Skip to content
Post Views: 4,916
நீரதி”டிவோர்ஸ் பண்ணிக்கலாமா?”என்று கேட்டதும் அதிரவெல்லாம் இல்லை ஆழியன்.
“பண்ணிக்கலாம் ரதி”என்றான் அமைதியின் திருவுருவமாக.
Advertisement
அவன் கூற்றில் சுணங்கினாலும் அவனை நம்பிக்கையற்று பார்த்தாள்.
“நிஜமாகவே ரதி, பண்ணிக்கலாம்”என்றவன் அவளின் முகத்தை பார்க்க “டிவோர்ஸ் ஆன பிறகு பசங்க என் கூட தான் இருப்பாங்க”என்றாள் வேகமாய்.
Advertisement
Advertisement
“ம்ஹூம் நம்ம கூட இருப்பாங்க”என்று திருத்தினான்.
Advertisement
‘என்ன உளர்றான்’என்ற ரீதியில் அவள் பார்த்து வைக்க
“உனக்கு என் கூட வாழ விருப்பம் இல்லை டிவோர்ஸ் பண்ற அதுக்காக ஏன் தனியா இருக்கணும்?”
“இல்ல புரியலை”என்றாள் குழப்பமாக.
“இந்த கல்யாணம் தானே உன்னை கட்டுப்படுத்துது… அதில் இருந்து ரிலீவ் ஆகிடு விவாகரத்து பண்ணிப்போம் ஆனா நம்ம பசங்க நம்ம கூட தான் இருப்பாங்க. அவங்களுக்கு அப்பா அம்மா நம்ம தானே. நமக்கு தான் டிவோர்ஸ் நம்ம பசங்களோட உறவுக்கு இல்லை. நாம ஒரே வீட்டில் தான் இருப்போம்”என்றான் தெளிவாக.
“இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே”என்றவள் அயர்வாய் அமர்ந்து விட்டாள்.
“அப்போ நான் கடைசி வரைக்கும் இப்படியே தான் இருக்கணுமா?”
“உன்னை யார் இப்படியே இருக்க சொன்னா… உனக்கு தோணினதை செய். நான் உன் கூட இருக்கேன்”
“கடைசி வரைக்கும் எனக்கு விமோசனம் கிடையாது”என்று பல்லைக் கடிக்க
“எனக்கு உன் கூட இருக்கணும் ரதி”என்றவனை ஆத்திரம் மூள பார்த்தவள் “இப்படியே உங்க திட்டு அடி எல்லாம் சகிச்சுட்டு வாழ்ந்து உசுரை விட்டுடவா”என்று கத்தினாள்.
“உன் கையைப் பிடிச்சுக்கவா ரதி”
‘பைத்தியமா இவன்’ என்று பார்த்து விட்டு”ஆமா நேத்து ப்ரபோஸ் பண்ணீங்க இன்னைக்கு பர்மிஷன் கேட்கறீங்க ஐயோ அப்பா முடியலை. இதென்ன புதுசா அதிசயமா”என்று முறைப்பாய் கேட்க
“இல்லை ஆறேழு வருஷம் முந்தி இருந்த லவ் இருந்தா என்னை தொடாதேன்னு சொன்ன. இப்போ டச் பண்ணா”என்று வியாக்கியானம் பேசியவனை ஆவென பார்த்தவள் “அதுக்காகவா இத்தனை நாள்”என்று பாதியில் நிறுத்த
“நீ சொல்லாம பக்கத்தில் வர மாட்டேன் ரதி”என்றவனை என்ன செய்ய என்று தெரியாமல் விழி பிதுங்கினாள்.
“உனக்கு ப்ரெக்னென்ஸி போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் ரதி அதான் இவ்வளவு கோபம் வருது சீக்கிரம் சரி ஆகிடும். நான் பார்த்துப்பேன் ரதி”என்றவனை எதுவும் சொல்ல முடியாமல் வெளியே வந்து விட்டாள்.
“ஹப்பா”என்று நெஞ்சில் கைவைத்தவன் திரும்பி வாசலைப் பார்த்து விட்டு “எல்லாத்தையும் சரி செய்வேன் ரதி”தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
ஒவ்வொரு முறையும் அவள் மீது கோபம் கொண்ட போதெல்லாம் உரைக்காதது அவள் பிரிந்த பிறகு எல்லாம் உரைக்கவில்லை. தன் குடும்பம் காட்டிய பாரபட்சத்தை தீபனின் திருமணத்திற்கு பிறகு தான் முழுமையாக உணர்ந்திருந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் வீட்டினர் காட்டிய பாரபட்சம் நன்றாகத் தெரிந்த தில் விளங்கியது தானும் தன் குடும்பமும் நீரதிக்கு செய்த செய்யாத பல விஷயங்கள். அதனை மனைவி ஒரு நாளும் சுட்டிக் காட்டாததில் மேலோங்கிய குற்றவுணர்ச்சி. தன்னால் தானே இவளுக்கு இந்த நிலை என்ற பரிதவிப்பு எல்லாம் சேர சண்டை வரவும் யோசித்த அத்தனையையும் மொத்தமாய் கொட்டி கவிழ்த்திருந்தான்.
தன்யாவை திருமணம் செய்யாததில் வளர்மதி பேசிப் பேசி உருவாக்கி வைத்திருந்த குற்றவுணர்ச்சி, நீரதியை அவர்கள் நடத்திய விதத்தை அப்போது உணராமல் போனாலும் பவ்யா வந்த பிறகு நன்கு உணர்ந்திருந்தான். என் ரதியின் ரசனைகளை நானே கொன்று விட்டேன் என்ற எண்ணம் மேலோங்க அமைதியாக படுத்து விட்டான்.
*********
வளர்மதிக்கு எதிலோ தோற்ற உணர்வு.
நீரதி கோபித்துக் கொண்டு போனதில் கூட அவர் இறுமாப்பு குறையவில்லை. போனால் போகிறாள் எனக்கென்ன என்று இருந்து கொள்ள கணவனோ தன் வீட்டையும் தன் செயல்களையும் பட்டியல் போட்டு திட்டியதில் உள்ளூர கோபம் பொங்கினாலும் அதைக் காட்ட வழி தெரியாது திகைத்து நிற்க ஆதரவிற்கு தன் மூத்த மருமகளாவது வருவாள் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் தரங்கினியோ என் வீட்டை எப்படி பேசலாம் என்று முறுக்கிக் கொண்டதோடு நீங்க ஏன் எனக்கு சப்போர்டா எதுவும் பேசலை என்று கேட்டு அதிர வைத்தாள்.
இனி தன் பிறந்த வீட்டு ஆட்கள் இங்கே வர முடியாதே தன் நிலை இனி என்ன ஆகும் என்று யோசித்தவளுக்கு அமுதனின் அதிரடி வேறு பீதியை கிளப்பி இருந்தது.
“எல்லாம் இந்த நீரதியால பெரிய இவளாட்டம் கோவிச்சுட்டு போய் இப்போ வீடே தலைகீழா கிடக்கு”என்று தனக்குள் திட்டிக் கொண்டாள். வாய் திறந்து பேசினால் அதற்கும் அமுதன் கோபப்பட்டால் என்ன செய்வது என்ற பயம் அவளுக்கு.
ஆனாலும் எப்படியும் என்னிடம் வந்து தானே ஆக வேண்டும் என்று எண்ணிக் கொள்ள மெத்தனமாக இருந்தாள்.
எல்லாம் ஓய்ந்த பிறகு தான் துவங்கியது உண்மையான குடும்ப அரசியல். தேசிகன் வீட்டில் இருக்கத் துவங்கினார்.
முதல் வேலையாக சமையல் செய்யும் பெண்ணிடம் இனி வேலைக்கு வர வேண்டாம் என்று நிறுத்தி விட்டார்.
“ஏங்க நான் ஒரு ஆளா எப்படி செய்ய முடியும்”என்று தன் கணவன் மீது இருந்த கோபத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுப் பேசினார் வளர்மதி.
“இத்தனை நாளும் சமையல்கார பொண்ணு சமைச்சு தான் சாப்டோமா”என்று எதிர் கேள்வி கேட்க பதில் இல்லை வளர்மதியிடம்.
“வேலையே இல்லாததால் தானே தேவை இல்லாத வேலை எல்லாம் பாக்குறீங்க. சமைச்சு போடுங்க”என்று கூறி விட
“நான் ஒரு ஆளா நிக்க முடியாது ங்க. மூட்டுவலி வேற”என்று முனக
“ஏன் உன் மூத்த மருமகள் இருக்கும் போது நீ ஏன் நிற்கிற ரெண்டு பேரும் சேர்ந்து செய்ங்க”என்றார்.
“தருவா அவளே பிள்ளையோட”என்று இழுக்க
“இதையே எத்தனை நாள் சொல்வ வருணுக்கு ஒரு வயசு முடிஞ்சு நாள் ஆகுது”என்றவர் “வெளி வேலைக்கு மட்டும் தான் இனி ஆள். சமையல் நீங்க தான் செய்யணும் செய்றீங்க”என்றார் அழுத்தமாக.
ஆழியனுக்கு அழைப்பு விடுத்து “பேசணும் வீட்டுக்கு வாடா”என்று மட்டும் கூறி விட்டு இணைப்பைத் துண்டித்தார்.
அடுத்ததாய் தீபனுக்கு அழைத்து “மருமகளையும் பேரனையும் கூட்டிட்டு வரணும். நல்ல நாள் பார்த்து சொல்றேன் தயாரா இருக்க சொல்லு. நீ நாளைக்கு எந்த வேலை எப்படி இருந்தாலும் வீட்டுக்கு வர்ற”என்று அவனையும் பேச விடாமல் இணைப்பைத் துண்டித்தார்.
மறுநாளே மூன்று மகன்களும் தேசிகன் வீட்டில் ஆஜர் ஆகியிருந்தனர்.
“தண்ணி கொண்டு வரக் கூட நான் சொல்லணுமா”போட்ட சத்தத்தில் வளர்மதி வேகமாய் தண்ணீருடன் வர அமுதனை ஒரு பார்வை பிறகு தரங்கினியை ஒரு பார்வை. அதுவே சொன்னது மறுமுறை கேட்காமல் அவளே தண்ணீர் தர வேண்டும் என்று.
“செல்வம்”என்று அழைத்ததும் “ப்பா”என்றான் அமைதியாக.
“திறப்பு விழா வேலை எப்படி போகுது. எல்லாம் செஞ்சுட்டியா ஏதாவது உதவி வேணுமா”என்றார்.
“இல்லை ப்பா எல்லாம் முடிஞ்சது. திறக்க வேண்டியது தான் பாக்கி”என்றான். கேட்ட கேள்விக்கு மட்டும் தான் பதில் வந்தது அவனிடத்தில்.
“ஹ்ம்ம்”என்றவர் “நீரா கிட்ட நான் பேச நினைக்கிறேன் கூட்டிட்டு வர முடியுமா?”என்று வினவ
“நிலா மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்க முடியாத மனநிலையில் தான் ரெண்டு பேரும் இருக்கோம். ஸோ அதுதான் பேசணும்னா நிச்சயம் வேண்டாம்”என்றான் மறுப்பாக
“உன் கூடப் பிறந்த தங்கச்சி டா நீங்க தானே பார்க்கணும்”என்று வளர்மதி துவங்க
“அண்ணனோட கடமை என்னவோ அதை நான் செய்வேன் அதுவும் அமுதன் அண்ணா மூலமா மட்டும் தான் மத்தபடி இனி அந்த உறவை தொடர்ற எண்ணம் எனக்கு சுத்தமாக கிடையாது. வேற “என்றான் ஆழியன் தீர்க்கமாக. அவன் நிலாவை மன்னிக்க தயாராகவே இல்லை.
வளர்மதி வேகமாக வந்து அவன் கையைப் பிடிக்க வரவும் தள்ளி நின்று கொண்டான். அதுவே வளர்மதிக்கு தலையிறக்கமாக போனது.
“வேற எதுவும் கேட்கணுமா ப்பா”என்று அதிலேயே நிற்க
“எதுக்கு டா இவ்வளவு அவசரம் ஏன் உன் பொண்டாட்டி”என்று பொன்னி ஆரம்பிக்க
“அவளைக் கையப் புடிச்சு இழுக்கலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதா பாட்டி”என்று நறுக்கென்று கேட்க தீபன் சிரித்தே விட்டான்.
“ப்ப்ச் சும்மா இருடா”என்று அதட்டிய அமுதன் “ப்பா இந்த விஷயத்தில் அவனை கட்டாயப்படுத்த வேண்டாம். அவன் முடிவு தான். உங்களுக்கு உங்க பொண்ணு உசத்தியா இருக்க மாதிரி தான் அவனுக்கு அவன் பொண்ணுங்க. அவங்களை இப்பவே கரிச்சு கொட்டின மாதிரி பேசினா அவன் சரிதான் னு தலையாட்டணுமா…”என்றதும் “என்ன பாப்பாவை பேசினாளா”என்று ஆழியன் அதிர்ந்து கேட்க அப்போது தான் அவனுக்கு பிள்ளைகளை பேசியதே தெரியவில்லை என்று தெரிந்தது.
சுத்தம் என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டார் பொன்னி.
“என்ன பேசினா”என்று உக்கிரமான ஆழியனைக் கண்டு அதிர்ந்த வளர்மதி “அதெல்லாம் ஒன்னும் சொல்லலை மருமகளா”எனும் போதே “அது மட்டும் பேசலை போலவே”என்று நிறுத்தி “நீ சொல்லு அமுதா”என்று கேட்க அமுதன் நிலா பேசியதை தரங்கினி மூலம் தெரிந்து கொண்டதை கூறி விட்டான். பக்கத்தில் இருந்த சுவற்றில் ஓங்கி குத்தப் போக தீபன் அவனைப் பிடித்துக் கொண்டான்.
“ஏன் ண்ணா”என்று அதட்ட
“இனிமே உன் பொண்ணு மூஞ்சில கூட முழிக்க மாட்டேன். “என்றவன் “நேரில் இருந்திருந்தால் செருப்பாலேயே அடிச்சு இருப்பேன் என் பொண்டாட்டி கம்மியா ஒரு அறையோட விட்டுட்டா”என்றவனை வளர்மதி திடுக்கிட்டு பார்த்தார்.
“டேய் செல்வம்!”என்ற பொன்னியிடம்”என்ன செல்வம் ஹான் பேசாம போயிருங்க சொல்லிட்டேன்.”என்று எச்சரித்தவன் “எதுக்கு வரச் சொன்னீங்கனு சொல்லுங்க ப்பா”என்றான் எரிச்சலாக.
“உன் பொண்டாட்டி புள்ளைங்களை கூட்டிட்டு வீடு வந்து சேரு. புது கடைக்கு ஆள் போட்டு விட்டு நீ வழக்கம் போல மில்லை வந்து பாரு”என்றார் தேசிகன் இலகுவாக.
ஆழியன் யோசிக்கவெல்லாம் இல்லை.
“மில் வேணும் னா வந்து அப்பப்ப பார்க்கிறேன். புது கடையை நிர்வாகம் செய்ய போறது ரதி தான். அது அவ கடை. அவ தான் ஓனர். நான் சும்மா வொர்க்கிங் பார்ட்னர் தான் அந்த கடைக்கும் பொது சொத்துக்கும் சம்மந்தம் கிடையாது.”என்றவன்
“அதே மாதிரி ரதியை ஏதாவது விசேஷம் நடந்தால் அழைச்சுட்டு வருவேன். மத்தபடி இனி ஒரே குடும்பமா இருக்கிறது சரியா வராது. தனிக் குடித்தனம் தான்”என்றான் தெளிவாக.
“இது தான் உன் முடிவா?”என்று தேசிகன் கேட்க
“கண்டிப்பாக மாற்றமே இல்லை.”என்றவன், “நான் கிளம்பறேன்”என்று வெளியே சென்று விட்டான்.
….. தொடரும்
error: Content is protected !!