Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை 48 ❤️ (இரண்டாம் பாகம்)

நிரவி உறங்க கண்ணை மூடி இருந்தாலும் சிவா ரித்திகா வாணன் பேசியது இதை பற்றியே யோசித்து கொண்டு இருந்தாள்.. அதன்பின் அவளை அறியாமலே உறக்கத்திற்கு சென்று இருந்தாள்..



Advertisement

உறங்கிய சிறிய நேரத்திலேயே ஒரு கனவு… மிகவும் பெரிய மண்டபத்தில் வாயிலில் சிவனேஸ் வெட்ஸ் ரித்திகா என போர்டில் அலங்காரம் செய்து வைத்து இருக்க உள்ளே தாலி கட்டும் போது கேட்கும் மங்கள வாத்தியங்கள் கேட்க நிரவி கிணற்றில் விழுந்து இருந்தாள்…. அதன்பின் நடந்த எதுவும் தெரியவில்லை.. வீட்டில் நடுக்கூடத்தில் அனைவரும் நின்று இருக்க சசி முதல் முதலாக அர்ஜுனனை எதிர்த்து பேசிக் கொண்டு இருந்தான்…

“இந்த பொண்ணை பாத்துட்டு நீ பெத்த பொண்ணை விட்டுட்ட… நீ வளர்த்த பொண்ணு மேல வெச்ச பாசத்தை நீ பெத்த பொண்ணோட வெச்சு இருந்தா இப்போ அவ இங்க இருந்து இருப்பா…. ஆனா நீ இப்போ பண்ண தப்பால அவ இப்போ இல்ல எல்லாம் உன்னால தான்” என்று கோவமாக கூறினான்

Advertisement

Advertisement

பெண்கள் அனைவரும் அழுது கொண்டு நிற்க அர்ஜுனன் கண் கலங்கி தலை குனிந்து நின்று இருந்தான்….

யாரும் சசியை எதிர்த்து பேசவில்லை… ஏன் என்றால் அவன் பேசியது எல்லாம் உண்மை… கனவிலும் தன் தந்தை கலங்கி நின்று கொண்டு இருப்பதாய் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை…

Advertisement

அது தான் சசியை தடுத்து நிறுத்துவதை போல் “அப்பா வேண்டாம்” என கத்தி கொண்டு எழுந்து இருந்தாள்.. அர்ஜுனன் கனவில் தலை குனிந்து இருந்ததை பார்த்து மனது அடித்து கொண்டது..

பின் நிதானமானவள் தீவீரமாக யோசித்து விட்டு முகம் கழுவி கொண்டு ஹாலுக்கு சென்றாள்.. தான் எடுத்த முடிவை இரண்டு நாட்களில் வீட்டில் சொல்லலாம் என யோசித்து விட்டு அங்கு அமர்ந்து இருக்கும் சசிக்கும் கர்ணனுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டாள்.. இருவரும் அவள் தலையை களைத்து விட்டு கணக்கு வழக்கை பற்றி பேசி கொண்டு இருந்தனர்..

அர்ஜுனனும் நிரவியும் வீட்டிற்கு வரும் போது பெண்கள் கூட்டணி வீட்டில் இல்லை… தற்போது தான் உள்ளே நுழைந்தனர்..

வந்ததும் சுபாவின் கண் தன் மாமனை தான் தேடிது… அதை பார்த்த சசி “ஹலோ மேடம் நாங்களும் இங்க தான் இருக்கோம்.. வந்த உடனே உங்க மாமாவை தான் தேடுவீங்களா” என்று கேலியாக கேட்டார்..

சுபா “போ சச்சு” என்று சிணுங்கி கொண்டே கூறியவர் தங்கள் அறைக்கு சென்றார்… அங்கு சென்று பார்க்கும் போது கண்களில் கையை மூடியவாறு உறங்கி இருந்தார்..

அவரின் ஓய்ந்த தோற்றமே அவரை பதற வைக்க அவர் அருகில் அவர் கையை எடுத்து கீழே போட்டு விட்டு அவர் நெற்றி தொட்டு ஆராய்ந்தார்.. அவரின் தொடுகையில் கண் விழித்த அர்ஜுனன் “என்ன அம்மு” என்று கேட்டார்…

“உங்களுக்கு என்ன ஆச்சு மாமா… கண்ணு எல்லாம் சிவப்பா இருக்கு… உடம்பு எதோ பண்ணுதா… ஹாஸ்பிடல் போலாமா” என்று பதட்டமாக கேட்டார்…

“அம்மு அம்மு… நான் சொல்றதை பொறுமையா கேளு… எனக்கு ஒன்னும் இல்ல… கொஞ்சம் தலைவலி அவளோ தான்… இனிமே சரி ஆகிடும்.. எனக்கு சூடா ஒரு கப் டீ மட்டும்… நான் ப்ரெஷ் ஆகிட்டு கீழ வரேன்..” என்று அவர் முகத்தை பார்க்காமல் பாத்ரூம் சென்றுவிட்டார்…

சுபா தான் ஒன்றும் புரியாமல் டீ வைக்க கீழே சென்றுவிட்டார்… அர்ஜுனன் முகத்தை நன்றாக கழுவி விட்டு எப்போதும் போல் கம்பீரமாக கீழே இறங்கி வந்தார்.. நிரவி அவரை தான் பார்த்தாள்… தன்னையே பார்க்கும் மகளுக்கு பளிச்சென்று புன்னகையை பரிசளித்த அர்ஜுனன் ஒற்றை சோபாவில் கம்பீரமாக அமர்ந்தார்.. அவரின் கம்பீரமே தம்பிகளுக்கு எப்போது கர்வம் தான்…

சுபா வெளியில் வரும் போது அவருடன் மித்ராவும் பிரியவும் டீயும் ஏற்கனவே சுட்டு வைக்கப்பட்டு இருந்த முறுக்கும் எடுத்து வந்தார்… நால்வருக்கும் கொடுத்து விட்டு அவரவர் காலியாக இருக்கும் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்…

நிரவி தான் “எங்க அங்க வாலுங்க மூனு பேரையும் காணோம்” என கேட்க பிரியா தான் “கண்மணி அண்ணி வந்தாங்க அவங்க கூட காலைலயே அங்க வீட்டுக்கு போயிட்டாங்க” என்று கூறினார்…

சுபா மட்டும் அமைதியாக அர்ஜுனன் நிரவி இருவரையும் மாறி மாறி பார்த்து இருந்தார்… சசி அதை கவனித்து விட்டு “என்ன ஆச்சு ரெண்டு பேரையும் ஏன் அப்படி பாத்துட்டு இருக்க சுப்பு” என கேட்டார்..

“என்ன ஆச்சுனு அப்பாவும் மகளும் தான் சொல்லனும்.. அண்ணா வீட்டுல எதோ நடந்து இருக்கு… வர்ணன் அண்ணா கால் பண்ணி மச்சான் ஓகேவா அப்படி கேட்குறாரு… மேல போய் பாக்கும் போதும் உன் அண்ணா டென்ஷன்ல தான் இருந்தாரு…” என்று கூறினார்..

அப்பாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள கர்ணன் தான் “என்ன ஆச்சு அண்ணா.. குட்டிமா நீயாச்சும் சொல்லு என்னாச்சு..” என்று கேட்டார்…

அவள் திரு திருவென முழிக்க அப்போது வர்ணன் ஜனனி கார்த்திகாவுடன் வீட்டின் நுழைந்தார்..

அங்கு மருத்துவமனையில் தாத்தா பாட்டி இருவருக்கும் செக்கப் முடிந்து வெளியே வர வீட்டிற்கு கிளம்ப தயாரானார்கள்… சிவா தன் பைக்கை நோக்கி நடக்க “தாத்தா அவரை பாருங்க கையில காயத்தை வெச்சிட்டு பைக் ஓட்ட போறாரு..” என்று கூறினார்..

அவள் அவன் மீது காட்டிய அக்கறை அவனுக்கு இனித்தது… தாத்தாவும் “பேராண்டி ஒழுங்கா கார்ல வா” என்று கூறினார்…

அதற்கு அவனோ “பைக் இங்க இருக்குமே தாத்தா” என கூற “பைக்கை டிரைவர் எடுத்து வருவாரு.. ஆகாஷ் அவன் பைக்குல வரட்டும் நான் கார் ஓட்டுறேன்..” என்று கூறி அவர் டிரைவர் சீட்டில் அமர்ந்துவிட்டார்…

பாட்டி அவருடன் முன்பக்கம் அமர்ந்துவிட ரித்திகா அருகில் அவன் தான் அமர்ந்து வந்தான்… அவள் அருகாமை அவனை அனைத்தும் மறக்க வைத்து இருந்தது.. நிஜமாகவே அவனுக்கு வீட்டில் நடந்தது அனைத்தும் மறந்து தான் போய் இருந்தது… அவன் மூன்று மாத விடுமுறையில் தான் வந்து இருந்தான்.. எனவே அவன் கை காயம் ஆற நேரம் அதிகமாவே இருந்தது… எது பற்றியும் யோசிக்காமல் அவள் அருகாமையை ரசித்து கொண்டு வந்தான்…

மெய்யனூரில் வாணன் வீட்டில் வாணன் சோபாவில் அமர்ந்து இருக்க நந்தினி தயங்கி தயங்கி அவர் அருகில் வந்து நின்றவர் “நான் பேச தகுதி இல்லை தான் மாமா.. ஆனா என் பையனுக்காக இன்னிக்கு பேசுறேன் நிரவி சந்தோசமா இருக்க நம்ம பையனோட ஆசை நீங்க மறுத்தீங்க சரி.. ஆனா எதுவும் தெரியாத அந்த பொண்ணை நீங்க அப்படி பேசி இருக்க வேண்டாம் மாமா.. உங்களுக்கு இருந்த பிரச்சனை என்ன நிரவி சிவாவை லவ் பண்ணா அப்படினு நினைச்சு தானே வேண்டாம்னு சொன்னிங்க.. உங்க கிட்ட தான் நிரவியே நான் சிவாவை லவ் பண்ணல நான் தான் பாசத்தை லவ் அப்படினு தப்பா புரிஞ்சிக்கிட்டேன்னு சொன்னா.. இன்னமும் ரித்திகாவை மறுக்க காரணம் இருக்கா மாமா..” என்று கேட்டார்…

நீண்ட மூச்சை இழுத்து விட்ட வாணன் “அய்யனார்புரம் கிளம்பலாம்” என்று கூறி கார் அருகில் சென்று நின்று கொண்டார்… நந்தினி முதலில் புரியாமல் நின்றவர் பின் எதோ புரிந்து சந்தோசமாகவே தன் பிறந்த வீட்டிற்கு கிளம்பினார்…

அர்ஜுனன் வீட்டில் வந்தவர்களுக்கு முகமன் கூறி வரவேற்க நேரம் சென்றுவிட அர்ஜுனன் எதுவும் பேசவிடாமல் நிரவியை அடக்கி விட்டு வர்ணனிடமும் ஜனனியிடமும் அங்கு நடந்ததை பற்றி கூற கூடாது என யாருக்கும் தெரியாமல் கூறினார்…

வாணன் வீட்டில் இருந்து கிளம்பும் போது முகுந்தனிற்கு அழைத்து அனைவரையும் அர்ஜுனன் வீட்டிற்கு அழைத்து வர கூறினார்.. அதற்குள் நந்தினி ஜனனிக்கு அழைத்து தாங்கள் அங்கு வரும் விஷயத்தை கூறி அவர்களையும் அங்கு வருமாறு கூற ஜனனி தாங்கள் அங்கு தான் இருப்பதாக கூறினார்..

அனைவரும் வீட்டிற்கு வந்து இருக்க மருத்துவமனை சென்று இருந்தவர்களும் வீட்டிற்கு வந்து இருந்தனர்.. நிரவிக்கு ரியாஸிடம் இருந்து அழைப்பு வந்து இருக்க அவனிடம் பேசி கொண்டு இருந்தாள்… சிவா அவளிடம் பேச ரியாஸிடம் பிறகு பேசுகிறேன் என்று கூறி வைத்து விட்டு அவனை பார்த்தாள்…

“சாரி இதை தவிர என்ன சொல்றது தெரியல குட்டி.. எனக்கு தெரியும் மத்தவங்களுக்காக நீ என்னை லவ் பண்ணலன்னு சொன்னாலும் நீ என்னை லவ் பண்ற அப்படினு… பட் உன்னை என்னால அப்படி பாக்க முடியல குட்டி… நானும் ஒரு சில வருஷத்துக்கு முன்னாடி உன் மேல இருக்குற அன்பை லவ் அப்படினு தப்பா தான் நினைச்சேன்.. அப்படி நினைச்சதை நினைச்சு எனக்கு வருத்தமா இருக்கு… பட் உன் மேல இருக்குற அன்பை என்ன பெரு சொல்றது தெரியல.. ஆனா அது காதல் இல்லை… உனக்கு இதுவும் ஹர்ட் ஆகும்னு தெரியும்… பட் சாரிடா…” என்று கூறி சென்றுவிட்டான்…

தன்னை கண்டுகொண்டானே என்று அவளுக்கு வருத்தமாக இருந்தது.. அவளால் அவனை விட முடியவில்லை.. ஆனால் தன் ஆசையால் அவன் வாழ்க்கையை கெடுக்க முடியவில்லை… எனவே விலக முடிவு எடுத்துவிட்டாள்… அவள் ஜேஇஇ (JEE) தேர்வு எழுதி இருந்தாள்… அதற்கான முடிவு இரண்டு நாட்களில் வந்துவிடும்.. முடிவு வந்துவிட்டால் வேறு ஊரில் உள்ள கல்லூரியில் சேர வேண்டும் என முடிவு எடுத்து விட்டு வீட்டிற்குள் சென்றாள்…

சிவா அங்கு தன் தந்தையை எதிர்பார்க்கவில்லை… அவன் உள்ளே நுழையும் போது அவன் கட்டை கவனித்த நந்தினி “தம்பி என்ன ஆச்சு உனக்கு.. ஏன் கையில கட்டு போட்டு இருக்கு…” என்று பதட்டமாக கேட்டார்…

“எனக்கு ஒன்னும் இல்ல சின்ன அடி தான்… அழுகாதீங்க” என்று கூறி அனைவரையும் அமைதிப்படுத்தினான்.. பின் அவனே “என்ன எல்லாரும் கூட்டம் போட்டு இருக்கீங்க” என்று கேலியாக கேட்டான்…

வாணன் தன் தொண்டையை சரி செய்து கொண்டு தேவியின் அப்பா மாரியப்பன் மற்றும் பாலாவிடம் மூவரிடமும் “எல்லாம் நல்ல விஷயம் தான்.. சிவாவுக்கு கல்யாணம் பண்றது பத்தி தான்..” என்று கூறினார்..

மாரியப்பன் தான் “நல்ல விஷயம் தானே.. பொண்ணு பாத்தாச்சா..” என்று கேட்டார்..

“பொண்ணு எல்லாம் பாத்தாச்சு பெரியப்பா.. பொண்ணோட அப்பா கிட்ட கேட்க தான் எல்லாரையும் வர வெச்சேன்..” என்று கூறினார்..

அனைவரும் அவரையே பார்க்க “என்ன எல்லாரும் என்னையே பாக்குறீங்க.. பொண்ணோட அப்பா கிட்ட கேட்கலாம் தானே.. என்ன அர்ஜுனா உன் பொண்ணை என் பையனுக்கு தர சம்மதமா” என்று கேட்டார்..

அர்ஜுனனுக்கு ஒரு நிமிடம் ஒன்று புரியவில்லை… சில மணி நேரத்திற்கு முன்பு தான் அவ்வளவு பேச்சு பேசினார்.. இப்போது பெண் கேட்கிறார்.. யாரை கேட்கிறார் என்று புரியாமல் பார்த்தார்… பிரச்சனை பற்றி தெரிந்த அனைவரும் அதே போல் தான் அவரை பார்த்தனர்…

அவரே சிரித்து கொண்டு “என் பையன் சிவாவுக்கு உன் முத பொண்ணு ரித்திகாவை கொடுக்க சம்மதமா” என்று கேட்டார்…

அர்ஜுனனுக்கு என்ன கூறுவது தெரியவில்லை.. சிவா தன் தந்தையை எந்த வித உணர்வும் இன்றி பார்த்தான்… மற்ற அனைவர்க்கும் சந்தோஷம் தான்…சுபா தான் “மாமா உனக்கு என்ன யோசனை.. அண்ணா கேட்குறாங்க பாருங்க.. உங்க விருப்பத்தை சொல்லுங்க…” என்று கூறினார்..

அர்ஜுனன் ஒட்ட வைத்த சிரிப்புடன் ரித்திகாவிடம் திரும்பி “ரித்து ம்மா அப்பா கிட்ட வா” என்று அழைத்து “உனக்கு சம்மதமா” என்று கேட்டார்…

‘உங்க விருப்பம் ப்பா” என்று கூறினாள்… பின் தன் தம்பிகள் இருவரையும் பார்த்த அர்ஜுனன் “நீங்க சொல்லுங்க டா” என்று கேட்டார்…

கர்ணன் தன் விருப்பத்தை கூற சசி மட்டும் நிரவியை பார்த்தார்.. அவளும் அவரை பார்த்து கண் சிமிட்டி தன் சம்மதத்தை கூற அவரும் சந்தோசமாக சரி என்று கூறினார்.. அதன்பின் வீட்டில் ஒரே சந்தோச மழை தான்…

அனைவருக்கும் கல்யாண பரபரப்பு ஒட்டி கொண்டது… அர்ஜுனன் மற்றும் சிவா மட்டும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு சுற்றி கொண்டு இருந்தனர் வாணனிடம்… வாணன் இருவரிடம் பேச தனியாக அழைத்து சென்றார்… அவரும் தன் பக்க நியாயத்தை கூற நீங்கள் பேசியது தவறு தான்.. எங்களை காயப்படுத்திவிட்டது கொஞ்ச நாள் கழித்து பேசுகிறோம் என இருவரும் ஒரே போல் கூறி சென்றுவிட்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!