Skip to content
Post Views: 300
“மா அண்ணா எங்க. காலையிலிருந்து நான் பாக்கவே இல்ல” என வந்தாள் அன்புவின் இரண்டாவது சகோதரியும் மணப்பெண்ணமான தமிழரசி.
“இங்க தாண்டி எங்கேயாவது இருப்பான் பிரியாவ போய் வெளியில் பார்க்க சொல்லு” என்றவர் “ஆமா எதுக்கு இப்போ அவன தேடுற” என்று சந்தேகமாக கேட்டார் அன்புவின் தாய் செல்வி
Advertisement
“ஏம்மா அண்ணன நான் தேடக் கூடாதா”
“ஏய் உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும் காரணம் இல்லாம அவன நீ தேட மாட்ட உனக்கு இப்ப என்ன வேணும் சொல்லு” என்றார் கரராக
Advertisement
Advertisement
“ஏம்மா இப்படி எல்லாம் பேசுற எனக்கு ஏதாவது தேவை இருந்தா தான் அண்ணனை தேடுவேனா. ஒரு பாசத்துல அவனைத் தேட மாட்டானா”
“இதுவரை நீ அப்படிதாம்மா பண்ண. இப்ப புதுசா பாசம் சொல்லவும் எனக்கு சந்தேகம் வந்துட்டு”
Advertisement
“மா என்னமா நீயே இப்படி சொன்னா மத்தவங்க என்ன பத்தி என்ன நினைப்பாங்க. அவ்ளோ ஒன்னும் மோசமான பொண்ணு இல்ல மா நான்”
“இங்க பாரு உன்னோட டிராமா எல்லாம் உங்க அண்ணன்கிட்ட வச்சுக்க நான் உன் அம்மா என்கிட்ட இதெல்லாம் செல்லுபடி ஆகாது உனக்கு ஒன்னு வேணும்னா எப்படி இப்படி எல்லாம் பிளே பண்ணுவனு எனக்கு நல்லா தெரியும். உன்னோட இந்த நடிப்ப பார்த்தா உன் அண்ணன் வேணா ஏமாறலாம் ஆனா நான் ஏமாற மாட்டேன் சரியா. இந்த அழுது டிராமா போடுற வேலை எல்லாம் இங்க வேண்டாம் ஒழுங்கா கண்ணை தொடச்சிட்டு போய் கல்யாண பொண்ணா ஒழுங்கா லட்சணமா இருந்து கல்யாணம் பண்ணிட்டு போற வழிய பாரு”
“ஏம்மா இப்படி பேசுற எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா நாளைக்கு இந்நேரத்துக்கு உங்க எல்லாத்தையும் பிரிஞ்சு நான் போடுவேன். அந்த பீலிங்ஸ் கொஞ்சமாவது உனக்கு இருக்குதா” என்றாள் அதங்கமாக
“எது பீலிங்சா உன்னை எப்படா இந்த வீட்ட விட்டு துரத்துவோம்னு இருக்கு. ஆனா ஒன்னு நீ கல்யாணம் முடிஞ்சு போற வீட்டிலையாவது ஒழுங்கா பொழைக்கிறதுக்கு வழிய பாரு அத விட்டுட்டு அங்கேயும் நான் தான் முதல்ல நிக்கணும் எனக்கு அப்புறம் தான் எல்லாரும் அப்படிங்கற எண்ணத்துல மட்டும் இருக்காத. அவ்வளவு தான் சொல்லுவேன் பாத்துக்க. போ போயி ஒழுங்கா மூஞ்சிய கழுவிட்டுக் கல்யாண பொண்ணு மாதிரி ஒரு இடத்துல உட்காரு” என்று அவளை திட்டி விட்டு திரும்பியவர் உள்ளே வந்தவர்களை பார்த்து வேகமாக அவர்களிடம் சென்று பிரதாப் கையில் இருந்த குழந்தையை வாங்கி, “செல்லம் எப்படா வந்தீங்க இந்த பாட்டியை பார்க்க உங்களுக்கு எத்தன நாள் ஆகிட்டு” என்று அவள் இரண்டு கன்னத்திலும் முத்தமிட்ட தொடங்கினார்.
அவரின் இந்த திடீர் பாசத்தை பார்த்து குழந்தை மிரண்டு அழ ஆரம்பிக்க அவரின் கையிலிருந்து குழந்தையை பிடுங்கிய பிரதாப், “ஆமா எப்பவும் பாசமா இருந்தா குழந்தை சேரும் திடீர்னு வந்து அன்ப கொட்டுனா அது பாவம் மிரள தானே செய்யும். அது என்ன நம்மள மாதிரி நிமிஷத்துக்கு நிமிஷம் நடிக்கவா தெரியும்” என்றான் குத்தலாக
“டேய் ஏன்டா இப்படி பேசுற என்ன பத்தி உனக்கு தெரியாதா அப்படி இருந்தும் ஏன் இப்படி பேசுற” என்றார் வருத்தமாக
“என் பிரண்டோட அம்மாவா எனக்கு உங்களைப் பத்தி நல்லா தெரியும் ஆனா என் தங்கச்சியோட மாமியாரா உங்கள பத்தி எதுவும் தெரியாது”
அவன் இப்படி மூன்றாவது மனிதர் போல் பேசியது அவருக்குள்ளே வலி கொடுத்தது. இன்று நேற்றல்ல அன்பும் பிரதாப்பும் சிறுவயதிலிருந்து ஒரே பள்ளி மற்றும் ஒரே காலேஜில் படித்தவர்கள் கிட்டத்தட்ட அன்பு வீட்டில் பிரதாப்பும் ஒரு பிள்ளை போல தான். அன்புப் பற்றி அவன் தாய் தந்தைக்கு தெரிந்ததை விட இவனுக்கு தான் அதிகமாக தெரியும். இருவருக்கு இடையே எந்த ஒளிவு மறைவும் கிடையாது. அன்பு விழி மீது காதல் கொண்டதை முதல் முதலில் இவனிடம் தான் பகிர்ந்து கொண்டான். அவன் வாழ்க்கையில் நடந்ததை பற்றி அவனைவிட இவனுக்கு தான் நன்றாக தெரியும். அப்படிப்பட்டவர்கள் இடையில் கல்லூரி படிப்பை முடித்தவுடன் பிரதாப் துபாயில் ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த வேலை கிடைத்து அங்கு சென்று விட்டான். அதனால் இருவருக்கும் இடையே சிறு இடைவெளி விழுந்தது.
அன்புவின் தந்தை இறந்தப் போது அவன் துபாயில் தான் இருந்தான் அவன் இருந்திருந்தால் கண்டிப்பாக இவனை அவ்வளவு கஷ்டப்பட விட்டிருக்க மாட்டான். அதேபோல் அவனின் திருமணம் கூட பிரதாப்புக்கு தெரியாமல் நடந்தது தான். இத்தனைக்கும் பிரதாப் சித்தியின் மகளை தான் அவன் திருமணம் செய்தது அவன் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த திருமணத்தை நடக்க விடாமல் செய்து பலரின் நிம்மதியே காப்பாற்றி இருப்பான் ஆனால் விதி யாரை விட்டது.
அனைத்தும் முடிந்த பிறகு தான் அவனுக்கே தெரிந்தது. ஒருபுறம் நண்பன் ஆசைப்பட்ட வாழ்க்கை என்றால் இன்னொரு புறம் தங்கையின் வாழ்க்கை இதற்கு நடுவில் ஒன்றும் அறியாத அப்பாவி பெண்ணின் வாழ்க்கையும் அல்லவா போய்விட்டது என்று அவன் வருந்தாத நாள் இல்லை. அந்த நிகழ்வில் எதுவும் பேசாமல் இருந்த அன்புவின் மீது கோபம் கொண்டு அவனுடன் பேசாமல் இருந்தவன் அடுத்து வந்த மான்விழியின் வருகையால் சரி இனி நடந்ததை மாற்ற முடியாது விதிப்படி எல்லாம் நடந்தது என நினைத்து பேச தொடங்கியவன் இது முடிவல்ல இதுதான் ஆரம்பம் என்பது போல இருவரின் பிரிவும் அவனுக்கு அதிர்ச்சியை தந்தது.
ஆசைப்பட்ட வாழ்க்கையும் தவற விட்டுவிட்டு கையில் கிடைத்த வாழ்க்கையும் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டிருக்கும் நண்பனை கொன்றுவிடும் அளவிற்கு அவனிடம் கோபம் உள்ளது. அந்தக் கோபத்தையும் தாண்டி ஏதாவது செய்து அவன் வாழ்க்கையை திரும்ப தந்துவிட முடியாதா என்று ஒரு ஏக்கமும் அவனிடம் உள்ளுக்குள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அதோடு ஒரு தாயாய் வீட்டின் தலைவராக இருந்து இருவருக்கும் நல்வழி சொல்லாத செல்வியின் மீதும் அவனுக்கு கோவம் தான் அதனை தான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் இப்படி சொல்லி காட்டுகிறான். அவனின் இந்த ஆதங்கமும் செல்விக்கு புரியாமல் இல்லை இருந்து என்ன செய்வது தெரியாமல் திண்டாடி கொண்டு இருக்கிறார்.
“ஏண்டா அவங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை வந்ததுக்கு என்னால என்ன பண்ண முடியும் ஏன் என் மேல கோபப்படுற” என்றார் ஆதங்கமாக
“ஏன் அத்த உன் மகள்ல யாராவது ஒருத்தரோட வாழ்க்கை இப்படி பிரச்சனை வந்து உன் வீட்டில் வந்து இருந்தா நீ எனக்கேன்னு சும்மா இருப்பியா அவங்கள சமாதான படுத்த மாட்டியா என்ன”
“டேய் என்ன பேச்சு பேசுற வாயில போட்டுருவேன். இனி தான் என் பொண்ணுக்கு கல்யாணமே ஆகப்போகுது. அதுவும் நாளைக்கு கல்யாணத்தை வச்சுட்டு என்ன பேச்சு பேசுற நீ. இப்படியெல்லாம் ஆச்சாரியமா பேசாதடா நெஞ்சு அப்படியே பதறி போகுது ” என்று பதறினார்.
“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கே உங்களால தாங்க முடியல இத்தனைக்கும் உங்களுக்கு மூணு பொண்ணுங்க ஆனா எங்க சித்திக்கு ஒரே ஒரு பொண்ணு தான் அது வாழ்க்கை இப்படி இருக்கும் போது அதுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் சொல்லு. நீங்க நெனச்சிருந்தா அந்த பிரச்சினையை முதலிலேயே ஸ்டாப் பண்ணி இருக்கலாம் ஆனா நீங்க பண்ணது என்னனு கொஞ்சம் நீங்களே யோசிச்சு பாருங்க” என்று அவன் கேட்டதற்கு பதில் மொழி சொல்ல முடியாமல் கலங்கி நின்றார் செல்வி.
அவன் சொல்வது உண்மைதானே தான் நினைத்திருந்தால் இருவரிடமும் பேசி அதனை சரி செய்து இருக்க முடியும். ஆனால் அந்த நிமிடத்தில் தனது பெண்களின் வாழ்க்கை அல்லவா முதலில் தெரிந்தது அதனால் தான் அமைதி காத்தது உண்மை தெரிந்திருந்தும் பேசாமல் இருந்ததும் கூட அன்று அமைதியாக நின்றதற்கு இன்று இந்த சின்னப் பையன் முன்பு தலைகுனிந்து நிற்க நேர்ந்துவிட்டது என்று தனக்குள் வாதாடி கொண்டு இருந்தார்.
அவரை அப்படி பார்க்க முடியாமல், “சரி விடுங்க அத்தை இதுதான் நடக்கும்னு இருந்திருக்கு அத யாராலும் மாற்ற முடியும். இனிமேட்டு இந்த பிரச்சினைய சரி பண்ண பாருங்க” என்றான் தணிவாக
அதற்கு அவர் ஏதோ மறுமொழி சொல்ல வருவதற்கு முன்னே, “அண்ணி” என்ற அழைப்புடன் வேகமாக ஓடி வந்து விழியே அணைத்துக் கொண்டாள் பிரியா.
அதனைக் கண்டு அனைவரும் அதிர்ந்து நிற்க அவர்களுக்கு இது அல்ல அதிர்ச்சி இதற்கும் மேலே உள்ளது என்பதை போல் பிரியாவின் கையை பிடித்து இழுத்து தன் முன்னே நிறுத்தி, “ஏய் யாருடி உனக்கு அண்ணி சொல்லுடி யாரு அண்ணி மொத்த குடும்பமும் சேர்ந்து ஏதேதோ பிளான் பண்ணி என்ன இந்த வீட்டை விட்டு அனுப்பிட்டு புதுசா ஜோடி சேர்க்க பாக்கீங்களா” என்று கண்கள் சிவக்க பத்திரகாளி போல் கத்திக் கொண்டு நின்றாள் இளவேனில் சுரபி.
முன்பு பேச வேண்டிய இடத்தில் பேசாது அமைதி காத்ததால் தனது வாழ்க்கையை இழக்க பார்த்தவள் இப்போது அனைவரின் வாழ்க்கையும் புரட்டிப்போட்டு, அவிழாத பல முடிச்சுகளை அவிழ்த்து, பிறர் நெஞ்சம் காயப்படக்கூடாது என்று பல காயங்களை வாங்கியவள் இப்போது வட்டியும் முதலுமாய் அத்தனையும் திருப்பித் தர வந்துவிட்டாள் அவள்.
அவள் வேறு யாரும் இல்லை இவர்கள் அத்தனை பேரின் தலையெழுத்தையும் மாற்றி அமைத்த சாட்சாத் அன்பரசனின் மனைவி இளவேனில் சுரபி தான்.
இப்ப சொல்லுங்க மக்களே அன்ப விழிக்கு கொடுப்போமா??? இல்லை இளவேனில்க்கு கொடுத்துடுவோமா???..
error: Content is protected !!