ஊஞ்சலாடும் முகிலே 24
அத்தியாயம் 24
“உங்களுக்கெல்லாம் ராஜ வாழ்க்கை வந்து கதவு தட்டினா இப்படி தான் கைத்தட்டி சிரிக்க சொல்லும். ஒண்ணுமில்லாம தெருவுல நின்னிருந்தா தெரியும்!” என்ற மகேஸ்வரன் பேச்சு வார்த்தை சரி இல்லை தான் என்ற போதிலும்,
Advertisement
‘அவர் எப்போதும் அப்டி தானே?’ என கடந்துவிட தான் நினைத்தார் லதா.
ஈஸ்வருக்கு தான் அது பொறுக்கவில்லை. தாங்கள் என்ன செய்தாலும் தவறு என்ற தந்தையின் எண்ணத்தில் அவனுமே பேச தயங்கவில்லை.
Advertisement
Advertisement
“அப்படி தெருவுல நாங்க நிக்க என்ன அவசியம் ப்பா? எங்களுக்காக தானே இத்தனை வருஷமும் உழைச்சீங்க? இந்த இடத்துல இருக்கீங்க?” என அவன் கேட்க,
“அப்படி இந்த ஒரு இடத்துல உன்னையும் உன் அம்மாவையும் வச்சதுக்கு தானே நீங்க சேர்த்து வச்சு இப்படி என் மானத்தை வாங்குறீங்க?” என்றவர் கோபத்தை ஜீரணிக்கவே முடியவில்லை அவனுக்கும்.
Advertisement
“என்ன பேசுறீங்க ப்பா நீங்க? அவங்களை விடுங்க. முதல்ல இருந்து என்னை கேட்காம எல்லாத்துக்கும் நீங்க தலையாட்டி வச்சது தான் இங்க வந்து நிக்குது மாப்பிள்ளை பார்க்க வந்து நிக்குறேன்னு. கொஞ்சமாவது எனக்கு யோசிக்க நேரம் தந்திங்களா? பொண்ணு மாப்பிள்ளைனு யாராவது ஒருத்தருக்கு பிடிச்சா போதுமா? ரெண்டு பேரும் சேர்ந்து தானே வாழனும்?” என விட்டு கொடுக்கவே இல்லை கீர்த்திஸ்வரன்.
“என்ன டா சொன்னதையே சொல்ற? எல்லாரும் பிடிச்சு தான் வாழுறாங்களா? கல்யாணம்னு பண்ணிக்கிட்டா எல்லாமே சரியாகிடும். நீ தேவையில்லாம பேசி இப்ப அது நமக்கு எவ்வளவு லாஸ்னு தெரிஞ்சும் என்கிட்ட மல்லுக்கு நிக்குற!” என்றவரை ஆயாசமாய் பார்த்தவன்,
“நீங்க சொல்ற மாதிரி… நீங்களும் அம்மாவும் வாழுற மாதிரி என்னால வாழ முடியாது ப்பா!” சட்டென சொல்லிவிட்ட கீர்த்திஸ்வரன் அன்னையை திரும்பிப் பார்க்க, அதற்கும் எந்தவொரு பிரதிப்பலிப்பும் இல்லை அவரிடம்.
“பேமிலியை விட இப்பவும் பிசினஸ் லாஸ் தான் உங்களை இவ்வளவு யோசிக்க வைக்குது!” என்று சொல்ல,
“உனக்கு பைத்தியம் தான் பிடிச்சு போச்சு. உன்னை பேசி என்ன ஆக போகுது. மகனை கேள்வி கேட்க விட்டு பார்த்துட்டு நிக்குறா இல்ல.. அவளை சொல்லணும்! நான் எப்படி போனா உங்களுக்கு என்ன!” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வெளியில் சென்றுவிட்டார் அவர்.
இன்னும் அயர்ச்சியாய் வந்தது கீர்த்திஸ்வரனுக்கு. இவ்வளவு சொல்லியும் புரியவில்லை தானே என்பதாய்.
அதை அன்னையிடம் ஆதங்கமாய் கூற,
“இத்தனை வருஷமும் இல்லாம இப்ப தான் திருந்த போறாரா? விடு டா!” என்ற லதா,
“ஆமா!ஏதோ கேரக்டர் பிடிச்சா பொண்ணை கேட்பேன்னு என்னவோ சொன்னியே… அது… பொண்ணை பார்த்துட்டு சொன்னியா இல்ல சும்மா அந்த நேரம் பேச்சுக்கு சொன்னியா?” என மிக முக்கியமாய் அப்போது இருந்தே கேட்க நினைத்த கேள்வியை கேட்டு வைக்க,
“ம்மா!” என்றவன் குரலும் வார்த்தையும் என சிரிப்பில் நெளிந்தது அவன் இதழ்கள்.
சட்டென்று அந்த நேரம் தோன்றியதை சொல்லி இருந்தாலும் இது அவளுக்கும் பொருந்தும் என்றே இப்பொழுது தோன்றியது ஈஸ்வருக்கு.
“சொல்லுடான்னா!” என மீண்டும் லதா அவன் தோளை தட்ட,
“என்ன சொல்ல? அதததுக்குன்னு நேரம் வேண்டாமா? நேரம் வரட்டும் பார்ப்போம்!” என்று நழுவிக் கொண்டான்.
இவள் தான் என பல்லவியைக் கை காட்டி விடலாம் தான். நிச்சயம் மறுக்க போவதில்லை அன்னையும்.
ஆனாலும் அவன் கூறிய நேரம் வரவில்லை என்று தான் நினைத்தான். இப்பொழுதே சொல்லி அன்னை அவளை பார்க்கும் கண்ணோட்டம் மாறி… என அதை இப்போதைக்கு தள்ளி வைத்தான்.
‘உன் கண்ணோட்டம் மாறிடுச்சே ஈஸ்வர்!’ மனம் அவனையே அந்த நேரம் கேட்டுக் கொண்டது.
இப்படியே தான் அடுத்தடுத்து நாட்களும் நகர, மகேஸ்வரன் வீட்டிற்கு வரும் நேரம் இன்னும் தாமதமாக ஆரம்பித்தது இரவுகளில்.
தேவி சமைத்து முடிக்கவும் மகேஸ்வரன் வரவும் சரியாய் இருக்கும். லதா காலில் கட்டுடன் படுக்கையில் இருந்த போதில் இருந்தே இரவு உணவை ஈஸ்வருக்கு பரிமாறிவிட்டு தான் வீடு செல்வார் தேவி.
இப்பொழுது மகேஸ்வரன் தன் கோபத்தை காண்பிக்கிறேன் என்று தாமதமாய் வர, தேவி கிளம்பி விடுவதால் அவருக்கு பரிமாற என்றே விழித்திருக்க வேண்டிய கட்டாயம் லதாவிற்கு.
சுத்தமாய் முடியவில்லை அவ்வளவு நேரம் விழித்திருக்க. அதை கணவனிடமும் கூற முடியவில்லை. கீர்த்திஸ்வரனுக்கு தெரிந்தால் தன்னை தான் முறைப்பான் என அவனிடம் கூறவே இல்லை லதா.
இப்படியே தான் மாதங்களும் சென்று கொண்டிருக்க, அன்று மாலை ஈஸ்வர் வீட்டில் காபி எடுத்துக் கொண்டு அலைபேசியில் கவனம் வைத்திருந்த நேரம் வீட்டிற்கு வருகை தந்தாள் பல்லவி.
“ஹெலோ சார்! எப்படி இருக்கீங்க?” என்ற பல்லவி குரலில் உடனே திரும்பிய ஈஸ்வர் புன்னகைக்க வரும் முன்,
“லாஸ்ட்டா உங்க எக்ஸ் கூட மேரேஜ் நின்னப்ப பார்த்தது. மூணு மாசம் ஆச்சா சார் அதுக்குள்ள?” என்றவள் கேள்வியில் காபி கப்பை கையில் வைத்தபடி அவன் முறைக்க,
“இல்ல சார்! அவ்வளவு நாள் ஆச்சு தானே.. அப்புறம் நீங்க பிஸியா இருந்திங்க. நான் வரும் போது பார்க்கவே முடியலை தானே? அதை தான் சொன்னேன்!” என்றவள் விளக்கத்தில்,
“எப்பவுமே இப்படி தானா நீ?” என்றான் கீர்த்திஸ்வரன்.
“ச்சே ச்சே! அப்படி எல்லாம் இல்ல சார். உங்களை பார்த்தா மட்டும் தான் இப்படி தோணுது!” என மீண்டும் வாயை விட,
“அவன் உன்னை அடிக்காம இருக்கிறான்ல. அதான் தோணுது!” என பல்லவிக்கு பின்னோடு வந்த லதாவைக் கண்டவள்,
“லதாம்மா!” என கட்டிக் கொண்டு, மற்றதை எல்லாம் மறந்து,
“எனக்கு ஒரு செமஸ்டர் முடிஞ்சிடுச்சே!” என்று சொல்லி அவரை ஒரு சுற்று சுற்றி நிறுத்தி தடுமாறியவரை பிடித்தும் நிறுத்தி இருந்தாள்.
சில நிமிடங்கள் ஆனது லதாவிற்கு தெளிந்து வர. “உன்னை!” என்றவர் அடிக்க வரவும் அவள் இரண்டடி பின்னே வர,
“வயசாக வயசாக சேட்டை கூட தான் செய்யுது!” என்று சொல்லி லதா முறைக்க,
“உங்களுக்கு தானே லதாம்மா?” என அவரிடமே அதை திருப்பி விட்டாள்.
“பத்து நாள் ஆச்சே நான் வந்து. ஒரு போன் பண்ணிங்களா? அதான் நேர்ல நாலு கேள்வி கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்!” என்றவள் சொல்லில்,
“சொல்லிட்டு தான டி போன எக்ஸாம் முடிச்சிட்டு தான் வருவேன்னு!” என்றார் லதாவும்.
“அதுக்குன்னு? தேட மாட்டிங்களா?” என்றவளை காபியை பருகியபடி கவனித்துக் கொண்டு தான் இருந்தான் ஈஸ்வரும்.
“சரி தான். ஒரு செமஸ்டர் முடிச்சதுக்கே இவ்வளவு ஆட்டம். காலேஜ் முடிச்சுட்டா நம்மளை யார்னு கேட்டாலும் கேட்பா போல ஈஸ்வர்” என்றவர் சொல்லில்,
“யார் நான் கேட்பேனா? நீ யாரோ நான் யாரோனு தள்ளி விடாம இருந்தா சரி!” என்றவள் வளவளவென்று நிறுத்தாமல் கதை பேசினாள் லதாவிடம்.
“அப்புறம் லதாம்மா. லாவண்யாக்கா மேட்டர் என்னாச்சு? ஃபாரின் போனவங்க வந்தாங்களா?” என்றவள் சொல்லில், விருட்டென நிமிர்ந்து அவளை முறைத்தான் ஈஸ்வர்.
அதுவரையும் பார்த்தும் பாராமலும் என மறைமுகமாய் பார்த்து வந்தவன் அவளின் அழைப்பின் விழிப்பில் வெளிப்படையாய் பார்த்து முறைக்க,
“வந்த அஞ்சு நிமிஷத்துல அவ்ளோ பேச்சு. இப்போ மறுபடியும் அவனை கோவப்பட வைக்குற. கண்டிப்பா இதுக்கெல்லாம் சேர்த்து அவன் கையால செமத்தியா வாங்க போற பாரு நீ!” என்ற லதா சொல்லில் நொடியில் அத்தனை புன்னகை கீர்த்திஸ்வரனுக்கு.
அதை இருவருக்கும் காட்டாமல் மறைத்திட அவன் பட்ட பாடும் கொஞ்சமில்லை.
“இங்க வா! உக்காரு!” என அவளை இழுத்து வந்து சோஃபாவில் அமர வைத்து காபியையும் குடிக்க கையில் கொடுத்த லதா,
“குடிச்சு முடிக்குற வரை சைலன்ட்டா தான் இருக்கனும்!” என்று சொல்லி உள்ளே செல்ல, ஈஸ்வர் தனி ஒற்றை சோஃபாவில் அமர்ந்திருந்தவன் பார்வை அவளிடம் வந்து நின்றது.
“காபி இனிக்கவே இல்லைல? இது தான் டெய்லி குடிக்குறிங்களா?” என்று ரகசியமான அவள் ஓசையில் அவன் பார்த்த பார்வை அவளுக்கு சாதாரணம் தான்.
அவனுக்கு மட்டுமே தெரியும் தன் இதயம் புரிந்த பின் தன் நிலையில் அவளின் எண்ணங்கள் எங்கனம் சேர்கிறது என்று.
இப்போதும் அன்னை சொல்லி சென்றதை கேட்பதை போல நல்லபிள்ளையாய் சோஃபாவில் கால்களை மடக்கிக் கொண்டு அமர்ந்து அவள் ஹஸ்கி வாய்ஸில் கேட்ட விதம் உள்ளுக்குள் ஒருவித கிறக்கத்தை கொடுக்க, சட்டென தலையை உலுக்கிக் கொண்டான் கீர்த்திஸ்வரன்.
‘இன்னும் அஞ்சு செமஸ்டர்…ரெண்டரை வருஷம்!’ என்ற எண்ணமும் அந்த நேரம் நினைவில் வந்து நின்று மனதை இழுக்க, ஆழ மூச்செடுத்தான் தன்னை சமன்செய்து.
“அஞ்சலியை டியுஷன் சேர்த்துட்டிங்களாமே?” என பல்லவி கேட்கவும்,
“ஹ்ம்!” என்று மட்டும் அவன் தலையசைத்தான்.
“பேசாம நானே சொல்லி கொடுக்கவா?” என்றவளை நிஜமாய் சொல்கிறாளோ என அவன் பார்க்க,
“நல்ல ஐடியா சார்! நான் டெய்லி வந்து அவளுக்கு சொல்லி குடுத்துடுறேன். பார்ட் டைம் ஜாப்! எப்படி?” என சொடுக்கிட்டவள்,
“டெய்லி பஸ் ஃபேர் பிளஸ் மன்த்லி சேலரி உங்க மனசு போல! அப்பப்போ இந்த சுகர் இல்லாத காபி அப்புறம் கொஞ்சூண்டு ஸ்னாக்ஸ். வேற தேவைகள் இருந்தா அந்த நேரம் பார்த்துப்போம்!” என அடுக்கியவளை நினைத்து,
‘எப்படி இப்படி இருக்கிறாள்!’ என நினைத்து உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது. நிஜமாய் அவள் முன் முறைத்து அவன் அமர்ந்திருந்தது எல்லாம் பெரிய விஷயம் தான்.
எழுந்து ஒரு கொட்டு வைக்க ஈஸ்வர் கைகள் பரபரக்க, என்னவோ சாதாரணமாய் அதை செய்திட முடியவில்லை இதயத்தின் திருட்டுத்தனம் உணர்ந்தபின்.
நெய் வாசனையை பல்லவி இழுத்து பிடிக்கும் நேரம் கையில் இனிப்புடன் வந்துவிட்டார் லதா.
“லதாம்மா!” என்றவள் கண்கள் விரிந்தது அந்த கேசரியைக் கண்டு.
“ஒரு செமஸ்டர் தான் முடிச்சிருக்க. ஆனாலும் அதை அவ்வளவு ஆசையா சொன்னியா… அதான் அப்படியே விட முடியல. ஹ்ம் சாப்பிடு!” என அவளிடம் கொடுக்க,
“ரொம்ப நல்லாருக்கு ம்மா!” என்றான் ஈஸ்வர் அன்னையையும் முறைத்து.
“ஓவர் தான். ஆனாலும் இருக்கட்டுமே!” என மகனிடம் கூறிய லதா சொல்லில்,
“சோ ஸ்வீட் லதாம்மா!” என ஒரு வாய் கேசரியை உண்டுவிட்டு ஒரு கையை குவித்து உதட்டில் வைத்து கிருஷ்ணவேணி கன்னத்தில் முத்தமாய் வைக்க, அந்த செயலில் லதாவோடு ஈஸ்வர் முகத்திலும் புன்னகை நிறைந்தது.
இதே மாதிரியான பலஇனிய நினைவுகளும் சில வேண்டாத நிகழ்வுகளும் என அடுத்த ஒன்றரை வருடமும் ஓடி இருந்தது.
பல்லவி கல்லூரியின் இறுதி வருடத்தை வந்து சேர்ந்திருந்தாள்.
