Skip to content
Post Views: 1,010
“என்னாச்சு” என்றாள்..
“இப்ப என்ன சொன்ன ரதி ?”..
Advertisement
” நானா”? என்றவள் பின்பு யோசித்து,, “மெதுவா போகச் சொன்னேன்” என்றாள்..
” இல்லை என்னை என்ன சொல்லிக் கூப்பிட்ட சொல்லு” என்றதும்…
Advertisement
Advertisement
நம்ம என்ன சொல்லி கூப்பிட்டோம் இவரை,,என்று யோசித்தவள் பின்பு ஐ யோ மனதில் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டோமே என்று அவள் குனிந்து கொள்ள..
“மறுபடியும் சொல்லு ரதி” என்றார் உலகநாதன்..
Advertisement
” அது வாய் தவறி வந்துடுச்சு, நம்ம வீட்டுல எல்லாரும் அவங்க கணவரை அப்படித்தானே கூப்பிடுவாங்க”. என்றாள் மெல்லிய குரலில்..
” அவங்கன்னா யாரு ரதி சொல்லேன்” என்றார்..
“அது.. அப்படி கூப்பிடறது நம்ம பழக்கம் தானே,” என்றாள்..
“என்ன பழக்கம் “?…
இவர் விட மாட்டார் போலவே என்று மனதில் புலம்பியவள்…
“அது நம்ம பக்கம், அவங்க கணவரை மச்சான்னு தான் கூப்பிடுவாங்க”.. என்றாள்…
“எங்க அம்மா என் அப்பாவை மாமான்னு தான் கூப்பிடுவாங்க,, நீ மச்சான்னு சொன்னதும் , எனக்கு உள்ள என்னவோ ஆகிடுச்சு, இன்னொரு வாட்டி மச்சான்னு கூப்பிடேன் ரதி'”.என்று உலகநாதன் கெஞ்ச..
“மாட்டேன்” என்றாள்..
உலகநாதனுக்கு சிரிப்பு அந்த மச்சான் என்ற வார்த்தையில் எத்தனை உரிமை எத்தனை நேசம் காதல் அதைவிட மச்சான் என்ற வார்த்தையில் வேறு ஏதோ ஒன்று இருப்பது போல தோன்ற..
“சொல்லேன்” என்றார்..
“சொல்ல மாட்டேன்” என்று ரதி வெட்கப்பட்டு திரும்பிக் கொள்ள..
“நீ சொல்லாமல் இருப்பதே நல்லது தான்” என்றவர் “சரி வா போலாம்” என்று செல்போன் கடைக்கு கூட்டி வந்தார்..
அவரின் பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி ஒரு அழகான பட்டன் செல்போனை வாங்கி ரதியின் கையில் ‘உலகம்’ என்று தன் பெயரை சேவ் செய்து கொடுத்தார்…
ரதி போனை வாங்க மறுக்க. “ரதி” என்று அதட்டி அவள் கையில் போனை தினித்திருந்தவர்…
” இனிமே டெய்லி நான் உனக்கு போன் பண்ணுவேன் நீ பேசணும் என்று கூறி அவளிடம் போனை தந்தவர்…
திருநெல்வேலியில் உள்ள ஒரு பழமையான சிவன் கோவிலுக்கு ரதியை அழைத்து வந்திருந்தார் உலகநாதன்..
இருவரும் ஒன்றாக கோவிலை சுற்றி வந்து சிவனை வழி பட்டு தரிசனம் முடித்து,, பிரகாரத்தில் சுத்தி வந்து எதிர் எதிரே அமர.
ரதி அமைதியாக இருந்தாள்..
உலகநாதன் தான் பேச்சை ஆரம்பித்தார் “ஆமா நீ ஏன் பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு அழுதிருந்த”
என்றார்…
“நானா” என்று அவள் நிமிர்ந்து பார்க்க..
“நீதான் உன் தலையில் பூ வைக்கிறப்போ உன் கண்ணெல்லாம் கலங்கி இருந்தது ஏன் அழுத சொல்லு” என்றதும்.
எப்படி கண்டுபிடித்தார் இவர் என்று யோசித்தவள் மெல்ல சொல்ல ஆரம்பித்தாள்.
” நான் என் ரூம்ல இருந்தேனா. என் அண்ணா வந்து என்னிடம் கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டு போனாங்க, திடீர்னு கொஞ்ச நேரத்துல ஏதோ சத்தம் கேட்டுச்சு நான் வெளியே வந்து பார்த்தா. நீங்க இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு வெளியே போயிட்டீங்க, எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியல என் பக்கத்துல இருந்தவங்க மாப்பிள்ளைக்கு ஏதோ சீர்வரிசையில் பிரச்சனை போல மாப்பிள்ளை கோச்சிக்கிட்டு வெளியே எந்திரிச்சு போயிட்டாரான்னு சொன்னாங்க..
என்னால் அதை தாங்கிக்க முடியல,, எங்க வீட்டுல முடிஞ்சத செய்வாங்க இவங்க ஏன் இப்படி சொன்னாகன்னு, அழுதுட்டு இருந்தேன் அப்புறம்தான் அண்ணி வந்து சொன்னாங்க நீங்க வரதட்சணை கேட்கக்கூடாதுன்னு சொன்னீங்கலாமே”…
உலகநாதன் “ஆமாம்” என்று தலையாட்ட..
“அப்போ உங்க நல்ல மனசு புரிஞ்சது, உங்களை பிடிச்சது, உங்களை தப்பா நெனச்சுட்டேன்னு அதுக்கும் அழுகை தான் வந்தது, எங்க அண்ணி வந்து சொன்னாங்க இவ்வளவு நல்லவர் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் ரதின்னு”…
“நீ கொடுத்து வச்சு இருக்கீயோ இல்லையோ! நான் ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கேன் உன்ன மாதிரி ஒரு தேவதை பொண்ணை கல்யாணம் பண்ணுறதுக்கு, அழகா இருந்தா சில பேருக்கு கொஞ்சம் திமிர், ஆணவம், அலச்சியம், நான் என்ற கர்வம் சிலருக்கு இருக்கும்,, ஆனா என் ரதிக்கு அழகு, படிப்பு, வசதி, வேலை எல்லாம் இருந்தும், உன் அமைதியான பேச்சு, அலைபாயாத கண், பொறுமையான நடை, பாவனை, உன் அண்ணன் பையனை தாய் போல பாத்துக்குற உன்ன மாதிரி குணம் கொண்ட பெண்கள் எல்லாம் இப்போ கிடையாது ரதி, இந்த அழகான ரதி பெண்ணை கடவுள் என்னை பாத்துக்க சொல்லி அனுப்பி வச்சு இருக்காரு,, அவளை கலங்காம பாத்துகிறது தான் என்னோட வேலை”.. என்றதும்..
ரதியோ உலகநாதன் பேசுவதை கண்சிமிட்டாமல் அவன் பேசியதை உள்வாங்கி கொண்டு பார்த்திருக்க,.
“ரொம்ப பேசுறேனா, டைம் ஆச்சு வா” என்றவர்.. ரதிக்கு வரும் வழியில் பூ வாங்கி தலையில் வைத்து கொள்ள சொன்னவர்..
உணவு வாங்கி உண்ண வைத்து வீட்டில் வாசலில் கொண்டு வந்து பைக்கை நிறுத்த.
ரதி அவரின் முகத்தையே பார்க்க..
“நாளைக்கு நான் ஸ்கூல் வரமாட்டேன் தேடாத” என்று சொல்லி விட்டு செல்ல..
ரதிக்கு அம்மா எங்கே திட்டுவார்களோ என்று பயந்து கொண்டே வீட்டில் உள்ளே வர.. அனைவரும் கல்யாணம் பத்திரிக்கையை குலதெய்வம் கோயிலுக்கு வைக்க சென்று இருப்பதால் வீடு அமைதியாக இருக்க, ரதிக்கு அப்பாட என்றிருந்தது..
சரியாக 9 மணிக்கு ரதியின் போன் ஒலித்தது,, ரதி போனை எடுத்துக் கொண்டு அவள் அறைக்கு வந்து மெதுவாக “ஹலோ” என்று பேச..
” ஹாய் பொண்டாட்டி சாப்டியா? ” என்றார் உலகநாதன்..
” சாப்பிட்டேன் மச்சான்,, அது என்ன கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே என்னை பொண்டாட்டி சொல்றீங்க”..
” இன்னும் பத்து நாள்ல நீ என் பொண்டாட்டி ஆக போற தானே, அப்புறம் பொண்டாட்டியின்னு கூப்பிட்டா என்ன தப்பு”..என்றதும்
ரதி அமைதியாக இருக்க..
“சரி உன்னை எப்படி கூப்பிடனுமுன்னு சொல்லு அப்படியே கூப்பிடுறேன்” என்று உலகநாதன் கேட்டதும்..
“உங்க இஷ்டம் என்றாள் ரதி”.
“நாளைக்கு காலையில உன்னை பார்க்க வர முடியாது ரதி பத்திரிக்கை பிரிண்ட் ஆகி வருது, குலதெய்வம் கோவிலுக்கு போகணும் அதனால் நான் வரமாட்டேன். என்னை தேடக்கூடாது சரியா” என்றதும்.
“அப்போ ஈவ்னிங் வருவீங்களா” என்று ரதி கேட்டதும்..
“நான் கண்டிப்பா வரணுமா ரதி” என்று உலகநாதன் கேட்க..
“பரவாயில்ல வேலை இருந்தால் அதை பாருங்கள்” என்றாள்.
உலகநாதன் நீண்ட நேரம் ரதியிடம் போன் பேசிவிட்டே போனை வைத்தார்..
காலையில் ரதியின் அண்ணன் பைக்கில் வந்து ரதியை ஸ்கூலில் விட்டு செல்ல..
சாயங்காலம் உலகநாதன் வருவதால், பள்ளியில் உள்ள ஆபிஸ் வேலைகளை ரதி வேகமாக பார்த்துக் கொண்டிருக்க,சவிதா ரதியிடம் வந்து “ரதிக்கா ரஜினிகாந்த் வந்திருக்காரு, ஆபிஸ் ரூம்பில் பிரின்ஸ் ப்பல்லிடம் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார்” என்று கூற.
“என்ன” என்பது போல் சவித்தாவை பார்த்தவள்,, அவள் பார்த்துக்கொண்டிருந்த வேலையை அப்படியே எடுத்த வைத்து விட்டு பிரின்ஸ்பல் ரூம் வர..
உலகாநாதன் பிரின்ஸ் ப்பல்லிடம் கைகொடுத்து, நன்றி கூறுவதை பார்த்து நின்றாள் ரதி..
ப்பிரின்ஸ்பல் ரதியை பார்த்து “உள்ளே வா ரதி” என்று கூற..
உள்ளே வந்தவளை பார்த்து “வாழ்த்துக்கள்மா ரதி” என்றதும்.. அவர் பாதம் பணிந்து கைகூப்பியவளை..
” நல்லா இருமா,” என்றவர்..
“என் பிரெண்ட் சென்னையில ஸ்கூல் வச்சு இருக்கான், அவன்கிட்ட சொல்லி உனக்கு அங்கே டீச்சர் வேலைக்கு சொல்லிட்டேன்” என்று கூற..
“நன்றி சார்” என்று ரதி கூற..
“எனக்கு எதுக்குமா நன்றி, எல்லாம் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறவர் பண்ணினது,, இப்போ தான் என் பிரெண்ட் போன் போட்டான், அவன் ஸ்கூலிலே உனக்கு வேலை ரெடி, நீ சென்னை போனதும் வேலைக்கு சேர்ந்துக்கலாம்” என்றார்..
“உலகநாதன் தான் கிளம்புறேன் சார்” என்று கிளம்பியவர்,, “ரதியை கொஞ்சம் கோவில் வர கூட்டிட்டு போலாமா? ” என்று அனுமதி கேட்க.
“தாரலாம கூட்டிட்டு போங்க” என்றார்”
ரதி முளித்து நிற்க..
” இதெல்லாம் இப்போ ஒன்னுமே இல்லை நீ போமா” என்று பிரின்ஸ்ப்பல் சொல்ல,,
உலகநாதன் பின்னாடி வந்தவள்..
“நான் வரமாட்டேன்” என்று கூற..
“போய் உன் பேக் எடுத்துட்டு வா”..
என்று உலகநாதன் கூற..
“நான் வர்லென்னு சொன்னேன் ,, ஸ்கூல் டைமில் வர முடியாது “…
“ரதி சொல்லுறது கேளு போய் உன் பேக் எடுத்துட்டு வா” என்று கூற..
சவித்தா ரதியின் பேக்கை கொண்டு வந்து உலகநாதனிடம் தந்து விட்டு. கட்டை விரலை காட்டி சிரித்து விட்டு செல்ல…
“எல்லாம் பிளான் பண்ணி பண்ணுறீங்களா,, இப்போ நான் வரலை ஈவ்னிங் வாங்க பேசலாம் ” என்று ரதி கூற.
உலகநாதன் பைக்கில் ஏறி பைக்கை ஸ்டாட் பண்ணி ஏறு என்று பைக்கை முறுக்க..
அவரின் பைக் சத்தம் கேட்டு சில ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியே வந்து பார்த்து விட்டு செல்ல,
” ஐயோ மானத்தை வாங்குறாரே” என்றவள்.. புலம்பிய படியே வேகமாக பைக்கில் ஏறி அமர்ந்தாள்..
error: Content is protected !!