Skip to content
Post Views: 2,036
கருப்பன் ஆட்டம் 39
நாட்கள் அதன் போக்கில் உருண்டோட இன்று தர்மன் மற்றும் தங்க மயிலின் திருமண வரவேற்புகள் அந்த கிராமமே கொண்டாட வெகு விமர்சையாக நிகழ்த்தப்பட்டது.
Advertisement
ஊரில் உள்ள அனைவரும் அந்த மண்டபத்தில் குழுமி இருந்தனர். அப்பொழுது காரில் வந்து இறங்கினர் தேவி, நடேசன், மீனா, ராகுல் என அனைவரும்.
Advertisement
தன் தங்கையை பார்த்த அமுதா ஓடிச் சென்று அவரை அணைத்து கொண்டவர் “வா தேவி…! நானே உன்னை கூப்பிடனும் நினைச்சிட்டு இருந்தேன், ஆனா மதினி என்ன நினைப்பாங்களோன்னு தான் சங்கட பட்டுட்டு கூப்டல…!” என்றார்.
Advertisement
“எங்களை இங்க கூப்பிட்டதே மதினி தான் அக்கா…!”என்றார் தேவி.
Advertisement
“அப்படியா…! என்கிட்ட சொல்லவே இல்லையே…! சரி சரி எல்லாம் நல்லபடியா நடந்தா சந்தோஷம் தானே…, எதுக்கு பழசெல்லாம் பேசிகிட்டு, வாங்க எல்லாரும் உள்ள வாங்க…!” என்று வந்திருந்த அனைவரையும் அழைத்து அவர்களை நன்றாக கவனித்தார் அமுதா.
அனைவரும் திருமண விசேஷத்தில் மிக ஆர்வமாக வேலை செய்து கொண்டிருக்க, அப்பொழுது போலீஸ் ஜீப்பில் வந்து இறங்கினான் அய்யனார்.
அய்யனாருக்கு உடன் பிறந்த தங்கையின் திருமணத்தில் கலந்துக்க ஒரு நாள் அனுமதி வாங்கி இருந்தான் கருப்பன். அதன் விளைவாக தன் தங்கையின் திருமணத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் அய்யனார்.
தன் அண்ணனை பார்த்த மயிலும் மகனை பார்த்த அமுதாவும் அவனை பார்த்து அதிர்ச்சியில் ஆனந்தத்தில் அழுதுவிட்டனர்.
அதனை பார்த்த கருப்பன் “சந்தோஷமா இருக்குற நேரத்துல கல்யாண பொண்ணு அழுக கூடாது…!” என்றான்.
அதன் பின் இருவரும் தங்களது கண்ணீரை துடைத்துக் கொள்ளவே, அடுத்தடுத்து திருமண சடங்குகள் அனைத்தும் இனிதாக நடைபெற்றது.
ஐயர் மந்திரம் ஓத உறவுக்காரர்களும் ஊர்சனங்களும் அர்ச்சதை தூவ தங்கமயிலின் கழுத்தில் மங்கள நாணை கட்டி இருந்தான் தர்மன்.
தர்மனும் தங்கமயிலும் அய்யனாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.
காலில் விழுந்து எழுந்தவுடன் அய்யனாரை அணைத்துக் கொண்ட தர்மன், “ரொம்ப நன்றி மச்சான் எனக்காக எவ்வளவு பெரிய காரியம் பண்ணிட்டீங்க….!” என்றான்.
“அட நீங்க வேற மாப்ள, அவனெல்லாம் எப்பயோ சாக வேண்டியவன் தான்,ஏதோ கருப்பன் புண்ணியத்துல இத்தனை வருஷம் உசுரோட இருந்திருக்கான்.
நான் அவனை கொன்னதையும் அதுக்காக ஜெயில்ல இருக்குறதையும் நெனச்சு கவலைப்பட்டதே இல்லை…!
இப்படிப்பட்ட ஒரு மிருகத்த நான் கொன்னுட்டேன்னும் இதுக்கப்பறம் என் வீட்லயும், ஊர்லயும் உள்ள எல்லா பொண்ணு புள்ளைங்களும் நிம்மதியாவும் பாதுகாப்பாவும் இருப்பாங்கன்னு நெனச்சு பெருமைதான் படுறேன் மாப்ள, அதனால இதெல்லாம் நெனச்சு நீங்க கவலைப்படாதீங்க…!
இன்னும் மூணே வருஷத்துல எனக்கு தண்டனை காலம் முடுஞ்சு விடுதலை கொடுத்துடுவாங்க அதுக்கப்புறம் நான் வெளிய வந்துருவேன். அதுக்குள்ள எனக்கு ஒன்னுக்கு ரெண்டு மருமக புள்ளைங்கள பெத்து கையில குடுத்துடுங்க சரியா…!”என்றான் அய்யனார்.
“கண்டிப்பா மச்சான்…!” என்றவன் மன நெகிழ்வுடனும்,ஆனந்த கண்ணீரோடும் அய்யனாரை மீண்டும் அணைத்துக் கொண்டான் தர்மன்.
அதன்பின் காவல் அதிகாரிகள் அய்யனாரை அழைத்து கொண்டு கிளம்பினர்.
வந்திருந்த ஊர் மக்கள் அனைவரும் வயிறும் மனதும் நிரம்ப சாப்பிட்டு விட்டு மணமக்களை வாழ்த்தி விட்டு கிளம்பியவுடன் அங்கு இருந்த தனது சொந்தங்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் கருப்பன், மலர்விழி, தேவி,நடேசன்,மீனா, ராகுல், தர்மன், தங்கமயில்,அமுதா, முத்துலட்சுமி, பொண்ணுத்தாயி என அனைவரும்.
அப்பொழுது தன் தங்கையின் முகத்தை பார்த்து உள்ளம் கலங்கிய கருப்பன் “கோபம் ஒரு மனுசன எந்த அளவுக்கு கண்மூடி தனமா ஆக்கி வச்சுடுச்சுன்னு பாத்தீங்களா…?
என் தங்கச்சிய கண்டுப்புடுச்சு ஒரே ஒரு தடவ என்ன நடந்துச்சுன்னு ஏது நடந்துச்சுன்னு அவ கிட்ட தீர விசாரிக்காம அவ மேல மட்டுமே தப்பு சொல்லி பலி சுமத்தி அவள தங்கச்சியே இல்லைன்னு தலை முழுகி எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்…!
அந்த ஒரு தப்பான விஷயம் என்னை எந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திடுச்சு…!அதனால என் அப்பாவையும் பறி குடுத்துட்டேன். நல்ல வேலை மயிலு புண்ணியத்துல மலர் இந்த ஊருக்கு வந்து சேந்தா…! இல்லைன்னா இன்னும் கூட நான் மீனா மேல தான் தப்புன்னு நெனச்சுக்கிட்டு விலகியே இருந்து என் தங்கச்சியவும் விலக்கியே வச்சுருப்பேன்.
அய்யனாருக்கும் என் மேல இருந்த அந்த பகை காலம் காலமா மறஞ்சு போகாமையே இருந்திருக்கும்….!” என்று தன் தவறை உணர்ந்து கூறினான்.
அதனை கேட்ட மீனாவோ “அண்ணே அதான் அதெல்லாம் முடிஞ்சு போச்சுல்ல இனிமே அத பத்தி ஏன் பேசிக்கிட்டு….!”என்றாள்.
“இருந்தாலும் நான் பண்ணது தப்பு என்னை மன்னிச்சிடு மீனா…!”என்ற கருப்பன் தன் தங்கையை அன்போடு அணைத்துக் கொண்டான்.
பொண்ணுத்தாயோ தேவியிடம் “என்ன மன்னுச்சுடு தேவி, அன்னைக்கு நீங்க எல்லாரும் ஊருக்கு வந்துருந்தப்போ உங்க எல்லாரையும் மதிக்காம ஆத்தரத்துல என்னென்னவோ பேசுப்புட்டேன்.
றவைக்கு கூட நீங்க எல்லாரும் என் வீட்டு வாசல்ல வந்து நிண்டப்போ கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம உங்க மூஞ்சியில அடுச்ச மாதிரி கதவ சாத்திட்டேன்…”என்று கூறினார்.
அதனை கேட்ட தேவியோ “ஐயோ என்ன மதினி நீங்க…, மன்னிச்சுடு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க…, உங்க இடத்துல நான் இருந்துருந்தா கூட அதே தான் பண்ணி இருப்பேனோ என்னவோ….
நடந்த உண்மை என்னன்னு தெரியாம தான நீங்க பேசுனீங்க.., எங்க அம்மா செத்து போயி நான் அனாதையா நிண்டப்போ தாய்க்கு தாயா இருந்து என்னைய பாத்து பாத்து வளத்தது நீங்க…, என்னையவும் உங்க பொண்ணையும் திட்றதுக்கு எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு மதினி…!”என்று கூறினார்.
அதனை கேட்ட பொண்ணுத்தாயிக்கு மனம் நிறைந்து குற்ற உணர்வு அகன்று சென்றது.
கருப்பனுக்கு எதிரில் அமர்ந்து கருப்பனையே பார்த்து கொண்டிருந்தால் மலர்விழி.
என்னடி லுக்கு.., எந்திரிச்சு வா…! என்று கருப்பன் கண் ஜாடை செய்ய எழுந்து வந்து கருப்பனின் அருகில் அமர்ந்து அவனின் கை விரல் வளைவுக்குள் தனது கைகளை புகுத்திக் கொண்டால் மலர்விழி.
அதனைப் பார்த்த மயிலோ “ஏண்டி வீட்ல பண்ற ரொமான்ஸ் பத்தாதுன்னு இப்படியா பொது இடத்துல உக்கார்ந்து ரொமான்ஸ் பண்ணுவீங்க…?” என்றாள்.
அதற்கு மலர்விழியோ “ஏண்டி உனக்கு பொறாமையா இருக்குதா…! உனக்கு தான் ஒரு ஆள் வந்துருச்சுல்ல ஆசையா இருந்தா நீயும் கட்டிக்கோ…, எங்க அண்ணன் என்ன வேணாம்னு சொல்லபோகுது…!” என்றாள்.
“ஆமா…, இந்த மொகர கட்டைய ஆசையா வேற கட்டிக்குவாங்க…!” என்று முகத்தை திருப்பிக் கொண்டால் மயில்.
“அடியேய்…! என்னடி மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கிற….! அப்போ என்ன புடிக்காம தான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டயாக்கும்….!” என்றான் தர்மன்.
“புடிச்சு கல்யாணம் பண்ணனோ….! இல்ல புடிக்காம கல்யாணம் பண்ணனோ….! அது என் விருப்பம். ஆனா என் அனுமதி இல்லாம என்கிட்ட கூட நெருங்கி வந்துடாத கொண்டேபுடுவேன்….!”என்றால் மயில்.
“அவ ஆரம்பிச்சுட்டாண்ணே…! எதுக்கும் நீங்க முன்னாடியே ஒன்னுக்கு பத்து தடவை யோசிச்சு இருக்கணும் அண்ணே…! இதுக்குப்புறம் யோசிச்சும் புண்ணியம் இல்லையே…!”என்றால் மலர்விழி.
“ஆமா தங்கச்சிம்மா..,நீ சொல்ற மாதிரி ஒன்னுக்கு நூறு தடவ யோசிச்சு இருக்கணுமோ…!தப்பா முடிவெடுத்திட்டேனே…!இதுக்கு மாத்து வழி ஏதாவது இருக்குமா….?” என்று தர்மன் கேட்க, அவனின் தலையில் ஓங்கி கொட்டினால் மயில்.
அதனைப் பார்த்து அனைவரும் புன்னகைக்க, கருப்பனோ மலர்விழியை பார்த்து கண்ணடித்தான்.
அதனை பார்த்த தர்மன் தலையை தேய்த்துக் கொண்டே “அடப்பாவி…, இங்க ஒருத்தன் வாழ்க்கையவே பறிகுடுத்துட்டு உக்காந்து இருக்கேன்…! இந்த நேரத்துலயும் இவனுக்கு ரொமான்ஸ் கேக்குது பாரேன்….!” என்றான்.
“உனக்கும் தேவைப்பட்டுச்சுன்னா நீயும் உன் பொண்டாட்டிய கூட்டிகிட்டு போடா…, எங்கள பாத்து என் கண்ணு வைக்கிற…?” என்றான் கருப்பன்.
“… ம்ம்க்கும் …. இவளை கட்டிக்கிட்டு நான் எங்கயிருந்து ரொமான்ஸ் பண்றது…! அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை மச்சான்…! நான் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கணும்…, இவள கல்யாணம் பண்ணி தப்பு பண்ணிட்டேன்….!” என்று தர்மன் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறி விட்டான்.
அவனின் தலையில் மயிலின் புண்ணியத்தால் மீண்டும் ஒரு கொட்டு பரிசாக அளிக்கப்படவே தர்மன் வாயை கை வைத்து மூடிக்கொண்டான். அவனைப் பார்த்து அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.
அந்த நேரம் கருப்பனின் அருகில் அமர்ந்திருந்த மலர்விழி மயங்கி கருப்பனின் மடி மீதே விழுந்தாள்.
அதில் பதறிய கருப்பன் மற்றும் அவனின் குடும்பத்தார் அனைவரும் மலர்விழியை எழுப்பி முகத்தில் தண்ணீர் தெளித்து அமர செய்தனர்.
கருப்பன் மலரிடம் “ஏய் மலரு உனக்கு என்னடி ஆச்சு…? ஏன் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்த….?” என்று பதற்றமாக கேட்டான்.
அவனின் கேள்வியில் அங்கிருந்த அனைவரும் மலரின் முகத்தையே பார்த்தனர்.
இதையெல்லாம் கவனித்த ஒரு வயதான கிழவி ஒருவர் அவர்களின் அருகில் வந்து என்னவென்று கேட்டார்…!
அதற்கு கருப்பனோ அவள் திடீரென மயங்கியதாக கூறினான். அதனை கேட்ட அந்த மூதாட்டி மலரின் அருகில் வந்து அவளின் நாடியை பிடித்து பார்த்தவர்,
கருப்பன் புறம் திரும்பி “ஏய்யா கருப்பா…, உன் பொண்டாட்டி முழுகாம இருக்காளப்பா, அடுத்த பத்தே மாசத்துல உனக்கு குட்டி கருப்பனை பெத்து குடுக்க போறாப்பா….!” என்று சந்தோச முகமாக கூறினார்.
அதனை கேட்ட அங்கிருந்த குடும்பத்தார் அனைவருக்கும் ஒரே ஆனந்தம்.
எல்லோரும் மலரை சூழ்ந்து கொண்டு அவளுக்கு வாழ்த்து கூறியும் மயில் அவளை கிண்டல் செய்தும் கொண்டிருந்தனர்.
தர்மன் கருப்பன் அருகில் வந்தவன் “வாழ்த்துக்கள் மச்சான் எப்பிடியோ என் தங்கச்சியும் நீயும் சந்தோசமா இருந்தா எனக்கு அதுவே போதும் மச்சான்…!”என்றான்.
அடுத்த ஒன்பது மாதங்கள் அதன் போக்கில் கடந்திருக்க, தங்கமயிலுக்கு ஏழாவது மாதம் வளைகாப்பு விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்பொழுது தர்மன் மிகவும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தான். ஒன்பது மாதமான தன்னுடைய நிறைமாத கருவில் கை வைத்து கொண்டு அவனருகில் வந்த மலர்விழி
“அண்ணே….! எங்கண்ணே அவரு காலங்காத்தால எங்கயோ போயிட்டு வரேன்னு சொல்லிப்புட்டு போனாரு இன்னும் கொஞ்ச நேரத்துல மயிலுக்கு வளையல் போடணும் இப்போன்னு பாத்து ஆள காணோம்….!’ என்று கேட்டாள்.
அதற்கு தர்மனோ “வருவியான்மா…, கதிரு இந்த நேரத்துல வெளிய போயிருக்கியான்னா….! எதாவது முக்கியமான காரணம் இல்லாம இருக்காது” என்றான்.
அடுத்த சில மணி நேரங்களில் மயிலுக்கு வளைகாப்பு விழா ஆரம்பித்து இருந்தது. அந்தநேரம் சந்தோசமாக இருக்க வேண்டிய மயிலின் முகம் வாடி இருப்பதே கவனிக்க மலர், மயிலின் அருகில் சென்றவள்,
“ஏய் மலரு…! நல்ல நாள் அதுவுமா ஏண்டி உம்முன்னு இருக்குற….! கொஞ்சம் சிரியேன்…!”என்று கூறினாள்.
அதற்கு மயிலோ “எங்க அண்ணே ஞாபகமாவே இருக்குடி….!”என்று கண்கள் கலங்க கூறினாள்.
அந்த நேரம் வீட்டின் வாசலில் கருப்பனும் அவனின் அருகில் அய்யனாரும் ஒரு சேர வந்து நின்றனர்.
மூன்று வருட சிறை தண்டனை இருக்க, அய்யனார் எப்பிடி மயிலின் வளைகாப்பிற்கு வந்தான்…?
கருப்பன் வேட்டை தொடரும்….
💝கருப்பனின் காரிகையவள்💝💝💝
கமெண்ட் ப்ளீஸ் 🙏🏻
error: Content is protected !!