Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல்

தென்றல் -16

 

இனியா…. ஆ…. என்று சுசிலா கத்த கீழே இருந்த அனைவரும் மேலே சுசிலா அம்மாவின் அறையை நோக்கி ஓடினர்.



Advertisement

விக்ரம் மேலே செல்லவில்லை. மேலும் அவன் மனம் நொந்துப்போனது.

பின்னோக்கி நடந்தவன் மீண்டும் சோஃபாவில் சென்று விரக்தியுடன் அமர்ந்தான் விக்ரம்.

சுசிலா அம்மா கதவைத் திறங்க.என்ன ஆச்சு உங்களுக்கு நான் தான் உங்க இனியா வந்து இருக்கேன் என்றாள் சிந்து.

Advertisement

கூச்சல் சத்தம் சிந்துவின் குரல் கேட்டு சாந்தம் அடைந்தது.

Advertisement

சற்று நிதானமாய்…. சுசிலா அம்மா.. அதான் நான் வந்துட்டேன்ல கதவை திறங்க அம்மா.

இப்போ நீங்க கதவைத் திறக்கல அப்பறம் நான் பேசமாட்டேன். நான் இதோ இப்பொழுதே வீட்டுக்கு கிளம்பறேன் என்று நகர்ந்தாள் சிந்து.

கதவு திறக்கப்பட்டது.

Advertisement

மேலே நடப்பது விக்ரமின் காதில் நன்கு விழுந்தது.

அந்த குரல்…. எல்லாவற்றையும் சாந்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

வீசும் தென்றல் அவள் குரலோடு சேர கீதமென அவன் செவியை அடைந்தது.

அவன் புண்பட்ட மனதிற்கு அது ஆறுதலாய் வருடி கொடுத்தது.

கண்களை லயித்து மூடினான். அவள் குரலை ஆழ்ந்து உயிரில் உணர மற்ற அனைத்தையும் தவிர்த்தான்.

கதவு திறந்த சுசிலா சிந்துவைக் கண்டதும் ஓடி வந்து அணைத்துக்கொண்டார்.

“இனியா நீ ஏன் என்ன விட்டு போன. நான் இனி அப்படி பண்ணமாட்டேன் என்ன மன்னிச்சிடு என்ன மன்னிச்சுடு” என்று கெஞ்சி அழுதார்.

“சரி அம்மா…. அதான் நான் வந்துட்டேன்ல அப்பறம் எதற்காக இப்படி அழறீங்க.

மொதல்ல கண்ணை துடைங்க”என்றாள் சிந்து.

“ஹ்ம்ம்…. சரி இனியா நீ சொல்லறதை எல்லாம் நான் கேக்குறேன். ஆனா நீ என்ன விட்டு போகக்கூடாது” என்றார் சிறு குழந்தையைப் போல்.

“ஹ்ம்ம்…. சரிமா நான் போகமாட்டேன் போதுமா?”என்றாள்.

“இல்லை நான் நம்பமாட்டேன் நீ சத்தியம் பண்ணு இனியா” என்றார் அவர்.

சிந்துவும், ரஞ்சிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“என்னடி பண்றது இப்போ” என்று ரஞ்சிதாவிடம் ரகசியமாய் கேட்டாள் சிந்து.

“இப்ச்…பார்த்துக்கலாம் ஒரு சத்தியம் தானே.

இதுல என்ன பெருசா நடந்திடப் போகுது” என்று கண்ணால் சைகை காட்ட,

“ஹ்ம்ம்…சரிமா நான் எப்போதும் உங்களை விட்டு போகமாட்டேன் போதுமா இது சத்தியம்” என்றாள்.

சுசிலாவின் கண்களில் மகிழ்ச்சி பூத்தது.

விக்ரமின் செவியிலும் அவள் சத்தியத்தின் ஒலி விழவேச் செய்தது.

ஏதோ ஒரு வித நிம்மதி அவன் மனதில் பரவியது.

ரஞ்சிதாவுடன் தன் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையை கற்பனையில் வாழ்ந்தே விட்டான் விக்ரம்.

“சரி சரி…வாங்க மொதல்ல சாப்பிடுங்க” என்று அறைக்கு அழைத்து சென்றாள் சிந்து.

ரஞ்சிதாவிற்கு இனி இந்த சூழ்நிலையை சிந்து எப்படி சமாளிக்க போகிறாள் என்று நினைத்தாலே கதி கலங்கியது.

மெல்ல மேலிருந்து கீழே விக்ரமை எட்டிப்பார்த்தாள் ரஞ்சிதா.

அதே சமயம் மூடி கொண்டு இருந்த கண்களை திறந்தான் விக்ரம்.

இருவரின் விழிகளும் ஒன்றை ஒன்றுப் பார்த்துக்கொண்டது.

ரஞ்சிதாவோ அவனை சமாளிக்கும் விதமாக ஈ…. என்று அசடு வழியச் சிரித்தாள்.

அவன் தன் இதழை மெல்ல விரித்தான்.

“ஆத்தாடி…. இது என்னடா சோதனை” என்று அறைக்குள்ளே ஓடியே விட்டாள் ரஞ்சி.

சுசிலா அம்மாவிற்கு சாதத்தை பிசைந்து ஊட்டியப்படியே அந்த பாடலைப் பாடினாள் சிந்து.”அட போங்கடா நான் தூங்குறேன். காலைல ஆபீஸ் வேற போகணும்”என்ற ரஞ்சிதா படுக்கையில் ஒரு ஓரமாக படுத்து உறங்கினாள்.

சிந்துவிற்கு சிரிப்புத்தான் வந்தது.

“சரி சிந்து அப்போ நானும் கொஞ்சம் போய் படுக்கறேன்” என்றார் கீதா.

பாட்டை நிறுத்தாமல் தலையை மட்டும் அசைத்து சம்மதம் என்றாள் சிந்து.

சில நிமிடங்களில் சுசிலா சிந்துவின் மடியில் படுத்து உறங்கினார்.

அவர் உறக்கம் கலையக்கூடாது என்பதற்காக அவள் மறந்தும் தன் உடலை அசைக்கவில்லை.

விக்ரம் எப்போதோ சிந்துவின் பாட்டை கேட்டு உறங்கி இருந்தான்.

அந்த வீடே இப்போது சிந்துவின் வரவால் நிம்மதியை அடைந்தது. ஆனால் சிந்துவோ கண்கள் நிறைந்த கண்ணீருடன் பழைய சம்பவங்களை நினைத்து வருந்திக்கொண்டு இருந்தாள்.

அழகாய் வானம் புலரத் துவங்கியது.

விடிய விடிய உறங்காமல் விழித்து இருந்ததில் சிந்துவின் கண்கள் சிவந்து இருந்தது.

கண்களை திறக்கமுடியாமல் எரிச்சல் வேறு.

நீண்ட நேரம் ஆசையாமல் அமர்ந்து இருந்ததால் கால்கள் சூறை ஓடி இருந்தது.

சுசிலா எழுந்து சிந்துவை பார்த்து சிரித்தார்.

காலையில் எழுந்த ஆதவ் சிந்துவை பார்ப்பதற்காக தான் வளருக்கும் ரோஜாவிற்கு நீரைப் பாய்ச்சியப்படி

அவள் வீட்டை எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவன் அருகே நெருங்கிய அவன் அன்னை “என்னப்பா சரியா தெரியலையோ போ போய் மேல போய் பாரு. அப்போ தான் ஒழுங்காத் தெரியும்”என்றிட சுதாரித்தவன், அம்மா என்னமா நீ நான் ஏன் அந்த பொண்ணுங்கள பார்க்க போறேன்.

நான் சும்மா ஏதேர்ச்சியாத் தான் பார்த்தேன்” என்று கூறி சமாளித்தான் ஆதவ்.

ஹும்…நம்பிட்டேண்டா மகனே என்று கிண்டல் அடித்தார் ஆதவின் அன்னை.

தன் குத்து வெளிப்பட்டுவிட்டதால் சற்றே சங்கோச்சதுடன் நெளிந்தப்படி சிரித்தான்.

அவரும் தன் மகனைக் கண்டு அன்போடு சிரித்தார்.

அச்சமயம் ஆதவின் தந்தை அங்கே வந்தார்.

அவரை கண்டதும் “ஹும்…கொஞ்சம் நேரம் கூட நிம்மதியா இருக்க முடியல இந்த வீட்டில” என்று கோபத்தோடு அவரை பார்த்து முறைத்தபடி சென்றான் ஆதவ்.

வருத்ததோடு…”என்ன பாக்கியம் இன்னும் என் மேல ஆதவிற்கு கோபம் குறையலையா” என்றார் சேகர்.

“விடுங்க, உங்களுக்கு அவனை பற்றி தெரியாதா?

எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகிவிடும்”என்றார் பாக்கியம்.

“இன்னும் எத்தனை வருசத்துக்கு இந்த தண்டனையோ என்று பெருமூச்சு விட்டார்” சேகர்.

 

இரவு முழுவதும் உறங்காமல் விழித்து இருந்ததால் சிந்துவிற்கு உறக்கம் தள்ளியது.

படுக்கையில் இருந்து எழுந்த “ரஞ்சிதா ஏய்…என்ன டி இன்னுமா நீ தூங்கல?”என்றாள் வியப்புடன்.

“ஆமாம் ரஞ்சி நான் இரவு முழுவதும் உறங்கவே இல்லை.

எங்கே நான் உறங்கினால் அம்மாவின் உறக்கம் கலைந்து விடுமோ” என்று தான் என்றதும், “அடிப்பைத்தியமே இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணு” என்று சலித்துக்கொண்டு முதலில் நீ போய் கொஞ்சம் நேரம் தூங்கு என்றாள் ரஞ்சி.

“அம்மா…. “என்று ஆலோசனையாய் சுசிலாவை திரும்பிப் பார்க்க, “நான் அவங்களை பார்த்துக்கறேன் நீ போய் தூங்கு” என்றாள் அக்கறையாய்.

“ஹ்ம்ம்…சரி டி”என்றவள் அங்கு இருந்த சோஃபாவில் படுத்து உறங்கினாள்.

அவளை காணும் போது ரஞ்சிதாவிற்கு வருத்தமாக இருந்தது.

அறைக்கதவு தட்டப்பட ரஞ்சிதா சென்று திறந்தாள்.

எதிரே விக்ரம் நின்று இருந்தான். தடுமாற்றதுடன் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.

“என்ன ரஞ்சிதா அம்மா இப்போ எப்படி இருக்காங்க”.

சிறிய புன்னகையோடு சுசிலா அம்மாவை பார்த்தாள் ரஞ்சிதா.அவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தார்.

“இனி எனக்கு அம்மாவைப் பற்றிய பயமில்லை ரஞ்சிதா.

அதான் அம்மா பக்கத்துல நீங்க இருக்கீங்களே” என்றான் விக்ரம் நிம்மதியுடன்.

அவளுக்கு தூக்கி வாரிப்போட்டாது.

வாயை திறந்தாள் மாட்டிக்கொள்வாள் அல்லவா. அமைதியாக சிரித்து சமாளித்தாள்.

“இப்போ நான் உள்ளே வரலாமா” என்றான்.

அதற்கும் சிறு புன்னகையோடு வழியில் இருந்து நகர்ந்தாள்.

அறைக்குள் நுழைந்தவன் “நைட் புல்லா தூங்காம அம்மாவை பார்த்துகிட்டீங்க போல் இருக்கு” என்றான். அதற்கும் அவள் மொழி பேசவில்லை புன்னகையே பேசியது.

“ஹ்ம்ம்…. அண்ட் உங்க வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கு. அந்த குரல்ல ஒரு இன்னசன்ட், ஆழ்ந்த வலி, ஏக்கம், இரக்கம் இப்படி எல்லாம் இருக்கு.

உங்க குரலில் நான் என்னையே மறந்து விட்டேன் ரஞ்சிதா” என்றான் விக்ரம்.

“அடேய்…ஏன்டா இப்படி என்ன பாடாப்படுத்துற?

உன் ஆளு நான் இல்லடா” என்று மனதிற்குள் புலம்பி வெளியே அதைக்காட்டிக்கொள்ளாமல் சிரித்தாள்.

“என்ன ரஞ்சிதா நான் இவ்ளோ பேசுறேன் ஆனா நீங்க வந்ததில் இருந்து ஒரு வார்த்தைக்கூட பேசாம இப்படி உங்கள் புன்னகையாலே பதில் சொல்றிங்களே?

ஏன் உங்கள் குரல் கேட்க எனக்கு உரிமை இல்லையா?”என்றான் ஏக்க குரலில்.

“ஆத்தாடி…. இவர் சிந்துவோட குரலை லவ் பண்றாரு போலே இருக்கே.

இது என்னடா காதலுக்கு சோதனை.

இப்போ எப்படி இவர் கிட்ட இருந்து தப்பிப்பேன்”என்று எச்சிலை விழுங்கினாள்.

ஏதேர்ச்சியாய் திரும்ப சோஃபாவில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்த சிந்துவை பார்த்துவிட்டான் விக்ரம்.

அவளை கண்டதும் அவன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.

கண்களில் அவள் மீதான வெறுப்பு அப்பட்டமாய் தெரிந்தது.

ரஞ்சிதாவை நோக்கி “சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க ரஞ்சிதா. இதுமாதிரி பொண்ணுங்க கிட்ட எல்லாம் நட்பு வச்சிக்காதீங்க ரொம்ப மோசமானவங்க, அவங்க சுயநலத்துக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள்.

மற்றவர்கள் சூழ்நிலை புரியாமல் நடந்துக்குவாங்க.

சோ நான் என்ன சொல்ல வறேனா அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மைண்ட்டெண்ட் பண்ணுங்க” என்றான்.

ரஞ்சிக்கு மிகுந்த வருத்தமாக போனது.

ஆனால் என்ன செய்வது சிந்துவின் குடும்ப சூழ்நிலைக்காக அமைதிக்காத்தாள் ரஞ்சிதா.

“விடிய விடிய விழித்து இருந்து அம்மாவை பார்த்துகிட்டது நீங்க?

ஆனா பாருங்க ஏதோ அந்த பொண்ணு பார்த்துகிட்ட மாதிரி டயர்ட்டா தூங்கிக்கிட்டு இருக்கு. இவங்களை எல்லாம் என்ன சொல்ல” என்று சலிப்புடன் கூறியவன் “சரி ரஞ்சிதா நீங்க அம்மாவை இங்கே இருந்து பார்த்துக்கோங்க நான் ஆபீஸ் கிளம்பறேன். இன்னைக்கு நிறைய ஒர்க் இருக்கு” என்றான்.

“ஹ்ம்ம்…”என்று தலையை அசைத்தாள்.

“போயிட்டு வாங்கணு கூட வாய் திறந்து சொல்ல மாட்டிங்களா ரஞ்சிதா” என்றான்.

“ஆத்தாடி…. இப்போ என்ன பண்றது”, என்று விழித்தாள்.

“எதற்காக ரஞ்சிதா இந்த மௌனம். ஃபோன்ல எவ்ளோ ஸ்வீட்டா பேசறீங்க. ஆனா நேருல பார்த்தால் மட்டும் ஏன் இப்படி மௌனமா இருந்து என்ன கொல்றிங்க” என்றான் வேதனையுடன்.

ரஞ்சிதா அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்தாள் ஒரு நிமிடம் தன்னையே மறந்தாள்.

ஆம் அவன் கண்களில் அத்தனை காதல்.

கண்கள் இமைக்காமல் அவன் பார்வையால் கைது செய்தான்.ரஞ்சிதாவின் மனம் தடுமாறியது என்னவோ உண்மைதான்.

ஆ…. வென்று சிந்து உறக்கத்தில் திடீர் என்று கத்தி எழுந்தாள்.

தென்றல் மீண்டும் வீசும்…..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!