Thazhampoo Vaasam Nee 29 1
தாழம்பூ வாசம் நீ…..
29
இப்போதுதான் எலெக்ஷன் ரிசல்ட் வந்தது. தாமுவுடன் கட்சி அலுவலகத்தில்தான் லிங்கா இருந்தான். சாரங்கன் அங்கே மேலிடத்துடன் இருந்தார். சாரங்கன் அமோக வெற்றிப் பெற்றார் என செய்திகளில் வாழ்த்துகள் சொல்லிக் கொண்டிருந்தது சேனல்.
Advertisement
தாமு, தன் மாப்பிள்ளைக்கு சந்தோஷமாக கைகொடுத்தார். லிங்கா பெரிதாக அலட்டாமல் “ம்… மாமா… இனி எப்படியாவது நல்லது செய்திடுங்க” என்றான் சிரித்தபடியே.
தாமு தன் மாப்பிள்ளையை ஆனந்தமாக அணைத்துக் கொண்டார் “கண்டிப்பா… முடிந்த வரை… அராஜகத்திலிருந்து விலகி நிற்போம், கண்டிப்பா எந்த சாதி மத கலவரத்தையும் தூண்டி விடமாட்டோம் மாப்பிள்ளை.” என்றார் ஏதோ பதவி ஏற்கும் போதுச் சொல்லும் உறுதிமொழி போல.
அவரின் மாப்பிள்ளையும் “நடந்தால் சந்தோஷம்” என்றான்.
Advertisement
இந்த வாரத்தில் சக்தியை அழைக்க செல்ல வேண்டும் அதுவேதான் அவனின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
Advertisement
அப்படியே நாட்கள் இயல்பாய் சென்றது.. சக்திக்கு எக்ஸாம் நடந்து கொண்டிருந்தது இப்போது.
காவ்யாவின் திருமணம் முடித்து அங்கே கல்லூரிக்கு செல்லும் போது சக்தி கொஞ்சம் துவண்டு போனாள். ம்… கொஞ்சம் லோன்லியாக உணர தொடங்கினாள். இத்தனை நாட்கள் தனியாக இருந்தது தெரியவில்லை.
இப்போது எல்லோருடனும் இருந்துவிட்டு, ஊட்டிக்கு வந்ததும் அவள் முதலில் உணர்ந்தது தனிமையைத்தான். எப்போதும்.. எல்லோரும் உடனிருக்க பேசியபடியே இருந்த நாட்கள் அவளை தாக்கியது. எனவே அதனை போக்கவே தன் கணவனை அதிகம் தேடினாள் சக்தி.
Advertisement
கணவனுக்கும் அது புரிந்ததோ என்னமோ.. அவள் எந்த நேரத்தில் அழைத்தாலும்.. அவனுக்கு எந்த வேலையாக இருந்தாலும் ஒரு ஐந்து நிமிடம் பேசாமல் வைப்பதே இல்லை அவன். அது இன்னும் சக்தியுள் அவனை நிறைத்தது.
இருவரும் தூரமாக இருக்க இருக்க.. காதல் என்னமோ கூடியது இருவரிடமும். லிங்கா இப்போது அவளின் ‘ம்…’ என்ற எழுத்திற்கு கூட அர்த்தம் உணர்ந்தான். வாய்மொழியாக உடனிருப்பேன்.. கண் பார்த்து நடப்பேன் என ஏதும் அவன் சொல்லியது இல்லைதான். ஆனால், அதையெல்லாம் இப்போது சத்தமில்லாமல் செய்துக் கொண்டிருந்தான் லிங்கா.
அதிர்ந்து கூட பேச வராத தன் மனையாளை.. நேர்த்தியாக தாங்கி நின்று.. அவளுக்கு தேவையானவற்றை அவளின் கண் பார்த்தே செய்தான் சத்தமில்லாமல்.
[the_ad id=”6605″]
இன்றும் அப்படிதான், இன்றுடன் எக்ஸாம் முடிகிறது. எனவே சரியாக மாலை கல்லூரி வாசலில் வந்து நின்றான் லிங்கா. இந்த மூன்று மாதமாக அவளை வீட்டிற்கு அழைக்கவில்லை, தானும் வந்து பார்க்கவில்லை. எனவே கணவன் வந்துவிட்டான் கூட்டிச் செல்ல.
சக்திக்கு தெரியாதே லிங்கா வருவது, அவளுக்கு நாளைதான் தாமு வண்டி அனுப்புவதாகச் சொல்லி இருந்தார். எனவே அவள் நினைத்தும் பார்க்கவில்லை கணவன் வந்து நிற்பான் என.
சக்தி, தன் தோழிகளுடன் நடந்து கொண்டிருந்தவள் முதலில் கடந்துவிட்டாள்.. தன் கணவனை, பார்க்காது. பின் ஏதோ உறுத்தத் திரும்பிப் பார்த்தால் லிங்கா அவளையேப் பார்த்தபடியே நின்றான். அதை உணரவே முடியவில்லை அவளால்.
மெல்ல மெல்லத்தான் அவனிடம் வந்தாள். கணவனை பார்த்த அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் முகம் விகாசிக்க, தன்னையறியாமல் கணவனின் கை பற்றிக் கொண்டாள்.. கண்களில் நீர் நிறைந்து நின்றது.. இதோ.. உனக்காக வந்தேன் என்பதாக.. அந்த ஆனந்த கண்ணீர் நிற்க.. உதடுகளும் தன் பங்குக்கு மெல்ல தந்தியடித்தப் படியே “ம்.. வாங்க, தேங்க்ஸ்… நா… நான், நீங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கல…” என்றாள் முழுவதுமாக அவனின் நேசத்தில் திக்குமுக்காடி.
லிங்கா, தன்னவளின் முகத்திலிருந்து பார்வையை விலக்கவில்லை. அமைதியாக அவளின் கை பற்றிக் கொண்டான். ஒரு இரண்டு நிமிடம் ஏதும் பேசவில்லை அவன் கையின் இறுக்கம் சொல்லியது அவனின் நேசத்தை “போதும் டி.. வா போலாம்” என்றான் சுற்றும் முற்றும் பார்த்தபடி.
இருவரும் அங்குள்ள வீட்டிற்கு வந்து அவளின் திங்க்ஸ் எடுத்து கிளம்பினர். லிங்காவும் “தேவையானதை எடுத்து வா… மதத்த.. உங்க வீட்டிலிருந்து ஆள் அனுப்பி எடுத்துக்கலாம்…” என்றான்.
சக்தியும் மற்ற எல்லாவற்றையும் முடிந்த அளவு பேக்.. செய்து, எடுத்து ரெடியாக வெளியே வைத்தாள். நாளை வந்து அந்த அண்ணா எடுத்து வரட்டும் என.
இரண்டுமணி நேரம் சென்று தன்னுடைய முக்கிய திங்க்ஸ் மட்டும் எடுத்து… அப்படியே அங்கு வீட்டை கவனித்துக் கொண்டவர்களிடமும், தோழிகளிடமும் விடைபெற்றுக் கிளம்பினாள் கணவனுடன் சக்தி.
எதை எடுத்தாள் எதை விட்டாள் தெரியாது.. கைக்கு கிடைத்ததை எடுத்துக் கொண்டு வண்டி ஏறியாகிற்று. மனமெல்லாம் பரவச நிலையில் இருக்க சக்தி மிதந்து கொண்டிருந்தாள்.
லிங்கா புலம்பிக் கொண்டிருந்தான் “என்ன இப்போவாது போலாமா..” என கோவம் அவனுக்கு. அவன் ஏதோ வந்தவுடன் கிளம்பலாம் என நினைத்தால், இவள் என்னமோ.. இரவாக்கிவிட்டாள் என கோவம்.
வண்டி எடுத்த பிறகும் பேசவேயில்லை லிங்கா.. சக்தி “என்னங்க… “ என இழுத்தாள் சத்தம் வரவில்லை கணவனிடமிருந்து.
அப்போதே இருட்ட தொடங்க லிங்கா “சக்தி பேசாத.. இறங்கனும்… என்னை டிஸ்டர்ப் பண்ணாத” என்றான் மலை வழி பாதை என்பதால் கொஞ்சம் கவனம் வேண்டும் என்பதற்காக அப்படி சொன்னான். சக்தியும், பழிப்புக்காட்டி அமைதியாக அமர்ந்தாள், அப்படியே உறங்கியும் விட்டாள்.
லிங்காக்கு அதற்கும் கோவம் வந்தது “ம்.. நான் வண்டி ஒட்டிக்கிட்டு இருக்கேன்.. தூக்கத்த பாரு” என அவன் தனக்குள் புலம்பினான். நல்ல ட்ராபிக்.. எனவே வண்டி ஊர்ந்தது இறங்கவே நேரம் எடுத்தது.
மலை இறங்கி ஒரு உணவு விடுதியில் நிறுத்தினான்.. லிங்காக்கு நல்ல பசி. வண்டி நின்றதும் விழித்தாள் சக்தி “எங்க இருக்கோம்ங்க” என்றாள். தன் ப்ரியாவின் கலைந்த தோற்றமும் அவள் வாசமும் இப்போதுதான் லிங்கா உணர தொடங்கினான். ‘இன்னும் ஒருமணி நேரம்’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.
“ம்…” என்றபடி லிங்கா இறங்க, தன்னை சீர்படுத்திக் கொண்டு சக்தி இறங்கினாள். தன்னவனுடன் ஒட்டியே நடந்தாள்.. லிங்கா ஒரு இடத்தில் அமர, அங்கேயே ஒட்டி இருந்த சேரில் அமர்ந்தாள்.
லிங்கா லேசாக தொண்டையை செருமியப் படியே “க்கும்…” என்றான்.
[the_ad id=”6605″]
சக்தி “என்னங்க பேசமாட்டீங்களா..” என்றாள். லிங்காக்கு அதற்கு மேல் என்ன வேண்டும்.. “சாப்பிடு, வீடு போய் சேரலாம்… இங்க என்ன பேச்சு.. ம்… சீக்கிரம் சாப்பிடு” என்றான் அதட்டலாக.
சக்தி ஒன்றும் சொல்லாமல் தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உண்டாள். இருவரும் உண்டு முடித்து மீண்டும் வண்டி எடுத்து வீடு வந்தனர் மணி பத்துதான். மூர்த்தியும், காமாட்சியும் இவர்களுக்காக காத்திருந்தனர்.
சக்திக்கு அது அப்படி ஒரு ஆனந்தம்.. “மாமா.. அத்த.. “ என பேசியபடியே உள்ளே சென்றாள். கணவனை அங்கேயே விட்டு.. இது இப்போது பழகி இருந்தது லிங்காக்கு. “சக்தி… லக்கேஜ் எடு” என்றான்.
சக்தி “இருக்கட்டும் ங்க… காலையில் எடுத்துக்கலாம்” என்றாள். மனது கேட்காமல் தானே எடுத்து வந்தான். அதை பார்த்து மூர்த்தி மகனுடன் இரண்டு பாக் எடுத்து வந்து ஹாலில் வைத்தார்.
லதா இளா தம்பதி.. தீபக்கு லீவ் என்பதால்.. தங்கள் குடும்பத்துடன் சின்னதாக சுற்றுலா சென்றிருந்தனர். எனவே யாரும் இல்லை இவர்களை தவிர.
லிங்கா மேலே சென்றான் முடிந்ததை எடுத்துக் கொண்டு. சக்தி பேசி முடித்து.. மேலே வந்தாள்.
லிங்கா குளித்து ஷாட்ஸ்சுடன் நிற்க.. சக்தி “லிங்கு” என சொல்லியபடியே அவனை அணைத்திருந்தாள்.. லிங்காவும் அதற்கு ஈடாக அவளை இறுக்கி இருந்தான்.
சக்திக்கு “ஏன், டென்ஷனாகுறீங்க.. அப்படி உங்களை பார்க்கவே பயமா இருக்கு” என்றாள். இன்னும் லிங்கா அப்படியே இருந்தான்.. “பேசுங்க.. இப்போ என்ன கோவம்” என்றாள்.
லிங்காக்கு கோவமில்லை.. கோவமாக காட்டிக் கொண்டால்தான் அவள் தன்னை கவனிக்கிறாள் என உணர்ந்திருந்தான் எனவே, அப்படியே நின்றான்.
சக்தி “என்ன..” என அவன் இதழ் மீது முத்தமிட.. கணவன் அதனை தனதாக்கி கொண்டான்.. சாரலாக.. மென் சாரலாக ஆரம்பித்தாள் அவள்.. இவன் வரண்ட நிலமாக மாறி முழுவதையும் ஈர்த்து, இன்னும் பத்தாமல் மெல்லிதழ்களை.. வதைக்க… சக்தி “ம்…” என சுவாசத்திற்கு தவிக்க.. லேசாக அவளை விட்டவன் மீண்டும் பற்றிக் கொண்டான் இந்த முறை அவளின் வழி மென் சாரலாக நனைத்தான் அவளை.
[the_ad id=”6605″]
சற்று மெல்ல மெல்ல அவள் இதமாக.. லிங்கா அவளைவிட்டான். சக்தி திணறிய படியே அவனிடமிருந்து விலக நினைக்க. லிங்கா அவளை விடவில்லை. நெற்றி கன்னம் காது என அவன் மெல்ல தனது பயணத்தை தொடங்க.. சக்தி அவனிடம் சரணாகதி அடைவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
லிங்கா ஏதும் பேசவில்லை.. தன்னவளை தன் மௌனத்தால் ஆட்க்கொண்டு… அவளிடம் தன்னை தொலைத்தப் பிறகே ஓய்ந்தான்.
மெல்லிய Acயின் சத்தம் மட்டுமே கேட்டது அங்கு. இருவரும் விழித்தே இருந்தனர்.
மெல்ல சக்தி “மாமாக்கு என் மேல இன்னும் என்ன கோவம் “ என்றாள் அவன் நெஞ்சில் தலைசாய்த்துக் கொண்டு.
லிங்கா இப்போது சிரித்தான் “ஹேய்.. என்ன சொன்ன.. என்ன சொன்ன” என்றான் சந்தோஷ குரலில், அவளின் முகத்தை நிமிர்த்தியபடி.
சக்திக்கு வெட்கம் வந்தது.. “ம்.. ஒன்னுமில்ல ஒன்னுமில்ல” என்றாள்.
“ஓ… ப்யார்.. சொல்லுடா..” என்றான் வார்த்தைக்கும் வலிக்காமல் அவளுக்கும் வலிக்காமல் மென்மையாக அவளின் உதடுகளில் முத்தம் வைத்துக் கேட்க.. சக்தி “என் மாமாக்கு என்ன கோவம்னு கேட்டேன்” என்றாள், வெட்கத்துடன்.
