Skip to content
Post Views: 951
“மச்சான் விடுங்க” என்று ரதி நெலியவும் தான் அவளை பிடித்து அணைத்து இருப்பதை உணர்ந்தவர்,, சட்டென்று அவளிடம் இருந்து பிரிந்தவர்,, “சாரிடா” என்றவர் அவளிடம் பேசமுடியாமல் தயங்கி நிற்க…
இருவருக்கு சிரிப்பு மகிழ்ச்சி மனது லேசாக இருக்க.. தன்னை பார்த்து வெட்கபட்டு நின்றவளை “டைம் ஆச்சு வா ரதி” என்று அவளை வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து விட்டவர்…
Advertisement
” நாளைக்கு உனக்கு முகூர்த்த பட்டு எடுக்க போறோம் ரெடியா இரு,, நான் கார் எடுத்துட்டு வரேன் உங்க வீட்ல இருந்து ஒரு மூணு பேரு, இல்ல நாலு பேர் ரெடியா இருக்க சொல்லு , புடவை எடுக்க போகலாம்” என்று உலகநாதன் கூறி சென்றார்..
Advertisement
” சரி ” என்றவள் அவளின் தாயிடம் கூற..
Advertisement
அவரும் “சரி” என்று “நாளை நானும், பார்வதி, நீ மூன்று பேரும் போகலாம்” என்று முடிவானது.
Advertisement
இரவே பார்வதிக்கு உடம்பு முடியாமல் போக சிவப்பிரகாஷ் அவர் மாமியார் ஊருக்கு பார்வதியை அழைத்துச் சென்றிருந்தார்.
மறு நாள் காலையில் உலகநாதன் கார் எடுத்து கொண்டு வர. ரதியும் அவளின் அம்மாவும் அவர்களோடு புடவை எடுக்க கிளம்பினார்கள்..
உலகநாதன் வீட்டிலிருந்து உலக நாதனின் அம்மா, அவர் சித்தி, அத்தை என்று நான்கு பேர் வந்திருந்தனர்..
அனைவரும் சேர்ந்து திருநெல்வேலியில் உள்ள தாஜ்மஹால் பட்டு சென்டருக்கு புடவை எடுக்க சென்றனர்,
முதலில் ரதிக்கு தான் புடவை எடுத்தனர், உலகநாதன் அமைதியாக ஒரு சேரில் சற்று தள்ளி அமர்ந்து கொண்டார்..
பெண்கள் அனைவரும் சேர்ந்து ரதிக்கு அரக்கு வண்ண பட்டுப்புடவை முகூர்த்ததிற்கு தேர்ந்தெடுத்தனர்.. பின்பு
நிச்சயதார்த்தத்துக்கு கரும்பு பச்சை நிறத்தில் எடுத்திருந்தனர்..
ரதிக்கு திருமணத்துக்கு அனைவரும் எடுக்கும் அந்த மெருன் கலர் வண்ண பட்டுப் புடவை அவ்வளவாக பிடிக்கவில்லை,,
புடவையை தன் தோளில் வைத்து “இத எடுத்தாச்சா ,? இதையே எடுத்துக்கவா?” என்று அவள் தோளில் மீது போட்டுக் கொண்டு கண்ணாடியில் நின்று அவள் பிம்பத்தை பார்க்க..
புடவை அவளுக்கு அழகாய் பொருந்தி இருந்தது,, ஆனால் அவளுக்கு ஏனோ அந்த வண்ணபுடவையில் விருப்பம் இல்லை,, அவர் பக்கம் நடக்கும் அனைத்து திருமணத்திலும் கல்யாணம் பெண்ணிற்கு அரக்கு வண்ண கலரிலே புடவைகள் எடுத்திருக்க, தனக்கு வெற வண்ணத்தில் பார்க்கலாம் என்று அவள் நினைத்திருந்தாள்..
வசந்தா “அரக்கு கலர் தான் உனக்கு நல்லா இருக்கும் ” என்று ரதியிடம் இந்த புடவையை தரும் போது என்ன செய்ய முடியும்,, “சரி” என்றவள் அப்புடவையை தன் மேலே போட்டு கண்ணாடி பார்த்து நிற்க..
பின்னாடி வந்து நின்ற உலகநாதன் “உனக்கு இந்த கலர் பிடிக்கலையா ” என்றார்.
ரதி சொல்ல தயங்கியவள், பின்பு அவள் மனதில் உள்ளதை சொல்ல..
உலகநாதன் தன் தாய் வசந்தாவிடம் “அம்மா இந்த மெருன் கலர் பட்டு புடவை தான் எடுக்கணுமா இல்ல வேற கலர் புடவை எடுக்கலாமா?” என்று கேட்க..
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை உலகம், மருமகளுக்கு என்ன விருப்பமோ அந்த கலரிலே எடுக்கலாம் ” என்று கூறி சிரித்துக்கொண்டார்..
“நீ வா” என்று அவளை இழுத்துக் கொண்டு “உனக்கு பிடிச்சதை எடு” என்றார் உலகநாதன்….
அவளோ வசந்தா ஏதாவது தன்னை தப்பாக நினைத்து விடுவார் என்று அவரை பார்க்க.. “அம்மா எல்லாம் ஒன்னு சொல்ல மாட்டாங்க வா” என்றவர்..
ரதிக்கு புடவை எடுக்க உதவி செய்தார் உலகநாதன்,, ரதி அவளுக்கு பிடித்த பிங் நிறத்தில் தாமரை கொடி புடவை முழுவதிலும் படர்ந்து இருப்பது போல் சின்ன பாடர் வைத்த புடவையை தேர்வு செய்தவள் அதை தன் தோளில் வைத்து உலகநாதனிடம் “நல்லா இருக்கா” என்று கேட்க..
அந்த பிங் நிறம் அவள் நிறத்தோடு நிறமாக சேர்ந்து இருப்பதை போல் அழகாய் ஒரு தாமரை பூ போல் தன் முன்னாடி நின்றவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை, தன் கண்ணிரெண்டிலும் அவள் பிம்பத்தை நிறப்பிக்கொண்டவர்,
அவளை பார்த்து ரசித்தபடியே உலகநாதன் தலையாட்ட.
இருவரும் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி,சந்தோஷம் இன்னும் நிச்சயத்திற்கு, துணை பட்டு என்று அவளுக்கு பிடித்த கலரிலே புடவை அனைத்தும் எடுத்திருந்தாள்..
மகளின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை பார்த்த ரதிதேவியின் அம்மாவுக்கு நிறைவாக இருந்தது.. முதலில் மெருன் கலர் வண்ண புடவை எடுத்த போது வேண்டாம் வெறுப்பாக மகள் முகம் சுணங்குவதை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு..
மருமகன் ரதிக்கு இவ்வளவு பார்த்து பொறுமையாக புடவை தேர்வு செய்து கொடுத்ததை பார்த்தவருக்கு மனது நிறைந்திருந்தது..
பெரியவர்கள் அவர்களுக்கு புடவைகள் எடுத்து முடித்து இருக்க…
அனைவரையும் அழைத்துக் கொண்டு உலகநாதன் காரில் கிளம்பி இருந்தார், முதலில் ரதியின் வீட்டில் அவர்களை இறக்கி விட்டு பின்பு அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தனர்..
இரவு ரதியும், உலகநாதனும் வெகு நேரம் போன் பேசியபடி இருந்தனர்.. “நாளைக்கு தான் நான் பள்ளிக்குப் போகும் கடைசி நாள்” என்று ரதி கூற..
” அப்போ நான் மதியமே வந்துவிடுகிறேன். நீ வேலையை முடிச்சிட்டு ரெடியா இரு ரதி” என்று உலகநாதன் கூற.
“அதெல்லாம் முடியாது இன்னும் ஒரு வாரம் தானே கல்யாணத்துக்கு இருக்கு, கல்யாணம் முடிஞ்ச உடனே உங்க கூட தானே இருக்க போறேன் வெளியே எல்லாம் போக வேண்டாமே” என்று ரதி கூற..
” நீ வர்ற வரணும்” என்று போனை வைத்திருந்தார் உலகநாதன்..
ரதி சிரித்துக் கொண்டே தூங்கியவள்.. மறுநாள் பள்ளிக்கு கிளம்பி வேகமாக சென்றாள்…
அவள் முடித்துக் கொடுக்க வேண்டிய வேலைகளை அனைத்தும் வேகமாக முடித்து விட்டு,, உலகநாதனுக்காக காத்திருந்தாள்,,
சரியாக மத்தியானம் ரதியை அழைத்துச் செல்ல கார் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார் உலகநாதன்..
ரதி பிரின்சிபல்ளோடு பேசிக் கொண்டிருந்தாள்,, அவர் ரதிக்கு வாழ்த்து சொல்லி விடை கொடுக்க..
ரதி உலகநாதனை பார்த்த படியே வந்தாள்..
அவளுக்காக காத்திருந்தவர் கார் கதவை திறந்து விட.. இன்று ரதி கிளி பச்சை கலர் புடவை உடுத்தி இருக்க,.. அவளை ஒரு ரசனை பார்வை பார்த்தவர்..
காரை இயக்க….
கார் திருநெல்வேலி டவுன் பக்கத்தில் உள்ள ஒரு பெரிய பேன்சி ஸ்டோரில் வந்து நின்றது..
ரதி “இங்கே எதற்கு” என்று கேட்க….
“அம்மா உனக்கு கல்யாண வளையல் வாங்கி தர சொன்னாங்க, எனக்கு தான் கூட பிறந்தவங்க யாருமே இல்லையே அதனால,, நானே உனக்கு வாங்கி தரேன் வா” என்று அந்த கடைக்கு அழைத்துச் சென்றார்..
உலகநாதன் முறைப்படி கல்யாண பெண்ணிற்கு, கல்யாணத்திற்க்கு ஒரு நாள் முன்பு,உலகநாதன் கூட பிறந்த தங்கை வளையல் அணிவிப்பது வழக்கம் அவருக்கு தான் கூட பிறந்தவர்கள் யாருமில்லை என்பதால் அவரே அவளுக்கு வளையல் வாங்கி கொடுக்க வந்திருந்தார்..
உலகநாதன் அவள் புடவைக்கு ஏற்றவாறு கல் வைத்த, விலை அதிகம் உள்ள கொண்ட வளையல்களை வாங்கித் தர..
ரதிக்கு இப்படி கூட வளையல் இருக்கிறதா என்று வளையல்களை தொட்டு பார்த்தாள்..
அவர்கள் பக்க வழக்கப்படி கல்யாண வளையல் என்று கோல்டன் கலர் வளையல்களை மணபெண்ணிற்கு அணிவிப்பது வழக்கம்….
இன்று இத்தனை வேலைப்பாடுகள் கொண்ட வளையல்களை பார்த்தவளுக்கு தன்னவனை மெச்சிக்கொண்டாள்.
உலகநாதன் ரதி எடுத்த அனைத்து புடவைகளுக்கும் மேச்சாக செட்டு செட்டாக வளையல் வாங்கி அதை.
ஒரு பெட்டியை வைத்து அவள் கையில் கொடுத்தார்…
தன் கையில் வளையல் பெட்டியை வைத்திருந்தவளுக்கு சொல்ல முடியாத பெரு மகிழ்ச்சி..
அந்த கடையில் வேலை செய்யும் ஒரு பெண் ரதியை பார்த்து,, “உங்க கை சும்மா தானே இருக்கு..
இந்த புடவைக்கு ஏத்த மாதிரி வளையல் தரட்டுமா” என்று கேட்க..
அப்போது உலகநாதன் ரதி கையை பார்த்தார்,ஒரு கையில் வாச்சும், இன்னொரு கையில் தங்க வளையல் ஒன்று மட்டுமே அணிந்திருக்க….
கடைக்கார பெண்ணை பார்த்து “இந்த புடவைக்கு மேட்ச்சாக வளையல் எடுத்துக் கொடுங்க” என்று சொல்ல..
அப்பெண் இதுக்காக காத்திருந்தது போல பச்சை வண்ண கலரில் கல்பதித்த அழகான வளையல்களை எடுத்து நீட்ட..
“நானே போட்டு விடுவேன்” என்றவர்,, அவளின் வாச்சையும், வளையலையும் அவரே கழட்டி. ரதிக்கு கைநிறையா வளையல்களை அணிவித்து விட.. ரதியின் உடல் சிலிர்த்தது..
ரதியின் உணர்வை கட்டு படுத்தவே முடியவில்லை….
வளையல் அணிவித்ததும்,, உலகநாதனின் கையோடு தன் கையைகோர்த்துக்கொண்டவள். ,… உலகநாதனை நிமிர்ந்து பார்த்து,,
“நீங்க இவ்வளவு நாள் எங்கே இருந்தீங்க” என்றாள் அவன் கண்ணை பார்த்து..
“என்ன ரதி” என்றார் அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டு..
“இப்பவே உங்க கூட வந்திரட்டுமா”.. என்றவளை பார்த்து சிரித்தவர்..
“இன்னும் ஒரு வாரம் தானடி செல்லக்குட்டி” என்றார் அவளை கொஞ்சிய படியே….
“சார் பில்” என்று கடைக்கார பெண் பில்லை நீட்டியதும், இருவரும் அவர்கள் உலகில் இருந்து வெளியே வர, பில்லை கட்டியவர் உனக்கு ஏதாவது வேணுமா ரதி என்று கேட்டு அவள் கேட்டதை வாங்கி கொடுத்து விட்டு,, இருவரும் காரில் வந்துக்கொண்டு இருக்கும் போது..
உலகநாதனின் போன் அடித்தது..
காரை பக்கத்தில் உள்ள ஒரு கொய்யா தோப்பில் நிப்பாட்டியவர் பேச ஆரம்பித்தார்..
அந்தப் பக்கம் இருந்தவர் ஏதோ சொல்ல..
“நீங்க எனக்கு கல்யாணமுன்னு சொல்லிட்டீங்கல அது போதும் அவங்க என்ன நினைச்சாலும் எனக்கு பிரச்சனையில்லை” என்று போனை வைத்திருந்தார்.
“என்னாச்சு” என்று ரதி கேட்க…
“அது நான் வேலை பார்க்குற முதலாளி பொண்ணு என் மேல ஆசைப்பட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு தொல்ல, சுத்தி சுத்தி வந்துச்சு,, அதனாலதான் உடனே உன்னை பார்த்து கல்யாணம் பண்ண நான் வந்தேன். இப்போது எனக்கு கல்யாணம்னு சொன்னா அந்த பொண்ணு நம்ப மாட்டேன்னு சொல்லிட்டு போயிடுச்சாம்” என்று சிரிக்க..
“உங்களை யாருக்குத்தான் பிடிக்காது” என்றாள் ரதி.
“எனக்கு புடிச்ச பொண்ணு என் ரதிதான்” என்றார்…
“அப்புறம் ரதி உங்க வீட்ல உனக்கு சீர்வரிசை பாத்திரம் எல்லாம் வாங்கிட்டாங்களா?” என்றார்.
“பாதி வாங்கிட்டாங்க இன்னும் பாதி வாங்கல”…
“உனக்காக வாங்குனத உன் தங்கைக்கு குடுக்க சொல்லு.. நான் என் பிரண்டு கிட்ட சொல்லி நம்ம வீட்ல எல்லாத்தையும் வாங்கி போட்டுட்டேன், நம்ம கல்யாணமான மூணாம் நாள் சென்னைக்கு போகணும், எல்லாத்தையும் இங்கிருந்து தூக்கிட்டு போக முடியாது, அதனால ஒன்னும் எடுத்துட்டு வரக்கூடாது நீ “என்றார்..
“ஏன் இப்படி சொல்றீங்க நான் ஒன்னும் கொண்டு வர வேண்டாமா, நான் எதுவும் எடுத்துட்டு வரலைன்னா, உங்க சொந்த பந்தம் ஏதாவதும் பேசமாட்டாங்களா?.
“எவன் என்ன பேசுறான்னு எனக்கு தேவையில்லை, எவனப் பற்றியும் எனக்கு கவலையும் இல்லை,, என் ரதி மட்டும் எனக்கு போதும்” என்றவரை..
இடுப்போடு கட்டிக் கொண்டாள் ரதி..
அவளின் திடீர் அணைப்பில் அதிர்ந்தவர், அவள் முகத்தைபார்த்து “என்னடா என்னாச்சு” என்றார்.. கலங்கி இருந்த ரதியின் கண்களை பார்த்து..
“என்னாச்சும்மா ஏன் கண்கலங்குற”…
” ரொம்ப பயந்து போயிருந்தேன் கல்யாணத்தைப் பற்றி, என் வருங்கால கணவரை பற்றி, நம்ம வாழ்க்கை நமக்கு எப்படி இருக்குமோ அப்படின்னு, இப்போ உங்களை பார்த்ததும் என் வாழ்க்கை எவ்வளவு அழகா அமையப்போகிறது என்று, என் கண் முன்னாடி தெரிகிறது, இன்னைக்கு என் ஸ்கூல் பிரின்சிபல், உங்களை பத்தி பெருமையா பேசுனாங்க, கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்கீங்களாம், உங்களை நல்லவங்களை பார்க்கிறது ரொம்ப ரேர்ராம்,, உங்களை மாதிரியே ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கனுமாம்,, நான்” என்றவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்..
“டேய் ரதிமா, நீ சந்தோஷத்தல கூட கண் கலங்கக்கூடாது சரியா” என்றவர் அவளின் தலைக் கோத..
அவர்கள் பக்கத்தில் ஒருவர் இளநீர் விற்றுக் கொண்டு வர..
“ஒரு இளநீர் கொடுங்க” என்ற உலகநாதன், அதை வாங்கி ரதியை பருகச் சொல்ல …
“உங்களுக்கு” என்றாள் .
“நீ குடி அப்புறம் நான் குடிச்சுக்குறேன்” என்றார்..
“இளநீர் காரர் போயிட்டாரே எப்படி குடிப்பீங்க” என்று ரதி கேட்க..
” இப்படித்தான்” என்றவர் அவள் குடித்துக் கொண்டிருக்கும் இளநீர் குடவையில் இன்னொரு ஸ்ட்ராவை உள்ளே விட்டு அவர் குடித்து காண்பிக்க…
ரதியின் முகத்தில் புன்னகை. ஒரே இளநீரில் இருவரும் நெற்றியில் முட்டிக்கொண்டு கண்ணோடு கண் கலந்து இளநீரை பருக புதிய சுவையாக இருந்தது இளநீர்..
“எவ்வளவு நாள் ஆச தெரியுமா ரதி, இன்னைக்கு அது நிறைவு ஆயிடுச்சு, செம்ம டேஸ்ட்டா இருக்குல” என்று அவளை பார்த்து சிரித்துக்கொண்டே கேட்க..
“ஆமாம்” என்று தலையாட்டி சிரித்து இருந்தாள் ரதி..
உலகநாதனின் ஒவ்வொரு செயலிலும் ரதியை ஈர்த்தார்..
ரதி அவரை தன் கண்ணெடுக்காமல் பார்க்க..
“இன்னும் ஒரு வாரத்தில் நம்மளுக்கு கல்யாணம் ரதிதேவி, இந்த அடியேன் வீட்டுக்கு வர சம்மதமா” என்று அவரின் கையை நீண்ட..
உலநாதனின் கையோடு கைகோர்த்தவள், “ரதி எப்போவோ ரெடி” என்றாள்..
இருவரும் கல்யாணம் கனவுகளோடு அவரவர் இல்லம் சென்றனர்..
ஒரு வாரம் எப்படி போனது என்றே தெரியவில்லை..
நாளை கல்யாணம் என்று இருக்க..
” மச்சான், உங்களை இப்பவே பார்க்கனும்” என்று ரதியின் அழுகுரல் போனில் கேட்டு துடித்துப் போனார் உலகநாதன் ….
error: Content is protected !!