Skip to content
Post Views: 1,723
அத்தியாயம் 20
மகேஸ்வரனின் அலுவலகத்தில் அவரின் தனிப்பட்ட அலுவலக அறையில் கோபமாய் அமர்ந்திருந்தார் வரதராஜன்.
Advertisement
இவ்வளவு தூரம் வரதராஜன் வருவார் என எதிர்பார்க்கவில்லை தான் என்றாலும் அதையும் ஒரு துணிவோடு எதிர்கொள்ள தயாராகி அவரின் முன் அமர்ந்திருந்தார் மகேஸ்வரன்.
Advertisement
Advertisement
“சொல்லு மகேஸ்வரன். கொஞ்ச நாளா கம்பெனி பக்கமும் வரல. போன் பண்ணினாலும் எடுக்கல. எதுவோ பெரிய முடிவா எடுத்தாப்புல தெரியுதே!” என்று வரதராஜன் கேட்க,
Advertisement
“அப்படி எதுவும் இல்ல. கொஞ்சம் வேலைல பிஸியாகிட்டேன். ரெண்டு நாள்ல பார்க்க வரலாம்னு தான் இருந்தேன்!” என்று மகேஸ்வரன் கூறினார்.
“ரெண்டு நாளுல? சரி சரி. அப்புறம்! என் மாப்பிள்ளை எப்படி இருக்கான்?” என வேண்டுமென்றே அவர் கேட்க, உள்ளுக்குள் உதறல் தான் என்றாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை மகேஸ்வரன்.
தன்னைக் கண்டு தன் குடும்பமும் தனக்கு கீழ் வேளையில் இருப்பவர்களும் என அனைவரையும் ஆட்டி வைத்தவன் நான். இப்படி என்னை அதிகாரம் செய்யவா நீ எனும் எண்ணம் கொண்டு பார்த்து நின்றவர்,
“அவன் கொஞ்ச நாளா குழப்பத்துல இருக்கான். எதுவும் பேசல. அவனே சரியாகி வந்து என்னனு சொல்லட்டும்” என்றார் பட்டும் படாமலுமாய்.
“என்னத்த சொல்ல? எப்படி இருக்கான்னு தானே கேட்டேன்?” என்றார் வரதராஜன்.
“அதான் சொன்னேனே! குழப்பத்துல இருக்கான்!” என்றவர்,
“கல்யாணம்னு பேசி வச்ச பின்னாடி அவனுக்கு எதுவும் சரியா இல்லையாம். அதான் யோசிக்குறான்” என்று சொல்லவுமே, கண்டுகொண்டார் வரதராஜன்.
“கல்யாணம்னு பேசி வச்ச பின்னாடி தான் என் பொண்ணு நல்லா இருக்கா” என்றார் உடனேயே.
“அதே தான். உங்க பெண்ணுக்காக நீங்க பேசறிங்க. என் பையனுக்காக நான் பேசுறேன்” என்ற மகேஸ்வரன்,
“அவனுக்கு என்ன தோணுதோ அதை தான் அவனும் செய்வான். என்கிட்டயே சொல்ல கூட மாட்டான்!” என்றும் சொல்ல,
“இப்ப என்ன சொல்ல வர்ற நீ?” என்று கேட்டுவிட்டார்.
“எதுவும் சொல்றதுக்கு இல்ல சார். கல்யாண விஷயம் தான் பேச போறீங்கன்னா ரெண்டு வருஷம் அவன் சொன்ன டைம் முடியலை. அதுக்கு முன்னாடி என்ன வேனா நடக்கலாம். இப்ப அதை பேச வேண்டாம்!” என்று படபடவென்று அவர் சொல்லிவிட, மகேஸ்வரன் பேச்சின் தோரணை வேறாய் இருந்தது வரதராஜனுக்கு. இதில் அவர் அழைத்த சார் என்ற அழைப்பும் சேர்த்து அத்தனைக்கு கண்களை சுருக்கிப் பார்த்தார் வரதராஜன்.
மகேஸ்வரனை கணிக்க முடியாமல் அவர் பார்த்து நிற்கும் போதே, “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு சார் வெளில. நீங்க என்ன வேலையா வந்திங்க?” என்றும் கேட்டுவிட,
“நான் அப்புறமா மேனேஜர்கிட்ட சொல்லிவிடுறேன்!” என்று சொல்லி கிளம்பிவிட்டார் வரதராஜன்.
வரதராஜன் கிளம்பிய பின் தான் நிம்மதியாய் மூச்சை இழுத்து விட்டவருக்கு அத்தனை கோபம் தன் வீட்டினரை நினைத்து.
ஒரு வாரமாகி இருந்தது லாவண்யாவுடனான திருமணம் வேண்டாம் என்று கீர்த்திஸ்வரன் சொல்லி.
அன்றே மனைவியிடம் வீட்டிற்கு வர மாட்டேன் என்றெல்லாம் அவர் மிரட்டலாய் சொல்லி இருக்கவும் கீர்த்திஸ்வரன் லதா இருவருமாய் இரவு ஒன்பது மணி வரை மகேஸ்வரன் வராததில் கொஞ்சம் யோசிக்கும் முன் அடுத்த பத்து நிமிடங்களில் வந்துவிட்டார்.
வந்தவர் மகன் முகத்தையும் பார்க்காமல் தன் அறைக்கு சென்றுவிட, “கோவமா இருக்கார் போல!” என மகனிடம் கூறினார் லதா.
“போய் சமாதானப்படுத்துறது?” என்ற கீர்த்திஸ்வரனை முறைத்த லதா,
“பல்லவி கூட ரொம்ப சேராத!” என்றார். இப்பொழுது ஏன் பல்லவி பற்றிய பேச்சு என சுத்தமாய் புரியாமல் கீர்த்திஸ்வரன் அன்னையைப் பார்க்க,
“அவ தான் இப்படி எல்லாம் டக்குனு கவுண்டர் குடுப்பா!” என்றதில் தான் தான் பேசியதும் புரிந்தது ஈஸ்வருக்கு.
அத்தோடு அன்னையுடன் பல்லவியின் இந்த புரிதலையும் மனம் அப்போது குறித்துக் கொண்டது.
“சரி வீட்டுக்கு வர மாட்டாங்கனு சொன்னிங்க. வந்திட்டார் தானே! அவ்வளவு தான். இந்த பேச்சை இதோட விட்டுடனும். போய் தூங்குங்க!” என்று அந்த நாளை அப்படியே விட்டிருந்தனர்.
அப்படி தான் ஒரு வாரமும் கிட்டத்தட்ட ஓடி ஒளிந்த நிலை மகேஸ்வரனுக்கு.
இந்த ஒரு வாரமும் வீடும் அமைதியாய் தான் இருந்தது. எப்போது எங்கிருந்து குதிப்பாள் என லாவண்யாவை லதா எதிர்பார்க்க, அவளும் வரவே இல்லை வீட்டு பக்கம்.
என்னவாய் இருக்கும்? என்ன சொல்லி லாவண்யா தந்தையிடம் தன் கணவன் பேசி இருப்பார் என யோசித்தபடி தான் இருந்தார். அவர் பேசவே இல்லை என்பதெல்லாம் லதாவிற்கு தெரியாது.
இதற்கிடையில் அவ்வபோது அஞ்சலி அறைக்கு சென்று கீர்த்திஸ்வரன் அவளோடு நேரம் கொடுக்க முயல, அதில் பாதி நேரம் பல்லவியுடனான அலைபேசி அழைப்பில் தான் இருந்தாள் அஞ்சலி.
பல்லவி எண்ணமும் புரிந்தது. அவள் அஞ்சலிக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் புரிந்தது. கூடவே தன் மனமும் கொஞ்சம் தெளிவாகி இருந்தது அவனுக்கு.
ஆனாலும் கொஞ்சம் அதிகமாய் நேரம் எடுத்துக் கொண்டான். தனக்கும் பல்லவிக்கும் என சேர்த்து.
மகேஸ்வரன் வரதராஜனை சந்திக்காமல் நாட்களை கடத்தி வந்த நிலையில் ஒரு வாரம் முடிந்து இன்று அவரே வந்து பேச்சு வார்த்தையும் இப்படி சென்றிருக்க, அன்று மதியமே தலைவலியோடு வீடு திரும்பி இருந்தார்.
அவர் வந்ததையும் அறைக்கு சென்றதையும் யாரும் கவனிக்கவில்லை. மதிய உணவை எடுத்துக் கொள்ள என ஈஸ்வர் வீடு வந்தவன் தான் தந்தை கார் வெளியில் நிற்பதாய் அன்னையிடம் சொல்ல,
“எப்ப வந்தாரோ தெரியலையே. நான் போய் சாப்பிட கூட்டிட்டு வரேன்!” என்று லதா சொல்ல,
“நான் போன் பண்றேன். நீங்க மாடி ஏற வேண்டாம்!” என்றவன் தந்தைக்கு அழைக்க,
“ஈஸ்வர்!” என கடுங்கோபமான அழைப்புடன் வாசலில் நின்றிருந்தாள் லாவண்யா.
ஏற்கனவே ஒரு வாரமாய் எதிர்பார்த்த ஒருவள் தான் என்பதை போல தான், ‘வந்துட்டாளா?’ என லதா பார்க்க,
“சொல்லு!” என மகன் அழைப்பை ஏற்றிருந்தார் மகேஸ்வரனும்.
“கொஞ்சம் கீழ வாங்க ப்பா!” என்றவன் லாவண்யாவை கேள்வியாய் பார்க்க,
“என்ன நடக்குது ஈஸ்வர்? நாலு நாள் நான் ஊர்ல இல்ல. இங்க அதுக்குள்ள என்ன குழப்பம்? உனக்கு என்ன தான் பிரச்சனை?” என்று அவனருகே வந்தவள்,
“என்ன உன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணிட்டு இருக்க? இங்க பார். உன் விஷயத்துல மட்டும் தான் நான் இவ்வளவு பொறுமையா இருக்கேனே. நீ சொன்ன ரெண்டு வருஷ கேப் எல்லாம் வாய்ப்பே இல்ல. அதுக்கு முன்னாடி என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியும். பாக்குறியா?” என்றாள் லாவண்யா சவாலாய்.
“லாவண்யா! என்ன பேசுற நீ?” லதா கேட்க,
“ஆமா அப்படி தான் பேசுவேன் இன்னும் பேசுவேன். நாலு நாள் மைண்டை ரிலக்ஸ் பண்ணிக்க வெளியூர் போய்ட்டு வந்தா இங்க அப்பா என்னென்னவோ சொல்றாங்க. உனக்கென்ன அவ்வளவு சீன்?” என்றவள் இருந்த கோபத்தில் அவனை விடவே இல்லை.
“உனக்கு வேற ஆப்ஷன் எல்லாம் நான் தர மாட்டேன். நீ என்னை கல்யாணம் பண்ணி தான் ஆகணும். நீ யார் எனக்கு டைம் செட் பண்ண? அந்த வேலையே என்கிட்ட நடக்காதுன்னு சொல்லிட்டு இருக்கேன். பெரிய இவனாட்டம் உன் அப்பாவை விட்டு பேச விட்ருக்க? அப்படி என்ன குழப்பத்துல இருக்க நீ? இப்ப சொல்லு. எனக்கு தெரிஞ்சாகனும்!” என இரண்டே நிமிடங்களில் மூச்சுமுட்டும் அளவு பேசி நின்றாள் லாவண்யா.
“லாவண்யா!” என ஈஸ்வர் பார்த்து நிற்கும் போதே வந்துவிட்டார் மகேஸ்வரனும்.
“வாங்க அங்கிள்! என்னவோ அப்பாகிட்ட சொன்னிங்களாமே! கல்யாணம் பேசினத்துல இருந்து இங்க எதுவும் சரி இல்லைனு? அப்போ என்னை ராசியில்லைனு சொல்றிங்களா?” என்று கேட்க,
“ஆமா பேசினேன். என்ன இப்ப?” என்ற மகேஸ்வரனை எதிர்பார்க்கவில்லை லதாவும் ஈஸ்வரும்.
“என்ன இப்பவா? ஆமா இப்ப தான் இப்ப மட்டும் நான் போலீஸ் ஸ்டேஷன் போனேனு வைங்க.. குடும்பத்தோட லாக்கப் தான்!” என்றாள் அவர் பேசியதில் இன்னும் கோபம் கொண்ட லாவண்யா.
“டூ இட் லாவண்யா!” என உடனே கூறி இருந்தான் ஈஸ்வர்.
“பயம் இல்லாத மாதிரி நடிக்கிறியா? இங்க பார். நான் வரதராஜன் பொண்ணு. உனக்கு என்னை பத்தி முழுசா தெரியாது. போலீஸ்கிட்ட போய் என்ன வேனா சொல்லுவேன்.. என்ன வேனா!” என்றவள்,
“ஐ மீன் இட்!” என்று வேறு அழுத்தமாய் சொல்ல, மகேஸ்வரனுக்கு சட்டென்று கொஞ்சம் பதட்டம் கொடுத்தது.
“நீ என்ன வேனா சொல்லிக்கோ. அதான் உன் அப்பா வரதராஜன் இருக்காரே, அவர் பொண்ணு தானே நீ? அப்போ சொல்ல வாய்ப்பிருக்குமோ!” என்றவன் நக்கல் குரலில்,
“ஏய்!” என ஈஸ்வர் முன் அவள் விரலை நீட்ட,
“சீ மிஸ் லாவண்யா! உன்னால முடிஞ்சதை நீ பண்ணு. நீ யாருன்னு ஓரளவு நான் தெரிஞ்சிக்கிட்டதே போதும்.” என்றவன் அவன் முன் நீண்டிருந்த விரலைப் பார்க்க, அவள் வெறித்துப் பார்த்தாள் அவனை.
“போ சொல்லுங்க ப்பா!” என்றான் சாப்பிட அமர்ந்து.
“லாவண்யா! இதெல்லாம் பேசி முடிக்கவேண்டியது. கட்டாயப்படுத்த முடியாது!” என்று கொஞ்சம் தணிந்து வந்தார் மகேஸ்வரன்.
“நீங்க பேசாதீங்க. சீட்டர்ஸ்! அவன் என் அப்பாவை என்னனு பேசுறான். பார்த்துட்டு நிக்கிறீங்க? நான் யாருன்னு காட்டுறேன்.. “ என்றவள் சொல்லில்,
“ஜஸ்ட் ஷட்டப் லாவண்யா. நீங்க பெரிய ஆளாவே இருங்க. என் அப்பாவையும் இதுக்கு மேல நீங்க பேசுறதை நானும் பார்த்துட்டு இருக்க முடியாது. இந்த ப்ரோபோசல்ல எனக்கு இஷ்டம் இல்ல. நாங்க விலகிக்கிறோம். அவ்வளவு தான். வேறென்ன? அதான் பாத்துக்குறேன் சொல்லிட்டீங்க இல்ல? ஓகே பார்த்துக்கலாம். கிளம்புங்க!” என வாசல் நோக்கி கைகாட்டி நின்றான் கீர்த்திஸ்வரன்.
இது தான் நடக்கும் என அறிந்ததே தான் என்றாலும் லதா கொஞ்சம் பதட்டமாய் பார்த்து நிற்க, அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாய் வெளியேறி இருந்தாள் லாவண்யா.
“என்ன ஈஸ்வர்!” என லதா பயந்தே கணவனைப் பார்க்க, பயந்தது போலவே அவரும் பேச தான் செய்தார் மனைவியோடு மகனையும்.
அடுத்த இரண்டு நாட்களில் போனை ஸ்பீக்கரில் வைத்து அதில் பல்லவியிடம் அனைத்தையும் லதா சொல்ல,
“அப்போ குடும்பமா ஒரு பொண்ணை ஏமாத்தி கைவிட்டுட்டிங்களா?” என்றவள் குரலில் இங்கே இடுப்பில் கைவைத்து அன்னை அருகே நின்றான் கீர்த்திஸ்வரன்.
error: Content is protected !!