Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 5

என்னவள்_5

 

சற்று நேரத்தில் எல்லாம் விழா மேடைக்கு அழைத்து வந்து இருந்தனர் இருவரையும் மாயாவின் அழங்காரம் கார்த்திக்கின் கம்பிரம் என பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது இவர்களின் தோற்றப்பொருத்தம் அங்கே ஸ்டேஜ் டெக்கரேஷன் கூட இரவு நேரத்திற்கு இதமாக மெல்லின சந்தன நிறத்தில் பல ஆர்கிட்டெக் மலர்கள் கொண்டு லேசான வெளிச்சத்தோடு தேவலோகம் போல காட்சி தந்தது. அப்போதே சற்று தொலைவில் வந்தவர்களுக்கு பஃபே முறைப்படி ஒரு புறம் உணவு பறிமாரப்பட்டு கொண்டு இருந்தது. 

 



Advertisement

அங்கும் வட்டவடிலான இருக்கைகள் 

அமர்த்தப்பட்டு  அங்கிருந்தே ஸ்டேஜை  பார்க்கும்படி அமைத்து இருந்தனர். 

இருவருக்கும் லேசான  மலர்களால் கட்டிய மாலையை அணிவித்து நிற்க வைத்து இருந்தனர். ஒருபுறம் ஆர்கெஸ்ட்ரா மெலிதான இசைபறப்ப மறுபுறத்தில் அதற்கேற்றாற் போல் சிறுவர்கள் நடனமாடிக்கொண்டு இருந்தனர். 

Advertisement

 

Advertisement

விடியோ,போட்டோ என அவர்கள் ஒரு புறம் தங்களது வேலையை ஆரம்பம் முதல்அனைத்து நிகழ்வுகளையும் தனது கேமராவில் சிறை எடுத்து கொண்டு இருந்தனர். வந்தவர்கள் பெரும்பாலும் உறவினர்கள் அதுவும் பெண்வீட்டு உறவினர்கள் சற்று அதிகமாகவே வந்து இருந்தனர். கார்த்திக் பக்கத்து மனிதர்கள், உறவினர்கள் சற்று குறைவாகவே இருந்தனர். தொழில் ரீதியாக நிறைய பேரை அழைத்து இருந்தான். வந்தவர்களிடம் இரண்டு வார்த்தை பேசி சிரித்து அனுப்பி வைத்து கொண்டு இருந்தான்.

 

அருகில் நின்றிருந்த மாயாவின் கண்கள் அடிக்கடி கார்த்திக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தாள். 

Advertisement

சற்று தொலைவில் அவளது சித்தி கூடவே பியூட்டிசியன் இருவரும் இவளுக்கு உதவ நின்றிருந்தனர். 

 

கார்த்திக்கிற்கு வாழ்த்து சொல்ல வந்தவர்களை வரவேற்று பேசி அனுப்பவே நேரம் சரியாக இருந்தது  இது வரையிலுமே மாயாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க வில்லை.  அதுவே மாயாவின் மனதில் ஒரு மாதிரியாக இருந்தது. 

 

‘இவ்வளவு அழகான யாருக்கு மேக்கப் போட்டுட்டு வந்து இருக்கிறேன் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்கறான். சரியாக…தயிர்  சாதம் போல இருக்கு. டேய் நிமிர்ந்து தான் பாரேன் நீ அழகா இருக்கறன்னு ஒரு வார்த்தை சொன்னால் குறைஞ்சா போயிடுவ இப்படி மனதிற்குள் அவனை கழுவி காயப்போட்டுக் கொண்டாள்.’ 

 

[the_ad id=”6605″]

 

 

 

அது அவனுக்கு கேட்டதோ இல்லையோ பிருந்தாவிற்கு கேட்டு இருந்ததோ..அருகில் அவளது நண்பர்கள் சிலரை அழைத்து வந்தவள். “இது தான் எங்க அண்ணி அழகான இருக்கறாங்கல்ல அண்ணி இவங்க எல்லாம் என் கூட படிக்கறவங்க…என அறிமுக படுத்தினாள்.”

 

வந்ததில் ஒரு பெண் “சூப்பராக இருக்கறிங்க சினிமா ஸ்டார் மாதிரி..பிருந்தா ஸ்கூல் சொல்லும் போது கூட தெரியவில்லை இங்கே வந்து பார்த்தா தால் தெரியுது அவள் சொன்னது எவ்வளவு சரின்னு..உங்களுக்கு தெரியுமா உங்களை பார்த்துவிட்டு வந்த நாளில் இருந்து உங்கள் புராணம் மட்டும் தான் பேசிட்டு இருக்கறா அதுக்காகவே இன்றைக்கு ஃபங்சனுக்கு வந்தேன் உங்களை பார்க்கறதுக்காக…”

 

இப்போதும் மாயா வேண்டா வெறுப்பாக ஒரு புன்னகை புரிந்தவள் ,’யார் சொல்வாங்கன்னு எதிர் பார்த்தா யார் வந்து சொல்லறாங்க பாரு என்ன நினைத்து கொண்டாள்’.. 

 

சற்று நேரத்தில் எல்லாம் இருவருக்கும் வாங்கி இருந்தது வைர மோதிரம் எடுத்து வர அண்ணனுக்கு அருகில் பிருந்தா இருக்கையில் குடும்ப உறுப்பினர்கள் சூழ இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டனர். 

 

அப்போது தான் முதல்முதலாக மாயாவை பார்த்தது. ஏன் தன் தாயாரும், தங்கையும் பார்த்ததும் உடனே சரி சொன்னார்கள் என்பது அப்போது தான் புரிந்தது. நல்ல அழகி முகத்தை பார்த்தவன் கண்களை அகற்றாமல் பார்த்து கொண்டு இருந்தான். இனி தனக்கு உரிமையாக போகிறவள் என்ற கண்ணோட்டத்தோடு.. இவனது பார்வை பட்டதும் அவளுக்கும் லேசாக முகம் சிவக்க ஆரம்பித்தது.

 

முகம் சிவந்தபடியே ,”கார்த்திக் எல்லோரும் பார்க்கறாங்க மோதிரம் போடனும் கையை கொடுங்கள் எனக் கூறினாள்.”

 

“இந்த டிரஸ் உனக்கு அழகா இருக்கு நீயும் அழகா இருக்கற என்றபடி கையை நீட்ட”..

 

“ஷப்பா எப்படியோ இப்பவாவது முகத்தை பார்த்து சொன்னிங்களே இன்றைக்கு மட்டும் சொல்லாமல் போய் இருந்திங்க நான் என்ன பண்ணி இருப்பேன்னு எனக்கே தெரியாது .இதையும் சிரித்தபடி கூறியபடியே கையில் மோதிரம் அணிந்து விட அப்போது அவள் சொன்னது அவனுக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை.”  

 

ஆனால் அடுத்து சில நிமிடங்கள் கழித்து இருவரையும் நிற்க வைத்து குடும்ப உறுப்பினர்கள் மட்டும் சில போட்டோ எடுத்து விட்டு நகர…

 

அண்ணா நான் உங்கள் ரெண்டு பேருக்கும் நடுவே நின்று ஒரு ஃபோட்டோ எடுக்கனும் என்றபடி நடுவில் நின்றவள் அப்படியே தன் செல் பேசியிலும் போட்டோ எடுத்து கொண்டாள்.

 

“அண்ணி இன்ஸ்ட்ரா போடப்போறேன். இன்றைக்கு லைக்கு உள்ள போகுது பாருங்க என சொல்லியவள் நிறைய ஃபோட்டோஸ் எடுத்து இருக்கிறேன் ணா..இனி தினமும் ஒரு ஃபோட்டோ அப்லோட் பண்ண போறேன் என்றபடி பட்டு உடை சரசரக்க நகர்ந்து சென்றாள்”. 

 

[the_ad id=”6605″]

 

 

“மாயா உன்னோட மிக பெரிய ரசிகை இவளாகத்தான் இருப்பா..தினமும் உன்னை பற்றி பேசாத நேரமே கிடையாது வீட்டில் தெரியுமா..”இயல்பாக கார்த்திக் பேச ஆரம்பித்து இருந்தான் மாயாவிடம்.

 

‘நீயும் அதுமாதிரி என் பேரை மட்டும் தான் உச்சிகாகற நாள் ரொம்ப தூரத்தில் இல்லை கார்த்திக் ‘,என மனதிற்குள் நினைத்தவள் சிரித்து வைத்தாள். அப்போது அங்கே மேடையில் ஒரு குழந்தை இங்கேயும் அங்கேயும் ஒட்டிக்கொண்டு இருந்தது.  

சற்று நேரம் பார்த்தவள் அந்த குழந்தையை  அருகில் அழைத்தாள்.”குட்டி இங்கே வாங்க… என்ன அந்த குழந்தை அருகில் வரவும் உன்னோட 

அம்மா எங்கே இருக்கறாங்க என்ன கேட்க சற்று தூரத்தில் நின்ற தனது தாயாரை கைநீட்டி காட்டினாள் அந்த மூன்று வயதே நிறைந்த அந்தக் குழந்தை…”

 

அருகில் இருந்த சாக்லேட் ஒன்றை எடுத்து அந்த குழந்தையின் கையில் தந்தவள் “இந்தா நீ ஒன்று சாப்பிட்டுக்கோ…அப்படியே  இதை அம்மாவிடம்  கொண்டு போய் கொடு. என்ன தந்து விட்டவள் இவனிடம் திரும்பி இங்கேயும் அங்கேயும் ஒடி விடியோ எடுக்கறதை ஸ்பாயில் பண்ணுது இந்த குழந்தை இனி இப்போதைக்கு இந்த பக்கம் வராது என இவள் இவனிடம் கூறிய போது தான் புரிந்தது இவள் நடந்து கொண்டதன் அர்த்தம். “

 

நாசுக்காக மட்டும் அல்ல மிக நாகரீகமாவும் தனது தேவையை மட்டும் நிறைவேற்றி கொள்வால் என்பது புரிய ஆரம்பிக்க இத்தனை நேரம் அவளின் மேல் இருந்த மயக்கம் லேசாக கலைந்தது கார்த்திக்கிற்கு…

 

‘முதல் முதலாக யோசிக்க ஆரம்பித்தான் நீ முன்னாடியே ஒரு தடவை இவளை நேரில் பார்த்து பேசி இருக்கலாம் கார்த்திக்  இப்பப்பாரு நீ எதிர் பார்க்க எந்த குணமும் இந்த பொண்ணு கிட்ட இருக்காது போல இருக்கு எப்படி  இவள் வீட்டில் அம்மா கூட பிருந்தா கூட இவளால் எப்படி ஒட்டுதலாக இருக்க முடியும் சின்ன குழந்தை விஷயத்தில் கூட இவளால்  பொறுமையாக போக முடியவில்லை எனும் போது பிருந்தா  இந்த நிமிடம் வரைக்கும் குழந்தை போல தானே வெகுளியாக இருக்கறா..என யோசித்தவனின் பார்வை நேராக ஸ்டேஜிற்கு முன்பாக இவர்களை தனது மொபைலில்  எதிரில் இருந்து கொண்டு படம் பிடித்து கொண்டிருந்த பிருந்தாவை தான் நேராக பார்த்தான்’.

 

இவன் பார்க்கவுமே அவளும் பார்த்தவள் ஏதாவது வேணுமாண்ணா என்றபடி ஜாடையில் கேட்க…”இல்லை என்பது போல மறுத்து தலையசைத்தான்”. அதற்கு பிறகும் ஃபோட்டோ ,விடியோ என்ன இருவயையும் தனித்தனியாக, பிறகு இருவரையும் இணைத்து எடுத்த பிறகு உணவு உண்ண செல்லும் போது பத்து மணியை தாண்டி இருந்தது. 

 

விழாவிற்கு வந்தவர்கள் பெரும் பாலோர் புறப்பட்டு இருந்தனர். கடைசியாக இருந்தது இருவரது குடும்பமும் தான்  இன்னும் மாயாவின் நண்பர்கள் சிலரோடு அவரது சித்தியும் ஒரு புறம் பேசிக்கொண்டு இருக்க இங்கே கார்த்திக் மாயாவின் தந்தையின் அருகில் சென்று அமர்ந்தான்.

 

இவன் அவர் புறம் சென்று அமரவுமே “தேங்க்ஸ் கார்த்திக் நல்ல படியாக நிச்சயம் முடிஞ்சிடுச்சு இதே மாதிரி கல்யாணமும் முடிஞ்சுதுன்னா நிம்மதியாக இருப்பேன்.” 

 

“என்ன அங்கிள் இப்படி சொல்லறிங்க ,நல்லபடியா நடக்கும் என்றபடி மாயாவை ஒரு பார்வை பார்த்தபடி கேட்க.,.

 

“என்ன சொல்ல கார்த்திக் இவள்  விஷயத்தில் தப்பு பண்ணிட்டமோன்னு எப்பவுமே தோணுது. சின்ன வயதில் இருந்தே ஹாஸ்டல் வாசம் அது முடிக்கவும் யுஎஸ்க்கு படிக்க கிளம்பிட்டா..சரியா அவளை புரிஞ்சிக்க தெரியவில்லையா இல்லை முடியலையான்னு எனக்கே தெரியலை எங்களை விடவும் அவளுக்கு அவளது சித்தியை தான் ரொம்ப பிடிக்குது. நிறைய பிடிவாதம், நிறைய அடம் தனக்கு ஒன்று வேணும்னா அதை நிறைவேற்றிக்க எந்த எல்லைக்கும் போகிற குணம் இதெல்லாம் யோசிச்சு பயப்படாது நேரமே இல்லை .எனக்கு இப்போது அந்த பயம் இல்லை உங்கள் வீட்டுக்கு வராலே எல்லாமே சரி ஆகிடும்ன்னு தோணுது. ஏன்னா லஷ்மியோட குணம் அப்படி..யாராக இருந்தாலும் மாறிடுவாங்க…”

 

“அங்கிள் தேவையில்லாமல் கவலை படறிங்க இத்தனை பயம் தேவை இல்லை. எனக்கு அப்படி எல்லாம் தெரியலை கொஞ்சம் தன்னுடையது  அப்படிங்க எண்ணம் இருக்கு மற்றபடி உங்கள் பொண்ணு ஒகேன்னு தான் தோணுது”.

 

” சூழ்நிலையை புரிஞ்சிட்டு அனுசரிச்சும் போகனுமே…தேங்க்ஸ் கார்த்திக் ..எங்க நீ தான் சம்மதிக்க மாட்டாயோன்னு நினைச்சேன்…தேங்க் காட்   நீதான் எனக்கு பெரிய நிம்மதியை தேடி தந்து இருக்கற.”.

 

“அவர் சொல்லும் போதே அங்கிள் இப்படி எல்லாம் யோசிச்சு உடம்பை கெடுத்துக்காதிங்க நாங்கள் எல்லாம் எதுக்காக இருக்கிறோம் பார்த்துக்கலாம் ஆறுதலாக கையை பிடித்து கொள்ள அப்போது மாயா நண்பர்களோடு இவனை நெருங்கினாள். “

 

“என்ன அப்பா ரொம்ப நேரமாக பேசிட்டு இருக்கற மாதிரி இருக்கு. கார்த்திக் இவங்க என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் இங்கே தான் பக்கத்தில் இருக்கறாங்க..ப்ளஸ்டூ வரைக்கும் ஒரே ஸ்கூல்ல படிச்சவங்க இடையில் கொஞ்ச நாள் டச் இல்லாமல் இருந்தது இப்போது இங்கே வரவும் மறுபடியும் சேர்த்துட்டோம். “

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஹாய் சாப்பிட்டாச்சா எல்லோரும்…சம்பிரதாயமாக கேட்க..”

 

“சாப்பிட்டாச்சு  புறப்பட வேண்டியதுதான்” என்றவர்கள்..புறப்பட்டபடியே  மாயாவிடம்  “யூ ஆர் லக்கி மாயா போன வாரம் ஸாரோட ஆர்டிக்கல் ஒன்று இந்த வாரம் புக்ஸ்ல வந்துச்சு..என்னோட ஃப்ரெண்டுங்க எல்லோருமே இவரை பற்றி தான் பேச்சு இனி எல்லோர்கிட்டேயும் சொல்லிடுவேன். என்னுடைய ஃப்ரண்டை கட்டிக்க போகிறவர் இவர்தான்ன்னு…”

 

“ம்..ம்..கொஞ்சம் கர்வத்தோடு தலையாட்டி அனுப்பி வைத்தாள். அதே பார்வைதான் கார்த்திக்கை பார்க்கும் போதும் இருந்தது.  இவன் தனக்கு உரியவன் என்கிற எண்ணம் மட்டும் நிறைய இருந்தது.  அவனோடு கூடவே வரப்போகின்ற உறவுகளை பற்றிய எந்த எண்ணமும் அப்போது மட்டும் அல்ல எப்போதும் அவளுக்கு இல்லை.”  

 

சில பெண்களின் மனம் இப்படி தானே இருக்கிறது கணவனாக வரப்போகிறவன் வேண்டும் அவனுடைய வசதி வாய்ப்புகள் அனைத்தும் வேண்டும் அதுவும் தனக்கு மட்டுமே உரிமையானது என்கின்ற எண்ணம் ஆனால் அவன் பக்கத்து உறவுகள் மட்டும்அல்ல எதுவுமே தனக்கு தேவையில்லை என்கின்ற  எண்ணம் இதில் மாயா தெளிவாக இருக்க…மாயாவின் தந்தையோ நல்ல இடம், அன்பான குடும்பம் இனி தனது மகளுக்கு எந்த பிரச்சினையும் வந்து விடாது இனி ஒரு குடும்பமாக வாழ்க்கையை இனிதே துவங்கி நன்றாக வாழ்நாள் என அவர் ஒரு புறம் கனவு கண்டு கொண்டு இருந்தார்.

 

ஒன்றை மறந்து விட்டார் தான் வளர்த்ததில் தவறு இருக்க இத்தனை நாள் மாறாத பெண் எப்படி ஒரே நாளில் மாறிவிடுவாள் என்பதை. . ஒருவேளை  அது கார்த்திக் குடும்பத்தினர், கார்த்திக்கின் மேல் கொண்ட நம்பிக்கை அது. 

 

ஆனால் ஒன்றை கவனிக்க தவறி இருந்தார் கார்த்திக்கின் உலகம் அவனது வீடு தான் என்பதை…அவனது பலம்,பலகினம் ரெண்டுமே அவனது குடும்பம் மட்டுமே என்பதை…ஆரம்பம் முதலே இவனது உலகம் இவனது வீடு, பொருக்கி எடுத்தது போல நண்பர்கள் வட்டம் அடுத்தது அவனது தொழில் இவன் குடும்பத்திற்கு அடுத்த படியாக நேசிப்பது…

 

அங்கிருந்து புறப்படும் போது நேரம் பதினோருமணியை தாண்டி இருந்தது.  மாயாவின் குடும்பத்தினரிடம் விடைபெற்று கொண்டு வீட்டிற்கு புறப்பட்டனர். மாயாவும் மகிழ்ச்சியாக லஷ்மி,பிருந்தா இருவரையும் லேசாக அணைத்து சிரித்தபடி விடைகொடுத்தாள். 

 

வீட்டிற்கு வரவுமே லஷ்மி  கூட வந்தவர்கள் தாங்குவதற்கு ரூம்பை ஒதுக்கி கொடுத்தவர் பிறகு  கார்த்திக்கின் அறை நோக்கி சென்றார். கையில் பால் டம்ளரோடு வந்தவர் “கார்த்திக். ஃபங்சன் நல்ல படியாக எந்த குறையும் இல்லாமல் நடந்து முடிஞ்சாச்சு.”.என்று சொல்லும் பிருந்தாவும் வந்து இருந்தாள். 

 

“கார்த்திக் அண்ணா”…என்று உள்ளே வரவும்..

 

“பிருந்தா செல்லம் அண்ணாவுக்கு ரொம்ப டயர்டா இருக்கு ப்ளீஸ் என்ன தூங்க விடு நாளைக்கு பேசலாம் சரியா..”

 

“பிருந்தா காலையில் பேசிக்கோ..வா போகலாம் என நிற்க விடாமல் அழைத்து சென்றார் லஷ்மி “, இவர்கள் சென்ற  சில நிமிடத்திலேயே தூங்கி இருந்தான் கார்த்திக்.  

 

திருமணத்திற்கு பிறகு மொத்த நிம்மதியையும் தொலைத்து விட்டு தூங்காமல் பல நாட்கள் சுற்றப்போவதை அப்போது அறியாமல்….

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!