்கி அவனை பார்த்தாள்.
நீ யாரு? நீ எதுக்கு என்ன மாமான்னு கூப்பிடணும்?
அக்காவும் நீங்களும் காதலிச்சவங்க தான. அதான் மாமா…
நான் கல்யாணம் ஆனவன்..
கூலாக அவனை கூர்ந்து பார்த்து விதார்த் தோளில் கை போட்டு, எனக்கு ஒரு டவுட்டு மாமா…
மாமா சொல்லாத..
எனக்கு மாமா தான் புடிச்சிருக்கு மாமா. என்ன விது மாமா சரிதான? கேட்டாள் அவனை முறைத்து.
“எம் பேரன் தோள்ல இருந்து கைய எடுடி” சாயாலி கையை தட்டி விட்டார் பாட்டி.
ஆமா பேரானாம் பேரன் என விதார்த்தை முறைத்தாள்.
எதுக்கு இப்ப என்ன முறைச்சிட்டு இருக்க?
ஆச பாரு..நான் அவ்வளவு சொல்லியும் அந்த லூசுக்காக அழுதியா?
யார சொல்றா? என்ன சொல்றா? யாருக்கும் புரியவில்ல.
“இவ அண்ணாட்ட போட்டுக் குடுக்காம போக மாட்டா போல…” என அவள் காதை திருகுவது போல அவளை தனியே நகர்த்தி சென்று, அண்ணா முன்னாடி என்ன பேசிட்டு இருக்க? ஏதாவது செஞ்சு காரியத்த கெடுத்துறாத…
நேத்து எதுக்கு குடிச்ச?
அது…அங்கிள் பத்தி தெரியல…எங்களால..
ஷ்ஷ் ஹப்பா…முடியல.. அவருக்கான நேரம் முடிஞ்சதுன்னு நின…
“உன்னோட நெருக்கமானவங்க யாராவது செத்துருந்தா உனக்கு தெரியும்…” விதார்த் முணுமுணுக்க,
“என்ன சொன்ன?” கோபமாக கேட்டாள்.
“உன்னோட குடும்பத்துல யாராவது செத்திருந்தா உனக்கு தெரியும்னு சொன்னேன்…” விதார்த் சற்று சத்தமாக கூற, சாயாலி உதய்கிருஷ்ணா வீட்டில் நிற்பதை கண்டு அவளை அழைக்க வந்த கோசலையும் கேட்டு விட்டார்.
விதார்த் சொன்ன நிமிடம் திறந்த மடை போல கண்ணீர் ஊற்றெடுக்க, அழுது கொண்டே சாயாலி ஓட, “சாயா…நில்லுடி..” என்று விதார்த்தை முறைத்து அவள் பின் சென்றார் கோசலை.
“ஆன்ட்டி…” விதார்த் அழைக்க, நின்றவர்….திரும்பி எல்லாரையும் பார்த்து உதய்கிருஷ்ணாவையும் பார்த்தார்.
ஆன்ட்டி, அவ எதுக்கு அழுதுட்டு போறா? விதார்த் கேட்க,
பல்லை கடித்தவர், “பாத்து பேச மாட்டீங்களா? அவ ஒருத்தரை இழக்கல. அவ பரம்பரைலயே அவ மட்டும் தான் உயிரோட இருக்கா…” சத்தமிட்டு அவர் சென்று விட்டார்.
அனைவரும் உறைந்து நிற்க, “யாருக்கு வந்த வினையோ???” என்று உதய்கிருஷ்ணா தன் குழந்தையுடன் சென்று விட்டான்.
“சாயாலியை காயப்படுத்தி விட்டோம். இப்பொழுது என்ன செய்வது?” சிந்தனையுடன் தன் அண்ணனை காண, அவன் உள்ளே செல்வதை பார்த்து, “அவ வேற எல்லார் முன்னாடியும் கின்ட் குடுத்துட்டு போயிட்டா..” உதய்கிருஷ்ணா பின் சென்றான்.
error: Content is protected !!