Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே…

என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே… 7

விட்டுச் செல்லாதே -7
சில நிமிடங்கள் கடந்த பின்பும்
அவன் நெஞ்சம் மட்டும் அவள் சொற்களின் அர்த்தத்தை


Advertisement

புரிந்து கொள்ள முடியாமல் தவித்தது.
அத்தனை பெரிய நிர்வாகத்தை நடத்தும் அவனோ அவள் வார்த்தைகளின் ஆழத்தை
ஏற்றுக்கொள்ள முடியாத

Advertisement

ஒரு மூர்க்கனாய் நின்றான்.

Advertisement

எப்படி வண்டியில் வந்து அமர்ந்தான் என்பது அறியாமல்,
தன் நினைவின்றி அவன் உடல் மட்டும் சாவி திருகிய பொம்மை போல் நகர்ந்தது.

Advertisement

வண்டியில் இலக்கின்றி சுற்றிக்கொண்டிருந்தவனின் கைபேசி மூன்று முறை விடாமல் ஒலிக்க, சலிப்புடன் திரையில் மின்னும் பெயரை பார்த்தான்.
“கார்த்திக்..”
ஒரு நொடி யோசித்தாலும், அழைப்பை ஏற்பதை தவிர வேறு வழியில்லை. அழைப்பை ஏற்கும் வரை அவன் விடப்போவதில்லை என்று அறிந்திருந்த அர்ஜுன்,
“என்ன டா..” என்று சலிப்புடன் கூறிய படி அழைப்பை ஏற்றான்.
“டேய் மச்சான்.. எங்க டா போன? ஆபீஸ்ல ஆள காணோம். எவ்ளோ நேரமா ரீச் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கேன்…” என்று கேட்டவன் குரலில் கோவம் கலந்த கவலை இருந்தது.
“கொஞ்சம் வேலையா வெளிய போனேன்.. இப்போ எதுக்கு கால் பண்ணிடே இருக்க??”
அர்ஜுனின் குரலில் இருந்த எரிச்சலை உணர்ந்தவன் ஏதோ ஒன்று சரி இல்லை என்பதை அறிந்தான். நேற்று இன்று பழக்கமா அவர்களுடையது. நடக்க ஆரம்பித்ததில் இருந்தே அவர்கள் நண்பர்கள் ஆயிற்றே…
“நீ பெர்சனலா போற அளவுக்கு முக்கியமான வேலையா?? புதுசா இருக்கே!!! யாரு மச்சான் அந்த விஐபி??” என்று கிண்டல் செய்வதுபோல சந்தேகமும் கலந்து கேட்டான் கார்த்திக்.
ஒரு நொடி யோசித்தவன், அவனின் தலையில் இருக்கும் பாரத்தை இறக்க
“ இன்னைக்கு அவள பார்த்தேன் டா மச்சான்…” என்றான்.
அர்ஜுனின் குரலில் இருந்த வலியும், அவள் என்ற வார்த்தையும் கேட்ட கார்த்திக்கிற்கு பதில் தெரிந்தும் அதை ஏற்று கொள்ள முடியாமல், “ யார சொல்ற??” என்றான் சிறு நடுக்கத்துடன்.
அந்த நடுக்கத்தின் காரணம் அர்ஜுனின் வாழ்வில் அவளுக்கான இடம் என்ன என்பதை கார்த்திக் நன்கு
அறிவான். அவள் ஒருவளின் வருகை எப்படிபற்ற மாற்றத்தை உண்டாகும் என்பதும் அறிவான்.
அர்ஜுனின் தொண்டையில் சிக்கிய அவள் பெயர்  வெளியே வர மறுத்தது. ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு,
“அவ தான் மச்சான்…ரத்னா…” என்றான். அவன் குரல் உடைந்த கண்ணாடி துண்டு சிதறுவதை போல அதில் இத்தனை காலக் காத்திருப்பின் களைப்பும், அவளைக் கண்டடைந்த நிம்மதியும், அவள் காட்டிய அந்நியத்தால் ஏற்பட்ட வலியும் சரிசமமாகப் பிரிந்து கிடந்தன.
நான்கு வருடங்களாக ஒருவன் எதைத் தேடி அலைந்தானோ, அது கிடைத்த சந்தோஷம் நிம்மதி அவனிடம் இல்லை என்பதை அர்ஜுனின் மௌனம் சொல்லாமல் சொல்லியது.
“மச்சான்… என்னடா சொல்ற? நிஜமாவா? எங்க பார்த்த? அவ என்ன சொன்னா?”
இத்தனை கேள்விகள் கேட்ட கார்த்திக்கின் குரலில் பதற்றம் தொற்றிக்கொண்டது.
அர்ஜுன் காரின் ஸ்டீயரிங் வீலை (Steering Wheel) தன் விரல்களால் இறுக்கமாகப் பற்றினான். நகங்கள் வெள்ளையாக மாறும் அளவிற்கு அந்தப் பிடியில் ஆத்திரம் இருந்தது. கோவத்தான் உச்சம் அவனின் கை நரம்புகள் சொல்லின.
ஆனால் இதை பார்க்காமல் கூட அவனின் மௌனத்தில் உள்ள கோவத்தை மறுபுறத்தில் இருந்த கார்த்திக் உணர்ந்தான்.
“அர்ஜுன், ரிலாக்ஸ்… நீ இப்போ எங்க இருக்க??? லொகேஷன் சொல்லு நான் வரேன்…”
அதுவரை எங்கே செல்கிறோம் என்று அறியாதவன், தன் காரின் ஜன்னல் கண்ணாடியின் வழியே வெளியே தெரிந்த மங்கலான வெளிச்சத்தை பார்த்து செல்லும் பாதையின் வழியை அறிந்தான்.
பின்னர், “சென்ட்ரல் கபே பக்கத்தில் தான் இருக்கேன்…டேபிள்ல வெயிட் பண்றேன்..வா” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டிதான் அர்ஜுன்.
சில நிமிடங்களில்—
கபேவின் பார்க்கிங் பகுதியில்
காரை நிறுத்தினான் அர்ஜுன்.
வானுயர்ந்த கண்ணாடிச் சுவர்கள் வழியே நகரின் ஒளிகள் மின்ன, அந்தப் பிரம்மாண்டக் கட்டிடம் ஒரு நவீனக் கலைக்கூடமாய் ஜொலித்தது.
உள்ளே நுழைந்ததும் வரவேற்கும் தேக்கு மர வேலைப்பாடுகளும், தரை விரிப்பின் மென்மையும் அந்த இடத்தின் செல்வச் செழிப்பை பறைசாற்றின.
கூரையிலிருந்து தொங்கும் படிகக் கல் சரவிளக்குகள் பொன்னிற ஒளியைச் சிதறி அந்த இடத்திற்கு ஒரு ராஜகீய அந்தஸ்தைக் கொடுத்தன.
அமைதி ததும்பும் அந்த ஏர்-கண்டிஷன்ட் சூழலில், விலையுயர்ந்த தோல் இருக்கைகள் அமருபவருக்கு அசாத்திய சுகத்தை அளித்தன.
நவீன ஐரோப்பியக் கட்டிடக்கலையும், பாரம்பரியத் தன்மையும் கலந்த அந்தச் சூழல், சாதாரணக் காபி குடிப்பவர்களுக்கானது அல்ல,   அதிகாரமும், செல்வமும் பேசும் இடம்
என்பதை உணர்த்தியது.
ஆனால் அது எதுவும் பொருட்படுத்தாமல், அவனுக்கான பிரைவேட் அறையில் சென்று அமர்ந்தான்.
“சார், ஆர்டர் பிளீஸ்..” என்று ஒரு பணியால் வந்து கேட்டு மெனு கார்டை குடுக்க அதில் காபி வகைகள், குளிர் பானங்களுடன் சேர்த்து மது பானங்களும் இருந்தது.
பொதுவாகச் சொன்னால், எல்லா கபேக்களிலும் மதுபானம் விற்கப்படுவதில்லை. ஆனால், இடத்தைப் பொறுத்து இது மாறுபடும்.
அர்ஜுன் போன்ற தொழிலதிபர்கள் செல்லும் ஹோட்டல்களில் உள்ள கபேக்களில் காபியுடன் மதுபானங்களும் கிடைக்கும்.
ஆனால் அவனோ, எதுவும் பருக மனமில்லாமல் எதுவும்  வேண்டாம் என்று தலை அசைக்க “ ஓகே சார்..” என்று சொல்லிவிட்டு அவர் திரும்பினார்.
சட்டென்று அவன் மனதில் ஒரு எண்ணம் வந்துடவே, “ ஹலோ.. ஒன் மினிட்..” என்றான் அர்ஜுன்.
“எஸ் சார்…”
ஒரு நொடி யோசித்தவன், “ ஒன் பிளாக் லேபிள்..” என்றான்.
“ஓகே சார்..” என்று தான் வந்த வேலையை முடித்துவிட்டு அவர் வெளியேறினார்.
சில நிமிடங்களில் கதவை மெதுவாகத் தட்டிய சத்தம் கேட்டது. பின்னர், கதவை திறந்து ஒரு அழகான தட்டில்,
பொன்னிறமாக மின்னும் விஸ்கி பாட்டில்…
அதன் பக்கத்தில் தெளிவான கண்ணாடி டம்ப்ளர்…
அதுக்குள் மெதுவாக ஒலிக்கும் ஐஸ் கட்டிகள்…
அதோடு சேர்த்து ஒழுங்காக வைக்கப்பட்டிருந்த மிளகு சிக்கன்,
சிறிது உப்பு முந்திரி, மேலும் சில சிப்ஸ் வகைகள் என அந்த தட்டு முழுவதும் அமைதியான ஆடம்பரத்தைச் சொன்னது.
வெயிடர் அதை அவன் முன் வைத்து,
மரியாதையுடன் விஸ்கியை அளவாக ஊற்றி, டம்ப்ளரை அருகில் தள்ளி வைத்து,
“என்ஜாய் யுவர் டிரிங், சார்…” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
மதுபானம் என்பது செல்வந்தர்களுக்கு புதிய விஷயம் கிடையாது. பார்ட்டிஸ், மீட்டிங்ஸ் என்று அவர்களின் வாழ்க்கையில் அது ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறது.
ஆனால் அர்ஜுன் அந்த பழக்கத்தை விட்டு நான்கு வருடங்கள் ஆனது. காரணம் அவன் பிரியாவிடம் செய்து கொடுத்த சத்தியம். அவனிடம் எதுவும் கேட்காத எதிர்பார்க்காத அவள், அவனிடம் கேட்ட ஒரு சத்தியம் அதுதான்.
அவளுக்கு ஏற்பட்ட அந்த காயத்திற்கும், அவள் அனுபவித்த வலியிற்கும் அவளின் உடம்பில் உள்ள அந்த மறையா தழும்பிற்கும் காரணமாக இருந்த இந்த மதுபோதையை அவள் விட்டுவிடு என்று மெல்லிய குரலில் கேட்டபோது, அந்த நேரத்தில் எதைக் கேட்டாலும் தரத் தயாராக இருந்த அர்ஜுன், மறுப்பு ஏதும் சொல்லாமல் அதை ஏற்றுக்கொண்டான்.
ஆனால் இன்று, அந்தச் சத்தியத்தை விடவும் அவன் மனதின் ரணம் பெரிதாகத் தெரிந்தது. யாரை தேடி பைத்தியமாக திரிந்தானோ அவள் கிடைத்த பின்பும் அவளை தொலைத்த இடத்திலேயே மீண்டும் நிர்ப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கண்ணாடியில் மோதும் பனிக்கட்டிகளின் சத்தம் அவன் காதுகளில் ரத்னாவின் ‘யார் நீங்க?’ என்ற கேள்வியாகவே ஒலித்தது.
நடுங்கும் விரல்களால் அந்தத் ததும்பும் விஸ்கி கிளாஸை கையில் எடுத்தான். அதன் காரமான மணம் அவன் நாசியைத் துளைத்தது.
தன் இதழ்களுக்கு அருகே அதைக் கொண்டு சென்ற அந்த நொடி… கதவு அவசரமாகத் திறக்கப்பட்டது…..
மூச்சிரைக்க உள்ளே வந்த கார்த்திக், அர்ஜுனின் கையில் இருந்த கிளாஸைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அப்படியே நின்றான்.
“மச்சான்! என்னடா இது? என்னடா பண்ற?.. இப்போ எதுக்கு இதெல்லாம்?” என்று பதற்றத்துடன் அவனருகே வந்து அந்த கிளாஸை வாங்க முயன்றான்.
அர்ஜுன் அவன் கையை தடுத்துவிட்டு ஒரே மூச்சில் மதுவை பருகினான். தொண்டையைச் சுட்டெரிக்கும் அந்தத் திரவம் அவன் உள்ளுக்குள் இருந்த எரிமலையை அணைக்கவில்லை, மாறாக இன்னும் விசிறிவிட்டது.
கோபமும், எரிச்சலும், ஏமாற்றத்தின் ஊட்சத்தில் இருந்த அர்ஜுன் தன் கையில் இருந்த கிளாஸை மேசையின் மீது சிறிது வேகத்துடன் ஓங்கி வைத்துவிட்டு தன் சிவந்த கண்களால் கார்த்திக்கைப் பார்த்தான்.
அர்ஜுனின் கண்களில் இருந்த வலி, கார்த்திக்கை பதறவும் கவலையடையவும் செய்தது.
“என்ன தான் டா நடந்துச்சு?? ஏன் டா இப்படி எல்லாம் பண்ற?? முதல்ல உன்னோட எமோஷன் எல்லாம் கண்ட்ரோல் பண்ணு…”
“முடியல டா… யார தேடி இத்தனை வருஷமா அலஞ்சனோ அவ என்னை யாருனே தெரியலன்னு சொல்லும்போது நான் எப்படி கண்ட்ரோலா இருக்க முடியும்??” என்று கர்ஜிப்பது போல் கோபத்தில் கத்தினான் அர்ஜுன். அந்தச் வார்த்தைகளில் நான்கு வருடகாலத் தேடலின் வலி அப்பட்டமாகத் தெரிந்தது.
தான் சொல்வது பொய் என தெரிந்தும் மனம் உடைந்து இருக்கும் தன் உயிர் நண்பனை சமாதான படுத்த
“தெரியலயா?? அது ரத்னாவா இருக்காது… உருவ ஒற்றுமையில வேற யாரையாவது நீ… ” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அர்ஜுனின் கண்களில் தெரிந்த கோவம் பாதியில் நிறுத்த வைத்தது.
“அவ கழுத்துல இருந்த அந்த மச்சம், அவளோட அந்தப் பார்வை… அவ என்னை மறந்தா மாதிரி நடிக்கிற டா.  அவ கண்ணுல நான் பார்த்தேன் மச்சான்.. அது என்னோட ரத்னா தான்…” என்று சொல்லிவிட்டு ஒரு ஏளனச் சிரிப்பைச் சிரித்தவன் மேசையில் இருந்த போனை
அவன் கார்த்திக்கின் பக்கம் தள்ளினான்.
அதில் இருந்த புகைப்படத்தைப் பார்த்த கார்த்திக் அப்படியே உறைந்து போனான்.
“இது… இது ரத்னா தான்… சந்தேகமே இல்லை. ஆனா அர்ஜுன், அந்தக் குழந்தை? அவளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?” – கார்த்திக் தயங்கியபடி கேட்டான்.
அர்ஜுன் மீண்டும் ஒரு கிளாஸ் விஸ்கியை ஊற்றியபடி, “அதைத்தான் எனக்கும் தெரிஞ்சுக்கணும். அவ கல்யாணம் பண்ணிக்கிட்டாளா இல்ல அது வேற ஒருத்தரோட குழந்தையா என்னன்னு தெரிஞ்சுக்கணும். வேற ஒருத்தரோட குழந்தைன்னா அம்மான்னு ஏன் கூப்பிடணும்  ஆனா அவ கண்ணுல ஒரு பயம் தெரிஞ்சது கார்த்திக். நான் ரத்னானு கூப்பிட்டப்போ அவ உடம்பு ஒரு நொடி நடுங்குச்சு… அதை நான் கவனிச்சேன். அவ நடிக்கிறா… ஏதோ ஒரு பெரிய காரணத்துக்காக என்னை அவளுக்குத் தெரியாதுனு சாதிக்கிறா!”
“சரிடா, இப்போ என்ன பண்ணப் போற?”
அர்ஜுன் தன் சிவந்த கண்களால் கார்த்திக்கைப் பார்த்தான். “அவளைக் கண்டுபிடிச்சுட்டேன். இனி அவ எங்கேயும் போக முடியாது. அவ வாயாலேயே உண்மையைச் சொல்ல வைக்கிற வரைக்கும் நான் அவளை விடமாட்டேன்.” என்று கூறிக்கொண்டே மீண்டும் அந்த மது நிறைந்த கிளாஸை குடித்தான்.
“மச்சான்…”
என்று தயங்கியவன்,
“உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல… ஆனாலும் சொல்லுறேன்…
எது செய்தாலும் கொஞ்சம் நிதானமா யோசிச்சு செய் டா… இப்போ உன் வாழ்க்கையில பிரியாவும் இருக்க”
என்றான் மெதுவாக.
அர்ஜுன் தன் கையில் இருந்த கிளாஸை இருக்க பிடித்தபடி சிரித்தான். அதில் வலி மட்டுமே நிறைந்திருந்தது.
“என் வாழ்க்கையில பிரியாதான் இருக்கா…
ஆனா—
என் மனசு இன்னும்
ரத்னாகிட்ட தான் இருக்கா டா, மச்சான்…
என்னால அவ செஞ்ச துரோகத்துக்குப் பிறகும் கூட
அவள மறக்க முடியலையே…
அவள மாதிரி, யாரோ போல நடிச்சுட்டு
விட்டு போகவும் முடியல டா…
என்னோட காயத்திற்கு காரணமானவ
அதுக்கான மருந்தும் அவதான் ஆகணும், மச்சான்…”
என்று சொல்லிக்கொண்டே மீண்டும் கிளாஸை காலி செய்தவன்,
கார் சாவியை எடுத்துக்கொண்டு எழுந்தான்.
“எங்க டா போற? இரு… நானும் வரேன்…”
என்றான் கார்த்திக் அவசரமாக.
“வீட்டுக்குப் போறேன் டா…
நாளைக்குக் காலைல
தாத்தா கோவிலுக்குப் போகணும்னு சொன்னாரு…”
ஒரு நொடி யோசித்தவன்
“அப்புறம், நான் சொல்ல வேண்டியது இல்ல இருந்தாலும் இது நமக்குள்ளேயே இருக்கட்டும்…”
“நான் சொல்றது புரிஞ்சுதா…?” என்றான் அர்ஜுன்.
“ம்ம்… சரி டா மச்சான்…
ஆனா, பிரியா கேட்டா என்ன டா சொல்லுவ?
குடிச்சு இருக்கியே…”
“அவ தூங்கி இருப்ப டா. ரொம்ப லேட் ஆகிடுச்சி.. நான் சமாளிச்சிப்பேன்…” என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான். ஆனால் நிச்சயம் பிரியா தூங்கியிருக்க மாட்டாள் என்று அர்ஜுனின் உள்மனம் எச்சரித்தது.
விட்டு சென்றவளை நினைத்து,
விட்டு விட முடியாமல் தவிக்கும் இவனோ…
செய்த சத்தியத்தையே மீறி,
தன் வீட்டில் தனியே காத்திருக்கும் அவளிடம்
என்ன சொல்லப் போகிறானோ…?
அடுத்த அத்தியாயத்தில் காண்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!