Skip to content
Post Views: 859
காலையின் பரபரப்பு முடிந்த நேரம், ராமச்சந்திரன் மருதனுடன் வெளியே கிளம்பத் தயாரானார்.
“மாமா.. நான் இன்னியில் இருந்து கடைக்கு போகலாம்னு இருக்கேன்.” என்றபடியே வந்தாள் ரம்பா.
Advertisement
“எந்த கடைக்கு மா..?”
Advertisement
“மாதவன் கடைக்கு தான் மாமா…வீட்ல இருந்து போரடிக்குது.”
Advertisement
“அதுக்கென்ன ரம்பா.. அவனோட போய்ட்டு வா. ஆனா ரொம்ப நேரம் இருக்காத.. சீக்கிரம் வந்திடு.”
மருதன் சொல்ல,
Advertisement
“நான் மட்டும் தான் மாமா அந்த கடையை இனி பாத்துக்க போறேன்” மாதவன் அதிர்ந்தான். அவனை வெளியே விடக்கூடாது என்பதால் உடன் வருகிறேன் என்று சொல்கிறாள் என நினைத்தால் இவள் இப்படி சொல்கிறாளே என்று குழப்பமாக பார்த்தான்.
“ஏன் தொரைக்கு அதை விட என்ன வேலை பெருசா இருக்காம்.”
“அவர் இன்னியிலருந்தே நம்ம நிலம் இங்க பக்கத்துல இருக்காமே..அதுல என்ன பயிர் வைக்கிறது, எப்படி தண்ணி பாச்சறதுன்னு ஆராய்ச்சி பண்ணி, அக்ரி ஆபிஃஸ்க்கு போய் எல்லா டீடெய்ல்ஸூம் கேட்டுட்டு வரப்போறாராமா”
குடும்பமே அவனை ஆச்சர்யமாக பார்த்தது.
“அண்ணே.. என்ன ஒரே வாரத்தில் இப்படி டோட்டலா மாறிட்ட.. இது உண்மையா.. இல்ல..வழக்கமா விடற கப்சா மாதிரியா.. சுத்த போறதுக்கு புது ஐடியாவா?” மாதவி கண்ணடித்துக் கொண்டே கேட்டாள்.
“இவ வேற.. நீ வாயை மூடு” என்று வாயில் கைவைத்து காண்பித்தான்.
“மாதவா.. என்னடா.. அது தரிசா இத்தனை நாள் கிடந்துச்சு, அப்பா அத்தனை முறை கெஞ்சினாரு. அதுக்கு எதாவது பண்ணேன்டான்னு. அப்போல்லாம் எனக்கு அதுல இன்டரஸ்ட் இல்லன்னு சொன்ன? இப்ப என்னடா திடீர்னு..”
“ அது ரம்பா கடைக்கு வரேன்னு சொல்லியிருப்பா. அதான் மாதவன் அவளை கழட்டி விட்டுட்டு நிலத்தை பாக்க போறேன்னு சொல்லியிருப்பார்” ரேணு அவள் ஒரு பக்கம் ஏத்திவிட,
“ஏம்மா.. அதான் மானாவாரி நிலம்னு நாங்களே அதை அப்படியே போட்டு வச்சிருக்கோம்.. உங்கப்பாட்ட சொல்லி இவனுக்கு ஒரு டிரான்ஸ்போர்ட் வச்சு தர சொல்றது தானே.. இன்னும் எதுக்கு இந்த உரக்கடை, விவசாயம்னு அலைய?”
“மாமா.. அப்புறமா எதுக்கு இவரை அக்ரி படிக்க வச்சீங்க.? சும்மா பொழுதுபோக்கத்தான் இவர் படிச்சிருப்பார். ஆனா எனக்கு கனவே விவசாயம் தான்.. நாளைக்கு உன் புருஷன் என்ன பண்றார்னு யார்னா கேட்டா ஊர் சுத்தறாருன்னோ இல்ல மாமனார் வச்சு தந்த பிஸ்னஸை பாத்துக்கறார்னோ சொல்ல முடியாது.”
அத்தனை பேரும் வாயடைத்து நின்றனர். ராம்ச்சந்திரனுக்கு எதிர்த்து பேச ஒரு ஆள் கிடைத்து விட்டதை நினைத்து ரேணு சந்தோஷப்பட்டாள்.
எப்படியும் மகனுக்கு வியாபாரம் வைப்பதாக சொல்லி முப்பது கோடியை கறந்து விடலாம் என்று நினைத்த ராமச்சந்திரனின் நினைப்பில் மண் விழுந்தது.
“அட என்னமா.. ஒரே பொண்ணு நீ. உங்கப்பா உன்னை கல்யாணம் பண்ண வரதட்சணயே முப்பது கோடி தரேன்னார். அதுல ஒரு கோடி வருமா ஒரு பிஸ்னஸ் ஆரம்பிக்க?”
“அது நான் பண்ண தப்பை மறைக்க எங்கப்பா கொடுக்க முன்வந்த லஞ்சம் மாமா. இப்போ எதுக்கு இவருக்கு வரதட்சணை? எங்களுக்குன்னு எதுவும் வேணாம், எல்லாத்தையும் எல்லாருக்கும் பிரிச்சு கொடுத்திருங்கன்னு அப்பாட்ட சொல்லிட்டேன். பாக்கலாம். இவர் பிள்ளைக்கு என்ன சேர்த்து வைக்கறார்னு. மாமா, நீங்க எதுவும் இவருக்கு ஹெல்ப் பண்ணக்கூடாது, சொல்லிட்டேன். கடையை நான் பாத்துக்கறேன். என்னால் முடியலன்னா அப்பா ஆளைப்போட்டு பாத்துப்பார்”
ராமச்சந்திரன் அப்படியே சோஃபாவில் சரிந்தார்.
ரேணு, ரம்பாவை பார்த்து, ‘ஏன் இப்போ சொன்ன?’ என்று சைகையில் கேட்டாள். ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அவள் பதில் சைகை செய்தாள்.
“மாமா. என்ன உட்காந்திட்டீங்க. எங்கேயோ கிளம்பறேன்னு போனீங்க. சரி.. என்னையும் அப்படியே கடையில் விட்டுருங்க சின்ன மாமா.. வாங்க போகலாம்” அவள் சொன்னவுடன் தொய்ந்து போன முகத்துடன் ராமச்சந்திரன் கிளம்பினார்.
“டேய் என்னடா.உன் பொண்டாட்டி என்னென்னமோ சொல்றா. நீ அந்த இடத்தில பயிர் வைக்க போறியா?” காஞ்சனா கேட்டதும்,
“எம்மா.. நீ வேற. நான் எப்படிம்மா அந்த காட்டுல பயிர் வைக்கறது. அவ அப்பா அங்கருந்து ஏத்தி விடறார். இவ இங்க ஆடறா.. எல்லாம் என் தலையெழுத்து. என்னிக்கு இவளை தொட்டேனோ அன்னிக்கே எனக்கு சனியன் பிடிச்சுக்கிச்சி போல” என்று தலையில் அடித்தபடியே சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
“அத்தை.. வாங்க போலாம். ரதியையும் மாறனையும் பாத்துட்டு வந்திடலாம்” என்று கிளம்பினாள் ரேணு.
“எப்போன்னு காத்திட்டு இருந்தீங்க போல.. அவ்ளோ அவசரம் இங்க நடந்ததை அண்ணன்ட்டையும் அண்ணிக்கிட்டையும் ஒப்பிக்க?” மாதவி ரேணுவை கிண்டலடித்தாள்.
ரதி அழகான ரத்த சிவப்பு கூரைப்புடவையை மடித்துக் கொண்டு இருந்தாள்.
“அண்ணி..” என்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தாள் மாதவி. பின்னே அனைவரும் நுழைய,
“அட மாதவி. வா வா.. என்ன இன்னிக்கு லீவா? வாங்க அக்கா. வாங்க அத்தை..” என்று அழைத்துக் கொண்டே வந்தாள் ரதி.
“என்ன எல்லாரும் மீட்டிங் கா காலைலேயே” என்றான் மாறன்.
“மாறா.. உனக்கொன்னு தெரியுமா..?” என்று கேட்டுக் கொண்டே நடந்த அத்தனையும் ஒப்பித்தாள் ரேணு.
“நீங்க கவலைப்படாதீங்கம்மா. அவனை இப்பிடி யாராச்சும் இறுக்கிப்பிடிச்சா தான் சரியா வருவான். நானும் அண்ணனும் அவனை பாத்துக்கறோம்” என்றான் மாறன்.
“அக்கா நேத்து நைட் பசங்களோட ரொம்ப நேரம் மாடியில் நின்னுட்டு வானத்தை பார்த்திட்டு இருந்தீங்க.”
“இங்கிருந்து தெரியுதா.. அது ஸ்டார்ஸ் காமிச்சிட்டு இருந்தேன் பசங்களுக்கு”
“அண்ணி. பெரிய அண்ணி ஸ்டார் வாச்சர். காதுல ரத்தம் வர அளவுக்கு வானத்தை பத்தி எக்ஸ்ப்ளெயின் பண்ணுவாங்க.”
“ஓ..ஸ்டார் வாட்சர்.. இப்பத்தான் இதுக்கு பேர் கேள்விப்படறேன்.. வெறும் கண்ணுல தெரியுமா அக்கா.. எல்லாமே”
“ரொம்பத்தெரியாது ரதி. ஒரு சில நேரங்கள்ல தெரியும். பிளானட்ஸ் தெரியும். மீட்டியர்ஸ் காமிப்பேன். சில சமயம் ஃபோன்ல இருக்க ஆப் வச்சு நட்சத்திர கூட்டத்தை லொக்கேட் பண்ணி அது என்ன நட்சத்திரம்னு பசங்களுக்கு காமிப்பேன்”
“அண்ணி ரொம்ப நாளா இதை ஃபாலோ பண்றாங்க” மாறனும் சொல்ல ஆச்சர்யம் ரதிக்கு.
“வானத்தை கொஞ்ச நேரம் கூட பாக்கறதில்ல நான்லாம். நீங்க ஆராய்ச்சியே பண்றீங்க”
“வானம் எனக்கு ஒரு போதி மரம்னு பாட்டு கேட்டுருக்க இல்ல. அது தான் எனக்கும். வானம் மட்டுமில்ல.. பிரபஞ்சமே எனக்கு சில சமயம் சிலதை உணர்த்தும்.”
“ஓ.. நீங்க ஆஸ்ட்ராலஜி படிச்ச வங்களா..”
“இல்ல.. இது ஒரு விதமான உணர்வு ரதி. நடக்கப்போறதை ஒரு முன்னெச்சரிக்கையா பிரபஞ்சம் உணர்த்தும். ஆனா நாமதான் அதை கண்டுக்கறதில்ல. இதை சகுணம்னோ, நிமித்தம்னோ பெரியவங்க சொல்வாங்க. ஆனா எனக்கு இது பிரபஞ்சத்தோட சமிக்ஞை. நம்மை சுத்தி என்ன நடக்குதுன்னு சொல்ற ஒரு குறியீடு.. “
“ஓ… மெனிப்பெஸ்ட் பண்ணறது இயற்கையோடு ஒன்றதுன்னு சொல்வாங்களே அப்படியா..”
“ம்ம் ஆமா. என் சின்ன வயசில என் அண்ணன் காணாம போனான். அன்னிக்கு முதல் நாள் நைட் தான் நானும் அவனும் வானத்தை பார்த்துட்டு இருந்தோம். அவன் தான் எனக்கு ஸ்டார்ஸ் பத்திலாம் சொல்லிட்டு இருந்தான். அப்போ இரட்டை நட்சத்திரங்கள் அங்க இருந்துச்சு. அப்போதான் அது நாங்கன்னு அவன் காமிச்சான்
. நாங்க மாடியில் இருந்து திரும்பி வரப்போ நான் மறுபடியும் வானத்தை பார்த்தேன். அந்த இரட்டை நட்சத்திரத்துல இருந்து ஒன்னு தனியா எறிஞ்சு விழுந்துச்சு. அடுத்த நாள் அவன் என்கூட இல்ல. அப்பா சென்னைக்கு அவனை கூட்டிட்டு போனப்ப தொலைஞ்சிட்டான் கட்சி மாநாடுல. இன்னிய வரைக்கும் நாங்க தேடாத இடம் இல்ல..இன்னிக்கு இருந்திருந்தா அப்பாக்கு அடுத்த வாரிசா அரசியல்ல இறங்கியிருப்பான்”
அவளின் கண்கள் கலங்க, அவளின் மாமியார்கள் அவளை தோளோடு அணைத்துக் கொண்டனர்.
“அக்கா உங்க அண்ணா திரும்பி வரணும்னு அந்த வானத்துக்கிட்ட சொல்லுங்க. கண்டிப்பா வந்திடுவாரு.”
“ம்ம்.. ஆமா ரதி.. தினமும் அதான் சொல்றேன்.”
“அணணி.. செண்டிமெண்ட்லாம் வேணாம். நீங்க கண்கலங்கறதை என்னால் பாக்க முடியாது. எதாவது இன்டரஸ்டிங்கா சொல்லுங்க.” மாறன் கேட்க,
“ம்ம். இந்த சிவப்பு புடவை மாதிரியே திருவாதிரை நட்சத்திர கூட்டம் இப்ப ரெடிஷ்ஷா இருக்கு. அது வெடிச்சு சிதற போகுது, அதோட இறுதிக்கட்டத்தை நோக்கி போகுதுன்னு சொல்றாங்க. அதான் இப்போ சந்திரன் திருவாதிரைல போறப்ப வானத்தில பார்த்தா லேசா தெரியும்னு பசங்களுக்கு அது இருக்க இடத்தை காமிச்சேன்.”
“ திருவாதிரை வெடிச்சிச்சின்னா அப்போ அந்த நட்ச்த்திரத்துல யாரும் பொறக்க முடியாதாடி” காஞ்சனா கேட்க,
“அத்தை அதுக்கு லட்சம் வருஷம் கூட ஆகலாம்.. ஆனா அப்போ மனுஷங்க அடுத்த பரிணாம வளர்ச்சியில் இருப்பாங்க”
‘போதும் போதும் காலேஜ் போனா பாடம் நடத்தறாங்கன்னா அண்ணி இங்கேயும் ஒரு பாடத்தை போடறாங்க” மாதவி சொல்ல,
“பிரபஞ்சம் நமக்கு எதையாவது உணர்த்தும்னு சொல்ல வந்து தான் இவ்வளோ ஜாங்கிரி சுத்திட்டேன்.. ஆமா ரதி இது என்ன புது ஆர்டரா..கூரைப்புடவை.. நான் இவ்வளோ சிவப்புல பாத்தது இல்ல.. லைட் பிங்க் லைட் யெல்லோ தான் பாத்திருக்கேன்”
“அதுவா.. கல்யாணமே ஒரு டேஞ்சர்னு சொல்ல சிவப்புல நெஞ்சிருக்காங்க. “ மாதவி சொல்ல,
“கூரைப்புடவையை போய் இப்படி அபசகுணமா சொல்லாத மாதவி” கற்பகம் சொல்ல,
‘இது என் ஃப்ரெண்ட் தாராக்காக்கு அப்பாட்ட சொல்லி நெஞ்சதுக்கா. அவங்களுக்கு இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். அவங்க தான் என் மெண்டார். நிறைய விஷயங்களை எனக்கு சொல்லித்தந்தவங்க. என்க்கு ரொம்ப பிடிக்கும். அவங்கள்ட்ட எனக்கு ஒரு அண்ணன் இருந்தா உங்களை கல்யாணம் பண்ணி வீட்டோட வச்சிப்பேன்னு சொல்வேன்.. அண்ணன் இல்லாததால் உங்களுக்கு வர மாப்பிள்ளைட்ட சொல்லுங்க உங்க தங்கச்சி தான் கூரைப்புடவ எடுத்துட்டு வருவான்னு சொல்ல சொல்லியிருக்கேன். அவங்களுக்கு ரத்த சிவப்பு கலர் ரொம்ப பிடிக்கும்.. அதான் அதுலயே நெய்ய சொன்னேன்..”
“ஓ.. யாரெல்லாம் போறீங்க கல்யாணத்துக்கு..”
“நானும் அப்பாவும் தான் போறதா இருந்துச்சு.. ஆனா அவரால வர முடியலன்னு எங்களை தான் போக சொன்னாரு.”என்றபடி மாறனை பார்த்தாள்.
“கல்யாணம் ப்ரெண்ட்க்கு பண்ணறேன்னு நீங்க ஹனிமூன் போய்டாதீங்க.” மாதவி சொல்ல,
“வயசுக்கு தகுந்த பேச்சை பேசுடீ..விவஸ்தை இல்லாதவ” காஞ்சனா அவளை இடிக்க,
“ஏன் அத்தை அவளுக்கு கல்யாணம் பண்ணா பத்தே மாசத்தில் உங்களை பாட்டிங்களா ஆக்கிருவா. இந்த காலத்துல ஸ்கூல் படிக்கிற பொண்ணுங்களுக்கே எல்லா விவரமும் தெரியுது..”
ரேணு சொல்ல..
“பாத்தியா ரதி. இவள்ட்ட இருந்து தான் இந்த மாதவி எல்லாத்தையும் கத்துக்கறா.. ஜாக்கிரதையா இரு இவகிட்ட”
“அத்தை. ரதிக்கு ஒன்னுமே தெரியாது பாருங்க. நான் சொல்லித்தான் இங்க தனியா குடும்பம் நடத்தறாங்களா.. நேத்து மழைக்கு முன்னாடி ஆடிய ஆட்டம் என்ன.. பாடிய பாட்டு என்ன.. ஓடிய ஓட்டம் என்ன…மழை வந்தப்புறம் என்ன நடந்துச்சோ..” என்றாள் ரேணு.
சட்டென ரதிக்கு தூக்கி வாரிப்போட்டது. அவசரமாக மாறனை பார்த்தாள்.
அவன் ரகசிய சிரிப்பை அவளுக்கு கடத்தியதில் உதட்டை மடித்துக் கொண்டு தலைக்குனிந்தாள்.
அனைவரும் சற்று நேரம் பேசிவிட்டு சென்றதும்,
“என்ன நீங்க பாட்டுக்கு அவங்க சொல்றதுக்கு சிரிக்கறீங்க. அவங்க என்ன நினைச்சு இருப்பாங்க”
“என்ன நினைச்சு இருப்பாங்க. மகனும், மருமகளும் சந்தோஷமா குடும்பம் நடத்தறாங்கன்னு நினைச்சு இருப்பாங்க.”
“ஏன் அப்படி நினைக்கனும். ஆமா கேட்கனும்னு இருந்தேன். நான் இங்கதான மயக்கம் போட்டேன். நான் எப்படி ரூம்க்கு போனேன். நீங்க எதாவது..”
“ஏதாவதுன்னா. என்ன… என்னை பார்த்தா அவ்ளோ கேவலமா இருக்கா. மயங்கின பொண்ணை எதாவது பண்ணிட்டேன்னு சொல்ல…”
“அய்யோ. என்னை தூக்கிட்டு போனீங்களான்னு கேட்டேன்..”
“தள்ளிட்டு தான் போனேன்..”
“எதே.. தள்ளிட்டு போனீங்களா..”
“தள்ளிட்டுன்னா உன்னை அப்படியே கைத்தாங்கலா கூட்டிட்டு போனேன்.”
“ஓ.. எம்மேல ஒன்னும் உங்க கைப்படலையே..”
“நீ என்ன டிவில குஷி படம் பாத்தியா..என் இடுப்பை தானே பாத்தன்னு கேட்கிற மாதிரி கேட்கிற.. நான் ஒன்னும் உன்னை தொடல.. நீ தான் என் சட்டையை இப்படி இறுக்கி பிடிச்சிட்டு, என் நெஞ்சில சாஞ்சுட்டு, சூடா மூச்சை விட்டுட்டு, தைரியம் இருந்தா தொடறான்னு என்னை டெஸ்ட் பண்ண. நான் தான் என் பிரம்மச்சரியம் வீணா போயிட கூடாதுன்னு நல்ல பிள்ளையா உன்னை பாத்துக்கிட்டேன்.”
வாயை திறந்துக் கொண்டு அவனை பார்த்தாள்.
“அப்படியா பண்ணேன்..”
“ஆமா.. என்ன இன்னும் கொஞ்ச நேரம் கண்ணு விழிக்கலன்னா..அப்படியே..”
“அப்படியே..”
“டிரஸ்லாம்”
“எது.. டிரெஸ்லாம்..”
“இல்லம்மா.. டிரெஸ் மாத்தி விடலாம்னு நினைச்சேன். கைகால்லாம் சில்லுன்னு ஆயிருச்சு. ஒரு வேளை பிட்ஸ் இல்ல பீவர் வந்துட்டா. அதான் ஒரு நல்ல எண்ணத்துல..”
“ஓ.. நல்ல எண்ணம்ம்ம்…”
என்று இழுத்தாள்.
“ரதி.. நான் நல்லவன்னு நமபு முதல்ல..அதுக்கு முன்னாடி நீ இனிமே எதுக்கும் பயப்படக்கூடாது. வெளில போறப்ப இப்படி மயங்கி விழுந்தீன்னா.. அதுக்கு நான் சில சைக்கலாஜிக்கல் ஹேக் சொல்லித்தரேன்.”
“ம்ம்.. சரி.. நாம நாளன்னிக்கு காலைல போலாமா.. இல்ல ஈவ்னிங்கே போகலாமா..”
“ராணிப்பேட் தான.. காலைல முகூர்த்தம் தானே.. போயிடலாம்..”
“இல்ல.. ப்ரெண்ட்ஸ் எல்லாம் வருவாங்க.. அதுவும் தாராக்காகிட்ட பேசி ரொம்ப நாளாச்சு. நைட்டே போனா எல்லாம் ஜாலியா பேசுவோம்..”
“முடிவு பண்ணிட்ட. நான் என்ன பண்றது அங்க வந்து நைட்டே.. நான் வேணா உன்னை விட்டுட்டு வந்திடவா..”
“இல்லல்ல. நமக்கு கல்யாணம் ஆனதால் அங்கேயே பக்கத்து வீட்ல தங்க ஏற்பாடு பண்ணியிருக்காங்கலாம்..”
“நீ இருந்தா நான் எங்க வேணா தங்குவேன்.. நோ ப்ராப்ளம்.”
அவன் சொல்லியதும் சிரிப்பு வந்தது ரதிக்கு.
அடுத்த நாள் இருவரும் கிளம்பி வெளியே வந்தனர்.
“பூட்டாதீங்க.. பூட்டாதீங்க. நான் அக்காக்கு இன்னொரு புடவை எடுத்து வச்சேன்.. அதை மறந்திட்டேன. அப்புறம் சிவப்பு வளையல்.. அன்னிக்கு கோவில்ல குடுத்தாங்களே மஞ்சள்.. அதுவும் மறந்திட்டேன். அக்காவை பாக்கற சந்தோஷ்ததுல எனக்கு ஒன்னும் புரியல..” என ஒடி ஒடி எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.
சிறு பிள்ளை போல் அவள் ஓடி ஓடி எடுத்து வைப்பதை பார்த்தவனுக்கு அவளை அப்படியே அள்ளிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
“எல்லாம் எடுத்துக்கிட்டேன்னு நினைக்கிறேன்.. நீங்க பூட்டுங்க” என்றபடியே வெளியே வந்து கதவை சாத்தியவள் தன் காலை சரியாக எடுத்து வைப்பதற்குள் சுண்டு விரல் கதவிடுக்கில் மாட்ட, அது நசுங்கி சிவப்பாக ரத்தம் கசிந்தது..
“ரதி” என்று அலறினான் மாறன்.
காலைப்பிடித்துக் கொண்டு அப்படியே அமர்நதவள் வலியில் துடித்தாள்.
அவசரமாக தண்ணீர் பிடித்து அவள் விரலை கழுவியவன், ரத்தம் நிற்காமல் வருவதை பார்த்து அவளை அப்படியே தூக்கிக் கொண்டு கதவை திறந்து உள்ளே சென்றான்.
மருந்து போட்டு, ப்ளாஸ்டரை விரலை சுற்றி சுற்றியவன், அவள் காலை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான்.
“ரொம்ப வலிக்குதா ரதி.. டாக்டர்ட்ட வேணா போகலாமா..”
காலை அழுத்தி பிடித்தவள், பல்லைக்கடித்து பொறுத்துக் கொண்டாள்.
“வலி குறையும்.. கொஞ்ச நேரத்துல.. நாம கிளம்பலாம்..” என்றாள்.
“ரதி இவ்வளோ வலியோட எப்படி போறது.. பாக்கலாம் கொஞ்ச நேரம்.. வலி குறைஞ்சதுன்னா அதுக்கு அப்புறமா முடிவு பண்ணலாம்.” என்றான்.
“இல்ல.. இன்னிக்கே போகலாம். எனக்கென்னமோ மனசே சரியில்லை..தாராக்காவை பாக்கனும். ஆ…” பேசிக்கொண்டே கத்தினாள்.
“ரதி..பேண்டேஜ் ஃபுல்லா நனைஞ்சிருச்சு. ப்ளட் நிக்க மாட்டேங்குது. வா, முதல்ல டாக்டர்ட்ட போலாம்.” என்று மறுபடியும் அவளை தூக்கிக் கொண்டு வந்து திண்ணையில் அமர வைத்து விட்டு மருதனுக்கு அழைத்தான்.
error: Content is protected !!