Skip to content
Post Views: 1,108
அப்பொழுதுதான் உலகநாதன் அவளை சுற்றி பார்த்தார், அவள் பக்கத்தில் கல்களாக அடுக்கி, அடுக்கி வைத்திருந்தாள், அந்த கல்களை அடுக்கியது பார்த்தபோது அவருக்கு ஏதோ ஒன்று தோன்ற..
சற்று தள்ளி நின்று அவள் கல்அடிக்கி வைத்த உருவ அமைப்பை பார்த்தார். அந்த கற்களை ஒரு காரை போல வடிவமைத்து வைத்திருந்தவள் அதன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்,, அவளை சுற்றி நிறைய இளநீர் கிடக்க ஒவ்வொன்றிலும் இரண்டு, இரண்டு ஸ்டார்கல் இருந்தன..
Advertisement
அதை பார்த்தவருக்கு அன்று தன்னோடு அவள் காரின் பக்கத்தில் நின்று இளநீரை பருகிய காட்சி அப்படியே கண் முன்னாடி தோன்ற..
தன்னை நினைத்து கற்களை வைத்து கார் போல உருவத்தை அமைத்து,, தான் இருப்பது போல் தன்னோடு பேசிக்கொண்டிருந்தவளை பார்த்தவர்..
Advertisement
Advertisement
இதயம் வெடித்து சிதறாமல் இருப்பது தான் கடினமாகி போனது,, அவள் பேசியதை கேட்க, கேட்க “ஐயோ ரதி, ரதி” என்று கதறி அழுதார் உலகநாதன்..
“ரதி, ரதிமா என்னாட பண்ணிட்டு இருக்க, என்னாச்சுட்ட உனக்கு, உன்னை நான் இப்படியா பார்க்கனும், என் ரதி இப்படி இருக்காளே, ரதி, ரதி ” என்று உலகநாதன் கதறி அழ..
Advertisement
“டாடி அழாதீங்க டாடி உங்களுக்கு ஏதாவது ஆகிடபோகுது” என்று மாயா உலகநாதனை தாங்கி அழவேண்டாம் என்று கூறிக்கொண்டு இருக்க..
“பாருடா என் ரதிய பாருடா,, இவளை இப்படி பார்க்க, நான் இந்த உலகத்தில் உயிரோட இருக்கேன், எல்லாம் என்னால தான்,, நான் என் ரதியை விட்டு போயிருக்கா கூடாது, அன்னைக்கே அவளை கல்யாணம் பண்ணி என்னோட கூட்டிட்டு போயிருக்கனும், இப்படி என் ரதியை விட்டுடேனே, பாவி, நான் பாவி” என்று தன் மார்பில் அடித்து கொண்டு அழுதவர்.
“ரதிமா, ரதி உனக்கு என்னாச்சுடா, ஏன்டா இப்படி இருக்க, உன்னை நான் இப்படியா பார்க்கனும்” என்று அவள் பக்கத்தில் அமர்ந்து கதறி அழ..
அவளோ இவன் யார் எதற்கு என் முன்னாடி நின்று அழுகிறான் என்று பார்த்தவள்..
” போடா தள்ளி போடா” என்று அவரை திட்ட..
” ரதி ரதிமா என்னை தெரியலையா டா நான்தான் உன் உலகநாதன் என்னை பாருடா” என்று அவளை தொட்டு பேச..
” ஏய் பக்கத்துல வராத பக்கத்துல வந்த கல்ல தூக்கி அடிச்சு விடுவேன் போடா, அங்க பாரு குதிரை காரன் வர்ரான் அவன் கிட்ட உன்ன புடிச்சு குடுத்துடுவேன் போடா” என்று கல்லைத்தூக்கி அடிப்பது போல் அவரை மிரட்ட..
மாயா தந்தையை ரதி கல்லை எடுத்து அடித்து விடுவாளோ என்று பயந்தவள்,, இருவருக்கும் நடுவில் வந்து “டாடி அழாதீங்க டாடி” என்று சொல்லி ரதியின் பக்கத்தில் அமர..
“மாயா என் ரதியை பார்த்தீயாமா எப்படி இருக்க பாரு எல்லாம் என்னால தான் ” என்று மறுபடியும் அழ..
மாயா தந்தையை சமாதானம் பண்ணிக்கொண்டு இருந்தாள்.
ரதி மாயாவை தொட்டவள் “அவன் ஏன் அழறான், அவனுக்கு பசிக்குதா நான் வேணா கொய்யாப்பழம் எடுத்துட்டு வந்து தரவா” என்று கேட்க…
உலகநாதனுக்கு தாங்க முடியவில்லை நான் ஏன் அழகுறேன் என்று கூட தெரியாத நிலைமையில் இருக்கிறாளே என் ரதி…
” மீண்டும் ரதி என்னை தெரியலைய நான் தான் உலகநாதன், உன் மச்சான்” என்று கூற..
” டேய் தள்ளி போடா அடிச்சிடுவேன், ஏய் பொண்ணு இந்த ஆள தள்ளி போக சொல்லு” இன்று மாயாவிடம் கூற.
“ரதிமா அப்பாவை உங்களுக்கு தெரியலையா?” என்றாள் மாயா..
” தெரியல யாரு இவன், சும்மா சும்மா என் முன்னாடி வந்து என் பேரைச் சொல்லி, சொல்லி கூப்பிடுறான், டேய் தள்ளி போ” என்று உலகநாதனை மிரட்ட.
உலகநாதனுக்கும் தன்னை அவளுக்கு அடையாளம் தெரியவில்லையா? என்று கண்கலங்கியவாறே அவளை பார்த்திருக்க..
ரதி மாயாவை பார்த்து “உன் வயிறு ஏன் இவ்வளவு பெருசா இருக்கு,,உள்ள பாப்பா வச்சு இருக்கீயா?” என்று கேட்க..
மாயா “ஆமாம்” என்று தலையாட்ட..
“எனக்கு ஒரு பாப்பா தருவியா? நான் அதை வளர்த்து தர்ரேன்” என்று மாயாவின் வயிறை தடவிய படியே கேட்க..
“கண்டிப்பா தரேன்மா” என்ற மாயா,,
உலகநாதனை காண்பித்து “அப்பாவை உங்களுக்கு தெரியலையா மா”?….
ரதி உலகநாதனை பார்த்து “தெரியலையே அவர் யாரு உங்க அப்பாவா?” என்று கேட்க..
“ஆமாம் என்றாள் மாயா..
” அவன் ஏன் அழுதுட்டே இருக்கான் அடிபட்டு இருக்க அவனுக்கு” என்று ரதி கேட்க..
” இல்ல ரதிமா,அவர் உங்களை நெனச்சு தான் அழுகுறாங்க, உங்களுக்கு ஞாபகம் இல்லையா அப்பாவை,,
நல்லா பாருங்க அப்பா பேரு உலகநாதன் உங்களுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் பேசி கல்யாணம் நடத்த முடிவு பண்ணாங்க.. ஆனா கல்யாணம் நின்னு போச்சு” என்று மாயா கூற..
“எனக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே இதோ பாரு என் தாலி” என்று அவள் கழுத்தில் கட்டி இருந்த மஞ்சள் கலர் கரண்ட் வயறை எடுத்துக்காட்ட….
மாயாவுக்கு ரதியை பார்க்க பாவமாக இருந்தது..
“ஏன்பா ரதி அம்மாவை இப்படி விட்டுட்டு வந்தீங்க” என்று மாயா கண் கலங்கி பேச..
“டேய் மாயாமா நீ அழுகாதடா ” என்றார் உலகநாதன்..
“அப்பா ரதிம்மா பாவம், ஏன்பா நீங்க திரும்ப வரலா”..
“எல்லாம் விதிடா,, இதுக்கெல்லாம் காரணம் உங்க தாத்தா ஜோசப்பும், என் பிரண்ட் சுரேஷ்சும்”. என்றார் கோபமாக பேச..
“என்னப்பா சொல்றீங்க”..
“ஆமாடா நான் பெர்னிலாவுக்கு உடம்பு சரியானதும், அவகிட்ட சொல்லி புரிய வச்சுட்டு.. உடனே ரதியை பார்க்க வரலாமுன்னு நெனச்சு கிட்ட இருந்தேன்,,. ஆனா பெர்னிலா ரொம்ப சீரியஸ்சா ஐ, சி, யூவுல இருந்தா, அவளை நான் பாத்து கிட்டு இருந்தேன்..
ரதி எனக்கு பல தடவை போன் பண்ணி இருக்கா,, நான் ஐசியூவுல இருந்ததால என் போனை வெளியில் சார்ஜ் போட்டு இருந்தேன்..
அவகிட்ட உன் தாத்தா தான் எடுத்து பேசியிருக்காரு பெர்னிலாவுக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு இனிமே போன் பண்ண கூடாதுன்னு அவ கிட்ட சொல்லி மிரட்டி இருக்காரு… அது மட்டும் இல்ல ரதி நம்பரை ப்ளாக் பண்ணிட்டார், நான் இருந்த சூழ்நிலையில அத கவனிக்கல, எவ்வளவு சீக்கிரம் முடியுமா, என் ரதிகிட்ட போகனுமுன்னு நெனச்சிகிட்டு இருந்தேன்..
ரதி உங்க தாத்தா சொன்னதை நம்பல உடனே அவங்க அண்ணனையும், அப்பாவையும் சென்னைக்கு என்னை பார்த்து பேச அனுப்பி வச்சா,
அவங்க எல்லாம் இங்க வந்தது எனக்கு தெரியாது. அவங்க உங்க தாத்தாவை வந்து பார்த்து இருக்காங்க.. உங்க தாத்தா என்ன சொன்னாருன்னு எனக்கு தெரியல,,.
என்கிட்ட உன் தாத்தா வந்து,, நீ கல்யாணம் பண்ணிக்க போற அந்த பொண்ணுக்கு கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்களாம் இனிமே நீ ரதியை தேடி அங்கே போகக் கூடாதாம், நீ பிரச்சனை பண்ண கூடாதன்னு மிரட்டிட்டு போறாங்கன்னு சொன்னாரு…
நான் உடனே என் பிரண்டு சுரேஷ்க்கு போன் போட்டு என்னன்னு பார்த்து விசாரிச்சு சொல்லுன்னு சொன்னேன்.. உடனே அவன் சரின்னு சொல்லிட்டு மறுநாள் என்னை பார்க்க வந்திருந்தான்..
அவன் ரதிக்கு கல்யாணம் ஆயிடுச்சு,, நீ வாங்கி கொடுத்த பொருளை எல்லாம் திருப்பி கொடுத்துட்டாங்கன்னு, சொல்லி நான் ரதிக்கு வாங்கிக் கொடுத்த போன், புடவை, நகை எல்லாத்தையும் என்கிட்ட கொண்டு வந்து கொடுத்தான்….
நான் அதை நம்பல கத்துனேன் கதறுனேன்,, அவன் என்னை சமாதானம் பண்ணி ரதியை மிரட்டி அவங்க வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிட்டாங்க பாவம் அந்த பொண்ணு கல்யாணமாகி வெளியூர் போகிடுச்சுன்னு சொல்லி என்னை நம்ப வச்சுட்டான்…
நானும் அதை நம்பிட்டேன், நான் அதை நம்பி இருக்க கூடாது,, எல்லாரும் சேர்ந்து என் ரதியை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க மாயா” என்று புலம்பிய படியே கண்கலங்கினார்..
“உங்க பிரண்டு ஏன் பா ரதிமாவுக்கு கல்யாணம் ஆச்சுன்னு பொய் சொன்னாங்க”..
“எல்லாம் உங்க தாத்தாவோட திட்டம், என் பிரண்டு நம்பரை கண்டுபிடித்து அவன் கிட்ட பேசி இருக்காரு. அவன் மில்லு கொஞ்சம் நஷ்டத்துல போயிருக்கும் போல,, அதை தெரிஞ்சுகிட்டு அவனுக்கு நிறைய பணத்தை கொடுத்து,,
ரதி வீட்ல போய் சண்டை போட்டு நான் கொடுத்த பொருளையெல்லாம் எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கான்..
என் ரதி எவ்வளவு வேதனையோடு, நான் வாங்கி கொடுத்த பொருளை எல்லாம் திருப்பி கொடுத்து இருப்பா, என் பொருளை அவன் காட்டவும் நான் ஏமாந்து போயிட்டேன்மா”..
“ஆமா உங்க அம்மா, வசந்தா பாட்டி ரதியம்மாவை பத்தி உங்க கிட்ட சொல்லலையா”?..
“அம்மாவுக்கு நான் ரதி கழுத்துல தாலி கட்டணும்னு கோபம், என்கிட்ட ரொம்ப நாளா பேசல அவங்க தங்கச்சி வீட்டில் தான் ரொம்ப நாளா இருந்தாங்க..
அங்கேயே பல வருஷம் இருந்து உடம்பு சரியில்லாம இறந்து போயிட்டாங்க”..
மாயாவுக்கு தன் தாத்தா மீது பயங்கர கோபம்,, நாடகம் ஆடி இருவரின் வாழ்க்கை அழித்திருக்கிறார்..
“இப்ப என்ன பண்றது டாடி”.
“நான் இனிமேல் ரதியை விட மாட்டேன்,, அவளை நம்ம கூட சென்னைக்கு கூட்டிட்டு போவோம்.. அவளை நல்லா ஹாஸ்பிடல்ல காண்பித்து குணப்படுத்துவோம்’ என்று உலகநாதன் கூற..
” சரிப்பா நீங்க சொன்ன மாதிரியே செய்யலாம்” என்று மாயா கூற…
” நீ போய் ரதியை கூப்பிடு நான் கூப்பிட்டா அவ வரமாட்டா” என்றார் உலகநாதன்..
“சரிப்பா” என்றவள்..
” ரதிமா எங்க கூட வர்ரீங்களா கார்ல போகலாம்” என்று மாயா ரதியிடம் கேட்க..
“நீ எனக்கு பாப்பா தருவீயா?”..
“கண்டிப்பா தருவேன்” என்று மாயா கூறி “வாங்க போலாம்”.. என்று அவர்கள் காரில் ரதியை ஏற சொல்ல…
சரியாக அங்கு வந்து சேர்ந்தான் அக்னி…
கார் சர் என்று கொய்யா தோப்பிற்க்கு வந்து நிற்க.. அதிலிருந்து வேகமாக இறங்கினான் அக்னி.
ரதி அண்ணன் மகனை பார்த்ததும் “அப்புகுட்டி” என்று குதிக்க..
“அத்தை இங்கே வா” என்றான் அக்னி.
ரதி அக்னியின் பக்கத்தில் செல்ல பார்க்க..
உலகநாதன் ரதியின் கையை பிடித்து “இவ என் ரதி நான் விடமாட்டேன்” என்று ரதியை பிடித்து நிருத்த..
” யாரு ஊருக்கு வந்து, யாரு மேல கைய வைக்கிற எடுடா கையை” என்று உலகநாதன் பார்த்து கர்ஜித்தான்…..
error: Content is protected !!