உளமாற உனதாகிறேன் – 2(2)
“என்னங்க என்ன ஒரே யோசனையா இருக்கிற மாதிரி இருக்கு… அதுதான் சின்னக்குட்டி வந்துட்டா இல்ல… அப்புறம் என்ன…”
“அதில்ல வாசகி… நம்ம வெண்பா கல்யாணத்துல கொஞ்சம் அவசரபட்டுட்டோமோன்னு தோணுது…” என்றதும் பதறி தான் போனார் வாசகி.
Advertisement
“அட என்னங்க நாளைக்கு கல்யாணத்தை வைச்சிட்டு இன்னைக்கு இப்படி பேசுறிங்க… ஏன் மாப்பிள்ளை போலீஸ் வேலையில் இருக்கிறது பிடிக்கலையா…”
“ப்ச்ச் அதில்ல வாசகி… போலீஸ் வேலை ஒன்னும் அவ்வளவு மோசம் கிடையாது… நம்மை விட அவங்க குடும்பம் ரொம்ப செல்வாக்கான குடும்பம்… அது மட்டுமில்லாம அவங்க அப்பா பெரிய அரசியல்வாதி… சரி அதைக்கூட விட்ருவோம்… எப்போவும் அப்பனுக்கும் மகனுக்கும் முட்டிக்கும்மா… அதுதான் யோசனையா இருக்கு”
Advertisement
Advertisement
“அட இவ்வளவு தானா… நான் கூட வேறென்னவோன்னு பதறிட்டேன்… யாருக்கா இருந்தாலும் நமக்கடுத்து நம்ம புள்ள நம்முடைய தொழில பார்க்கனும்னு இருக்கும்… அவரும் அப்படி ஏதாச்சும் ஆசை பட்டிருப்பாரோ என்னவோ... அந்த ஆசை அப்படியே புள்ள மேல கோவமா மாறி இருக்கும்… இதெல்லாம் ஒரு விஷயமா...”
“மொத மாப்பிள்ளை இந்த சம்பந்தத்தை எடுத்திட்டு வந்ததுமே எல்லாம் விசாரிச்சுட்டேன்… பையன் சுத்த தங்கம்... அதுதான் அப்பனுக்கும் மகனுக்கும் உரசல்… அரசியல்வாதி குடும்பத்துல பொண்ணை கொடுக்க கூடாதுன்னு நினைச்சிருந்தா நீங்க நம்ம பிரபாவையே உங்க அக்கா வூட்டுல கொடுத்திருக்க கூடாது” என்றதும் அதுவரை பொறுமையாய் பேசிக் கொண்டு இருந்தவருக்கு சுர்ரென்று கோபம் பொங்கியது.
Advertisement
“ஏன்டி பெருமாளு நான் பாத்து வளர்ந்த பையன்டி… அவனுக்கு என்ன குறைச்சல்... ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு பிடிக்கும்… இவனுக்கு அரசியல்ல நாட்டம்… அதனால என்ன… அவன் வேலைக்கு போய் சம்பாதிச்சா தான் என் பொண்ணு வயிறு நிறையுமா என்ன… போடி போய் கல்யாண வேலையை பாரு” என்று துண்டை தோளில் போட்டபடி சென்றுவிட… அவரையே வெறித்து பார்த்திருந்தார் வாசகி… அதில் கோபத்தை விட ஆற்றமையே பொங்கி வழிந்தது!
•••••••••••
கீழே நடந்த எந்த பிரச்சனையும் தெரியாது அப்போது தான் மொட்டை மாடியில் இருந்து இறங்கி வந்ததுக் கொண்டிருந்தாள் அவளின் மனம் முழுதும் குழப்பமே… விருப்பப்பட்டு ஐ.டி துறையை தேர்ந்தெடுத்தாள். அதே விருப்பத்தோடு தான் திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்தாள்.
வேலை… வேலை… என்று பெங்களூரில் ஓடிக் கொண்டிருந்தவளுக்கு ஒருமுறை கூட வாசு அழைக்காதது குறையாய் தெரியவில்லை… ஆனால் இங்கு வந்துச்சேர்ந்த இந்த இரண்டு நாள்களும் அவ்விடயமே அவளின் மனதை அரித்துக் கொண்டிருந்தது.
போதாத குறைக்கு இப்போது தான் தோழி அழைத்து பேசினாள். புது பிராஜெக்ட் விசயமாக ஜெர்மன் செல்ல போகும் நபர்களில் இவளின் பெயரும் உள்ளதாம்… இனி என்ன செய்ய போகிறாய் என்ற கேட்க… சத்தியமாய் பதில் தெரியவில்லை…
திருமணத்திற்கு பின் வோர்க் ஃப்ரம் ஹோம் கேட்டு வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்… மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தவளின் நினைப்பை ஜெர்மன் ஆசை தகர்க்க… என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை…
“ஹேய் வாடி கல்யாண பொண்ணே… என்ன மொட்டை மாடியில ஒரே ரொமன்ஸ் போல… ம்ம்… நடத்து… நடத்து…” என்ற இனியாளின் பேச்சு சத்தியமாய் அவளுக்கு புரியவில்லை.
“ஏய் லூசு… வீட்டுக்கு வரதுக்குள்ள பைத்தியம் ஆயிட்டியா… என்ன உளர்ற”
“ஹேய் யாருடி பைத்தியம்… உன் வண்டவாளம் எனக்கு தெரியாதாக்கும்… மாமாவை பார்த்து சைட் அடிக்க தானே மேலே போன… எனக்கு தெரியும்டி… என்னடா இந்த மாமா தேவையை இல்லாம வண்டியை நம்ம பக்கம் திருப்புறாறேன்னு நினைச்சேன்… இதுதான் சங்கதியா… அவரு கீழ இருந்து நோக்க… நீ மேல இருந்து பார்க்க ஒரே லவ்ஸ் தான் போல” என்று பல் இளித்தவளை கண்டு வெறியேறியது!
“ஏய் எருமை… எருமை… ஏதாச்சும் புரியுற மாதிரி பேசி தொலையுற… இருக்கிற கடுப்புல இவ வேற” என்று கண்ணுக்கினியாளின் தலையிலே கொட்டிவிட… இவளுக்கும் கோபம் பொங்கியது…
“இப்போ எதுக்குடி என்ன அடிச்சா… என்னை விட்டுட்டு போற சாக்குல உன்னை பார்க்க தானே மாமா வந்தாரு… அப்படியே நடிக்காத” என்று இவளும் அவள் மீது பாய… இருவரையும் பிரித்து நிறுத்தினாள் பிரபா.
“அடியேய் ரெண்டு பேரும் அமைதியா இருந்து தொலைங்கடி… வெண்பா நீ போய் படு… நாளைக்கு சீக்கிரம் எழனும் இல்ல… உனக்கு வேற தனியா சொல்லனுமா இனி… நீயும் போடி…”
“போக்கா நீ அவளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ… இங்க பாரு வெண்பாக்கு மாப்பிள்ளை பார்த்தது வேணும்னா உன் புருஷனா இருக்கலாம்… ஆனா எனக்கு அவரு ஒன்னும் பார்க்க வேணாம்…”
“அதுவும் அந்த குரங்கு மூஞ்சி அர்ஜூனை என் தலையில கட்டப்பார்த்தாரு அவ்வளவுதான் சொல்லிட்டேன்… ஆனா இந்த வாசு மாமா ஏன் பர்ஸ்ட் என்னை பார்த்ததும் தெரியாத மாதிரியே இருந்தாரு… அதுதான் புரியவேயில்ல” என்றபடி வெண்பாவிற்கு பக்கத்திலே படுத்தவள் அசதியில் உறங்கியும் போய்விட்டாள். ஆனால் பாவம் வெண்பாவால் தான் உறங்க இயலவில்லை…
‘வீடுவரை வந்தவர் என்னை ஏன் பார்க்கவில்லை… ஒருவேளை என்னை பிடிக்கவில்லையா’ என்று என்னென்னவோ யோசனைகள் சூழ்ந்து கொண்டு இருக்க குழப்பத்துடனே நித்திரையில் ஆழ்ந்தாள் வெண்பா.
இவள் எண்ணத்தின் நாயகனோ அங்கு பெருமாளை மண்டை பிய்க்க வைத்துக் கொண்டு இருக்க… அவரோ ஏன்டா இவனின் வண்டியில் ஏறினோம் என்று நூறாவது முறையாக தன்னையே நொந்து கொண்டு இருந்தார்…
தொடரும்…

Venba 🤔🤔🤔🤔