Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 5 1

அத்தியாயம்….5

வழி அனுப்பி வைக்க வந்த வீரா, கூடவே தன்னோடு வருவதை பார்த்து… மணிமேகலை அவனை கேள்வியோடு பார்த்தாள்.

‘இவள் வாயை திறக்கவே மாட்டாளா…?’ என்று மனதில் நினைத்தவன், அவள் கேள்வியான பார்வைக்கு பதிலாய்… “சென்னையில் எனக்கு ஒரு வேலை இருக்கு. அதான் உன்னை சென்னை ஏர்போர்ட்டில் வழி அனுப்பிட்டு, என் வேலையையும் முடிச்சிட்டு கிருஷ்ணகிரிக்கு ரிட்டான் ஆயிடுவேன்.” தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

இவ்வளவு  விளக்கம் கொடுத்த வீராவுக்கு,  பதிலாய் மணிமேகலை… “ஓ…” என்று ஒரே வார்த்தையில் ஒருத்தி  பதில் கொடுக்க முடியுமா…? அதுவும்  தனக்கு இந்த அளவு உதவி செய்தவனுக்கு, செய்பவனுக்கு, முடியும் இதோ நம் மணிமேகலையால்  கொடுக்க முடியும்.



Advertisement

வீரா மணிமேகலையிடம் என்ன எதிர் பார்க்கிறான்…தெரியவில்லை. ஆனால் அனைத்தும் செய்தான். சென்னையில் வேலையே இல்லாத போதும், வேலை இருப்பதாக தன் அன்னையிடம் சொல்லி…

இதோ சென்னை விமானநிலையம் வந்து, அவளை வழி அனுப்பி விட்டவன். சொன்ன பொய்க்கு ஏற்றவாறு சென்னையில் இருக்கும் **** மாலில் நேரத்தை செலவிட்டான்.  பின்  மாலை அதே சென்னை விமானம் மூலம் கோயம்பத்தூர் வந்து இறங்கினான்.

***********************************************************

Advertisement

 

Advertisement

[the_ad id=”6605″]

 

 

Advertisement

பயத்தால் அடிவயிறு ஏதோ இழுத்து பிடிக்கும் என்றும, படத்தில் பார்த்தோ…கதையில் படித்தோ தான்,  இது வரை மணிமேகலைக்கு தெரியும். அப்போது எல்லாம் வசுவிடம் இதை பற்றி பேசி கிண்டல் கூட செய்து உள்ளாள்.

ஆனால் இன்று  அவள் செய்த அந்த கிண்டல் அவளை பார்த்து கேலி செய்து சிரிப்பது போல் இருந்தது. முதல் விமானப்பயணம். அதுவும் தனியாக பக்கத்தில் ஒரு வெள்ளைக்காரன் உட்கார்த்துக் கொண்டு…

“எனி ஹெல்ப் மீ…எனி ஹெல்ப் மீ…” என்று கேட்க தான் செய்கிறான்.

ஆனால் இவள் தான் அவனிடம் தனக்கு எந்த உதவி கிடைக்கும் என்று எதுவும் சொல்லாது… அவன் கேட்டதற்க்கு பதில் சொல்லும் நிலையிலும் கூட இல்லாது…

“ஒன்னும் இல்லை.” என்பது போல் தலையாட்டி விட்டு, வயிற்றில் கையை இறுக்கிக் பிடித்துக் கொண்டு, கண் மூடி பின் பக்கம் தலை வைத்து சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

எப்போதும் கூப்பிடாத அந்த பகவான் நாமம் …

“பெற்ற தாய் தனை மக

மறந்தாலும்,

பிள்ளையைய் பெரும் தாய்

மறந்தாலும்

என்ற பாடலை  தன்னால்   மணிமேகலையின்  உதடு உச்சரித்துக் கொண்டு இருந்தது. அதுவும் நேரிடையாக கலிபோனியா செல்ல விமானம் இல்லை என்பதால்,  துபாய் வந்து இறங்கியவள். மணிக்கணக்கில் காத்திருந்து, பின் மறுவிமானம் ஏறி வந்து  இறங்கியளுக்கு, போதும் போதும் என்றாகி விட்டது.

நல்ல வேளை இங்கு இருந்து அவளை அழைத்து செல்ல, வட்டிகாரன் யாரையோ ஏற்பாடு செய்து உள்ளேன் என்று சொல்லி இருக்கிறான். அது வரை தப்பித்தேன், என்று நினைத்து, அனைத்து பார்மால்டீஸ்களையும் முடித்து விட்டு வந்தவள் மனதில் இது தான் தோன்றியது…

‘யாருடா  கண்டு பிடித்தா இத்தனை பார்மால்டீசும்.’ என்று நினைத்தவள், சரி நம்ம வேலையை  பார்ப்போம் என்று நினைத்து  தன் பெயரை தாங்கிய அட்டையை யாராவது பிடித்து இருக்கிறார்களா…?என்று அவள் கண்கள் ஆண்களாக பார்த்து வலம் வந்தது. (இந்த தடவை சைட் அடிக்க இல்லேம்மா…நம்புங்க.)

ஆண்களின் கை  பிடித்த, பெயர் தாங்கிய போர்டை பார்த்துக் கொண்டு வந்தவளுக்கு, ஏதோ பட சட்டென்று தான் வலம் வந்து முடித்த பகுதியை பார்த்தவள் அசந்து போனாள்.

தன் லக்கேஜை கீழே வைத்து விட்டு தான் பார்த்தது சரியா…? என்பது போல் கண்ணை  துடைத்தும் பார்த்தாள். அந்த கை  … தமிழில்  செல்வி க. மணிமேகலை என்ற தன் பெயரை  தாங்கி இருந்த அந்த கையின்  உருவத்தை பார்த்தவளுக்கு…

‘பாருடா வட்டிக்காரனுக்கு இவ்வளவு அழகான  பாரின்  கேள் பிரண்டா…?.’ என்று நினைத்தவளின் மனதில், நம்ம போலவே இவனும் வெளிநாட்டில் செட்டில் ஆக ஐடியா பண்றான்னோ…’ மனது தன் பாட்டுக்கு இப்படி நினைத்தாலும், அவள் கால் தன்னால் அப்பெண் அருகில் போய் நின்றது.

“மை செல்ப்  மணிமேகலை.” என்று அந்த வெளிநாட்டு பெண்ணிடம் தன் கைய் நீட்டி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவளின், கைய் பற்றிய அந்த வெளிநாட்டு பறவை.

அழகான தமிழில் குழந்தை பேசும் மழலையாக… “ தெரியும். தெரியும். வீரா உங்க படத்தை அனுப்பி இருக்காரு…” என்று சொல்லிக் கொண்டே, தன் கை பேசியில் இருக்கும் மணிமேகலையின் புகைப்படத்தை  அந்த வெளிநாட்டு பெண் காண்பித்தாள்.

பின் முறையாக தன்னை… “என் பெயர் லாலீ.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

லாலீ காண்பித்த அந்த புகைப்படத்தில் தான் இப்போது அணிந்திருந்த சுடிதாரில் இருந்தாள். விமானத்திற்க்கு போடுவதற்க்கு என்று  வசதியாக  இது தான் இருக்கும் என்று, வீரா தான் இந்த உடையை தேர்ந்தெடுத்து தந்தான்.

மணிமேகலைக்கும் அந்த உடையே   விமானத்தில் செல்ல ஏதுவாக இருக்கும் என்று நினைத்து,  அன்று தான் அந்த உடையை அணிந்தாள். பார்டா பைய்யன் சுட சுட போட்டோவை பிடிச்சி தன் கேள் பிரண்ட்டுக்கு அனுப்பி இருக்கான்.

அது தான் என்  போட்டோ இருக்கே…ஏன் போர்ட்டை பிடித்து இருக்கனும் இந்த பெண்…என்று  நினைத்த மணிமேகலை அந்த போர்ட்டில் தன் பார்வையை செலுத்தினாள்.

“நான் கவனிக்காம போனாலும், நீ பாத்து வருவே வீரா சொன்னார்.”  என்று சொன்ன  லாலீயை பார்த்து சிரித்து வைத்தாள்.

மனதில்.. ‘அட பார்டா என்  பார்வை பார்த்தே பதில் சொல்றா இந்த  வெளிநாட்டு பறவை.’ என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே,  லாலீயின் கண் அசைவில் அங்கு வந்த ஒருவன் மணிமேகலையில் லக்கேஜ்களை எடுத்து கொண்டு சென்றான்.

“ஏய் அது எந்து…” என்று  மணிமேகலை எப்போதும் ஆபத்து என்றால் வரும் தன் தாய் மொழியில் கத்தினாள்.

 

[the_ad id=”6605″]

 

 

அவள் கத்தல் லக்கேஜை எடுத்து கொண்டு சென்றவனுக்கு கேட்கவில்லையோ…இல்லை இவள் பேசிய தமிழ் புரியவில்லையோ…நிற்காது அவன் பாட்டுக்கு விடு விடு என்று சென்றுக் கொண்டு இருந்தான்.

அவன் நிற்காது செல்வதை பார்த்த  மணிமேகலை அவன் பின் செல்ல பார்த்தவளின் கை படித்து தடுத்து நிறுத்திய லாலீ … “என் கார் ட்ரைவர் தான்.” என்று சொன்னதும் தான்…

மணிமேகலை   “அம்மாடி…”  என்று மூச்சை இழுத்து விட்டாள்.

வீரா படித்து படித்து சொல்லி அனுப்பியது இது தான். “பாஸ்போர்ட்டை உன் கைய் பையில்  வைத்துக் கொள். அது எப்போதும் உன் கையில் தான் இருக்கனும். அது தொலைந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும்.” என்று.

மணிமேகலை விமானம்  விட்டு இறங்கும் வரை, அந்த கைய் பை கையில் தான் வைத்துக் கொண்டு இருந்தாள். எப்போதும் கைய் பை எடுத்து போய் பழக்கம் இல்லாத மணிமேகலை.

இன்று புதியதாய் தன் கையிலேயே ஒரு பொருளை வைத்துக் கொண்டு இருப்பது ஒரு மாதிரியாக இருந்தது.

அதனால் தன் கையில் லக்கேஜ் கிடைத்ததும், மேல் உள்ள சூட்கேசின் ஜிப்பை திறந்து அதில் தன் கைய் பையை திணித்து விட்டு தான் தன்னை அழைக்க வந்தது யார் …? என்றே பார்த்தாள்.

இப்போது தன் லக்கேஜை ஒருவன்  எடுத்துக் கொண்டு போவதை பார்த்து…  ‘அய்யோ அந்த வட்டிக்காரன் சொன்னானே…” என்று நினைத்து தான் ஓட பார்த்ததே… லாலீ அது நம்ம ஆளு என்று சொன்னதும் தான் அவளுக்கு போன உயிரே திரும்பி வந்தது.

லாலீ  மணிமேகலையின் பதட்டம், பின் வந்த நிம்மதி இதை பார்த்து… “பாஸ்போர்ட் அதிலா  வைத்து இருக்க…? ” என்று சரியாக யூகித்து கேட்டாள்.

“ஆமாம்.” என்பது போல் தலையாட்டவும்…

“வீரா சொல்லி அனுப்பி இருப்பாரே…” என்று சரியாக வீராவை அனுமானித்து கேட்டவளிடம்… “உங்களுக்கு  வீராவை எப்படி தெரியும்…?” என்ற வார்த்தை மணிமேகலையின் தொண்டை வரை வந்து விட்டது.

பின் தன்னை அடக்கியவளாய்… “ம் சொன்னாங்க. சொன்னாங்க.” என்று ஒரு வித அசட்டு சிரிப்பு சிரித்த வாறே  சொல்லி முடித்தாள்.

அதற்க்கு லாலீ ஒன்றும் சொல்லாது, தன் கார் இருக்கும் இடத்திற்க்கு அழைத்து சென்றாள். தன் லக்கேஜை எடுத்து(ஓடி) வந்தவன் அமர்ந்திருந்த, காரின் பின் கதவை திறந்து தன்னை அமரும் படி செய்தவள்,  பின் தானும் தன் பக்கத்தில் அமர்ந்து பேச ஆராம்பித்தவள், பேசினாள்… பேசினாள்… பேசிக் கொண்டே இருந்தாள்.

“வீரா  ஹான்சம்…வீரா பிரன்லீ…வீரா கேரிங்…” என்று சொல்லிக் கொண்டே இவளை போரிங் ஆக்கி விட்டு தான், தான் தங்க வேண்டிய இடத்திற்க்கே கொண்டு வந்து சேர்த்தாள்.

பின்  லாலீயே அந்த கல்லூரியிலேயே தங்க வசதியோடு இருப்பதால், செய்ய வேண்டிய பார்மால்டீஸ் அனைத்தும், முன் நின்று செய்து முடித்து கொடுத்தவள்,  அவள் தங்கும் அறை வரை வந்து, அனைத்து வசதியும் இருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு, லாலீயின் கைய் பேசி எண்ணும் தந்தவள் …

“எதுன்னாலும் என்னை அழைக்கலாம். கூச்சம் எல்லாம் பார்க்க தேவையில்லை.” என்று சொன்னவளை இது வரை கிண்டல் கேலி என்று பார்த்திருந்தவள் அவளின் அந்த  அக்கறையில் …

ஏனோ கண்கள் கலங்க… “தேங்ஸ்.” என்ற வார்த்தையை உள்ளார்ந்து சொன்னாள்.

 

[the_ad id=”6605″]

 

 

மணிமேகலையின் முகத்தை பார்த்த லாலீ… “நோ தேங்ஸ். நீ என் வீரா சொன்ன பெண். நான் எதுன்னாலும் செய்வேன்.” என்று சொல்லி விட்டு  சென்றவளின் முதுகையே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.

அப்படி என்ன இருக்கு…?அந்த வீராவிடம். இந்த பெண் என் வீரா என்று சொல்லும் அளவுக்கு. லாலீயின் செல்வநிலை அவள் வைத்திருந்த  காரில் இருந்தே மணிமேகலைக்கு தெரிந்தது.

அதோடு அவள் காதில் போட்டு இருந்த கம்பல், கழுத்தில் ஜெயினில்  போட்டு இருந்த பென்டெட்டின் அதன் ஜொலிப்பில், நான் உயர்ந்த வகை ஜாதி வைரம் என்று, பட்டயம்கட்டி  கூறியது.  செல்வ நிலை தான் இப்படி என்றால், அழகு…முட்டிக்கு மேல் போட்டிருந்த  ஸ்கர்ட்டில் சும்மா வெண்ணையை உருக்கி தேயோ… தேய் என்று தேய்ப்பாள் போலவே…மணிமேகலையின்   கண்ணுக்கு தெரிந்த பகுதியான  தொடையில் இருந்து, அவள் பாதம் வரை சும்மா வெண்மை  நிறத்தில், சும்மா  வழ வழ என்று  மணிமேகலை  கண்ணுக்கு காட்சி தந்தது.

குணமும்… யார்…?  என்று  தெரியாத தனக்கே  இந்த அளவுக்கு உதவி செய்கிறாளே… இதில் இருந்து தெரியவில்லையா…?அவள்  நல்ல குணம்.

எந்த வகையில் பார்த்தாலும்,  அந்த வட்டிக்காரனுக்கு இந்த வெளிநாட்டு பறவை செட்டாகலையே…ம் …இதுக்கு தான் காதலுக்கு கண் இல்லை என்பதோ…? என்று நினைத்தளுக்கு, கூடவே இது போல் தனக்கும் ஒரு கண் இல்லாதவன் மாட்ட வேண்டும் என்ற வேண்டுதலையும் வைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!