Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

37. துளசி - காட்டுப்பாதையில் ஒற்றை பூ

காட்டுப்பாதையில் ஒற்றை பூ – 9

இரண்டு நாட்கள் கடந்திருந்தது அன்று காலைத் தன் அறையில் கிளம்பிக்கொண்டிருந்தவனை கலைத்தது சித்ராவின் குரல்   “அண்ணா”   என்று மெல்லிய குரலில் அழைத்தாள் வெளியில் நின்றுகொண்டு.

 



Advertisement

இப்பொழுது அவன் அறை வாயில் தோட்டத்தின் பக்கமாக இருந்தது பால்கனியிலிருந்து படி வைத்திருந்தான்   “உள்ள வா”   என்றவன் குரலில் மெல்ல உள்ளே எட்டி பார்த்தவள்.

Advertisement

“அண்ணா அய்யா கூப்பிடுறாரு யாரோ வந்திருக்காங்க”   என்றவள் கொஞ்சம் யோசித்து   “ஆஹ் ராகவன் மாமா”   என்றாள்.

Advertisement

 

Advertisement

சிறிது நேரம் யோசித்தவன்   “போ வரேன்”   என்றான்.

 

ராகவன் சுந்தரேசனின் நண்பன் ஒரத்தநாட்டில் இருந்த தலைமை ஆசிரியர் மகன்,  அவர் மூலம்தான் அன்புக்கரசி  பற்றிச் சுந்தரேசனுக்கு தெரியவந்தது பல வருடங்கள் கிட்டத்தட்ட ஏழு வருடம் கடந்து வந்திருக்கிறார்.

 

இவன் வாயிலைக் கடந்து உள்ளே நுழைய அவனையே பார்த்திருந்த ராகவன்   “ஏய் பாலாவா இது!! என்னமா மாறிட்டான்”   என்றவர் எழுந்துவந்து அவன் கையைப் பிடித்துக்கொண்டார்.

 

“எப்படி இருக்க பாலா நம்பவே முடியல ஆளே மாறிட்ட”   என்றார் அத்தனை சந்தோஷமாக.

 

“நல்லா இருக்கேன் நீங்கச் சுகமா இருக்கீங்களா”   என்றான் தன்மையாகவே.

 

“நல்லா இருக்கேன்ப்பா”   என்றவரிடம் ஒரு பெருமூச்சு   “சுந்தர் இருந்திருக்கணும் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பான்,   உன்னைய பத்திதான் எப்போவும் பேசுவான் அவனுக்குக் கொஞ்சம் குற்றவுணர்ச்சி உனக்கு நல்லது செய்யலன்னு”   என்றார் இவனிடம் அமைதி.

 

பவுனுத்தாயி பேச்சை மாற்றினார்   “இத்தனை வர்ஷம் ஊரு பக்கமே வராம இருந்துட்டியேப்பா,  காலம் போன கடைசில பெத்தவங்க கூட இருங்க எனக்குத் தான் அந்தக் குடுப்பணை இல்ல”   என்று விழிகளைத் துடைத்தார்.

 

அனைவர் முகமும் வருத்தத்தைக் காட்டியது   “என் புள்ளைய கொன்னுட்டு அந்தப் படுபாவி எங்கேயோ நல்லாதானே இருக்கான்”   என்றார்.

 

ஷர்மிக்கு அவர்கள் பேசிக்கொள்வது புரியவில்லை என்னவாக இருக்கும் என்று யோசனையாகப் பார்த்திருந்தாள் கதிர் தான் ராகவனிடம் கேட்டான்.

 

“மாமா அப்போ என்னதான் நடந்தது நானும் சின்னப் பையன் பெருசா ஒன்னும் புரியல நீங்களும் அதுக்கு அப்புறம் வரவே இல்லை சுந்தர் அத்தானுக்கு என்னதான் நடந்துச்சு”   என்றான்.

 

ஒரு பெருமூச்சை விட்ட ராகவன்   “சுந்தர் பிசினஸ் விஷயமா அடிக்கடி வெளியூர் போவான் அப்படி போற இடம்தான் கிருஷ்னகிரி அங்க அவனுக்கு வேற ஒரு பிரெண்ட்கூட இருந்தான் அவன் ஒரு விபத்துல இறந்துட்டான் அவனோட மனைவி பிள்ளைகளுக்கு இவன்தான் உதவி செஞ்சான்”.

 

“அந்தப் பொண்ணு ரெண்டாவது குழந்தையை நிறைமாசமா இருந்தா போல அது ஹைவே ஒட்டி உள்ள போற ஒரு கிராமம் அங்க ஹைவே ரோடு வேலைக்கு வந்த எஞ்சினியர் ஒருத்தர் குடும்பத்தோட அந்தப் பொண்ணு வீட்டுக்குப் பக்கத்துல தான் இருந்திருக்கார்”.

 

“இவன் மூணு மாசத்துக்கு ஒருதடவை அங்க போயிவர  இவன்தான் அந்தப் பொண்ணோட புருஷன்னு அவங்க நினைச்சிருக்காங்க திடீர்ன்னு பிரசவ வலி வந்து அந்தப் பொண்ணு கஷ்டப்பட அவங்கதான் ஹாஸ்பிடல்ல சேத்து ஒருவாரம் இருந்து தாயையும் பிள்ளையையும் காப்பாத்தியிருக்காங்க”.

 

“இவன் எப்போவும் போலப் பாக்கப்போக அந்த ஆள் இவனை ரொம்ப மோசமா பேசியிருக்கார் நீயெல்லாம் ஆம்பளையா உனக்கு எதுக்குடா பொண்டாட்டி பிள்ளை,  வேற குடும்பம் இருக்கா இவ என்ன ஆசைக்கா அப்படி இப்படின்னு பேசியிருக்கார் அதுல ரொம்ப மனசு நொந்து ரோடு பக்கம் வந்தவன் லாரியைக் கவனிக்காம அடிபட்டு”   என்றவர் அதற்குமேல் சொல்லாமல் நிறுத்தினார்.

 

பிறகு சிறிது நேரம் கடந்து   “நானும் உங்க அப்பாவும்தான் போனோம் எங்களைப் பார்த்ததும் பாலதான் எனக்குக் கொள்ளிபோடணும்னு சொல்லிட்டு கண்ணை மூடிட்டான்,  அங்க இருந்த வேற ஒரு ஆளுதான் அங்க நடந்ததை சொல்லி அந்த எஞ்சினியரையும் எனக்குக் காமிச்சு குடுத்தார்”   என்றவர்.

 

“அதையும் சொல்லத்தான் வந்தேன் பாலா அந்த எஞ்சினியர்  இங்க நம்ம ஊர்ல பாத்தேன் முதல்ல சந்தேகம் இருந்தது ஆனா அப்புறம் உறுதியாயிடுச்சு அவன்தான்”   என்க பவுனுதாயி விருட்டென்று நிமிர்ந்தார்.

 

கவிதாவும் வேகமாக முன்னில் வந்தவள் “யாரு யாரு” என்றாள்.

 

“இங்க நம்ம கவர்மெண்ட் ஸ்கூல்ல வாத்தியாரா இருக்குற செல்வராஜோட அண்ணனாம் பேருகூட மகேந்திரன்”   என்க சிவபாலன் விழிகள் இடுங்கியது.

 

“சக்திப்ரியா அப்பாவா”   என்றாள் ஷர்மி.

கவிதா அவளைக் கேள்வியாகப் பார்க்க   “அதான் எனக்கு மேக்கப் செஞ்சாளே அவதான் அவளோட அப்பா”  என்றவளுக்கு உள்ளுக்குள் அத்தனை எரிச்சல் அவளுடைய அண்ணனுக்குத்தானே சக்திப்ரியாவை பெண்கேட்டனர் விருப்பம் இல்லை என்று சொல்லி அனுப்பினார்களே இவள் அப்பன் இருக்கும் கேட்டுக்குத் திமிர் வேறு என்று எண்ணிக்கொண்டாள்.

 

கவிதா யோசனையோடு நின்றாள் பிறகு ஒன்றும் பேசாமல் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்,   பவுனுத்தாயி வாயில் வந்ததெல்லாம் சொல்லிச் சாபம் விட்டுக்கொண்டிருந்தார் அவனை ஏதாவது செய்யணும் செய்யணும் என்று புலம்பித் தள்ளினார்.

 

“அதுக்கு அப்புறம் அவரைத் தேடி போகலையா”   என்றான் கதிர்.

 

“போனோம் சுந்தர் இறந்து நாலு மாசத்துக்கு அப்புறம் போனோம் அவனுக்கு விபத்து நடந்தது வேற ஏதோ இடம் அவனைக் கொண்டு போனது வேற எங்கயோ ஒரு ஹாஸ்பிடல்,  எந்த இன்ஜினியர் தெரியல அந்தப் பொண்ணை பத்தியும் எந்தத் தகவலும் தெரியல எங்க இருந்தாங்கன்னும் தெரியல எப்படி கண்டுபிடிக்கத் திரும்பிவந்துட்டோம்”   என்றார்.

 

அங்கு ஆழ்ந்த அமைதி   “நான் ரொம்ப வருஷமா ஊருக்கே வரலையே அந்த ஆளும் வெளியூர்லயேதான் வேலைபோல நான் வந்துபோன நேரத்துலயும் என் கண்ணுல சிக்கலை”   என்றவர் சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு சென்றார்.

 

ராகவன் கிளம்பி சென்றுவிட சிவபாலன் யோசனையோடே அமர்ந்திருந்தான் தன்னுடைய லாரி ஆபிசில்,   மகேந்திரன் காரணமாக இருப்பாரா தன்னுடைய மாமனின் மரணத்திற்கு என்ற சிந்தனைதான் அவனிடம்.

 

என்னவோ அந்த மனிதர்மீது அப்படி சந்தேகம் கொள்ள முடியவில்லை அதுவும் அவனுக்கு எரிச்சலாக இருந்தது சக்திரப்ரியாவின் மீதுதான் கோபம் கூடியது அவளின் தந்தை என்பதால் உனக்கு மனம் தடுமாறுகிறாதா என்று மனசாட்சி குத்தியது.

 

அவள்மீது எனக்கு எந்த எண்ணமும் இல்லை என்று உள்ளுக்குள் உரக்க கத்தினான்,   இல்லன்னா அப்புறம் என்ன இந்த நேரத்துக்கு அந்த ஆளை  அடிச்சு தொவச்சிருக்கணும் நீ அதை விட்டுட்டு உக்காந்து யோசிக்கிற என்றது.

 

அதேநேரம் பவுனுத்தாயிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது அவனை அவர் அழைக்கமாட்டார் எதுவாக இருந்தாலும் ரங்கசாமி தான் பேசுவது   “வீட்டுக்கு வா”   என்றார் அவர்.

 

அவனுக்காகக் கவிதாவும் பவுனுத்தயும் காத்திருந்தனர் இவன் வந்தபிறகு அன்புக்கரசியை அழைத்து அருகில் நிறுத்தினார் பவுனுத்தாயி,  எந்த முகாந்திரமும் இல்லாமல் கவிதா நேரடியாக விஷயத்தைக் கூறினாள்   “நீ அந்தப் பொண்ணு சக்திப்ரியாவை கல்யாணம் செஞ்சுக்கோ”   என்று.

 

அன்புக்கரசி அதிர்ந்து பார்க்க இவனிடம் எந்த மாற்றமும் இல்லை சொல்லிமுடியுங்கள் என்பதாக அமைதியாகவே நின்றான்.

 

“உங்க அம்மா இங்க நல்லா வாழுறாளே அதுக்கு முதல் காரணம் என் மவன் தானே அவன் கட்டாயப்படுத்துனதாலதான் உங்க அம்மாவை இந்த வீட்டில சேர்த்துக்கிட்டோம்,  உனக்குன்னு ஒரு ரத்த சொந்தமா சித்ராவும் இருக்கா இன்னைக்கு உனக்கு  இந்த வாழ்க்கையும் அதனாலதான் அதுக்கு நன்றி கடனா செய்”   என்றார் பவுனுத்தாயி.

 

“உனக்குச் சேரவேண்டிய காசைக் கூட எடுத்துக்கோ ஆனா எனக்காக உன் மாமாக்காக இதைச் செய் பாலா,  உன் மாமா சாவுக்குக் காரணமான அந்த ஆள் துடிக்கணும் வாழ வேண்டிய வயசுல கைல சின்னக் குழந்தையை வெச்சுகிட்டு நான் வாழாம நின்ன மாதிரி அந்த ஆளோட மவ குழந்தையோடு நிர்கதியா நிக்கணும்”.

 

“அவளைக் கட்டி வயித்துல பிள்ளை வந்ததும் அவ வீட்டுக்கு அனுப்பிடலாம் வேற எங்கேயும் கூட அவளை வாழவிடாமல் செய்யணும் நான் பட்ட படுற கஷ்டம் அப்போதான் அந்த ஆளுக்குப் புரியும்”   என்று சொல்லிப் பெரும் குரலில் அழுதவளை அமைதியாகப் பார்த்திருந்தான் சிவபாலன்.

 

பெரும் வேதனைதான் வெறும் இருபது வயதிலே துணையை இழந்து நின்றது பெரும் வேதனைதான்,  தன் குடும்பத்தைக் காக்க அவர் சுயநலமாக நடந்துகொண்டாலும் தாய் கூடத் தராமல் இருந்த அரவணைப்பை அவனிடம் காட்டிய மனிதர்.

 

தனக்கு ஏதேனும் நல்லது செய்துவிட வேண்டும் என்ற தவிப்போடு இறுதிவரை இருந்தவர் மகன் ஸ்தானத்தில் தன்னை வைத்துத் தன் கையால் அவரின் இறுதி காரியங்களைச் செய்யவைத்துக்கொண்டவர்.

 

அவன் யோசனையைக் கலைத்தாள் கவிதா   “உன்கிட்ட பிச்சையா கேக்குறதா கூட நினச்சிக்கோ”   என்று அவள் அவனை நோக்கிக் கையெடுத்து கும்பிட   “செய்றேன்”   என்று சொல்லிவிட்டு வெளியேறினான் சிவபாலன்.

 

அன்புக்கரசி பதறிப் போனார் என்ன சொல்லிட்டு போறான் இவன் என்று கலக்கியவர்   “பெரியம்மா இது பாவம் இல்லையா அவர் செஞ்ச தப்புக்கு அந்தப் பிள்ளை  என்ன செய்யும் அது பாவம் நல்ல பொண்ணு”   என்றார்.

 

அவரைத் திரும்பி உக்கிரமாக முறைத்த பவுனுதாயி   “இவளைப் பாத்துட்டு தானே இருக்க இத்தனை வருஷமா உனக்கு அப்போ பாவமா தெரியலல,  போனது என் பிள்ளைடி வலி எனக்குதானே,  யாருக்கோனாலும்  நீ பெத்த உன் பிள்ளை உன்கூடத்தானே இருக்கான் இன்னும் உசுரோட அப்போ உனக்கு அந்த வலி தெரியாது”   என்றார் அகங்காரமாக.

 

“பெரியம்மா”   என்று கொஞ்சம் சத்தமாகவே அழைத்துவிட்டார் அன்புக்கரசி என் மகனிடம் எந்த உரிமையும் எடுக்க முடியாமல் அவனை நெருங்க முடியாமல் யாரோ போல் தானே நிற்கிறேன் என் கண் முன்னே அவன் நடமாடுவது கூடப் பொறுக்கவில்லையா இவர்களுக்கு என்ன வார்த்தை பேசுகிறார் என்று உள்ளம் கலங்கியது.

 

இரண்டு பேரின் வாழ்வு வீணாகப் போகுமே அந்தப் பெண்ணின் வாழ்வும் என் மகனின் வாழ்வும் வீணாகுமே,   இந்தப் பழிவாங்கல் என்ன நிம்மதியை தந்துவிடும் இவர்களுக்குக் குழந்தையோடு அனுப்புவது என்றால் என் மகனின் குழந்தை அல்லவா அது.

 

அவனைப் போல அப்பாவின் அன்பு இல்லாமலே என் பேரக்குழந்தையும் வாழவேண்டுமா ஆண்டவா என்று சாமி அறையில் தரையில் தலையை முட்டிக்கொண்டு கதறினார் அன்புக்கரசி.

 

முத்துவிடம் மகேந்திரனைப் பார்க்க வேண்டும் என்று கூறினான் சிவபாலன் அவனுக்குப் பெரும் ஆச்சர்யம்   “எதுக்குண்ணா”   என்றான் அவன் இவன் நிமிர்ந்து அவனைப் பார்க்க   “இல்ல இல்ல சும்மா கேட்டேன்”   என்றவன்.

 

“எங்க வரச்சொல்ல”   என்றான்.

 

“பொதுவா ஒரு இடம் அவர்கிட்டயே சொல்லச்சொல்லு”   என்றுவிட்டான்.

 

பேச வேண்டும் என்று தான் நினைத்திருக்க அவனிடமிருந்தே அழைப்பு வரவும் நம்பவே முடியவில்லை மகேந்திரனால் இவர்களுடைய தென்னந்தோப்பிலே சந்தித்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்க மறுநாள் காலையே வந்திருந்தார் மகேந்திரன்.

 

வீட்டில் எதுவும் சொல்லியிருக்கவில்லை முதலில் என்ன விஷயம் என்று தெரியட்டும் பிறகு பார்க்கலாம் என்று அமைதியாக இருந்துகொண்டார் சக்திப்ரியாவுக்கு எந்தத் தகவலும் போகக் கூடாது என்ற சிவபாலனின் உத்தரவில் முத்துவும் அமைதியாக இருந்துகொண்டான்.

 

முத்துப்பாண்டியயும் அனுப்பிவிட்டான் என்ன பேசினார்கள் தெரியவில்லை மகளுக்கு அழைத்த மகேந்திரன் உடனே வீடு வரச் சொல்ல அவளும் கிளப்பி வந்திருந்தாள் அந்த மத்தியான வேளையில்.

 

தந்தை சொன்ன செய்தியில் அவளுக்குத் தலை கிறுகிறுத்து   “நிஜமாவாப்பா”   என்றாள் நம்பமுடியாமல்.

 

“நிஜமா… சிவபாலன் உன்னைப் பெண்கேட்டார்”   என்றார் மகேந்திரன்

 

அவளுக்கு மூச்சு முட்டியது நெஞ்சை நீவிக்கொண்டாள் கண்ணீர் நிற்காமல் வழிந்தது மகளை ஆதுரமாக  அணைத்துக்கொண்டு அவள் முதுகை வருடினார் தந்தை.

 

“என்னங்க திடீர்ன்னு”   என்றார் பூரணி.

 

“பிடிச்சிருக்காம்”   என்றார் மகேந்திரன்.

 

இப்பொழுது அழுகை இன்னும் கூடியது பெண்ணிற்கு   “பிரியாமா என்னது இது”   என்றார் அவர் அவளை இன்னும் சேர்த்தணைத்து.

 

“அழுகையா வருதுப்பா”   என்றவள் குரலில் அத்தனை பிரியம் அவன்மீது.

 

“பெண் கேட்டு வரட்டுமான்னு கேட்டார் நான் என்ன சொல்லட்டும்”   என்றார் மகேந்திரன் மகளைப் பார்த்து.

 

“பா…”   என்றாள் அவள் தவிப்பாக.

 

“வரச்சொல்லவா”   என்றவரை பார்த்தவள்   “இன்னுமா சொல்லல”   என்றாள் குறும்பாக.

 

அன்று மாலையே அழைத்து இவர் தகவல் சொல்ல வியாழன் அன்று பெண்  பார்க்க வருவதாக அங்கிருந்து தகவல் வந்தது.

 

அவள் கால்கள் கீழே பதியவே மறுத்தது நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை எப்படி தன்மீது திடீர் என்று விருப்பம் வந்திருக்கும் என்ற எண்ணம்வேறு ஒரு பக்கம் குடைந்தது.

 

செல்வராஜ் தான் குதித்துக்கொண்டிருந்தார்   “அண்ணன் உறவு வேணும்னா வந்து நில்லு இல்லன்னா உன் இஷ்டம்”   என்றுவிட்டார் மகேந்திரன்.

 

வியாழன் காலை ஒட்டுமொத்த குடும்பமும் வந்து இறங்கியிருந்தது அவனைத் தவிர,  தான் கேட்ட மூன்றாம் நாளே பெண் பார்க்கும் சடங்குவரை கொண்டுவந்துவிட்டானே என்று ஒரே ஆச்சர்யம் கவிதாவுக்கு.

 

“எப்படி”   என்ற அவள் கேள்விக்கு அமைதியாக அவளைப் பார்த்துவிட்டுக் கடந்துவிட்டான்.

 

“மிரட்டியிருப்பானோ”   என்றார் பவுனுத்தாயி.

 

“என்ன சொல்லி மிரட்ட அந்த ஆளும் நல்லா படிச்சு பெரிய வேலைல இருந்த ஆளுதானே  மிரட்டினா பயப்படுவாங்களா”   என்றாள் இவள்.

 

“ஏதோ செஞ்சிருக்கன் இல்லனா எப்படி ஒத்துப்பாங்க ஆனா பாரு சுந்தரேசன் மேல இவனுக்கு எவ்ளோ பாசம்னு அவனுக்காகத்தானே இதைச் செய்றான் எப்படி நடந்தா என்ன நாம நினைச்சது  நடந்தா போதும்” என்றார் பவுனுத்தாயி.

 

என்றாலும் என்னசொல்லி இவர்களைச் சம்மதிக்க வைத்திருப்பான் என்ற சிந்தனை அந்தக் குடும்பத்தின் ஒவ்வொருத்தரின் மனதையும் குடைந்துகொண்டிருந்தது அதில் ஷர்மிளாவும் அடக்கம்.

 

எதற்காக இந்தத் திருமணம் இவ அப்பா மேல கோபமா இருக்காங்க அப்புறம் ஏன் இவளைக் கட்டிவைக்க குடும்பமே வந்து உக்காந்திருக்கு அதோட இவ  எப்படி இவனைக் கட்டிக்க ஒத்துக்கிட்டா என்று விடை தெரியா கேள்விகளோடு மண்டையை உடைத்துக்கொண்டிருந்தாள்.

 

‘என் அண்ணனை வேண்டாம் சொன்னவளுக்கு இவன் மட்டும் ஓகேவா,  இவனையே கட்டிக்கோ கட்டி அடி மிதி படு அதுதான் உன் தலையெழுத்துன்னா என்ன செய்ய’  என்று மனதில் கருவிக்கொண்டாள்.

 

ஆகமொத்தம் அங்கு யாருக்குமே சக்திப்ரியா சிவபாலனை விரும்பியிருக்கக்கூடும் என்ற சின்ன சந்தேகமும் வராமல் போனது.

 

பதட்டம் படபடப்பு எதுவும் இல்லை அவளிடம் மிகச் சாதாரணமாக நின்றிருந்தாள் சக்திப்ரியா முகத்தில் சிறிய வாட்டம் அதுவும் அவன் வரவில்லை என்பதால் ஆனால் அவன் வீட்டினருக்கு அவளின் விருப்பம் இல்லாமல் ஏதோ மிரட்டியோ கட்டாயப்படுத்தியோ இந்தத் திருமணம் நடக்கிறது அதுதான் இப்படி இருக்கிறாள் என்று எண்ண வைத்தது.

 

சக்திப்ரியாவால் இப்பொழுதும் நம்ப முடியவில்லை முதல் கட்ட அதிர்ச்சி தெளிந்த பிறகு அத்தனை முறை கேட்டுவிட்டாள் தந்தையிடம்   “அவர் என்னப்பா சொன்னார் எப்படிப்பா சம்மதிச்சார் அவர் என்னை அப்படிலாம் பாத்ததே இல்லப்பா என்கிட்டே சொல்லுங்கப்பா என்ன பேசினார் என்ன சொன்னார்”   என்று துருவித் துருவிக் கேட்டாள்.

 

அவர் எதையுமே சொல்லவில்லை   “உன் கேள்வி எதுக்கும் இப்போ அப்பாகிட்ட பதில் இல்லடா ஆனா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்,  நீ ஆசைப்பட்ட  வாழ்க்கை அதை இனிமே நீதான் பாத்துக்கணும் உன் வாழ்க்கையோட சேர்த்து நீ ஆசைப்பட்டவரையும்”   என்றிருந்தார்  மகேந்திரன்.

 

அந்த நினைவுகள் தான் அவளைச் சுழற்றியடித்தது   “என்னம்மா உனக்குச் சம்மதமா”   என்றார் ரங்கசாமியின் பெரியப்பா.

 

“ஆஹ்”   என்று அவள் விழிக்க அனைவரின் பார்வையும் அவளிடம்.

 

“உனக்கு எங்க சிவபாலனை கட்டிக்க சம்மதமான்னு கேட்டேன்மா”   என்றார் அவர்,  அவள் விழிகள் வாயிலைப் பார்த்தது படி ஏறி மேலே வந்தவன் வாயிலை அடைத்துக்கொண்டு நின்றான்.

 

 

“சம்மதம் தாத்தா”   என்றாள் சக்திப்ரியா அவன் விழிகளைப் பார்த்துக்கொண்டே.

“அடடே வாப்பா பாலா நீ வரமாட்டேன்னு சொன்னாங்க”   என்ற பெரியவர்   “அப்பறம் என்னப்பா பொண்ணுக்கும் சம்மதம் உறுதி பண்ணிக்கலாம்”   என்க.

 

அவள் விழிகள் அத்தனை தவிப்போடு அவனைப் பார்த்தது உங்களுக்கு உண்மையிலே சம்மதமா என்று.

 

மகளின் நிலையைப் புரிந்துகொண்ட மகேந்திரன்   “மாப்பிளைகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே”   என்றார்.

 

“என்னப்பா பாலா”   என்றார் பெரியவர் அவன் பக்கம் திரும்பி அவன் விழிகள் அவளிலிருந்து நகரவே இல்லை இத்தனை நேரமும்.

 

“சித்ரா உன் அண்ணிக்கு பூ வெச்சுவிடு”   என்றான்,  அந்த ஹாலில் அவன் குரல் அத்தனை கம்பீரமாக ஆழமாக ஒலிக்கச் சக்திப்ரியா விழிகள் மூடி அந்தக் குரலைத் தன்னுள் நிறைத்தாள்.

 

விழிகள் அவள் அனுமதி இல்லாமலே கன்னத்தை நனைக்க அவள் கூந்தலை நிறைத்தது மல்லிகைச் சரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!